Thursday, July 19, 2007

ஒரே குழந்தையும் நோய் எதிர்ப்பு சக்தியும்...!!

இன்றைய தினத்தில் நம் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் இந்த கட்டுக்கடங்காத மக்கள் தொகை பெருக்கமும் ஒரு பெரிய பேசப் பட வேண்டிய விசயமே. இதனை தவிர்க்கும் பொருட்டு கொஞ்சம் பொறுப்பானவர்கள், ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு பெற்றுக் கொள்ளும் சில பெற்றோர்கள், அதீதமாக தாம் குழுந்தைகளின் மேல் கவனம் எடுத்து வளர்க்கிறேன் பேர்வழி என்று பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள் (மற்றுமொரு குழந்தை back upக்கு இல்லையே என்று, அந்த காலம் மாதிரி).

இச் சூழலில் அன்மைய மருத்துவ ஆராய்சிகள் சொல்கிறது, இயற்கையிலேயே அதுவும் தாயிக்கு முதல் குழந்தை எனும் பட்சத்தில் இந்த நோய் எதிர்ப்பு (immune system) சக்தி குறைவாகவே காணப்படுகிறதாம் அக் குழந்தைகளுக்கு. அதாவது, முதல் குழந்தைக்கும் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கும் உள்ள வித்தியாசத்தை அவைகளின் தொப்புள் கொடியில் உள்ள immunoglobulin E (IgE) அளவை கொண்டு ஆஸ்த்மா மற்றும் இதர ஒவ்வாமை தொடர்பான வியாதிகளால் பீடிக்கும் வாய்ப்பை ஒப்பீடு செய்து பார்க்கும் பொழுது முதலாவதாக பிறக்கும் குழந்தைக்கு இந்த immunoglobulin E (IgE) அளவு அதீதமாக இருப்பதால் அவைக்களுக்கு இந்த ஒவ்வாமை சார்ந்த வியாதிகள் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாம்.

ஆனா பாருங்க இந்த மாதிரி முதல் குழந்தைகள் மற்ற (தனது சகோதர, சாகோதரி, இதர) குழந்தைகளுடன் ஓடியாடி கலக்கும் பொழுது இயற்கையாகவே மற்ற கிருமிகளிடத்தே அறிமுகம் கிட்டி மெதுவாக இந்த குழந்தைகளும் சுயமாக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொள்ளுதுகளாம்.

இப்ப வாரேன் பாருங்க விசயத்துக்கு. இது இப்படி இருக்கும் பொழுது இந்த அதீத கவனம் எடுத்துக் கொள்ளும் அப்பா, அம்மாக்கள் பள்ளிகளுக்கு தனது குழந்தைகளை அனுப்பி வைப்பதோடு முடிந்ததாக நினைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தால், வெளியே அனுப்பி சிறிது உடற் பயிற்சி கிட்டும் வண்ணம் விளையாடக் கூட அனுப்ப முடியாமல் இன்னும் நிறைய வேலைகளை குழந்தைகளின் மீது சுமர்த்தி, கோடை விடுமுறையின் போது கூட தனது உறவினர்களின் (உ.தா: தாத்தா, பாட்டி) அண்டைய ஊர்களுக்கு அனுப்பி அங்குள்ள தண்ணீர், மற்றும் இதர உணவு வகைகளை உண்டு இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கா வண்ணம் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்கள் இந்த காலத்தில்.

அக் குழந்தைகளுக்கு சதா மாத்திரை மருந்துகளை ஊட்டி சிறு, சிறு ஜலதோஷம், சிறு காய்ச்சல் போன்றவைகளுக்கும் கூட வீட்டு அணுகு முறையை தவிர்த்து மாத்திரைகளை சோறு போல ஊட்டுவதால் பிரிதொரு காலத்தில் எது போன்ற சக்தி உள்ள மாத்திரைகளை கொடுத்தாலும் கூட அதிக சக்தி உள்ள மருந்துகளை கொடுப்பது மாதிரியும், அந்த மருந்து மாத்திரைகளே இருக்கும் கொஞ்ச நஞ்ச நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து வாழ் நாள் முழுதும் மருந்து மாத்திரைகளை நம்பியே (medicine dependent life) ஓட்டும் நிலைக்குத் ஆளாகிப் போகிறார்கள்.

