Wednesday, March 03, 2010

உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா!

இந்த ஜோதியில நானும் கலந்துகிறேனேன்னு எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை இந்தச் சந்திப்பில் இதன் பொருட்டு முன் வைக்கலைன்னா வரலாறு என்னை மன்னிக்கவே மன்னிக்காது என்பதால் இதோ என்னுடையதும், இந்த தேசிய நீரோடையில் ;-).

அந்த விடியோவை நானும் பார்க்க நேர்ந்தது. அதற்கு முன்னால் அந்த இளமை ததும்பும் அழகிய இளம் கன்று நித்தியின் ஒரு சில யுட்யூப் பிரசங்க க்ளிப்புகளை அளவற்ற எரிச்சலுடன் பார்க்க நேர்ந்தது. அவ்வளவு முதிர்ச்சியற்ற அணுகுமுறை! ம்ம்ம்... சரி இந்த நிலையில் இப்பொழுது இந்த விடியோ. எனக்குப் புரியவில்லை. ஏன், மக்கள் இப்படி ஒரு சாதாரண மனித நிகழ்வினை ஒட்டி இத்தனை வெறுப்பும், அருவறுப்பும் கொள்கிறார்கள். ஒரு நிமிடம் அந்தாளின் காவி உடையை தவிர்த்து பார்த்தால், அந்த க்ளிப்பில் அப்படி என்ன தவறாக அவர் நடந்து கொள்கிறார்?

அந்த காவி உடையைச் சுற்றி நாம் வைத்திருக்கும் நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கென ஒருவரை நடிக்கவும் வைத்து, பிழைப்பும் நடத்தி பின்பு அது நிறமிழக்கும் பொழுது ஏன் வருத்தப் படுகிறோம்? எப்பொழுது இது போன்ற பத்தாம் பசலித்தனத்திலிருந்து நமது மனதிற்கு விடுதலை? அந்த விடியோவில் எனக்கு மிகவும் வருத்தம் தருவதாக அமைந்த ஒரு விசயமென்றல் அது நித்தியின் சோம்பேறித்தனம் அளவற்ற முறையில் வளர்ந்து கிடப்பதனை காணும் பொழுதுதான் :-). அது, தன் வேலையை தானே செய்து கொள்ளக் கூட அடுத்த ஆளை நம்பி இருப்பது போன்ற தோற்றம்...

அப்படி என்னதான் செய்து விட்டார் என்று கேட்டீங்கன்னா, மனுசன் அசையவே மாட்டீங்கிறார், அங்கும் ராஜா கணக்கா கை விரலை சுடுக்கினால் ஓடி ஓடி சேவகம் செய்யும் அந்தப் பெண். அந்தப் பெண்ணும் எவ்வளவு மரியாதையின் நிமித்தமாக செய்வதாக எனக்குப் படுகிறது. அது போன்றே மிக்க பாசத்திலும், காதலிலும் இருவர் இணைந்து இருப்பதாகவே எனக்கு அது விளக்கியது. அங்கே நமக்கு என்ன வேலை?

இந்த சாமியார்/காவி உடை அதனையொட்டிய நமது எதிர்பார்ப்பு, அதற்கென அவர்களின் அளவற்ற நடிப்பு இவைகளை தவிர்த்து பார்த்தால் அங்கே நமக்கு வேலையே கிடையாது. அந்த ஆளு எப்படியோ இருந்திட்டுப் போறார் என்று எண்ணிவிடும் பட்சத்தில். பிரச்சினை நம் பக்கமே அதிகம் என நினைக்கிறேன்.

கி. ராஜநாராயணன் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து படித்த ஒரு கதைதான் இந்த இடத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அதில் ராஜாவும், மந்திரியும் ஒரு விசித்திரமான ஆராய்ச்சியில் இறங்கி இருப்பார்கள், ஒரு பெண்ணின் கற்புத்தன்மையை கண்டறிய - அவளும் எப்படி அவர்களை ஏமாற்றிவிட்டு அவள் தனக்கு தாம்பத்திய சுகம் மறுக்கப் பட்ட போதும், அவர்கள் இருவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு கள்ளத்தனமாக ஒருவனுடன் அந்தச் சுகத்தை அடைகிறாள் என்பதே அந்தக் கதையின் கரு - அதற்கு நீதியாக அந்தக் கதை கூறவருவது, மனிதனில் பாலியல் நாட்டம் எப்படியேனும் அடைந்தே தீர வேண்டிய ஒரு நடை முறை உடல் செயற்பாடு. அதனை எப்படி அடைத்து வைத்தாலும் ஏதாவது ஒரு வகையில் வழி கண்டு அதனை அடைந்தே தீரும் என்பதே அது - அதற்கென அது போன்ற செயல்பாடுகள் கொஞ்சமும் நாம் எதிர்பாராத, கற்பனைக்கு எட்டாத முறைகளிலெல்லாம் சென்று அவர்கள் அந்த தாகத்தை அடைந்திருக்க காணக் கூடுமென்று சொல்லி முடித்திருப்பார்கள்.

