குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களுக்கு பெரும்பங்கு இருப்பினும், தான் சார்ந்து வாழும் சமுதாயமும் அதில் பெரும்பங்கு வகிப்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும், அந்த சமுதாயமும் தனிப்பட்ட மனிதர்களின் கூட்டு முயற்சியாகத்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்த கட்டமைப்பு இரண்டு வகைகளில் உதவலாம் அல்லது உதவாமலும் போகச் செய்யலாம்; அந்த முழுச் சமுதாயத்தில் உள்ள நபர்கள் யாவரும் பலனை அனுபவிக்கும் வண்ணம்.
முதல் வகையில் தான் நம்பும், இதுதான் வாழ்வு முறை என்ற எண்ண வழி நெறிப் பாதையில், பாரம்பரியமாக முன்னோர்கள் விட்டுவிட்டுச் சென்ற பாதையில் எந்த கேள்வியுமே இல்லாமல் நடந்து செல்வது. அதன் பாணியில் வளர்க்கப்பட்ட குழந்தைகள், தன் பெற்றோர்களால், அவர்களுக்கு வழங்கப்பட்ட செப்பனிடப் பட்ட பாதையிலே நோகாமல், சட்டை கசங்காமல் கடந்து, வாழ்வெனும் மகா சமுத்திரத்தை கடந்து முடிக்கையில் எதனை தன்னுடன் எடுத்துச் செல்கிறார். அது அனுபவப் பொதிகள் மட்டுமேதானகத்தான் இருக்க முடியுமல்லவா?
தன் வாழ்வின் எல்லையில் இருக்கும் பொழுது சற்றே கடந்த வந்த பாதையை மெல்ல அசை போட்டு பார்க்கும் பொழுது தான் எடுத்த முயற்சிகளின் மூலமாக சமூதாயத்திற்கு ஏதேனும் படைப் பங்களிக்களிப்பு அளிக்கப்பட்டிறுக்கிறதா என்று உட்நோக்கும் பொழுது இவைகள் யாவும் வெளி வருகின்றன.
இந்த முதல் வகை வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் செய்யும் தவறு அல்லது அணுகுமுறை குழந்தை வளர்ப்பில் என்னவெனில், தன்னிடம் உள்ள, தன்னால் இயலாத காரியங்களை தன்னுள் கோட்பாடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய விசயங்களை, தனது குழந்தைகளின் மேல் திணித்து அதன் படி நடக்கக் கூறியோ அல்லது எந்தவொரு துணிச்சலான காரியத்தையும் தனியே எடுத்து அதனை பட்டறிந்து அறிவதற்கான சாதகமான சூழ்நிலையை மறுத்தோ வளர்ப்பது.
உதாரணத்திற்காக பல விதமான பெற்றோர்களின் மன நிலையை எடுத்துக் கொள்வோம்; படிப்பு, மதம், பயம் மற்றும் பழக்க வழக்கம் சார்ந்து. இவைகள் யாவும் எந்த ஒரு தனிப்பட்ட மனிதருக்கும் தனது பால்ய வயது முதற்கொண்டே தனது பெற்றோர்களின் மூலமாக கையிறக்கம் பெற்று அதுவும் தலைமுறை தலைமுறையாக பழைய பால் புது கிண்ணத்தில் மாற்றப்படுவது போல, அது தனது குழந்தைகளுக்கு ஊட்டப் படுகிறது.
அதிலும் குறிப்பாக தனது உண்மையற்ற பயம் அதனைத் தொடர்ந்த ஐயப்பாடுகள் தீர்க்கப் படாமல் இருக்கும் பட்சத்தில், அப்படியே எந்த ஒரு வடிகட்டலுமில்லாமல் தனது குழந்தைகளுக்கு மூளைச்சலவையின் மூலமாக சென்றடைகிறது.
