Monday, July 02, 2007

எப்பொழுதும் ஏழரை இப்ப *எட்டு* பாகம் - I

இதுக்கு மேலேயும் நான் காத்துகிட்டு இருந்தேன்னு வைச்சுக்கோங்க ஏதாவது பார்சல்ல எனக்கு அனுப்பி வைச்சுடப் போறாங்க இந்த ஜோதியில கலந்துக் கொள்ளச் சொல்லி கூப்பிட்டுருந்தவர்கள்.

அது என்னமோ தெரியலை என்னையும் மனசில நிறுத்தி மூணு பேரு கூப்பிட்டு இருக்காங்கப்பா. முதலில் கப்பிப் பய கத்தியிருந்தார் இங்கே, பிறகு கவிதா கூவியிருந்தார் இங்கே, கடைசியா நம்ம தருமி கர்ஜித்து இதுதான் உனக்கு மருவாத அம்புட்டுத்தேன், வந்து உள்ளேன் அய்யா சொல்லிட்டு ஓடிப்போன்னு சொன்னதுக்கப்புறமும் வரலைன்னா சரியா வருமா வராது அதான் வந்துட்டேன். இனிமே இது உங்கப் பாடு.

(ஒண்ணு). எங்கே ஆரம்பிக்கிறதுன்னே தெரியலையே. சரி நான் செத்து பொழச்சவண்டாங்கிறதில இருந்து ஆரம்பிப்போம். ஏன்னு கேளுங்க நான் பொறந்தப்பா உசிரோட இருப்பனான்னே நிறைய பேருக்கு சந்தேகமா இருந்துச்சாம். என் பாட்டி சொல்லும் மண்டை மட்டும்தான் இருந்துச்சு மரைக்கா மாட்டமின்னு (தலைபிரட்டை மாதிரி - பாருங்க அப்பவே நான் இயற்கை நேசியா இருந்திருக்கேன் :-) ).

எப்படியோ, அப்படி இப்படின்னு தட்டி கிட்டி அந்த தலைபிரட்டை ஸ்டேஷ்ல இருந்து "துணைவன்" ஸ்டேஷ்க்கு கொண்டுவந்து விட்டுடாங்க. ஏன் துணைவனா, இதுக்கப்பறம் இவன் பிழைச்சா தம்புரான் செயல்னு முருகன்டே நேந்துக்கிட்டாங்களாம். அதான் அந்தப் பட்டப்(பட்டுப் போன?!) பெயர். அந்த பேருக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் பின்னாலே என் மண வாழ்க்கையும் அமைஞ்சுச்சு அதனையும் சொல்றேன்.

(இரண்டு). பள்ளிப் பருவத்தப் பத்தி சொல்றதா இல்லையா. சொல்லாம விட்டா நிறைய விட்டுப் போகுமில்லை. சரிங்க, ஒன்னாப்புல இருந்து மூனாப்பு வரைக்கும் யாரும் என் கிட்ட நெருங்கி ஸ்கூலுன்னு சொல்லவே பயப்படுவாங்களாம். அப்படியே இருந்தாலும் ரெண்டு பேரு தரத்தரன்னு இழுத்து கொண்டுபோய் விடணுமாம், அப்ப இரண்டு பக்கமும் திரும்பி திரும்பி கடிச்சி எல்லாம் வைப்பேனாம்.

பள்ளிக்கூடம் சும்மா பேருக்குத்தான் "அரசாங்க ஆரம்பச் சீரணிப் பள்ளியோ" என்னமோ பேரு. இப்ப என்ன, சொல்லிப்பிடறேன், யாராவது என்னைய தம்பி உனக்கு எ.பி.சி,டி தெரியுமாடான்னு கேட்டுப் புட்டா அடுத்த முறை அவரு என்ன பார்க்க பல மாதங்கள் ஆகலாம். ஒரு முறை என் மாமா ஒருத்தர் பிடிங்கடான்னு என் தம்பியையும், என் சகோதரியையும் விட்டு 500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுற கணக்கா ஓடுன என்னைய துரத்திப் பிடித்துக் அமுக்கி கொண்டுவந்து அவரு கையில ஒப்படைச்சாங்க. அன்னிக்கு கொஞ்ச நேரம் கூடையில அமர்த்தி கிணத்துக்குள்ள இறக்கி வைச்சாங்க, மனப்பாடம் பண்ணேன், 26 லெட்டர்ஸையும். சாதனை, இல்லையா.