பெரியோர்களுக்கு இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்திக்க தினமும் கொஞ்ச நேரம் உடற் பயிற்சி செய்தாலே நிறைய கிடைப்பதாக அறியப்படுகிறது. பெண்களின் மார்பக புற்று நோயிலிருந்து, இதயக் கோளாருகள் வரை இதன் பொருட்டு தவிர்க்கப் படுவதாக தெரிகிறது. யோகவும் இந்த வகையில் ஒரு கூடுதலான பரிசு நமக்கு.

எனவே பொற்றொர்களே, பெரியோர்களே குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள. 'ஹும்' என்றால் உடனே பார்மாவுக்கு சென்று மாத்திரை வாங்கிக் கொடுப்பதில் மட்டுமல்ல உங்கள் அன்பு வெளிப்பாடு அதனையும் தாண்டி என்ன இருக்கிறது என்று தேடிப் பார்த்து நிலையானதொரு தீர்வை கொடுங்கள் உங்க அன்புச் செல்வங்களுக்கு.

32 comments:

Thekkikattan|தெகா said...

இதுவும் அக்கம் பக்கம் பார்த்து வெகுண்டு போயி கடைசிய இங்கே கொண்டு வந்தேன். இன்னமும் விசயம் தெரிஞ்சவுங்க, இங்க கொண்டு வந்து சேருங்க. தெரிஞ்சுக்குவோம்.

மங்கை said...

நான் குட் அம்மா...

ஆமா ஆல்ரெடி ஒரு ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கும் இது என்ன புது ஆராய்ச்சி...ஒன்ன முடிச்சுட்டு அடுத்ததுக்கு வாங்க

Anonymous said...

குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஆறு மாசாமாவது கொடுக்கணும்கிறதே மக்களுக்கு மறந்து போச்சே!

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

வணக்கம் தெகா!

புறப்பொருட்களால் வரும் நோய்கள் (diseases caused by foreign bodies) (உதாரணமாக பூஞ்சைகள்,பாக்டீரியாக்கள்,வைரஸ்கள்) நம்மை தாக்கியதும் உடலானது அவற்றை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டு போராடி வீழ்த்துகிறது. உடலின் முக்கியமான ஒரு சிறப்பு ஒரு முறை தாக்கிய புறப்பொருள் அதை எதிர்க்கும் தன்மை ஆகியவை ஒரு குறிப்பு மாதிரி ஜீன்களில் சேமிக்கப்படுகிறது. அதனால் அதே புறப்பொருள் மறுபடி நம்மை தாக்கும்போது நம்முடைய உடலானது பழைய குறிப்பிலிருந்து நோய் எதிர்ப்பு தன்மையை எடுத்துக்கொண்டு அந்த புறப்பொருளை உடனடியாக அழித்துவிடும். இதற்க்கு மிகச்சிறப்பான உதாரணம் ஒரு முறை ஒரு வகையான மஞ்சள்காமாலை உங்களை தாக்கினால், அந்த வகை மஞ்சள்காமாலை நீங்கள் சாகும்வரை உங்களை தாக்க முடியாது.

குறிப்பாக குழந்தை பருவம் முதல் இளமை பருவம் வரை வளர்சிதை மாற்றம் உடலில் அதிகம் அதனால் அந்த காலகட்டத்தில் புறப்பொருள் தாக்கம் இருந்தால் உடல் நோய் எதிர்ப்பு செயலை எளிதாக செய்யும். அப்படியே அதற்க்கான வரலாற்று குறிப்பை ஜீனில் சேமித்து விடும். பிறகு உங்களுக்கு அதே புறப்பொருள் தாக்கம் வரும்போது பாதுகாப்பாக இருக்கலாம்.

Thekkikattan|தெகா said...

மங்கை,

நான் குட் அம்மா...

