Wednesday, November 22, 2006

சந்தோஷக் குதிப்பு : (Happy Feet)


சுடச்சுட கணினி தொழிற் நுட்பத்தைக் கொண்டு சுடச்சுட அண்டார்டிகாவில் வாழும் பென்குயின்களின் வாழ்வு முறையையும், அவைகளின் பாதுகாப்பையும் மனத்தில் நிறுத்தி உண்மையான தேடல் இருந்தால் எதனையும் சாதிக்கலாமென்ற மனித கோட்பாட்டையும் தவறாமல் நிலை நிறுத்தல் கூறி சுடச்சுட எடுக்கப் பட்ட மிகப் பிரமாண்டமான தயாரிப்பே, இந்த "ஹாப்பி ஃபீட்." இந்த படத்தை நானும் எனது ஒன்பது வயது மகனும் படம் வெளியான அன்றே சுடச்சுட கண்டுகளித்தோம்.

நானும் அவ்வப் பொழுது படத்தின் திறன் அரிய, பையனின் முகத்தை பார்பதுண்டு. அவ்வாரு ஒரு சில முறைகள் பார்த்தவரையில் அவனுக்கு படம் சோர்வை தந்த மாதிரி உணர்ந்தேன். ஆனால், படம் முடிந்துதான் எனக்குத் தெரிந்தது அவன் மிகவும் படத்துடன் ஒன்றிப் போய் பார்த்திருந்திருப்பது.

படத்தில் பென்குயின்களின் இனப்பெருக்க பழக்க வழக்கங்களிலிருந்து, உணவு தேடும் முறை அதன் வாழ்க்கை அமைப்பு என்று அதன் இயற்கை குணங்களை அவ்வப்பொழுது விளக்கினாலும், நம் வாழ்க்கை பாதிப்புடன் சில நேரங்களில் அனிமேஷன் அமைந்து போனது தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.

இந்த படத்தில் அனிமேஷனில் கலக்கியிருக்கிறார்கள். அம்மா Normaவிற்கும், அப்பா Memphisகும், கொஞ்சம் பென்குயின்களின் இயற்கை குணமான பாடுவதிலிர்ந்து தப்பி, கால்களால் தரையில் தட்டி ஆடும் ஒரு சந்தோஷமான முறையிலிருப்பதனைப் போன்ற வித்தியாசத்துடன் நமது ஹீரோ ஜுனியர் Mumble பிறந்து போகிறார்.

அதனால், அந்த பென்குயின் உலகத்தின் சீனியருக்கெல்லாம் சீனியர் Noah, நமது Mumbleயை பாடமுடியாதற்கென காரணம் காட்டியும், வித்தியாசமாக கால்களை தரையில் தட்டி ஆடுவதாலும், மற்ற வளரும் பிள்ளைகளை கெடுத்து விடுவான் எனக் கூறி தனது கூட்டத்திலிருந்தே Mumbleயை விலக்கி வைக்கிறார்.

இதற்கிடையில் நன்றாகப் பாடினால்தான் தனக்கு பார்ட்னரே கிடைக்கும் என்ற நிலையில், எப்படி Mumble பிழைத்துக் கொள்ளப் போகிறானோ என்ற கவலையில் அப்பாவும், அம்மாவும் இருக்கிறார்கள். இருந்தாலும், பிறக்கும் போதே விட்டக் குறை தொட்டக் குறையாக அதே சமயத்தில் முட்டையிலிருந்து வெளியே வரும் தனது காதலி Gloria நல்ல குரல் வளமும் கூட. நம்ம Mumbleக்கு எதிர்ப் பதம்.

சரி, கூட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்ட Mumble தள்ளாடி தள்ளாடி மற்றுமொரு பென்குயின் வகை பேரரசர் Lovelaceயை ஒரே கேள்வியின் மூலம் அசத்தி மற்ற Adelie Amigoe என்ற கூட்டாளிகளுடன் தன்னுடைய ஆட்டத்தின் மூலமாக கவர்ந்து பிறகு நல்ல நண்பர்களாக ஆக்கிக்கொண்டு தனது பயணத்தை தொடர்கிறார்கள்.

