Sunday, November 12, 2006

நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - II

எனது முந்தைய "நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - I" என்ற பதிவின் நீளம் கருதி அதனை உடைத்து அதன் முடிவுப் பகுதியாக இந்த பதிவினை வழக்குகிறேன்.

இந்தப் பதிவில் மதங்களின் பங்களிப்பு இயற்கை பலாத்காரத்திற்கு எப்படி துணை போகிறது என்பதனை சற்றே உரசிச் செல்லலாம். இருப்பினும் எந்த ஒரு மதத்தினையும் விரல் நீட்டி அதுவே எல்லாவற்றிர்கும் காரணம் என்ற சொல்ல எத்தனிக்கவில்லை.

அப்படி ஒரு புறத் தோற்றத்தை வழங்கினால், அது படிப்பவரின் புரிந்துணர்வு சார்ந்ததே என்பதனை சொல்லிக் கொள்கிறேன்.

மதத்தை போதிக்கும் எந்தவொரு மதக் காவலர்களும் எப்பொழு எல்லாம் ஏதாவொரு கட்டுக்கடங்க இயற்கை சீரழிவு நடந்தேறுகிறதோ அப்பொழுதெல்லாம் அவர்கள், கடவுளர்களின் நன் மதிப்பை காப்பாற்றும் அரண்களாக நின்று சாக்கு போக்கு சொல்வது யாவரும் அறிந்ததே. அதற்கான உண்மை காரணத்தை புறம் தள்ளி. இதுவரையிலும் அதுவே நடந்தும் வருகிறது.

ஆனால் எனது பார்வையில் கடவுளும் - இயற்கையும் வேறு வேறாக தோற்றமளிக்கவில்லை. இயற்கையே, நாம் தவறான ஒரு முடிவு எடுத்து அது அவ்வாறு முடிவுறும் பொழுது கண் கூடாக நம் முன் நின்று நம்மை பல் வேறு முறைகளில் தண்டித்தும் விடுகிறது. அல்லது அதற்கு மாறாக நல்லதொரு முடிவை எடுத்து இயற்கையை அரவணைத்து செல்லும் பொருட்டு நம்மை கட்டி அணைத்து மகிழ்விக்கச் செய்கிறது.

எனவே எனது பார்வையில் இவ் இயற்கைதான் நம் கூடவே வாழ்ந்து வரும் கடவுள். கடவுள் வேறு எங்கும் இல்லை.

இவ்வுலகில் வாழும் அத்துனை ஜீவராசிகளும் நாம் செய்கின்ற அடிப்படை விசயங்களையே அவைகளும் செய்து வருகின்றன - உண்ணுதல், இனப்பெருக்கம் செய்தல், உறங்குதல் பிறகு செத்து மடிதல். இதிலிருந்து நமக்கு மட்டும் என்ன விதி விலக்கு, சற்றே விலகி நின்று யோசிக்கும் பொருட்டு, நாமும் அதனையேத்தான் செய்து வருகிறோம், இல்லையா?

சரி விசயம் இப்படியாக இருக்க இந்த இயற்கை-கடவுள் ஏன் மனிதன் என்ற ஒரு விலங்கை மட்டும் சுய-சிந்தனை என்ற ஒர் பரிணாம வழியுனுடே செலுத்தி இங்கே நம்மை முன்னெருத்தி வைத்து பார்க்க வேண்டும்?

இந்த பல இயற்கை சார்ந்த பரிணாம கண் சிமிட்டலுக்கு முன்பு, நம்முடைய இருப்பு இந்த பூமியில் ஒரு விரல் செடுக்கை விட குறைவே என்று பார்க்கும் தருனத்தில் நமக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகமே இந்த இயற்கை சார்ந்த விழிப்புணர்வு நிலைக்கு நம்மை மீண்டும் கொணர்வதற்கு.

அங்கேதான் இந்த ஃப்ரீ வில் என்ற பரிணாம யுக்தியும் இயற்கை நமக்கு வழங்கி ஒரு பரிசோதனை ஓட்டமும் நடத்திக் கொண்டிருக்கிறது நம்மிடையே.

