Saturday, July 28, 2007

தண்ணியடிச்சா *கொசு* அதிகமா கடிக்குமா!!

நம்மளும் இந்த கொசு கடியில இருந்து தப்பிக்க என்னவெல்லாமோத்தான் செய்து பார்க்கிறோம். ஆனால், அவைகள் விட்ட பாடு இல்லையே. கும்மிருட்டாக இருந்தாக் கூட கூடி வந்து சிம்பொனி போட்டு ரசிச்சு கடிக்கிதுக.

எப்படி இந்த கொசுக்கள் மிகச் சரியாக நம்மள இருட்டுக்குள் கண்டுபிடிச்சு கடிக்குதுங்க அப்படின்னா, இங்க நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்கும் இருந்தாலும் ரெண்டு வரிகளில் சொல்லிப் புடுவோம். நம்ம உடம்புச் சூட்டை வைத்தும், சுரக்கும் லாக்டிக் அமிலத்தைக் கொண்டும், கரியமிலாவாயுவைக் கொண்டும் இந்த குட்டி ஹெலிகாப்டர்கள் மிகச் சரியாக நம்மீது குறி வைத்து தரையிறங்குகிறதாம்.

பொதுவாக நம்மிடத்தெ ஒரு ஆசை இருக்கலாம், ஏதாவது வாசத்தை வைத்து இவைகளை விரட்டியடிக்க முடியாதா அப்படின்னு. இந்த முறை எனது ஊருக்கு போயிருந்த பொழுது ஒரு முறை கரண்ட் போயிவிட்டது, இரவு நேரம் தூங்க முடியாத அளவிற்கு புழுக்கம், கொசுக்களின் தொல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. நானும் ஆராய்ச்சியில் இறங்கி விட்டேன். எனக்கு கிடைத்தது, பாண்ட்ஸ் ட்ரிம் ஃப்ளவர் டால்கம் பவுடர்தான். உடம்பு முழுக்க விபூதிச் சாமீயார் மாதிரி அள்ளி அப்பிக் கொண்டு தூங்க முயற்சித்தேன். ஆனால், எனது ஆராய்ச்சி தோல்வியில் முடிவடைந்தது. எல்லோரையும் சிரிக்க வைத்ததுதான் மிச்சம் :-).

ஆனால், இன்னும் கொஞ்சம் விபரமறிந்தவர்கள் பூண்டு(Garlic) நிறைய சாப்பிட்டா கொசுக்கள் கிட்ட நெருங்காதுன்னு நம்பியிருக்காங்க. அப்படி யாராவது நம்பின மக்கள் இங்க இருக்கீங்களா? இருந்தா, உங்களுக்குத்தான் இந்தப் பதிவு.

சரி இது எந்தளவிற்கு உண்மைன்னு தெரிஞ்சுக்கணுமில்லையா, அதற்காக கனெடிகட் பல்கலை கழகத்தில உள்ள உடல் சுகாதார மையத்தில ஒரு ஆராய்ச்சி நடத்தி இருக்காங்க. நம்ம கூட செஞ்சுப் பார்த்திருக்கலாம். அவ்வளவு ஈசியான செய்முறை.

ஒரு குரூப் மக்களுக்கு நிறைய பூண்டுகளை சாப்பிடக் கொடுத்திருக்காங்க, இன்னொரு குரூப்க்கு அது மாதிரியே இருக்கிற பூண்டு இல்லாத(placebo) விசயத்தை சாப்பிட வைச்சுட்டு, அவங்க ரெண்டு பேரையும் கொசு கடி வாங்க விட்டு ஒப்பீட்டு பார்த்தப்ப ஒரு வித்தியாசமுமில்லையாம். இதில இருந்து பூண்டுக்கும் கொசு கடிக்கும் சம்பந்தமில்லைன்னு தெரிஞ்சுக்கிட்டாச்சு.

ஆனா, பாருங்க தண்ணி அடிச்சிருந்தோமின்ன அன்னிக்கு நம்ம சுத்தியும் சிம்பொனி அதிக மிருக்குதாம் :( அதே போன்ற இரண்டு குரூப் மக்களை வைச்சு ஆராய்ச்சிப் பண்ணப் பட்ட போது இது தெரிய வந்திருக்கு. அப்ப நம்மூர்ல சொல்லவே வேண்டியதில்லை. கொசு கடியை மறந்து நிம்மதியா தூங்க, கொஞ்சம் நாக்கில தடவிக் கிட்டு படுத்தா, அவருதான் நல்லா சாப்பாடு நிறைய பேருக்கு அன்னிக்கு இரவு போடப் போறார்னு வச்சிக்க வேண்டியதுதான்.

