நேற்று மாலை 4X100 நீச்சல் போட்டியில் ஃப்ரான்ஸை அமெரிக்கா தோற்கடிக்கும் பொழுது மைக்கேல் ஃபெல்ப்ஸின் உற்சாக கூச்சல் ஒரு கொரில்லாவின் கொக்கரிப்பைக் காட்டிலும் அதீதமாகவே கொப்பளித்தது, உணர்வுப் பூர்வமாக இருந்தது. அதே சமயத்தில், பார்த்துக் கொண்டிருந்த சானலில் விளம்பர இடைவெளியில் நம்மூர் ட்டி.வி சானல் பக்கம் திருப்பினால் அய்யகோ சூப்பர் டான்சர்-2 என்ன எழவோ ஓடிக் கொண்டிருந்தது.
1.2 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து வெறும் 54 வீரர்கள் அதுவும் என்னவோ ட்டி.வி விளம்பரங்களில் நடிப்பதற்கு செல்பவர்களைப் போல தழுக், மொளுக்கென்று நாம் கண்ணுரும் அதே ட்டி.வி விளம்பர மக்களின் தோல் நிறத்துடன். இவ்வளவு பெரிதாக பரந்து விரிந்து கிடக்கும் ஒரு நாட்டிலிருந்து நம்மால் பல துறை விளையாட்டு விளையாடும் வீரர்களை ஏன் அனுப்ப முடியவிலை? என்ன நடக்கிறது?
நம்மூரில் விளையாட்டென்றாலே அது கிரிக்கெட் மட்டுமே என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்து அதிலிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை கூடி நின்று பங்குபிரித்துக் கொள்வதிலேயே வாழ் நாளை கடத்திக் கொண்டிருக்கிறோமோ? இந் நிலையில், உலக அரங்கில் நாகரீகமான முறையில் தன் பிற ஆளுமையைக் காட்டிக் கொள்ளும் வாய்ப்புகளாகக் கருதப்படும் இது போன்ற ஒலிம்பிக்ஸ்ல் எங்கே கவனம் செலுத்த நேரமிருக்கு. நாட்டை மாநிலங்களாக பிரித்து தன்னால் எவ்வளவுக்கெவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவுகவ்வளவு சுரண்டத் தான் நேரமிருக்கிறதே ஒழிய எங்கே இது போன்ற தருணங்களை ஒரு நாடு என்ற கட்டமைப்பில் தேசியம் சார்ந்து பெருமை பட்டுக்கொள்ளும் விசயங்களில் கவனம் செலுத்த நமக்கு நேரமிருக்கும்.
நான் நினைக்கிறேன் ஏதேனும் பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸில் கவனம் செலுத்தி நம்மை விட கோல்ட் மெடல்கள் வாங்கி உசுப்பேத்தினால்தான் நமக்கு சூடு வருமோ. ஐ. நாவில் நிரந்தர குழும உரிமை கேட்டுப் போய் நிற்கிறோம், ஆனால் சத்தமில்லாமல் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் தருணம் தோரும் நம்மை நிரூபித்துக் கொள்கிறோமா? சைனாவுடன் நம்மை தினம் தோரும் ஒப்பிட்டுளவில் பேசி நாட்களை கடத்தி வருவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது?
அவர்களும் பல சூழ்நிலைகளில் சத்தமே இல்லாமல் பெரிய பெரிய காரியங்களை சாதித்துக் கொள்வதனைப் போல் உள்ளது. ஒலிம்பிக்ஸின் 100 வருட வரலாற்றையே புரட்டிப் போடுவதனைப் போல ஒரு ஒலிம்பிக்ஸ் திறப்பு விழாவை நடத்திக் காமித்து உலகத்தையே வாயடைக்க வைத்திருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் தங்களின் ஆளுமையை சத்தமில்லாமல் உலகரங்கில் மேலும் நிரூபித்துக் காமித்திருக்கிறார்கள். தீரன் புஷும் அங்கே டெண்ட் அடித்து உட்கார்ந்திருக்கிறது, காரணம் சைனா ஒரு மார்க்கமாக இருப்பதாக இருக்குமோ என்று எண்ண வைக்கிறது.
நம்மூரில் தனிப்பட்ட ஒன்றிய, மாவட்ட, மாநில, நாட்டு அரசியல் வாதிகளுக்கு பணத்தாசை என்று ஒழிந்து இது போன்ற உலகரங்கில் நம்மை தூக்கி நிறுத்திப் பார்க்க வேண்டுமென்ற ஆசை, வெறி வரப்போகிறதோ, என்று நாமும் சத்தமில்லாமல் பாகிஸ்தானைக் காட்டிலும் இதிலெல்லாம் வளர்ந்துவிட்டோமென்று சத்தமில்லாமல் நிரூபித்துக் காட்டிக் கொள்ளப் போகிறோமோ, தெரியவில்லையே. எல்லாமே கனவு நிலையிலேயே தேக்கமுற்றுப் போய்விட்டதே! இந்த பணத்தாசை பிடித்த பித்தர்களால்!!
இந்த தனியார் தொலைக்காட்சிகளும் கிரிக்கெட்டையும் தாண்டி கொஞ்சம் சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று மற்ற விளையாட்டுக்கள் நடை பெறும் பட்சத்தில் அவர்களை வெளிக்கொணர்ந்து மக்களுக்கேனும் ஒரு நம்பிக்கை வழங்குவதின் மூலம் ஏதாவது மாற்றம் நடக்க வாய்ப்புண்டா?
இல்லை ஓவ்வொரு ஒலிம்பிக்ஸ் சீசனிலும் இப்படி பெருமூச்சு விட்டுக்கொண்டே, வாய் வீச்சில் மட்டும் நாங்க எம்பூட்டு பெரிய ஆள்னு காத்தில கத்தி வீசிட்டு இருக்க வேண்டியதுதானா? சகிக்கவில்லை, நம் நிலமை :-(.
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Monday, August 11, 2008
ஒலிம்பிக்ஸ், சைனா, இந்தியா = Where Is India?
Subscribe to:
Post Comments (Atom)
55 comments:
பி.கு: இப்படி நாம நிரூபிச்சுக் காமிச்சா வெறும் வாயலே எதுக்கு நாம சண்டை பிடிக்கணும் ஐ.நா கிட்டயும் பாகிஸ்தான்கிட்டயும், அதுக்கு அவசியமிருக்குமா?
\\நான் நினைக்கிறேன் ஏதேனும் பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸில் கவனம் செலுத்தி நம்மை விட கோல்ட் மெடல்கள் வாங்கி உசுப்பேத்தினால்தான் நமக்கு சூடு வருமோ. //
:))
என் பையனுக்குக் கூட ஸ்போர்ட்ஸில் எதைப்பார்த்தாலும் உடனே ஆசை வருது... ஆனா நம்ம டிவியில் யார் காட்டறா.. வெளிநாட்டு டீவியில் வெளிநாட்டு ஆட்களின் லாங்க் ஜம்ப் ஹை ஜம்ப் பார்த்துட்டு ப்ளாஸ்டிக் பேட்டை அந்த குச்சியா நினைச்சு நடிச்சுக்காமிச்சான்.. இரும்பு வட்டு எறியறது பார்த்துட்டு..அம்மா தேகோ ன்னு சொல்லிட்டு கையில் இருந்த பொருளை டிவியில் செய்த ஆளு மாதிரியே ஒரு சுத்தி சுத்தி எறிஞ்சானா பயந்துட்டேன் புக் ஷெல்ப் போச்சுன்னு.. :)
நாங்களும் ஒரு தங்கப்பதக்கம் வாங்கீட்டமாக்கும்...ஹுக்கும்...