எங்கோ இல்லாத கடவுள் வந்து இவ்வுலகை காப்பாற்றுவான் என்று கையில் உள்ள கடவுளை கண்ணை கட்டி ஏதோ நடத்துவது போல பலாத்காரங்கள் தொடர்ந்தால்... விளைவுகள் இப்படியாகத்தானே அரங்கேறும்.

நாம் பொறுப்பற்ற செயல்களால் கட்டுக்கடங்காத மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், மனித சந்தோஷங்களுக்காகவுந்தான் இந்த பூமி படைக்கப் பெற்றது என்ற மனோ நிலையில் விசயங்களை அணுகும் பொழுது கிடைப்பது என்னவாக இருக்கும்? ஒரே வீட்டையும் நரகமாக்கி கொள்வதைத் தவிற.

உதாரணமாக, உலக-சூடேற்றத்தினை எடுத்துக் கொள்வோம். பொறுப்பற்ற முறையில் பொருளாதார முன்னேற்றத்தினை மட்டுமே முன்னுருத்தி கார்களின் பெருக்கத்தை பெருக்கி வெளித் தள்ளுவதால் நடைமுறையில் நாம் சந்திக்கும் விளைவு வெப்பச்-சூடேற்றம் (இரண்டாம் பாகம்).

இந்த வெப்பமே கடல் நீர் சூடாவதற்கும் காரணியாகிறது, இந்த கடல் நீர் வெப்பமே வரும் சூறாவளிகளின் பசிக்கு தீனி போட்டு அதன் வேகத்தை இரட்டிப்பாக்கி நம்மை நோக்கி சுழன்று அடிக்க வைக்கிறது. இது போன்ற நேரடி விளைவுகளுக்கு நானும், நீங்களும்தான் காரணமா அல்லது எங்கோ இருக்கும் கடவுளா? எது?

இது போன்ற ஒரு அழிவு வரும் பொழுது இயற்கை சீற்றம் திசை பார்க்கிறதா, மதம் பார்க்கிறதா, ஏழை, பணக்கார நாடு பார்க்கிறதா? எதனையும் பார்பது கிடையாதுதானே. இவைகளனைத்தும் இயற்கையின் முன் சமமே.
இன்று "நாம் என்ற உணர்வுசார்ந்த நிலை (Collective Consciousness)"லிருந்து பல வேறு பட்ட காரணங்களால் மனித இனம் பிளவுப் பட்டு தூர விலகி நிற்பதுவும் கூட, இயற்கையின் மீது நாம் நடத்தும் ஒரு போரின் வெளிப்பாடே அன்றி வேறென்ன.

மதங்கள் இந்த இயற்கை சார்ந்த சீரழிவுகளை மட்டும்படுத்தும் பொறுப்புணர்ந்து, சாக்கு போக்கு ஆருதல் மக்களுக்கு சொல்லுவதை காட்டிலும், உண்மை காரணத்தை எடுத்துக் கூறி நம்முடன் விழித்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இயற்கை கடவுளை போற்றி, பேணி வாழ்தல் ஒன்றே நாம் தப்பிப் பிழைப்பதற்கு வழி என்பதனை எடுத்துயம்புமா?

நாம் இயற்கையின் ஒரு அங்கமே நாம் இல்லாமல் கூட இந்த இயற்கை தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் (டைனோசார்கள் மாண்ட பிறகு எப்படியோ) என்பதனை உணர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த மதங்கள் எடுத்துக் கூறுமா?

29 comments:

துளசி கோபால் said...

//இவ்வுலகில் வாழும் அத்துனை ஜீவராசிகளும் நாம் செய்கின்ற அடிப்படை விசயங்களையே அவைகளும் செய்து வருகின்றன - உண்ணுதல், இனப்பெருக்கம் செய்தல், உறங்குதல் பிறகு செத்து மடிதல். இதிலிருந்து நமக்கு மட்டும் என்ன விதி விலக்கு, சற்றே விலகி நின்று யோசிக்கும் பொருட்டு, நாமும் அதனையேத்தான் செய்து வருகிறோம், இல்லையா?//

அதெப்படி? எந்த விலங்கு ப்ளொக் வச்சிருக்கு? :-)))))

ஆனா, உலகத்தின் அதி அபாயமான ஜீவராசி மனுஷன் மட்டுமே.

