Tuesday, July 03, 2007

எப்பொழுதும் ஏழரை இப்ப *எட்டு* பாகம் - II

இன்னும் எட்டுல மூணே முடிக்கலைல்லே, அப்புறம் எப்படி நான் நாலுக்குப் போறது. என்னது இன்னும் அந்த மூணே படிக்கலையா அப்ப இங்கே ஏறி அங்கே இறங்கி சமர்த்தா படிச்சிட்டு வந்திருங்க, ப்ளீஸ்.

என்னடா இவன் மூணைப் போட்டு இந்த இழு இழுக்கிறானேன்னு நினைக்காதீங்க. அதிலதாங்க நிறைய திருப்பு முனையான விசயங்கள் என் வாழ்க்கையில் நடந்துச்சு. இப்ப விசயத்துக்கு வருவோம். அப்படியே படிச்சி கிடிச்சு ஃபெயிலாப் போன அந்த ஒரு பாடத்தையும் எழுதி பாஸு பண்ணி வைச்சிருந்தேன்.

இதற்கிடையில் என்னத்தடா இனிமே படிச்சி வேலை தேடின்னு நினைக்க வைக்கிற மாதிரி கொஞ்சம் வீட்டுக்குள்ள வேற அடுத்தடுத்தப் பசங்க ரெடியாகிட்டானுங்க. கல்லூரி வாசல மிதிக்க. நான் அவங்களுக்கு இடம் கொடுக்கலாமின்னு நினைச்சு, என் முடிவ என் அண்ணன் கிட்ட சொன்னேன், அவரும் முதல் முறையா என் வாழ்க்கையே திருப்பிப் போடுற மாதிரி ஒரு அறிவுரை கூறினார். தம்பி இப்ப இருக்கிற குடும்ப கஷ்டத்தப் பாத்து பயந்து கிடைக்கிறதெ விட்டுறாதே, மேலே படி அதுவும் ஏதாவது வித்தியாசமான்னு சொன்னாரு.

திரும்பவும் எனக்கு வந்துருச்சு வேகம். அந்த வருசம் தி ஹிண்டுவில வந்த அத்துனை வெளி மாநில கல்லூரிகளுக்கும், பல்கலை கழகங்களுக்கும் வித்தியாச வித்தியாசமான முதுகலை பட்டப் படிப்பு என்ன இருக்கோ அதுவாப் பார்த்து அப்ளை பண்ண ஆரம்பிச்சேன். அதில் ஒரு பஞ்சாப் கல்லூரியும், திருப்பதி பல்கலை கழகமும் அடக்கம் (Microbiology, Virology etc.,). அவ்ளோ த்தீ உள்ளர.

திடீர்னு ஒரு நாள் மயிலாடுதுறை ஏ.வி.சி.சி கல்லூரியில இந்த மாதிரி எம்.எஸ்ஸி wildlife biology முதுகலை பட்டப் படிப்பு இருக்காமான்னு விளம்பரம் வந்துச்சு. சரி விடுன்னு விண்ணப்பம் தருவிச்சு அனுப்பியிருந்தேன். நுழைவுத் தேர்வு எழுத கூப்பிட்டுருந்தார்கள். நான் போன பேருந்திலேயே என்னோட இன்னொரு +2 படிச்சவரும் இருந்தார், அவரும் அங்கேதான் போயிட்டு இருக்கார்.

எழுதினோம் இரண்டு பேரும். தேர்ந்தெடுத்தாங்க. அது தாங்க எனக்கு பிள்ளையார் சுழி போட்ட மாதிரி. அன்னைக்கு என் காலில் கட்டிய சக்கரம்தான் மேற்குமலைத் தொடர்களின் எல்லா வாசல்களிலும் நுழைந்து இந்தியாவின் எல்லை வரை எடுத்துட்டுப் போயி, வால்பாறையில் வைத்து ஒரு வெள்ளைக் காரியுடன் ஒரு காட்டுத் தனமான காதலில் விழுந்து அது பிறகு உலகின் சில இடங்களுக்கு செல்லுமளவிற்கு இட்டுச் சென்றது அந்தச் சக்கரம்.

இப்ப ஞாபகம் இருக்கா இந்தக் காட்டான் எ,பி,சி,டி கிணத்துக்குள்ளே இருந்து மக்கடிச்சவன் ஒரு பி.எச்டி தீசிஸ் எழுதுற வரைக்கும் வளர்ந்துட்டான் இந்த பாயிண்ட்ல. இதில ஆங்கிலத்திலதான் பேசிவேங்கிற மாதிரி ஒரு சின்ன குட்டிப் பையன் வேற. எம்பூட்டுத் தூரம் போயாச்சு. திரும்பிப் பார்த்தா 2200மீட்டர் பெருங்குன்றை உட்காராம ஒரே மூச்சுல ஏறி முடிச்ச மாதிரியில்ல இருக்கு.

(நாலு). எம்.எஸ்சிக்கு ஒரு ஆறு மாசம் களப்பணி உண்டு நான் படிச்ச வனவியல் படிப்புக்கு. அதுக்கு டாப்ஸ்லிப் ஏரியாவை தேர்ந்தெடுத்து, காட்டெருமைகள் மேல ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தேன். அங்கே வைச்சுத்தான் ஒரு நாள் எதார்த்தமா என் வருங்கால ப்பி.எச்டி அட்வைசரை (டாக்டர் அஜித் குமார், அப்ப அவரு யாருன்னே தெரியாது எனக்கு), அவரு அவரோட டேராதூன் மாணவர்களுடன் களப்பணிக்கு வந்திருக்கும் பொழுது சந்திக்க நேர்ந்தது. சும்மா ஆர்வக் கோளாறு வந்து எனக்குள்ள சந்தேகத்த யாரோ என் அறைக்கு வெளியே இருந்து நம்ம சப்ஜெக்ட் பேசுறாங்களேன்னு போயி பார்த்தா இவரு உட்கார்ந்து இருந்தார். என் சந்தேகத்தை கேட்டேன். அவரும் ஆர்வமா விளக்கினார்.