//இல்லை ஓவ்வொரு ஒலிம்பிக்ஸ் சீசனிலும் இப்படி பெருமூச்சு விட்டுக்கொண்டே, வாய் வீச்சில் மட்டும் நாங்க எம்பூட்டு பெரிய ஆள்னு காத்தில கத்தி வீசிட்டு இருக்க வேண்டியதுதானா? சகிக்கவில்லை, நம் நிலமை :-(.//
ஹூம்......
ஒலிம்பிக்கை ஏற்று நடத்த வேண்டும் என்று இந்தியர்களாகிய நாம் நினைத்தால் மட்டும் போதாது, அதற்கு முன் அடுத்த ஒலிம்பிக்கிலாவது இந்தியர்களும் பதக்கப் பட்டியலில் ஒரு கவுரமான நிலையை அடைந்து உலகிற்கு நாம் விளையாட்டுகளில் சளைத்தவர்கள் என்று காட்டவேண்டும்.
நானும் புலம்பி இருக்கேன் !
http://govikannan.blogspot.com/2008/08/blog-post_11.html
:(
//என் பையனுக்குக் கூட ஸ்போர்ட்ஸில் எதைப்பார்த்தாலும் உடனே ஆசை வருது... ஆனா நம்ம டிவியில் யார் காட்டறா.. வெளிநாட்டு டீவியில் வெளிநாட்டு ஆட்களின் லாங்க் ஜம்ப் ஹை ஜம்ப் பார்த்துட்டு ப்ளாஸ்டிக் பேட்டை அந்த குச்சியா நினைச்சு நடிச்சுக்காமிச்சான்.. இரும்பு வட்டு எறியறது பார்த்துட்டு..அம்மா தேகோ ன்னு சொல்லிட்டு கையில் இருந்த பொருளை டிவியில் செய்த ஆளு மாதிரியே ஒரு சுத்தி சுத்தி எறிஞ்சானா பயந்துட்டேன் புக் ஷெல்ப் போச்சுன்னு.. :)//
முத்துலெட்சுமி,
நீங்க சொன்னதை படிக்கும் பொழுது எனக்குத் தோன்றியது இதுதான், பசங்களும், பொற்றோர்களும் ஆர்வத்துடன் முன் வந்தால் கூட அதற்கு போதுமானளவு அரசாங்கத்திடமிருந்து உந்துதல் கிடையாது. இது போன்ற நேரத்தில் விளையாட்டுத் துறை அமைச்சகமே மக்களிடத்தில் உற்சாகத்தை உசுப்பேத்துவது மாதிரியான கருத்துக்களை விதைக்க வேண்டும், செய்கிறார்களா? இல்லையே. நாம புலம்பி என்னாத்தைங்க பண்ணிடப் போறோம்.
நல்ல வேளை உங்க ட்டி.வியும், புத்தக அலமாரியும் தப்பிச்சுச்சே அதச் சொல்லுங்க :-)).
வாங்க தெகா , இன்னைக்கும் ஒரு நல்ல விசயத்தோடதான் வந்து இருக்கீங்க.
என்னடா இவன் நாம் எதை போட்டாலும் எதிமறையா பேசுறானேன்னு நினைக்க வேண்டாம்.
பிரச்சினை தொலைகாட்சி நிறுவனங்களிடமோ, அரசாங்கத்திடமோ, அரசியல் வாதிகளிடமோ இல்லை.
இந்நிலைக்கு நாமும், நாம் சார்ந்த்த சமூகமும் தான் காரணம். நம்மை நம் பெற்றோர் என்ன சொல்லி வளர்த்தார்கள்.? நல்லா படிக்கணும்! நல்ல வேலைக்கு போனும்! கை நிறைய சம்பாதிக்கணும். இப்படித்தானே.
சுயமாக யோசிக்கணும், ஏதாவது சாதிக்கணும் என்று சொல்லிக்கொடுத்த பெற்றோர் குறைவுதான். அதையும் மீறி சாதிக்க கிளம்பியவர்களை தலையில் குட்டி உட்கார வைப்பதுதான் நம் பழக்கம்.
"கை நிறைய சம்பாதிக்கணும்" என்று அனைவரும் சொல்லிக்கொடுத்த பாடத்தின் result தான் இது. நாம் நல்லா படித்தோம். நல்லா உழைக்கிறோம். உலக நாடுகளின் கூலிகளாக வேலை பார்த்து , சேவை செய்து நம் தேவைகளை நிறைவேற்றி கொள்கிறோம்.
பிரச்சினைகளை நம் பெற்றோரிடம் வைத்துக்கொண்டு அடுத்தவர்கலையா திட்டுவது. இந்தியாவில் சாதனையாளர்கள் குறைவாக இருப்பதற்கு இதுதான் காரணம். கூலிக்கு மாரடிக்குற கூட்டம் தான் நம்மளது. அடிப்படை காரணம் பணம்/வறுமை. முதல்ல வயித்த கவனிச்சிட்டு மத்தத கவனிக்கலாம் என்ற மனோபாவம் தான்.
பணத்தில் நாம் தன்னிறைவு பெரும் போது அடுத்ததாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
இன்று ஒரு சில இந்தியர்கள் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ளதால், அடுத்த தலைமுறையில் நாம் நிச்சயம் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இந்தியன் கூலி மட்டுமல்ல சாதிக்க கூடியவன் தான் என்ற நிலை ஏற்படும். அதற்கு நாமும் நம் குழந்தைகளை தயார் படுத்த வேண்டும். :}
//நாங்களும் ஒரு தங்கப்பதக்கம் வாங்கீட்டமாக்கும்...ஹுக்கும்...
//
மங்கை இந்த ஒரு வார்த்தையிலயே ""ஹுக்கும்"" எல்லாத்துக்கும் பதில் சொன்ன மாதிரி இருக்கு :-).
வாங்க தமிழ்கிங்,
இது போன்று மாற்றுப் பார்வைக்காகத்தானே இங்கே பதிவுகளையே கொண்டு வாரது. எனவே, கொண்டு வாங்க நீங்க எப்படி இந்தச் சூழலைப் பார்க்கிறீங்கன்னு பகிர்ந்துப்போம்.
நீங்க சொல்ற அந்த தனிநபர் பொருளாதார தன்னிரைவு "மேக் சென்ஸ்" செய்தாலும், போதுமானளவிற்கு நமது அரசாங்கத்திடமிருந்து வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தால் கண்டிப்பாக பெற்றோர்களும் தனது குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்துவதின் மூலம் அவனுக்கு எதிர்காலமிருக்கிறது என்று நம்பிக்கையூட்ட முடியும்தானே?
இப்பொழுது ஒரு சிறுவனுக்கு சரியாக படிப்பில் நாட்டம் செலுத்த முடியவில்லை ஆனால், நீச்சலில் நல்ல ஆர்வமிருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அச் சிறுவனை அடையாளம் பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், அரசாங்கத்தின் பங்களீப்பாக இருக்கக் கூடிய செயல்முறை திட்டங்கள் எங்கே...
அதனால், இன்றைய பொழுதுக்கு நீங்கள் கூறிய மக்களின் ஆர்வமின்மையும், நம்மாட்களின் "கை நிறைய சம்பாதிக்கணும்" தத்துவமும் பெரும் பங்கு ஆற்றினாலும் இன்னமும் இந்திய விளையாட்டுத்துறை கொஞ்சம் கடுமையா பிரச்சாரம் பண்ணலாம்...
உங்களின் "பாசிடிவ் நோக்கு" நம்பிக்கையூட்டுகிறது. நன்றி!