ஆமா ஆல்ரெடி ஒரு ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கும் இது என்ன புது ஆராய்ச்சி...ஒன்ன முடிச்சுட்டு அடுத்ததுக்கு வாங்க //

அது என்ன நீங்கள உங்களுக்கு சான்றிதழ் கொடுத்துகிறீங்க :-)

ஹி...ஹி...ஹி இது வேற விதமான ஆராய்ச்சிங்கோவ்வ்...

Thekkikattan|தெகா said...

Anonymous said...
குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஆறு மாசாமாவது கொடுக்கணும்கிறதே மக்களுக்கு மறந்து போச்சே! //

ஏங்க நல்ல ஒரு விசயத்தை சத்தமா சொல்ல எதுக்கு ஸ்கீரின் :-)

தாய்ப்பாலில் தாங்க இருக்கு பின்னாலில் குழந்தைகள் எப்படி பொற்றோர்கள் இடத்தில் நடந்துக்கப் போறாங்கங்கிறதில இருந்து, நோய் எதிர்ப்பு சக்திக்கான அத்தனை சூட்சுமங்களும்.

இப்பத்தான் எல்லாமே ஃபஷனாகிப் போச்சே... திரும்ப அமெரிக்கர்கள் தாய்ப்பால் ஊட்டலாமின்னு அந்த ஊர் நடிகை எல்லாம் செஞ்சு காமிச்சா நம்மூரில் குறைந்து கொண்டிருக்கும் இந்த பழக்கம் ஈயாடிச்சான் காப்பியாக திரும்பவும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நன்றி, அனானி!

சிவபாலன் said...

Theka

Good Post!

செல்வநாயகி said...

நல்ல பதிவு தெக்கிக்காட்டான். நன்றி.

Thekkikattan|தெகா said...

பாரி,

//ஜீன்களில் சேமிக்கப்படுகிறது.//

அது ஜீன்களில் சேமிக்கப் படுகிறதான்னு தெரியலை. ஆனால் கண்டிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி உடம்பில் தருவித்துக் கொள்ளப் பயன் படுகிறது.

இது போன்ற சாதாரண (உ.தா: சின்ன அம்மை, மஞ்சள் காமாலை, அடிக்கடி ஜல தோசம் இத்தியாதிகள்.,) வியாதிகள் அப்படி மரபணுக்களில் சேமிக்கப் பட்டிருந்தால் இது போன்ற வியாதிகள் நமது மூத்த சந்ததியர்களுக்கு முன்னமே பீடிக்கபட்டு இருந்த பொழுது அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி நன்கு வேலை செய்து பின்பு மீண்டும் தாக்க வண்ணம் பாதுகாத்திருக்கும் இல்லையா.

அப்படிப் பார்க்கும் பொழுது அந்த நோய் எதிர்க்கும் பண்புகள் அவர்களின் மரபணு பண்புகளின் மூலம் நமக்கு கீழிறக்கம் செய்யப்பட்டு நமக்கும் இது போன்ற சில்லரை வியாதிகள் வராமல் அல்லாவா பாதுகாத்து இருந்து இருக்க வேண்டும்? அதனால், நான் நினைக்கிறேன் இது போன்ற தினப்படி கிருமிகளை தனிப்பட்ட மனிதரின் உடம்பு எதிர்த்துப் போராடுவது அவ்வப் பொழுது நடைபெறும் செயலாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

மற்றபடி உங்களின் பின்னூட்டம் எனக்கு மேலும் சில தகவல்களை தந்தது. நன்றி!

பத்மா அர்விந்த் said...

Delphin
IgE is produced more during a hypersensitivity reaction and asthma being one, it is produced. In general infection it depends which immunity is better for body, B or T cell, with factors like IL, INF etc it is very difficult to just respond on a go.
More over IgE also does not help much in parasitic infection or othe. It is monocytes or macrohages that come in to play. I understand you are trying to be very simple.

India and other places people generaly prefer home medication for simple problems like fever, cold or diarrhea. So it is not accurate number On the other hand people go back, though have T memory activity, still are different acquired form and are prone to infections an dalso more particular to seek medical attention. I am not explaining everything in detail here. There are more factors than just IgE.
Thekaa: A very nice post,and informative

நாமக்கல் சிபி said...

