Tuesday, August 05, 2008

கருக்கலைப்பு சட்டம் இது நியாயமா? : Abortion Rights...

நேற்று ஒரு நண்பரோட பேசிட்டு இருக்கும் பொழுது தெரிய வந்தது இந்தச் செய்தி, அது மும்பையில் வாழ்ந்து வரும் தம்பதிகளுக்கு கருவில் இருக்கும் தனது 24 வார கால சிசுவிற்கு இதய சம்பந்தமான பிரச்சினை இருப்பதாகவும் அதனை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்குமாறும் நீதி மன்றத்தை அணுகியிருக்கிறார்கள், ஆனால் நீதி மன்றம் அதனை மறுத்துவிட்டதாம். மேலதிக முழுச் செய்திக்கு இங்கே சொடுக்கவும் - அபார்ஷன் சட்டத்தை திருத்த முடியாது-அன்புமணி.

எனது நண்பர்களுக்கும், வீட்டு அன்பர்களுக்கும் கூட அப்படி அந்த தம்பதியர்களுக்கு கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்குவது நியாயமாகவே படுவதாக கூறினார்கள். ஆனால், இதனை இந்திய அரசியல் சட்டம் தடுக்கிறது. அதாவது ஒரே ஒரு பெண்மணிக்காக இந்தத் சட்டத்தை திருத்த வேண்டியதில்லை என்று.

அதாவது, இது போன்று ஒரு குழந்தை கருவிலேயே உடல் ரீதியாக சரியான வளர்ச்சியை எட்டாமலோ, அல்லது உறுப்புகளின் செயல் திறன் குறைபாடுகளோட பிறக்க சாத்தியமிருக்கும் பட்சத்தில் குழந்தையை எதிர்காலத்தில் வைத்து, அதற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கப் போகும் பெற்றோர்களின் கையில் ஏன் அம் முடிவை எடுக்கும் உரிமையை வழங்கக் கூடாது? அதுவும் இது போன்ற ஒரு சிறப்பு சூழ்நிலையில், என்பதுதான் எனது கேள்வி.

இது போன்ற உறுப்பு குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில் தன்னையும் வருத்திக் கொண்டு, தன்னோட ஒட்டி வாழ்பவர்களையும் பல இன்னல்களின் வழி நடத்திச் செல்லலாம் பொருளாதார, மன உளைச்சல், ஆள் தேவை என பல படிகளில், இல்லையா? அதிலும் குறிப்பாக பணத் தேவை தொடர்ந்து தேவைப்படும் பட்சத்தில் இந்த சட்டமோ, அல்லது சிசுவை கருவில் கலைப்பது இறைத்தன்மையற்றது அல்லது கருணையற்றத்தனம் என்று கூறுபவர்களின் வாதமெல்லாம் அன்று அவர்களுக்கு துணை நிற்காது. அது அந்த குறிப்பிட்ட குடும்பத்தின் மீது விழுந்த பாரமேயன்றி எவருடைய கருசணையும் அவர்களுக்கு தினப்படியாக கிட்டப் போவது கிடையாது, என்பது நிசர்சனம்.

அப்படியே இந்தச் சட்டம் பெற்றோர்களின் கோரிக்கையை தாண்டியும் வலியுருத்தி அந்தக் கருவை வளர்த்து பிள்ளையாக பெற்றெடுக்க வைக்கும் பட்சத்தில் வேண்டா வெறுப்பாக பிள்ளையை நடத்தினாலோ, அல்லது பெற்றோர்களே மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் பொழுது என்ன ஆறுதலை வழங்கப் போகிறது? ஏன், பெற்றோர்களின் முடிவில் இது போன்ற சூழ்நிலையில் பக்கம் நிற்கக் கூடாது இந்தச் சட்டம்? புரியவில்லையே...

ஒரு கொசுறுச் செய்தி: தட்ஸ்தமிழில், படிக்கும் பொழுது ஒரு க்ரிஸ்துவ மிஷனரி குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள முன்வருவதாக தெரிவித்தமைக்கு, அங்கே வந்த பின்னூட்டங்களில் ஒருவர் உடனே அந்த மிஷனரியின் நோக்கத்தை அதாவது தத்தெடுத்து மதம் மாற்றுவதற்காவே செய்ய முன் வந்திருக்கிறார்கள் என்று கோபப்பட்டிருக்கிறார். அதனைப் படித்தவுடன் அட இப்படியும் மனிதர்களா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

49 comments:

கோவி.கண்ணன் said...