பின்னாலே இரண்டு வருஷம் கழிச்சு நான் தேசீய அளவில நடந்த Jனியர் ஆராய்ச்சி மாணவன் நுழைவுத்தேர்வுல கலந்துகிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டப்ப யாருடா அதுக்கு முதன்மை அறிவியலர் (principle scientist)ன்னு பார்த்தா நான் ஏதோச்சையாக சந்திச்ச நம்ம டாப்ஸ்லிப் ஆசான். அவருக்கும் ஆச்சர்யம் நேர்முக தேர்வில் என் பின்புலத்தை கேட்டப்ப. டாப்ஸ்லிப் சந்திப்பு கண்டிப்பாக அவரின் மனதை விட்டும் அகலவில்லை.

(ஐந்து). முதுகலை முடிச்சுட்டு வீட்டுக் போன முடிஞ்சது கதைன்னு, ஒரு சீனியர் மூலமாக கெஞ்சிக் கூத்தாடி பொள்ளாச்சியில மையமாக கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான "டைகர் நேச்சர் கிளப்"ல என்னைய Ecologistஆ தள்ளிவிட்டாங்க. அதனை நடத்தின அந்த நபர் ஒரு டூபக்கூர் பார்ட்டின்னு பின்னாலே தான் தெரிய வந்தது. என்னைய பொள்ளாச்சியில இருக்கிற முக்கிய வர்த்தக இடங்களுக்கெல்லாம் கூட்டிட்டுப் போய் அந்த நிறுவனத்தின் உறுப்பினர் கிட்டயெல்லாம் இவருதான் நம்ம நிறுவனத்தின் சயிண்டிஸ்ட்ன்னு:-P அறிமுகப் படுத்திவைச்சுட்டு, வசுல அவரு கரெக்டா பாக்கெட் பண்ணிக்குவார் போல.

எனக்கு டாப்ஸ்லிப்ல எப்படியோ தங்க ஒரு இடம் வன அதிகாரிங்கிட பேசி பிடிச்சுக் கொடுத்தார். அங்க உள்ள மெஸ்ஸில சாப்பிட்டுக் கோங்க நான் அக்கவுண்டை கவனிச்சிக்கிறேன்னு சொல்லிட்டு ஆளு எஸ்கேப்பூ. அங்க பணம் கொடுப்பாரோ இல்லையோ, தினமும் பொள்ளாச்சியில இருந்து வார பேருந்துல டைகர் நேச்சர் கிளப்பின் சயிண்ட்டிஸ்க்கு (யாரு நம்மதான்) தவறாம, இருக்கிற அத்துனை நாளிதழ்கள், வார, இரு வார மகஜின்கள் என்று தினமும் சப்ளை நடந்தது.

கீழே இருந்து திருப்பூர் பனியன் கம்பெனி வாலாக்களிலிருந்து மத்த கவுண்டர் குடும்ப ஆட்கள் வரை மேலே வரும் பொழுது என்னை "கைடு" வேலைக்கு அட நம்ம நிறுவன சயிண்ட்டிஸ்ட்னு அள்ளிப் போட்டுக் கொண்டு அங்குள்ள ஜீவராசிகளை சுட்டிக் காட்ட அழைத்துச் செல்வார்கள்.
இவ்வளவுக்கும் சம்பளம் ரூபாய் 500. இன்னமும் டாப்ஸ்லிப் ரேஞ்சர் எல்லார்கிட்டயும் சொல்லி சிரிக்கிறாராம் நான் அங்க இருந்தப்ப இரண்டு மாத மெஸ் பாக்கின்னு. இது கூட எனக்கு இப்ப ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்னால் சென்றப்பத்தான் தெரிய வந்தது.

அந்த "தங்களின்" போதுதான் எனக்கு "தனிமையின்" அவசியம் புரிய ஆரம்பித்தது. பெரும்பாலான நேரங்களில் தனியாகவே கரியஞ்சோலையின் வழியாக நடந்து சென்று அங்குள்ள வாட்ச் டவரில் நிறைய நேரம் அருகமையே உள்ள ஒரு சின்ன நீர் தொட்டியை(water hole) இலக்காகப் பார்த்து அமர்ந்து விடுவதுண்டு. கோடையில் விலங்குகள் தண்ணீர் பற்றாக்குறையின் போது அங்குதானே வரும், அங்கு வைத்துப் பார்ப்பதற்கு ஏதுவாக அந்த தொட்டி. அந்த அனுபவம் எத்துனை கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்கறிய. அது மற்றுமொரு உந்துதல் பலகையாக பின்னாலில் அமைந்தது என்றால் அது தான் உண்மை.

கொஞ்ச நாட்கள் கழிச்சு இது சரிப்பட்டு வராதுப்பான்னு என்னாட வழி இதிலிருந்து மீண்டு கொஞ்சம் நல்லபடி இருக்கன்னு பார்த்தப்பத்தான். முதுமலையில இருக்கிற IISC., CES களப்பணி மையத்தில இருந்து களப்பணியாற்றுவதற்கு ஒரு ஆள் தேவைப்பட்டது தெரிஞ்சது. தலை தெறிக்க ஓடி அங்ஙன விழுந்தேன்.