இதன் அடிப்படையில் வாழ்க்கையை ஓரளவிற்கு அவதானிக்கும் எவரும், இது போன்ற உடற் செயல்பாடுகளின் அவசியத்தை அறிந்து கொள்ள முடியும். அப்படி அறியும் பொழுது இது போன்ற மாயைகளிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள முடியும். பசி, ஏப்பம், சிரிப்பு, அழுகை, வெக்கம் போன்றதும் தானே பால் நாட்டம், கிளர்ச்சி எனும் விசயமும் மனித உணர்வுகளில் கட்டப்பட்ட ஒரு உணர்ச்சி - விடுங்கப்பா, சாமியார்களின் இமேஜை நாம் எதிர்பார்ப்புகளிலிருந்து கட்டவிழ்த்து. எதிர்கால சாமியார்களே உங்கள நீங்களே ஏன்யா இப்படி திருட்டு வேலையில போட்டுக்கிறீங்க. வாழ்ந்து பார்த்திட்டு வாங்கப்பா! ஹாஹாஹா - ஹையோ! ஹையோ!! என்னயெல்லாம் அட்வைஸு பண்ண வைச்சிட்டாய்ங்களே ...

30 comments:

கவிதா | Kavitha said...

போச்சி இங்கயுமா?

//"உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா!"//

இல்ல உங்க பதிவ படிக்க வந்த எங்க குத்தம்.. !! :(

கவிதா | Kavitha said...

//அவ்வளவு முதிர்ச்சியற்ற அணுகுமுறை! //

ஹா ஹா.. என்னனென்னவோ கேக்கனும் போல இருக்கு சரி ..தெகாஜி யின் அறிவை கணக்கில் எடுத்து கேட்காமல் விடுகிறேன். :(

கவிதா | Kavitha said...

//அந்த விடியோவில் எனக்கு மிகவும் வருத்தம் தருவதாக அமைந்த ஒரு விசயமென்றல் அது நித்தியின் சோம்பேறித்தனம் அளவற்ற முறையில் வளர்ந்து கிடப்பதனை காணும் பொழுதுதான் :-).//

நாட்டுக்கும் ரொம்ப முக்கியம்..எதுன்னு கேட்டு டென்சன் பண்ணப்பிடாது... அவரோட வளர்ச்சி..தான்.. அவ்வ்வ்வ்வ்வ்!!

கவிதா | Kavitha said...

//கி. ராஜாநாரயணன் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து //

ஆரம்பிச்சிட்டாரய்யா... இனி இங்க இருக்கப்பிடாது.. ஓடிடனும்..!!

கவிதா | Kavitha said...

//அது போன்றே மிக்க பாசத்திலும், காதலிலும் இருவர் இணைந்து இருப்பதாகவே எனக்கு அது விளக்கியது. அங்கே நமக்கு என்ன வேலை?//

ஹல்லோ ஸ்டாப் ஸ்டாப்.. என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு..

கவிதா | Kavitha said...

//என்னயெல்லாம் அட்வைஸு பண்ண வைச்சிட்டாய்ங்களே ...//

நல்லவேள நீங்களே சொல்லிட்டீங்க..இல்லைன்னா நான் வேற அதை கேட்டு நீங்க டென்ஜன் ஆகி.. :) தலையில இன்னும் கொஞ்சம் முடிக்கொட்டி.. அப்புறம் நேரா பாக்கும் போது உன்னை அடிச்சி கொல்றேன் னு சபதம் போட்டு... நடக்க முடியாத எல்லாவிஷயத்தியும் பேசுவீங்க.. :))) தேவையா தேவையா தேவையா ?!!

இசை said...

என்ன செய்ய நம்பளையும் பொலம்ப விட்டுடாங்க நம்ம சனங்க..

http://eyilnadu.blogspot.com/2010/03/blog-post.html

ரொம்ப நாளாச்சு உங்க பதிவு பக்கம் வந்து... நித்தி மேட்டர் டாப்கியர் என்பதால் தமிழ்மணம் பக்கம் எட்டிபார்க்க வேண்டியதாகிவிட்டது.

