Tuesday, March 16, 2010

பேசாத்துணைகட்டிய துணைவியும்
சுயநலம்வேண்டி
சுமங்கலியாய்
முன்சென்றோட
பிள்ளைகளோ பிழைப்புத்தேடி
அவசர உலகத்தில்
கரைந்து போக...

ராஜ யோகாசனத்தில்
இன்று நானமர்ந்து பொழுதைக்
கழித்தாலும்
அடுத்தவேளை உணவைத்தேடி
நானெழுந்து அமர்கையில்
அகங்காரமேதுமற்று
பட்டினி நிகழ்த்தாமலும்
பாசத்திற்கு விலைவைக்காமலும்
கூடவே ஒட்டிப்பிறந்தவனாய்
பாரம் சுமக்க காத்துநிற்கும்
கைத்தடி!குறிப்பு: இதனை என் குரலில் வாசித்து கேக்க-30 comments:

cheena (சீனா) said...

அன்பின் தெக்ஸ்

பேசாத்துணை - கைத்தடி - அருமையான கவிதை - தேர்ந்தெடுக்கப்பட்ட படம்.

சிந்தனை ஓட்டம் தெளிவு - சொற்கள் வலிமை வாய்ந்தவை - சுயநல சுமங்கலி - பிழைப்புத் தேடும் பிள்ளைகளோ பணி புரியும் இடங்களில் - தனிமை - முதுமை - வறுமை - பெருமை - இவை அனைத்திலும் கூடவே வரும் - சுய நலமில்லாத - எதையும் எதிர்பாராத - நட்பின் இலக்கணம் கைத்தடி

நல்வாழ்த்துகள் தெக்ஸ்

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்குங்க..கடைசிலேதான் புரிஞ்சது...ஆனா,ஏன் கவிஜா - ன்னு லேபில்? கவுஜ/கவிதை கேள்விப்பட்டிருக்கேன்..இது புதுசா இருக்கு?! :-)

Thekkikattan|தெகா said...

.ஆனா,ஏன் கவிஜா - ன்னு லேபில்? கவுஜ/கவிதை கேள்விப்பட்டிருக்கேன்..இது புதுசா இருக்கு?! :-)//

நாங்க வித்தியாசமா இருக்கணுமில்ல :) எதிலும் ஒட்டாம, அதேய்ன் "கவிஜா" ...

சின்ன அம்மிணி said...

வயதானபின் மனைவியும் காலமாகி விட்டால் ஆண்கள்பாடு திண்டாட்டம்தான். நல்ல கவிதை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அகங்காரம் இல்லாம, விலைவைக்காம.. ம்

தலைப்பும் நல்லாருக்கு..

பதி said...

ஊரில் இருக்கும் பலரும் நினைவில் வந்து போனார்கள் !!!!

Thekkikattan|தெகா said...

நன்றி... சீனா,

இது ஓர் inspirational கவிஜா, ஒர் பார்க்கில் அமர்ந்து பொழுதைக் கழிக்கும் oldies படம் பார்க்கும் பொழுது மனதில் எழும்பிய எண்ணங்கள் :-) , அனுபவிச்சிருக்கீங்கன்னு தெரியுது...

ராஜ நடராஜன் said...

அப்பன்கள் காலத்து யதார்த்தமான நடை,உடை....ஒரு தலைமுறையின் அனுபவ கோடுகள் கண்முன்னே.

கைத்தடி மட்டும் அவரவர் வசதிக்கேற்றார் போல!கவிதை தலைப்பு.

நாமக்கல் சிபி said...

நல்ல கவிதை தெக்ஸ்!

பேசாமலேயே சோகங்களைச் சொல்கிறது அந்தப் படம்!

மங்கை said...

நல்ல வேலை இந்த தடவை புரியற மாதிரி எழுதிட்டீங்க... இல்லன்னா எப்பவும் போல ஓடி இருப்பேன்...

Thekkikattan|தெகா said...

//வயதானபின் மனைவியும் காலமாகி விட்டால் ஆண்கள்பாடு திண்டாட்டம்தான். நல்ல கவிதை//

சின்ன அம்மிணி, வணக்கம். இரு பாலரில் யாரு தனித்து விடப்பட்டாலும் கொஞ்சம் தடுமாற்றம் எஞ்சித்தான் நிற்கும், இருந்தாலும் நீங்க சொன்ன மாதிரி ஆண்களுக்கு கொஞ்சம் கூடுதல் 'இடி' இறங்கியிருக்கும்னு நினைக்கிறேன்.
*****************************

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
அகங்காரம் இல்லாம, விலைவைக்காம.. ம்

தலைப்பும் நல்லாருக்கு//

கவிஜா - ஊக்குவித்தலுக்கு ஒரு சிறப்பு நன்றிங்கோவ்...

