Thursday, May 03, 2007

பதினோரு வருட பிரிவும் சந்திப்பும்: புகைப்படத்துடன்..

எப்படித்தான் இந்த தேர்தல் நேரங்களில் சூறாவளிப் பிரச்சாரம் பண்றேன்னு சொல்லிக்கிட்டு நம்ம ஊர்ச் சாலைகளில், முழுக்க முழுக்க குளீருட்டப்பட்ட அறையிலேயே இருந்து காலத்தை கழித்துவிட்டு தேர்தல் சமயத்தில் மட்டும் இப்படி உடல் நோவையும் பொருட்படுத்தாமல் அலைய முடிகிறது நமது அரசியல் வியாதி'களால் என்பதனை, எனது கரம்பக்குடியிலிருந்து கோவைக்கு என்னமோ டாடா சுமோவாம் (the family killerஆம் செல்லமாக;-) அந்த கட்டை வண்டியில் சென்ற போது உடல் ரோதனையை உணர முடிந்தது.

என்ன இருந்தாலும் இரண்டு பேருக்கு மட்டுமே அந்த வண்டிப் பயணம் என்பது கொஞ்சம் மன அரிப்பு ஊட்டுவதாக இருந்தது அந்தப் பயணம். சரி, அப்படி என்ன வெரைசா போயி கோவையில பண்ணப்பேனேன் அப்படின்னு கேக்க வாரீங்க, இல்லையா.

ஏற்கெனவே எனது சில பதிவுகளில் பேசியிருக்கிற நமது நண்பரை டாப்சிலிப்பில் உள்ள வரகலியார்ங்கிற யானை முகாமில் சென்று சந்திப்பதுதான் எனது இந்தப் பயணத்தின் லட்சியம். அவரை கடைசியா நான் கண்டது என்னுடன் வால்பாறையில் தங்கி எனது ஆராய்ச்சிக்கு உதவும் சமயத்தில்தான். அதுவும் 1996ல், அதற்கு பிறகு இதோ இப்பொழுது தாங்க.

ரொம்ப ஆவலுகளுக்கிடையே நம்ம "குடும்பபக் கொல்வானை (Tata Sumo)" முக்க முனக வைத்து அந்த வேண்டுமென்றே செப்பணிடப்படாத சாலையில் பயணித்து வழியெங்கும் நீலகிரி மற்றும் சிங்க வால் குரங்குகள், இருவாட்சி பறவை அப்படின்னு பயணம் நீண்ண்ண்டு கிட்டே போயி கடைசியா நமது நண்பரை யானை முகாமில் வைத்து சந்தித்தேன். அந்தச் சந்திப்பு சொல்லி வைத்தது போலவும், எனக்காகவே அவர் காத்து இருப்பது போலவும் நிகழ்ந்தேறியது, அவரும் ஏதோச்சையாக அங்கு தனது மகள்களுடன் வந்து நிற்கப்போக.

அது ஒரு எமொஷனல் சந்திப்பு. தன்னைப் போலவே தனது மகளும் இளைத்துப் போய், பல வருடங்கள் தனது உண்மையான இருக்கும் வயதை முன் தள்ளி அவர்களின் உடல் அதனைக் காட்டிலும் முன்னேறியிருந்தை காண முடிந்தது. கட்டியணைத்து அவரின் ஸ்பரிசம் உணர்ந்தேன். கடந்த முறை ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பு, இரண்டு லுங்கிகளும், நிறைய மெழுகு வர்த்திகளும், அவர் விரும்பும் பீடிக்கட்டுகளுமாய் அவரை நடந்தே சென்று சந்திக்க முயற்சித்து வீண் போய், நான் வாங்கிச் சென்ற வஸ்துகள் அணைத்தும், நாங்கள் அங்குதான் செல்கிறோம் நண்பரிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்று கூறி பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு வன அலுவலரால் கபளீகரம் செய்யப் பட்டதை நினைவில் நிறுத்தி இந்த முறையும் அப்படி நடக்க வாய்ப்புகள் அதிகமிருப்பதை நினைந்து ஒன்றும் வாங்கிச் செல்லவில்லை.

இருப்பினும் அவரை நேரில் சந்தித்த சமயத்தில் மனதெங்கும் எதனையோ இழந்ததை கண்டெடுத்து விட்டதைப் போன்ற ஒரு வித பூரிப்பு, என்னையும் அறியாமல் அந்த ஃபாசில் நண்பரின் கைகளுக்குள் என் கை எதனையோ பறிமாறிக்கு கொண்டது.

என் மனத்தினுள் மீண்டும் அதே கேள்விக் கணைகள். அந்த புகைப் படத்தில் எங்களுக்கு பின்னால் பரந்து விரிந்து கிடக்கும் மலைதான் 'பெருங்குன்று' அதற்கு கீழே ஜமுக்காளமாக வரகலியார் சோலை. இவைகள் இரண்டும்தான் எனது நண்பரின் இணைபிரிய அடையாளங்கள். இவருக்கு அந்த மலை சாட்சியாகவும், மலைக்கு இவர் சாட்சியாகவும் வாழ்ந்து, வளர்ந்து, தேய்ந்து வருகிறார்கள்.

