ம்ம்... சரியாக 2001ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், நானும் மாநிலம் மாறி என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை மாற்றி புதிய மாநிலத்தில் இணைத்துக் கொள்ளும் அவசியத்தில் இருந்தேன். அப்படியாக நானும் அந்த அலுவலகத்தில் என்னுடைய பழைய ஓட்டுநர் உரிம அட்டையை ஒப்படைத்து விட்டு, புதிய மாநில அட்டையை வாங்கும் பொழுதும், புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதர கேள்விகளுக்கு பதிலுரைத்துக் கொண்டு வரும் பட்சத்தில், ஓரிடத்தில் நிறுத்தி பொறுமையாக "டு யூ வாண்ட் ட்டு பி ஆன் ஆர்கன் டொனர்" என்று கேட்டார்.
அப்படியே ஒரு நிமிடம் ஆடிப் போய் யாரோ பொடீர் என்று செவுட்டில் அடித்ததினைப் போன்று உறைந்து போனேன். அவரிடம் ஒரு நிமிடம் என்று கேட்டுக் கொண்டு, என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு" என்னடா இது இதுபோன்ற ஒரு கேள்வியை என் வாழ் நாளில் நான் கேட்டுக் கொண்டதே இல்லையே இப்படியான சாவுடன் தொடர்படுத்தக் கூடிய கேள்வியை இவ்வளவு சாதாரணமாக கேட்டு சிந்திக்க வைத்திவிட்டாரே என்று ஆட வைத்தது.
இருந்தாலும் மறுபக்கம் வாய் கிழிய எல்லாம் பேசும் நமக்கு சாவு என்றவுடன் சும்ம அதிர்ந்து போகுதே ஏன், இறந்த பிறகு தம்மிடம் பிரயோசனமாக பிறருக்கு உதவும் வாக்கில் உள்ள சில உறுப்புகளை எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டவுடன் ஏன் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வறை உதறுதே ஏன்? என்று மனம் குழம்பிப் போனது உண்மை. சுதாகரித்துக் கொண்டு மரண பயத்தை தூரத்தே வைத்துவிட்டு உள்ளுணர்வை எழுப்பி கேட்டவுடன் இயல்பென்ற ஒரு விசயம் கடிவாளத்தை பற்றிக் கொண்டது, நானும் அதன்படியே "எஸ், ப்ளீஸ் ஆட் மீ" என்று கூறிவிட்டேன். அன்றிலிருந்து நானும் ஒரு உடலுறுப்பு பங்களிப்பாளன்.
இதனை எழுத வேண்டுமென நீண்ட நாட்களாகவே ஆசைப் பட்டதுண்டு, ஆனால் பிறரை தர்மசங்கடத்தில் ஆட்படுத்தக் கூடும் என்பதினால் தள்ளிப் போட்டதுண்டு. இன்று தினகரனில் ""உள்ளத்தில் நல்ல உள்ளம்..."" என்ற தலைப்பிட்ட உடலுறுப்பு தானம் எந்தளவில் இந்தியாவில் செயலில் இருக்கிறது என்பதனைப் பற்றி படிக்கும் பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததது அங்கே குறிப்பிடப்பட்டிருந்த சில புள்ளியல் சார்ந்த குறியீடுகள்.
உதாரணத்திற்கு அந்தக் கட்டுரையிலிருந்து... "உலக அளவில் ஸ்பெயின்தான் உறுப்பு தானம், உடல் தானத்தில் முதலிடம் வகிக்கிறது. அங்கு வசிக்கும் 4.60 கோடி பேரில் 14500 பேர் முன்வந்து உறுப்பு மற்றும் உடல் தானம் செய்கிறார்கள். ஆனால், 100 கோடி பேர் வசிக்கும் இந்தியாவில் ஆண்டுக்கு 30 முதல் 40 பேர் மட்டுமே உடல் தானம் செய்கிறார்கள்.".... என்று குறிப்பிட்டதை படித்தவுடன், நான் ஏன் அப்படி அது போன்ற ஒரு கேள்வி ப்ரக்ஞையுணர்வே அற்று வாழ்ந்திருக்கிறேன் 2001ம் ஆண்டு வரை என்பது பட்டென புரிந்தது.
ஏன், இத்தனை மக்கள் தொகையுடன் உள்ள ஒரு நாடு, இத்தனை மீடியாக்கள் தங்களுடைய பிழைப்பை ஜரூராக நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் கூட வெறும் 30 லிரிந்து 40 பேர் மட்டுமே முன் வந்து தானம் செய்யும் நிலை? மதத்தில், இறப்பிற்குப் பிறகு இது போன்ற உடலுறுப்புகளுடன் மேலே வந்தால்தான் மீண்டும் பிறப்பெடுக்கும் பொழுது ஏதுவாக இருக்க முடியும் என்ற முறையில் எழுதப் பட்டுள்ளதா? எனக்குத் தெரிந்தவரையில் இந்து மதத்தில் அப்படிய் அடிக் கோடிட்டு காட்டப்பட்டு குறிப்பிடப் பட்டுள்ளதாக தெரியவில்லை. பிற மதங்களை பற்றி, நோ ஐடியா!