சுரேகா.. said...

பின்றீங்க அண்ணா!

கைத்தடிக்குப் பெருமை தேடும்
ஒரு அற்புதக் கவிதை!

முதுமையின் விலைகளில் ஒன்று!

என்ன சொல்றது...!

தெகாவுக்கு நான் தம்பீ!!!!!!!!!!

கோபிநாத் said...

படமும்..வரிகளும் வர போறதை முன்கூட்டியே சொல்ற மாதிரி இருக்கு..!

முகுந்த் அம்மா said...

அருமையான கவிதை தெகா. கவனிப்பாரற்ற முதுமையின் கடைசி வரை கூட வருவது கைத்தடி மட்டுமே. நல்ல பதிவு.

Thekkikattan|தெகா said...

//பதி said...

ஊரில் இருக்கும் பலரும் நினைவில் வந்து போனார்கள் !!!//

வந்திச்சா... வந்திச்சா அதுக்காகத்தானே இங்கன கிறுக்கி வைக்கிறது. சந்தோஷம்! தாத்தாக்கள மனசில நிறுத்திக்கோங்க, பதி :-)...

//ராஜ நடராஜன் said...

அப்பன்கள் காலத்து யதார்த்தமான நடை,உடை....ஒரு தலைமுறையின் அனுபவ கோடுகள் கண்முன்னே//

ஆமா, அது போன்ற தாத்தாக்கள் இன்னும் நம் கை வசம் இருக்காங்க... விட்டுடக் கூடாதில்ல...

//கைத்தடி மட்டும் அவரவர் வசதிக்கேற்றார் போல!//

மிகச் சரியா சொன்னீக, ராஜ நட ...

குடுகுடுப்பை said...

சுரேகா சித்தப்பன் சொல்றதையே நானும் சொல்லிக்கறேன்.

சுரேகாவுக்கு தெக்கிக்காட்டான் அண்ணன்.

குடுகுடுப்பை said...

படத்தை பாத்தவுடன் ஆடிப்போயிட்டேன். என்னையெல்லாம் வயசான ஒருத்தரும் பாக்கமாட்டாங்கன்னு உறுதியா நம்புறேன்.அதுனாலே இங்கேயே இருந்து அஸிஸ்ட்டடு லிவிங்ல சேர காசு சம்பாதிக்கனும்னு தோனுது.

Thekkikattan|தெகா said...

குழந்த குடுகுடு,

//சுரேகா சித்தப்பன் சொல்றதையே நானும் சொல்லிக்கறேன்.//

:)))) அடப்பாவி! இந்த அளவிற்கு போயிருச்சா என்னய குடுகுடு கிழவன் ரேஞ்சிற்கு எடுத்திட்டுப் பொயிட்டீயளே....

//அதுனாலே இங்கேயே இருந்து அஸிஸ்ட்டடு லிவிங்ல சேர காசு சம்பாதிக்கனும்னு தோனுது.//

இப்படிச் சொல்லி என் வயித்தில புளீயைக் கரைக்கிறியேப்பா.... அவ்வ்வ்வ்வ்வ் என்ன செய்ய!!!

Thekkikattan|தெகா said...

பித்ஸ்,

எம்பூட்டு நாளச்சு உங்கள என் வீட்டில வைச்சிப் பார்த்து...

//பேசாமலேயே சோகங்களைச் சொல்கிறது அந்தப் படம்//

ஆமாம், நிறைய நாட்கள் படத்திற்காக தேடிட்டே இருந்தேன்... இது சென்னை தாத்தா... :)
****************************

//மங்கை said...
நல்ல வேலை இந்த தடவை புரியற மாதிரி எழுதிட்டீங்க... இல்லன்னா எப்பவும் போல ஓடி இருப்பேன்.//

பாருய்யா, இது வேறையா! நல்ல வேளை வந்திட்டு சத்தமில்லாம போகமா இருந்தீங்களே, இது மாதிரி பாசிடிவான கமெண்ட்தான் வேணும் :-D

kutipaiya said...

