ஒரு காலத்தில் நாடோடியாக சற்றே முன்னேறி வால் இல்லாத குரங்காக திரிந்த நாம், நம்முடைய சுயநலத்திற்கென பிற விலங்குகளை நம்முடைய தேவைக்கென பழக்கப்படுத்தி நம் வேலைப் பளுவை அதன் மீதி ஏற்றி இளைப்பாறிக் கொண்டோம்.
அதற்கென அவைகளின் வாழும் மொத்த ஆண்டுகளின் எண்ணிக்கையை முழுமையாக வாழ விட்டும், வாழ விடாமலும் நம்முடைய கைகளில் அதன் விதியைக் கொண்டு வந்தோம்.
நாள் முழுவதும் ஒரு வயலில் உழுது விட்டு ஒரு கொட்டகையில் தான் காயடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிரும்கிறோம் என்று உணராத மாட்டிற்கும், மூன்று வயதிலிருந்து படிப்பு, குழந்தமை வீணடிப்பு, வேலை, திருமணம், பிள்ளை பேறு, வீடு, கார், கடன்... மீண்டும் பிள்ளைகளின் படிப்பு என்று ஒரு சுழற்சியில்... இன்னுமொரு மாட்டுக் கொட்டகையில் அடைத்து வைத்துக் கொள்ளும் நவீன ஏப்களுமான நமக்கும், அந்த பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது?
அவைகளை அன்று அந்த கட்டுப்பாட்டிற்குள் ஒரு மொத்த சமூகமாக நாம் கொண்டு வந்தோம். ஆனால் அதே யுக்தியை பயன்படுத்தி இன்று அரசுகள் நம்மை வேறு மாதிரியான கெடையில் சாத்தி விட்டதோ!
டார்வினியக் கோட்பாடு சன்னமாக உயிரின இருத்தலின் பொருட்டு எல்லா காலத்திலும் நடந்தேறும் தொடர் நிகழ்வு தானே. அதில் மனிதன் மட்டும் விதி விலக்கா என்ன? இந்தியாவில் இருக்கும் கட்டற்ற மக்கட்தொகையின் பொருட்டு ஏற்கெனவே அந்த கோட்பாடு இயக்கத்தில் தீவிரத் தன்மையுடன் இருக்கிறது என்பதை நான் பல இடங்களில் சுட்டிக் காட்டி எழுதி வருகிறேன். பிராமினியத்தின் அடிப்படை சித்தாந்தமே அந்த அச்சை சுற்றியே கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது எனலாம்.
கூட்டம் அதிகரிக்க முறைபடுத்தப்பட்ட சமுக கட்டமைப்பு வேண்டும். அதற்கென அமையப்பெற்ற அந்த மக்களதிகார அமைப்பு, நவீன காலத்தில் சிதைவுற்று மக்களாட்சி நீர்த்துப் போகும் அளவிற்கு அப்யூஸ் செய்யப்பட்டு வருகிறது...
I think its too big to handle with such a vast differences.
0 comments:
Post a Comment