Wednesday, July 18, 2007

*சுன்னத்* முறை: Circumcision Re-Considered!!!

சுன்னத்(circumcision) செய்வது என்பது மதச் சடங்காகவும், மருத்துவர்களின் சில வித நோய்களை தீர்க்கும் தீர்வாகவும் நடை பெற்று வருவது யாவரும் அறிந்ததே. ஆனால், தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும், பரவலாக சில தென் அமெரிக்கா மற்றும் ஆஃப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகளிலும் அவ்வளவாக அமுலில் இல்லை.

இப்பொழுது வளரும் நாடுகளில் இது போன்ற சுன்னத் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் பெருமளவிற்கு குறைய ஆரம்பித்திருப்பதாக செய்திக் குறிப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது. உதாரணத்திற்கு, 1960களில் அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளில் மட்டும் 90 சதவீத குழந்தைகள் சுன்னத் முறையை தழுவ நேர்ந்ததாம். ஆனால் அது அண்மைய காலங்களில், அதாவது 2000ங்களில் அதுவே 50 சதவீதமாக குறைந்து போனதாம்.

என்ன காரணமாக இருக்கும் என்றால், இந்த சுகாதார ரீதியாக நம்பப் பட்ட அதாவது சுன்னத் செய்து கொள்வதின் மூலமாக தவிர்கப்படும் புற்று நோய், சிறுநீரக தொற்று வியாதிகள், எய்ட்ஸ் மற்றும் பாலியல் தொடர்பான மற்ற நோய் தாக்கத்தினை குறைத்துக் கொள்ள வழி வகை செய்வதாக நம்பப்பட்டது. இன்னமும் சில மருத்துவர்கள் இதனை முன் மொழிகிறார்களாம்.

இது இப்படி இருக்க, இப்பொழுது அன்மைய மருத்துவ ஆய்வுகள் இது போன்ற மருத்துவ காரணங்கள் சரியான படி முழுதுமாக ஏற்றுக் கொள்ள தக்க வகையில் இல்லை எனவும், அது போன்ற மேற் சென்ன சுகாதார விசயங்கள் சுன்னத் செய்யப் பட்டவர்களுக்கும், பண்ணப் படாதவர்களுக்கும் எந்த பாகுபாடுமில்லாமலேயே வியாதியால் பீடிக்கப் படுகிறார்கள் என்று அந்த ஆய்வாரிக்கை இந்த சுன்னத் முறையின் நம்பகத் தன்மையை கேள்வியில் ஆழ்த்தியிருக்கிறது.

இதன் பொருட்டு இப்பொழுதைய பொற்றோர்கள் தனது குழந்தைகளுக்கு பிறந்தவுடனேயே இப்படி ஒரு வலியூனுடே அங்க இழப்பு செய்ய நிர்பந்திப்பது இயற்கைக்கு முரணானது என்று தவிர்த்து வருவதாகவும் அவ்வறிக்கை சுட்டுகிறது.

எனக்கு என்ன தோனுதுன்னா இதில வேற ஏதாவது ஏடா கூடமா வெவரம் தெரிஞ்சவுங்க இந்த சுன்னத் முறையை மதங்களின் ஊடாக வைச்சு தைச்சு அமுல் படுத்தியிருப்பாங்களோ முன்னமேன்னு. ஆனால், சில ஹாஸ்பிடல்களில் இங்க அமெரிக்காவில் தாய்பாலுக்குப் பதிலாக புட்டிப் பால் கொடுப்பதை மருத்துவர்களே அங்கீகரிக்கும் வண்ணம் ஊக்குவிப்பதும் ஒரு வித வியபாரத் தந்திரமே (i.e., promoting the sales of formulas).

அது போல அன்மைய காலங்களில் இந்த குழந்தைகளை துன் புறுத்தும் சுன்னத் முறை இதுக்கு மேலும் கடைபிடிப்பது ஹாஸ்பிடலுக்கு வேண்டுமானல் ஒரு துண்டு பில் போட உதவலாம் போல. அதுவும் இந்த ஆய்வறிக்கையின் ஊடாக காணும் பொழுது. அப்படியா?பி.கு: Removes the Most Sensitive Parts <=== இந்த பக்கத்தில் படிக்க வேண்டி நிறைய இருக்கிறது.
......Circumcision Removes the Most Sensitive Parts of the PenisA sensitivity study of the adult penis in circumcised and uncircumcised men shows that the uncircumcised penis is significantly more sensitive. The most sensitive location on the circumcised penis is the circumcision scar on the ventral surface. Five locations on the uncircumcised penis that are routinely removed at circumcision are significantly more sensitive than the most sensitive location on the circumcised penis.In addition, the glans (head) of the circumcised penis is less sensitive to fine touch than the glans of the uncircumcised penis. The tip of the foreskin is the most sensitive region of the uncircumcised penis, and it is significantly more sensitive than the most sensitive area of the circumcised penis. Circumcision removes the most sensitive parts of the penis. This study presents the first extensive testing of fine touch pressure thresholds of the adult penis. The monofiliment testing instruments are calibrated and have been used to test female genital sensitivity.
Sorrells, M. et al., “Fine-Touch Pressure Thresholds in the Adult Penis,” BJU International 99 (2007): 864-869.....

57 comments:

Thekkikattan|தெகா said...

An inspirational article, thanks: Little India.

Anonymous said...

இது யுதர்களிடம் முதலில் ஏற்பட்ட பழக்கமாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகம் கிடைக்காத பாலைவனச் சூழ்நிலையில்
சுகாதாரத்திற்காக இதை அறிமுகப் படுத்தியிருக்கலாம். இவர்களிடம் பன்றி மாமிசம் சாப்பிடும் பழக்கமும் கிடையாது.
நன்றாகச் சமைத்தாலும், எளிதில் போகாத பன்றியின் உடலுக்குள் வளரும் கேடு விளைவிக்கும் புழுதான்
Pig tape worm (Taenia solium) இதற்குக்
காரணம். இந்தப் பழக்கமெல்லாம் காரணமில்லாமல் ஆரம்பமாகவில்லை. இன்று இது எல்லாருக்கும் தேவையா
என்பதை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும்

delphine said...

circumcision definitely brings down the cervical cancer rate in women. it does bring down a lot of urinary related infection in men. theres nothing religious here தெ.கா. ..

Anonymous said...