(ஆறு). அங்கதான் இரண்டாவது(எங்க லைன்ல) பெரிய ஆள இந்தியாவில சந்திச்சேன். முதல்ல நான் டாப்ஸ்லிப்ல சந்திச்ச என் ப்பி.எச்டி அட்வைசர் டாக்டர். அஜித் குமார் இவர் காம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில இருந்து இந்திய சிங்க வால் குரங்குகளின் மீது ஆராய்ச்சி பண்ணி ப்பி. எச்டி பண்ணவர். ஒரு பெரிய குரங்கு ஆராய்ச்சி நிபுணர் இந்தியாவிலிருந்து - உலகத்தில எல்லாருக்கும் தெரியும் இந்த லைன்ல இருக்கவங்களுக்கு. இந்த IISC., களப்பணியில சேர்ந்தப்ப அங்க இரண்டாவது பெரிய ஆள் யானைகளின் மீது ஆராய்ச்சி நடத்துரவர் டாக்டர் சுகுமாரை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

இதுக்கிடையில் சும்மா கை பரபரக்க எ.ஜே.ட்டி ஜான்சிங், ஆசாட் ரஹ்மானின்னு, ஈஸ்வர் ப்ரகாஷ் யாரெல்லாம் இந்தியாக்குள்ள பெரிய வனவாழ் ஜீவராசிகள் ஆராய்ச்சியாளர்கள் இருக்காங்களோ அவங்களுக்கு நான் யாரு, எவருன்னு சொல்லி வேலை கேட்டோ இல்லைன்னா நான் தனியாக குஜாராத்தில் இருக்கும் சவுக்கு நில காட்டுக் கழுதைகளின் மீது ஆராய்ச்சி செய்யணுமின்னு ப்ரியப் படுறேன் எனக்கு நிதி உதவி கிடைக்குமான்னு கல்லெறிஞ்சு பார்க்கிறது சொந்தக் கடுதாசி மூலமாக. பிரிதொரு நேரத்தில் அவங்கெல்லாம் எங்காவது நான் சந்திக்க நேரும் பொழுது கண்டிப்பாக என் பெயரை கேக்கும் பொழுது ஞாபகத்தில் நிக்கிற மாதிரி அந்த கடுதாசி இருந்ததை சொல்லி கேட்டதுமுண்டு.

இதினாலே என்னாடா தெகான்னு கேட்டா. அட, அய்யாக்களா இவங்கள எல்லாம் சந்திச்சப்ப நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயம், எளிமை இவ்வளவு பேரு எடுத்துருந்தாலும், பொண்டாட்டியோட சமையல் கட்டுல நின்னு உதவி பண்றது. தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவி வைக்கிற டீசன்சி. தன் குழந்தைகள குளிப்பாட்டி விடுறதுன்னு வாழ்க்கையை வாழவும் கத்துக் கொடுத்தாங்க. அது.

(ஏழு). இப்ப நம்ம காதல் கதை. நம்மூர்ல, இருக்கிற ஜாதிக்குள்ள இன்னமும் உப ஜாதியா இருந்தாக் கூட இல்லவே இல்லைன்னு மறுத்து திருமணத்துக்கு ஒத்துக்காத காலக் கட்டத்தில நான் போயி இனம் விட்டு இனம்(race) திருமணம் பண்ண சம்மதிக்க வைக்கணுமின்ன ச்சும்மாவா. ஆத்தாவும், அம்மாவும் விட்டேனா பாருங்க, நான் சின்ன வயசில ஸ்கூலுக்கு இழுத்துட்டுப் போறப்ப எடுத்துகிட்ட கடிக்கிற டிரைனிங் ;-), கிணத்துக்குள்ள இறங்கி எ.பி.சி.டி படிச்ச கெட்டிக்காரத்தனமெல்லாம் பயன்படுத்தினதுனாலே, அந்த நேரத்தில வெற்றி நம்ம பக்கம்தான். பிறகு எல்லோரும் குடும்பத்தோட "மார்ஸ் அட்டாக்" படம் பார்த்திட்டு வெளியே வந்தப்ப அம்மா பயந்து மிரண்டு போயி தம்பி நீ எப்படிடா தனியாள போயி அங்கே(அமெரிக்காவில) சமாளிக்கப் போறேன்னு கேட்டு பீதியக் கெளப்புற அளவுக்கு உண்மையான காட்டானகவே இருந்திருக்கேன்.

இருந்தாலும் என் அம்மாவும் அப்பாவும் போன பிறவியில வெள்ளைக் காரய்ங்களா பொறந்துருப்பாங்களோன்னு அப்பப்ப சந்தேகம் வருது. நான் அடிக்கிற கூத்துக்கெல்லாம் உடன் பட்டு, என்னைய விட்டுப் பார்த்து அதில இருந்து கிடைக்கிறதெ பகிர்ந்துக்கிற அளவிற்கு முதிர்ச்சி எங்கேயிருந்து வந்தது? இன்னமும் கேட்டுக் கிட்டுத்தான் இருக்கேன் அந்தக் கேள்விய. அந்த விசயத்தில் நான் கொடுத்து வைச்சவன். I do love my parents dearly.

இந்த திருமணத்தில என்ன சாதனைன்னா, "சுய பரிசோதனை"ங்கிறது ஒவ்வொருவருக்கும் எவ்ளோ முக்கியமின்னு தெரிஞ்சுக்கிட்டதுதான். எல்லாத்தையும் எனக்கு நானே சொல்லிக் கொடுத்துக்கிட்டு தெரிஞ்சுக்கணுமின்னு, ஏதோ ஒண்ணு என்னை பிடிச்சு தள்ளிக்கிட்டே இருந்துச்சு. இன்னும் அந்த "தனம்" இருக்கு. இந்த கரடு முரடான பாதையின் மூலமாக எனக்கு கிடைச்ச ஒரு சந்தோஷம் என் மகன். :-). இதுவும் சாதனைதானே?