காந்தியே கருணைக் கொலை செய்யலாம் என்றுதானே சொல்லி இருக்கிறார்.

பிறந்த குழந்தை என்றால் பரவாயில்லை நிதிமன்றம் தலையிடலாம். இன்னும் பிறக்காத குழந்தை பிறக்கும் போதே பெரும் பிரச்ச்சனையோடு பிறந்தால் அதற்குண்டான மருத்துவ செலவுகளை நீதிமன்றமோ. அரசோ ஏற்றுக் கொள்ளுமா ?

கோவி.கண்ணன் said...

//ஒரு கொசுறுச் செய்தி: தட்ஸ்தமிழில், படிக்கும் பொழுது ஒரு க்ரிஸ்துவ மிஷனரி குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள முன்வருவதாக தெரிவித்தமைக்கு, அங்கே வந்த பின்னூட்டங்களில் ஒருவர் உடனே அந்த மிஷனரியின் நோக்கத்தை அதாவது தத்தெடுத்து மதம் மாற்றுவதற்காவே செய்ய முன் வந்திருக்கிறார்கள் என்று கோபப்பட்டிருக்கிறார். அதனைப் படித்தவுடன் அட இப்படியும் மனிதர்களா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.//

அவ்ளோ அக்கரை உள்ளவர்கள் இந்து மிஷனரி குழந்தையை தாங்கள் வளர்க்கிறோம் என்று முந்திக் கொண்டு சொல்லி இருக்கலாம். இப்பவும் கெட்டுப் போகலை நாங்கள் வளர்க்கிறோம் என்று சொன்னால் ..பெற்றவர்கள் கொடுக்கும் எண்ணம் இருந்தால் யாரிடம் கொடுப்பது என்பதை முடிவு செய்வார்கள்.

Thekkikattan|தெகா said...

பிறந்த குழந்தை என்றால் பரவாயில்லை நிதிமன்றம் தலையிடலாம். இன்னும் பிறக்காத குழந்தை பிறக்கும் போதே பெரும் பிரச்ச்சனையோடு பிறந்தால் அதற்குண்டான மருத்துவ செலவுகளை நீதிமன்றமோ. அரசோ ஏற்றுக் கொள்ளுமா ?//

சரியான கேள்வி, அதனையும் மீறி பெற்றோர்களின் உளவியல் சார்ந்து எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் உளைச்சல்களை யார் பகிர்ந்து கொள்வார்களாம்?

கயல்விழி said...

1. கருக்கலைப்பு சட்டம் முட்டாள்தனமானது. ஒரு குழந்தையை வேண்டாவெறுப்பாக பெறுவதை விட கலைப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. பிறக்கும் அனைத்து குழந்தைகளும் முதலில் பெற்றோர்களால் விரும்பப்படவேண்டும்.

2. இந்த மிஷினரி தத்தெடுத்துக்கொள்வது ரொம்ப நல்ல செயல், என்றாலும் குழந்தையை தத்துக்கொடுக்க விரும்பாமல் இருப்பதற்கு பெற்றோருக்கு எல்லா உரிமையும் உண்டு. இதற்கு மதம் போன்ற அற்ப காரணமெல்லாம் தேவை இல்லை, குழந்தை பிறர் பாதுகாப்பில் வளர்வது(அதுவும் ஊனமுற்ற குழந்தை) ஒரு சிக்கலான விஷயம்.

கலைப்பே சிறந்த வழியாக தோனுகிறது.

Thekkikattan|தெகா said...

அவ்ளோ அக்கரை உள்ளவர்கள் இந்து மிஷனரி குழந்தையை தாங்கள் வளர்க்கிறோம் என்று முந்திக் கொண்டு சொல்லி இருக்கலாம்.//

கோவி, இதைத்தான் வாழவும் விடமாட்டானுங்க, சாகவும் விடமாட்டானுங்கன்னு சொல்றதா :-)).