பத்தாவதுலே 400க்கு மேல மார்க்கு வந்தாதான் உருப்பட முடியும்னு சொல்லிச் சொல்லியே எல்.கே.ஜி ல இருந்தே டியூஷன் அனுப்பிடறோம்!
9ம் வகுப்பு சிலபஸ் காலாண்டுப் பரிட்டையோட சரி! அதுக்கப்புறம் தினம் 26(!?) மணி நேரமும் டெந்த் சிலபஸ்தான்!
11ம் வகுப்புலயும் இதே கதிதான்! இந்த முறை 12த் சிலபஸ் மட்டுமில்லாம எண்ட்ரன்ஸ்ஸ் கோச்சிங்க் வேற!
கூடவே கட்.ஆஃபு கட்.ஆஃபு ன்னு சொல்லி புள்ளைக மூளைல ஒரு திகிலான வார்த்தையை விதைக்கிறோம்!
அந்த 15 வருஷமும் (ப்ரீகேஜி, எல்கேஜி, யூகேஜி சேர்த்துதாங்க) பயபுள்ளைகளுக்கு விளையாட (அவங்களுக்கான (படிப்பு தவிர) திறமையை வளர்த்துக்க ஏதுங்க நேரம்?
அந்த 15 வருஷம் முடிஞ்சிதான் பசங்களுக்கே கொஞ்சம் (கொஞ்சமே கொஞ்சம்) ரைக்கை முளைக்குது. காலேஜ்ல போயி அப்பாடான்னு காதல் கீதல்னு கவனத்தைத் திருப்ப முடியுது. அது கூட இஞ்சினியரிங்க், மெடிக்கல்னு போன பசங்களுக்கு ரொம்ப பேருக்கு வாய்க்கறதில்லை!
இதுக்கு மேலதான் விளையாடக் கத்துகிட்டு... அப்புறமா அரசியல்களைக் கடந்து திறமைசாலியா நம்ம நாட்டு சார்பா விளையாடப் போகணும்னா.... ஆகுற காரியங்களா?
தெக்ஸ்.. பீ பிராக்டிக்கல் ஐ சே!
//நீங்க சொல்ற அந்த தனிநபர் பொருளாதார தன்னிரைவு "மேக் சென்ஸ்" செய்தாலும், போதுமானளவிற்கு நமது அரசாங்கத்திடமிருந்து வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தால் கண்டிப்பாக பெற்றோர்களும் தனது குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்துவதின் மூலம் அவனுக்கு எதிர்காலமிருக்கிறது என்று நம்பிக்கையூட்ட முடியும்தானே?//
மாவட்டந்தோறும் விளையாட்டு மையங்கள் உள்ளன. அவர்கள் திறமையான பள்ளி குழந்தைகளை கண்டறிந்து பயிற்சி அளித்து வருகிறார்கள். எல்லாம் ஒன்பதாம் வகுப்பு வரை நல்லாத்தான் போகும். 10th போன உடனே தான் பிரச்சினையே ஆரம்பிக்கும். "அரசு தேர்வு! படிப்பில் கவனம் செலுத்து" இது பெற்றோர் உத்தரவு. அத்துடன் எல்லாம் காலி .. பணத்தை தேடி ஓட்டம் ஆரம்பமாகி விடுகிறது.
உங்கள் கருத்து புரிகிறது, சில துறைகளில் சிலர் இருந்து கொண்டு முன்னேற நினைப்பவர்களை முன்னேற விடாமல் தடுப்பது. அது ஒழிக்க முயல வேண்டும்.
உதாரணத்திற்கு இந்தியாவிற்கே பிடித்த விளையாட்டு கிரிகெட் தான். ஆனால் நம் தமிழகத்திலிருந்து ஒரு நல்ல விளையாட்டு வீரர் வருவதில்லை. காரணம் ?? தலையில் குட்டபடுவதே :)
இது வரை வந்த தமிழகத்தை சேர்ந்த வீரர்களை பாருங்கள். ஸ்ரீகாந்த், W.V. ராமன், சிவராம கிருஷ்ணன், லக்ஷ்மிபதி பாலாஜி, இப்போதைய பத்ரிநாத், IPL இல் விளையாடிய ஸ்ரீகாந்து மகன், சிவராமகிருஷ்ணன் மகன், கொஞ்சம் யோசித்தால் இவர்கள் அனைவரும் முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்கள் [என்னிடம் ஆதாரம் இல்லை. எங்கோ படித்த நியாபகம்.] . ஏன் உடலில் வலிமை கொண்ட ஒரு மதுரை மாயாண்டியோ, திருச்சி முனியான்டியோ வரமுடியவில்லை. குட்டபட்டு ஒதுக்கப்பட்டு இருக்கிரார்கள். இங்கே புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள் இப்போது ICL-il விளையாண்டு வருகிறார்கள்.
//ஏன் உடலில் வலிமை கொண்ட ஒரு மதுரை மாயாண்டியோ, திருச்சி முனியான்டியோ வரமுடியவில்லை//
நியாயமான கேள்வி!
வேலிட் கொஸ்டீன்!
தெகா,
வாய்ப்பும்,வசதியும் இருந்தால் எந்த நாடும் முன்னணிக்கு வரமுடியும். கடந்த 150 வருடங்களில் அமெரிக்காவின் வளர்ச்சி அபரிமிதமானது.கிட்டத்தட்ட 110 ஆண்டுகளாக நடந்துவரும் ஒலிம்பிக்ஸில் முதல் 55 ஆண்டுகள் அமெரிக்காவின் கையே ஓங்கி இருந்துள்ளது. இந்த 55 ஆண்டுகளில் சோவியத் கலந்துகொள்ளவில்லை, அவர்கள் பொருளாதாரத்தன்னிறைவை அடைய வெறிகொண்டு உழைத்தனர். 1950க்கு மேல் சோவியத் கலந்துகொள்ள ஆரம்பித்ததில் இருந்து நடந்த 11 ஒலிம்பிக் பந்தயங்களில் 8 முறை சோவியத் முதலிடம் பெற்றுள்ளது. சோவியத்தைபோலவே சீனாவும் பொருளாதாரத்தன்னிறைவை அடையும் வரை ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவில்லை.1980களில் இருந்து கலந்து கொண்ட சீனா விரைவிலேயே பதக்கப்பட்டியலில் முன்னணிக்கு வந்தது. போன நூற்றாண்டு அமெரிக்கா,சோவியத் ரஷ்யாவுக்கு என்றால் இந்த நூற்றாண்டு சீனாவுக்கானது.சீனாவின் பொருளாதாரத்தன்னிறைவு கடைநிலை மக்களையும் அடைந்துள்ளதே இதற்குக்காரணம். இதே வரிசையில் இந்தியாவும் ஒருநாள் சாதிக்கும் மிகவும் மெதுவாக.
கிங்,
//மாவட்டந்தோறும் விளையாட்டு மையங்கள் உள்ளன. அவர்கள் திறமையான பள்ளி குழந்தைகளை கண்டறிந்து பயிற்சி அளித்து வருகிறார்கள். எல்லாம் ஒன்பதாம் வகுப்பு வரை நல்லாத்தான் போகும். 10th போன உடனே தான் பிரச்சினையே ஆரம்பிக்கும். "அரசு தேர்வு! படிப்பில் கவனம் செலுத்து" இது பெற்றோர் உத்தரவு. அத்துடன் எல்லாம் காலி .. பணத்தை தேடி ஓட்டம் ஆரம்பமாகி விடுகிறது.//
ஆமாம், இதன் பொருட்டு எனக்கு சொந்த அனுபவமே உண்டு. எனது தம்பி பத்தாவது வகுப்பு வரையிலும் அரசாங்க உயர்நிலைப் பள்ளியில் படித்தான் கால் பந்தில் நல்ல ஆர்வமுண்டு, அதன் மூலமாக பதினொன்றாம் வகுப்பிற்கு மாவட்டளவில் கால்பந்து விளையாட்டு வீரனாக தேர்வு பெற்று சென்னை ஒய்.எம்.சியில் சேர்ந்து பயின்றான். அங்கு விளையாட்டிற்கென சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பினும், படிப்பு சார்ந்து அழுத்தமிருந்தது.