பிறகு பத்தாம் வகுப்பு பரிட்சை. தகிடு தத்தம் போட்டு கடம் அடிச்சி, அடிச்சி பாஸுக்கு மேல பண்ணிப்புடுவேன்னு எழுதி இருந்ததிலே, முதல் நாள் சாயந்திரம் வந்த "மாலை முரசில" எப்படியோ 75ல இருந்து 80க்கு கிடையில் போட வேண்டிய ஹைஃபென்(-) இல்லாம போனதால நான் பெயிலு. இரவு பதினோரு மணி வரைக்கும் வீட்டுக் போறதா வேண்டாமான்னு உட்கார்ந்து இருக்கும் பொழுது அப்பா வந்து "அட வாடா இதுக்கு போயி அலட்டிக்கெல்லாமான்னு" வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி எல்லோரும் வெளிய படுத்திட்டு என்னைய மட்டும் பத்திரமா உள்ளேயே வச்சுப் பார்த்துக்கிட்டாங்க.

இருந்தாலும் மறுநாள் காலையில ஒரு சின்ன நம்பிக்கை, எங்க மத்த நாளிதழ்களெ எப்படி இருக்குன்னுப் பார்ப்போமின்னு "தினகரன்" வாங்கிப் பார்த்தா... பார்த்தா.... ஆத்தா நான் பாஸாகிட்டேன்னு வயல் வரப்பில ஓடிட்டு சொல்ற கணக்கா நான் கண்ணு முண்ணு தெரியாமா மிதிவண்டிய அழுத்திகிட்டே போயி எங்க கடையில இருந்த அத்தனை கஸ்டமருக்கும் யோவ் அப்பா எல்லோருக்கும் இலவச ட்டீய போட்டுக் கொடுக்கச் சொல்லுமய்யான்னு ஆர்டர் போடுற அளவிற்கு இன்ப அதிர்ச்சியில மிதந்ததை சொல்லவா.

கணக்க நினைச்சாலே கண்ணு கட்டுனதுனால +2வில ப்யூர் சயின்ஸ்தான் படிப்பேன்னு, ITIதான் உன் வசதிக்கு முடியுமின்னு படிச்சவங்க என்ன சுருட்டிப் போட நினைச்சும், அழுது புரண்டு +2வும் சேர்ந்தாச்சு. அப்பத்தான் அய்யாவுக்கு பர்சனாலிட்டி ப்ரக்ஞை துளிர்விட ஆரம்பிச்ச நேரம் (வயசுக்கு வந்தாச்சில்ல:-).

உடனே ஒடம்ப தேத்தணுமின்னு தமிழ்வாணன் பிரசுரத்தில இருந்து அயிரம் எப்படிகளிலிருந்து "கரத்தே கற்றுக் கொள்ளுங்கள்" VPP மூலமாக தருவிச்சு பணம் டெலிவரியப்ப கொடுக்கிற மாதிரி செஞ்சுருந்தேன். புத்தகமும் வந்துச்சு. அப்பா தான் கடையில இருந்தார். புத்தகத்தையும் பிரிச்சு பார்த்தார். பணத்தை கொடுத்துட்டு, கடுப்பாகி "புல்தடுக்கிப் பயில்வான் மாதிரி இருந்துக்கிட்டு ஏண்டா உனக்கு இந்த வேலை" அப்படின்னுட்டு என்கிட்ட கொடுத்துட்டார். உள்ளர சந்தோஷம் இருந்திருக்கமலா இருந்திருக்கும், அப்பாவுக்கு.

அது என் நண்பர்கள் வட்டத்திற்கு வர இன்னமும் ஊர்ல சில பேர் என்ன செல்லம கூப்பிடுற பேரு "புல்தடுக்கி பயில்வான்." பிறகு சாயந்திர வேளைகளில் ஆ, ஊன்னு கை கால்களை மாத்தி, மாத்தி காத்தில் உதைப்பதை பார்த்து எங்க பாட்டி (ஆத்தா)விலிருந்து, வீட்டுக் கோழிவரை என் பக்கமே வராமல் "அடியே ஒமவனுக்கு என்னமோ ஆயிப்போச்சுடின்னு" சொல்லிக்கிட்டு திரியற அளவிற்கு பாடி பில்டிங் நடந்துச்சு ஒரு நாலு வாரத்துக்கு.