THERE SITE ABOUT SUNNATH MARRIAGE (அதாங்க சுன்னத் கல்யாணம்)

http://www.circumcision.org/

கோவி.கண்ணன் said...

மனித உடலில் இயற்கையாக அமைந்துள்ள உறுப்புக்களில் வெட்டினால் வளரக்கூடியது... வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்பதால் முடியையும், நகத்தையும் அசவுகரியம் காரணமாக அகற்றுகிறோம். முந்தோல் எனப்படும் ஆண் உறுப்பின் பகுதி அந்த வகையைச் சேர்ந்ததல்ல என்பது என்கருத்து.

தினமும் குளிக்கிறோம் கூடவே அதை பின்னுக்கு தள்ளி சுத்தப்படுத்துவது சிரமான காரியமே இல்லை. எல்லோரும் அந்த பகுதியில் சோப்பு அங்குதான் அதிகமாக பயன்படுத்துகிறோம் என நினைக்கிறேன். வெகு குறைந்த எண்ணிக்கையில் மிகச்சிலருக்கே முந்தோல் மிகச் சுறுங்கி பின் தள்ள முடியாத அளவுக்கு இருக்கும். அவர்களுக்கு முந்தோல் (foreskin) நிக்குதல் மருத்தவ ரீதியாகவும் நலம் பயக்கும், மற்றவர்களுக்கு ஆண் குறியின் மொட்டு எனப்படும் முன்பகுதி மென்மையையும் காப்பாற்றி உணர்வு குன்றாமல் வைத்திருக்க முந்தோல் பயனளிப்பாதற்காகவே இயற்கையாக அமைந்திருக்கிறது.

ஆப்பிரிக்க பழங்குடியினரில் பெண்களுக்கும் இத்தகைய 'சுன்னத்' நடைபெறுகிறது என்று படித்து இருக்கிறேன். ஏதாவது தெரியுமா தெகா ?

குலவுசனப்பிரியன் said...

ஓஷோ சொன்ன சில விடயங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. யூதர்கள் தங்களுடைய அறிவுக் கூர்மைக்கு சுன்னத் ஒருகாரணம் என்கிறார்கள். எப்படி என்றால், மூளையில் சிந்தனை செய்யும் மையமும் பால்-உணர்வு மையமும் அருகருகே உள்ளதால், சுன்னத் மூலம் மூளையின் பால்-உணர்வு மையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்போது சிந்தனை மையமும் தூண்டப்படுகிறது. அந்தத் தூண்டுதல் சிந்தனை சக்தியை நிரந்தரமாக வலுவாக்குகிறது. ஆனால் மூளையின் மையங்கள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளை தங்களின் பழமையான வழக்கத்திற்கு ஏரணம் கற்பிக்கிறார்கள் என்பார். மேலும் பெண்களுக்கு சுன்னத் செய்யாததுதான் ஆண்களைவவிடவும் அவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என்ற யூதர்களின் மூட நம்பிக்கையையும் சொல்வார்.

Dr. Richard Feynman-இன் "Surely you are joking Mr.Feynman" புத்தகத்தில், அவருடைய அப்பாவின், " பெண்கள் ஒருபோதும் முனைவர் பட்டம் பெறமாட்டார்" என்ற நம்பிக்கையை தன் தங்கை உடைத்தெறிந்து முனைவரானதை சொல்வார். அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கருத்தில் கொண்டு, சுன்னத்திற்கும் அறிவுத்திறனுக்கும் சம்பந்தம் இல்லை என்று முடிவுகட்டலாம்.

சுல்தான் said...

ஆமாம்!. யூத மதம் வருவதற்கு முன், யாரோ ஒரு டாக்டர் அல்லது டாக்டர்களின் ஒரு குழு, தீவிரமாக ஆய்ந்து, அவர்களின் வருமானத்திற்காக, அதை அந்த மதத்தினுள் சேர்த்திருக்கலாம். அதை பின்னாளைய ஆபிரகாமிய மதங்கள் பின்பற்றி யிருக்கலாம்.!!!!! )))))))))))))))

நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். கேட்பது யார்????????? ))))))))))))))

நல்லடியார் said...

நண்பரே,

ஆய்வறிக்கையின் சுட்டியைத் தரமுடியுமா?

Thekkikattan|தெகா said...

அன்பர்களே,

யாரும் உணர்ச்சி வசப்பட்டு கொந்தளிக்க வேண்டாம். இது வெறும் மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரையில் வந்ததை இங்கு கொண்டு வந்தது மட்டுமே என் பங்கு.

இருப்பினும் எல்லோரும் தன்னுடைய பார்வையை இங்கு வைக்கும் முன்பாக, இந்த சுட்டியில் அமர்ந்து ஒரு நடை அது போன்ற ஆய்வறிக்கைகள் என்ன கூற வருகின்றன என்பதனை அறிந்து கொள்ளவும்.

http://www.circumcision.org/studies.htm <=== இந்த பக்கத்தில் படிக்க வேண்டி நிறைய இருக்கிறது. முடிந்தால் யாராவது தமிழில் மொழி பெயர்த்தும் போடலாம்.

மேலும் லிட்டில் இந்தியாவில் ஹெல்த் என்ற தலைப்பின் கீழே இது சம்பந்தமாக காணப்படலாம்... www.littleindia.com

Thekkikattan|தெகா said...

வாங்க டாக்டர்,

நீங்க சொல்றபடிதான் நானும் ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை நம்பியிருந்தேன். ஆனால் பாருங்க இங்க இப்படி சொல்றாங்க..

...Poll of Circumcised Men Reveals Harm

A poll of circumcised men published in the British Journal of Urology describes adverse outcomes on men’s health and well-being. Findings showed wide-ranging physical, sexual, and psychological consequences. Some respondents reported prominent scarring and excessive skin loss. Sexual consequences included progressive loss of sensitivity and sexual dysfunction. Emotional distress followed the realization that they were missing a functioning part of their penis. Low-self esteem, resentment, avoidance of intimacy, and depression were also noted.

Hammond, T., "A Preliminary Poll of Men Circumcised in Infancy or Childhood," BJU 83 (1999): suppl. 1: 85–92...

மேலும் என்னன்னவோ காரணங்களை இங்கு O’Hara, K. and O’Hara, J., "The Effect of Male Circumcision on the Sexual Enjoyment of the Female Partner," BJU 83 (1999): suppl. 1: 79–84 சொல்கிறார்கள். இதில் யார் சொல்லுவதில் உண்மை இருக்கிறது.