இந்தப் பயணம் மீன்களின் நடமாட்டம் மிகவும் குறைந்து போனதால், தங்கள் இனங்கள் மிக வேகமாக அழிந்து போய்க் கொண்டிருப்பதாக கருதி, அதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, அதீத மீன் பிடிப்பை கட்டுப் படுத்துவதே தனது நோக்கம் என பயணம் தொடர்கிறது... இடையில் ஏற்படும் இன்னல்கள் என்னன்ன, அதனை எப்படி முகம் கொள்கிறது நமது Mumble, இறுதியில் தனது காதலி Gloriaவுடன் இணைகிறாரா இல்லையா... இதுதான் கதையாக, அருமையான அனிமேஷனைக் கொண்டு மிகவும் அசத்தலான இசை மற்றும் படப்பிடிப்புடன் வழங்கியிருக்கிறார்கள்...ஒர் பின் குறிப்பு : ஆனா, எனக்கு என்னமோ ஒரு பென்குயின் பாதுகாப்பிற்கென எடுக்கப்பட்ட பிரச்சாரப் பட நொடி இந்தப் படத்தில் அடித்ததை உணர முடிந்தது... அப்படி எடுத்துக் கொண்டாலும், நல்லதுதான் :-)

11 comments:

இலவசக்கொத்தனார் said...

இந்த வார இறுதியில் செய்ய வேண்டிய வேலைகளில் இதுவும் ஒன்று. வாக்கு கொடுத்தாகி விட்டது!

Sivabalan said...

தெகா

இந்தப் படத்தின் விளம்பரம் வரும்போதெல்லாம் வீட்டில் ஒரே கூச்சல்தான்.. புக்மார்க் செய்யப் பட்ட படங்கள்/சிடிக்களில் இதுவும் ஒன்று.

படத்திற்கு போனால் ஐம்பது டாலர்.. இது இல்லாமல் சிடிவேர வாங்கித்தரனும்..அது தனியா 20 டாலர்..

நீங்க என்னடான்னா பென்குயின் பாதுகாப்பு அது இதுன்னு ரவுசு கிளப்பிட்டு இருக்கிறீங்க..Ha Ha Ha..

மங்கை said...

//இந்தப் பயணம் மீன்களின் நடமாட்டம் மிகவும் குறைந்து போனதால், ...நோக்கம் என பயணம் தொடர்கிறது//

//ஒர் பின் குறிப்பு : ஆனா, எனக்கு என்னமோ ஒரு பென்குயின் பாதுகாப்பிற்கென எடுக்கப்பட்ட பிரச்சாரப் பட நொடி இந்தப் படத்தில் அடித்ததை உணர முடிந்தது... அப்படி எடுத்துக் கொண்டாலும், நல்லதுதான்//)


உங்களுக்கு இப்படி தோனலைன்னா தான் வியப்பா இருந்து இருகும்..

அதனால..Mumbleக்காக இனிமேல் மீன் சாப்பிடாதீங்க :-))..

Jokes apart..நல்லா இருக்கு தெகா.. நிறைய செய்திகள் இருக்கும் போல படத்தில...

Thekkikattan said...

//இந்த வார இறுதியில் செய்ய வேண்டிய வேலைகளில் இதுவும் ஒன்று. வாக்கு கொடுத்தாகி விட்டது!//

இ.கொ, போயிட்டு பாருங்க, கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். பார்த்துபோட்டு திரும்பவும் வந்து, எப்படி இருந்துச்சுன்னு இங்கன வந்து சொல்லணும் :-P

Thekkikattan said...