(மூணு). படிப்ப சீரியச எடுக்க அரம்பிச்சது கொஞ்சம் +2விலதான்னு நினைக்கிறேன். ஆனால் அது நாள் வரைக்கும் இங்கிலிபீஸ்னாவே வேப்ப மரந்தான் என் ஞாபகத்துக்கு வந்தது. பள்ளிய முடிச்சுப் போட்டு திருச்சிப் பக்கம் கொண்டு போய் தள்ளிவிட்டுட்டு வந்திட்டாங்க பட்டப் படிப்பிற்கென.

அங்கேயும் கணிதமில்லாத பாடந்தே வேணுமின்னு விலங்கியல் எடுத்தேன். ஆனால், ஆங்கில வழி கல்வியாப் போச்சே. சமாளிச்சேன். அங்கேதான் வாழ்க்கையைப் பற்றிய ப்ரக்ஞை கொஞ்சம் எட்டிப் பார்க்க ஆரம்பிச்சது. ஹாஸ்டல் கிடைக்காம மன்னார்புரத்தில குமார் லாட்ஜில் தங்கி, சாப்பாட்டுக்கு இங்கயும் அங்கயும் அலைஞ்சு, அதுக்கிடையிலேயே, என். எஸ்.பி ரோடு போயி கலர் பார்த்து, ஐஸ்க்ரீம் சாப்பிட கத்துகிட்டு, விடாம குரூப் குரூப்பா சினிமா போயி யாரையும் சினிமா பார்க்கவிடாம தருதலத்தனம் பேசி...

இப்படியே போயிக்கிட்டுருந்த வாழ்க்கை கடைசி செமஸ்டர்ல அலட்சியமா மரபியல், சைட்டோலஜி மற்றும் பரிணாமப் பேப்பர்ல ஜஸ்ட் மிஸ்ஸிடு மூணு மார்க் ரீதியில ஃபெயிலாப் போயி, வீட்டுல ஒரு வருசம் உட்காரப் போயி, நிஜம் இன்னமும் சுட ஆரம்பிச்சது. அடுத்தது என்னான்னு புரியலை. வீட்டுல ஏற்கெனவே ஒரு எம்.எஸ்சி குத்த வைச்சு உட்கார்ந்து இருக்க அதே சமயத்தில் இப்ப நான் வேற. அப்பத்தான் உணர ஆரம்பிச்சேன், ஆங்கிலம் இல்லைன்னா உலகத்தில ஒண்ணுமில்லையோன்னு. ஆங்கில கிறுக்கு பிடிக்க ஆரம்பிச்சுச்சு.

ஊரில் வந்த தி ஹிண்டு, ஸ்போர்ட்ஸ் ஸ்டார், Fரண்ட் லைன், பழைய ரீடர்ஸ் டைசஸ்ட்னு அப்பா சக்திக்கும் மீறி தினமும் பரிட்சைக்கு படிக்கிற மாதிரி ஆங்கில டிக்சனரியும் கையுமாய் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து மணி நேரம் மேய ஆரம்பித்தேன் ஒரு வேப்ப மரத்தடிக்கு கீழே அமர்ந்து.

பிறகு இரவு முழுக்க ரேடியோவை தலைக்கு பக்கத்தில வைச்சுக்கிட்டு, voice of america, radio masco அப்படி இப்படின்னு sw2ல போட்டு விடிய விடிய கேக்கிறது. திரும்பவும் ஆத்தாதான் எல்லார்கிட்டயும் பொழம்பித் தள்ளும், எங்கடி அவன் தூங்கிறான் ரா முழுக்க என்னாதான் அந்த ரோடியோ பொட்டியில இருக்கோ அதப் பிடிச்சு நோண்டிக் கிட்டே இருக்கான்னு சொல்லும். அதனை இன்னமும் அப்பாவும், அம்மாவும் எனது கடின உழைப்பிற்கு கீழே அந்த நாட்களை சேர்த்துக் கொள்வார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் பிரியற மாதிரி இருந்துச்சு.

