Monday, December 04, 2006

The Superintendent of Police மாசிலாமணி சாரின் திடீர் மறைவு...

Image Hosted by ImageShack.us


சனிக் கிழமையைப் போல் (21st) "ஆராதனா" அவர்கள் அஞ்சலி என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டு அதில் மாசிலாமணி என்ற நல்ல காவல் துறை அதிகாரி மரணமுற்றார் எனவும், திருச்சி மாநகரம் கடைசி ஊர்வலத்தை ஒட்டி ஸ்தம்பித்துப் போனதாகவும் எழுதியிருந்தார்.

அதனைப் படிக்கும் பொழுது உண்மையிலேயே அவர் யார் என்பதில் எனக்கு சற்றே குழப்பமாக இருந்தது, இன்று மயிலின் மூலமாக அதிகாரப் பூர்வமாக அறிந்து கொண்டேன், அது வேறு யாருமல்ல நம் எல்லோருக்கும் தெரிந்த, ப்ளாக் செய்யும் நண்பர் தான் அவர் என்பது.

அவரின் ப்ளாக் பக்கங்கள் :

தமிழ் : லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்

ஆங்கிலம் : Safety On Roads

திரு. மாசிலாமணி அவர்கள் ஒரு சிறந்த காவல் துறை அதிகாரியும், ஒரு சிறந்த மனிதர் என்பதும் அவரின் படைப்புகளை காணும் யாவரும் அறியக் கூடும். அவர் இங்கு தமிழ் மணத்திலும் கொஞ்ச நாட்கள் எழுதியிருக்கிறார்.

அவரின் இழப்பு தமிழக சட்ட ஒழுங்கு காவல் துறைக்கு ஒரு மாபெரும் இழப்பு... அதிலும் குறிப்பாக மக்களுக்கு. அவ்வளவு நேர்மையும், தொலை நோக்கு பார்வையும் கொண்டு சிறப்பாக பணியாற்றி வந்தவர்.

இத் தருணத்தில் அவரின் துணைவியார் டாக்டர். டெல்ஃபின் விக்டோரியா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, மாசிலாமணி சாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.

17 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//திரு. மாசிலாமணி அவர்கள் ஒரு சிறந்த காவல் துறை அதிகாரியும் ஒரு சிறந்த மனிதர் என்பதும் அவரின் படைப்புகளை காணும் யாவரும் அறியக் கூடும். அவர் இங்கு தமிழ் மணத்திலும் கொஞ்ச நாட்கள் எழுதியிருக்கிறார்.//

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் !

Dharumi said...

ப்ளாக் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறேன். மேலும் சில விஷயங்களை அவர் கவனத்துக்கு எடுத்துச் செல்ல நினைத்திருந்தேன்.

அவரது பிரிவினால் துயறுற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

டாக்டர் டெல்பீன் அவர்கள் உங்கள் பதிவுக்கு வந்து பின்னூட்டம் இடுவாரே, அவர்தானே? அவரின் இந்த பேரிழப்புக்கு எனது இரங்கல்கள்.

Thekkikattan said...

ஆமாம், இலவசம்! அவரின் கணவரே தான். ச்சே, சூப்பரான ஆளுங்க அவரு :-(

சுந்தரவடிவேல் said...

அவரது நல்ல உள்ளத்துக்கு வணக்கமும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும்.

Boston Bala said...

:-(

அஞ்சலி

Sivabalan said...

தெகா

மிகுந்த வறுத்தமளிக்கும் செய்தி..

அஞ்சலி..

மங்கை said...

அவரது பிரிவால் வாடும் குடும்பதாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

SK அவர்களின் பாலியல் கல்வி பற்றிய பதிவுகளில் நிறைய விஷயங்கள் எழுதுவார்...ஆனா கொஞ்ச நாளா காணம்னு பார்த்தேன்..ஹ்ம்ம்ம் வருத்தமான செய்தி....

காசி (Kasi) said...

தொலைபேசியிலும் நேரிலும் திரு. மாசிலாமணி அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். பழகுவதற்கு இனியவர், அணூகுவதற்கு எளீயவர். அன்னாரின் துணைவியாரையும் அறிமுகப்படுத்தினார். திரு. மாசிலாமணி அவர்களைப் பிரிந்துவாடும் திருமதி டெல்பைன் அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

தகவலுக்கு நன்றி, தெ.கா.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

துயரமான செய்தி. ஆழ்ந்த அஞ்சலிகள். அவரது குடும்பத்தினருக்கு இறைவன் மன வலிமையைக் கொடுக்கட்டும்.

மாயவரத்தான்... said...

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் !

delphine said...

Thank you Praba. We began a new life at Chennai. What I mean is that so far we never had any private life as Masi saar was always busy with his work and he had time to read the files and attend to the telephone.
when we came to Chennai the first thing he promised me was that he would be at home by 9Pm. (Thats a pretty early time for us in our life as usually he returns home by 11PM.) Since we had no maid to help here at Chennai he started helping me in my household chores. I am really broken.. In fact we were discussing about seeing you too.. Thank you Praba once again for the nice article.

வல்லிசிம்ஹன் said...

தெ.கா
கொஞ்ச நாளில் சினேகிதமான நல்ல மனிதர்.
டெல்பின் விக்டோரியாவின் கணவர்.
இரண்டு இழப்பைச் சந்தித்ததுபோல் இருக்கிறது.
இரண்டுமே அதிர்ச்சியாக இருக்கிறது.

எப்படி அவர் சமாதானமாகப் போகிறார்?

துளசி கோபால் said...

அடடா.... நம்ம டெல்ஃபீன் அவுங்க கணவரா?

அடக் கடவுளே! என்ன ஆச்சு? எப்படி இறந்துட்டார்?

மனசே சரி இல்லீங்களே.

அவுங்க குடும்பத்துக்கு எவ்வளவு பேரிழப்பா இருக்கும்.

மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவிச்சுக்கறோம்.

Thekkikattan said...

துள்சிங்க,

நான் கொடுத்திருக்க சுட்டிகளில் டாக்டர். டெல்ஃபின் மற்றும் ஆராதனா போன்றவைகளை சுட்டி பார்த்திட்டு வாங்க, மற்ற எல்லா விபரங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

எப்படியாவது டாக்டர் கூட தொலைபேசியில் பேசி விட வேண்டுமென்று முயற்சிக்கிறேன் இன்னும் கிடைக்கவில்லை...

மலைநாடான் said...

தெகா!

ஒரு நல்ல மனிதரை அவரது மறைவின் பின் தெரிந்து கொண்டேனாயினும், அவரது பதிவுகள் சிலதைப்படித்தபோது, ஏதோ அவருடன் பேசிய திருத்தி கிடைத்தது.

இணையவலைப்பின்னலில் இதுவும் ஒரு சாத்தியம்தான்..

பதிவுக்கு நன்றி

Benjamin George said...

Thank you all so much for these. If u have the time please visit :
http://benjamingeorgeanand.blogspot.com/2007/05/my-dad.html

Thank you.

Related Posts with Thumbnails