ராட்டினச் சக்கரமென சுழன்று
எதிர் எதிருமாய்
மேலும் கீழுமாய்
புரட்டும்
ஏதோவொரு புள்ளியில் இடைச்செருகலாக
நானைத் திணித்தபடி
நிறங்களை கூட்டி மெருகூட்டி
குறைத்து குமைந்து
ஹீலிய பலூனாய்
மேலெழும்பி
கீழிறங்கும்
நிதர்சனம் தவிர்த்து
பொலிவோடும் அற்றதுமாய்
வட்டத்தின் தொடக்கம் உணர
சக்கரத்தின் பற்களில் வாழ்க்கை!
13 comments:
சக்கரத்தின் பற்களில்தான் வாழ்க்கை.
பற்கள் இல்லாத சக்கரம் இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?
நல்லாருக்குஜி.
வாழ்த்துகள்.
ஊக்கமா இருங்க தலைவா!
தெகா!புகைப்பட ஓவியராவே மாறீட்டீங்க.தொடருங்கள்.
கவிதை மனநிலை குறிக்கிறதா?
நானை திணித்த படி - நானை என்றால் என்ன
பொலிவோடும் வற்றதுமாய் - பொலிவோடும் அற்றதுமாய் - எது சரி
பொலிவற்றதுமாய் என்பது வற்றதுமாய் என வந்ததா
சக்கரத்தின் பற்களில் வாழ்க்கை
ம்ம்ம்ம்ம் - கவிதை அருமை - கருத்து புரியவில்லை
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
சொல்லவர்ரது புரியுது ஆனா பிழைகள் சரிபார்க்கவும். அவசரம் என்ன?
வாழ்க்கை பல் சக்கரம் பிச்சி சின்னாபின்னமாக்கி போடுதோ :)
//நானைத் திணித்தபடி//
நானாகிய பொருள்... நான் என்பதை வெளியில் இருந்து பார்க்கும் ஒரு பொருளாய்...அடா அடா அடா..
வாழ்க்கைத் தத்துவத்தை ஒரு வார்த்தையில் உணர்த்தி விட்டீர் தெக்கி..
ஏதோ ஒரு புள்ளியில் நம்மைச் சொருகி ஏதொ ஒரு புள்ளியில் விடுபட்டுவிட முடிந்தால் வாழ்க்கை மிக எளிதானதாகிவிடும், இல்லையா?
வாங்க ஆடுமாடு,
//பற்கள் இல்லாத சக்கரம் இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?//
பற்கள் இல்லாத சக்கரத்தை யோசிச்சிப் பாருங்களேன், சுவையே இருக்காது, ஒரு பல்லு உடைஞ்சிட்டாலும், செயின் கூட நிக்காது, எனவே பல்லு வேணும் அப்பத்தேய்ன் சுவைக்கும் - வாழ்க்கை :D !
முதல் பின்னூட்டமா கூல்...
//பழமைபேசி said...
ஊக்கமா இருங்க தலைவா!//
இன்னும் அந்தத் தலைவர் பதவியை வேறு யாருக்கும் கொடுக்கலையா... அவ்வ்வ் பாஸ் - சீக்கிரம் கண்டுபிடிச்சு கொடுங்க, பழம :))
**************************
//ராஜ நடராஜன் said...
தெகா!புகைப்பட ஓவியராவே மாறீட்டீங்க.தொடருங்கள்.//
ராஜ நட, புகைப்படம் கடன் வாங்கி போட்டேங்க, பேரு அதில இருக்கும் பாருங்க.
//கவிதை மனநிலை குறிக்கிறதா?//
வாழ்க்கையின் 'படி' நிலைகள் குறித்து பேசுகிறது... அதனில் நம்மின் ஏற்றமும் - இறக்கமும் - அதனையொட்டிய தன்முனைப்பு.
வாங்க சீனா,
அது எழுதும் பொழுது வேறு மாதிரியான புரிதலில் எழுதியது பின்னால் நானே கொஞ்சம் தூங்கிட்டேன்...
பொலிவோடு நிறைந்தும், வற்றியுமான வாழ்க்கை என்ற புரிதலில் அமைந்துபட்டிருந்தது... பின்பு, மறந்த நிலையில நானும் குழம்பிவிட்டேன்...
//சக்கரத்தின் பற்களில் வாழ்க்கை
ம்ம்ம்ம்ம் - கவிதை அருமை - கருத்து புரியவில்லை//
அந்த காலச் சுழற்சி என்னும் பெரிய சக்கரத்தில் அமைந்த முற்களில் நாமும் ஒரு அங்கம்தான் அதனில் மேலும், கீழும் சென்றுவருவதும் இயல்புதான் என்ற அடிப்படையை உணரும் பொழுது...
எந்தக் கவிதையும் எனக்குப் புரிந்ததில்லை.. ஏதோ வாழ்க்கையின் நிதர்சனத்தை சொல்றீங்கன்னு புரியுது..
வாழ்க்கையை இத்தனை கஷ்டப்பட்டு புரிஞ்சுக்கணுமா...ம்ம்ம்ம்ம்..
ஏன் அதை எல்லோரும் அத்தனை காம்ப்ளிகேட்டா ஆக்குறாங்க..
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
சொல்லவர்ரது புரியுது ஆனா பிழைகள் சரிபார்க்கவும். அவசரம் என்ன?
வாழ்க்கை பல் சக்கரம் பிச்சி சின்னாபின்னமாக்கி போடுதோ :)//
ம்ம்ம்... கொஞ்சம் அவசரப்பட்டுட்டேனோ... ஆனா, ஒரு ஒற்றுப் பிழை, அது தப்பேத்தேய்ன்... ஆனா, வற்றியதுமாய்ங்கிறதுக்கு சீனாவிற்கு விளக்கம் கொடுத்திருப்பேனே... ஹிஹிஹி :)
பிச்சி போடுறதைப் பொருத்து - அது இல்லாமலா நாமெல்லாம்...
//நான் என்பதை வெளியில் இருந்து பார்க்கும் ஒரு பொருளாய்...//
குட்டிப்'பையா, வெளியிலிருந்து பார்க்கிற அந்த ப்ரக்ஞை மட்டும் கை கூடிருச்சின்னா, அடடா வாழ்வின் எல்லா நிகழ்வுகளுமே நமக்கு ஒரு நாடகமாக தெரியாதா... :-)
//ஏதோ ஒரு புள்ளியில் நம்மைச் சொருகி ஏதொ ஒரு புள்ளியில் விடுபட்டுவிட முடிந்தால் வாழ்க்கை மிக எளிதானதாகிவிடும், இல்லையா?//
கண்டிப்பாக முடியும், மேலே சொன்ன பக்குவத்தை மட்டுமே கொஞ்சமேனும் வளர்த்திக்கிட்டோம்னா... சத்தமே இல்லாமல் ஒரு புள்ளியில் சொருகி, சத்தமே இல்லாமல் விடுபட்டு போகிவிடவும் முடியும்...
Post a Comment