சிவபாலன் said...

தெகா

நல்லதொரு மருத்துவ கட்டுரை.

பகிர்வுக்கு நன்றி

ஜெஸிலா said...

//நீங்க சொல்றபடிதான் நானும் ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை நம்பியிருந்தேன். ஆனால் பாருங்க இங்க இப்படி சொல்றாங்க..// ஒரு ஆய்வு அறிக்கை வந்தவுடன் பல வருடங்களாக நம்பி வந்ததை உடனே எப்படி மாற்றிக் கொள்கிறீர்கள்? பெப்சி குடித்தால் கேடு வரும் என்கிறார்கள் பலர், ஒன்றும் ஆகாது என்கிறார்கள் சிலர். குடிப்பதும் குடிக்காததும் அவர் அவர்கள் விருப்பம் அவ்வளவுதான்.

மங்கை said...

தெகா.. அருமை..அருமை...

பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட மக்களுடன் வேலை பார்ப்பதால் எனக்கும் இது தொடர்பான ஒரு கேள்வி?

முன்தோலை அகற்றுவதால் பால்வினை நோய்களின் தாக்கத்திலுருந்து தப்பிக்கலாம் என்றால்..இந்த வழக்கம் இல்லாத யூரோபல ஏன் இந்த நோய் prevalance கம்மியா இருக்கு...

முன் தோழின் கீழ் சுரக்கும் அமிலங்கள் சில anti-viral effects இருக்கு..

மற்றபடி மத நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளும் பட்ச்சத்தில்..அது நம்பிக்கை... இதை நான் விமர்சிக்கவில்லை...ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் பல இதைத்தான் சொல்கிறது...

பாரி.அரசு said...

தெகா,
எந்த ஒரு அறிவியல் முறையும் மறு ஆய்வுக்கு உட்பட்டதே, எனவே சுன்னத் ஒரு அறிவியல் முறை என்றாலும், அதுவும் ஆய்வுக்கு உட்பட்டதே...

Anonymous said...

குமுறும் மக்கா!

யூதர் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பழக்கத்தை எதிர்த்து யூதர்கள் ஆரம்பித்த website தான் இந்த http://www.circumcision.org/. இங்கு போய் எதிர்ப்ப காட்டுங்க.

இதுக்கு ஏன் பதிவரை கோவிச்சுகிறீங்க!!

நிலவு நண்பன் said...

நாகூர் ரூமியின் இந்தப் பதிவை பாருங்கள் :

சுன்னத், சின்னத், சுன்னத் கல்யாணம், கத்னா என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு பழக்கம் ஆண்குறியின் முன் தோல அகற்றுவதாகும். இது யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சமயம் சார்ந்த ஒரு பழக்கமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இதை சர்கம்சிஷன் (Circumcision) என்று சொல்கிறார்கள். ஆனால் யூதர்களும் முஸ்லிம்களுக்கும் மட்டும்தான் இந்த பழக்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பயன் அல்லது அவசியம் கருதி இதை செய்துகொள்ளும் மற்ற மதத்தினரும் உண்டு.

ஆனால் இதுகாறும் சமயம் சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கப்பட்ட ஒன்றுக்கு இப்போது விஞ்ஞானத்தின் ஆதரவு கிடைத்துள்ளது. அதுவும் மனித உயிரைக் கொல்லும் எய்ட்ஸ் என்னும் நோயிலிருந்து காப்பாற்றும் ஆற்றல் கொண்ட செயலாக இந்த 'சர்கம்சிஷன்' உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ஐ.வி. தொற்றும் வாய்ப்பை இது குறைப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவின் டொராண்டோவில் (Toronto) நடந்த சர்வதேச எய்ட்ஸ் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஹெச்.ஐ.வி. தொற்றுவதிலிருந்து நம்மைத் தடுக்கும் மிகச்சிறந்த வழியாக சர்கம்சிஷன் இருப்பதாக தான் நம்புவதாக முன்னால் ஜனாதிபதி பில் கிளிண்டன் கூறினார். இதை மதரீதியானதாகப் பார்க்கக் கூடாது என்றும் அவர் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

"பரிசோதனைகளுக்கு நல்ல பயன்கள் கிடைத்திருக்கும் பட்சத்தில், இந்நோயைத் தடுக்கும், மனித உயிர்களைக் காக்கும் ஆற்றல் மிகுந்த வழி காணப்பட்டுவிட்டது என்றே பொருள். நாம் அனைவரும் இங்கிருந்து போகும்போது இந்த முறைக்கு பச்சைக்கொடி காட்டியவர்க வெளியே செல்ல வேண்டும்" என்று அவர் கூறினார்.

"சர்கம்சிஷன் செய்து கொள்வதனால் முறையற்ற பாலியல் உற்வுகளால் விளையும் பல நோய்கள் தடுக்கப்படுகின்றன. ஆண்களுக்கு ஆண்குறியைப் பாதிக்கும் புற்று நோயும் (penile cancer), பெண்களுக்கு கழுத்துப் பகுதியில் பாதிக்கும் புற்றுநோயும் (cervical cancer) வராமல் தடுக்கப்படுகிறது. ஹெச்.ஐ.வி. தொற்றும் வாய்ப்பையும் எய்ட்ஸ் ஏற்படும் வாய்ப்பையும் இது கணிசமாக கட்டுப்படுத்துகிறது. ஆனால் இது எய்ட்ஸுக்கு எதிரான முழு பாதுகாப்புக் கேடயமல்ல" என்கிறார் இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் பிரபல டாக்டர் கம்பம்பட்டி ஸ்வயம் ப்ரகாஷ்.

தென்னாப்பிரிக்க மற்றும் ஃப்ரெஞ்சு நாட்டு விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவுகள்தான் இந்த விவாதத்தையே தொடங்கி வைத்தன என்று கூறலாம். சர்கம்சிஷன் செய்து கொண்ட ஆண்களில் 60 விழுக்காட்டுப் பேருக்கு ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயம் குறைவாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தார்கள். கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் இது தொடர்பான மூன்றுவிதமான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருப்பதாக உலகளாவிய ஹெச்.ஐ.வி. தடுப்புக் குழு (Global HIV Prevention Working Group) சமர்ப்பித்த அறிக்கை கூறுகிறது. சர்கம்சிஷன் செய்து கொண்டவர்களோடு சேர்ந்து வாழும் 7000 பெண்களுக்கு ஹெச்.ஐ.வி. தொற்றும் வாய்ப்பு குறைந்துள்ளதா என்று ஒரு ஆராய்ச்சி உகாண்டாவில் நடக்கிறது. இதன் முடிவுகள் அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப் படுகின்றன.