Sivabalan said...

தெகா,

//நாம் இயற்கையின் ஒரு அங்கமே நாம் இல்லாமல் கூட இந்த இயற்கை தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் (டைனோசார்கள் மாண்ட பிறகு எப்படியோ) என்பதனை உணர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த மதங்கள் எடுத்துக் கூறுமா?//

எவ்வளவு பெரிய உண்மையை சொல்லியிருக்கீங்க..

மீன்டும் ஒரு நல்ல பதிவு.

தலைப்பை புரட்சி தலைவி வாழ்க!! கலைஞர் வாழ்க!! என்று வைத்திருந்தீங்கன்னா.. இதற்குள் ஒரு 500 பேர் படித்திருப்பார்கள்..

என்னமோ போங்க..

எழில் said...

இந்த பதிவின் இரண்டு பாகங்களும் அருமை
தேவையான பதிவு

மங்கை said...

//இயற்கையை அரவணைத்து செல்லும் பொருட்டு நம்மை கட்டி அணைத்து மகிழ்விக்கச் செய்கிறது//

அருமையா சொல்லி இருக்கீங்க

Study nature, love nature, stay close to nature. It will never fail you....


பழமை வாய்ந்த அனைத்து கோவில்களிலும் இந்த இயற்கை பாதுகாப்பை உணர்த்தும் பல விஷயங்களை பார்க்கலாம்..
Eg-ஸ்தல விருஷம், தெப்பக்குளம், மிருகங்கள், பறவைகள் போன்றவை..

அருமையா இருக்கு தெகா

பொன்ஸ்~~Poorna said...

//பல வேறு பட்ட காரணங்களால் மனித இனம் பிளவுப் பட்டு தூர விலகி நிற்பதுவும் கூட, இயற்கையின் மீது நாம் நடத்தும் ஒரு போரின் வெளிப்பாடே அன்றி வேறென்ன//
நல்லா சொல்லி இருக்கீங்க தெகா.. உண்மை தான்.

வசந்த் said...

முதல் பதிவில் அருமையான தொடக்கம் கொடுத்து இரண்டாம் பதிவில் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறீர்கள் .

அனால் மதவாதிகளுடன் சிறிது மல்லுக் கட்ட வேண்டி இருக்கும்.

அவர்களும் எத்தனையை செய்வார்கள். மக்களின் மத நம்பிக்கயை அழிய விடாமல் காப்பார்களா, இது போன்று பைசா பெறாத காரியத்தை (அவர்களுக்கு )செய்வார்களா..

நல்ல பதிவுக்கு நன்றி.
வசந்த்

Thangamani said...

நல்ல பதிவு தேகா. இரண்டு பாகங்களும் அருமை.

//நாம் இயற்கையின் ஒரு அங்கமே நாம் இல்லாமல் கூட இந்த இயற்கை தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் (டைனோசார்கள் மாண்ட பிறகு எப்படியோ) என்பதனை உணர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த மதங்கள் எடுத்துக் கூறுமா?//

:))

Thekkikattan said...

//அதெப்படி? எந்த விலங்கு ப்ளொக் வச்சிருக்கு? :-)))))//

ஆமாம், ப்ளாக் வச்சு கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டுக்க ;-)

//ஆனா, உலகத்தின் அதி அபாயமான ஜீவராசி மனுஷன் மட்டுமே.//

இப்ப சொன்னீங்களே இது வாஸ்தவமான வார்த்தை. மனுசப் பயலுவோ எல்லாத்துக்கும் காரணம் கண்டு பிடிச்ச மாதிரி, கைப் பிள்ளைங்க வாயில ஒரு Pacifier வைப்பாங்களே அதே மாதிரி வைச்சு ஒண்ணும் நடக்கலை you carry on, அப்படின்னு சொல்லி தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கிட்டு அடுத்த சுயநல exploitative actionல இறங்கிடுங்க... :-))

Thekkikattan said...