14 comments:

Thekkikattan|தெகா said...

பி.கு: அப்படி தண்ணி அடிப்பவர்களுக்கும் சிம்பொனி நடத்துபவர்களுக்கும்(கொசுக்களுக்கும்) என்ன தொடர்பு இருக்கிறது என்பது சரிவரத் தெரியவில்லையாம்.

செந்தழல் ரவி said...

லேடீஸை குறிவெச்சு கடிக்கும் அப்படீன்னு சொல்றது உண்மையா ?

அதுக்கு ஆம்பிளை பொம்பிளை வித்யாசம் பார்க்க தெரியுமா ?

Thekkikattan|தெகா said...

ரவி, எங்கயும் போயிடாதீங்க அங்கேயே இருங்க. விடிஞ்சதும் நம்ம நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குவோம்.

ஒரு நண்பி சொல்றாங்க, கொஞ்சம் குண்டாக இருந்தால் அதிகமான கொழுப்பு இருப்பதால் உடல் வெப்பத்தை அதிகமாக சுற்றி விடுகிறது, அதன் பொருட்டு கொசுக்கள் அதிகமாக நெருங்கி வருவதற்கு அடிகோனலாம் என்று கூறுகிறார். :-P

delphine said...

தெகா . எதுக்கு இதர்கெல்லாம் ஆரய்ச்சி? நம்ம ஊரு மாடத்தில இருக்குமே துளசி துளசி... அதை எடுத்து உடம்பில நல்ல தேய்த்து விட்டு படுத்துக்கோங்க..கிட்ட நெருங்காது.. ஆமா.. தண்ணீ அடிச்சா.. அதற்கும் மயக்கம் வந்து தூங்கிபோய்விடும்.. இது தெரியாதா..

Anonymous said...

மட்டன்குனியா கொசு

எங்களை யாரும் ஒன்னும் பண்ணமுடியாது!!! வேணும்னா அச்சுதானந்தனையும் அன்புமணியையும் கேட்டுப்பாரு!!!

பத்மா அர்விந்த் said...

It also depends on pheromones that are secreted in the bdy. It varies individual to individual. I am not sure it has more attraction to female phermones than male, but with in each sexuality there is variation.

Thekkikattan|தெகா said...

டாக்டர்,

தெகா . எதுக்கு இதர்கெல்லாம் ஆரய்ச்சி?//

ஏதாவது நம்ம புச்சா கண்டுபிடிச்சு அதுவும் வேலை செய்யப் போயி, அதிர்ஷ்டகாரங்களா ஆயிடுவோமான்னுதான்... ஒரு patent வாங்கிப் போட்டுடலாமில்லையா, அதான் :-P

நம்ம ஊரு மாடத்தில இருக்குமே துளசி துளசி... அதை எடுத்து உடம்பில நல்ல தேய்த்து விட்டு படுத்துக்கோங்க..கிட்ட நெருங்காது..//

இது நான் செஞ்சுப் பார்த்திருக்கேன் கொத்து கொத்தா துளசி அப்புறம், அந்த தும்பைமேனிச் செடி இருக்கில்ல அதனையும் வைச்சு நான் சின்னப் பையனாக இருக்கும் பொழுது. எனக்கு இப்ப ஞாபகமில்லை அது எந்த அளவிற்கு வேலை செய்ததுன்னு. திரும்பவும் செஞ்சுப் பார்க்கணும்கோவ்வ்...

ஆமா.. தண்ணீ அடிச்சா.. அதற்கும் மயக்கம் வந்து தூங்கிபோய்விடும்.. இது தெரியாதா..//

இது ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான விசயம், நேத்துதான் நாங்க இதனைப் பத்தி பேசி சிரிச்சுட்டு இருந்தோம். அப்படி இரத்தத்தில் அல்ஹகால் அளவு அதிகரிக்கும் பொழுது, இந்த கொசுத் தம்பி அதனை உண்டவுடன் அவரும் ஹிக்கில மிதப்பார இல்லையான்னு :-))

வவ்வால் said...