மதம் சார்ந்த அத்துனை மூட நம்பிக்கைகளும் இப்படியே சென்றடைவதாக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் மதம் சார்ந்த ஐயப்பாடுகளும், தனி மனித தேடல்களும், அதற்கான விடைகளும் தேடிப் பெறாத பட்சத்தில் எஞ்சியிருப்பது குழப்பமும் அதனைச் சார்ந்த பயமும் பல நிலைகளில் மனித வன்முறைக்கு வித்திடுகின்றன; பிற்காலத்தில், பல நிலைகளில்.
அது போலவே, இயற்கையாகவே ஒரு குழந்தை அதற்கென தனி இயல்புகளுடன் தனக்கு கிட்டும் சூழலில் வளர்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு அச் சூழலுடன் ஒன்றி வாழும் பொருட்டு, அது அதற்கென பிடித்தமான விசயங்களை கவனித்து அதில் ஆர்வம் காட்டலாம் அல்லது நாமே அந்த பன்முக தோற்றச் சூழலை உருவாக்கிக் கொடுக்கும் பட்சத்தில் அவைகள் எதில் ஆர்வம் அதிகம் செலுத்துகிறதோ அதனை அறிந்து அதன் பொருட்டு வாய்ப்புகளை பெருக்கிக் கொடுத்து ஒத்தாசையாக இருக்கலாம்.
அப்படியாக இருக்கும் பட்சத்தில் அக் குழந்தைகளும் மன நிறைவுடன், எந்தச் சூழ்நிலையிலும் தனக்கு மானசீகமான ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் எந்த விதமான மன குன்றுதலுமில்லாமல் வாழ்ந்து வரலாம், பிற்காலத்தில் (மாடு மேய்ப்பவனாக இருந்தாலும் சரி அல்லது இசை மேதையாக இருந்தாலும் சரி - மன நிறைவு அதில் அவனுக்கு கிட்டும் பட்சத்தில்).
அவ்வாறின்றி, பெற்றோர்கள் எந்தத் துறையில் அதிக வாய்பிருக்கின்றதோ (அல்லது சொல்லிக் கொள்வதற்கு பெருமையாக இருக்கும் என்பதால்) அதனை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் மீது அந்த முடிவை வைத்துத் திணிக்கும் பொழுது, பெற்றோர்களுக்கு பிறகு பிடிக்காத ஒன்றை 'கடமையே' என்று எந்த பிடித்தமுமில்லாமல் செய்து வாழ்வும் கசந்து தனது பொற்றொர்களின் ஆசையை தனது வாழ்வாக ஏற்று வாழ்ந்து சாக நேரிடும்.
உதாரணமாக, அப்பா மருத்துவத்தில் பெரிய நிபுணர் என்றால் அவரது பிள்ளையும் அதே துறையில் இருப்பது. இது போல, கிளிப் பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதனைப் போன்று சொல்லிக் கொடுப்பதினால் ஏதாவது Creativity அங்கே துளிர்க்கிறதா என்றால் சாத்தியம் மிகக் குறைவே! அதே சமயத்தில், தன் ஆர்வத்தில் ஒருவர் அந்தத் துறையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தனது முழுத் திறமையும் அதில் போட முடிகிறது, ஏனெனில் தனக்கு என்ன இயல்பாக இருப்பதை போல செய்ய முடிகிறதோ அதில் முயற்சி இன்றியே இயல்பாய் பல சாதனைகள் ஏற்படுத்தப் படுகின்றன.
இதில் கஷ்டகாலம் என்னவென்றால், பெற்றோர் தான் வாழ்நாளில் தான் செய்யும் காலவதியாகிப் போன வாழ்வியல் சார்ந்த அணுகுமுறையினை தனது சந்ததிகளுக்கு கண்ணாடியில் 'தூசி படர்வதைப்' போன்று கொஞ்சம் கொஞ்சமாக தனது வாழ் நாளின் பெரும் பகுதியில் அவர்களுக்கு ஏற்றி வைத்துவிட்டுச் செல்வதுதான்.
பிற்காலத்தில் அக் குழந்தை பெரியவனாகி தன் கற்றுக் கொண்ட முரண்பாடுகளை, தனது சம காலத்தில் சோதனைப் படுத்திப் பார்க்கும் பொழுது மிக்க உபத்திரவங்களுக்கிடையே தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டியதாகி விடுகிறது.