V.Radhakrishnan said...

தனி மனிதன் தனி மனிதனாக இருக்கும் வரை சமூகப் பிரச்சினை இல்லை.

தனி மனிதன் தன்னை பொது மனிதனாக காட்டும்போது அது சமூகப் பிரச்சினையாகிறது.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

தெகா, நல்ல பதிவு. உண்மையில் எனக்கு அந்த விடியோ பார்க்கும் போது அந்த பெண் மீது தான் வருத்தம் வந்தது. காவி உடைக்கு நம்மவர்கள் கொடுத்து வைத்திருக்கும் மரியாதைக்கு களங்கம் வந்துவிட்டதாக எண்ணி, அந்த பெண்ணின் நிம்மதியையும் சேர்த்து கலைக்கப்போகிறார்கள் என்று எண்ணிணேன். நடந்துவிட்டது. :(பழங்கால சாமியார்கள் மாதிரி ரிஷி பத்தினியோடு வாழ்ந்துவிட்டு போங்களேம்ப்பா..!

வால்பையன் said...

எனக்கும் நித்தியின் சோம்பேறித்தனம் பிடிக்கவில்லை!

ரசனையே இல்லாத சொம்பை!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//ரசனையே இல்லாத சொம்பை!//

யோவ்.. வாலு அடங்க மாட்டியா... சிரிப்பை அடக்க முடியலைப்பா..?

kutipaiya said...

தெக்கி - நீங்க என்ன தான் சப்போர்ட் பண்ணினாலும்,
அவரு இப்படி மாட்டிகிர அளவுக்கு செஞ்சது தப்பா இல்லையா ? ; );)

அது இல்லாம மனுஷனுக்கு இதெல்லாம் தேவையா இருந்திருந்தா
அவரு வேற பிசினஸ்’ல இறங்கிருக்கலாம், சாமியாரா இருந்ததுக்கு :)

Thekkikattan|தெகா said...

கவிதா | Kavitha said...
//கி. ராஜாநாரயணன் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து //

ஆரம்பிச்சிட்டாரய்யா... இனி இங்க இருக்கப்பிடாது.. ஓடிடனும்..!//

ஏங்க இந்தக் கொலவெறியோட திரியுறீங்க... :))

மங்கை said...

Ithula enna doubt theka... makkalai thaan naan thappu solluvean...

vazhkkaikku tehvai aana vatrai therndeduthu pakkuvapada namma aatkal mathvangala naadara varaikkum ippidi thaan nadakkum

முகுந்த் அம்மா said...

நீங்களுமா தெகா ! போதும் பா சாமி, இந்த நித்தியானந்த வீடியோ வந்தாலும் வந்தது எங்க திரும்பினாலும் அந்தாளு புராணம் தான்.

கண்மணி/kanmani said...

அந்த பெண்ணின் நிம்மதியையும் சேர்த்து கலைக்கப்போகிறார்கள் என்று எண்ணிணேன். நடந்துவிட்டது. :(//
பாவம் ரஞ்சிதா...ஏதோ தப்பாய் போயிடும்னு பட்சி சொல்லுது.
தேவநாதன் மேட்டர்ல அந்தப் பொண்ணுங்களைக் காட்டல.முகம் மறைத்து யூகத்துக்கே விடுட்டிருந்தா பொழச்சிப் போன்னு...நடிகைனா பாவம் பாக்க மாட்டாங்களா?

பாபு said...

/....அது போன்றே மிக்க பாசத்திலும், காதலிலும் இருவர் இணைந்து இருப்பதாகவே எனக்கு அது விளக்கியது...../

இதென்ன 'சோ'த்தனமா இருக்கு...
ஹையோ! ஹையோ!! ;)

இசை said...

உடலுறவிற்காக சமூக ஏளனத்திற்குட்படுத்துவது மிகவும் கேவலமான மனித உரிமை மீறல். :( ஆண் பெண் என்ற பேதமின்றி இது பெரும் வலி. இயற்கையின் தூண்டல் அது மற்றும் தேவையும் கூட.

குற்றம் புரிபவர்கள், குண்டு வைப்பவர்கள், கொலைகாரர்கள் போற்றப்படுவதும், உடல் தேவைக்கு நாடி அதை கண்ணியமாக நிறைவேற்றிக்கொள்ளும் தனிமனிதர்கள் இப்படி கொடுமைபடுத்தப்படுவதும் மிகவும் கொடுமையானது.