இத்தனை நல்லவர்களை கொண்ட(?!) நம் நாடு ஏன் ஸ்பெயினைக் காட்டிலும் இத்தனை கருமியாக இறப்பிற்குப் பிறகும் கூட மனிதர்களை வைத்திருக்கச் செய்கிறது? எப்படியோ, எல்லா மதங்களும் ஆத்மா என்ற ஒன்று இருப்பதாகவும், அது மட்டுமே நமது மரணிப்பிற்கு பிறகு மேலெழும்பிச் சென்று பிறகு எங்கடைய வேண்டுமோ அங்கடைந்து மறு-சுழற்சி (ரீ-சைக்கிலிங்) செய்யப் படுவதாக அறிகிறேன்.
அப்படி இருக்கும் பொழுது உடலுறுப்பிற்கும், ஆத்மாவிற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? எனவே, இந்த உடலுறுப்புச் சார்ந்த விசயத்தில் நிறைய மரண பயமும், கொஞ்சமே மதம் சார்ந்த விசயமும் குறுக்கிடுவதாக நான் கருதுகிறேன். மரணத்தைப் பற்றிய பயத்தை மரணிக்க வைத்துவிட்டால் நீங்களும் குபேரனாக வாழ்ந்து முடித்ததாக இச் சமூகம் உணரும் இந்த "தானாக முன் வந்து உடலுறுப்பு தானம் செய்யும் பொறுட்டு" இல்லையா?
ஆனால், இன்னும் கொஞ்ச காலங்களில் இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளின் உச்சமாக ஆய்வுக் கூடங்களிலே இது போன்ற டி.என்.ஏ பொறுத்தம் கொண்ட உடலுறுப்புகளை உற்பத்திக்கவும் முனைந்துவிட்டால், மனித பயத்தினையும், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் போற்றி பாதுகாத்து கேள்வி நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தமிருக்காது - அதுவும் ஒன்று.
நம்மூரில் நடிகர் கமல்ஹாசன் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானம் செய்திருப்பதாக அறியும் தருவாயில், அவரின் மீது பன்மடங்கு அறிவுசார் மரியாதை கூடுகிறது.
இதனை வாசிப்பவர்களின் பார்வை எதனைப் பொறுட்டு ஒத்துப் போகிறது, விலகி நிற்கிறது என்பதனை அறிய ஆவலாக இருக்கிறது. பகிர்ந்து கொள்ளுங்கள், நல்லவர்களே!
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (42)
- அனுபவம் (105)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (109)
- நினைவோடை (19)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (11)
- மருத்துவம் (2)
- முதுமை (13)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Sunday, September 28, 2008
உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs!
Posted by Thekkikattan|தெகா at 8:57 AM 69 comments
Labels: அறிவியலும் நானும், கைகலப்பு, சமூகம், மதங்களும் நானும்
Thursday, September 25, 2008
ஹெய்டி - ஒர் மனித இயற்கைத் துயரம்: Haiti's Man Made Disaster!!
ஹெய்டி (Haiti) என்றொரு கரீப்பியன் தீவு நாட்டைப் பற்றி எனக்கு படிக்க, கேக்க நேரும் பொழுதெல்லாம் மனித குலம் தன்னுடைய இயற்கைசார்ந்த ப்ரக்ஞையுணர்வை மேலும் ஊட்டிக் கொள்ளவும் விழிப்புணர்வு பெறவும் ஒரு இன்றியமையா இடமாக வாழும் நரகமாக எப்படி அந்த தீவு நாடு தன்னை வழி நடத்தி இன்று அத் தீவில் வாழவே அருகதையற்றதாக மாற்றிக் கொண்டது என்று ஏனைய நாடுகள் பார்த்து தெரிந்து கொள்ள ஒரு ஆய்வுக் கூடமாக திகழ்கிறதுங்கிற மாதிரி எண்ணத் தோன்றும்.இத் தீவின் ஆதீயைத் தோண்டிப் பார்த்தால் இது ஒரு சொர்க்கப் பூமியாகத்தான் மலையும், மலையுஞ்சார்ந்த இடமாக மழைக் காடுகளுடன் கட்சியளித்ததாக தெரியவருகிறது. அதாவது 16வது நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையிலும். அதற்கு பிறகுதான் கப்பல் கட்ட தெரிந்து கொண்ட துரைமார்கள் ஊரோடியாக இருந்துப் போய் துரதிருஷ்ட வசமாக இந்தத் தீவினிலும் கால் பதித்திருக்கிறார்கள். முதற் காலனி ஃப்ரெஞ்ச்சும், ஸ்பானிஷும் இங்கே கோலோச்சியிருக்கிறார்கள்.
துரைமார்கள் என்றாலே இயற்கை படைக்கப்பட்டதே மனிதன் நுகர்ந்து
அழிப்பதற்குத்தான் என்ற மன நிலை தீர்க்கமாக அவர்களின் புத்தகத்தின் மூலமாகவே அடி மனதில் தூவப்பட்டுவிட்டது. இந் நிலையில் 16ம் நூற்றாண்டு வாக்கில் கிட்டத்தட்ட 6000 வேறுபட்ட மர இனங்களும்(இதில் அவ்வூருக்கேயான இனங்கள் 35% இருந்திருக்கிறது - i.e., Endemic species), 220 பறவை இனங்களும்(அவைகளில் 21 பறவை இனம் அங்கு மட்டுமே காணப்படுபவை), கிட்டத்தட்ட நம்மூர் மேற்கு மலைத் தொடரில் காணப்படும் பறவை இனங்களின் கூட்டுத் தொகைக்கு நிகர், அப்படியெனில் அத் தீவின் உயிரின பன்முகத் தன்மை (Bio-diversity) எந்தளவிற்கு செழித்து இருந்திருக்க வேண்டுமென பார்த்துக் கொள்ளுங்கள்.ஆனால், ஃப்ரெஞ்ச் மக்கள் அத் தீவை உறித்து எடுத்தது போக, 1915லிருந்து 1934 வரையிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பொழுது அலும்னியத்திற்கான தாதுப் பொருள் கிடைக்கிறதென நாட்டையே புரட்டிப் போட்டு தோண்டியிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், ரப்பர் மரங்களை அங்குள்ள இயற்கை மழைக்காடுகளை அழித்து ஒரு தனியார் நிறுவனம் தனது இஷ்டத்திற்கு அவ் மரக் கன்றுகளை நட்டு விளையாண்டிருக்கிறது. எனது நண்பர் ஒருவர் அவரின் அனுபவத்தை இது தொடர்பாக பகிர்ந்து கொள்ளும் பொழுது எப்படி சிறு நாடுகளை தன் சொந்த லாபத்திற்காக வளர்ந்த நாடுகள் கண்மூடித்தனமாக பயன்படுத்திக் கொண்டு விட்டெறிந்து விட்டு வந்துவிடுகிறது பின்னாளில் என்பது விளங்கியது.
