சங்ககாலம் தொட்டு தமிழர்களுக்கென்று ஒரு குணம் மணம் இருந்தாலும், அதற்குப் பிறகு பல நூற்றாண்டுகள் பின் தங்கியவர்களை மீட்டெடுப்பார் இல்லாமல் கிடந்த பொழுது திராவிடச் சிந்தனையாளர்களே நம்மை மீட்டெடுத்தார்கள். ஏன் அவர்களுக்கே எனது முதல் வணக்கம் உரித்தாகுகிறது? படிங்க...
மக்களின் வாழ்வியலோட சில பண்புக் கூறுகள் கரைந்து கிடப்பது வாழையடி வாழையாக கடத்தப் பெறுவது. அதுனாலேதான், தொழில் முறை எழுத்தர்கள், நீ அந்தப் புத்தகம் படிக்கலையா, சங்க இலக்கிய நூல்கள் ஒன்று கூட படிச்சதில்லையா என்று கூறுவதோடு அல்லாமல் "நீ பிறந்ததே வேஸ்ட்னு" சொல்லும் போது எனக்குச் சிரிப்பா வரும்.
ஏன்னா, இலக்கியமே அந்த மக்களின் வாழ்வியலின் ஓர் அங்கத்தை பிய்த்துத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அவன் இன்னமும் கொரட்டி வைத்து வேப்பிலை கொத்தை இணுக்கி தனது ஆடுகளுக்கு மேய்க்க கொடுக்கும் வரை அந்த வாழ்வியலின் கூறுகள் அவனுடன் பிண்ணி பிணைந்தே கிடக்கும்.
இருப்பினும், அந்த சமுகத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த புதிய சிந்தனையுடன் பழைய விழுமியங்களை உள்வாங்கியவர்களால் முன்னொடுத்து செய்யும் பொழுது அந்த ஆடு மேய்ப்பவரின் பிள்ளைக்கும் கணினியும், கீபோர்டும் கொடுத்து தன்னம்பிக்கையுடன் மான்ஹாட்டன் சென்று என்னால் வேலை பார்க்க முடியுமென்பதற்கிணங்க, க்ரவுண்ட் ஒர்க் செய்து கொடுப்பது ஒரு முற்போக்கு சமுகத்தின், பண்பாடடைத்த தலைவர்களின் கையில் தான் உள்ளது. மறுக்க முடியுமா?
அதனை நீதிக்கட்சி காலத்திற்குப் பின்பாக வேகமெடுக்க வைத்து எனது தலமுறையில், டீகடை வைத்திருந்த எனது அப்பாவால் அவரின் மூன்று பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பும் அளவிற்கு வாய்ப்பை அமைத்துக் கொடுக்கும் வேகம் எடுத்தது. எனவே நிகழ்காலத்தில் எனது தரித்தரத்தை ஒழிக்க எவர் வியர்வை சிந்தினார்களோ அவர்களுக்கே, அவர்களின் சித்தாந்ததிற்கே எனது முதல் வணக்கம்.
0 comments:
Post a Comment