Thursday, July 12, 2007

ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!!





நேற்று இறந்து போனவர்களின்

கல்லறையில்

காகிதப் பூக்களை

சொருகிவிட்டு

இன்று

நடந்து திரியும்

நாளைய "பயந்த" பிணங்கள்!!!

29 comments:

மங்கை said...

இப்ப தான் மீ த பஸ்ட் போடறதுக்கு சான்ஸ் கிடச்சு இருக்கு...

மண்டையில ஓங்கி அடிச்ச மாதிரி இருக்கு தெகா...

ஆமா...திடீர்னு எப்படி இப்படி?
ஏதாவது நிகழ்வு..இல்லைன்னா காட்சி?

Unknown said...

கவுஜ கவுஜ உங்கள எங்க கவுஜ சங்கத்துக்கு மெம்பரா சேத்துக்கரோம்

வவ்வால் said...

தெ.கா .

கல்லரைகளும் அழகாக இருக்கின்றன.
இந்த அழகை பார்க்காமலே எல்லாம் உள்ள போய்டாங்களே!

தருமி said...

கவுஜ .. கவுஜ .. ம்ம்..ம்..

et tu, theks !!!!!!!!!!

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

வணக்கம் தெகா!

இறந்துபோம் என்பதற்க்காக இயக்கத்தை நிறுத்த இயலாதே!

Thekkikattan|தெகா said...

மங்கை,

மண்டையில ஓங்கி அடிச்ச மாதிரி இருக்கு தெகா...//

அப்படித் நினைச்சதினாலேத்தான் இங்ஙன போடலாமின்னு கொண்டுவந்தேன்.

ஆமா...திடீர்னு எப்படி இப்படி?
ஏதாவது நிகழ்வு..இல்லைன்னா காட்சி? //

இது வந்து ஒரு inspirational கவுஜா. இன்னிக்கு காலையில வண்டி ஒட்டிக்கிட்டே வரும் பொழுது ஒரு பூக்கள்(ப்ளாஸ்டிக்) நிரம்பிய கல்லறைத் தோட்டத்தை பார்க்க நேர்ந்தது. அங்கு காக்கா, குருவிகள் கூட இல்லை, ஆனால் அழகோ அழகு!

நான் ஓட்டிக் கொண்டு வந்த சாலை ஒரு நால்வழிச் சாலை இரு மருங்கிலும், ஆனால், ட்ராபிக் நிரம்பி வழிகிறது. உடனே காட்டானுக்கு சிந்தனைப் பொறி தட்டியது, அது நிரம்பி வழிந்து இங்கு கவுஜாவாக உருவெடுத்தது. :-))

சிவபாலன் said...

தெகா,

வாழ்வில் வசந்தம் திரும்பிய பிறகுமா இன்னும் எரிக்கறதா இல்லை புதைக்கிறதா எனற பதிவின் தாக்கத்திலிருந்து வெளி வராமல் இருப்பது..

அநேகமா வரவேண்டியவங்க வந்து சொல்ல வேண்டியதை சொன்னால் கேட்பீங்க என்று நினைக்கிறேன்.

Thekkikattan|தெகா said...

கவுஜ கவுஜ உங்கள எங்க கவுஜ சங்கத்துக்கு மெம்பரா சேத்துக்கரோம்//

கடைசி கடைசின்னு நான் போட்ட இந்த கவுஜா உங்களின் உலகத் தரம் வாய்ந்த சங்கத்தில் என்னைய இனைத்துக் கொள்ளும் அளவிற்கு வந்து இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் பொழுது வைக்கோல் கொண்டு என் உடம்பை சொரிந்து கொள்ளத் தோன்றுகிறது... :-)))

குட்டிபிசாசு said...

கவுஜையப் பார்த்த பட்டினத்தார் கதை சம்பவம் ஞாபகம் வருது!

ஒரு இழவு வீட்டில் எல்லோரும் அழுது கொண்டு இருந்தனர். பட்டினத்தார் அவ்வழியே போகும்போது இதைப்பார்த்து சிரித்தார். அருகில் இருந்த ஒருத்தர் "பிணத்தை வச்சிட்டு எல்லாரும் மனம் வருந்திஅழுத்துட்டு இருக்காங்க; உனக்கு சிரிப்பா இருக்கா" என்று கேட்டார். "நாளை சாகப்போகும் இவர்கள் ஏன் இன்று இறந்தவரை கண்டு அழுகிறார்கள்" என்று பட்டினத்தார் பதில்மொழி கூறினார்.

Anonymous said...

கல்லறைகளைப் பூக்களால் நிரப்புவது என்பது மனித குலத்துக்கு மட்டுமே சாத்தியம்.

அங்கே காகிதப்பூக்களை சொறுகி விட்டு மரணத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாது திரிபவர்கள் நடைப் பிணங்களாக வாழ்பவர்கள் தான்.