இன்று அந்த நாட்டிலிருந்து சாகுபடியாகிக் கொண்டிருந்த கரும்பையும், வாழை, மா போன்றவைகளின் இறக்குமதியைக் கூட சில அரசியல் காரணங்களால் அமெரிக்கா நிறுத்தப் போக விளைவு மக்கள் உள்ளதைக் கொண்டு வாழும் நிலை உள் நாட்டில். விளைவு எது அவர்களின் அழியா சொத்தாக, உயிர் காக்கும் தோழனாக இருக்க வேண்டியிருந்த வனங்களும், பலன் தரும் பழ மரங்களும் கூட தனது அகோர பசிக்கு ஒன்றன் பின் ஒன்றாக வெட்டி வீழ்த்தப் போக எஞ்சி நின்றது வெறும் மலை அதுவும் மணல் குன்றுகளாகத்தான் போல.
அதனையொட்டி ஓவ்வொரு முறையும் ட்ராபிகல் சூறாவளிகள் அந் நாட்டை கடக்கும் பொழுதும் மலைகள் மரங்களற்ற நிலையில் கரைந்து வெறும் சேற்று ஆறாக வெள்ளம் ஊர்க்காடுகளில் பெருக்கெடுத்து நடக்கவோ அல்லது வீடுகளில் கூட வாழவோ முடியாத நிலை. அண்மைய குஸ்டவ் மற்றும் ஐக் என்று பெயரிடப் பட்ட சூறாவளிகள் அடுத்தடுத்து தாக்கும் பொழுது அதிகளவில் உயிரிழப்பை சந்தித்தது ஹெய்டி மட்டுமே.இந் நிலையில் அந் நாட்டில் சரியான அரசியலமைப்பும் சீர் கெட்டுப் போன நிலையில், வறுமையும், வன்முறையும் ஒரு சேர கூட்டுச் சேர்ந்து அந் நாடே ஒரு அழிவின் விளிம்பில்.

(மேலே உள்ள படத்தில் கவனித்துப் பார்த்தீர்களேயானல் சேற்று ஆறிலிருந்து தப்பிக்க மக்கள் அகப்பட்ட கூரைகளில் தஞ்சம் புகுந்திருப்பதனை காணலாம்)
இதனிலிருந்து உலகிற்கு கிடைக்கும் பாடம் என்னவெனில், அரசியல் வாதிகளின் சுரண்டல் புத்தியும், சுயநலமும், தீர்க்க மற்ற பார்வை இயற்கை சார்ந்தும் தனது நாடு சார்ந்தும் இல்லாமல் போனால், அதனால் ஏற்படும் பின் விளைவுகள்தான் இன்று கண்ணுரும் இந்த மனித அவலம். வளரும் அத்துனை நாடுகளும் பிற வளர்ந்த நாடுகளுடன் போட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கண்மூடித்தனமான ஒப்பந்தங்களுக்குப் பின்னாலும் எது போன்ற இயற்கை சுரண்டல்கள் நடைபெறும் என்பதனை நீண்ட கால யுத்தியாக யோசித்து நகர்வடைவது நலம் பயக்கும் என்று அறிந்து கொள்வதே.
இருந்தாலும் அந்த பாடத்தை பிற நாடுகள் கண் கூடாக அறிந்து கொள்ள ஹெய்டி மக்கள் கொடுத்த விலை அளவிடற்கரியது.

Posted by Thekkikattan|தெகா at 1:51 PM 20 comments
Labels: இயற்கை, உலகம், காடும் நானும், சீரழிவு
Thursday, September 11, 2008
மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts
வரும் நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே பல குட்டிக்கரனங்கள் ஒவ்வொன்றாக அரங்கேற ஆரபித்தாகிவிட்டது என்பதற்கிணங்க குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதிக்கு ஜான் மெக்கெய்ன் அலாஸ்காவிலிருந்து இறக்குமதி செய்திருக்கும் சாரா பேலின் என்ற ச்சியர் லீடிங் நன்றாகவே செய்யும் அழகுப் பதுமையின் தேர்வின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது, குட்டிக்கரனங்களின் தொடக்கத்தை.

