Thursday, December 07, 2006

நவனும், நானும் என் மயானக் கவுஜாவும்...!

நண்பர் நவன், எப்பொழுதோ நான் கவிதை என்று நினைத்து எழுதியிருந்த ஒரு பக்கத்தை படித்து விட்டு மண்டையை பிய்த்துக் கொண்டு எனக்கு என்ன பொருள் என்று பிடிபடவில்லை கொஞ்சம் விளக்க முடியுமா என்று வினவியிருந்தார்...

அந்த கவுஜா இங்கே இருக்கிறது... சென்று பார்த்து படித்து விட்டு நீங்களும் மண்டைய ஸ்கரட்ச் செய்து கொண்டே வந்து மீண்டும் இங்கே வந்து இந்த விளக்க கட்டுரையை படியுங்கள். அப்படியும் பிரியவில்லை என்றால் அந்த கடவுள் தான் என்னை காப்பாற்ற வேண்டும் ;-)


அன்பு நவன்,

எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எனது பழைய கூடையை கிளரி நீங்கள் எடுத்துப் படிக்கிறீர்கள் என்பதனை எண்ணும் பொழுது. அதற்கு எனது வந்தனங்கள்.!

இந்த கவிதை போன்ற எழுத்தில் நான் நினைத்து சொல்ல வந்தது: மனித வாழ்வு என்பது நெடு நீண்ட தூரப் பயணம் என்பது போல நமக்குப் புலப் பட்டாலும், அது ஒரு சிறிய முடிவுறும் பயணமே... கோவையில் இருக்கும் பொழுது, ஒவ்வொரு முறையும் நான் ஒரு மயானத்தின் வழியாக பயணிப்பதுண்டு, அவ்வாரு செல்லும் பொழுது இது போன்று மனித உடல் ஏதேனும் வேகும் பொழுது எனக்கு வாழ்வின் பொருள் மீண்டும் கண்களின் முன்னால் ஒரு முறை கேள்விக் குறியாக நிலை பெறுவது உண்டு.

மனித வாழ்வு நாம் வாழும் ஒவ்வொரு கனமும் எப்படி வாழ்கிறோம் என்பதனைப் பொருத்து தான் பொருள்ளதாக அமைகிறது என்றால், அதனை எப்படி அனுபவித்து நம் கூடவே வாழ்ந்து வரும் இந்த அப்பா, அம்மா, மற்ற சொந்த பந்தங்களுடன் அனுபவித்து வாழ்வின் சுவையை அதன் நிலையற்ற தன்மையை(மரணம்) கருத்தில் நிறுத்தி... அம்மாவின் புன் முறுவலின் பொருளணர்ந்து தினமும் ஆராதித்து மகிழ்வுடன் வாழ்ந்தால் அதுவே NOWNESS என்பதின் பொருளன்றோ, என்று நினைத்து அப்படி சொல்லி வைத்தேன்...

இன்னும் சில பதிவுகள் இதே லைனில் வெளியிட உள்ளேன். எனக்கு மிகவும் வேண்டிய ஒருவருக்கு இத் தருனத்தில் ஆருதலாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்...

நவன், மீண்டும் இங்கு உங்களின் கேள்வியாக என் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.

13 comments:

மங்கை said...

வாழ்வின் நிதர்சனங்களுக்கு யாரும் தப்பிக்க முடியாது...நல்லதும் கெட்டதும்...வந்து தான் ஆகும்...

///வீடு திரும்பிய
எங்களுக்கு அம்மாவின்
புன் முறுவல்
இலவசமாய்!///

இதோ எல்லாவற்றிக்கும் மருந்தாக கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிராசாதம்...

துளசி கோபால் said...

//இன்னும் சில பதிவுகள் இதே லைனில் வெளியிட உள்ளேன்.//

ஆஆஆஆஆஆ கடவுளே ........

Sivabalan said...

தெகா

நல்ல பதிவு!

//மிகவும் வேண்டிய ஒருவருக்கு இத் தருனத்தில் ஆருதலாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்...//


நீங்கள் சொல்லும் நபர் தற்பொழுது துணையை இழந்துவாடும் நபர் என்று நம்புகிறேன். அவர் அமைதி அடையட்டும்..

நன்றி

Thekkikattan said...