தருமி said...

நான் உங்க பக்கம். ஆனால் பொத்தாம் பொதுவாக இதற்கு அனுமதி கொடுக்கக்கூடாது. சில வரைமுறைகள், இது சரி என்று சான்றுரைக்க என்று ஒரு மருத்துவக் குழு - இப்படி ஏதாவது பெற்றோர்களின் முடிவை அப்ரூவ் (சரியென்று) செய்ய வேண்டும்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பொத்தாம் பொதுவா குடுக்கக்கூடாதுங்கற தருமியின் கருத்துதான் என்னுடையது.. மருத்துவக்குழு அமைக்கலாம்.. ஆனா இங்க பல டாக்டர்ஸ் கருத்து வேறமாதிரி இருக்கறதா நியூஸ் வருது..

பணம் பொருளாதாரத்தேவை எல்லாம் காரணமா சொல்லக்கூடாது.. தெக்கிக்காட்டான் நீங்க பதிவில்அதை குறிப்பிட்டிருக்கவேண்டாம்ன்னு நினைக்கிறேன்..

இது மோசமான உதாரணம் ஆகிடுமோன்னு தான் பயப்படறதா படிச்சேன்.

Anonymous said...

//அவ்ளோ அக்கரை உள்ளவர்கள் இந்து மிஷனரி குழந்தையை தாங்கள் வளர்க்கிறோம் என்று முந்திக் கொண்டு சொல்லி இருக்கலாம்.//

வைக்கோல், நாய், மாடு

தஞ்சாவூரான் said...

//அதுவும் இது போன்ற ஒரு சிறப்பு சூழ்நிலையில், என்பதுதான் எனது கேள்வி.//

இந்த மாதிரி சூழ்நிலையில், பெற்றோர்களுக்கு அபார்ஷன் செய்து கொள்ள சட்ட திருத்தம் செய்ய வேண்டும். அந்தப் பெற்றோர்களின் கோரிக்கை நியாயமானதுதான்.

மங்கை said...

தெகா...

ரெண்டு நாளா கை துறு துறு ங்குது... இருக்கும் மன நிலையில் போடலை...

நடந்து வரும் பெண் சிசு கொலையை மனதில் நிறுத்தி தான் இது போல சட்டங்கள் அமுல் படுத்தப் படுகிறது.. கருக்கலைப்புக்கு நியாயமான சில காரணங்கள் இருக்கலாம்..அதை நல்லதொரு மருத்துவக்குழுவுடன் முடிவு செய்யலாம்...செகண்ட் ஒபீனியன் மாதிரி.. இந்த குறிப்பிட்ட வழக்கில், ஒரு மருத்துவக் குழு குழந்தை பாதிப்புடன் தான் பிறக்கும் என்று சொன்னதால் தான் பெற்றோர் கருக்கலைப்பு முடிவுக்கு வந்தார்கள்... ஆனால் அதே வழக்கில் வேறொரு மருத்துவக் குழு போதுமான ஆதாரம் இல்லை என்று சொன்னால்..இதில் யார் சொன்னதை உண்மை என்று நம்புவது..

இந்த வழக்கில் வாதிக்க படவேண்டிய பல விஷயங்கள் இருக்கு..ஊன முற்ற குழந்தையென்றால் நம்மிடையே நிலவும் பயம், அதற்கான செலவு.. இன்னும் நிறைய... தனிப் பதிவில் விவாதிப்போம்..

Thekkikattan|தெகா said...

வாங்க கயல்விழி,

//1. கருக்கலைப்பு சட்டம் முட்டாள்தனமானது.//

அதாவது இது போன்ற சூழலிலும் இறுக்கமாக இருப்பது முட்டாள்தனமானது.

//ஒரு குழந்தையை வேண்டாவெறுப்பாக பெறுவதை விட கலைப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. பிறக்கும் அனைத்து குழந்தைகளும் முதலில் பெற்றோர்களால் விரும்பப்படவேண்டும்.//

அப்படிப் பார்த்து அதாவது விருப்பப்பட்டுத்தான் குழந்தைகளை பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அரை சதத்திற்கும் மேல் நம்மூரில் பிறந்த குழந்தைகள் எல்லாம் ஆக்சிடெண்டில் பிறந்ததாகத்தான் இருக்குமென்றே நினைக்கிறேன் :-). அதற்காகவெல்லாம், கருக்கலைப்பை பொதுமை படுத்தி விட முடியுமா?