ஆமா தெகா!

இப்பவெல்லாம் சம்மர் வெகேஷன்ல கூட டான்ஸ் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ்னு எதிலாவது சேர்த்து விட்டுட்டு இம்சை பண்ணுறாங்க குழந்தைகளை!

நாமக்கல் சிபி said...

தொப்புள் கொடி இரத்தத்தில் இருந்து எடுக்கப் படும் ஸ்டெம் செல்ஸ் ஐக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று இன்றைய தினத்தந்தியில் ஒரு செய்தியைப் பார்த்தேன்.

ஒரு 8 வயது நீக்ரோ சிறுவனுக்கு சென்னை அப்போலோவில் இது போன்ற சிகிச்சை அளித்துள்ளனராம்!

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

//
இது போன்ற சாதாரண (உ.தா: சின்ன அம்மை, மஞ்சள் காமாலை, அடிக்கடி ஜல தோசம் இத்தியாதிகள்.,) வியாதிகள் அப்படி மரபணுக்களில் சேமிக்கப் பட்டிருந்தால் இது போன்ற வியாதிகள் நமது மூத்த சந்ததியர்களுக்கு முன்னமே பீடிக்கபட்டு இருந்த பொழுது அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி நன்கு வேலை செய்து பின்பு மீண்டும் தாக்க வண்ணம் பாதுகாத்திருக்கும் இல்லையா.
//

மரபணுவியல் தலைமுறைகளுக்கிடையில் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது என்பதை இன்னும் ஆராய்ச்சி அளவில் மட்டுமே வைத்துள்ளது. இன்னும் முடிவான ஆய்வுகள் எதுவும் வரவில்லை என்றே எண்ணுகிறேன். ஆனால் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு முறை புறப்பொருள் ஒன்றால் ஏற்பட்ட நோயை மறுமுறை அதே நோயை பெறுவது கிடையாது. இதிலும் சில விதிவிலக்குள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

தெகா,
போன பின்னூட்டத்தின் தொடர்ச்சி,
மரபணுவியல் சார்ந்த ஓரு விளக்கம், பெரியம்மை தடுப்பூசி, உண்மையில் பெரியம்மை வைரஸ் தான் ஊசியாக போடப்படுகிறது, தடுப்பூசி போட்டப்பிறகு உடல் அந்த வைரஸை எவ்வாறு அழிப்பது என்பதை அறிந்துக்கொள்கிறது. அதன்மூலம் உங்கள் வாழ்நாள் முழுவதும் பெரியம்மை என்கிற நோயிலிருந்து பாதுகாக்கபடுகிறீர்கள்.

விதிவிலக்கு என்று குறிப்பிட்டது,
flu cold and fever இது ஒரு முறை வந்து நீங்கள் குணமானாலும், மறுமுறை வரும். இப்படி விதிவிலக்குகள் உண்டு.

இதுவொரு கடல் தெகா, ஏதொ எனக்கு தெரிஞ்ச மரபணுவியலை பகிர்ந்துக்கொண்டேன் அவ்வளவுதான்..

நன்றி

Thekkikattan|தெகா said...

டாக்டர்,

தெகா.. please give me the reference. I am interested in reading about this.//

நான் கொடுத்த வலைத் தளங்கள் போதுமான்னு பாருங்க இல்லைன்னா இன்னும் இரண்டு இருக்கு தாரேன்.

வீட்டின் முதல் குழந்தை சோனியாக பிறப்பதின் காரணம் இது தானோ.? //

இதுவே உங்களுக்கு செய்தியா, ஹையா, தெகா பெரிசா ஒண்ணை இங்ஙன சொல்லி டாக்டரேக்கு டாக்டரு ஆயிப்புட்டாருய்யா :-))

அமெரிக்கா வாழ் மக்களே.. have you ever noticed this? as long as you are in India you rarely get food poisoning or gastro enteritis, but the moment you go back, you get into all sorts of problems... எல்லாம் இந்த ig E தானுங்கோ.! //