//தலைப்பை புரட்சி தலைவி வாழ்க!! கலைஞர் வாழ்க!! என்று வைத்திருந்தீங்கன்னா.. இதற்குள் ஒரு 500 பேர் படித்திருப்பார்கள்..//


விடுங்க. அதுக்காக எல்லாத்தையும் கவர்ச்சியா எழுத முடியுமா? வேணுங்கிறவங்க வேன்டிய போது தானாக முன் வந்து இது போன்ற மண்டை காயவைக்கிற விசயங்களைப் பத்தி தெரிஞ்ச்கிற போறாங்க.

இப்ப நாம செய்றது ஒரு மனத் திருப்திக்காக அப்படிங்கிற மாதிரி முன் வைச்சுட்டு போயிகிட்டே இருக்க வேண்டியது தான்.

Dharumi said...

தெக்கா,
//எங்கோ இல்லாத கடவுள் வந்து இவ்வுலகை காப்பாற்றுவான் என்று கையில் உள்ள கடவுளை கண்ணை கட்டி ஏதோ நடத்துவது போல பலாத்காரங்கள் தொடர்ந்தால்... விளைவுகள் இப்படியாகத்தானே அரங்கேறும்.//

கையில் உள்ள கடவுள் - நல்ல ஒரு சிந்தனை.

இந்த பாகம் நறுக்குன்னு தலையில் குட்டுறது மாதிரி நல்லா வந்திருக்கு.

பத்மா அர்விந்த் said...

மலையில் ஏறி மாதவனை தரிசிக்க செல்லும் பலருக்கு அந்த மலையே கடவுளாக படாதது விந்தையே. நாம் இயற்கை மாசு படியும் காற்று என எதையும் கவலைப்படுவதில்லை. இப்போது மேற்கத்திய உலகு கவலை கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இயற்கை உணவுகளும் இயற்கை பாதுகாப்பும். நாம் எப்போது கற்று கொள்ள போகிறோம்? அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

Thekkikattan said...

Mangai,

//பழமை வாய்ந்த அனைத்து கோவில்களிலும் இந்த இயற்கை பாதுகாப்பை உணர்த்தும் பல விஷயங்களை பார்க்கலாம்..
Eg-ஸ்தல விருஷம், தெப்பக்குளம், மிருகங்கள், பறவைகள் போன்றவை..//

அப்படி ஒரு இயற்கை சார்ந்த விழிப்புணர்வு நமது மூதாதையர்களிடம் இல்லையென்றால் இருக்கும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டுப் பார்த்தால் இருக்கும் wildlife எல்லாமே போயே போயிருக்கும் இந் நேரத்தில்.

நானும் நினைத்து பெறுமை கொள்வதுண்டு, இங்கு தர்க்கிக்கும் பொழுது கூட அதனை சான்றாக எடுத்துக் காட்டி பீத்தி(உண்மையை) கொள்வதுண்டு. ஆனால், எதிர் பாராதவிதமாக இன்று நாம் கொஞ்சம் அதிலிருந்தி விலகி நடக்க எத்தனிக்கிறோம். அதில் தான் பிரச்சினைகளே ஆரம்பிக்கிறது.

Thekkikattan said...

Pons,

//நல்லா சொல்லி இருக்கீங்க தெகா.. உண்மை தான்.//

அதே. சொல்ல வந்ததை நன்கு உள் வாங்கிக் கொண்டு ஆமோதித்தற்கு மிக்க நன்றி தாயீ, :-)

பெத்த ராயுடு said...

இரு பாகங்களும் நன்றாக இருந்தது.
பூமியில் எவ்வளவு நாள் காலம் தள்ளமுடியும் என்ற கேள்வி எழுவதினால்தான் என்னவோ இப்பவே செவ்வாய் கிரகத்துக்கும், டைட்டான் (சரியான்னு தெரியல) கோளுக்கும் சென்று வசிக்க முடியுமான்னு ஆராய்ச்சிகளைத் தொடங்கிவிட்டார்கள்.

அருமையான வசதிகள் நிறைந்த பூமியை கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டு, நமது எதிர்கால சந்ததியை வேறு கிரகங்களில் தவிக்கவிட்டுவிட்டு சென்றுவிடுவோமோ என்று தோன்றுகிறது.

I realize it seems far fetched..., but if we don't think (and act) about our future, it could become a reality.