(எட்டு). நான் அமெரிக்கா வந்தப்பெல்லாம் இம்பூட்டு சாஃப்ட்வேர் மக்கள்ஸ் இல்லை இங்க. இப்பத்தான் எங்கே நான் இருக்கேன்னு தெரியாத அளவிற்கு நிறைய இளம்தாரி புள்ளைகள பார்க்க முடியுது. என் முதல் வேலை இங்க வந்தவுடன் பார்த்தது ஒரு விரைவு உணவகத்தில் அதுவும் கடை மூடுற ஷிஃப்ட், விடிகாலை மூன்று மணிக்கு துடைச்சு, மொழுகி, கடையடைச்சுட்டு பனிக்காலங்களில் மிதிவண்டி அழுத்த முடியாதாகையால் கால்நடையாக சில நேரங்களில் முழங்கால் முழுக சரக் சரக்கென்று கொட்டிக் கிடக்கும் snowவின் ஊடே நடந்தே வீடு சேர்வது. சேர்ந்த புதிதில் நிறைய நின்று வேலை செய்தும், டேபில் துடைச்சு பழக்கமில்லாததாலும் இந்திய அசட்டுத் தனத்தில், பாத்ரூம் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டு அழுததுண்டு.

இப்பொழுது நினைத்தால் நான் எவ்வளவு spoilt bratஆக இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று புரிகிறது. ஆனால் அந்த வேலையின் மூலமாக நான் எப்படி corporate(capitalistic) america வேலை செய்கிறது என்பதனை அறிந்து கொண்டேன்.

வந்த புதிசில இங்க உள்ள நிறைய பல்கலை கழங்களுக்கு போக வாய்ப்பும் கிடைத்தது. அப்படி கிடைச்சப்ப என் தீஸிஸ் எழுத நிறைய ரிபஃரென்ஸ்க்கு அங்குள்ள நூலகங்களையும் பயன் படுத்திக்க முடிஞ்சுச்சு. எப்படி உண்மையான அறிவியல் உலகம் இந்த உலகத்தில் இயங்குகிறதென கண்கூடாக பல அறிவியல் கான்ஃபரென்ஸ்களில் காண நேர்ந்தது.
இங்கும் அதே பல்லவியே பாடப்பட்டது (brown nosing, internal politics, references etc., etc.,). விடாது இந்திய வன ஆராய்ச்சித் துறையில் முனைவர் பட்டத்துடன் இங்கு கணிதத்தை தவிர வேறு எது கொடுத்தாலும் அடித்து விளையாடும் சொந்த நாட்டுக் காரர்களுடன் பேசிச் ஜெயிப்பது என்பது கொம்பாகவே எனக்குப் பட்டது. சிறிது காலங்கள் மோதி விட்டு, எனது ஆர்வத் துறையிலிருந்து நிறைய மாற வேண்டி இருந்ததால்(compromise), துறைசார் வேலையை கொஞ்சம் தள்ளிப் போட்டு விட்டு இப்பொழுது எனக்கு நானே சம்பளம் கொடுத்துக் கொள்வதாக வாழ்வை அமைத்துக் கொண்டது.

சரி முடிச்சுடறேன். இதிலிருந்து என்ன தெரிஞ்சுக் கிட்டேன் வாழ்க்கையைப் பற்றின்னா. ரொம்பச் சிம்புல். நீ யாரோ அதுவாகவே இரு. பேப்பர் ரோஸ்டை (அட தோசைங்க) அமெரிக்காவில் இருக்கிறேன் என்பதற்காக fork and knifeவைத்து சாப்பிட்டு உன்னையே காமெடியன் ஆக்கிக்கொள்ளதே :-). படிப்பு என்பது உன் கண்களை திறந்து காட்டி, சிந்திக்க வைப்பதற்கு மட்டுமே அந்த பட்டையங்களை ஈன்று விட்டதின் மூலமாக நான் அதி புத்திசாலியாகிவிட்டதாக பொருள் கிடையாது. அடக்கம் அமரருள் உய்க்கும்.

அட ஆமாமில்ல எட்டு பேர நான் பரிந்துரைக்கணுமில்ல:

மதி கந்தசாமி
நவன்
சுந்தர வடிவேல்
குமரன்(Kumaran)
செல்வ நாயகி
ஞானசேகர்
மங்கை
சுகா

யம்மாடியோவ். தண்ணீ ப்ளீஸ்.

52 comments:

Thekkikattan|தெகா said...

பி.கு: இரண்டாவது எட்டை நீங்க முழுசா படிச்சீட்டீங்கன்னா உண்மையிலேயே உங்களுக்கெல்லாம் என்னமோ ஆயிடுச்சுன்னு அர்த்தம். அம்பூட்டு அன்பா'ன்னு கேட்டேன் :-))

இலவசக்கொத்தனார் said...

//பேப்பர் ரோஸ்டை (அட தோசைங்க) அமெரிக்காவில் இருக்கிறேன் என்பதற்காக fork and knifeவைத்து சாப்பிட்டு உன்னையே காமெடியன் ஆக்கிக்கொள்ளதே :-).//

அப்போ Chopsticks ஓக்கேவா? :))

முத்துகுமரன் said...

எனக்கு என்னா ஆச்சுனு பார்த்து சொல்ல்ல்ங்க டாக்டர்(Ph.d)

Unknown said...

//அம்பூட்டு அன்பா'ன்னு கேட்டேன் :-)) //

ஆமாப்பா ஆமா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கொண்ணும் ஆகலை.அங்கங்க ஓட்டமா படிச்சேன்..

நீங்க ஏவிசின்னது சந்தோஷம்..

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

//படிப்பு என்பது உன் கண்களை திறந்து காட்டி, சிந்திக்க வைப்பதற்கு மட்டுமே ...///

மிகப்பெரிய உண்மை. பல சாதனைளை அமைதியாக, எளிமையாக சொல்லிருக்கிறீர்கள்.

