Wednesday, May 02, 2007

காட்டானின் மறு வருகை ஆ'ரம்பம்...

ஹி... ஹி...ஹி யாரோ, என்னமோ இங்கன ஒருத்தன் காட்டான் காட்டான்னு எழுதி நாட்டையே திருத்திக்கிட்டு இருந்தானே பொக்குன்னு ஆளையே காணமேன்னு மக்கள்ஸ் எல்லாம் வலை போட்டு தேடின மாதிரியும், திரும்ப வரும் போதே, இதோ வந்துட்டேன்னு சவுண்டு வேற விட்டுக்கிட்டு வாரேன்.

சரி அப்படித்தான் யாராவது இத்தனிக்கூண்டு என்னைப் பத்தி யோசிச்சு இருந்தா அவங்களுக்கு, நான் தெரிவிச்சுக்கிறது என்னான்னா, காடு கண்ட கழுதையா இந்தியா பக்கமா போயி ஒரு மூன்றரை மாதம் எல்லாத்தையும் அனுபவிச்சுப்புட்டு திரும்ப வந்துருக்கேன்.

நிறைய இருக்கு உங்க கிட்டப் பேசி பொலம்பறதுக்கு. ஏன்னா, என் ப்ளாக்கர் முகப்பே "ஏன் இப்படி"த்தானே, பர்சனாலிடி மெயிண்டைன் பண்ணணுமில்ல... ;-) வாரேன், பார்ப்போம்.

22 comments:

Santhosh said...

வாங்க தலை ஊருக்கு வந்தாச்சா?

குமரன் (Kumaran) said...

வாங்க வாங்க. எம்புட்டு நாளாச்சு?! உங்களைப் பத்தி எத்தனை தடவை எத்தனை இடத்துல விசாரிச்சிருப்பேன். திரும்பி வந்துட்டீங்களா. சந்தோஷம்.

இலவசக்கொத்தனார் said...

வாய்யா வா! போன விஷயம் நல்ல படியா முடிஞ்சதுதானே! இனிமேல் பதிவு எல்லாம் வழக்கம் போல வருமா? இல்லை எப்பவாவது ஒரு முறைதானா?

Thekkikattan|தெகா said...

சந்தோஷ்,

வந்தாச்சுங்க சந்தோஷ்... வந்து நம்மூரு ஆளாவும் ஆகி நாளாச்சு. ஊரில் என்ன விசேஷம், நான் இங்க இல்லாம இருந்தப்போ...

துளசி கோபால் said...

வாங்க. நல்வரவு.

நீங்கன்னு நினைச்சு இன்னொருத்தர்கிட்டே,
ஏன் படம் அனுப்பலைன்னு கோச்சுக்கிட்டேன்:-)

மங்கை said...

வாங்க வாங்க...

சிவபாலன் said...

தெகா

வாங்க.. வரவு நல்வரவாகட்டும்..

அனைவரும் நலமா?

பொன்ஸ்~~Poorna said...

வாங்க தலை.. ரொம்ப நாளா காத்திட்டிருக்கேன்.. பயணமெல்லாம் எப்படி? அங்கிட்டும் போய் ஒவ்வொண்ணா "ஏன் இப்படி
ன்னு ரவுசு பண்ணிட்டிருந்தீங்களா இல்ல நல்ல பிள்ளையா போன வேலைய பார்த்துட்டு வந்தீரா?

என்ன இருந்தாலும் மூணு மாசங்கிறது பெரீஈஈஈய இடைவெளி தான்..

Thekkikattan|தெகா said...

குமரன்,

மினியபாலிஸ்_ல இருந்து என்னைப் பத்தி கொஞ்சம் யோசிச்சதில நீங்களும் ஒருத்தரா... ரொம்ப நன்றிங்கானும்...

கார்த்திக் இப்ப இங்க வாரான் கோடைக்கு, நான் அனேகமா அடுத்த முறை அங்க வரும் பொழுது உங்களை சந்திப்பேன்...

Thekkikattan|தெகா said...

கொத்ஸ்,

வாய்யா வா! போன விஷயம் நல்ல படியா முடிஞ்சதுதானே! இனிமேல் பதிவு எல்லாம் வழக்கம் போல வருமா? இல்லை எப்பவாவது ஒரு முறைதானா?//

எல்லாம் நல்லாவே நடந்தேறியது உங்களின் மற்றும் பல நலம் விரும்பிகளின் விருப்பப்படியே...