Thekkikattan said...

எழில், தாங்களின் பாராட்டுதலுக்கு நன்றி. தாங்களின் பதிவு பக்கம வர முடிய வில்லை. படித்து விட்டு பின்பு பின்னூட்டமிடுகிறேன்.

மீண்டும், நன்றி!

Thekkikattan said...

வசந்த்,

//அனால் மதவாதிகளுடன் சிறிது மல்லுக் கட்ட வேண்டி இருக்கும்.

அவர்களும் எத்தனையை செய்வார்கள். மக்களின் மத நம்பிக்கயை அழிய விடாமல் காப்பார்களா, இது போன்று பைசா பெறாத காரியத்தை (அவர்களுக்கு )செய்வார்களா...//

எப்பொழுதும் போல நல்ல கேள்விகளை முன் வைத்திருக்கிறீர்கள். பைசாவிற்கு உதவாத இது போன்ற கசக்கும் உண்மைகளை வெளியில் சொல்லிக் கொண்டு திரிந்தால், அவர்களின் பிழைப்பு எப்படிப் போகும் என்ற தொனி, சூப்பார்ப் ;-)

Thekkikattan said...

தங்கமணி,

தங்களின் பின்னூக்கிக்கும், பாராட்டுதலுக்கும் நன்றி!!

Thekkikattan said...

தருமி,

கையில் உள்ள கடவுள் - நல்ல ஒரு சிந்தனை.

இந்த பாகம் நறுக்குன்னு தலையில் குட்டுறது மாதிரி நல்லா வந்திருக்கு.//

அப்படிங்கிறீங்க. சரி, ஏத்துக் கொள்கிறேன். அடுத்த முறை மலையேறும் பொழுது இன்னும் நிறைய படங்கள் எடுத்து விடுங்க ஜமாய்த்துடுவோம்.

மலைநாடான் said...

தெ.கா!

இயற்கை வழிபாட்டிலதான் தொடங்கின பல மத சம்பிரதாயங்கள். ஆனால் அதன் திசைமாறி எங்கேயோ பயனிக்கிறது.

இந்த இழிநிலைக்கு மதவாதிகள் எப்படிக் காரணமோ அதற்குச் சற்றும் குறைவில்லாது விஞ்ஞானிகளும் காரணமாகின்றார்கள் என்றும் சொல்லலாம்.

இதற்கடுத்ததாகச் சொல்வதானால் அரசியலாளர்களைச் சொல்லலாம்.

இப்படித் தொடர்ந்து சொல்லிக்கொண்டேபோனால் திருவாளர் பொதுசனமாகிய எம்முன்னால் பாம்பெனப் படமெடுத்து நிற்கும் கேள்விக்குறி.

Thekkikattan said...

Padma Arvind,

//மலையில் ஏறி மாதவனை தரிசிக்க செல்லும் பலருக்கு அந்த மலையே கடவுளாக படாதது விந்தையே. //

ஆமாம், விந்தைதான். அவ்வாறு, ஆனதிற்கு இயந்திரத்தனமான கடவுள் ஈடுபடும் ஒரு காரணமாக இருக்கக் கூடுமோ?

//இப்போது மேற்கத்திய உலகு கவலை கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இயற்கை உணவுகளும் இயற்கை பாதுகாப்பும்.//

மேற்கு உலகு கற்றுக் கொண்டதிற்கு பல காரணங்கள் இருக்கிறது. பத்மா, நீங்கள் நினைக்கிறீர்களா, இதே மேற்குல மக்களை, இத்துனை மக்கட் பெருக்கத்துடன், இந்தியாவில் இத்துனை ஆண்டுகள் வாழ நேர்ந்திருந்தால் இப்பொழுது இருக்கும் இந்த Carnivore வகை விலங்குகள் இன்னமும் நமது மலைகளில் இருந்து இருக்குமென்று.

அங்கு இருந்த ஒரு 250 வருட காலனி ஆதிக்கத்திலையே நாம் வனங்களை பொருத்த மட்டில் இழந்தது ரொம்பவே அதிகமே.