அப்படி மாற்றியமைத்துக் கொள்ள பெரும்பாலும் முன் வராத பட்சத்தில் தான் தனி மனித வெளிப்பாடாக தோன்றிய ஒரு குறிப்பிட்ட "தூசியேற்றப்படுத்தல்" ஒரு முழு சமூதாயத்திற்குமே அமையப் போய், அது இரு வேறுபட்ட சமூகங்களுக்கிடையே வன்முறையில் கொண்டு போய் விட்டு விடுகிறது. உதாரணத்திற்கு மதம், ஜாதி சார்ந்த வன்முறைகள் இதில் அடக்கம்.
எனவே, குழந்தை வளர்ப்பில் பெற்றொர்கள் வன்முறையை கையாளாமல், குழந்தைகளின் இயல்பிற்கு விட்டு, அதற்கென உள்ள தனித் திறமையையும், ஆர்வத்தையும் கண்டறிந்து அதனை ஊக்கப் படுத்தினால், என்றைக்கும் அவர்கள் உங்களின் நினைவுகளினூடேயே (நன்றியுணர்வுடன்) வாழ்வார்கள்.
இளம் வயதிலேயே சுயமாக வாழ்வதின் அத்தியாவசியமென்ன, கூட்டுக் குடும்பம் என்ற முறையில் மொக்கையாக ஒட்டுண்ணி வாழ்வு வாழ்ந்து சமூதாயத்தை சவக் குழியில் தள்ளாமல் இருப்பதற்கு எப்படி வழிகோணுதல் வேண்டும் என்ற அடிப்படை அறிவை முதலில் தான் பெற்றுக் கொள்வது குழந்தை வளர்ப்பில் மிக்க நலம் பயக்கலாம். இல்லையெனில் "உதவாக்கரை பட்டாதாரிகள்...! போன்ற ஒரு இளைஞனை நம்மிடையே நாம் உருவாக்க நேரிடலாம். அப்படி எண்ணற்ற மக்களை உருவாக்கிய பட்சத்தில் ஒரு சமூதாயமும் அசனைச் சார்ந்த கூட்டமைப்பான நாடும் எந்த நிலையில் இருக்கும் என்பதனை இங்கும் அதனைப் பற்றிய பேச்சு இருக்கிறது.
மற்றும் இங்கே தருமி அவர்கள் "ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை" என்ற தலைப்பில் எழுதியிருக்கும் மதமும் மற்ற விசயங்களும் எப்படி மெது மெதுவாக மூளை சலவை செய்யப் பெற்று சிறுவர்களின் மனத்தில் ஏற்றமுறச் செய்யப்படுகிறது என்பதனை, தனது சொந்த அனுபவத்தின் மூலமாக சில சிந்தனைகளை அங்கு வைத்திருக்கிறார். முடிந்தால் அங்கும் சென்று வாருங்கள்.
என்னயப் பத்தி
சிதைந்த வரை
-
▼
2006
(52)
-
▼
November
(8)
- சந்தோஷக் குதிப்பு : (Happy Feet)
- எரோப்ளேனில் நான் கண்ட மேற்கத்தியப் பாதை
- நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - II
- நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - I
- மருத்துவரே வேண்டாம் - *யோகா* செய்யுங்கள்
- காட்டிற்குள் ஓர் முதலிரவு...!!!
- குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்...
- அந்திம காலம் by ரெ.கார்த்திகேசு...
-
▼
November
(8)
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Monday, November 06, 2006
குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்...
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
தெகா,
//இளம் வயதிலேயே சுயமாக வாழ்வதின் அத்தியாவசியமென்ன, கூட்டுக் குடும்பம் என்ற முறையில் மொக்கையாக ஒட்டுண்ணி வாழ்வு வாழ்ந்து சமூதாயத்தை சவக் குழியில் தள்ளாமல் இருப்பதற்கு எப்படி வழிகோணுதல் வேண்டும் //
மிக அருமையாக சொன்னீர்கள். இதுதான் ஆழ் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் விசயம். எப்படி நம் இளைஞர்கள் மதம் சார்ந்த விசயங்களில் மாட்டிக் கொண்டு சீரழிகிறார்கள் என்பதை நான் நேரிலே பார்த்திருக்கிறேன். என்னமோ போங்க..