ஒரு வழியாக அதனினும் தேறி நல்ல மதிப்பெண்களுடன் இருந்த போதும், கல்லூரி காலங்களில் சரியான ஊக்குவிப்பில்லை. அதற்குப் பிறகு என்ன என்ற கேள்வியே தொக்கி நின்றது.
இது போலவே பல பேருக்கு இருக்கும். கீழே இருக்கிற இன்னொரு சிச்சுவேஷன் பாருங்களேன்...
"""ஒருத்தன் நல்ல ஃபுட்பால் ஆட வருதுன்னு பி.ஏ (ஆர்ட்ஸ், அல்லது தமிழ் இலக்கியம்) எடுக்கிறான்னு வைச்சிக்கோங்க எதில ஈசியா பாஸ் பண்ண முடியுமோ, அதெ, அதே சமயத்தில அதிலெல்லாம் வேலை வாய்ப்பு கம்மியா இருக்கும். ஆனா, ஸ்போர்ட்ஸ்ல நல்ல கவனத்தை செலுத்த முடியும் அப்படி இருக்கும் பொழுது
3 வருஷம் கல்லூரி முடிச்சு வெளியில வந்ததும் அந்தாளு நிலமை என்ன? நம்மூர்ல"""
சோ, அரசாங்கத்தின் பங்களிப்பு இதில அதிகமா இருக்கணும், ஒரு வேலையும் பார்த்திட்டே விளையாட்டிலும் கவனம் செலுத்துற மாதிரி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கணும்.
//ஏன் உடலில் வலிமை கொண்ட ஒரு மதுரை மாயாண்டியோ, திருச்சி முனியான்டியோ வரமுடியவில்லை. குட்டபட்டு ஒதுக்கப்பட்டு இருக்கிரார்கள். //
அதானே பயமே அறியாத அந்த அருவா வீச்சு பண்டியர்களெல்லாம் எங்கே :-)). எல்லாத்திலும் அரசியல், பணம் அடப் போங்கப்பான்னு வருதா, இல்லையா...
//ஒலிம்பிக்கை ஏற்று நடத்த வேண்டும் என்று இந்தியர்களாகிய நாம் நினைத்தால் மட்டும் போதாது, //
கோவி,
இப்படி ஒரு ஆசை இருக்கிறதை சொல்லவே இல்லை :). ஆசையெல்லாம் நியாயந்தான், ஆனா அதுக்கு முன்னாடி மற்ற ஒலிம்பிக்ஸ் பலகைகளில் கொஞ்சம் பார்க்கிற மாதிரி எண்கள் இருக்கணுமே.
இது போன்ற உலக திருவிழாக்களின் மூலமாக ஒரு நாட்டின் அருமை, பெருமைகளை உலகத்தையே கொண்டு வந்து காமிச்சு சொல்லிக்க ஒரு வாய்ப்புதானே. ஆனா, அதப் பெறுவதற்கு வெகு தொலைவில் உள்ளோம் போலவே...
நீங்களும் ஒரு பதிவு போட்டு இன்னொரு கோணத்தில் தொட்டுச் சென்றிருப்பதனைப் இப்பத்தான் பார்த்தேன். நன்றி, கோவி!
சிபி,
எங்கிருந்தோ வந்தார் புட்டு புட்டு வைத்தார்ங்கிற அளவிற்கு நம்மூர் பசங்களின் பிரச்சினைகளை பிரிச்சு மேஞ்சுட்டீங்களே :-).
உண்மைதான் நீங்க சொல்றது. ஒரு காலத்தில படிச்சு அது மூலமா எதிர்காலத்தில தனக்கொரு குடும்பபமைச்சுக்க ஏதுவா பண்ணிக்க இருந்த ஒரு விசயத்தை, சர்வைவலுக்காக இருக்க வேண்டிய ஒரு விசயத்தை பிறந்த நாளன்னிக்கே ஆரம்பிச்சு நியாயமா அந்தப் புள்ளகளுக்கு கிடைக்க வேண்டிய மற்ற விசயங்கள் கிடைக்காமயே தடுத்து வைச்சிடர சமூகமாகிப் போச்சு இன்றைய உலகம்.
பல விசயங்களை இன்றைய குழந்தைகள் இழந்தே வருகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும்கிடையாது.
//இதுக்கு மேலதான் விளையாடக் கத்துகிட்டு... அப்புறமா அரசியல்களைக் கடந்து திறமைசாலியா நம்ம நாட்டு சார்பா விளையாடப் போகணும்னா.... ஆகுற காரியங்களா?//
ரொம்ப உண்மைங்க. இத்தனை எதிர் நீச்சலையும் போட்டு வெளியே வாரதுக்குள்ளயும் அரைக் கிழவனாகி ஆர்வம் செத்துப்புடும் :(.
கிங்,
//மாவட்டந்தோறும் விளையாட்டு மையங்கள் உள்ளன. அவர்கள் திறமையான பள்ளி குழந்தைகளை கண்டறிந்து பயிற்சி அளித்து வருகிறார்கள். எல்லாம் ஒன்பதாம் வகுப்பு வரை நல்லாத்தான் போகும். 10th போன உடனே தான் பிரச்சினையே ஆரம்பிக்கும். "அரசு தேர்வு! படிப்பில் கவனம் செலுத்து" இது பெற்றோர் உத்தரவு. அத்துடன் எல்லாம் காலி .. பணத்தை தேடி ஓட்டம் ஆரம்பமாகி விடுகிறது.//
ஆமாம், இதன் பொருட்டு எனக்கு சொந்த அனுபவமே உண்டு. எனது தம்பி பத்தாவது வகுப்பு வரையிலும் அரசாங்க உயர்நிலைப் பள்ளியில் படித்தான் கால் பந்தில் நல்ல ஆர்வமுண்டு, அதன் மூலமாக பதினொன்றாம் வகுப்பிற்கு மாவட்டளவில் கால்பந்து விளையாட்டு வீரனாக தேர்வு பெற்று சென்னை ஒய்.எம்.சியில் சேர்ந்து பயின்றான். அங்கு விளையாட்டிற்கென சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பினும், படிப்பு சார்ந்து அழுத்தமிருந்தது.
ஒரு வழியாக அதனினும் தேறி நல்ல மதிப்பெண்களுடன் இருந்த போதும், கல்லூரி காலங்களில் சரியான ஊக்குவிப்பில்லை. அதற்குப் பிறகு என்ன என்ற கேள்வியே தொக்கி நின்றது.
இது போலவே பல பேருக்கு இருக்கும். கீழே இருக்கிற இன்னொரு சிச்சுவேஷன் பாருங்களேன்...