பிறகு ஒரு மன நோயாளி கணக்கா கொல்லைக்கு போறப்ப, வாரப்ப, தனியா நடந்து திரியறப்பன்னு எனக்கு நானே ரெண்டு காரெக்டர்வச்சுக்கிட்டு (hi, how are you - i am fine) கேள்வியும் நானே பதிலும் நானேன்னு பேச்சு ஆங்கிலத்த வளர்த்துக்க பேசித் திரிவேன்.

இருந்தாலும் பாருங்க, உச்சரிப்பு இன்னமும் கைகூடலை. அதுவும் நம்ம ரேடார்ங்கிற ப்ரக்ஞைக்கு கீழே வராத நேரம். அது தொடர்ப நிறைய அசிங்கப் பட்டதுமுண்டு.அதுக்கு ஒரு உதாரணம் Pony Horseக்கு Bony Horseன்னு சொல்லி எல்லாரையும சிரிக்க வைச்சது. அது எல்லாருக்கும் சிரிப்பு எனக்கு நெருப்பா இருந்துச்சு. அது எதுக்காக சிரிக்கிறாங்கன்னு தெரியலை. முட்டி மோதி தெரிஞ்சிக்கிட்டப்ப கையில the oxford dictionary pronunciationக்கு உதவி பண்ண வந்துச்சு...

மிச்சத்தை அடுத்த அடுத்தப் பதிவில சொல்லிக்கிட்டே வாரேன்... பதிவு பெருசாப் போயிக்கிட்டே இருக்கு, உடைச்சு உடைச்சுத் தாரேன்...

தொடரும் பாகம் - 2ல.

31 comments:

Thekkikattan|தெகா said...

பி.கு: ரொம்பச் சீக்கிரமா பாகம் ரெண்டக் கொடுத்து நான் எம்புட்டுப் பெரிய்ய்ய்ய்ய்யா ஆளுங்கிறது சொல்ல முயற்சிக்கிறேன்... ரெண்டா போனதுக்கு மன்னிச்சுப்புடுங்கவோய் :-)

தருமி said...

மூணு முடிச்சு முதல் பாகத்தில் ..
நல்லா வந்திருக்கு .. மீதி வாசிச்சிட்டு மீதிய வச்சுக்குவோம்.

இலவசக்கொத்தனார் said...

எழுதினா ரெண்டு மூணு பாகம். இல்லைன்னா ஒரேடியா அப்ஸ்காண்ட். நல்லா இருங்கடே!

ramachandranusha(உஷா) said...

தலைப்பு ஜெயித்த கதை என்று மாற்றிவிடுங்கள் :-) நல்லா சுவாரசியமாய் இருக்கு தொடருங்கள்.

Unknown said...

என்னத்த சொல்ல அதான் நேத்தே சொல்லியாச்சில்லா ? நல்லாருக்குன்னு இப்ப இங்க ஆளுங்கள கூட்டியாந்து ஆராய்ச்சி பன்னலாமா வேனாமா?

Thekkikattan|தெகா said...

தருமி

மூணு முடிச்சா, அட இதுவும் நல்லாத்தேன் இருக்கு :-)

மீதி வாசிச்சு முடிக்குறத்துக்குள்ள உங்களுக்கு தாவு தீரப் போகுது
:-))

மங்கை said...

அட அட அட..8 எட்டு பதிவா வருமோ..
அந்த முதல் 8 எனக்கும் பொருந்தும்..

சிவபாலன் said...

தெகா,

நல்லா வந்திருக்கு..

இரண்டாவது பாகம் எப்போ?!

கப்பி | Kappi said...

ரொம்ப சுவாரசியமா இருக்கு தல!! சீக்கிரம் செகண்ட் பார்ட் ரிலீஸ் பண்ணுங்க :)

//வாழ்க்கையைப் பற்றிய ப்ரக்ஞை கொஞ்சம் எட்டிப் பார்க்க ஆரம்பிச்சது. //

இந்த பதிவுலயே ப்ரக்ஞை நெறய தடவ எட்டிப்பார்த்துடுச்சே :)))

Thekkikattan|தெகா said...