//2. இந்த மிஷினரி தத்தெடுத்துக்கொள்வது ரொம்ப நல்ல செயல், என்றாலும் குழந்தையை தத்துக்கொடுக்க விரும்பாமல் இருப்பதற்கு பெற்றோருக்கு எல்லா உரிமையும் உண்டு.//

பொற்றோர்களாக விருப்பப் பட்டு கொடுக்காமல் யாரும் கட்டாயப்படுத்தியெல்லாம் தத்துக்கொடுக்க முன் வைக்க வரமுடியாது. அதற்கு எந்த உரிமையையுமில்லைதான்.

//இதற்கு மதம் போன்ற அற்ப காரணமெல்லாம் தேவை இல்லை, குழந்தை பிறர் பாதுகாப்பில் வளர்வது(அதுவும் ஊனமுற்ற குழந்தை) ஒரு சிக்கலான விஷயம்.//

இதுதான் நான் சொல்ல வருவதும். ஒரு தனிப்பட்ட அதாவது அந்த அப்பா, அம்மாவின் நிலையிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் சொல்வது மிக்கச் சரியே. அப்படியே தத்துக் கொடுத்துவிட்டு சும்மா இருந்தாலும் பிற்காலத்தில் மனசு சும்மா இருக்குமா?

தங்களின் ஆணித்தரமான பார்வைக்கு நன்றி, கயல்விழி. ரொம்பத் தொளிவா இருக்கீங்க சில விசயங்களில்னு தெரியுது. :-).

Thekkikattan|தெகா said...

தருமி,

//நான் உங்க பக்கம்.//

அதெல்லாம் நீங்க சொல்லாமலேயே எங்களுக்குத் தெரிஞ்சிடும்லே. :)

//ஆனால் பொத்தாம் பொதுவாக இதற்கு அனுமதி கொடுக்கக்கூடாது. சில வரைமுறைகள், இது சரி என்று சான்றுரைக்க என்று ஒரு மருத்துவக் குழு - இப்படி ஏதாவது பெற்றோர்களின் முடிவை அப்ரூவ் (சரியென்று) செய்ய வேண்டும்.//

அப்படியே சரிங்கிறேன். ஆனா, நம்மூர்ல சும்மா விட்டுடுவாங்களா, மற்ற விசயங்கள் எல்லாம் உள்ளே மூக்க நுழைக்காம இருக்க? இந்த தம்பதியருக்கு கிட்டாமல் போனாலும் பின்னால் இது போன்ற சூழலில் மாட்டும் மற்றவர்களுக்காவது ஏதாவது தீர்வு கிடைச்சா சரித்தான்.

கயல்விழி said...

//அதாவது இது போன்ற சூழலிலும் இறுக்கமாக இருப்பது முட்டாள்தனமானது.//

இல்லை கருக்கலைப்பு தடுப்பு சட்டமே தேவையற்றது என்பது என் கருத்து. இந்தியாவைப்பொறுத்தவரை என்னுடைய இந்த கருத்தில் பெரிய பிரச்சினை இருக்கிறது: பெண் சிசு கருக்கலைப்பு. ஸ்கான் பண்ணும் போது எந்த குழந்தை என்பதை சொல்லாமல்விட்டால் இந்த பிரச்சினை நிச்சயம் குறையும்(ஏற்கெனெவே இந்த சட்டம் நடைமுறையில் இருக்கிறது). பெண் குழந்தை என்றால் கொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் சட்டவிரோதமாக கூட கருக்கலைப்பை செய்யத்தான் போகிறார்கள்.
//அதற்காகவெல்லாம், கருக்கலைப்பை பொதுமை படுத்தி விட முடியுமா?
//

கருக்கலைப்பை பொதுமைப்படுத்துவதில் என்ன தவறு?