"""ஒருத்தன் நல்ல ஃபுட்பால் ஆட வருதுன்னு பி.ஏ (ஆர்ட்ஸ், அல்லது தமிழ் இலக்கியம்) எடுக்கிறான்னு வைச்சிக்கோங்க எதில ஈசியா பாஸ் பண்ண முடியுமோ, அதெ, அதே சமயத்தில அதிலெல்லாம் வேலை வாய்ப்பு கம்மியா இருக்கும். ஆனா, ஸ்போர்ட்ஸ்ல நல்ல கவனத்தை செலுத்த முடியும் அப்படி இருக்கும் பொழுது
3 வருஷம் கல்லூரி முடிச்சு வெளியில வந்ததும் அந்தாளு நிலமை என்ன? நம்மூர்ல"""
சோ, அரசாங்கத்தின் பங்களிப்பு இதில அதிகமா இருக்கணும், ஒரு வேலையும் பார்த்திட்டே விளையாட்டிலும் கவனம் செலுத்துற மாதிரி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கணும்.
//ஏன் உடலில் வலிமை கொண்ட ஒரு மதுரை மாயாண்டியோ, திருச்சி முனியான்டியோ வரமுடியவில்லை. குட்டபட்டு ஒதுக்கப்பட்டு இருக்கிரார்கள். //
அதானே பயமே அறியாத அந்த அருவா வீச்சு பண்டியர்களெல்லாம் எங்கே :-)). எல்லாத்திலும் அரசியல், பணம் அடப் போங்கப்பான்னு வருதா, இல்லையா...
//ஏன் உடலில் வலிமை கொண்ட ஒரு மதுரை மாயாண்டியோ, திருச்சி முனியான்டியோ வரமுடியவில்லை//
நியாயமான கேள்வி!
வேலிட் கொஸ்டீன்!//
அதுக்கு ஒருத்தரு தமிழிஸ்ல பதிலும் சொல்லியிருக்கார் ரொம்ப ஹாட்டா இருக்கு, முடிஞ்சா அங்கேயும் ஓடியாந்து பாருங்க...
///நான் நினைக்கிறேன் ஏதேனும் பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸில் கவனம் செலுத்தி நம்மை விட கோல்ட் மெடல்கள் வாங்கி உசுப்பேத்தினால்தான் நமக்கு சூடு வருமோ.///
இப்பவே கிரிக்கெட்ல உசுப்பேத்தி நாம படுற கேவலம் போதாதா உங்களுக்கு....
குட்டி,
//இப்பவே கிரிக்கெட்ல உசுப்பேத்தி நாம படுற கேவலம் போதாதா உங்களுக்கு.. //
பார்த்திட்டுத்தானே வாரேன் பாகிஸ்தானுக்கு இந்தியாவிற்கும் மேட்ச் ஒண்ணு வைச்சா என்னமோ இரண்டு நாடுகளும் போருக்கு ரெடியாகுற கணக்கா பில்ட் அப்... வெக்கக் கேடு, ஏன் அந்த குட்டியூண்டு நாட்டோட இம்மா பெரிய நாடு போட்டிப் போடணும் வாயலேயே, காமிக்க வேண்டிய இடத்தில காமிச்சி வாயடைச்சுட்டுப் போக வேண்டியதுற்கு... கொடுமைங்க :(
அகஅராய்ச்சியாளன்,
வாங்க, முதல் முறை நம்ம பக்கம். உங்க பெயரிலேயே பாசிடிவ் காத்துருக்கு. இருந்தாலும் எனக்குத் தோணினத நான் சொல்லிடுறேன்.
//வாய்ப்பும்,வசதியும் இருந்தால் எந்த நாடும் முன்னணிக்கு வரமுடியும்.//
உண்மைதான். வாய்ப்பும் வசதியும் பெருகிவிட்டதாகத்தானே நாமும் "இந்தியா ஒளிர்கிறது" என்ற கோஷத்தை முன்னிருத்தினோம். அதனை உண்மையாக்க இது போன்ற தருணங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? அதுதான் எனது ஆதங்கமே இங்கே.
//சீனாவின் பொருளாதாரத்தன்னிறைவு கடைநிலை மக்களையும் அடைந்துள்ளதே இதற்குக்காரணம். இதே வரிசையில் இந்தியாவும் ஒருநாள் சாதிக்கும் மிகவும் மெதுவாக.//
சீனாவிற்கு இணையாகத்தானே எல்லாவற்றிலும் அளவு கோலாக நம்மை நிறுத்தி வளர்ந்து கொண்டிருக்கிறோம். ஏன், இத்துறையில் மட்டும் அந்த மனப் பாங்கு வரமாட்டேனென்று அடம் பிடிக்கிறதே. இது போன்றெல்லாம் யாரும் பேசுவதனைப் போல தெரியவில்லை.
வரும்.. வரும் எனக்கும் நம்பிக்கை இருக்கிறது, எல்லா அரசியல் வாதிகளும் தனது 10வது தலைமுறைக்கும் பணம் சேர்த்து முடித்த பொழுதில்...
ஆனா, மெதுவா வந்துடும் :-).
//1.2 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து வெறும் 54 வீரர்கள் அதுவும் என்னவோ ட்டி.வி விளம்பரங்களில் நடிப்பதற்கு செல்பவர்களைப் போல தழுக், மொளுக்கென்று நாம் கண்ணுரும் அதே ட்டி.வி விளம்பர மக்களின் தோல் நிறத்துடன்.//
இல்லையே? சுமாராக தானே இருந்தார்கள்?
எண்ணிக்கை ரொம்ப குறைவு என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
வாங்க கயல்விழி,
//இல்லையே? சுமாராக தானே இருந்தார்கள்?//
அப்படியா நீங்க நினைக்கிறீங்க, அப்ப எங்களுக்குத்தான் எல்லாரும் ஹிந்தி பட நடிகர்கள் மாதிரி தெரிஞ்சாங்களா :)).
நம்மூரு திண்டுக்கல் சாயலிலோ இல்ல திருச்சி ஆட்களைப் போலவோ பார்க்க ஒருத்தரும் கிடைக்கலியே...:((
//எண்ணிக்கை ரொம்ப குறைவு என்பதை ஒப்புக்கொள்கிறேன்.//
கிட்டத்தட்ட நீங்க போட்ட "அரசியலும் ஆட்டு மந்தை மக்களும்" பதிவிற்கும் இதற்கும் கொஞ்சம் சம்பந்தமிருக்குமே??
//அப்படியா நீங்க நினைக்கிறீங்க, அப்ப எங்களுக்குத்தான் எல்லாரும் ஹிந்தி பட நடிகர்கள் மாதிரி தெரிஞ்சாங்களா :)).
நம்மூரு திண்டுக்கல் சாயலிலோ இல்ல திருச்சி ஆட்களைப் போலவோ பார்க்க ஒருத்தரும் கிடைக்கலியே...:((
//
எனக்கு சுமாராக தெரிந்தார்கள். ஒரு வேளை நாம் கம்பேர் பண்ணும் ஸ்டாண்டர்டுகள் காரணமாக இருக்கலாம்(நான் சென்னை, நீங்க திண்டுக்கல், திருச்சி)
//கிட்டத்தட்ட நீங்க போட்ட "அரசியலும் ஆட்டு மந்தை மக்களும்" பதிவிற்கும் இதற்கும் கொஞ்சம் சம்பந்தமிருக்குமே??//
நிச்சயம் இருக்கிறது, கடைசியாக ஒலிம்பிக்ஸ் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம்
//எனக்கு சுமாராக தெரிந்தார்கள். ஒரு வேளை நாம் கம்பேர் பண்ணும் ஸ்டாண்டர்டுகள் காரணமாக இருக்கலாம்(நான் சென்னை, நீங்க திண்டுக்கல், திருச்சி//
உலக உருண்டையில லாஞ்சிட்யூட் படி பார்த்தாக்க அவ்வளவு பெரிய வித்தியாசம் வந்திடாது சென்னைக்கும் நம்மூரு மதுரைக்கும், திருச்சிக்கும். மதுரையாட்களை பார்த்திருக்கீங்களா, சும்மா கால்நடையா நடந்து திரியறவங்களை கடைத் தெருவில... அதேதான் ரங்கநாதன் தெருவிலும் எண்ணை வழிஞ்சிட்டு கொஞ்சம் கரடு முரடா இருப்பாங்களே அது போன்ற மக்கள வைச்சி கம்பேர் பண்ணினேங்க... இந்த கபடியெல்லாம் விளையாடுவங்கள்லே அந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் என்னாச்சு?