நம் இளைய தலைமுறைக்கு தேவையான விசயங்கள் உள்ள பதிவு.
போன பதிவு முதியவர்களுக்கு, இது கிட்டதட்ட இளைஞர்களுக்கு .. அடுத்து இளம் பெண்களுக்கா?
//பொற்றோர் தான் வாழ் நாளில் தான் செய்யும் காலவதியாகிப் போன வாழ்வியல் சார்ந்த அணுகு முறையினை தனது சந்ததிகளுக்கு கண்ணாடியில் 'தூசி படர்வதைப்' போன்று கொஞ்சம் கொஞ்சமாக தனது வாழ் நாளின் பெரும் பகுதியில் அவர்களுக்கு ஏற்றி வைத்துவிட்டுச் செல்வதுதான்.
//
அருமையான பதிவு !
நெத்தியடி பாஸ் !
ஒரு + குத்தும் போட்டாச்சு !
:)
அதிலும் குறிப்பாக தனது உண்மையற்ற பயம்..மூளைச்சலவையின் மூலமாக சென்றடைகிறது.
மதம் சார்ந்த அத்துனை மூட நம்பிக்கைகளும் இப்படியே சென்றடைவதாக வைத்துக் கொள்ளலாம்.
அது போலவே இயற்கையாகவே ஒரு குழந்தை...வாய்ப்புகளை பெருக்கிக் கொடுத்து ஒத்தாசையாக இருக்கலாம்.
அருமையா எழுதியிருக்கிங்க தெகா
Dorothy Law Nolte இன் படைப்பு ஒன்னு நினைவுக்கு வருது
If children live with criticism,
They learn to condemn.
If children live with hostility,
They learn to fight.
If children live with ridicule,
They learn to be shy.
If children live with shame,
They learn to feel guilty.
If children live with encouragement,
They learn confidence.
If children live with tolerance,
They learn to be patient.
If children live with praise,
They learn to appreciate.
If children live with acceptance,
They learn to love
வாழ்த்துக்கள்
ரொம்ப ஆழமான பதிவு, இன்னும் ரெண்டு மூணு முறை படிக்க வேண்டும். அதற்குப் பின் கருத்து சொல்கிறேன்.
இதுவும்.. சாரி மறந்துருச்சு
If children live with approval,
They learn to like themselves.
If children live with honesty,
They learn truthfulness.
If children live with security,
They learn to have faith in themselves and others.
If children live with friendliness,
They learn the world is a nice place in which to live.
//எப்படி நம் இளைஞர்கள் மதம் சார்ந்த விசயங்களில் மாட்டிக் கொண்டு சீரழிகிறார்கள் என்பதை நான் நேரிலே பார்த்திருக்கிறேன்.//
சிவா, எங்ககிட்டயும்தான் சொல்றது. தெரிஞ்சுக்குவோமில்லே.
போன பதிவு முதியவர்களுக்கு, இது கிட்டதட்ட இளைஞர்களுக்கு .. அடுத்து இளம் பெண்களுக்கா?//
:-)) வேற வினையே வேண்டாமய்யா... ஆனாலும் பார்ப்போம் என்னதான் சொல்லுவாங்கன்னு...
கோவியாரே,
காலங்காத்தலேயே இந்த பதிவ படிச்சுப் போட்டு ஒரு குட்டு வைச்சுப் போட்டும் போயிருக்கீக... நன்றிங்கோ... ;)
மங்கை,
தாங்களின் உணர்வுப் பூர்வமான பகிர்தலுக்கு நன்றி. இங்கு மேலும் பல பயனளிக்கும் Quotesகளை எங்களின் பார்வைக்கு கொண்டு வந்தமைக்கு மேலும் ஒர் நன்றி :-)
டெல்லி குளிர் எப்படி இருக்கிறது??