முன்பு போல இல்லாமல் தற்போது கருத்தடை சாதனங்கள் அதிகமாக வந்துவிட்டது, எனவே கருத்தடைக்கு ஒரு வழியாக கருக்கலைப்பை உபயோகிக்க தேவையில்லை என்பது உண்மையே. ஆனால் எத்தனை பேருக்கு இதை எல்லாம் பயன்படுத்தும் அறிவு இருக்கிறது? விபத்துக்கள் நேரும் போது அந்த பெண்ணுக்கோ(வழக்கமாக இதில் ஆண் தப்பித்துவிடுகிறார்) அல்லது பெற்றோருக்கோ இந்த கருக்கலைப்பு ஆப்ஷன் இருப்பது தவறில்லை என கருதுகிறேன். தன் உடலில் எல்லா உரிமையும் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கே தரப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. விருப்பமில்லாத குழந்தையை சுமக்கும்படி ஒருவரை வற்புறுத்தக்கூடாது.

//தங்களின் ஆணித்தரமான பார்வைக்கு நன்றி, கயல்விழி. ரொம்பத் தொளிவா இருக்கீங்க சில விசயங்களில்னு தெரியுது.//

பொது கருத்துக்கு எதிரான என் கருத்துக்களை வெளியிடுவதற்கு மிக்க நன்றி தெகா. :)

sharevivek said...

நீங்கள் கரு களைப்பு சட்டம் கொண்டு வந்தால் ... பல அனாதை குழந்தை பிறப்பு தடுக்க படுகிறது .
http://loosupaya.blogspot.com

Thekkikattan|தெகா said...

வாங்க முத்துலெட்சுமி,

//பொத்தாம் பொதுவா குடுக்கக்கூடாதுங்கற தருமியின் கருத்துதான் என்னுடையது.. மருத்துவக்குழு அமைக்கலாம்..//

அதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்குமில்லை.

//பணம் பொருளாதாரத்தேவை எல்லாம் காரணமா சொல்லக்கூடாது.. தெக்கிக்காட்டான் நீங்க பதிவில்அதை குறிப்பிட்டிருக்கவேண்டாம்ன்னு நினைக்கிறேன்..

இது மோசமான உதாரணம் ஆகிடுமோன்னு தான் பயப்படறதா படிச்சேன்.//

இங்கேதான் கொஞ்சம் இடிக்குது. பொருளாதாரத்தை மட்டுமே காரணமாக் காட்டி சாதா கருக்கலைப்பு நடத்ததுணுமின்னு நான் சொல்ல வரலை. இது போன்ற உடல் ரீதியான குறைபாடுகளுடன் உள்ளவைகளுக்கு மட்டும் அதுவும் பெற்றோர்களின் நிதி சூழ்நிலைக்கேற்ப அவர்களே முன் வந்து இதனை அதி முக்கிய காரணியாக வைக்கிறார்களென்றால் கொஞ்சம் காது கெடுப்பது நலம்.

ஏனெனில், பொருளாதார நெருக்கடி ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி சூழலை குழைக்கும் அனைத்து திறனையும் பெற்றே இருக்கிறது என்பதனை மறப்பதற்கில்லைதானே.

Thekkikattan|தெகா said...

அனானி,

//அவ்ளோ அக்கரை உள்ளவர்கள் இந்து மிஷனரி குழந்தையை தாங்கள் வளர்க்கிறோம் என்று முந்திக் கொண்டு சொல்லி இருக்கலாம்.//

வைக்கோல், நாய், மாடு>>>

எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்க முடியுது. மூன்று வார்த்தைகளைப் போட்டு எதையோ ஒரு பெரிய விசயத்தை சொல்ல வாரீங்கன்னு தெரியுது, புரியுது-புரியல :-).

என்னமோ நடத்துங்க!

Thekkikattan|தெகா said...

தஞ்சாவூரான்,

எவ்வளவு நாட்களாச்சு என் வீட்டாண்டை வைச்சு உங்களப் பார்த்து, நல்லா இருக்கியளா?