அந்த பெண்ணின் முகத்தில் தெரியும் ஆனந்தம், அவர்களின் அன்னியோன்யத்தையே காட்டுகிறது. அவரை மறைத்திருக்கலாம்.

Thekkikattan|தெகா said...

நித்தி மேட்டர் டாப்கியர் என்பதால் தமிழ்மணம் பக்கம் எட்டிபார்க்க வேண்டியதாகிவிட்டது//

ஆமா, இசை பிச்சிக்கிட்டு ஓடுது போங்க... உங்க கடையில எப்படி இன்னிக்கு வசூல், காலக் கொடுமை போங்க - இப்படியெல்லாம் செஞ்சு பொழப்ப ஓட்ட வேண்டியதா இருக்கு :-P

Thekkikattan|தெகா said...

//V.Radhakrishnan said...
தனி மனிதன் தனி மனிதனாக இருக்கும் வரை சமூகப் பிரச்சினை இல்லை. //

சரியாச் சொன்னீங்க...

//தனி மனிதன் தன்னை பொது மனிதனாக காட்டும்போது அது சமூகப் பிரச்சினையாகிறது...//

இதுவும் சரியாத்தான் இருக்குது... அதுனாலேதான் இந்த மாதிரி வேஷம் கட்டி, பின்னாடி வேஷத்தை அகற்றும் போது கிழி/மிதி பட வேண்டியும் இருக்கும் இடமிருந்து வலம், வலமிருந்து இடமின்னு - எல்லாருக்கும் தெரியுற மாதிரி குன்றின் மீது நிக்கிறதில எவ்வளவு ஆபத்து இருக்கின்னு இது மாதிரி விசயங்களை பார்க்கும் பொழுதெல்லாம் ஞாபகத்தில் வந்து போகிறது...

பழமைபேசி said...

Buddy,

Just they made it sensational.... however he shouldn't be in heights at any cost....

Thekkikattan|தெகா said...

வாங்க பாலா,

//அந்த பெண்ணின் நிம்மதியையும் சேர்த்து கலைக்கப்போகிறார்கள் என்று எண்ணிணேன். நடந்துவிட்டது. :( //

ஆமாம். இந்த மீடியா ஆட்கள் கிடைக்கிறதை சுருட்டுரவய்ங்கதானே சுய லாபத்திற்காக அதுனாலே எது கிடைச்சாலும் வித்து கல்லா கட்டுறது மட்டுமே நோக்கம் இங்கே. a sad day for that girl...

//பழங்கால சாமியார்கள் மாதிரி ரிஷி பத்தினியோடு வாழ்ந்துவிட்டு போங்களேம்ப்பா.//

நம்ம விட்டாத்தானே... ;-)

Thekkikattan|தெகா said...

//வால்பையன் said...
எனக்கும் நித்தியின் சோம்பேறித்தனம் பிடிக்கவில்லை!

ரசனையே இல்லாத சொம்பை!//

ஹாஹாஹா... ரசனையே இல்லாத, நகர முடியாத சொம்பை :D... முடியல்ல!!!

///யோவ்.. வாலு அடங்க மாட்டியா... சிரிப்பை அடக்க முடியலைப்பா..?//

அடங்கிக் கெடந்தா நாம எப்படி சிரிக்க முடியும் சொல்லுங்க, வாலு நீர் நடத்து ராசா... :))

Thekkikattan|தெகா said...

குட்டிப்பையா,

வரும் போதே கேள்வியோடவே வந்திருக்கீக...

//அவரு இப்படி மாட்டிகிர அளவுக்கு செஞ்சது தப்பா இல்லையா ? ; );) //

இத்தனை சின்ன வயசிலேயே மாட்டி, அவரோட careerயே போச்சிங்கிறீங்களா :)

//அது இல்லாம மனுஷனுக்கு இதெல்லாம் தேவையா இருந்திருந்தா
அவரு வேற பிசினஸ்’ல இறங்கிருக்கலாம், சாமியாரா இருந்ததுக்கு //

கேள்வி நல்லாத்தான் இருக்கு... அது அவருக்கே கேட்டுக்கணுமின்னு தோணலை பாருங்க ...
************************

வாங்க மங்கை,

//vazhkkaikku tehvai aana vatrai therndeduthu pakkuvapada namma aatkal mathvangala naadara varaikkum ippidi thaan nadakkum//

எல்லாம் ஒரு தற்காலிக வலி மறத்தலுக்கு தேவையான மருந்து மாதிரி நினைச்சிகிடறாங்க போல - தெரிஞ்சே விழுறதும் உண்டுதானே...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))))))))))))))))))

சுரேகா.. said...

