படிக்கிற வயசில போராட்டம், அரசியல் தேவையா?
அரசியல் ஒரு சாக்கடை. படிக்கிற வயசில என்னாத்திற்கு கொள்கை, போராட்டம், ஆர்பாட்டம்னு "அதே கண்கள்" ரேஞ்சிற்கு நம்ம அந்நியன் சங்கர் பட அரசியல் டயலாக் மாதிரி, மத்யமர் மாதிரி குழுக்கள்ல ஓடும்.
இதோ கீழே ஒரு மாதிரி-
...கடை வியாபாரம் செய்வதற்கானது, அரசியல் பேசுவதற்கான இடமல்ல என்றார்.
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.
கல்லூரிகளும் கல்வி கற்பதற்காகவே உருவாக்கப் பெற்றவை, அரசியல் பேசுவதற்கோ ஆர்பாட்டம் செய்வதற்கோ அது சட்டப்படியான இடமல்ல.
எனவே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரிக்குள் இருந்து கொண்டு அரசியல் பேசக்கூடாது, அரசியல் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது.
கல்லூரிகள் கற்பதற்கான இடம், அரசியல் செய்வதற்கான இடமல்ல. ஆசிரியர்கள் கற்பிப்பதற்கானவர்கள்.
அரசியலில் கொள்கை ரீதியான எதிர்ப்பு உள்ளதா ? கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து நான்றாகப் போராடலாம் என்றேன்.
எனது நண்பருக்கு எனது இந்தப் பதிலில் திருப்தியில்லை.
நண்பர்களே உங்களுக்கு எனது பதில் சரியென்று தோன்றுகிறதா?
●●●●●●●●
அங்கே என்னோட ஒரு கமெண்ட் . அப்படி கேட்டவர் ஒரு முனைவர், பேராசிரியர் என்பது கூடுதல் தகவல்.
அப்போ political science, law படிக்கும் வயசு என்ன? படிக்கும் வயதில் இந்திய constitutional rightsலிருந்து, இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, யார் வந்தா போனான்னு பண்டைய கால வரலாறு என்று அனைத்தும் சொல்லிக்கொடுக்கப்படணும்.
ஓட்டுப் போடுற வயசு என்ன? அவர்களை இன்று அரசியல் படுத்தினாத்தானே படித்த இளைஞர்களை நாளை நம்மால் அடையாளம் காண முடியும். பின்பு ஏன் பெரும் பெரும் பல்கலைக்கழகங்களில் இடது, வலது (ABVP) போன்றவகளை புழங்க விடுகிறார்கள்? நம் வாழ்க்கையில் எதில் அரசியல் குறுக்கிடாமல் இருக்கிறது? எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. ஏதோ அடிச்சி விட்டுட்டு வந்திருக்கீங்க.
@@@@@@@@@
ஜாதியக் கருவத்தில் அறியாமையின் உட்சத்தில், அறிவியல் உண்மைக்கு மாறாக, இன்னா ஜாதியில் பிறந்தவருக்கு இசை வரும், பணம் பண்ண வரும், வீரம் வரும், மலம் அள்ள வரும் என்று ஒரு நாகரீமடைந்த சமுகத்தில் சொல்லித் திரிபவர்களை கிண்டல் செய்யும் தொனியில் "நீயா நானாவில்" TRPக்காக செய்வது மனித செயலற்றது என்ற ரேஞ்சிற்கு இரக்கப்படுவது சரியா?
சரியில்லை. ஏன்? ஒரு கிராமத்திலிருந்து முதன் முறையாக விமானத்தில் பயணிக்கும் ஒருவர் தடுமாறுவதோ, அல்லது எஸ்கலேட்டர் ஏறப் பயப்படுவதோ புரிந்து கொள்ளக் கூடியது. நாமே நமக்கு பழக்கமில்லாத குளியலறையில் தண்ணீர் திறந்து விடும் புதிய திறப்பான்களை தடவி முழித்து கொண்டிருப்பதில்லையா, அது போலத்தான். அங்கே நவீன வாழ்வின் பொருட்டு ஒருவருக்கு கிடைக்காத, பொருட்கள் சார்ந்த அறிமுகமின்மை; உடனடியாக திருத்திக் கொள்வோம். அது சூழலின் பொருட்டு அமைவது அதனை கிண்டல் செய்தால், பகடி செய்பவரின் வெளி உலக ஊடலும் அடுத்தவர் பொருட்டு கரிசனமும் அற்ற நிலையை காட்டத்தக்கது.
அதே நேரத்தில் ஜாதிய மனநிலை என்பது திமிரின், மன நோயுற்ற நிலையின் உச்சத்தில் வருவது. அது சக மனிதனை தன்னை விட குறுக்கிப் பார்க்கும் புத்தியை தனக்குள்ளாகவே வளர்த்தெடுத்து போகும் போக்கில் அடுத்தவர்களை அந்த கண்ணோட்டத்தில் வைத்து பார்க்கச் சொல்லுவது. அவர்களுக்குத் தேவை திடுக் விளிப்பே...! அந்த "கர்வக்குமிழியை" சிறிதே நெருடி யோசிக்க வைப்பது. எனவே தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
0 comments:
Post a Comment