திறப்பு விழாவில் எங்கே டர்பனைத் தலையில் வச்சுக்கிட்டு வருவாங்களோன்னு ஒரு பயம் நெஞ்சுக்குள்ளே இருந்துச்சு.
நல்லவேளை_/\_
//நான் நினைக்கிறேன் ஏதேனும் பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸில் கவனம் செலுத்தி நம்மை விட கோல்ட் மெடல்கள் வாங்கி உசுப்பேத்தினால்தான் நமக்கு சூடு வருமோ//
சந்தேகம் தான் :-))))
நிச்சயம் இருக்கிறது, கடைசியாக ஒலிம்பிக்ஸ் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம்//
ஓ, அப்படியா? கடைசியாக அந்தப் பதிவிற்கு 60ஆவது பின்னூட்டம் ஓடிட்டு இருக்கும் பொழுது கடைசியா வந்தேன்னு நினைக்கிறேன்.
இவைகள் அணைத்துமே ஒன்றிர்க்கு ஒன்று தொடர்பு உடையதுதான்.
//திறப்பு விழாவில் எங்கே டர்பனைத் தலையில் வச்சுக்கிட்டு வருவாங்களோன்னு ஒரு பயம் நெஞ்சுக்குள்ளே இருந்துச்சு.
நல்லவேளை_/\_ //
வாங்கம்மா துள்சிம்மா, எவ்வளவு நாளாச்சு என் திண்ணையாண்டே வைச்சி உங்களப் பார்த்து. நல்லா இருக்கீகளா? உங்க பயணக் கட்டுரை எல்லாம் படிச்சு, விருந்தும் சேர்த்து சாப்பிட்டுட்டுத்தான் இருக்கேன். என்ன ஒண்ணு பின்னூட்டம் ஏதும் எழுதுறதில்லை :(.
இப்ப நம்ம விசயம். இங்க "டர்பனைத் = towel head" அப்படின்னு வைச்சி பரங்கியர்கள் கூப்பிட்டுறாங்க :)). ஏன், அவங்கதானே வாட்ட சாட்டமா விளையாட்டுக்குன்னு இருக்கிற மாதிரி தெரியுது அவங்களப் பார்த்த உங்களுக்கு ஏன் திக்குன்னு இருக்கு, தலீபான்ல சேர்த்துடுவாங்கன்னா இந்தியாவ :-P...
பன்முகத்தன்மையும் தேர்வும் நமக்கு பிரச்சினையே இல்லை...
யாருப்பா புலம்புறது நம்ம தெகாவா?
நேத்து தான் ஒரு தங்கத்த "சுட்டாச்சில்ல" கொஞ்சம் பொருங்க :)
//சந்தேகம் தான் :-))))//
உசுப்பேத்தி, உசுப்பேத்தி ரணகளமாக்கிப்புடுவோம்ல :)).
தெ.கா,
//அவங்கதானே வாட்ட சாட்டமா விளையாட்டுக்குன்னு இருக்கிற மாதிரி தெரியுது அவங்களப் பார்த்த உங்களுக்கு ஏன் திக்குன்னு இருக்கு,//
பஞ்சாபிகளைப் பார்த்தாப் பயம் இல்லைப்பா.
நம்ம பக்கம் புகாரி ஹோட்டல் கேட் கீப்பர் மாதிரி ஒரு டர்பனை வச்சுக்கிட்டு இதுதான் தேசீய உடைன்னு மக்களுக்குப் பாவ்லா காட்டுறாங்க பாருங்க..... அதைச் சொன்னேன்.
இங்கே ஒரு பள்ளிக்கூடப் பையன் நம்ம வீட்டுலே டர்பன் இருக்கான்னு கேட்டான். பள்ளிக்கூட விழாவுக்கு நாடகம் போடறானாம்:-))))
இந்திய வம்சாவளிப் வாலிபர் ராஜ் பவ்சார் என்பவர் அமேரிக்கா ஜிம்னாஸ்டிக் அணியில் இருக்கிறார். அவர் ஏதாவது மெடல் வாங்கினால் அபினவோடு சேர்த்து அவருக்கும் சேர்த்து இந்தியர்கள் போஸ்டர் அடித்து ஓட்டாவிட்டால், அடுத்த குடியரசு தினத்துக்கு அவருக்கும் ஒரு பாரத் பூஷன், விபூஷன் என்று ஒரு ஜனாதிபதி விருதும் கொடுக்காவிட்டால் என் பேரை மாத்திக்கிறேன். (அதுவரை அனானிய இருந்துக்கறேன்).
http://dinamalar.com/sports/linknews1.asp
இன்று தான் தினமலரில் செய்தி பார்த்தேன்... நமது தங்கமகன் அபினவ் பின்த்ராவின் அப்பா ஒரு கோடிசுவரர் . மகன் பயிற்சிக்கு குளிர் சாதன வசதியுடன் கல்யாண மஹால் போன்ற துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் ஒன்றை கட்டி கொடுத்து உள்ளாராம்.
பெற்றோர் பங்கும் மிக முக்கியம் இந்த விசயத்தில் :)
டப்பு வேணும் மாமு டப்பு வேணும்
எதற்கு நாம் அரசையே எதிர்பார்க்கவேண்டும்?
எனக்குத் தோன்றிய சில வழிமுறைகள்.
1. முதலில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தைக் அரசு கலைக்க வேண்டும்.
2. தொழில் நிறுவனங்கள் விளையாட்டை ஊக்குவித்து செய்யும் செலவுக்கு முழு வரிவிலக்கு.
3. அவர்களால் ஆதரிக்கப்படும் ஆட்டங்களில் இந்தியா பதக்கம் வென்றால் இரு மடங்கு வரிவிலக்கு.
4. உலக சாதனை அல்லது ஒலிம்பிக் பதக்கம் வென்றால் மும்மடங்கு வரிவிலக்கு.
இதையும் முயன்று பார்க்கலாமே?
ஒரு ஏழை தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த கதை இன்றைய தினகரனில். இப்படியாகத்தான் நமது ஒலிம்பிக் தேர்வானையக் குழு இந்தியாவில் ஒலிம்பியன்ஸ்களைத் தேடிக் கொண்டிருக்கிறது.
"""""""""""ஏற்கனவே சாம்சங், சகாரா நிறுவனத்துடன் அபிநவ் பிந்த்ராவுக¢கு விளம்பர ஒப்பந்தம் உள்ளது. இப்போதைய நிலவரப்படி, ஒரு விளம்பரத்துக்கு ரூ.2 கோடி வரை அபிநவ் பிந்த்ராவுக்கு சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார் ஒரு நிபுணர்.
ஆனால் இத்தனை வாய்ப்புகளையும் அபிநவ் எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பொருத்தே எதிர்காலம் இருக்கிறது. அபிநவ் ஏற்கெனவே கோடீஸ்வரர். இவரது தந்தை அபிஜித் சிங் பிந்த்ரா ரூ.300 கோடியில் ஹைடெக் குழுமத்தை நடத்தி வருகிறார்.