அது ரெண்டு பக்கமும் தானே டாக்டர் நடக்குது. இப்ப புதுசா நீங்க அங்கிருந்து இங்க வரும் பொழுது கொஞ்சம் அப்படி இப்படின்னு ஜீரணம், சிறு, சிறு உடம்பு உபாதைகள் வருவது இயற்கையே. ஏனெனில் நமது ஜீரண மண்டலத்தில் உள்ள லோக்கல் பாக்டீரியக்கள் (நன்மை செய்வன) அந்திய லோகத்தில் வந்து குடியோறும் பொழுது அங்குள்ள கிருமிகளுடன் போராட்டத்தில் குதிக்கும் நிலை ஏற்படுகிறது.

அதுவும் நாள் பட பட இங்குள்ளவைகள் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு உடம்பும் ஒரு சமநிலைக்கு வந்து விடும், அது போல மீண்டும் இந்தியா பக்கம் நீங்கள் இங்கிருந்து சென்று அங்கு எட்டிப் பார்க்க போகும் பொழுது, மீண்டும் முன் சொன்ன இடம் மாற்ற போட்ட போட்டி...

இப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்...

காட்டாறு said...

நல்ல பதிவு தெகா. பின்னூட்டங்கள் பதிவை மேலும் பெருகூட்டிவிட்டன.

பின்குறிப்பு:
மருத்துவரா ஆகும் எண்ணம் ஏதும் இருக்கிறதா? பாவம் அமெரிக்க வாழ் மக்கள்! என்ன கொடுமையடா இது? இந்த ஒரு துறையை விட்டுவைங்களேன். மக்கள் பாவம்!

Thekkikattan|தெகா said...

காட்டாறு,

பின்குறிப்பு:
மருத்துவரா ஆகும் எண்ணம் ஏதும் இருக்கிறதா? பாவம் அமெரிக்க வாழ் மக்கள்! என்ன கொடுமையடா இது? இந்த ஒரு துறையை விட்டுவைங்களேன். மக்கள் பாவம்! //

வாங்கம்மா வாங்க!!

நீங்க கவுஜா எழுதி மிரட்டினவங்களாச்சே அத நாங்க மறந்துடுவோமா அவ்ளோ சீக்கிரம். கவலைப் படாதீங்க உங்க மாநிலத்துக்கு வந்து போலி சான்றிதழ் காட்டி டாக்டர் தொழில் ப்ராக்டீஸ் பண்ணிற மாட்டேன், ஆனா, ஜியார்யாவில தொழில் ஜாரூரா கார் காரஷ்ல நடந்துட்டுதான் இருக்கு... :-)))

நீங்க பொழச்சுப் போங்க ;-))

Thekkikattan|தெகா said...

சிவா,

வாங்கய்யா, நன்றி!

சிவபாலன் said...

தெகா

இந்தியாவில் எங்க டாக்டர் அடிக்கடி சொல்லுவார், தெருவில் உள்ள குழந்தைக்கு உங்க குழந்தையை விட Immune அதிகம் என்று. அது ஒரு வித்ததில் சரிதான் போல.. என்ன அவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை..ம்ம்ம்

அப்பறம் நம்ம கிராம பக்கம் எல்லாம், குழந்தைகளை எப்போதும் வெளியேதான் வைத்திருப்பார்கள். இரவைத்தவிர. அதுவும் கூட ஒரு Immune System அதிகப் படுத்தும் உத்தி என்று இப்பதான் புரியுது.

அதுவும், குழந்தைகளுக்கு வெறும் கோவணம் மட்டமே கட்டி இருப்பார்கள். இப்ப எல்லாம் மாறிவிட்டது.

ம்ம்ம்ம்..

வெற்றி said...

அருமையான பதிவு. பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

Thekkikattan|தெகா said...

வாங்க நாயகி!

தங்களின் எட்டு என்னாச்சு. மறக்க மாட்டேனே. :-)

Thekkikattan|தெகா said...