சாலிசம்பர் said...

மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.உங்களுடைய காட்டு வாழ்க்கை பொறாமை கொள்ள வைக்கிறது.

பொன்ஸ்~~Poorna said...

//யம்மாடியோவ். தண்ணீ ப்ளீஸ். //
யம்ம்ம்ம்ம்ம்மாடியோஓஓவ்.. முழுக்க படிச்ச எனக்கும் கொஞ்சம் தண்ணீ ப்ளீஸ்...

Thekkikattan|தெகா said...

இலவசம்,

அப்போ Chopsticks ஓக்கேவா? :)) //

பண்ணாலும் பண்ணுவாய்ங்கவோய். யாருக்கு தெரியும். இருந்தாலும் வுமக்கு ரொம்பத்தேன் குசும்பு... :-))

ஆமா, முழுசா படிச்சீங்களா எழுதின எனக்கே கண்ணெ கட்டுதே... அப்ப வுமக்கு... :-P

சிவபாலன் said...

தெகா

பொறுமையாக யோசித்து சுவாரசியமாக பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். (கொஞ்சம் பதிவு பெரிதாகிவிட்டது).

எனினும் நல்ல பகிர்வு!

Jazeela said...

//பொண்டாட்டியோட சமையல் கட்டுல நின்னு உதவி பண்றது. தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவி வைக்கிற டீசன்சி. தன் குழந்தைகள குளிப்பாட்டி விடுறதுன்னு வாழ்க்கையை வாழவும் கத்துக் கொடுத்தாங்க. அது.// ரொம்ப நல்ல விஷயம். உங்கள மாதிரி ஆராய்ச்சியாளர்களை நான் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்யும் போது சந்தித்திருக்கிறேன். அவர்கள் பெயரெல்லாம் நினைவிலில்லை ஆனால் அவர்களெல்லாம் எப்போதும் ஒருவிதமான சிந்தனையிலேயே மிதப்பார்கள் - நீங்கள் எப்படி? அப்புறம் அந்த இனம் விட்டு இனம் திருமணம் -அப்பப்பா எப்படித்தான் சாத்தியப்பட்டதோ? என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. காதல் கண்ணை மட்டுமல்ல மண்ணையும் மறைத்துவிடுகிறது ;-)

Thekkikattan|தெகா said...

முத்துகுமரன்,

எனக்கு என்னா ஆச்சுனு பார்த்து சொல்ல்ல்ங்க டாக்டர்(Ph.d)//

ஊசிய எங்கே குத்தறது, அய்யாயஓஓ நான் அந்த டாக்குடரு இல்லீங்க, கதவு மாத்தி தட்டுறீங்க... அவங்க விலசாம் வந்து "இலையுதிர்காலம்." :-)

மங்கை said...

/என்னைய விட்டுப் பார்த்து அதில இருந்து கிடைக்கிறதெ பகிர்ந்துக்கிற அளவிற்கு முதிர்ச்சி எங்கேயிருந்து வந்தது? ///

வேற வழி...ஹ்ம்ம்ம்
இருந்தாலும் அது நூத்துக்கு நூறு உண்மை...

இங்க எங்க ஊர்ல, அதான் இந்தியாவுல, வாய்க்கு பூட்டு போடற மாதிரி ஒரு chewing gum வந்து இருக்கு...

இலவசக்கொத்தனார் said...

//இருந்தாலும் என் அம்மாவும் அப்பாவும் போன பிறவியில வெள்ளைக் காராய்ங்களா பொறந்துறப்பாங்களோன்னு அப்பப்ப சந்தேகம் வருது.//

நல்லா சண்டை போடத் தோணுது. இருங்க மின்னரட்டையில் வரேன்.

:-X

கப்பி | Kappi said...

//பி.கு: இரண்டாவது எட்டை நீங்க முழுசா படிச்சீட்டீங்கன்னா உண்மையிலேயே உங்களுக்கெல்லாம் என்னமோ ஆயிடுச்சுன்னு அர்த்தம். அம்பூட்டு அன்பா'ன்னு கேட்டேன் :-))
//

ஆமாங்க ஆமா :))

நேர்ல பேசற மாதிரி ரொம்ப சுவாரசியமா சொல்லியிருக்கீங்க தெகா!

Thekkikattan|தெகா said...

ரயிலு,

ரொம்ப "அ(ன்)ம்பு" வழிஞ்சோடுது பாருங்க... காட்ச் இட்.

அதுக்கு ஏன்யா கண்ணீர் எல்லாம் விட்டு அழுகுறீங்க... :-))

Unknown said...

ரொம்ப "அ(ன்)ம்பு" வழிஞ்சோடுது பாருங்க... காட்ச் இட்.

அதுக்கு ஏன்யா கண்ணீர் எல்லாம் விட்டு அழுகுறீங்க... :-)) //

ஒங்க கதய படிச்சவங்களுக்கே இப்படி இருக்கே " நேத்து கேட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும்?

Thekkikattan|தெகா said...

முத்து,

எனக்கொண்ணும் ஆகலை.அங்கங்க ஓட்டமா படிச்சேன்..//

ஓ! ஸ்கான் பண்ணியிருவிங்களா அப்படியே பார்த்தே :-))

நீங்க ஏவிசின்னது சந்தோஷம்...//

நீங்களும் ஏவிசி தானா? கேள்விப்பட்டேன் இங்க ஒரு பெரிய மாயூரம் குரூப் இருக்கிறதா...

நாமக்கல் சிபி said...

//this is very touching!//
Repeatu!

Romba Kashtapattu Niraiya Learn Pannirukkenga Thekka!

நாமக்கல் சிபி said...

I had the plan of Great Kummi Hear!

But Ennamo Manasu Varalai!

Santhosh said...