25-லிருந்து 50 பேர்களுக்கு ஹெச்.ஐ.வி. தொற்றுவதை சர்கம்சிஷன் தடுக்கிற்து என்று கூறுகிறார் பாலியல் மருத்துவர் ஜி.சாமரம். ஆரோக்கியமான உடலுறவே 60-லிருந்து 70 விழுக்காடு வரை இந்த நோய் பரவாமல் காப்பாற்றும் என்றும் அவர் கூறுகிறார்.

"ஒவ்வொரு உடலுறவுக்குப் பிறகும் மர்ம உறுப்புகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். நோய் பரப்பும் கிருமிகளிலிருந்து இது காப்பாற்றும். ஆண்குறியில் சர்கம்சிஷன் செய்துகொள்ளும்போது முன்தோல் வெட்டி எடுத்துவிடப்படுவதால், பாக்டீரியா,வைரஸ் போன்ற கிருமிகள் தொற்றுவதற்கு மிகக்குறைந்த வாய்ப்பே உள்ளது" என்றும் அவர் கூறினார்.

"சர்கம்சிஷன் இந்த நோயைக் குறைக்குமே தவிர, ஒழித்து விடும் என்ற் சொல்ல முடியாது. இதைச் செய்து கொண்டால் யாரிடம் வேண்டுமானாலும் (தகாத) உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் செய்து கொண்டவர்களுக்கு ஏற்படலாம். இது செக்ஸை சட்டபூர்வமாக்குவதைப் போன்றதாகிவிடும்" என்கிறார் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தவறான பாலியல் பயன்பாட்டுக்கு எதிரான குழுவுக்குத் தலைவராக இருக்கும் என்.வி.எஸ். ராம்மோகன்.

-- வெள்ளி, டெக்கன் க்ரானிக்கிள், ஆகஸ்ட் 18, 2006.

delphine said...

தெகா..
any surgery done by the appropriate surgeon in the RIGHT place will prevent scarring and there by sexual dysfunction. you can hold any number of polls. ,.. thats not the criteria at all. there is nothing to challenge one's esteem here. thats all 'built up' stories and polls. circumcision done in infancy is definitely a thing to be appreciated. apart from this there is no question of religious faith here. In USA as soon as the child is born they ask you if you want the baby to be circumcised. In India we don't ask the parents as parents might not like us asking such questions. But when need arises for the child, then they are referred to the surgeon.

Anonymous said...

அய்யா தெக்கா,
முடிவா விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்கன்னு சொல்லுங்களேன்!

சமயச் சார்புள்ளதாக சொல்லப் படும்போது ஒரு சந்தேகம் வந்திருது. மனுசப் பய உடம்புல சில விஷயங்கள் என்ன மாதிரி கடவுள் நம்பிக்கையில்லாத ஆளுகளுக்குக் கை கொடுக்கிறமாதிரி சில விஷயங்கள் இருக்கு. appendix, connection between nasal and food paths ..இப்படி சில. இது இருக்கிறதால் மனுசனுக்குக் கஷ்டம்தான். ஏந்தான் சாமி அப்படி படைச்சிட்டாரோ தெரியலை.

அதே மாதிரி இதைக் கட்டாயம் அறுத்து எடுத்துவிடுன்னு சொன்ன சாமியே அதுக்கெல்லாம் தேவயில்லாம, மொட்டையா மொதல்லே ஏன் படைக்காம போய்ட்டார்? on second thoughts ஏன் இப்படி ஒரு கண்டிஷன் போடணும்? நமக்குள்ள இத்தனை கருத்து வேற்றுமை இல்லாம இருந்திருக்குமே.

படைப்பு - creation- நம்பிக்கைக்கு எதிர்ப்புக்காக இந்த மாதிரி நிறைய பாய்ண்டுகள் எடுக்கலாமே...

G.Ragavan said...

முடியும் நகமும் வளர்ந்துக்கிட்டேயிருக்கும். வெட்டுறோம். அதென்ன அப்படியா? பரிணாம வளர்ச்சியில வேண்டாதது அப்படியே போயிரும். இது என் கருத்து. ஆகையால இது தேவையில்லைங்குறாது என் கருத்து. கோவி சொன்ன மாதிரி பிரச்ச்னை இருக்குறவங்களுக்குக் கண்டிப்பா பண்ணலாம். ஆனா எல்லாருக்கும் தேவையில்லைங்குறது என்னோட கருத்து.

தருமி said...

Male Circumcision எப்படியாவது இருக்கட்டும்.ஆனா, female Circumcision பற்றி ரீடர்ஸ் டைஜஸ்டில் ஒரு கட்டுரை படித்தேன். இன்னும் ஆப்ரிக்க நாடுகள் சிலவற்றில் நடப்பதாக எழுதப் பட்டிருந்தது. மிக மிகக் கொடுமையாக இருந்தது. அதை எதிர்த்து இப்போதுதான் மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பதாகவும் வாசித்தேன்.

Anonymous said...

12 வயது வரை ஆசையாக வளர்த்திட்டு ஒரு நாள் வெட்டுறது மனசுக்கு கஸ்டாம இல்ல?

புள்ளிராஜா

Thekkikattan|தெகா said...

சுன்னத் முறை பற்றிய வலை தளத்தை இங்கு கொடுத்து உதவிய அனானி அண்ணே... மிக்க நன்றி, நன்றி!!

மாசிலா said...

ஆஹா, தெகா! 'குறி' தவராம கண்ணும் கருத்துமா இருக்கீங்களே!
இந்த வேலைய எப்போ இருந்து ஆரம்பிச்சி இருக்கீங்க?

படிக்கறப்பவே பயமா இருக்குது. நெனைச்சு பார்த்தா, திகிலுல்ல அவரு மாயமா மறைஞ்சே போய்ட்டாரு. வேணாம்பா, விட்டுடுங்க. அப்புறம் அழுதுபுடுவேன் சொல்லிப் புட்டேன் ஆம்மா.
;-)

சுல்தான் said...