சாரா பேலின் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனை கண்ணுரும் பொழுது ஏற்கெனவே கிலி பிடித்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மேலும் அதுவே அச்சாணி அடித்து நிறந்தரமாக குடியேறி விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந் நிலை மிகவும் வருத்தத்திற்கூரியது. ஏனெனில், பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி "க்கோ ட்டீம் க்கோ" சொல்லிக் கொண்டிருப்பதில், ஒரு விளையாட்டு அணி வெற்றிப் பெற வேண்டுமானால் உடனடி குளூக்கோஸ் ஏற்றுவது போல விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றி விளையாடி வெற்றி பெற வைக்கலாம்.
ஆனால், இங்கு வாழ்வா, சாவா நிலையில் இது போன்ற ஒரு கவர்ச்சி(கன்னித்) திட்டம் தேவையா, நாட்டிற்கும் ஏன் இந்த உலகத்திற்குமே? மற்றுமொரு நான்கு வருட தீரன் புஷ்ஷுன் அடாவடி பொறுப்பற்ற அரசியல் பிரயோகத்தை இந்த உலகம் தாங்குமா? இதோ அதனையும் சுவைத்துப் பார்த்துவிட நேரம் வந்துவிட்டது. நான் முன்பே கருதி, எழுதியும் வைத்து விட்டேன் ஜனநாயக கட்சி சில பல காரணங்களுக்ககாவும், குடியரசுக் கட்சியின் அரசியல் தந்திரத்தாலும், இந்த முறையும் அந்தக் கட்சிக்கே வெற்றி பெரும் அனேகத் தன்மையென ...இந்தப் பதிவின் மூலமாக.
கடந்த சில மாதங்களாக ஓபாமாவின் பின் புலத்தை அறியும் தருவாயில் இழந்த பொருளாதார இழப்புக்களையும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும், சர்வ தேச முறிந்த உறவுகளை புதுபிக்கவும் - அமெரிக்காவின் முக்கியமான வரலாற்று சந்திப்பில் இவரே ரட்சகராக இருக்க முடியுமென்ற எண்ணம் ஆழமாக என் மனதில் பதிய ஆரம்பித்தது.
இந் நிலையில் சாரா பேலினின் மூலமாக மலிந்த வளரும் நாடுகளின் அரசியல் தந்திரங்களை குடியரசுக் கட்சி இங்கும் அமல் படுத்த ஆரம்பித்து விட்டது. அமெரிக்க அரசியல் நாகரீகத்திற்கு இது ஒரு பின்னடைவுதான். முன்பே கூறியதைப் போன்று அரசியல் நாகரீகத்துடன் தேவையான விசயங்களை பேசிச் சென்ற கூட்டங்கள் இப்பொழுது தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.
சாரா பலீன் தனது கட்டற்ற குழந்தை ஈன்றெடுப்பு, டவுன் சின்ரோமிருந்தும் தனது மன உறுதியாலும்(?), மத கோட்பாட்டை முன் நிறுத்துவதாலும் ஒரு அர்பணித்த கிருஸ்துவர் என்ற அடையாளத்தின் கீழ் தனது குடும்பத்தை மேடையிலேற்றி ஓட்டு வேட்டை நடத்த ஆரம்பித்துவிட்டார். அதாவது தன் குடும்பம் சார்ந்த பச்சாதாபத்தை முன்னுருத்தி. அதுவும் போர், போர் என்றழையும் மனிதர்களை உள்ளடக்கிய கட்சிக்காக. இதன் மூலமாக அடையப் போகும் பலன் யாவரும் அறிந்ததுதான்.
ஆனால், இதில் என்னவொரு நகைமுரண் என்றால் மற்ற கலாச்சாரங்களை நாகரீமற்று, காட்டுமிரண்டிகளாக இருப்பதாகக் கூறி அவைகளுக்கு விடுதலை அளிக்க எத்தனிக்கும் ஒரு கட்சியே அது போன்ற காலவதியாகிப் போன அடையாளங்களை முன்னுருத்தி ஓட்டு வாங்க எத்தனிப்பதுதான், அது. இவர்கள் இவர்களின் புத்தகத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அணுகுகிறார்கள் என்றால், அந்தச் சமூகம் அவர்களின் புத்தகத்தின் வழி நடக்கிறார்கள், இதில் யாருடைய வழி சிறந்த வழி என்பதனை யார் கூறுவது?
ஓபாமாவின் ஜனநாயக் கட்சி இந்த வெற்றி வாய்ப்பை தவறவிடும் பட்சத்தில் பல சிரமங்களை இந் நாடும், உலகமும் அனுபவிக்கப் போவது உறுதி என்பது மட்டும் எங்கோ மனதின் ஓரிடத்தில் அபாய மணி அடித்துக் கூறிக் கொண்டே இருக்கிறது. History repeats itself once again, fasten your seat belts my fellow folks.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
அமெரிக்க அரசியல் - தெகாவிற்கான பதில்! by யு. எஸ். தமிழன் [குடியரசுகட்சியின் சாதனைகள் அதனை சரியாக பார்க்கத் தவறிய பொது (என்னைப் போல) ஜனங்களுக்குமான பதிவிது].
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.... by அவியல்செல்வி - [குடியரசுக் கட்சியில் குறிப்பாக சாரா ப்பேலின் ஏன் திடீர் உதயம் என தோலுரித்துக் காட்டும் பதிவிது].
Posted by Thekkikattan|தெகா at 12:32 PM 41 comments
Monday, August 11, 2008
ஒலிம்பிக்ஸ், சைனா, இந்தியா = Where Is India?