பதிவுகள் பற்றி... பார்க்கலாம் கொத்ஸ் எப்படி போகிறதுதென்று...

எப்படி இருக்கு NJ, எல்லாம் நலம் தானே?

குமரன் (Kumaran) said...

தெகா. நானும் கோடை விடுமுறைக்கு எங்கூருக்குப் போறேன். ஜூனுல நீங்க இங்க வந்தா பாக்கமுடியாது. ஜூனுக்கு அப்புறம்னா கட்டாயம் பாக்கலாம். மறக்காம சொல்லிட்டு வாங்க.

Thekkikattan|தெகா said...

குமரா,

என்கூருக்குப் போறேன்னா எங்க மதுரைக்கா...? செம வெயிலுங்க அங்க, மினியபாலிஸ் ஆளுங்க எப்படிப் போயி மதுரை வெயில தாங்கப் போறீங்க...

கண்டிப்பா ஜூனுக்கு பிறகுதான் நான் அங்க வருவேன், அப்படி வரும் பொழுது நான் உங்களை பார்க்கிறேன் and i will try all I can to become a best of PEST ;-)

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

அட ஆமாங்க, உங்களுக்கு சில படங்கள் அனுப்பவேணுமில்ல... சரி விடுங்க வந்துகிட்டே இருக்கு மயிலில்...

ஏனுங்க அப்படி இன்னொருத்தர்கிட்ட போயி அவரு மண்டையை காய வைச்சுட்டீங்க... ஆந்த பாவப்பட்ட ஆத்துமா யாருங்க, என்னை ஞாபகப் படுத்து'றமாதிரி...

இன்னொரு எழுத்துப் பிழை ஆசாமியா அவரும்... :-))))

முத்துகுமரன் said...

வாங்க, வாங்க.... பழையபடி ஆட்டைய ஆரம்பிங்க

Thekkikattan|தெகா said...

மங்கை,

வந்துட்டோம்மில்ல, ஜோதியில ஐக்கியமாகிவிட... என்ன உங்க பதிவு எல்லாம் ஒரே உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்ட கட்டுரைகளா இருந்து வருது...

குடும்பத்தில எல்லாம் நலம்தானே??

கண்மணி/kanmani said...

வாங்க வாங்க .வாழ்த்துக்கள்

Thekkikattan|தெகா said...

சிவா சாரே,

எப்படி இருக்கீங்க... ஹூம் பெரிய்ய்ய இடைவெளிதான் இல்லையா... 90 நாளுங்க, நினைச்சுப் பார்க்கவே எனக்கே மூச்சு முட்டுது... என்ன நலமா???

Thekkikattan|தெகா said...

Hi Doc,

Yes, I am back as you wish, at least, I will keep updated for the ones who long to see me around...

நாமக்கல் சிபி said...

இந்தியா வந்ததுதான் வந்தீரு!
ஒரு மெயில் அனுப்புவோம், ஒரு ஃபோன் போட்டு பேசுவோம்னு எதுனா இருக்கா?

உமக்கெல்லாம் தூங்கும்போது கண்ணு தெரியக்கூடாதுன்னு சபிக்கிறேன்!

Thekkikattan|தெகா said...

பொன்ஸூ,

ஏன் இப்படி
ன்னு ரவுசு பண்ணிட்டிருந்தீங்களா இல்ல நல்ல பிள்ளையா போன வேலைய பார்த்துட்டு வந்தீரா?//

அது எப்படிங்க நம்மூரை பத்தி "ஏன் இப்படி"ன்னு கேட்டுவிட முடியும்... கேட்டுப்புட்டாத்தான் எடுத்த வேலையை முடிச்சுப்புட முடியுமா... நம்மூரு எஸ்.ப்பி_யைக்கூட கடவுளாக்கி கும்பிடுகிற ஊருங்களாச்சே... நிறைய இருக்கு இங்கன "ஏன் இப்படிக்க" :-))

Thekkikattan|தெகா said...

முத்துகுமரன்,

ஆரம்பிச்சுட்டப் போச்சு... ஆமா, என்னை உங்களுக்குத் தெரியுமா... நீங்க இங்க சீனியருன்னு எனகுத் தெரியுமே :-)

Thekkikattan|தெகா said...

கண்மணி,

உங்கள என் வீட்டுப் பக்கம் பார்ப்பது இதுவே முதல் தடவைன்னு நினைக்கிறேன். அடிக்கடி வந்து போங்க.

வாழ்த்துக்களுக்கு நன்றி!

Related Posts with Thumbnails