கூடவே இதையும் படிச்சிட்டா நல்லது
சுன்னத் செய்வதால் உண்டாகும் நன்மைகள்
http://www.circinfo.net/

Thekkikattan|தெகா said...

சுல்தான் said...

சுன்னத் செய்வதால் ஏற்படும் பயன்களும் எதிர்விளைவுகளும்
http://www.mayoclinic.com/print/circumcision/PR00040/
METHOD=print
மற்றும்
http://www.nlm.nih.gov/medlineplus/circumcision.html

US Department of Health & Human Service ல் கடைசியாக இது குறித்து எடுக்கப்பட்ட hospital சர்வே முடிவுகள்.
http://www.cdc.gov/nchs/products/pubs/pubd/
hestats/circumcisions/circumcisions_region.htm#figure
மற்றும் http://www.cdc.gov/nchs/products/pubs/pubd/
hestats/circumcisions/circumcisions_race.htm#figure

இதுவும் கூகிளில் பெறப்பட்டதுதான். இனி அவரவர் முடிவு செய்து கொள்ளலாம்.

Thursday, July 19, 2007

Thekkikattan|தெகா said...

கோவியாரே,

தங்களின் பின்னூக்கிக்கு மிக்க நன்றிகள். நிறைய செய்திகளை மேலும் இங்கு இனைத்தற்கு.

//ஆப்பிரிக்க பழங்குடியினரில் பெண்களுக்கும் இத்தகைய 'சுன்னத்' நடைபெறுகிறது என்று படித்து இருக்கிறேன். ஏதாவது தெரியுமா தெகா ? //

இங்கு கூட நான் வசிக்கும் மாநிலத்தில் ஏதோ ஒரு ஆஃப்ரிக்கா நாடுகளிலிருந்து வந்த புதுக் குடும்பம் ஒன்று தன்னுடைய பெண் குழந்தைக்கு அந்த "அகற்று முறையை" கையாண்டதாம், அது பிறகு நீதி மன்ற கேசாகி 'பார்பாரிக்' முறையென அலைத்து இங்கு எங்கள் வளர்ந்த நாட்டில் அதற்கு இடமில்லையென்று தீர்பளித்தாக ஞாபகம்.

இருந்தாலும் இந்தப் பெண்கள் "சுன்னத் முறை" மிக்க வேதனைக்கூறிய விசயமே.

Thekkikattan|தெகா said...

குலவு,

தங்களின் பார்வையை இங்கு கொணர்ந்தமைக்கு வந்தனங்கள்.

//Dr. Richard Feynman-இன் "Surely you are joking Mr.Feynman" புத்தகத்தில், அவருடைய அப்பாவின், " பெண்கள் ஒருபோதும் முனைவர் பட்டம் பெறமாட்டார்" என்ற நம்பிக்கையை தன் தங்கை உடைத்தெறிந்து முனைவரானதை சொல்வார். அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கருத்தில் கொண்டு, சுன்னத்திற்கும் அறிவுத்திறனுக்கும் சம்பந்தம் இல்லை என்று முடிவுகட்டலாம். //

இதற்கும் ஒரு சிறப்பு நன்றிகள் :-)

Thekkikattan|தெகா said...

சுல்தான் ஐயா!

ஆமாம்!. யூத மதம் வருவதற்கு முன், யாரோ ஒரு டாக்டர் அல்லது டாக்டர்களின் ஒரு குழு, தீவிரமாக ஆய்ந்து, அவர்களின் வருமானத்திற்காக, அதை அந்த மதத்தினுள் சேர்த்திருக்கலாம். அதை பின்னாளைய ஆபிரகாமிய மதங்கள் பின்பற்றி யிருக்கலாம்.!!!!! ))))))))))))))) //

நான் வேற பொருளில் அதனை சொல்ல வந்தேன், படித்தவைகளைக் கொண்டு, வருமானத்தின் அடிப்படையில் அல்ல.

நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். கேட்பது யார்????????? )))))))))))))) //

ஐயங்களை இங்கு கொணர்ந்து அவைகளை விபரமறிந்தவர்களோட பகிர்ந்து அறியாமையை அகற்றிக் கொள்ள வேண்டுமென்பதே எனது அடிப்படை நோக்கு, சுல்தான். தவறாக பொருள் கொள்ள வேண்டாம். கொஞ்சம் பொறுப்போடுதான் எனது பக்கங்களை கையாண்டு வருகிறேன். தாங்கள் எனது ஏனைய பக்கங்களையும் வாசிச்திருந்தால் கவனிக்கலாம்.

தாங்களின் சுட்டிகளுக்கும், தகவல்களுக்கும் மிக்க நன்றி!!

Thekkikattan|தெகா said...

நல்லடியாரே வருக வணக்கம்!

கிடைத்த சுட்டிகளை பகிர்ந்து கொண்டேன்.

மேலும் எனக்கு பல சுட்டிகளை சுல்தான் ஐயா கொடுத்திருக்கிறார், அங்கும் செல்ல வேண்டும்.

Thekkikattan|தெகா said...

சிவபாலன்,

வருகைக்கு நன்றி!!

Thekkikattan|தெகா said...

ஒரு ஆய்வு அறிக்கை வந்தவுடன் பல வருடங்களாக நம்பி வந்ததை உடனே எப்படி மாற்றிக் கொள்கிறீர்கள்? பெப்சி குடித்தால் கேடு வரும் என்கிறார்கள் பலர், ஒன்றும் ஆகாது என்கிறார்கள் சிலர். குடிப்பதும் குடிக்காததும் அவர் அவர்கள் விருப்பம் அவ்வளவுதான். //

வாங்க ஜெஸிலா,

அது ஒண்ணுமில்லை அப்படி திடீர்னு யோசிச்சுப் பார்க்கிறதுக்கு சில சொந்த காரணங்களுமிருந்துச்சு அதான். என் பையன் பிறக்கும் பொழுது டாக்டர்கள் எங்களிடத்தே கேட்டாங்க சுன்னத் பண்ணணுமான்னு, ஆனால் வேண்டாமென்று ஆந்ரபாலஜி படித்த அவனின் அம்மா உடனடியாக மறுத்து விட்டார், அப்பொழுது எனக்கு அவ்வளவாக காரணங்கள் விளங்கவில்லை. ஆனால், இப்பொழுது கொஞ்சம் விளங்குவது போல இருந்தது அதான்.