சிந்தனை தூண்டும் பதிவு.
நல்ல பதிவு தெகா. குழந்தைகள் தினம் வரும் நவம்பர் மாதத்துக்கு ஏற்றதொரு பதிவு..
ஹி..ஹி..நன்றி நம்ம பழைய்ய்ய்ய பதிவை நாலு பேருக்கு முன்னால வச்சதுக்கு...
அந்தக் கண்ணாடியில தூசி படியறது இருக்கே..அது நல்லா இருக்கு.
காட்டான் எனில் காட்டில் வாழ்பவர் அதாவது முனிவர், ரிஷி என்பதான அறிவு நிரம்பியவர்கள். நீங்கள் தெற்குத்திசையிலான காட்டான் எனில் அகத்திய முனிவரா?
விஷய ஞானம் பொருந்திய பயனுள்ள பதிவு திரு. பிரபாகர்.
நட்சத்திரமானதில தங்கள் பூர்வாசிரம பெயர் அறிந்து கொண்டேன். தமிழ்மணத்தால் விஷயமறிந்தவர்களை சந்திக்கமுடியவில்லை எனினும் அவர்தம் சிந்தனையைப் பதிவுகளாகப் படிக்க முடிவது விஞ்ஞானத்தின் நல்லதான ஒரு பயன்பாடு.
ஒரு + குத்து
இ.கொ,
ரொம்ப ஆழமான பதிவு, இன்னும் ரெண்டு மூணு முறை படிக்க வேண்டும். அதற்குப் பின் கருத்து சொல்கிறேன்.//
படிச்சேன் ஒரு மண்ணும் புரியல, அப்படிங்கிறதெ எப்படி வாழைப் பழத்துக்குள்ள மருந்து வைச்சுக் குடுக்கிற மாதிரி சொல்றருன்னு பாருங்க ;).
சரி, சரி வரப் போற பதிவுகளில் ஏதாவது ஒன்று புரியற மாதிரி எழுத முயற்சிக்கிறேன்... அதுக்காக வருவதை நிறுத்துப்புடாதீக, சொல்லிப்புட்டேன் ஆமா ;-)
நன்மனம்,
சிந்தனை தூண்டும் பதிவு.//
ஹும், நன்றி! எதுவும் இன்னும் கூடச் சேர்க்க வேண்டுமென்று தோணவில்லையா, உங்களின் பார்வையில்?
பொன்ஸூ,
குழந்தைகள் தினம் வரும் நவம்பர் மாதத்துக்கு ஏற்றதொரு பதிவு...//
ஓ! ஆமாயில்லை. நன்றி அதனை முன் கூட்டியே தெரியபடித்தியமைக்கு அம்மணி :-)
நல்லதொரு பதிவு தெக்கிக்காட்டான்.
கலீல் ஜிப்ரன் On Children
And a woman who held a babe against her bosom said, "Speak to us of Children."
And he said:
Your children are not your children.
They are the sons and daughters of Life's longing for itself.
They come through you but not from you,
And though they are with you, yet they belong not to you.
You may give them your love but not your thoughts.
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow, which you cannot visit, not even in your dreams.
You may strive to be like them, but seek not to make them like you.
For life goes not backward nor tarries with yesterday.
You are the bows from which your children as living arrows are sent forth.
The archer sees the mark upon the path of the infinite, and He bends you with His might that His arrows may go swift and far.
Let your bending in the archer's hand be for gladness;
தருமி,
அப்படியா, என் தப்புத்தான். நீங்க எதிர்பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்க. நான் தான் ரொம்ப சந்தோஷத்தில கண்ணு முண்ணு தெரியாம இப்படி... :-)))
"கண்ணாடி தூசி" உண்மைதானேங்க... கொஞ்ச கொஞ்சமா ஏத்தி வைச்சுட வேண்டியது, பிற்காலத்தில பசங்க கஷ்டப்பட்டு அதனை துடைத்து பளிச்சுன்னு ஆக்கிறதுகுள்ள பொழுது பொக்குன்னு விடிஞ்சுருது... அதான் அப்படிச் சொன்னேன், சூசகமாக கூறியிருந்தேன்.