இவர்களுக்கு இந்த அளவிற்கு இன்று இயற்கை சார்ந்து ஒரு ஞானம் பிறந்திருக்கிறது என்றால், நான் நினைக்கிறேன், அதன் கோர முகத்தினை நேரடியாக தரிசித்திருக்கக் கூடுமோ என்று.

இப்பொழுது நம் மக்களுக்கு வேண்டியதெல்லாம், அந்த வழியில் சென்று விளைவுகளை சந்திக்க வேண்டாமே என்ற விழிப்புணர்வு இருந்தாலே போதும்.

நீலகிரியில் இருக்க வேண்டிய காட்டு யானைகள், மேட்டுப் பாளையத்தில் உள்ள ஊர்க் காடுகளில் புகுந்து விட்டது என்று அங்காலாய்க்காமல் இருக்க.

Thekkikattan said...

பெத்த ராயுடு said...

//இப்பவே செவ்வாய் கிரகத்துக்கும், டைட்டான் (சரியான்னு தெரியல) கோளுக்கும் சென்று வசிக்க முடியுமான்னு ஆராய்ச்சிகளைத் தொடங்கிவிட்டார்கள்.//

எந்த கிரகத்திற்கு சென்றாலும் we are destined to be here in the blue planet with plenty of Oxygen and Water அப்படிங்கிறதை மறுக்க முடியுமா? இங்கே கிடைக்கிற அத்துனை இயற்கை வளங்களையும், அங்கு செயற்கையாகத்தானே பெற்றுக் கொள்ள முடியும். அப்படியே போனாலும் வேறு வழியில்லாமல் தானே அப்படி செய்து கொள்ளப் போகிறோம்.

இதற்கும் நமது முன்னால் முதல் அமைச்சார் ஜெயா அமைக்க விருந்த கடற்கரையோர மதில் சுவருக்கும் எந்த வித்தியாசமில்லை என்றே கூறுவேன். இரண்டுமே மடைத்தனம்.

//அருமையான வசதிகள் நிறைந்த பூமியை கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டு, நமது எதிர்கால சந்ததியை வேறு கிரகங்களில் தவிக்கவிட்டுவிட்டு சென்றுவிடுவோமோ என்று தோன்றுகிறது.//

இதோ நீங்களே கூறி விட்டீர்களே... அதே தான் ...

Thekkikattan said...

//இப்படித் தொடர்ந்து சொல்லிக்கொண்டேபோனால் திருவாளர் பொதுசனமாகிய எம்முன்னால் பாம்பெனப் படமெடுத்து நிற்கும் கேள்விக்குறி.//

அந்த பாம்பெனப் படம் மெடுக்கும் கேள்வி என்ன மலைநாடான் அவர்களே. பொது மக்களாகிய நமக்கு சுய புத்தியென்ற ஒன்று இருக்கிறதா, இல்லையா என்பது தானே அது ;-)

நன்றி நாடான், பெரிய விசயங்களை இங்கு முன் வைத்தற்கு.

ஜீவா (Jeeva Venkataraman) said...

//மலையில் ஏறி மாதவனை தரிசிக்க செல்லும் பலருக்கு அந்த மலையே கடவுளாக படாதது விந்தையே. //
இதில் விந்தையேதும் இல்லை.

ஜீவா (Jeeva Venkataraman) said...

//எனவே எனது பார்வையில் இவ் இயற்கைதான் நம் கூடவே வாழ்ந்து வரும் கடவுள். //
வாவ், நூற்றுக்கு நூறு உண்மை.
//கடவுள் வேறு எங்கும் இல்லை.//
வேறு எங்கும், உங்களிலும் இருப்பது இறைவன் தானே!

மதம் என்பது ஏதோ வேற்று கிரக சக்தி போல எழுத்தப்பட்டுள்ளது நல்ல நகைச்சுவை!

வெப்பச்சூடேற்றம் கொஞ்சம் தேவையில்லாத பதற்றம் என்று நான் கருதினாலும், இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுருத்தும் நோக்கத்தை பாராட்டுகிறேன்!

Anonymous said...