பிறகு இந்த பெப்சி விசயம் என்னான்னா, நாமா குடிக்கிறதும், குடிக்காததும் நம்மோட சாய்ஸ்ன்னு சொல்லிட்டு போயிட முடியாது. ஏன்னா, தகுந்த பரிசோதனைகள் இது போன்ற குளிர்பானங்கள் அருந்துவதின் மூலம் எலும்பின் அடர்வுத் தன்மை குறைந்து எளிதில் உடையும் நிலையைப் பெறுகிறோம் என்று நிறுபிக்கும் பொழுது நம்பித்தானே ஆகணும்.

இன்னொன்னு இந்தப் பதிவு யாரையும் புண் படுத்துவதற்காக இங்கு கொணர வில்லை. இது ஒரு சாதாரண அறிவுப் பகிர்தாலே. மீண்டும் நன்றி, ஜெஸிலா.

Thekkikattan|தெகா said...

வாங்க மங்கையாரே,

நீங்க இந்த முக்கியமான பதிவுக்கு வராமப் போயிடுவீங்களோன்னு நினைச்சேன்.

வந்துட்டும் கேள்வி ஒண்ணையும் கேட்டு வைச்சிருக்கீங்க.

ஆமா, நீங்க சொன்ன அந்த anti-viral secretion பேரு என்னான்னு ஞாபகமிருக்கா?

மற்றபடி மத நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளும் பட்ச்சத்தில்..அது நம்பிக்கை... இதை நான் விமர்சிக்கவில்லை...ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் பல இதைத்தான் சொல்கிறது... //

நானும் அப்படித்தான் பார்க்கிறேன். இது மதச் சார்பற்ற ஒர் இடுகை. மருத்துவ ரீதியாக மட்டுமே இங்கு கொணரப்பட்டது.

கோவி.கண்ணன் said...

தெகா,

மதநம்பிக்கை என்ற விடயத்தில் பார்த்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அவரவர் மதநம்பிக்கை அவ்வளவே.

முன்தோலை நீக்கிக் கொள்வதால் எஸ்ட்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லது அபாயம் குறைவு என்ற வாதம் ஏற்புடையது அல்ல, ஏனெனில் எஸ்ட்ஸை பற்றுவது முன் தோல் மட்டுமல்ல, சிறுநீர் பாதையின் முனையில் ஒரே ஒரு கிருமி நுழைந்தாலே போதும் உயிர்கொல்லி ஆட்'கொல்ல' என்பது என்கருத்து. முன்தோலை நீக்கிக் கொள்வதால் மொட்டு பகுதியின் மேற்பரப்பு வேண்டுமானால் தடிமனாக ஆகி நோய் தொற்றும் வாய்ப்பைக் குறைக்கலாம், ஆனால் சிறுநீர் பாதை திறந்தே தான் இருக்கிறது. அந்த பாதையின் மென்மையை முன் தோல் நீக்கம் தடிமனாக ஆக்காது.

உயிர்கொல்லி நோய் தொற்றுவதின் வாய்ப்பு முன்தோலை நீக்கிக் கொள்வதால் குறையும் என்று அப்படி செய்து கொண்டவர் ஒருவேளை இங்கே தவறாக புரிந்து கொண்டால் ஆபத்தே. எனவே இது போன்று அரைகுறை தகவல் சொல்லுபவர்கள் பொது நலம் குறித்து எச்சரிக்கையுடன் சொல்வது நலம்.

மதநம்பிக்கைப் படி ஒரு கருத்தை வலியுருத்தும் போது இது மதநம்பிக்கை சேர்ந்தது என்று சொல்வதுதான் பொருத்தம். மருத்துவகாரணங்கெளெல்லாம் அதில் நுழைத்து சொல்வதனில் ஆபத்தே.

இந்து மதத்தில் கூட காதுகுத்துதல், அலகு குத்துதல் போன்ற நம்பிக்கைகள் இருக்கிறது. அதற்கு மருத்துவ காரணங்களையும் சொல்கிறார்கள். அதெல்லாம் செய்து கொள்ளாதவர்களின் ஆயுள் குறைவதில்லை. எவரும் ஒழுக்கமாக நடந்து கொண்டால் மத ரீதியான மருத்துவ காரணங்கள் கூட தேவையற்றதே.

koothanalluran said...

தேவர் ஜாதியிலும் இப்பழக்கம் உண்டு. இதை விருத்த சேதனம் என அழைக்கிறார்கள்.

Anonymous said...

கோவி.கண்ணன் அழகாகச் சொன்னார்.
காது குத்துதல், மூக்கு குத்துதல், விருத்த சேதனம் இவை அனைத்துமே அவரவர் மத நம்பிக்கைகள்!
இதில் ஏதாவது ஒன்றோ அல்லது எல்லாமோ அறிவியல் முறைப்படியோ அல்லது மருத்துவ காரணங்களுக்காவோ சரியான முறை என ஒப்புக்கொள்ளப்பட்டால், அது தற்செயலாக ஏற்பட்டதாகத்தான் இருக்கமுடியும்.
அந்த முன் தோல் ஆணுக்கு அநாவசியம் என இயற்கை கருதினால், பிற்காலத்தில் இந்த விஷயத்தை 'EVOLUTION' பார்த்துக்கொள்ளும்.நல்ல கட்டுரை!
மதம் பிடித்தவர்களை ஒரு பாகனைப்போல் கையாளும் தெகாவின் பாங்கு பாராட்டிற்குரியது.

Thekkikattan|தெகா said...

எந்த ஒரு அறிவியல் முறையும் மறு ஆய்வுக்கு உட்பட்டதே, எனவே சுன்னத் ஒரு அறிவியல் முறை என்றாலும், அதுவும் ஆய்வுக்கு உட்பட்டதே//

வாங்க பாரி,

மாற்றம் என்ற ஒன்றே மாறாதது (changes only unchanged) என்ற கோட்பாட்டின் படி, நமது அறிவின் எல்லை விரிவடையும் பொழுது ஒரு புது பரிமாணம் நாம் படித்து யோசித்த விசயங்களிலிருந்து கிடைக்கிற மாதிரி தான்.

புதுப் புது யுத்திகள் புதிய முறையில் அணுகப் பெறும் பட்சத்தில் அதன் பொருட்டு கிடைக்கும் முடிவுகளை அவ் அறிவெட்டலின் படி ஏற்றுப் போவதே உசிதம்.

Thekkikattan|தெகா said...