கலக்கல் தெ.கா,

/
யம்மாடியோவ். தண்ணீ ப்ளீஸ்.//
சொன்ன உமக்கு தண்ணீன்னா படிச்ச எங்களுக்கு என்ன? ஸ்ஸ்யப்பா முழுசா படிச்சி முடிக்கிறதுகுள்ள போதும் போதும் ன்னு ஆயிடிச்சி..

துளசி கோபால் said...

சூப்பரா எட்டு போட்டு இருக்கீங்க.
ஒரே டச்சிங் டச்சிங்.

செல்வநாயகி said...

இரண்டு இடங்களில் வியந்து நெகிழ்ந்தேன் தெக்கிக்காட்டான். உங்கள்மேல் ஏற்கனவே இருந்த மரியாதையும் கூடிப்போகிறது.

நீங்கள் ஆத்தாவைக் கையைக் கடித்து ஆர்ப்பாட்டம் பண்ணியதெல்லாம் படித்து சிரிப்பும் நிற்கவில்லை:))

வலைப்பதிவில் நீங்கள் இயங்காதிருந்த காலகட்டத்தில் எப்போதாவது எங்கே அவரைக் காணவில்லை என நினைத்துக்கொண்டதுண்டு. ஆனால் வந்து ஆட்டம், விளையாட்டு என வரும்போது மறக்காமல் என்னை இப்படி மாட்டிவிடுவதில் உங்களுக்கு என்ன மகிழ்ச்சியோ:))

Thekkikattan|தெகா said...

பாரி,

//மிகப்பெரிய உண்மை. பல சாதனைளை அமைதியாக, எளிமையாக சொல்லிருக்கிறீர்கள்.//

முதல் முறை வீடு வந்திருக்கிறீர்கள், நன்றி!. நல்வரவு!!

ஹ்ம், நம்மூரில் படிப்பு என்பது பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் ஒரு ஆபரணம். இரண்டாவது, தலை முழுக்க கர்வம். அந்த இரண்டு எழுத்தை போட்டுக் கொண்டதின் மூலமாக என்ன சொல்ல வருகிறோம். அருவருக்க தக்கச் செயல்.

ஆமாம், நீங்கள் புதுகை பக்கமா?

Thekkikattan|தெகா said...

ஜாலிஜம்பர்,

வாங்க, வாங்க முதல் முறையா நம்ம வீட்டாண்டை பார்க்கிறேன். நல்வரவாகுக!

உங்களுடைய காட்டு வாழ்க்கை பொறாமை கொள்ள வைக்கிறது.//

உண்மைதான், அங்கு கற்றுக் கொள்வதற்கு நிறைய விசயங்கள் இருக்கிறது, வால் ஸ்ட்ரீடை () காட்டிலும் ;)

ஆமாம், இயற்கை நேசி பதிவுகள் எல்லாம் படிப்பதுண்டா. போங்க அங்கே நிறைய தீணி இருக்கிறது உங்களுக்கு காதில் புகைவிட :-))

பத்மா அர்விந்த் said...

ரசித்து அனுபவித்து படித்தேன்.
பாராட்டுக்கள். இன்னும் விரிவாக எப்போதாவது உங்கள் ஆராய்ச்சி அனுபவங்களை எழுதுங்கள்.

Thekkikattan|தெகா said...

பொன்ஸாத்தா,

யம்ம்ம்ம்ம்ம்மாடியோஓஓவ்.. முழுக்க படிச்ச எனக்கும் கொஞ்சம் தண்ணீ ப்ளீஸ்...//

ரொம்பத்தான் நக்கலுலுலு :-P

தருமி said...

தெக்ஸ்,
//நான் எவ்வளவு spoilt bratஆக இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று புரிகிறது//

அப்போ இப்ப மாறிட்டேன் அப்டிங்கிறீங்களா? :)

//நீ யாரோ அதுவாகவே இரு.//

ரொம்ப சாதாரணமா சொல்லீட்டீங்க பெரிய மகரிஷி மாதிரி .. நான் யார் அப்டின்றதெல்லாம் தெரிஞ்சிட்டா நீங்களும் நானும் பெரிய ஆளுகளா ஆயிட மாட்டோமா என்ன?

பக்கத்தில உக்காந்து உங்க கதை கேட்ட மாதிரி இருந்தது. நன்று.

Thekkikattan|தெகா said...

சிவா,

பொறுமையாக யோசித்து சுவாரசியமாக பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். (கொஞ்சம் பதிவு பெரிதாகிவிட்டது).

எனினும் நல்ல பகிர்வு!//

இன்னும் வந்து விழுந்திட்டே இருந்தது சிவா, அணை போட்டுத் தடுக்க வேண்டியதாப் போச்சு.

பயனுள்ளதாக இருந்தால் சரிதான்.

SurveySan said...

முழுசும் படிச்சேன்பா. நல்லாவே இருந்துது.

வல்லிசிம்ஹன் said...

எட்டு எட்டையும் படிச்சாச்சு. நீங்கதான் சூப்பர் எட்டுனு நினைக்கிறேன். :))) இதுக்குள்ள முடிக்க முடிஞ்சதே ஆச்சரியம்தான்.
ரொம்ப நல்லா இருக்கு தெ.கா.

Thekkikattan|தெகா said...

ஜெஸிலா,

//ஆனால் அவர்களெல்லாம் எப்போதும் ஒருவிதமான சிந்தனையிலேயே மிதப்பார்கள் - நீங்கள் எப்படி?//

நானா சிந்தனையா, என் மற்ற பதிவுகளை படிச்சிருக்கீங்களா :-))

அப்புறம் அந்த இனம் விட்டு இனம் திருமணம் -அப்பப்பா எப்படித்தான் சாத்தியப்பட்டதோ? என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. காதல் கண்ணை மட்டுமல்ல மண்ணையும் மறைத்துவிடுகிறது ;-)//

இரண்டு விதங்களில் இது சாத்தியப்படும் 1) காட்டான் நிலையில் :-P 2) கடவுள் நிலையில் :-))) கண்ணெ மூடிக்கிட்டு குதிச்சுற வேண்டியதுதான், தானால எல்லாம் நடக்கும்...