//நாம் இயற்கையின் ஒரு அங்கமே நாம் இல்லாமல் கூட இந்த இயற்கை தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் (டைனோசார்கள் மாண்ட பிறகு எப்படியோ) என்பதனை உணர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த மதங்கள் எடுத்துக் கூறுமா?//

என்னைப் பொறுத்தவரை மதங்கள் இயற்கையைக் கடந்து சென்று பெறும் உயர் நிலை அனுபவத்தை நோக்கியே மனிதனை செலுத்தி வந்துள்ளன. (அதாவது இயற்கையுடன் இசைந்து)
ஆனால் இன்றைய விஞ்ஞானம் இயற்கை கடந்த நிலை என்று ஒரு நிலை இருப்பதாகவே ஒத்துக்கொள்வதில்லை.
(super natural is a null word)
இது எமது விஞ்ஞான உலகில் நாம் அடைய முடியாத அல்லது விளக்க முடியாத ஓர் மர்மமாகவே தென்படுகின்றது.

Thekkikattan said...

//ஜீவா(Jeeva) said...

இதில் விந்தையேதும் இல்லை.//

எப்படி ஜீவா அது. சொல்லுங்க தெரிஞ்சுக்குவோம். மயில், புலி, சிங்கம், யானை எல்லாமே நம்ம மதத்திலே பிண்ணி பிணைந்திருக்குது, ஆனா அது வாழும் வீடுகளை மட்டும் நாம குப்பைத் தொட்டியாக பயன் படுத்திறொமே, ஏன் அப்படி?

அதுக்காகத்தான் இப்படி சொன்னது "மலையில் ஏறி மாதவனை தரிசிக்க செல்லும் பலருக்கு அந்த மலையே கடவுளாக படாதது விந்தையே" சரியாகப் பட்டது.

//மதம் என்பது ஏதோ வேற்று கிரக சக்தி போல எழுத்தப்பட்டுள்ளது நல்ல நகைச்சுவை!//

இதனையும் கொஞ்சம் விளக்கி அந்த நகைச்சுவை உணர்வை பகிர்ந்து கொண்டீருக்கலாமே, ஜீவா! சிரிப்புக்கு பஞ்சமாக இருக்கும் இந் நாளில் எல்லோருக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்... சொல்லுங்க எந்த பகுதி நகைச்சுவையாக அமைந்ததுன்னு,...

சுனாமி நடந்தப்ப பேசிக்கிட்டாங்க... ஒரு மதச் சாமீயை நம்பாத ஊரிலும் கண்டத்திலும் தான் இந்த இயற்கை பேரழிவு நடந்தேறியதென்று :-)))

//வெப்பச்சூடேற்றம் கொஞ்சம் தேவையில்லாத பதற்றம் என்று நான் கருதினாலும்//

இதுவும் எப்படி தேவையில்லாத பதற்றமாகிப் போனது. நீங்கள் புரிந்து கொண்டதை முன் வைத்தாத்தானே ஜீவா, எங்களுக்கும் தெரியும், கண்ணெ திறந்து பார்க்க கத்துக்கலாம்... சொல்லுங்க தெரிஞ்சுக்கிறேன்...

Thekkikattan said...

//என்னைப் பொறுத்தவரை மதங்கள் இயற்கையைக் கடந்து சென்று பெறும் உயர் நிலை அனுபவத்தை நோக்கியே மனிதனை செலுத்தி வந்துள்ளன. (அதாவது இயற்கையுடன் இசைந்து)//

இருந்திருக்கலாம் நவன் ஒரு காலத்தில். ஆனால், இன்று எல்லோமே தொழில் நோக்கோடுதான் பார்க்கப் படும் பட்சத்தில், விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணைந்து விரைவாக, எளிமையாக எவ்வாறு அவ் இலக்கை அடைவது என்று போட்டி போட்டுக் கொண்டு, இரண்டும் சேர்ந்து நம்மை அந்த விரைவு (அழிவுப்) பாதையில் செலுத்துவது தான் கஷ்ட காலம். இன்று.

நவன், அடிக்கடி வாருங்கள், எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள :-)

Anonymous said...

//...விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணைந்து விரைவாக, எளிமையாக எவ்வாறு அவ் இலக்கை அடைவது என்று போட்டி போட்டுக் கொண்டு, இரண்டும் சேர்ந்து நம்மை அந்த விரைவு (அழிவுப்) பாதையில் செலுத்துவது தான்..//

உங்கள் ஆதங்கம் புரிகிறது.