நிலவு நண்பா,

எனக்கு அந்த நாகூர் ரூமியின் பதிவு ஒன்று இந்த லைனில் வந்தது தெரியாது.

அதனை இங்கு கொணர்ந்தமைக்கு ஒர் சிறப்பு நன்றி.

அதன் சுட்டி இருந்தால் கொடுங்களேன்.

ஜோ / Joe said...

இயேசுவுக்கும் விருத்த சேதனம் பண்ணியிருக்கிறார்கள் (யூத முறைப்படி) .ஆனால் ஏன் கிறிஸ்துவர்கள் அதை பின்பற்றுவதில்லை என தெரியவில்லை.

Thekkikattan|தெகா said...

வாங்க ஜோ,

இயேசுவுக்கும் விருத்த சேதனம் பண்ணியிருக்கிறார்கள் (யூத முறைப்படி) .ஆனால் ஏன் கிறிஸ்துவர்கள் அதை பின்பற்றுவதில்லை என தெரியவில்லை.//

அப்படியே நீங்கள் சொன்னதை கொஞ்சம் விவரித்து எழுத முடியுமா? அந்த "விருத்த சேதனம்" என்றால் என்ன?

ஜோ / Joe said...

தெகா,
'விருத்த சேதனம்' என்றால் சுன்னத் (Circumcision) தான் .விருத்தத்தை சேதாரம் செய்வது .தமிழ் பைபிளில் இந்த வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள்.

ஜோ / Joe said...

நான் அறிந்தவரை 'சுன்னத்' என்னும் வார்த்தை இதை மட்டும் குறிப்பதில்லை .சுன்னத் என்பது கடைபிடிக்கத்தக்கவை என்னும் பொருள்படும் என நினைக்கிறேன் .'விருத்த சேதனன்' பல சுன்னத்களில் ஒன்று ..இஸ்லாமிய அன்பர்கள் தெளிவுபடுத்தலாம்.

anony munna said...

//ஆமாம்!. யூத மதம் வருவதற்கு முன், யாரோ ஒரு டாக்டர் அல்லது டாக்டர்களின் ஒரு குழு, தீவிரமாக ஆய்ந்து, அவர்களின் வருமானத்திற்காக, அதை அந்த மதத்தினுள் சேர்த்திருக்கலாம். அதை பின்னாளைய ஆபிரகாமிய மதங்கள் பின்பற்றி யிருக்கலாம்.!!!!! )))))))))))))))

நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். கேட்பது யார்????????? ))))))))))))))//இதை ஒரு அறிவியல் / மருத்துவம் சார்ந்த பதிவாகவே பார்க்கிறேன். இதற்கெதற்கு மதசாயம் பூசுகிறீர்கள்?

கொஞ்சம் வட்டத்தை விட்டு வெளியே வாருஙள் இஸ்லாம் நண்பர்களே.

அனானி முன்னா

Thekkikattan|தெகா said...

டாக்டர்,

மீண்டும் மீண்டும் வந்து தங்களின் பார்வையை இங்கு வைப்பது மிக்க மகிழ்ச்சியூட்டக் கூடியது.

Keep up the good spirit!!

மங்கை said...

the foreskin and the sub-preputial wetness under the foreskin (prepuce) may protect against human immunodeficiency virus.

Lysozyme is an enzyme with anti-bacterial action that is found in body fluids. (An enzyme is a protein or conjugated protein produced by a living organism and functions as a biochemical catalyst.1) Lysozyme breaks down cell walls and kills bacteria..

Prakash and others reported in 1983 that sub-preputial wetness contains lysozyme2 and Lee-Huang finds lysozyme in human urine.3 Lee-Huang et al. report that lysozyme is also an effective agent for killing HIV in vitro.3

http://www.mothersagainstcirc.org/HIV.htm

Thekkikattan|தெகா said...

அதே மாதிரி இதைக் கட்டாயம் அறுத்து எடுத்துவிடுன்னு சொன்ன சாமியே அதுக்கெல்லாம் தேவயில்லாம, மொட்டையா மொதல்லே ஏன் படைக்காம போய்ட்டார்? on second thoughts ஏன் இப்படி ஒரு கண்டிஷன் போடணும்? நமக்குள்ள இத்தனை கருத்து வேற்றுமை இல்லாம இருந்திருக்குமே.

படைப்பு - creation- நம்பிக்கைக்கு எதிர்ப்புக்காக இந்த மாதிரி நிறைய பாய்ண்டுகள் எடுக்கலாமே...//

அனானிகளா, நீங்க எல்லாம் யாருங்கய்யா, இப்படி ஒழிஞ்சு ஒழிஞ்சு வந்து வெவகாரமான கேள்வியா கேட்டு வைச்சுப்போட்டு போறீங்களே. எனக்கு பதிலுதான் தெரிய மாட்டேங்கிது...

என்னமோ நடத்துங்க...

Thekkikattan|தெகா said...

ராகவா,

முடியும் நகமும் வளர்ந்துக்கிட்டேயிருக்கும். வெட்டுறோம். அதென்ன அப்படியா? பரிணாம வளர்ச்சியில வேண்டாதது அப்படியே போயிரும். இது என் கருத்து. //

:-)) அது சரி, பரிணாமம் பார்த்துக்கட்டும்.

Thekkikattan|தெகா said...

தருமி,

Male Circumcision எப்படியாவது இருக்கட்டும்.ஆனா, female Circumcision பற்றி ரீடர்ஸ் டைஜஸ்டில் ஒரு கட்டுரை படித்தேன். இன்னும் ஆப்ரிக்க நாடுகள் சிலவற்றில் நடப்பதாக எழுதப் பட்டிருந்தது. மிக மிகக் கொடுமையாக இருந்தது. அதை எதிர்த்து இப்போதுதான் மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பதாகவும் வாசித்தேன்.//

அது கொடுமையோ கொடுமை. நண்பர் கோவியாருக்கு ஒரு நிகழ்ச்சி பற்றி கூறியிருப்பேன் பாருங்கள்.

எப்படியோ "ஏதாவது என்ற பெயரில்" அடுத்தவருக்கு துன்பம் விளைவிக்காமல் இருந்தால் சரியே!!

தருமி said...

இது கொஞ்சம் மைல்டான கதை - நான் சொன்னதோடு சம்பந்தப்பட்டது

Thekkikattan|தெகா said...