இலவசம்,

எழுதினா ரெண்டு மூணு பாகம். இல்லைன்னா ஒரேடியா அப்ஸ்காண்ட். நல்லா இருங்கடே!//

அப்ப நீங்களே முடிவு பண்ணிட்டீங்க, பாகம் மூணுதான்னு நானும் அப்படித்தான் நினைக்கிறேன். :-)))

பாவம் மக்கா.

அப்ஸ்காண்ட் ஆனாது என்னாத்துக்குன்னு வுமக்கு தெரியும்தானே...??

பாலராஜன்கீதா said...

// அன்னிக்கு கொஞ்ச நேரம் கூடையில் அமர்ந்து கிணத்துக்குள் இறக்கி வைச்சாங்க, மனப்பாடம் பண்ணேன், 26 லெட்டர்ஸையும். சாதனை, இல்லையா. //

You are very great in studying English very deeply.
:-)))

Thekkikattan|தெகா said...

உஷாங்க,

அட வாங்க எப்படி இருக்கீங்க?

அது எப்படிங்க ஜெயித்தனா இல்லையான்னே இன்னும் சொல்லலேயே நீங்களே அப்படி அறிவிச்சுட்டீங்க :-)

அப்படியே பாகம் பாகமா ஒரு தொடரா போட்டுடுவோமா :-)))???

வல்லிசிம்ஹன் said...

மன்னார்புரத்தில வெள்ளை மாளிகைனு ஒரு வீடு இருக்கும் இன்னும் இருக்கான்னு தெரிய வில்லை.

நல்ல இடம். ரொம்ப சுவாரசியமா இருக்கு. சாதனை எட்டுனே போட்டு இருக்கலாம்.

Thekkikattan|தெகா said...

ரயிலு,

ஏன் இப்படி* அலுத்துகிறிய. கும்மியடிக்க ஆளு கூட்டியாரேன் அப்படிங்கிறீகளா. முதல்ல படிச்சுப் போட்டு தலையில குட்டுற ஆளுக குட்டடும் அதுக்கு அப்புறமா நாம வச்சுக்குவோமே நம்ம குமிஞ்சு அடிக்கிற கும்மிய ;)

Thekkikattan|தெகா said...

மங்கை,

//அட அட அட..8 எட்டு பதிவா வருமோ..
அந்த முதல் 8 எனக்கும் பொருந்தும்..//

அப்ப நீங்க ஒரு "தலைபிரட்டியா?" சரியாப் போச்சு போங்க. எப்படி நம்ம எட்டுகீது, ஹா ஹா ஹா...ஹ் (விக்கிச்சு கடைசி "ஹா") :-)

Unknown said...

பச்சைக்கொடி காட்டவும்

Unknown said...

கேட்டை திறந்து வைக்கவும்

Unknown said...

எக்ஸ்பிரஸ் வருகிரது

Unknown said...

சொன்னா உடனே செய்யனும்

Unknown said...

நான் யாரு எனக்கேது தெரியலையே

Unknown said...

என்னத்த சொல்ல ஆங்கில அறிவுதான் உங்கள ஆழமா பீடிச்சிறுக்கு கிணத்துக்குள்ள மீன் புடிக்க எறங்கிட்டு இங்க வந்து ஏபிசிடின்னு கதையா?

Thekkikattan|தெகா said...

அப்பாடா,

ஒரு வழியாக சிவாவையும் உள்ளே கொண்டு வந்தாச்சு. வாங்காணும் ;)

இரண்டாவது பாகம் எப்போ?!//

தெகா பாணியிலே ரொம்பச் ச்சீக்கிரமா போட்டுடுவோம்...

துளசி கோபால் said...

hi, how are you?

How is your BONY horse?

ரசிச்சேன்:-)))))

Thekkikattan|தெகா said...

கப்பி,

//இந்த பதிவுலயே ப்ரக்ஞை நெறய தடவ எட்டிப்பார்த்துடுச்சே :)))//

இப்படி என்ன கூப்பிட்டுவிட்டு தனியா பொலம்ப விட்டியலே :)

எந்தந்த இடத்தில எல்லாம் ப்ரக்ஞை எட்டிப் பார்த்துச்சுன்னு சொல்றது...

Thekkikattan|தெகா said...

பாலராஜன்கீதா,

You are very great in studying English very deeply.
:-)))//

முதல் வருகையா என் வீட்டுக்கு, வாங்க, வாங்க.