தெ.கா.,

தண்ணிஅடிப்பவர்களை கொசு அதிகம் வேட்டையாடுவது ஏன் எனில் முதலில் அவர்களிடம் தான் எதிர்ப்பு குறைவாக இருக்கும்.கடிக்கும் கொசுவை திருப்பி அடிக்க கூட தோன்றாமால் தேமே என்று கிடப்பார்கள்!

இரண்டாவது, வியர்வை நாற்றம் , உடல் வெப்பம் இதை வைத்து தான் கொசு இரவில் தனது வேட்டையை அறியும், தண்ணி அடிப்பதால் தோளுக்கு வரும் நுண்ணிய ரத்தக்குழாய்கள் விரிவடையும் அதிக ரத்த ஓட்டம் அங்கு நிகழும் எனவே அதிகம் வேர்க்கும், மேலும் உடல் சூடு அதிகம் ஆகும். எனவே தான் குளிர் பிரதேசங்களில் தண்ணி அடிக்கிறார்கள்.உடலை சூடாக்க. ராணுவம் கூட வீரர்களுக்கு மது தருவதும் அதனால் தான்.

பத்மா அரவிந்,

எறும்பு ,கொசு இவை சுரப்பது தான் பெரோமோன்கள் மனிதன் சுரந்தால் அது ஹார்மோன்கள், எனவே மனிதனிடம் பெரோமோன்கள் இல்லை.

Thekkikattan|தெகா said...

பாட்மேன்,

தண்ணி அடிப்பவர்களை கொசு அதிகம் வேட்டையாடுவது ஏன் எனில் முதலில் அவர்களிடம் தான் எதிர்ப்பு குறைவாக இருக்கும்.கடிக்கும் கொசுவை திருப்பி அடிக்க கூட தோன்றாமால் தேமே என்று கிடப்பார்கள்!//

இது சூப்பர்ப்ங்க, அசத்தல். லாஜிக்கலா நிறைய அதில யோசிக்க வேண்டி இருக்குது. நீங்க சொல்றதை கண்டிப்பாக (behavioral stand point of view of mosquito) கொசுக்களின் கற்றறியும் திறனில் சேர்த்துக் கொள்ளத்தான் வேணும். வாங்க ஒரு அறிவியல் பேப்பர் எழுதலாம். :-))

எறும்பு ,கொசு இவை சுரப்பது தான் பெரோமோன்கள் மனிதன் சுரந்தால் அது ஹார்மோன்கள், எனவே மனிதனிடம் பெரோமோன்கள் இல்லை. //

வவ்ஸ், நானும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, பாருங்க இந்த குரங்குகளின் இனப்பெருக்க சீசனில் புட்டமோ, அல்லது முகமோ நிறம் மாறி சமிக்கை அனுப்புறது பிறகு மற்ற பாலூட்டிகளில் இந்த sniffing behavior இதனை எல்லாம் வைச்சுப் பார்க்கும் பொழுது நம்மையும் அறியாது, நம் மீது சுரக்கும் ஒரு விதமான ஃபெரோமோன்கள்தான் முதலில் நம்மை ஒருவரிடத்தே ஈர்ப்பு கொள்ள வைக்குதுன்னு நான் நினைக்கிறேன். :-P

மனிதனில் ஃபொரோமோன்கள் உண்டு என்பதனை 1970களில் ஆராய்சிகளின் மூலம் நிரூபிச்சு இருக்காங்கலாம்... அதிலிருந்து இங்கே கொஞ்சம்...

....It’s not his or her eyes and it’s not his or her smile - it’s human pheromones at work.

Human pheromones are gender specific, naturally occurring substances that trigger specific “mating” responses. Most importantly, only a human pheromone can trigger a response in humans.

Although claims of discovering a human pheromone are not new, the older claims have not been based on controlled experiments and most scientists have not found the arguments persuasive. The new findings are to be published next month in Hormones and Behavior, a prestigious, peer-reviewed scientific journal.

"I think we've finally answered the question. Pheromone effects are real in human beings..." said George Preti, who collaborated on the research...with Winnifred B. Cutler. ***Cutler is an authority on the relationship between sexual behavior and hormones...*** Although the pheromone findings are new and have not previously been reported, the evidence of a link between heterosexual behavior and women's reproductive physiology has been published, with little public notice, in a series of reports over the last eight years in various scientific journals.