Dear Thekkikattan, pls visit my new poem on my blog -
http://panithulligal.blogspot.com/

Thekkikattan|தெகா said...

வவ்வாலு,

கல்லரைகளும் அழகாக இருக்கின்றன.
இந்த அழகை பார்க்காமலே எல்லாம் உள்ள போய்டாங்களே!//

:-))) அது சரி...

துளசி கோபால் said...

காகிதப்பூக்களா?

எங்க பக்கம் நிஜப்பூக்கள்தான் வைக்கறாங்க.

ஆமாம்......... இவுங்களுக்காவது காகிதமோ/நிஜமோ எதோ ஒண்ணு கிடைக்குது.

நமக்கு? நோ ச்சான்ஸ்(-:

Thekkikattan|தெகா said...

தருமி,

நானே தான். திடீர் திடீர்னு இப்படி ஆகிடுது, டாக்டரிடம் சென்று ஆலேசிக்க வேண்டுமோ என்னமோ :-))

Thekkikattan|தெகா said...

டாக்டர்,

HELLO! WHAT HAPPENED TO YOU? என்னங்க ஆச்சு? நல்லாத்தான் இருக்கு கவிதை.. //

திடீர்னு இப்படி ஆகிடுச்சு... என்னான்னு தெரியலை :-))

பராட்டுதலுக்கு நன்றிகள்!

Thekkikattan|தெகா said...

பாரி,

இறந்துபோம் என்பதற்க்காக இயக்கத்தை நிறுத்த இயலாதே!//

இந்த இடைப்பட்ட இயக்கத்தில்தான் எவ்வளவு "சுய நினைவுடன்" வாழ்ந்திருக்கிறோமென்பது அவசியமாகிறது அல்லவா, பாரி. உங்களின் "மீனா, பைத்தியக்காரியா?" பதிவில் இருந்த மீனா உருவாகியிருக்க வாய்ப்பு இருந்திருக்காதில்லையா, அந்த ஊர் கிராமத்து வாசிகள் கொஞ்சம் "mindfulness"வுடன் வாழ்ந்திருக்கும் பட்சத்தில்...??

Anonymous said...

அருமையான கவிதை...!!!!!

Thekkikattan|தெகா said...

Siva,

வாழ்வில் வசந்தம் திரும்பிய பிறகுமா இன்னும் எரிக்கறதா இல்லை புதைக்கிறதா எனற பதிவின் தாக்கத்திலிருந்து வெளி வராமல் இருப்பது...//

அது எப்படி மறக்க முடியும் :-P

அநேகமா வரவேண்டியவங்க வந்து சொல்ல வேண்டியதை சொன்னால் கேட்பீங்க என்று நினைக்கிறேன்.//

என்னாத்தை சொல்லப் போறாங்களோ, என்னவோ ;)

வெற்றி said...

நல்ல கவிதை. கருத்துக்கள்.

Thekkikattan|தெகா said...

குட்டி'ப்பிசாசு,

"நாளை சாகப்போகும் இவர்கள் ஏன் இன்று இறந்தவரை கண்டு அழுகிறார்கள்" என்று பட்டினத்தார் பதில்மொழி கூறினார்.//

யம்மாடி, பட்டினத்தார்னு சொல்லி பயமெல்லாம் படுத்துறீங்க. ஆமா, எங்கேங்க பிடிச்சீங்க உங்கப் பெயரை ;-))

நான் பட்டினத்தார் எல்லாம் இன்னமும் படிச்சதில்லீங்க... இனிமே தான் ஆரம்பிக்கணும், ஏதாவது ஒரு கால கட்டத்தில.

காட்டாறு said...

//இன்று

நடந்து திரியும்

நாளைய பிணங்கள்!!!
//


//நான் ஓட்டிக் கொண்டு வந்த சாலை ஒரு நால்வழிச் சாலை இரு மருங்கிலும், ஆனால், ட்ராபிக் நிரம்பி வழிகிறது. உடனே காட்டானுக்கு சிந்தனைப் பொறி தட்டியது, அது நிரம்பி வழிந்து இங்கு கவுஜாவாக உருவெடுத்தது. :-)) //

ஏனுங்க நீங்க கார்ல தானே போனென்னு சொன்னீங்க... உதைக்குதுங்க.

Thekkikattan|தெகா said...

ஏனுங்க நீங்க கார்ல தானே போனென்னு சொன்னீங்க... உதைக்குதுங்க.//

காட்டாறு,

யாரோ ரெகமெண்டேஷனில் வந்து இப்படி படிச்சிட்டு "உதைக்குதுன்னு" சொல்லி என்னைய உதறல் எடுக்க வைச்சிட்டீங்களே... ;-))

இருங்க நான் யார்கிட்டயாவது கேட்டுட்டு வந்து உங்கட கெளவிக்கு பதிலு கொடுக்கறேன்...