//இந்த மாதிரி சூழ்நிலையில், பெற்றோர்களுக்கு அபார்ஷன் செய்து கொள்ள சட்ட திருத்தம் செய்ய வேண்டும். அந்தப் பெற்றோர்களின் கோரிக்கை நியாயமானதுதான்.//

சொன்னாலும் சொன்னீங்க பொடீர்னு அடிச்சி சொல்றீங்க, அதான் தீர்ப்புக்கிறது நாட்டாமை தீர்ப்பை அழுத்திச் சொல்லய்யா :)).

Thekkikattan|தெகா said...

மங்கை,

//ரெண்டு நாளா கை துறு துறு ங்குது... இருக்கும் மன நிலையில் போடலை...//

எனக்குத் தெரியுமே நீங்க பிசின்னு வேலையில, அதான் நான் முந்திக்கிட்டேன் :). எப்படியோ கருத்தை வெளியில எடுத்துட்டு வந்திட்டாச் சரித்தானே.

//நடந்து வரும் பெண் சிசு கொலையை மனதில் நிறுத்தி தான் இது போல சட்டங்கள் அமுல் படுத்தப் படுகிறது.. கருக்கலைப்புக்கு நியாயமான சில காரணங்கள் இருக்கலாம்..அதை நல்லதொரு மருத்துவக்குழுவுடன் முடிவு செய்யலாம்...செகண்ட் ஒபீனியன் மாதிரி..//

அப்படியே தருமி சொல்வதனைப் போன்றுதான் நீங்களும் கூறியிருக்கிறீர்கள். அதனையேத்தான் நானும் கூறிக்கொண்டுள்ளேன். சட்டம் இயற்றப்பட்டுவிட்டது என்பதற்காக மீண்டும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மறுபரிசீலனை செய்யவே முடியாது என்பது எந்த விதத்தில் நியாயம்.

//இந்த வழக்கில் வாதிக்க படவேண்டிய பல விஷயங்கள் இருக்கு..ஊன முற்ற குழந்தையென்றால் நம்மிடையே நிலவும் பயம், அதற்கான செலவு.//

உண்மைதான். நம்ம முத்துலெட்சுமி இது போன்ற கேசுகளில் பொருளாதாரம் ஒரு பொருட்டாகவே இருக்கக் கூடாதுங்கிறார் பாருங்க. எப்படி ஒரு பொருட்டாகப் போகலாமென்பதற்கு இன்னொரு பெரும் பதிவே போடலாம், முடிஞ்சா எடுத்துச் சொல்லுங்க அம்மிணிக்கிட்ட :).

kutti from tamilish.com said...

இது போன்ற உறுப்பு குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில் தன்னையும் வறுத்திக் கொண்டு, தன்னோட ஒட்டி வாழ்பவர்களையும் பல இன்னல்களின் வழி நடத்திச் சொல்லலாம் பொருளாதார, மன உளைச்சல், ஆள் தேவை என பல படிகளில், இல்லையா? அதிலும் குறிப்பாக பணத் தேவை தொடர்ந்து தேவைப்படும் பட்சத்தில் இந்த சட்டமோ, அல்லது சிசுவை கருவில் கலைப்பது இறைத்தன்மையற்றது அல்லது கருணையற்றத் தனம் என்று கூறுபவர்களின் வாதமெல்லாம் அன்று அவர்களுக்கு துணை நிற்காது. அது அந்த குறிப்பிட்ட குடும்பத்தின் மீது விழுந்த பாரமேயன்றி எவருடைய கருசணையும் அவர்களுக்கு தினப்படியாக கிட்டப் போவது கிடையாது ....என்ற உங்களது கணிப்பு மிகவும் சரியே.

Thekkikattan|தெகா said...

மீண்டும் கயல்விழி,

//இல்லை கருக்கலைப்பு தடுப்பு சட்டமே தேவையற்றது என்பது என் கருத்து. //

என்னங்க இப்படி ஒரே அடியா அடிச்சி சொல்லிட்டீங்க. நம்மூர்ல நீங்களே உங்க அந்த வரிகளுக்கு கீழே கூறியிருக்க காரணமான """பெண் சிசு கருக்கலைப்பு""" அந்த ஒரு விசயதிற்காகவே இதனை சட்டத்திற்கு கீழே கொண்டு வாரது ரொம்ப முக்கியமுங்க. இல்லன்னா, போற போக்கில பெண்களுக்கு தட்டுப்பாடு ஆகிப்போட்டிரும்.