அபிநவ் பெயரில் சண்டிகரில் ரூ.150 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. அதில் ஒலிம்பியன் என்ற பெயரில் ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்ட திட்டமிட்டு உள்ளனர். ரூ.200 கோடியில் வேறொரு நிறுவனத்துடன் இணைந்து அந்த ஓட்டல் கட்டப்பட உள்ளது. """"""""""""
Go for full news... http://www.dinakaran.com/daily/2008/aug/13/high3.asp
Wednesday, August 13, 2008
//"""ஒருத்தன் நல்ல ஃபுட்பால் ஆட வருதுன்னு பி.ஏ (ஆர்ட்ஸ், அல்லது தமிழ் இலக்கியம்) எடுக்கிறான்னு வைச்சிக்கோங்க எதில ஈசியா பாஸ் பண்ண முடியுமோ, அதெ, அதே சமயத்தில அதிலெல்லாம் வேலை வாய்ப்பு கம்மியா இருக்கும். ஆனா, ஸ்போர்ட்ஸ்ல நல்ல கவனத்தை செலுத்த முடியும் அப்படி இருக்கும் பொழுது
3 வருஷம் கல்லூரி முடிச்சு வெளியில வந்ததும் அந்தாளு நிலமை என்ன? நம்மூர்ல//
அணில் கும்ப்ளேவுடன் கர்நாடக அணியில் கிரிக்கெட் அணியில் விளையாடிய ஒருவர் பி.ஈ. படிச்சிட்டு ஆன் சைட்டில் எங்களுடன் பொட்டி தட்டி வந்தார். இப்ப விளையாடுவது என்னவோ வார இறுதி டென்னிஸ் பந்து கிரிக்கெட் தான் :(
//யாருப்பா புலம்புறது நம்ம தெகாவா?
நேத்து தான் ஒரு தங்கத்த "சுட்டாச்சில்ல" கொஞ்சம் பொருங்க :)//
என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம். பொருத்தார் மண்ணையாள்வார், பொருத்துடுவோம்... ;)
துள்சிங்க,
//நம்ம பக்கம் புகாரி ஹோட்டல் கேட் கீப்பர் மாதிரி ஒரு டர்பனை வச்சுக்கிட்டு இதுதான் தேசீய உடைன்னு மக்களுக்குப் பாவ்லா காட்டுறாங்க பாருங்க..... அதைச் சொன்னேன்.//
ஓ! அப்ப நீங்க அதை நினைச்சு இதச் சொல்றீங்களா :)), புரியுது, புரியுது...
//இங்கே ஒரு பள்ளிக்கூடப் பையன் நம்ம வீட்டுலே டர்பன் இருக்கான்னு கேட்டான். பள்ளிக்கூட விழாவுக்கு நாடகம் போடறானாம்:-))))//
கோபால் சாரோட எட்டு அடி வேஷ்டி இருந்தா எடுத்து பிரிமணை கட்டியிற வேண்டியதுதானே பொடியன் தலையில ;))).
//Anonymous said...
இந்திய வம்சாவளிப் வாலிபர் ராஜ் பவ்சார் என்பவர் அமேரிக்கா ஜிம்னாஸ்டிக் அணியில் இருக்கிறார். அவர் ஏதாவது மெடல் வாங்கினால் அபினவோடு சேர்த்து அவருக்கும் சேர்த்து இந்தியர்கள் போஸ்டர் அடித்து ஓட்டாவிட்டால், அடுத்த குடியரசு தினத்துக்கு அவருக்கும் ஒரு பாரத் பூஷன், விபூஷன் என்று ஒரு ஜனாதிபதி விருதும் கொடுக்காவிட்டால் என் பேரை மாத்திக்கிறேன். (அதுவரை அனானிய இருந்துக்கறேன்).//
அப்படியா நினைக்கிறீங்க. சரி, இருக்கட்டும் பார்ப்போமே. நடந்தாலும் நடக்கும் கல்பனா சவ்லா விருதே நம்மூர்ல அறிவிச்சு கொடுத்திட்டு இருக்கும் பொழுது இதுவும் நடந்தாலும் நடக்கும்.
ஆனா, அப்படி நடந்தா அப்ப வந்து நீங்க யாருன்னு சொல்லோணும், திரும்ப வந்து :).
தெக்ஸ்,
அட... அதே ரத்தம் :)
தமிழ்கிங்,
நானும் இப்பத்தான் தினகரனில் படிச்சிட்டு வாரேன், வயிறு குமட்டிக்கிட்டு வந்துச்சு ஒரே வார்த்தை டாம்ன் இந்தியா... ""இப்ப விளம்பரங்களில் துப்பாக்கி சுடுவது மாதிரி நடிக்க, கோடிக்கனக்கில கொடுக்கிறேன் வா ன்னு சொல்லி போட்டா போட்டியாம்"" 300 கோடியில ஏற்கெனவே தொழில் பண்றாங்களாமா, இன்னும் படிங்க இங்கே போயி...
வாங்க பெத்தராயுடு,
//எனக்குத் தோன்றிய சில வழிமுறைகள்.
1. முதலில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தைக் அரசு கலைக்க வேண்டும்.
2. தொழில் நிறுவனங்கள் விளையாட்டை ஊக்குவித்து செய்யும் செலவுக்கு முழு வரிவிலக்கு.
3. அவர்களால் ஆதரிக்கப்படும் ஆட்டங்களில் இந்தியா பதக்கம் வென்றால் இரு மடங்கு வரிவிலக்கு.
4. உலக சாதனை அல்லது ஒலிம்பிக் பதக்கம் வென்றால் மும்மடங்கு வரிவிலக்கு.//
ஒரு சில இடங்களில் பதிவுகளையும் அதற்கான பின்னூட்டங்களை படிக்கும் பொழுது ஒவ்வொரு விளையாட்டுத் துறையும் அரசியல் வாதிகளிடமும், துறைக்கு சம்பந்தமற்றவர்களிடமும் இருப்பதாக அறியும் பொழுது, நீங்கள் கூறிய ஆப்சன் # 1 சரியென்றே படுகிறது.
மற்றபடி தனியார் தொழில் நிறுவனங்கள் அதே மெண்டாலிட்டியுடன் வீரர்களின் தேர்வை நடத்தாமல் உண்மையான வீரர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கும் பட்சத்தில் மற்ற அணைத்து உங்களது ஆலோசனைகளும் அழகாக நடைமுறைப் படுத்தலாம்தான். முன் வருவார்களா, அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும்??
அதுக்கு ஒருத்தரு தமிழிஸ்ல பதிலும் சொல்லியிருக்கார் ரொம்ப ஹாட்டா இருக்கு, முடிஞ்சா அங்கேயும் ஓடியாந்து பாருங்க...//
எங்கேங்க...?
//முதல்ல வயித்த கவனிச்சிட்டு மத்தத கவனிக்கலாம் என்ற மனோபாவம்..//
மறுக்காச் சொல்லுவோமா ..............?
தல இப்படி புலம்புறதே நமக்கு வேலையா போச்சி.. என்னத்த செய்ய :(..
செம சூடா சொல்லியிருக்கீங்க!
கரெக்டான மேட்டர்..
கரெக்டான தருணம்...!
//பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸில் கவனம் செலுத்தி நம்மை விட கோல்ட் மெடல்கள் வாங்கி உசுப்பேத்தினால்தான் நமக்கு சூடு வருமோ//
இதுதான்...கலக்கல்!
அனேகமா உண்மையும் அதுதானோ?