"It's remarkable. A very clear pattern has been emerging and it confirms that a woman's optimal reproductive health is a part of a finely tuned system and that a man, on a regular and sustained basis, is an essential part of it," said Cutler, who has led the research effort.

"It wasn't clear until our most recent studies how important male essence really is," she said, "but now that we know this, it helps to explain our earlier findings. You might say that exposure to pheromones is the essence of sex." .... ....


ஆகா, இது நல்ல டாபிக்கா இருக்கே, நன்றி வவ்வால் இந்த லைனில் கொஞ்சம் எடுத்துட்டுப் போனதுக்கு...

வவ்வால் said...

ஹி ...ஹி தெ.கா . எனக்கு சொல்லிகொடுத்த வாத்தியார் விலங்குகள் பூச்சிகளுக்கு பெரொமோன் சுரக்கும் , மனிதனுக்கு ஹார்மோன் சுரக்கும் அப்படினு சொல்லி கொடுத்தார் அதான் நானும் தெம்பா சொல்லிட்டேன். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபுடிச்சத எல்லாம் பசங்களுக்கு சொல்லி தர மாட்டன்கிறாங்க நம்ம ஊர்ல!

எறும்புலாம் வரிசையாக போகிறதுக்கு காரணம் பெரோமோன் தான்னு படிச்சு இருக்கேன் , தேனீக்களும் பெரோமோன் வெளியிடும் என்று படித்துள்ளேன்.அதுக்குலாம் வகைப்படுத்தி பேரு வச்சு இருக்காங்க , மனிதனின் பெரோமோன்க்கும் பேரு வச்சு இருக்காங்களா?

பத்மா அர்விந்த் said...

theka,
Hormones are very different than pheromones. Perfume industry is trying very hard on this kind of reserach. If I can get some links later today, will update you. In fact there were discussions that similar to animal pheromones , human have same secretions, and also discussion relating to them with opposite sex attractions. There were discussions in USA today and wahsington post in early 90s on this very topic.

Thekkikattan|தெகா said...

பத்மா அர்விந்த்,

I am not sure it has more attraction to female phermones than male, but with in each sexuality there is variation. //

கொசுக்களில் எவ்வளவுதான் ஆராய்ச்சி செய்தாலும், அந்த ஏரியா இன்னமும் ஒரு ஆர்வத்தை தூண்டக் கூடியாதாகவே உள்ளது.

ஆமாம், பால்களுக்கிடையே (within genders) வித்தியாசம் இருக்கத்தான் செய்யும் கண்டிப்பாக.

விலக்குகளின் உலகில் கீழ் கண்ட விசயங்களுக்கென தனித்தனியாக இந்த ஃபொரோமோன்கள் இருக்கும் பொழுது நமக்குள்ளும் இருக்கத்தான் செய்ய வேண்டுமென்பது என்னுடைய எண்ணம்...

......Types of Pheromones

Aggregation is the name for the type of Pheromones that attracts other humans.

Alarm is the name for the type of Pheromones that is released and trigger a sense to run or a sense to fight. These are often referred to as fight or flight pheromones.

Territorial is the name for the type that mark a living things territory. This is probably most recognized in dogs.

Trail is the name for a type mainly used by insects to set a path for others to follow.

Sex is the name for the best known type and they signal attraction and in some species breeding.....

sam said...

போர்வைக் கலரை மாற்றிவிட்டால் கொசுவை ஏமாற்றலாமாமே.. அப்டியாங்க...

Thekkikattan|தெகா said...

sam,

போர்வைக் கலரை மாற்றிவிட்டால் கொசுவை ஏமாற்றலாமாமே.. அப்டியாங்க...//

முன்பொரு முறை எனக்கு இது எந்த 'சாம்' என்பதில் கொழப்பம் வந்தது, அது போன்றே இப்பொழுதும் வந்தது...

இயற்கையான நிறங்களை பயன்படுத்தினால் கொசுக்களின் படையெடுப்பிலிருந்து தப்பிக்கலாமாம், உ.தா. காக்கி நிறம். நன்றாக பளிச் சென்று இருக்கும் நிறங்கள் கொசுக்களை அதிகம் கவர்கிறதாம்.

ஆனால், இதுவே இரவு நேரங்களில் கும்மிருட்டில் என்ன நிறம் அணிந்து, போர்த்தி கொண்டிருந்தால் அவர்களுக்கென்ன... :-)

Related Posts with Thumbnails