எனக்கு எழுந்த கேள்வி இந்த பதினோரு வருட பிரிவில், காட்டானாகிய நான் எங்கெங்கோ ஓடித்திரிந்து, என்னத்தையோ கண்டுபிடிச்சு இந்த பூமி உருண்டை சுத்தறதெ ஒரு செகண்டு குறைச்சு ஓட வைக்க முயற்சிக்கிற மாதிரி இங்க ஒட்றேன், அங்க ஓட்றேன், இதப் பேசுறேன், அதப் பேசுறேன்... ஆனா ஒரு மண்ணாங்கட்டியும் நடந்த மாதிரி தெரியலை, ஆனா, இன்னைக்கு நம்ம நண்பரும் அந்த மலையும் எல்லாத்தையும் வேடிக்கைப் பார்த்துகிட்டு செவனேன்னு ஒரு பார்வையாளராக இருப்பதைப் போன்ற தோற்றத்தை எனக்கு வழங்கியது.

இதில் யார் பார்வை 20/20...? யார் முழுமையாக வாழ்ந்தவராகிறார்கள்...??

10 comments:

DesiGeek said...

Hi

Dont you know Tata Sumo is actually a two wheeler on four axles ;-))

சுந்தரவடிவேல் said...

வந்துட்டீயளா?
பாத்து ரொம்ப நாளாச்சு.
ஆளே மாறியிருக்கீய!

Thekkikattan said...

சுந்தரா,

வந்துட்டேனுங்க... குடும்பம் எல்லாம் நலம்தானே எங்கும் :-) பொறகு வீட்டுக்கு போயிருந்தேன், சொன்னாகளா? ஆளு ரொம்ப சுத்தி சுத்தி துரும்பா போயாச்சு, ஒரே ரவுண்டுதான் சுந்தரா... நல்லா எஞ்சாய் பண்ணேன், நாளைக்கு செத்துப் போகப் போற மாதிரி.

நான் ஃப்ரீயாத்தான் இருக்கேன், பேசுவோய் எப்ப வேணாலும்.

delphine said...

யார் முழுமையாக வாழ்ந்தவராகிறார்கள்...??///
Who?

இம்சை அரசன் said...

அவர் அந்த டீ.ஷர்ட்டை இவ்வளவு நாளும் தொவைக்காம வெச்சிருந்திருக்கார் பாருங்க.

Thekkikattan said...

Hi Desi,

I heard of that too... thanks for the visit.

மங்கை said...

///எனக்கு எழுந்த கேள்வி.....
....இருப்பதைப் போன்ற தோற்றத்தை எனக்கு வழங்கியது///

இந்த பத்தி நான் ரொம்ப ரசிச்சேன்...

//யார் முழுமையாக வாழ்ந்தவராகிறார்கள்...?? ///

கண்டிப்பா நம்ம இல்ல...வர வர அப்படித்தான் தோனுது..ஹ்ம்ம்ம்

SurveySan said...

நம்ம வாழ்ந்து செத்ததுக்குப்பரம், நம்மளால ஏதாவது ஒரு ப்ரயோஜனமாவது பூமிக்கு கெடச்சிருந்தா, நல்ல வாழ்க்கை வாழ்ந்த மாதிரி தான் கணக்கு.

நீங்க ஓடறீங்களோ,குதிக்கறீங்களோ, டாடா சுமோல போறீங்களோ, ப்ளேன்ல பறக்கறீங்களோ, மலையடிவாரத்துல வாழ்றீங்களோ, இதெல்லாம் கணக்குல வராது :)

அந்த நண்பர் யாருங்கோ? பள்ளி நண்பரா? வெவரம் சொல்லலியே, பழைய பதிவுக்கு லிங்காவது போடுங்கோ.

இன்னொண்ணு, லுங்கி கட்டிய பழைய நண்பனை பார்க்கப் போகும்போது, நீங்களும் லுங்கியில் செல்வதே நலம்.

துளசி கோபால் said...

செவனேன்னு அங்கனயே இருந்தவர்தான் முழு வாழ்க்கையும் வாழ்ந்தவர்.

நாமதான் இப்ப்டி ஓடியோடி என்னத்தக்கண்டோம்?

கோவி.கண்ணன் said...

//இந்த பூமி உருண்டை சுத்தறதெ ஒரு செகண்டு குறைச்சு ஓட வைக்க முயற்சிக்கிற மாதிரி இங்க ஒட்றேன், அங்க ஓட்றேன், இதப் பேசுறேன், அதப் பேசுறேன்... ஆனா ஒரு மண்ணாங்கட்டியும் நடந்த மாதிரி தெரியலை, ஆனா, இன்னைக்கு நம்ம நண்பரும் அந்த மலையும் எல்லாத்தையும் வேடிக்கைப் பார்த்துகிட்டு செவனேன்னு ஒரு பார்வையாளராக இருப்பதைப் போன்ற தோற்றத்தை எனக்கு வழங்கியது.//

தெகா,

ஒண்ணும் நடக்கலையா ?

எப்படியோ ஒரு தத்துவத்தை வழங்கிட்டிங்களே, இதுதான் அனுபவ அறிவு, அவருக்கு (உங்கள் நண்பருக்கு) இது போன்று அழகாக சொல்ல வராது.

:)

Related Posts with Thumbnails