Thekkikattan|தெகா said...

மங்கை,

வேற வழி...ஹ்ம்ம்ம்
இருந்தாலும் அது நூத்துக்கு நூறு உண்மை...

இங்க எங்க ஊர்ல, அதான் இந்தியாவுல, வாய்க்கு பூட்டு போடற மாதிரி ஒரு chewing gum வந்து இருக்கு...//

என்னங்க ரொம்ப எமொஷனலா என்னமோ சொல்ல வந்திட்டு பாதியிலேயே விட்டுட்டுப் போன மாதிரி இருக்குது...

இருந்துட்டு போகட்டும் விடுங்க...

கவிதா | Kavitha said...

தெகாஜி, இது எல்லாம் டூ மச்... எப்படா 8 போட கூப்பிடுவாங்க.. 1 என்ன ஒரு 100, 8 போட்டுடலாம்னு காத்துக்கொண்டு இருந்தமாதிரி எழுதி இருக்கீங்க... ..... முடியலைங்க... இனிமே உங்களை கூப்பிட்டா கேளுங்க... :)))))

நிறைய விஷயம் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டது போல் தோணுது.. இருந்தாலும் பதிவு சூப்பர்...

Thekkikattan|தெகா said...

கொத்ஸ்,

நல்லா சண்டை போடத் தோணுது. இருங்க மின்னரட்டையில் வரேன்.

:-X//

சொன்ன மாதிரி வந்து பரிகாரம் வாங்கிட்டுத்தானே விட்டீக. யாத்தோ, என்ன இப்படி இருக்கீக ;-)

Thekkikattan|தெகா said...

கப்பி,

ரொம்ப நன்றி கப்பி, இப்படி ஒரு சந்தர்ப்பத்தை வாங்கி கொடுத்தற்கு.

ramachandranusha(உஷா) said...

தெ.கா. என்ன சொல்வது என்று தெரியவில்லை. எல்லாரும் சொல்லிவிட்டார்கள். புதியதாய் என்ன சொல்ல? சர்வேசன் பெஸ்ட் "எட்டு" சர்வே போடுகிறாராம். உங்களுதாய்யா நம்பர் ஓன் .

Thekkikattan|தெகா said...

வாங்க டாக்டர்,

இதுதான் தங்களுக்கு கிடைத்த முதல் ஆசிர்வாதம்...//

அது உண்மைதான். எனக்கு ஆசிர்வாதம் வழங்கிட்டார். ஆனா, அவருக்கு??

பரவாயில்லை..புண்ணியவான் .//

அந்த ஆளு இன்னமும் அந்த தொழிலை நடத்திக்கிட்டுத்தான் இருக்கிறதா கேள்வி. :-)

ஹும், அந்த டச்சிங் பார்ட் எல்லாம் ச்சின்ன ச்சின்ன அசட்டுத் தனமெல்லாம் களையெடுக்க உதவினுச்சு, ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு என்னோட conscious modeயை shift பண்ண உதவிணுச்சு. போருக்கு பின்னால் அமைதி மாதிரி. :-)

இலையுதிர்காலத்திற்கு பிறகு வசந்தகாலம் மாதிரி :-P

Anonymous said...

//களையெடுக்க //

இந்த வார்த்தையை கொடுத்து உதவிய எனக்கு ஒரு நன்றி கூட சொல்லும் அளவுக்கு இந்த சமுதாயம் தெகாவுக்கு பாடம் கற்றுத் தரவில்லை என்ன சமுதாயம் இது என்று சுட்டிக்காட்ட நான் கடமைப் பட்டுளேன்

Thekkikattan|தெகா said...

சிபி,

I had the plan of Great Kummi Hear!

But Ennamo Manasu Varalai!//

என்னய்யா இப்படி உணர்ச்சி வசப்பட்டீங்க. மேலே டாக்டரம்மாவிற்கு கொடுத்திருக்க பதிலைப் படிங்க. ஹும், சாரி உங்க மனசை எரடி இருந்தா...

PPattian said...

//படிப்பு என்பது உன் கண்களை திறந்து காட்டி, சிந்திக்க வைப்பதற்கு மட்டுமே அந்த பட்டையங்களை ஈன்று விட்டதின் மூலமாக நான் அதி புத்திசாலியாகிவிட்டதாக பொருள் கிடையாது. அடக்கம் அமரருள் உய்க்கும்.//

உண்மைதானுங்க

சுவையா இருந்தது உங்க 8. எட்டுக்கே Moral of the Story சொன்ன முதல் ஆள் நீங்கதானோ!! ஆமா, அந்த குஜாராத்தில் இருக்கும் சவுக்கு நில காட்டுக் கழுதைகளின் ஆராய்ச்சி செஞ்சீங்களா?

Thekkikattan|தெகா said...

சந்தோஷ்,

சொன்ன உமக்கு தண்ணீன்னா படிச்ச எங்களுக்கு என்ன? ஸ்ஸ்யப்பா முழுசா படிச்சி முடிக்கிறதுகுள்ள போதும் போதும் ன்னு ஆயிடிச்சி..//

படிச்ச உங்களுக்கு, வாங்க வீட்டுக்கு திரும்பவும் அரைக்கிற சட்டினியில உங்களுக்கே தெரியாம கடந்த முறை ரெட் ஒயின் தண்ணீருக்குப் பதிலாக ஊத்தி தயாரிச்ச மாதிரி இந்த முறையும் ச்சும்மா கும்மென்று தயாரித்துப் பரிமாறி விடுவோம் :-))

எப்ப வாரீங்க?