ஆமா, ஆமா ரொம்ப ஆழமான படிப்புத்தேன் அது :-))

Thekkikattan|தெகா said...

வாங்க டாக்டர்,

//beautiful narration காட்டான்ஸ்..கணக்கு என்றால் எல்லா புத்திசாலிகளுக்கும் எட்டிக்காய் தானோ.!//

நன்றி நன்றி... ஏதோ நம்மாள முடிஞ்சது உங்களை மாதிரி ஆட்களை கொஞ்சம் சிரிக்க வைச்சுப் பார்க்கிறது.

என்னது புத்திசாலியா... அப்படி இருந்தான் நான் ஏன்ன்ன்ன்ன்.... :-))

தருமி சார்,,,
என்ன மூன்றுமுடிச்செல்லாம்!!!//

என்னய தருமி சாரு, முடிச்சவிழ்க்க வைச்சுட்டாருங்க டாக்டரு... எல்லாத்தையும் கொட்டிப்புட்டேனே... ;-)

Thekkikattan|தெகா said...

வல்லியம்மா,

மன்னார்புரத்தில வெள்ளை மாளிகைனு ஒரு வீடு இருக்கும் இன்னும் இருக்கான்னு தெரிய வில்லை//.

அப்படியா. நான் கேள்விப் பட்டதே இல்லியே அப்படி ஒரு வீட்டை. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் அந்தப் பக்கம் தான் இருந்தோம்.

//நல்ல இடம். ரொம்ப சுவாரசியமா இருக்கு. சாதனை எட்டுனே போட்டு இருக்கலாம்.//

நன்றி வந்து படிச்சிட்டு பின்னூட்டமிட்டதற்கு. இன்னொரு பாகம் எட்டை எப்படியாவது தம் கட்டி படிச்சு முடிச்சுருங்கோ... :-)

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

hi, how are you?

How is your BONY horse?

ரசிச்சேன்:-))))) //

நீங்களுமா :-)), அதுக்காகத்தானே எழுதுனதே...

Bony horse is getting slimmer and slimmer... :-P

பி.கு: ஒரு நல்ல டீச்சருக்கு அழகு அப்படி ஒரு மாணவனோ அல்லது தெரிஞ்சவங்களோ வார்த்தை உச்சரிப்பு தப்பு செய்யும் பொழுது, அழக சொல்றமாதிரி சொன்ன எவ்வளோ நல்லா இருக்கும். எனக்கு நடந்த மாதிரி "நெருப்ப அள்ளிப் போடக்கூடாது."

Radha Sriram said...

அட மன்னார்புரமா?? எங்கூரு.... கல்லுகுழி பக்கத்துல......குமார் லாட்ஜ் தெரியலயே??ம்ம்ம்ம்ம்ம்

ரொம்ப சுவாரஸ்யமா போகுது....:):)

Thekkikattan|தெகா said...

Radha Sriram,

அட மன்னார்புரமா?? எங்கூரு.... கல்லுகுழி பக்கத்துல......குமார் லாட்ஜ் தெரியலயே??ம்ம்ம்ம்ம்ம்//

வாங்க புது விருந்தாடி. நீங்களும் நம்மூரு பக்கங்களா? கல்லுக்குழி தெரியாம போயிடுமா என்ன?

குமார் லாட்ஜ், அப்ப மன்னார்புரத்தில இருந்த ஒரே விடுதி அதான். ஜமால் கல்லூரிக்கு பக்கத்தில (கஜா நகர் பஸ் ஸ்டாப்).

வல்லிசிம்ஹன் said...

மன்னார்புரத்தில குமார் லாட்ஜை ஒட்டிப் பின்னாடி ஒரு பொட்டி கடை இருக்கும், அதற்கு நேர்செங்குத்தா போற ரோடு கல்லுக்குழி அனுமார் கோவிலுக்குப் போகும்.

அங்கதான் நாங்க 73லேருந்து 76 வரை இருந்தோம்.

தெ.கா நீங்க அப்பச் சின்னபிள்ளையா இருந்திருப்பீங்க...ராதா நீங்களும் கல்லுக்குழில இருந்தீங்களா.அட.

Related Posts with Thumbnails