காட்டாறு said...

//Thekkikattan|தெகா said...
யாரோ ரெகமெண்டேஷனில் வந்து இப்படி படிச்சிட்டு "உதைக்குதுன்னு" சொல்லி என்னைய உதறல் எடுக்க வைச்சிட்டீங்களே... ;-))

இருங்க நான் யார்கிட்டயாவது கேட்டுட்டு வந்து உங்கட கெளவிக்கு பதிலு கொடுக்கறேன்...
//

நாகேஷ் வசனம் தான் ஞாபகத்துக்கு வருது.... யாராவது சபைல எழுதி தந்ததையா வாங்கி வந்திருக்கேன்... எனக்கு வேணும்.. எனக்கு வேணும்...

சந்தேகம் வலுப்படுதுங்கோவ்.... உங்க கிட்ட கேள்வி கேட்டா... யார்கிட்டையாவது பதில் கேட்டு எழுதுறேன்னு சொல்றீங்களே.... இது நீங்க எழுதின பதிவு தானுங்களே...

சபையோரே! இங்க என்ன நடக்குது... கவனிங்கோவ்...

Thekkikattan|தெகா said...

சபையோரே! இங்க என்ன நடக்குது... கவனிங்கோவ்...//

ஏற்கெனவே திருச் சபையெல்லாம் கூட்டி பரிசும் வாங்கியதற்குப் பிறகே தாமதமாக வந்து அப்படி அறிவு'ச் சுடர் தெரிக்கும் சந்தேகத்தை எழுப்பியதால், மண்டபத்தில் சுட்டுக் கொடுத்தவர் கவலைப் பட தேவையில்லை, பொற்காசுகள் என்னிடத்தில்தான் இருக்கும் என்று அடித்துக் கூறி விட்டார்...

(பாக்யராஜும், ஷோபனாவும் பரிசுக்கு போட்டி போட்டுக் கொண்டு பாடியது போன்ற காட்சி நினைவுக்கு வருகிறது)

மங்கை said...

என்னிடத்தில் தான்னா....யாரிடத்தில்.

சுட்டவர் கிட்டவா... மண்டபத்தில இருந்தவர் கிட்டவா

Thekkikattan|தெகா said...

நவன்,

நன்றி! எப்படி இருக்கீங்க, உங்க ஈமெயில் ஐ.டி கொஞ்சம் கொடுக்கிறீங்களா, சமயம் கிடைக்கும் பொழுது.

பனித்துளி பக்கமும் வந்துட்டு வந்தேனே...

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

காகிதப்பூக்களா?

எங்க பக்கம் நிஜப்பூக்கள்தான் வைக்கறாங்க.//

என்னங்க இப்படி ஆச்சர்யமாக கேக்றீங்க, காகிதப்பூக்களான்னு, அதான் ப்ளாஸ்டிக் பூச்செண்டுகளைத்தான் நான் அப்படி குறிப்பிட்டு இருக்கிறேன்.

பரவாயில்லையே உங்களூரில் மக்களுக்கு கல்லறை அவ்வப்பொழுது சென்று உண்மைப் பூவும் வைக்க நேரமிருக்கிறதா, ஆச்சர்யம்தான்.

ஆமாம்......... இவுங்களுக்காவது காகிதமோ/நிஜமோ எதோ ஒண்ணு கிடைக்குது.

நமக்கு? நோ ச்சான்ஸ்(-: //

அதச் சொல்லுங்க :-)) எரிச்சமா, சாம்பல காத்துலயோ, தண்ணீரிலேயோ தெளிச்சமான்னு முடிஞ்சது கதை. இன்னும் சில கேசுகள் இருக்கு நம்மூர்ல; வருஷ வருஷம், பால் பாயாசமும், வடையுமா பட்டையை கிளப்பும். இருக்கும் பொழுது பாவம் அந்த (இறந்து போன) ஆளு ஆளா பரந்திருப்பான் பால் பாயாசத்திற்கு அவருக்கு அப்ப கிடைச்சிருக்காது, இப்ப பால் பாயாசம் :-))

Thekkikattan|தெகா said...

செந்தழல் ரவி, மற்றும் வெற்றி அவர்களே வருக வணக்கம் :-)

நன்றிகள் பல!!

சாலிசம்பர் said...

//பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி

முத்தும் பவளமும் பூண்டு ஓடி ஆடி முடிந்த பின்பு

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச்சாம் பிணங்கள்

கத்துங் கணக்கென்ன?காண்கயிலாபுரிக் காயித்தியே!//

பட்டினத்தார்

குட்டிப்பையா|Kutipaiya said...

:) nachchu'nu iruku

Related Posts with Thumbnails