//இப்ப நாம செய்றது ஒரு மனத் திருப்திக்காக அப்படிங்கிற மாதிரி முன் வைச்சுட்டு போயிகிட்டே இருக்க வேண்டியது தான்//

உங்க மனத்திருப்திக்காக நீங்க நம்ம எல்லோருக்கும் இந்த உண்மையை இவ்வளவு தெளிவா சொன்னமாதிரி நம்ம எல்லாரும் நம்ம நம்ம பாட்டை பாத்துகுட்டு போயிகிட்டே இருக்காம கொஞ்சம் நின்னு நம்மட பங்குக்கு இயற்கை சமநிலைக்கு ஏதாச்சும் பண்ணினா இந்த கஷ்ட காலம் போயிடும். இல்லையா Thekkikattan?

நீங்க கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டுக்கலன்னா இன்னொன்னும் சொல்றன்..

பிரச்சினைகள் ஆரம்பிப்பது நாம் ஒன்றிலிருந்து இன்னொன்றிட்கு விலகி நடக்க எத்தனிப்பதில் தான் என்று சொன்னீர்கள். அது உண்மைதான்.

இயற்கை நம்மை ஒரு பாதையில்(சமநிலையில்)செலுத்துகின்றது. அதிலிருந்து நாம் விலகும் போது அது நம்மைத் தண்டிக்கின்றது! இதேபோல்,

மதங்களும் நம்மை ஒவ்வொரு பாதையில் செலுத்துகின்றன. அதிலிருந்து விலகும் போது தான் நாமும் பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறோம். இங்கே நான் மதம் என்று குறிப்பிடுவது உண்மையான மதம். அது இயற்கையிடமிருந்தே தோன்றியது.(மதவாதிகளுக்கு உண்மையான மதம் எதுவென்றே தெரியாது. உண்மையில் மதம் விவாதத்துக்கு உரியதே அல்ல!)
இவ்வாறே விஞ்ஞான அறிவையும் நாம் ஆக்கபூர்வமான வழியில் மட்டும் பிரயோகித்தால் அப்போதும் பிரச்சினைகள் தோன்றாது.

அதாவது சுருக்கமாக,

விஞ்ஞானமும்,மெஞ்ஞானமும் நம்மை அழிவுப் பாதையில் செலுத்தவில்லை.நாம் தான் விரைந்து அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்!

Thekkikattan said...

நவன்,

//உங்க மனத்திருப்திக்காக நீங்க நம்ம எல்லோருக்கும் இந்த உண்மையை இவ்வளவு தெளிவா சொன்னமாதிரி நம்ம எல்லாரும் நம்ம நம்ம பாட்டை பாத்துகுட்டு போயிகிட்டே இருக்காம கொஞ்சம் நின்னு நம்மட பங்குக்கு இயற்கை சமநிலைக்கு ஏதாச்சும் பண்ணினா இந்த கஷ்ட காலம் போயிடும். இல்லையா Thekkikattan?//

மிகச் சரியாகச் சொன்னீர்கள். நான் அப்படி விட்டுப் போய் கூறியதற்கும் ஒரு காரணமுண்டு. இருப்பினும், என்னிடம் இந்த இயற்கை சார்ந்த உணர்வுநிலை மோலோங்கி இருக்கும் பட்சத்தில், இயற்கையை நிறைய காயப்படுத்தி பார்க்க வேண்டுமென்ற, அவா கொஞ்சம் எனக்கு மட்டுப் பட்டே இருக்கிறது, எனலாம். அது, மளிகை கடைகளில் பயன்படுத்தும் "கேரி பாக்"குகளின் எண்ணிக்கையிலிருந்து, பல முறை நினைத்து நினைத்து வாகனத்தை எடுத்துக் கொண்டு சாமான் சட்டுகள் வாங்க ஓடும் எண்ணிக்கையும் குறைத்துக் கொண்டுள்ளேன். ஏதோ என்னால் முடிந்தது :-)

நவன், அருமையான பின்னூக்கிகள்! நன்றி!!!

Related Posts with Thumbnails