நேற்று மாலை 4X100 நீச்சல் போட்டியில் ஃப்ரான்ஸை அமெரிக்கா தோற்கடிக்கும் பொழுது மைக்கேல் ஃபெல்ப்ஸின் உற்சாக கூச்சல் ஒரு கொரில்லாவின் கொக்கரிப்பைக் காட்டிலும் அதீதமாகவே கொப்பளித்தது, உணர்வுப் பூர்வமாக இருந்தது. அதே சமயத்தில், பார்த்துக் கொண்டிருந்த சானலில் விளம்பர இடைவெளியில் நம்மூர் ட்டி.வி சானல் பக்கம் திருப்பினால் அய்யகோ சூப்பர் டான்சர்-2 என்ன எழவோ ஓடிக் கொண்டிருந்தது.
1.2 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து வெறும் 54 வீரர்கள் அதுவும் என்னவோ ட்டி.வி விளம்பரங்களில் நடிப்பதற்கு செல்பவர்களைப் போல தழுக், மொளுக்கென்று நாம் கண்ணுரும் அதே ட்டி.வி விளம்பர மக்களின் தோல் நிறத்துடன். இவ்வளவு பெரிதாக பரந்து விரிந்து கிடக்கும் ஒரு நாட்டிலிருந்து நம்மால் பல துறை விளையாட்டு விளையாடும் வீரர்களை ஏன் அனுப்ப முடியவிலை? என்ன நடக்கிறது?
நம்மூரில் விளையாட்டென்றாலே அது கிரிக்கெட் மட்டுமே என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்து அதிலிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை கூடி நின்று பங்குபிரித்துக் கொள்வதிலேயே வாழ் நாளை கடத்திக் கொண்டிருக்கிறோமோ? இந் நிலையில், உலக அரங்கில் நாகரீகமான முறையில் தன் பிற ஆளுமையைக் காட்டிக் கொள்ளும் வாய்ப்புகளாகக் கருதப்படும் இது போன்ற ஒலிம்பிக்ஸ்ல் எங்கே கவனம் செலுத்த நேரமிருக்கு. நாட்டை மாநிலங்களாக பிரித்து தன்னால் எவ்வளவுக்கெவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவுகவ்வளவு சுரண்டத் தான் நேரமிருக்கிறதே ஒழிய எங்கே இது போன்ற தருணங்களை ஒரு நாடு என்ற கட்டமைப்பில் தேசியம் சார்ந்து பெருமை பட்டுக்கொள்ளும் விசயங்களில் கவனம் செலுத்த நமக்கு நேரமிருக்கும்.
நான் நினைக்கிறேன் ஏதேனும் பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸில் கவனம் செலுத்தி நம்மை விட கோல்ட் மெடல்கள் வாங்கி உசுப்பேத்தினால்தான் நமக்கு சூடு வருமோ. ஐ. நாவில் நிரந்தர குழும உரிமை கேட்டுப் போய் நிற்கிறோம், ஆனால் சத்தமில்லாமல் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் தருணம் தோரும் நம்மை நிரூபித்துக் கொள்கிறோமா? சைனாவுடன் நம்மை தினம் தோரும் ஒப்பிட்டுளவில் பேசி நாட்களை கடத்தி வருவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது?
அவர்களும் பல சூழ்நிலைகளில் சத்தமே இல்லாமல் பெரிய பெரிய காரியங்களை சாதித்துக் கொள்வதனைப் போல் உள்ளது. ஒலிம்பிக்ஸின் 100 வருட வரலாற்றையே புரட்டிப் போடுவதனைப் போல ஒரு ஒலிம்பிக்ஸ் திறப்பு விழாவை நடத்திக் காமித்து உலகத்தையே வாயடைக்க வைத்திருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் தங்களின் ஆளுமையை சத்தமில்லாமல் உலகரங்கில் மேலும் நிரூபித்துக் காமித்திருக்கிறார்கள். தீரன் புஷும் அங்கே டெண்ட் அடித்து உட்கார்ந்திருக்கிறது, காரணம் சைனா ஒரு மார்க்கமாக இருப்பதாக இருக்குமோ என்று எண்ண வைக்கிறது.
நம்மூரில் தனிப்பட்ட ஒன்றிய, மாவட்ட, மாநில, நாட்டு அரசியல் வாதிகளுக்கு பணத்தாசை என்று ஒழிந்து இது போன்ற உலகரங்கில் நம்மை தூக்கி நிறுத்திப் பார்க்க வேண்டுமென்ற ஆசை, வெறி வரப்போகிறதோ, என்று நாமும் சத்தமில்லாமல் பாகிஸ்தானைக் காட்டிலும் இதிலெல்லாம் வளர்ந்துவிட்டோமென்று சத்தமில்லாமல் நிரூபித்துக் காட்டிக் கொள்ளப் போகிறோமோ, தெரியவில்லையே. எல்லாமே கனவு நிலையிலேயே தேக்கமுற்றுப் போய்விட்டதே! இந்த பணத்தாசை பிடித்த பித்தர்களால்!!
இந்த தனியார் தொலைக்காட்சிகளும் கிரிக்கெட்டையும் தாண்டி கொஞ்சம் சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று மற்ற விளையாட்டுக்கள் நடை பெறும் பட்சத்தில் அவர்களை வெளிக்கொணர்ந்து மக்களுக்கேனும் ஒரு நம்பிக்கை வழங்குவதின் மூலம் ஏதாவது மாற்றம் நடக்க வாய்ப்புண்டா?