சிவா,

//படத்திற்கு போனால் ஐம்பது டாலர்.. இது இல்லாமல் சிடிவேர வாங்கித்தரனும்..அது தனியா 20 டாலர்..//


உட்டுறவோமா சும்மா. கூட்டிக் கொண்டு போயி காமிங்க. பிறகு டி.வி.டி ரிலீஸ் ஆனவுடன் நாங்க சொல்றோம் :-)) சும்மா இந்த அழுவாச்சி ஆட்டமெல்லாம் எங்க கிட்ட நடக்காது, ஏன்னா எங்களுக்கு அதப் பத்தி தெரியாது... அப்பான்னா அப்பாதான் :-P

பொன்ஸ்~~Poorna said...

அய்யோ.. இப்போவே பார்க்கணும் போலிருக்கே!!

Thekkikattan said...

மங்கை,

//உங்களுக்கு இப்படி தோனலைன்னா தான் வியப்பா இருந்து இருகும்..//

ஆரம்பத்லேயே கண்டுபிடிச்சுட்டேன். ஆனா, நம்ம பய கிட்ட சொல்லலே, அவன் சும்மா ப்ரீவியூ போடும் போதே ஏதாவது சொன்னாலே என்ன ஹஸ்...ஹஸ்ங்கிறான் :-))

//அதனால..Mumbleக்காக இனிமேல் மீன் சாப்பிடாதீங்க :-))..//

போச்சு போங்க... அப்படித்தான் சொல்ல வந்துருந்துச்சு கதை. இந்த ஊர்ல என்னாத்த சாப்பிடலை :-))

//Jokes apart..நல்லா இருக்கு தெகா.. நிறைய செய்திகள் இருக்கும் போல படத்தில...//

எனக்குப் படம் நீண்ண்ண்டு கொண்டே போனது மாதிரியான ப்ரமை.

Thekkikattan said...

பொன்ஸு,

சீக்கிரமாகவே பார்த்திட வாழ்த்துக்கள்!!!

குமரன் (Kumaran) said...

இன்னும் இந்தப் படத்தைப் பாக்கலை தெகா. விரைவில் பார்க்க வேண்டும்.

KARTHIKRAMAS said...

தெக்கி,
எனக்கு அனிமேசன் படங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். நிற்க.
"மார்ச் ஆப் பென்குவின்ஸ்" பார்த்தீர்களா? ஹாப்பி ஃபீட் பார்த்தவுடன் அதையும் பார்த்தீர்களெனில், அனிமேசனில் எதையாவது தவறாக காட்டியுள்ளார்களா என்று எளிதில் பிடிக்கலாம். ஆனால் பொதுவாக இருப்பதை காட்டியுள்ளதாகத்தான் சொல்வேன். ஆனால் "கதை" என்றதும் உள்ளதே அதை தவிர்க்க இயலாதுதானே. ஒரு காலத்தில் ட்ராபிகல் பிரதேசமாக இருந்த அண்றாடிகா பகுதி பனிவெள்ளத்தால் மூழ்கியபோது நடந்தே புலபெயர்ந்து தப்பித்த ஒரே உயிரினம் பென்குவின்களாம். நாம் படமெடுத்துதான் காப்பத்தப் போகிறோம் என்றால் முரண்நகைதான் ;)

பென்குவின்களின் காதல் வாழ்க்கை மனிதர்களின் காதல் வாழ்க்கைபோல இருப்பது உபரிச்செய்தி. சில நேரத்தில் பல விதத்தில் உயர்ந்ததாக் இருப்பது என் பார்வைச் செய்தி ;)

Thekkikattan said...

குமார்,

//இன்னும் இந்தப் படத்தைப் பாக்கலை தெகா. விரைவில் பார்க்க வேண்டும்.//

இந்தா, வார இறுதியும் வந்துருச்சு. பார்த்திட வேண்டியதுதானே. அப்புறம் ஜனவரி வந்திட்ட பிஸியாகிடுவீங்க... ;-) சொல்லிட்டேன் ஆமாம்.

Related Posts with Thumbnails