நாமும் அரிசிச்சோறும்,கோதுமை சப்பாத்தியும்,பத்தாதற்கு KFC,பிஸாவெல்லாம் சாப்பிட்டுத்தான் பார்க்கிறோம்.ஒண்ணும் நடக்கிற வழியாக் காணோம்? இதென்ன உடல் கூறா அல்லது மனக்கோளாறா?நானெல்லாம் பள்ளிக்கூடம் பிடிக்காமல் கால்பந்தாட்ட மைதானமே கதின்னு கிடந்தேன்.விளையாட அல்ல ஆறுமுகம் ன்னு ஒரு பையன் கோல் பிடிக்கிற துள்ளலிலும் ஆண்டப்பன் என்ற பார்வேர்டு கோல் போடுறவனின் லாவகத்திலும் மயங்கி.கொஞ்ச நாள் போய்ப் பார்த்தா எவனாவது பந்துவிளையாட்டுல கலந்துக்கப் போறான்னு வச்சுக்குங்க.அவனுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் முன்பதிவு போகவர கிடைக்கும்.புவ்வா வுக்கு ஒண்ணு பரிட்சை ஏதாவது எழுதி வேலையை தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.இல்லையின்னா ரயில்வே மாதிரி இடத்துல சேர்ந்துட்டு ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கொரு தடவை மாநில அளவுல விளையாடி ஆசையத் தீர்த்துக்க வேண்டியதுதான்.அப்புறம் கல்யாணம்,புள்ளைகுட்டி,எதிர்காலம்,திட்டமின்னு அப்படியே காலத்தை ஓட்டிட வேண்டியதுதான்:(
தெகா,
/சைனாவுடன் நம்மை தினம் தோரும் ஒப்பிட்டுளவில் ... /
இது நம்மையே நாம ஏமாத்திகிறது...!
ஒண்ணே ஒண்ணுலனா ஒப்பிடலாம்... மக்கள்தொகை.. அதுவும் கொஞ்ச நாளைக்கு...;(
தஞ்சை,
//தெக்ஸ்,
அட... அதே ரத்தம் :)//
சிகப்புத்தானே உங்களுக்கும் ;).
தருமி,
//முதல்ல வயித்த கவனிச்சிட்டு மத்தத கவனிக்கலாம் என்ற மனோபாவம்..//
மறுக்காச் சொல்லுவோமா ..............? //
நீங்க சொல்வத ஒத்துக்கிட்டாலும், அந்த ரேஞ்சில் பார்த்தால் சோத்துக்கில்லாத ஈத்தியோப்பியா, ஜமாய்க்கா எல்லாம் கலக்கிறாங்களே :-( அத எதில சேர்க்கிறது. இல்லைங்க, அதனையும் தாண்டி என்னமோ பண்ணிட்டு இருக்காங்க உயர் மட்டத்தில...
சந்தோஷம்,
//தல இப்படி புலம்புறதே நமக்கு வேலையா போச்சி.. என்னத்த செய்ய :(.. //
வேற என்ன நம்மாள செஞ்சிட முடியும், நமக்கு முன்னாடி இருக்கிற மலை ரொம்ப பெரிசா எழுந்து நிக்குதே :-(.
>>>//பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸில் கவனம் செலுத்தி நம்மை விட கோல்ட் மெடல்கள் வாங்கி உசுப்பேத்தினால்தான் நமக்கு சூடு வருமோ//
இதுதான்...கலக்கல்!
அனேகமா உண்மையும் அதுதானோ?//
சுரேகா,
அப்ப நமக்கு ரோல் மாடல் வந்து பாகிஸ்தானா, சுத்தம். அந்த நாள் வார வரைக்கும் அப்ப காத்துக்கிட்டு இருக்கணுமா வெளங்கின மாதிரிதான். :-).
ராஜ நடராஜன்,
கடைசியா வந்தாலும் ரொம்ப ஆழமான நம்மூர் ஒரு சாதா விளையாட்டு வீரனுக்கு உண்டான அன்றாட பிரச்சினைகளை அழகா எடுத்து வைச்சிருக்கீங்க.
இதே பின்புலத்தில்தான் ஞாநி தன்னோட ஆதங்கமா நம்மோட ஒரே ஒலிம்பிக் தங்கம் வென்றவரின் "எதார்த்தமின்மையின்" உள்ளர்த்தத்தை தனது ஆதங்கமாக, காட்டமாக வெளிப் படுத்திருக்கிறார்.
//விளையாட அல்ல ஆறுமுகம் ன்னு ஒரு பையன் கோல் பிடிக்கிற துள்ளலிலும் ஆண்டப்பன் என்ற பார்வேர்டு கோல் போடுறவனின் லாவகத்திலும் மயங்கி.//
உங்கூரில் அந்தப் பெயர்களிலென்றால் எங்கூரில் ஒரு முகுந்தனும், தமிழ்செல்வனும் இருந்தார்கள் அவர்கள் எந்த விதத்தில் இன்று சர்வ தேச விளையாட்டு வீரர்களுக்கு கீழானவர்களாக ஆகிப் போனார்கள். எங்கே அது போன்ற இந்திய குடிமக்கள்? அவர்களது பெற்றோர்கள் அப்போ ஒரு பெரும் மந்திரியாகவோ, அல்லது தொழிளதிபராகவோ இருந்திருந்தால் மட்டுமே டெல்லியின் ஒலிம்பிக் கதவுகளை தட்டிப் பார்த்திருக்க முடியுமா? அது எல்லோருக்கும் சாத்தியப் படுமா? அப்படி வசதிகளோடு பிறக்காதவர்கள் எல்லாம் சும்மா ஆடுமாடுகளா, கணக்கில் வராமல் செல்ல வேண்டியவர்களா?
சரி, இது போன்ற வெற்றிகள்தான் இந்தியாவின் உண்மையான முகத்தை காட்டச் செய்கிறதா? அடப் போங்கப்பா, மேலும், மேலும் இது போன்ற நிகழ்வுகள் இந்தியாவின் உண்மையான போலித் தனத்தைத்தான் பறைசாற்றிக் கூறிக் கொண்டுள்ளது. ஒரு நாள் இதுவும் மேற்குலக பத்திரிக்கைகளில் பேசப்படலாம்.
அதற்கு முன்பே நம்மை நாமே விமர்சித்துக் கொள்வதும் ஒரு விதத்தில் நாகரீகம்தான்.
//ஒண்ணே ஒண்ணுலனா ஒப்பிடலாம்... மக்கள்தொகை.. அதுவும் கொஞ்ச நாளைக்கு...;( //
வாங்க தென்றல்,
இப்படியெல்லாம் சொல்லாதீங்க ;) நாட்டுப் பற்று இல்லைன்னு சொல்லி முதுகில குத்தி வைச்சுடப் போறாங்க. முழுச் பூசனிக்காயயையும் சோத்துக்குள்ள மறைக்கத் தெரிஞ்சாத்தான் நாட்டுப் பற்று பெருக்கெடுத்து ஓடுதுன்னு சொல்லிக்கிறாங்க...
இன்னும் ஒரு பத்தாண்டுக்குள் நாம மக்கள் தொகையில் க்ராஸ் பண்ணிடுவோம், அதிலென்ன சந்தேகம் - ஆனா, அதுக்கு ஒலிம்பிக்ஸ்ல தங்கப் பதக்கம் கிடைக்குமா :-P.
இத பாத்தீங்களா, தெகா... ;(
The List: The World’s Worst Olympians
ஒலிம்பிக்கை நடத்துவது பிரச்சினை இல்லை,
அதிலும் நம்முடைய பெருந்தலைவர்கள் ஊழல் செய்து கட்டும் பாலம் இடிந்து விழுந்தால். பதக்கம் வாங்குவதை விடவும் ஊழல் இல்லாமல் போட்டி நடத்துவதே பெரிய பிரச்சினை ஆகிவிடும்
France won the relay race not america
Post a Comment