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

சூப்பரா எட்டு போட்டு இருக்கீங்க.
ஒரே டச்சிங் டச்சிங். //

இரண்டாவது பகுதியில நிறைய டச்சிங் டச்சிங் இருந்துப் போச்சோ. முடிஞ்ச அளவிற்கு முயற்சித்துப் பார்க்கிறதா வேண்டாமா?

குட்டிபிசாசு said...

அண்ணே,

நீங்க பி.எச்.டி. முடிச்சிடீங்களா? இப்ப எந்த யுனிவெர்சிடில இருக்கீங்க!!

Thekkikattan|தெகா said...

நாயகி,

நீங்கள் ஆத்தாவைக் கையைக் கடித்து ஆர்ப்பாட்டம் பண்ணியதெல்லாம் படித்து சிரிப்பும் நிற்கவில்லை:)) //

ஆத்தாவைத்தான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அதெல்லாம் ஒரு காலம்ங்க, கிடைக்குமா திரும்ப... :-)

வலைப்பதிவில் நீங்கள் இயங்காதிருந்த காலகட்டத்தில் எப்போதாவது எங்கே அவரைக் காணவில்லை என நினைத்துக்கொண்டதுண்டு. //

அப்படியா, சந்தோஷமா இருக்கு கேக்க.

ஆனால் வந்து ஆட்டம், விளையாட்டு என வரும்போது மறக்காமல் என்னை இப்படி மாட்டிவிடுவதில் உங்களுக்கு என்ன மகிழ்ச்சியோ:))//

அதெப்படிங்க உங்களமாதிரி போராளிகளை மறக்க முடியும், அதான் போட்டுக் கொடுக்கிறது. எழுதணும் சொல்லிப்புட்டேன் ஆமா. :-))

வவ்வால் said...

தெ.கா ,

எப்படி சொல்வது, 7.5 என்று சொன்னாலும் காடும் காடு சார்ந்த இடமும் உங்கள் அனுபவமும் சேர்ந்து கலக்கி எடுத்துட்டிங்க ,

Thekkikattan|தெகா said...

பத்மா அர்விந்த்,

நன்றி! முடிந்தளவிற்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் இங்கேயும், இயற்கை நேசி பதிவுகளிலும்.

siva gnanamji(#18100882083107547329) said...

படிப்பு பற்றிய உங்கள் விளக்கம் மிக அருமை;அனைவரும் மனதில் இருத்த வேண்டிய உண்மை.....

Thekkikattan|தெகா said...

தருமி,

அப்போ இப்ப மாறிட்டேன் அப்டிங்கிறீங்களா? :)//

:-)) அடிப்படை சுபாபமென்று ஒன்று இருக்கிறதே, அவ்வப்பொழுது எட்டிப் பார்க்கும், நான் யாரு "ராயல் இரத்தம்" என்ற உணர்வு, அது நம்மோட அடிப்படை நாத உணர்வென்று என்று நினைக்கிறேன் (இந்தியர்களுக்கென).

முன்னேக்கு இப்ப பராவயில்லை என்றுதான் தோன்றுகிறது.

ரொம்ப சாதாரணமா சொல்லீட்டீங்க பெரிய மகரிஷி மாதிரி .. நான் யார் அப்டின்றதெல்லாம் தெரிஞ்சிட்டா நீங்களும் நானும் பெரிய ஆளுகளா ஆயிட மாட்டோமா என்ன? //

பிறகு இல்லையா, தருமி? கம் ஆன், யூ ஆர் தட் ;)

நன்றி, உங்களின் மிரட்டல்தான் என்னை இந்த எட்டை எழுத வைத்தது :-)).

Thekkikattan|தெகா said...

சர்வேயரே,

நன்றி, இங்க வந்து பொறுமையாக படிச்சிப்போட்டு போனதுக்கு.

Thekkikattan|தெகா said...

வல்லிம்மா,

எட்டு எட்டையும் படிச்சாச்சு. நீங்கதான் சூப்பர் எட்டுனு நினைக்கிறேன். :))) இதுக்குள்ள முடிக்க முடிஞ்சதே ஆச்சரியம்தான்.
ரொம்ப நல்லா இருக்கு தெ.கா.//

உங்க ஆசீர்வாதங்கள் எல்லாம் இருக்கும் பொழுது பிறகென்ன அடிச்சி விளையாண்டு பார்த்திட வேண்டியதுதான்.

நன்றி! இரண்டாவது முறையும் மனச விட்டுடாம வந்து படிச்சிட்டுப் போனதுக்கு :-))

Thekkikattan|தெகா said...

கவி''தா,

தெகாஜி, இது எல்லாம் டூ மச்... எப்படா 8 போட கூப்பிடுவாங்க.. 1 என்ன ஒரு 100, 8 போட்டுடலாம்னு காத்துக்கொண்டு இருந்தமாதிரி எழுதி இருக்கீங்க... ..... முடியலைங்க... இனிமே உங்களை கூப்பிட்டா கேளுங்க... :)))))//

நீங்க எப்ப அடிச்ச ஜோக்குக்கு எப்ப வந்து நான் பதிலிரைக்கிறேன் பாருங்க, எல்லாம் ஆறி பச்சக் கஞ்சிய ஆச்சு, நீங்களும் வந்து வந்து க்ளிக்கி, க்ளிக்கிப் பார்த்து ஒரு நூறு என் கவுண்டரில அனியாயத்துக்கு ஓடியிருக்கும்.

ஆமா, இனிமே எந்த விளையாட்டுக்காவது என் பெயர் உங்க ஞாபகத்தில வரும், வரக்கூடாது :-)))

Related Posts with Thumbnails