Thekkii

A very empathetical post without u not being experienced it actually...

Avvaiyar paatu madhri - thanimaiye kodumai, adhaninum kodumai mudhumayil kodumai.. Erkanave solirka madhri aangaluku baadhipu konjam jaasthi pola dhan theriydhu

Nala photo - soliye aaganum :) kaithadi vaangi ipave friend aaki vachikanum pola iruke ! :(

Gud one, as usual :D

Thekkikattan|தெகா said...

தம்பியான் சுரேகா,

//முதுமையின் விலைகளில் ஒன்று!//

அதுவும் மனித வாழ்க்கையின் அனுபவப் பாடப் பிரிவில் a chapterதானே? அதுனாலே சாய்ஸ்ல விட முடியாது போலவே! ஆனா, ஒண்ணு செய்யலாம் எப்படி இன்றைய வகுப்புகளில் கவனிச்சு வாழ்ந்திருக்கோம்ங்கிற வைச்சு அந்தப் பருவத்தை 'அழக' முகம் கொடுக்க முடியுமோன்னு நினைக்கிறேன்... பார்ப்போம்!

பார்த்தியா, நம்ம குடுகுடுப்பை தம்பி உன்னய சித்தப்பு ரேஞ்சிற்கு எடுத்துட்டுப் போயி - என்னய அவ்வ்வ்வ்... :)

பாராட்டிற்கு நன்றி!
***********************************
//கோபிநாத் said...

படமும்..வரிகளும் வர போறதை முன்கூட்டியே சொல்ற மாதிரி இருக்கு...!//

மீண்டும் வருக, கோபி! இ. ராஜா நலமா :)?
ம்ம்ம்... உங்க கருத்திற்கு நன்றி. அதில ஒரு விசயம் என்னன்னா, எழுதும் பொழுது எதனையும் மனசில புரியணும், புரியக் கூடாதுங்கிற மாதிரி உட்கார்ந்து யோசிச்சு செய்றதில்ல அதுவா வந்து விழுறதுதான்... மற்றபடி வாசிக்கிறவங்க கையாண்ட இருக்கு மிச்சம் மீதி... :) .

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

இந்தக்கவிதையப்படிச்சதும் எனது மாமியாரை இழந்த மாமனார் நினைவு வந்து சங்கடமாகிவிட்டது.

ராஜ நடராஜன் said...

ம்!மறுபின்னூட்டத்துல இரண்டு மாங்கா.ஒண்ணு முன்னாடிப் பின்னூட்டம் பார்த்த மாதிரியும் ஆச்சு.இரண்டாவது உங்கள கேட்காமலே திடீர்ன்னு ஒரு மொக்கை இடுகையில உங்க பேரை இழுக்க வேண்டியதாயிடுச்சு.

வேற ஒண்ணுமில்ல!யோகாசனப் படத்துக்கு உங்க பெயரை சிபாரிசு செய்து விட்டேன்:)

Thekkikattan|தெகா said...

வாங்க முகுந்த் அம்மா,

//கவனிப்பாரற்ற முதுமையின் கடைசி வரை கூட வருவது கைத்தடி மட்டுமே..//

கவிதையின் கரு'வையே எடுத்து முன் வைச்சிட்டீங்க :) நன்றி!

**************
வாங்க குட்டிப் பையா,

//Avvaiyar paatu madhri - thanimaiye kodumai, adhaninum kodumai mudhumayil kodumai.//

அதாவது அவ்வையார் பாடல்ல வர்ற மாதிரி - தனிமையே கொடுமை, அதனினும் கொடுமை முதுமையில் 'தனிமை' ... ரொம்பச் சரி - அந்த ஸ்டேஜ்ல காப்பிக் கோப்பையோட மனசிக்கு பிடிச்ச நண்பர்கள் கிடைச்சிப் பொயிட்டா அதனையும் 'செலிப்புரேட்' பண்ணி வாழ்ந்திட முடியாது :)

//Nala photo - soliye aaganum :)//

சரி... சரி :-)

//kaithadi vaangi ipave friend aaki vachikanum pola iruke ! :(//

ஒரு கைத்தடி எவ்வளவு வந்திரப் போவது, அதுக்கு ஏன் இம்பூட்டுச் சோகம் ...

ஊக்குவித்தலுக்கு நன்றிங்கோவ்...

Thekkikattan|தெகா said...