வாங்க பத்மா அர்விந்த்,

இன்னும் நிறைய விரிவாகவே IgEயின் பங்கு பற்றி டாக்டரிடம் கூறியதை நானும் படித்துவிட்டேன் :-P

நன்றி, தங்களின் பின்னூக்கி இங்கு பல பேருக்கு பிரயோசனமாக இருந்திருக்கக் கூடும்.

ஜீவி said...

எங்கு படித்தாலும், நல்லதொரு செய்தி
நாலு பேருக்குத் தெரிந்து பயன்படட்டும் என்று பதிவு போட்ட
நண்பருக்கு நன்றி பல

Thekkikattan|தெகா said...

Anonymous said...
http://www.llli.org/docs/
Outcomes_of_breastfeeding_June_2007.pdf
இங்கே கொஞ்சம் பாருங்க!
Also please check lalecheleague.org!

Friday, July 20, 2007

Thekkikattan|தெகா said...

இப்பவெல்லாம் சம்மர் வெகேஷன்ல கூட டான்ஸ் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ்னு எதிலாவது சேர்த்து விட்டுட்டு இம்சை பண்ணுறாங்க குழந்தைகளை!//

ஆமா சிபி,

எல்லாரையும் ஐன்ஸ்டைனாக ஆக்கிப்புடுவோங்கிற எண்ணத்திலதான். :-))

ஒரு 8 வயது நீக்ரோ சிறுவனுக்கு சென்னை அப்போலோவில் இது போன்ற சிகிச்சை அளித்துள்ளனராம்!//

ஸ்டெம் செல்ஸ்களை கொண்டு உடலின் ஏதாவது ஒரு உறுப்பு செயலிழந்து கொண்டிருந்தாலே அல்லது பிறக்கும் பொழுது மரபணு குளருபாடுகளால் குழந்தைக்கு புற்று நோய், விடாத இதயக் கோளாரு போன்றவைகளை கண்டறிந்து அவைகளைக்குண்டான செல்களை இந்த ஸ்டெல் செல்களிலிருந்து பிரித்து வளர்த்து அதனை பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி குணபடுத்தலாம் என்பதுதான் அது, இது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது.

இதனை ஏதாவது மருத்துவ மனைகளிலில் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. சிபி, தினத்தந்தியில் என்ன படித்தீர்கள்?

இன்னொரு கொசுருச் செய்தி படிக்கிற எனக்கே நீங்க கருப்பினத்தவர்களை "நீக்ரோ"ன்னு சொல்றது ஒய்ங்க்க்கின்னு ஏத்துது மண்டையில. அவங்களுக்கு கேட்ட எப்படி இருக்கும். இப்பொழுது நடைமுறையில் யாரும் ஆஃப்ரிக்கா கண்ட மக்களை நீக்ரோ என்று அழைப்பது கிடையாது, ஏற்றுக்கொள்ளப்பட்ட விளிப்பு "கறுப்பினத்தவர்."

நன்றி!!

Thekkikattan|தெகா said...

பாரி,

வந்து தகவல்களாக கொட்டி விட்டீர்கள். எல்லோரும் ஒருமித்த கருத்தாக கூறுவது, வந்த பின்னூட்டங்கள் இந்த பதிவை மேலும் மெருகேத்தி விட்டதாகத்தான்.

பெரியம்மை தடுப்பூசி, உண்மையில் பெரியம்மை வைரஸ் தான் ஊசியாக போடப்படுகிறது.//

இப்ப பாம்பு கடிக்காக போடப்படும் Anti-venom ஊசி அதே விஷத்திலிருந்து எடுக்கப்படும் extractக்கு attenuated (இதனை தமிழிலில் என்ன சொல்வார்கள் - யாராவது தெரிந்தவர்கள் கூறலாம்) ஆகாகத்தான் உடம்பினுள் செலுத்தப்படும்.

அது போலவே இந்த பெரியம்மை தடுப்பூசியும் அப்படியே (attenuated form), அதே வைரஸ்களாக இல்லை, இல்லையா, பாரி?

Thekkikattan|தெகா said...