ஆஹா, தெகா! 'குறி' தவராம கண்ணும் கருத்துமா இருக்கீங்களே!
இந்த வேலைய எப்போ இருந்து ஆரம்பிச்சி இருக்கீங்க?

படிக்கறப்பவே பயமா இருக்குது. நெனைச்சு பார்த்தா, திகிலுல்ல அவரு மாயமா மறைஞ்சே போய்ட்டாரு. வேணாம்பா, விட்டுடுங்க. அப்புறம் அழுதுபுடுவேன் சொல்லிப் புட்டேன் ஆம்மா.
;-)
//

மாசிலா, ஏங்க உங்களை இப்பத்தான் முதன் முதலா என் வீட்டாண்டை பார்க்கிறேன். நீங்களோ எது எதுக்கோ முடிச்சுப் போட்டு பேசிறீங்க... என்னாங்க சொல்ல வாரீங்க :-)

Thekkikattan|தெகா said...

கோவியாரே,

ஏனெனில் எஸ்ட்ஸை பற்றுவது முன் தோல் மட்டுமல்ல, சிறுநீர் பாதையின் முனையில் ஒரே ஒரு கிருமி நுழைந்தாலே போதும் உயிர்கொல்லி ஆட்'கொல்ல' என்பது என்கருத்து.

உயிர்கொல்லி நோய் தொற்றுவதின் வாய்ப்பு முன்தோலை நீக்கிக் கொள்வதால் குறையும் என்று அப்படி செய்து கொண்டவர் ஒருவேளை இங்கே தவறாக புரிந்து கொண்டால் ஆபத்தே.

மதநம்பிக்கைப் படி ஒரு கருத்தை வலியுருத்தும் போது இது மதநம்பிக்கை சேர்ந்தது என்று சொல்வதுதான் பொருத்தம். மருத்துவகாரணங்கெளெல்லாம் அதில் நுழைத்து சொல்வதனில் ஆபத்தே.

இந்து மதத்தில் கூட காதுகுத்துதல், அலகு குத்துதல் போன்ற நம்பிக்கைகள் இருக்கிறது. அதற்கு மருத்துவ காரணங்களையும் சொல்கிறார்கள். //

உங்களின் கரிசனம் புரிகிறது. ஆனால், இங்கு வாசிப்பவர்கள் சிறிதேனும் இந்த கட்டுரையில் மற்றும் பின்னூக்கிகளின் வாயிலாக வந்த சில கருத்துக்களையும் படித்து எண்ணங்களை re-consider செய்தால் அதுவே உங்களின் இந்த நீண்ட நீண்ட பின்னூக்கிகளுக்கு கிடைத்த ஒரு மரியாதையே.

அருமையான கருத்துக்கள் கோவி. நன்றி உங்களுக்கு.

Thekkikattan|தெகா said...

வாங்க கூத்தா நல்லூரான்,

தேவர் ஜாதியிலும் இப்பழக்கம் உண்டு. இதை விருத்த சேதனம் என அழைக்கிறார்கள். //

ஆமாம், எனக்கு இப்ப அன்மையில் தான் வைரமுத்துவின் "கள்ளிக் காட்டு இதிகாசம்" படிக்கும் பொழுது தெரிந்து கொண்டேன்.

அந்த கதையில் மிக அழகாக வைரமுத்து அதனை எப்படி தகுந்த மருத்துவர்கள் இல்லாமல் ஊரில் உள்ள ஒரு அனுபவப் பட்டவரை வைத்து செய்வதை சொல்லூவார், படிக்கவே ரொம்ப த்ரில்லிங்காக இருந்தது.

Thekkikattan|தெகா said...

அந்த முன் தோல் ஆணுக்கு அநாவசியம் என இயற்கை கருதினால், பிற்காலத்தில் இந்த விஷயத்தை 'EVOLUTION' பார்த்துக்கொள்ளும்.நல்ல கட்டுரை!//

இன்னொரு முறை சொல்லுங்க, அனானி, இன்னொரு முறை சொல்லுங்கோ :-))

ஏப்பா பெயரைக் கூடவா போட்டுட்டு போகப்பிடாது...

Thekkikattan|தெகா said...

இயேசுவுக்கும் விருத்த சேதனம் பண்ணியிருக்கிறார்கள் (யூத முறைப்படி) .ஆனால் ஏன் கிறிஸ்துவர்கள் அதை பின்பற்றுவதில்லை என தெரியவில்லை.//


அப்ப ஜோ' இது கிறிஸ்துவ மதத்தில பண்ணித்தான் ஆகணுமின்னு கட்டாயமில்லையா? எனக்குத் தெரியாதே...

அதானே ஏன் பின்பற்றுவதில்லை.,.??

'நன்றி தங்களின் பின்னூட்டங்களுக்கும், பகிர்தலுக்கும்.

நாடோடி said...

இத பத்தி ஏற்கனவே காரசாரமா விவாதம் இணையத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த பிர்ச்சனைக்கு முடிவே இல்லை.
;)))))

நாடோடி said...

ஆப்புறம் பெண்களுக்கு செய்யப்படுவதற்கு பெயர் "மூலாத்". இந்த பெயரில் ஒரு படமும் உள்ளது.முடிந்தால் பார்க்கவும்.

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

தஞ்சாவூரான் said...

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் 'விருத்தசேதனம்' பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தப் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறமாதிரி நினைவில்லை. தஞ்சாவூர் பகுதியில் தேவர் இன மக்களிடையே இந்த பழக்கம் இருப்பதாக எனக்குத் தெரிந்தவரை கிடையாது!

அமெரிக்காவில் குழந்தைப் பெறும் முன் அளிக்கப்படும் கல்வியில், இது ஒரு ஆரோக்கியம் சம்பந்தப் பட்டதாகத்தான் சொல்கிறார்கள். இங்கு, மத பேதமின்றி ஆண்கள் செய்துகொள்கிறார்கள். செய்து கொண்டால், புணர்ச்சியின்போது நீண்ட நேரம் இன்பம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். மற்றொரு சாரார் இது புணர்ச்சியைப் பாதிக்கிறது எனக் கூறுகிறார்கள். எல்லாம் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்ததுதான்!

ஆப்ரிக்காவில் இன்னும் பெண்களுக்கு இதுமாதிரி செய்வதாக படித்த ஞாபகம். 'மூலாதே' ஒரு சாட்சி இது எந்த அளவுக்கு பெண்களைப் பாதிக்கிறது என்று!

Related Posts with Thumbnails