இல்லை ஓவ்வொரு ஒலிம்பிக்ஸ் சீசனிலும் இப்படி பெருமூச்சு விட்டுக்கொண்டே, வாய் வீச்சில் மட்டும் நாங்க எம்பூட்டு பெரிய ஆள்னு காத்தில கத்தி வீசிட்டு இருக்க வேண்டியதுதானா? சகிக்கவில்லை, நம் நிலமை :-(.
Posted by Thekkikattan|தெகா at 8:59 AM 55 comments
Labels: ஒலிம்பிக்ஸ், சமூகம், செய்தி, நிகழ்வுகள், விளையாட்டு
Tuesday, August 05, 2008
கருக்கலைப்பு சட்டம் இது நியாயமா? : Abortion Rights...
நேற்று ஒரு நண்பரோட பேசிட்டு இருக்கும் பொழுது தெரிய வந்தது இந்தச் செய்தி, அது மும்பையில் வாழ்ந்து வரும் தம்பதிகளுக்கு கருவில் இருக்கும் தனது 24 வார கால சிசுவிற்கு இதய சம்பந்தமான பிரச்சினை இருப்பதாகவும் அதனை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்குமாறும் நீதி மன்றத்தை அணுகியிருக்கிறார்கள், ஆனால் நீதி மன்றம் அதனை மறுத்துவிட்டதாம். மேலதிக முழுச் செய்திக்கு இங்கே சொடுக்கவும் - அபார்ஷன் சட்டத்தை திருத்த முடியாது-அன்புமணி.
எனது நண்பர்களுக்கும், வீட்டு அன்பர்களுக்கும் கூட அப்படி அந்த தம்பதியர்களுக்கு கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்குவது நியாயமாகவே படுவதாக கூறினார்கள். ஆனால், இதனை இந்திய அரசியல் சட்டம் தடுக்கிறது. அதாவது ஒரே ஒரு பெண்மணிக்காக இந்தத் சட்டத்தை திருத்த வேண்டியதில்லை என்று.
அதாவது, இது போன்று ஒரு குழந்தை கருவிலேயே உடல் ரீதியாக சரியான வளர்ச்சியை எட்டாமலோ, அல்லது உறுப்புகளின் செயல் திறன் குறைபாடுகளோட பிறக்க சாத்தியமிருக்கும் பட்சத்தில் குழந்தையை எதிர்காலத்தில் வைத்து, அதற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கப் போகும் பெற்றோர்களின் கையில் ஏன் அம் முடிவை எடுக்கும் உரிமையை வழங்கக் கூடாது? அதுவும் இது போன்ற ஒரு சிறப்பு சூழ்நிலையில், என்பதுதான் எனது கேள்வி.
இது போன்ற உறுப்பு குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில் தன்னையும் வருத்திக் கொண்டு, தன்னோட ஒட்டி வாழ்பவர்களையும் பல இன்னல்களின் வழி நடத்திச் செல்லலாம் பொருளாதார, மன உளைச்சல், ஆள் தேவை என பல படிகளில், இல்லையா? அதிலும் குறிப்பாக பணத் தேவை தொடர்ந்து தேவைப்படும் பட்சத்தில் இந்த சட்டமோ, அல்லது சிசுவை கருவில் கலைப்பது இறைத்தன்மையற்றது அல்லது கருணையற்றத்தனம் என்று கூறுபவர்களின் வாதமெல்லாம் அன்று அவர்களுக்கு துணை நிற்காது. அது அந்த குறிப்பிட்ட குடும்பத்தின் மீது விழுந்த பாரமேயன்றி எவருடைய கருசணையும் அவர்களுக்கு தினப்படியாக கிட்டப் போவது கிடையாது, என்பது நிசர்சனம்.
அப்படியே இந்தச் சட்டம் பெற்றோர்களின் கோரிக்கையை தாண்டியும் வலியுருத்தி அந்தக் கருவை வளர்த்து பிள்ளையாக பெற்றெடுக்க வைக்கும் பட்சத்தில் வேண்டா வெறுப்பாக பிள்ளையை நடத்தினாலோ, அல்லது பெற்றோர்களே மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் பொழுது என்ன ஆறுதலை வழங்கப் போகிறது? ஏன், பெற்றோர்களின் முடிவில் இது போன்ற சூழ்நிலையில் பக்கம் நிற்கக் கூடாது இந்தச் சட்டம்? புரியவில்லையே...
ஒரு கொசுறுச் செய்தி: தட்ஸ்தமிழில், படிக்கும் பொழுது ஒரு க்ரிஸ்துவ மிஷனரி குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள முன்வருவதாக தெரிவித்தமைக்கு, அங்கே வந்த பின்னூட்டங்களில் ஒருவர் உடனே அந்த மிஷனரியின் நோக்கத்தை அதாவது தத்தெடுத்து மதம் மாற்றுவதற்காவே செய்ய முன் வந்திருக்கிறார்கள் என்று கோபப்பட்டிருக்கிறார். அதனைப் படித்தவுடன் அட இப்படியும் மனிதர்களா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
Posted by Thekkikattan|தெகா at 9:09 AM 49 comments
Labels: அறிவியலும் நானும், சமூகம், செய்தி, நிகழ்வுகள்
Monday, July 21, 2008
நீரிழிவு நோயின் ஒன்பது முன் அடையாளங்கள்: Diabetes Symptoms!