அப்பாடி..! என்னடாது அண்ணாத்த இன்னும் எழுதலையேன்னு பாத்தேன்.. சூப்பர்!

அதெப்படி ரெண்டுபேரும் கிட்டத்தட்ட ஒண்ணா சொல்லியிருக்கோம்..?

அண்ணன் தம்பி அணுகுமுறை? :))

இங்க பாருங்க!

http://surekaa.blogspot.com/2010/03/blog-post.html

Thekkikattan|தெகா said...

//முகுந்த் அம்மா said...

நீங்களுமா தெகா ! போதும் பா சாமி, இந்த நித்தியானந்த வீடியோ வந்தாலும் வந்தது எங்க திரும்பினாலும் அந்தாளு புராணம் தான்//

ஆமாம், முகுந்தம்மா நான் வேணாமின்னுதான் இருந்தேன், ஆனா சொல்ல வேண்டிய நேரத்தில சரியா சொல்லிடணும் இல்லன்னா போயிச் சேராது. ... இப்போ புதிசா 'கல்கி' வந்திருக்காம் :D
**************************************
வாங்க கண்மணி,

//பாவம் ரஞ்சிதா...ஏதோ தப்பாய் போயிடும்னு பட்சி சொல்லுது.
தேவநாதன் மேட்டர்ல அந்தப் பொண்ணுங்களைக் காட்டல.முகம் மறைத்து யூகத்துக்கே விடுட்டிருந்தா பொழச்சிப் போன்னு...நடிகைனா பாவம் பாக்க மாட்டாங்களா?//

கண்டிப்பா செஞ்சிருக்கணுங்க. அதான் என்னோட ஜெனியூன் வருத்தமும். ஆனா, ஊடகங்களின் இந்தக் காலத்து பேராசைக்கு முன்னாடி எதுவும் நிக்க முடியாது. கூடுதலா நடிகைன்னா இன்னமும் சொல்லவே வேண்டாம்...
***********************************
வாங்க பாபு,

//இதென்ன 'சோ'த்தனமா இருக்கு...
ஹையோ! ஹையோ!! ;)//

அந்த ஆளு மாதிரியா சவுண்டாகுறேன் :(( , நான் சொல்ல வந்தது, அவ்வளவு உண்மையான காதல் இருந்தது அந்தப் பெண் இடத்திலிருந்து, அதைப் போயி இவ்வளவு கொச்சை பண்ண வேண்டியதாப் போச்சேன்னு வருத்தப் பட்டிருக்கேங்க... நன்றி, பாபு!

சந்தோஷ் = Santhosh said...

அப்ப அவரு செய்தது தப்பே இல்லை..ரஞ்சிதாவும் அவரு மேல காதல் வயப்பட்டு ஏதோ கூட இருந்து ரெண்டு பேரும் ரொமேன்ஸ் பண்றதை பாத்த மாதிரி இல்ல சொல்றீரு ரைட்டு..அவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன டீலிங்குன்னே தெரியாம காதலாம் இதாம் அதாம்..சில பெண்ணிய வியாதிங்க கிளம்பிட்டாங்கய்யா..அய்யோ பாவம் அந்த பொண்ணுன்னு.. கள்ளக்காதலனோட ஓடிப்போற பொண்ணுங்க கூட தான் பாவம்..கொலை செய்றவன் கொள்ளையடிக்கிறவன், பாலியல் பலாத்காரம் செய்றவனுக்கு கூட தான் ஒரு காரணம் இருக்கு..அவனையும் பாவம் பாத்து விட்டுடலாமா?

கொஞ்ச நாளா இந்த ஆளு சரியில்லை..சேர்கையை சரியில்லைன்னு நெனைக்கிறேன்..

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

வலையுலகம் முழுக்க நித்யானந்தர் ஜுரமா? நீங்களுமா பிரபா? ஆனா உங்க பார்வை சரி! நான் அறிந்த வரை.

Anonymous said...

Mams..deep here...aantha aal panathu edhuvum thappu illa....aanna...aavaroda books ellam padipaarunga.....aathukapuram antha video clip aah paarunga.....then definetly u will get some "kolaveri"

Related Posts with Thumbnails