இந்தியாவில் எங்க டாக்டர் அடிக்கடி சொல்லுவார், தெருவில் உள்ள குழந்தைக்கு உங்க குழந்தையை விட Immune அதிகம் என்று. //

அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது சிவா கண்டிப்பாக. பாருங்க ஒரு வியாதிக்கு மருந்து எடுத்துக் கொண்டால் அதன் உபரி உபாதைகள் (side effects) என்னென்னா என்பதனை தெரிந்து கொள்கிறோமா?

அதுவும், குழந்தைகளுக்கு வெறும் கோவணம் மட்டமே கட்டி இருப்பார்கள். இப்ப எல்லாம் மாறிவிட்டது. //

சிவா, இந்த கோவணம் பார்டை படிக்கு பொழுது என்னால் பொங்கியெழுந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. காரணம், உங்களை நான் சிறுவனாக இருக்கும் பொழுது ஆற்றங்கரையில் நீந்துவதற்கு அவ்வாறாக நிற்பதனைப் போன்று கற்பத்தித்தேன், பிறகென்ன :-)))

Thekkikattan|தெகா said...

அருமையான பதிவு. பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. //

அட நம்ம வெற்றி :-)

என் வீட்டுப் பக்கமெல்லாம் நீங்க வருவதுண்ட்டா. இப்பத்தான் முதன் முறையாக பார்ப்பதைப் போல எனக்குத் தோன்றுகிறது.

அடிக்கடி வாங்கய்யா ...

Unknown said...

ம் ஒரு வாரமா இந்த எல்லா மொக்கைபோட்டிகளும் முடிஞ்சி போன காரணத்தால ஏற்கனவே ஒங்க பதிவை படிச்சிருந்தாலும் வழக்கம் போலவே பின்னூட்டம் போடல. இப்போதான் நேரம் கிடைச்சது. சரி
விஷயத்துக்கு வருவோம். ஒரு புள்ள நோஞ்சானா போறதுக்கு சின்ன வயசில ரொம்ப பொத்தி வைக்கிறதும்காரணம்கிறதில சந்தேகமே இல்ல பொதுவா கிராமங்களில் ஆட்டுக்குட்டி தெரியும்தானே? அதை குட்டியா இருக்கும்போது அழகா இருப்பதால் பிடிச்சு வச்சு விளையாட தோனும் ஆனா விடமாட்டாங்க உங்கள மாதிரி பெரியவங்க "புடிச்சி வச்சா புடிகுட்டியா போகும்னு சொல்லுவாங்க " ஒருவேளை குழந்தைகளௌக்கும் இது பொருந்துமோ?

Sivakumar said...

இப்ப இருக்கிற குழந்தைகள் எங்கே வெளியே போய் விளையாடுது? எல்லாம் கம்ப்யூட்டர்ல கேம் தான். பிஸிகல் கேம்ஸ் எல்லாம் மறந்து போயிடிச்சு. கல்லா மண்ணா, ஓடிபுடிச்சு, கால் மிதி, சிகிரெட் அட்டை, பம்பர ஆட்டை.... அதெல்லாம் போச்சு. இப்போ, ஜெட்டிக்ஸ், போகோ, கூட சுட்டி டிவி வேற....

Thekkikattan|தெகா said...

எங்கு படித்தாலும், நல்லதொரு செய்தி
நாலு பேருக்குத் தெரிந்து பயன்படட்டும் என்று பதிவு போட்ட
நண்பருக்கு நன்றி பல //

ஜீவி, நன்றாக புரிந்து கொண்டீர்கள்!! தங்கள் அதனை இங்கு தெரிவித்துக் கொண்டதின் மூலமாக மேலும் ஊக்கம் பெற்றேன்.
கற்றனை தூறும் மணற்கேணி...

நன்றி மீண்டும் :-)

Thekkikattan|தெகா said...

"புடிச்சி வச்சா புடிகுட்டியா போகும்னு சொல்லுவாங்க " //

மகிஸ், இம்பூட்டு விசயங்களை வைச்சிக்கிட்டு இப்படி வஞ்சகம் பண்ணாலாம நீங்களே சொல்லுங்க. பளிச்சின்னு வந்து பட்டதை சொல்லிட்டு போறதில்ல. என்ன புள்ளை போங்க...

Related Posts with Thumbnails