நீரிழிவு நோய் கிட்டத்தட்ட எல்லோராலும் பொதுவாகவே டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்ளப்படும் வியாதிகளில் ஒன்று. ஆனால், இதன் தாக்கத்தின் விளைவு நாம் நினைப்பதனைக் காட்டிலும் மோசமான நிலையில் தலை முதல் கால் வரை கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளையும் சிறிது சிறிதாக செயலிழக்க வைத்து இறுதியில் மரணமே முடிவாக நிகழ்த்தி விட்டுச் சென்று விடுகிறது.
நேற்று ஒரு ஆர்வமூட்டு கட்டுரை ஒன்று இதன் பொருட்டு வாசிக்க நேர்ந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப் பதிவு. நீரிழிவு நோய் பற்றிய விரிவான கட்டுரையை வாசிக்க நம்ம பத்மா அர்விந்தின் பதிவிற்கு சென்றால் காணலாம்.
இங்கே நீரிழிவு நோய் இருக்க நேரிடின் அல்லது எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது எது போன்ற முன் அடையாளங்களாக காட்டிக் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம்.
1. கண் புருவத்தின் நிறம் - (Eyebrow Color):
உடல் ரோமங்கள் பொதுவாகவே நரைக்க ஆரம்பித்துருக்கும் பட்சத்தில் கண் புருவம் மட்டும் மறுத்தால், நீரிழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பதிகமாம்.
2. மார்பக அளவு(பெண்களுக்கு) - (Breast Size):
பெண்களில் இருபது வயதடையும் பொழுதே D அளவிற்கும் பெரிதான உள்ளாடை அணிய நேர்ந்தால், சக வயதில் அதனை விட சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண் நண்பிகளைக் காட்டிலும் அதிக வாய்ப்பிருக்கிறதாம் இவ் நோய் தாக்க. ஏனெனில், மார்பக எடை வந்து ஆளின் உயரம் மற்றும் எடைக்கு (BMI = Body Mass Idex) சம்பந்தமில்லாத வகையில் தனியாக கணக்கிடப் படுவதால் அப்படி எடுத்துக் கொள்ளப் படுகிறதாம்.
3. பிறந்த மாதம் அல்லது காலம் - (Birth Month or Season):
குழந்தை பிறந்த மாதத்திற்கும் நீரிழிவு நோயின் தாக்கத்திற்கும் ஏதோ காரணமில்லா காரணமிருப்பதாக பத்து ஆயிரம் குழந்தைகளில் நடத்திய ஆய்வுகளில் கண்டிபிடிக்கப் பட்டிருப்பதாக அட்லாண்டாவை மையமாக கொண்ட நோய் தடுப்புக் கழகம் (Center for Disease Control - CDC) கண்டறிந்திருக்கிறதாம். இதில் இலையுதிர்(Fall) காலத்தில் பிறந்த குழந்தைகளைக் காட்டிலும் வசந்த(Spring) காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகமுள்ளதாம் அதுவும் வட மாநிலங்களில் பிறந்த குழந்தைகளில். காரணமாக தற்காலிகமா தாய் உட் கொள்ளும் உணவும், மேல் விழும் சூரியக் கதிர்களின் அளவீடுமாக கருதப் படுகிறது.
4. காது கேளாமை - (Hearing Loss):
இதற்கு முன்னால் இது வரையிலும் காது கோளாமையை நீரிழிவு நோயுடன் சம்பந்தப் படுத்தி பார்த்தது கிடையாதாம். ஆனால், இப்பொழுது நீரிழிவு நோயல் பீடிக்கப் பட்டவர்களுக்கு அதிக அளவில் காது கேளாமை நிகழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
5. குறுகிய கால்கள் - (Short Legs):
குறுகிய கால்களைப் பெற்றவர்களுக்கு நீண்ட கால்களை பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமான வாய்ப்புகள் நீரிழிவு வகை - 2 தாக்க வாய்ப்புள்ளதாம்.
6. மெதுவாக புண் ஆறும் தன்மை - (Slow-healing Cut):
இரண்டாம் வகை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு பொதுவாக புண் ஆறும் காலம் சற்று கால தாமதமே ஆகும், இந்த நிலைக்கு Atherosclerosis என்று பெயராம். இதனில் என்ன நடைபெறுகிறதெனில் ரத்த குழாய்கள் தடித்து விடுவதும்(thickening), இரத்தச் செல்கள் இளகுவதும்(thinning) நடைபெறுவதால், ஒரு புண் ஏற்படும் பொழுது அங்கே இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டுக்கள் அதிகளவில் பாதிக்கப் பட்ட இடத்திற்கு சென்று சண்டையிடும் நிலை குறைந்து போன நிலையில் புண் ஆறும் காலம் அதிகமெடுத்து கொள்கிறதாம்.
7. பல் இழப்பு - (Tooth Loss): மற்றும்
8. ரோம இழப்பு - (Hair Loss):
இங்கும் நமது 6வது அடையாளத்தில் பேசப்பட்ட Atherosclerosis நடைபெறுவதனாலும், அதன் மூலமாக பிராணவாயுவேற்றமும் குறைவதனாலும் விரைவாக கலக்க முடி இருக்கும் நிலைக்குப் செல்வதும் இவ் நோய் இருப்பதற்கான அறிகுறியாம்.