//க.நா.சாந்தி லெட்சுமணன். said...
இந்தக்கவிதையப்படிச்சதும் எனது மாமியாரை இழந்த மாமனார் நினைவு வந்து சங்கடமாகிவிட்டது//

வாங்க க. நா. சா! நிறைய பேருக்கு வந்த பின்னூட்டங்களைக் கொண்டு பார்த்தால், படித்து முடித்தவுடன் மனசிற்குள், ஏதோ ஒரு வகையில் உணர்வுகளைச் சீண்டிப் பார்த்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது... விடுங்க, வாழ்க்கையின் பகுதிதானே இதுவும்!
**********************************

ராஜ நட,

//இரண்டாவது உங்கள கேட்காமலே திடீர்ன்னு ஒரு மொக்கை இடுகையில உங்க பேரை இழுக்க வேண்டியதாயிடுச்சு.//

ஓ! அப்படியா!! நன்றிம்மே... நான் வேற இவரு எதைப் பத்தி, எங்கே பேசியிருக்காருன்னு கொஞ்சம் நேரம் அப்படி இப்படின்னு யோசிச்சிட்டு இருந்தேன், பொறகு உங்க கடைக்கு வந்தேனே புரிஞ்சிப்போச்... எப்போ நம்ம இணைப்பு கொடுத்தாலும் ..இந்த கடைக்கு நேரடியா வர்ற மாதிரி செஞ்சிடுங்க, மற்றபடி நானாச்சு வந்து மாட்டின அப்புராணியாச்சு :D

ஆடுமாடு said...

கைத்தடிக்கு ஒரு கவிதையா?

நல்லாருக்கு. கைத்தடிங்கிற குறியீடு பல சோகங்களை உள்ளடக்கியிருக்கிற பொருள்.

அதில் காந்தியையும் பார்க்கலாம். என்னை சுமந்த சொல்லமுத்து தாத்தாவையும் பார்க்கலாம்.

வாழ்த்துகள் தெகா.

padma said...

கடைசி வரை இதான் போல ,பல சமயம் முதுமை ஒரு வரமாய் இல்லாமல் போய்விடுகிறது.
சுயநலமாய் சுமங்கலனாய் அவனும் போய்விட்டால் ஒரு கிழவிக்கு இது போல கைத்தடிகூட கிடைப்பது கஷ்டம் .தாத்தாவுக்கு அதாவது இருக்கு .

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கலக்கல் நண்பரே !

அருமையான சிந்தனை !

கோமதி அரசு said...

பேசாத்துணை தலைப்பு அற்புதம்.
எண்ணெய் முந்துமோ,திரி முந்துமோ என்ற நிலை தான் பெரியவர்களுக்கு.

வயதானவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து பேசாத்துணையாக கூடவருவது கைதடிதான்.

நல்ல கவிதை தெகா.

Thekkikattan|தெகா said...

//நல்லாருக்கு. கைத்தடிங்கிற குறியீடு பல சோகங்களை உள்ளடக்கியிருக்கிற பொருள்.//

வாங்க ஆடுமாடு, இதுக்குத்தான் உங்கள என் வீட்டாண்டை அதுக்கும் இந்த கவிஜாவிற்கு கூட்டியாந்தேன்...

//அதில் காந்தியையும் பார்க்கலாம். என்னை சுமந்த சொல்லமுத்து தாத்தாவையும் பார்க்கலாம்.//

ஆஹா, எப்படி போட்டுச் சொல்லிட்டீங்க :) சொல்லமுத்து தாத்தாவை சுமந்த கைத்தடின்னா இன்னும் கூடுதல் கிக்கா இருக்கில்ல ... நன்றி உங்கள் நிறுத்தத்திற்கு.
***************************************

//padma said...

கடைசி வரை இதான் போல ,பல சமயம் முதுமை ஒரு வரமாய் இல்லாமல் போய்விடுகிறது.
சுயநலமாய் சுமங்கலனாய் அவனும் போய்விட்டால் ஒரு கிழவிக்கு இது போல கைத்தடிகூட கிடைப்பது கஷ்டம் .தாத்தாவுக்கு அதாவது இருக்கு.//

வாங்க பத்மா முதல் முறை இந்தப் பக்கம். நன்றி. நீங்க சொல்லுற பாட்டிங்க விசயமும் சரிதானோ?!

Related Posts with Thumbnails