மங்கை,

//வாழ்வின் நிதர்சனங்களுக்கு யாரும் தப்பிக்க முடியாது...நல்லதும் கெட்டதும்...வந்து தான் ஆகும்...//

ஹும்ம்... உண்மைதான். ஆனால் அவைகளினுடையே பயணிக்கும் பொழுது அதிலுள்ள வலியும், வேதனையும் பல புரிதல்களை விட்டு விட்டுச் செல்லத் தவறுவதில்லை இருப்பினும். அதனை முகம் கொள்வது என்பது சொல்வதற்கு ஈசியாக இருப்பினும், அதனை முகம் கொடுப்பவற்கு இன்று, இப்பொழுது இருக்கும் வலியை நம்மால் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அது விட்டுச் செல்லும் தடயங்கள் தாம் அத் தனிப்பட்டவருக்கு கிடைக்கும் அனுபவம் என்னும் பொக்கிஷம்... அது எல்லொருக்கும் ஒரு நாள் இல்லையென்றால் இன்னொரு நாள் உண்டுதான் - sooner or later, right?

மங்கை said...

//அவைகளினுடையே பயணிக்கும் பொழுது அதிலுள்ள வலியும், வேதனையும் பல புரிதல்களை விட்டு விட்டுச் செல்லத் தவறுவதில்லை இருப்பினும்//

இந்த புரிதல்களும் வேதைனைகளும் இல்லையென்றால்....அது வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்...

அல்லது இது போல நிகழ்வுகள் தான் நமக்கு பல புரிதல்களை கொடுக்கிறது என்றும் நினைக்க தோன்றுகிறது...

தெகா அந்த பொக்கிஷங்கள் தான் வாழ்க்கை என்பதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு இருக்க்கிறேன்,,,

அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை


அருமையான பதிலுக்கு நன்றி தெகா...

Thekkikattan said...

துள்சிங்க,

//ஆஆஆஆஆஆ கடவுளே ........//

அன்பே ஆருயிரேன்னு நீங்க பாடினாலும் நாங்க வுட்டுறுவோமா... எந்த கடவுள் வந்து உங்கள ரெஸ்கியு பண்றார்னு பார்த்திடுவோமே... :-)))

Thekkikattan said...

//நீங்கள் சொல்லும் நபர் தற்பொழுது துணையை இழந்துவாடும் நபர் என்று நம்புகிறேன். அவர் அமைதி அடையட்டும்...//

அதே, சிவா! இன்று முழுதும் அதே சிந்தனைதான்.

செந்தழல் ரவி said...

////எப்பொழுதோ நான் கவிதை என்று நினைத்து எழுதியிருந்த ஒரு பக்கத்தை படித்து விட்டு மண்டையை பிய்த்துக் கொண்டு எனக்கு என்ன பொருள் என்று பிடிபடவில்லை கொஞ்சம் விளக்க முடியுமா என்று வினவியிருந்தார்...///

இதேபோல் எனக்கு கல்லூரியில் ஒரு நன்பன் புரியாத கவிதைகளை அள்ளித்தெளித்து படிக்குமாறும் பொருள் விளங்கிக்கொள்ளுமாறும் சொல்லி கொடுமை செய்தது நியாபகம் வந்திட்டது...

நவன் said...

ரவி அண்ணே அம்மாதிரி கொடுமை செய்யக்கூடாது தான். ஆனால் தெகா போன்றவர்களுக்கு?
:)

நவன் said...

//அம்மாவின் புன் முறுவலின் பொருளணர்ந்து தினமும் ஆராதித்து மகிழ்வுடன் வாழ்ந்தால்//

அக்கணங்கள் உண்மையில் வாழ்கின்ற
கணங்கள் தாம்.

விளக்கத்துக்கு நன்றி.

Thekkikattan said...

//ரவி அண்ணே அம்மாதிரி கொடுமை செய்யக்கூடாது தான். ஆனால் தெகா போன்றவர்களுக்கு?
:) //

நவன், என்ன தெகா போன்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்கிறீர்களா :-))) இப்படிப் போட்டு கழுத்தறுபதால்...

Thekkikattan said...

செந்தழலாரே,

இப்படி கொடுமைன்னு சொல்லிப் புட்டீயளே... நான் கதை மாதிரி சொல்லிப் புட்டுதானே கடைசி நாளு வரி மட்டும் கொஞ்சம் கோணங்கித்தனமா எழுதியிருந்தேன் :-P...

சரி, சரி நவன் என்னமோ சொல்றாரு என்னன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க ;-)

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

Related Posts with Thumbnails