9. பூச்சிக்கொல்லியினால் விளைவு - (Pesticide's Exposure):
அதிகப் படியான பூச்சிக்கொல்லிகளில் கிடந்து உழல்பவர்களுக்கும் இவ் நோய் தாக்கும் அபாயக் கூறுகள் அதிகம் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பி.கு: மேலே கூறப்பட்டுள்ள ஒன்பது முன் அறிவிப்பு நோய் அடையாளங்களில் ஒன்றிரண்டு நம்மில் பலபேருக்கு சாதரணமாகவே காணப் பெறலாம்... உ.தா: ரோம உதிர்வு, காது கேளாமை, பல்லிழப்பு போன்றவைகள் அதனால் இவைகள் காணப்பட்டால் அபாய மணி அடித்து விட்டதாக பொருள் கொள்ள வேண்டியதில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும், இரத்தம் சார்ந்த சர்க்கரை அளவு கண்டறிந்தால் நல்லா நிம்மதியா தூங்கலாம் போல.
Posted by Thekkikattan|தெகா at 6:14 PM 16 comments
Labels: அறிவியலும் நானும்
Saturday, July 19, 2008
கருவாச்சி காவியம் விட்டுச் சென்ற தடயங்கள்
இன்னையோட வைரமுத்துவோட "கருவாச்சிய" நெஞ்சில தூக்கிச் சுமக்க ஆரம்பிச்சு மூணு வாரம் ஓடிப்போச்சு. படிச்சு முடிச்சக் கையோட மனசில பட்டதை எழுதி இங்கு பதிஞ்சு வைச்சிரணுமின்னு கொண்டு வந்திருக்கேன். இந்தக் "கருவாச்சி காவியம்" முதலில் எப்பொழுது புத்தக வடிவமாக வெளி வந்ததுன்னு எனக்குத் தெரியலை. ஆனா, எனக்கு நினைவிலிருக்கு போன வருடம் புதுகையில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய புத்தகக் கண்காட்சியில் இதனையும், கள்ளிக்காட்டு இசிகாசத்தையும் பார்த்துவிட்டு, முதலில் இரண்டாவது புத்தகத்தை வாங்கியதனை.
ஆனால், படிக்க படிக்க எழுத வருபவர்கள் எதற்காக எழுத முன் வர
வேண்டுமென்ற உணர்வை வரி தவறாமல் கருவாச்சிக் காவியம் உணர்த்திக் கொண்டே வரத் தவறவில்லை. தமிழகத்தின் வறண்ட பூமிக் கிராமங்களில் இப்படியும் மூர்க்கமான நம்பிக்கையும், அன்பும், மனித விகாரங்களில் சகிப்புத்தன்மைமிக்க மனிதர்களும் ஒருங்கே பின்னிக் கிடப்பதனை படிக்க படிக்க நெஞ்சில் நமக்கே ஈரமும் நம்பிக்கையும் ஒருங்கே சுரக்கிறது. மேலும் வட்டார வழக்க மொழிகளில் மேலும் இது போன்ற படைப்புகள் எழுத வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதாகவே பட்டது.
உலகத்தின் கடைக் கோடியில் உள்ள ஏதோ ஒரு சொக்கத்தேவன் பட்டியில் வாழும் ஒரு பெண்ணின் வாழ்வியலைக் கொண்டு ஒட்டு மொத்த மனிதக் கூட்டத்தின் ஆசா பாசங்களையும், மன விகாரங்களையும் இந்தக் காவியம் தூக்கிச் சுமக்கிறது. எழுத்தாளனின் பெரும் ஆசையைப் போலவே இது கால வெள்ளச் சுழிப்புகளைக் கடந்து இந்தக் காவியம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமென்ற நம்பிக்கை எனக்குமிருக்கிறது.
கதையின் ஓட்டத்தில் கருவாச்சி சந்திக்கும் நம்பிக்கை துரோகங்களும், காலம் அவளுக்கு முன்னால் வைக்கும் சவால்களையும், மரணங்களையும், வறட்சியையும்,
பட்டினியையும் அவள் முகம் கொடுத்து சந்திக்கும் பாங்கு மீதமுள்ள மனுச ஜீவராசிகளுக்கு
ஒரு நம்பிக்கையூட்டும் விதமாகவுள்ள கடற்கரையோர ஒளி விளக்கு. கடைசி அத்தியாங்களில் அவள் வழி வருகின்ற ஒரு சுவாமிஜிக்கும், கருவாச்சிக்கும் நடைபெறும் சம்பாஷனைகளைக் கொண்டு ஒட்டு மொத்த வாழ்வியல் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் வழங்கப்பட்டுள்ளது. அதன் எச்சம் சமா காலத்தில் வாழும் கருவாச்சிகளிடத்தே நம்மை சம்பாஷனைத் நிகழ்த்த ஊண்டு கோலாக அமையலாம்.
சுவாமிஜி, கருவாச்சிப் பேசப் பேச தன்னோட படிப்பறிவில் நிற்கும் ஒரு உபதேசத்தை நினைவில் நிறுத்துவதாக வரும் இந்த வரிகள் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு, என்னோட குறிப்பேட்டில் நிறந்தரமாக இருத்தல் எண்ணி இங்கு பதிந்து வைக்கிறேன்...
...பொருளே பற்றுறுத்தும்;
பற்று ஆசையாய் முற்றும்;
அவ்வாசை தடைப்படின்
சினமே தீயாய்ப் பரவும்;
சினம் சித்தம் குழப்பும்;
சித்தக் குழப்பம் புத்தியழிக்கும்;
புத்தி அழிவுறின் சரீரம் ஆத்மம் சரியும்."
ஏண்டா படிச்சு சீக்கிரமே முடிச்சிட்டோமின்னு இருக்கு.
Posted by Thekkikattan|தெகா at 1:42 PM 50 comments
Labels: புத்தகங்கள், வைரமுத்து