ஹரி,
காட்டான் எனில் காட்டில் வாழ்பவர் அதாவது முனிவர், ரிஷி என்பதான அறிவு நிரம்பியவர்கள். நீங்கள் தெற்குத்திசையிலான காட்டான் எனில் அகத்திய முனிவரா? //
காட்டில் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் முனியா என்றால் என்ன கிண்டலா :-)). அட அதெல்லாம் ஒண்ணுமில்ல, காட்டானாக இருக்கிறதில ஒரு வசதி இருக்குதுங்க. உங்க நாட்டு பக்கம் வந்தா உங்க காதில மட்டும் சொல்றேன் ;)
தாங்களின் பாரட்டுதலுக்கு மிக்க நன்றி. ஏதோ தோணுவதை இங்கு எழுதி வைத்து விடுகிறேன். குறைந்த பட்சம் என்னுடன் என் அருகமையில் வாழ்பவர்களாவது என்னைப் பற்றி தெரிந்து கொள்ளட்டும் என்ற நப்பாசையுடன்.
உங்களின் + குத்துக்கு ஒரு சிறப்பு :-)
டிசே தமிழன்,
ஞாபகம் இருக்கிறதா, இந்த தெக்கிக்காட்டானை :-))
நன்றி டிசே, மத்த பதிவுகளையும் வாசிங்க நேரம் கிடைக்கும் பொழுது.
You may give them your love but not your thoughts.
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,//
லதா அவர்களே, கலீல் வார்த்தைகளை இங்கு கொணர்ந்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
அப்பப்ப வந்து போங்க.
அருமையான பதிவு.
||தன்னிடம் உள்ள, தன்னால் இயலாத காரியங்களை தன்னுள் கோட்பாடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய விசயங்களை, தனது குழந்தைகளின் மேல் திணித்து அதன் படி நடக்கக் கூறியோ அல்லது எந்தவொரு துணிச்சலான காரியத்தையும் தனியே எடுத்து அதனை பட்டறிந்து அறிவதற்கான சாதகமான சூழ்நிலையை மறுத்தோ வளர்ப்பது.||
அது...
||எதில் ஆர்வம் அதிகம் செலுத்துகிறதோ அதனை அறிந்து அதன் பொருட்டு வாய்ப்புகளை பெருக்கிக் கொடுத்து ஒத்தாசையாக இருக்கலாம்.||
..லாம்... இருக்கணும்... ரிசல்ட் எப்டி இருக்கும்னு அனுபவிச்சவங்களுக்குத் தெரியும்..
||பெற்றோர்களுக்கு பிறகு பிடிக்காத ஒன்றை 'கடமையே' என்று எந்த பிடித்தமுமில்லாமல் செய்து வாழ்வும் கசந்து தனது பொற்றொர்களின் ஆசையை தனது வாழ்வாக ஏற்று வாழ்ந்து சாக நேரிடும்.||
உசிரோடவே... புதைச்சிடுவாங்க.. :(((((((
||பிற்காலத்தில் அக் குழந்தை பெரியவனாகி தன் கற்றுக் கொண்ட முரண்பாடுகளை, தனது சம காலத்தில் சோதனைப் படுத்திப் பார்க்கும் பொழுது மிக்க உபத்திரவங்களுக்கிடையே தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டியதாகி விடுகிறது.||
:)...
___________________
வழக்கம் போல அருமையா சொல்லி இருக்கீங்க... ஒரு வாட்டியாவது மாத்துக் கருத்துச் சொல்லணுமேன்னு கவலையோட படிச்சேன்...
ப்ச்... அப்டி ஒரு பதிவு போடுங்களேன்..:P
.......
இங்கயே இன்னும் நிறைய லிங்க் இருக்கு... படிக்கணும்... கவனப் படுத்திக்கிட்டே இருங்க... நன்றி சொல்ல வார்த்த இல்ல.. :)
Post a Comment