இருந்தாலும், நீங்க திரும்பவும் கூறிய இந்த விசயம் தெருவுக்கு தெரு """"சட்டவிரோதமாக கூட கருக்கலைப்பை செய்யத்தான் போகிறார்கள்""""" நடந்துட்டுத்தான் இருக்கு மறுப்பதற்கில்லை. இருந்தாலும், இதனை இல்லீகல் பண்றது நல்லதுங்க.

//தன் உடலில் எல்லா உரிமையும் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கே தரப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. விருப்பமில்லாத குழந்தையை சுமக்கும்படி ஒருவரை வற்புறுத்தக்கூடாது.//

இதுவும் நியாயமாத்தான் இருக்கு. ஆனா, இந்த விருப்பமில்லாத இடங்கிருத்திலதான் கொஞ்சம் பிரச்சினை, எந்தந்த சூழல்களில் அதனை தளர்த்திக்கலாம், தளர்த்திக்க முடியாது என்பதில்.

//பொது கருத்துக்கு எதிரான என் கருத்துக்களை வெளியிடுவதற்கு மிக்க நன்றி தெகா. :)//

இதிலென்ன இருக்கு. கொஞ்சம் நியாயமான கருத்துக்களை முகமூடி போட்டுக்கிட்டு மறைஞ்சு உட்கார்ந்துக்காம வெளியில வந்து தைரியமா தன் நிலையயைச் சொல்ல ரொம்ப தெளிவு வேணுங்க, ஏன், எதற்கு சொல்றோமின்னு.

நான் இங்கே இந்த பதிவிற்கு பெரிய அளவில் ஒன்றும் விவாதத்தை எதிர்பார்க்கல, ஏன்னா, எனக்குத் தெரியும் நிறைய பேர் ஒதுங்கியே போயிடுவாங்க தன் பார்வையை வைக்காம காரணம், இது நியாயமாப் பட்டு சரின்னு சொன்னா... இந்தக் கருணை, கடவுள் நம்பிக்கை அது தொடர்பான எல்லா விசயமுமே கேள்விக்குறியா போயி தன்னோட நிலை கேள்விக்குறியதா போயிடுமேன்னு :-)).

உங்க தைரியத்தை நான் பாராட்டுறேன் அதுக்காக.

மங்கை said...

செலவு ஆகுதேன்னு கவலைப் படறத சொல்லலை.. அப்படி அதிகப் படியான செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது எல்லாப் பெற்றோர்களுக்கும் அது முடிகிற காரியம் இல்லை... அப்படி முடியாமல் போகும் பட்சத்தில் அந்த குழந்தையின் நிலமை என்ன...யார் பொறுப்பு.. எத்தனை குழந்தைகளுக்கு நிதி உதவியோ, இலவச மருத்துவ உதவியோ கிடைக்கும்...

இப்பவும் கருகலைப்பை நியாயம் செய்யவில்லை... ஆனால் இது போல பிரச்சனைகள் வரும் பட்சத்தில் அரசோ சமுதாயமோ என்ன செய்யப் போகிறது என்பதையும் சொல்ல வேண்டும்..

என்ன தான் தொண்டு நிறுவணங்கள் தாங்கள் எடுத்து வளர்ப்பதாக சொன்னாலும்,ஏழையோ, பணம் படைத்தவர்களோ..நடைமுறையில் எந்த பெற்றோருக்கும் அது முடியுமான்னு எனக்கு தெரியவில்லை...
குழந்தை குறையுடன் பிறந்து, பின் அதற்கு சரியான மருத்துவ செலவு செய்ய முடியாமல் போய் சுகவீனம் அடைவதை எந்த பெற்றோருக்காவது தாங்க முடியுமா...

jyoti from tamilish.com said...

//இது போன்று ஒரு குழந்தை கருவிலேயே உடல் ரீதியாக சரியான வளர்ச்சியை எட்டாமலோ, அல்லது உறுப்புகளின் செயல் திறன் குறைபாடுகளோட பிறக்க சாத்தியமிருக்கும் பட்சத்தில் குழந்தையை எதிர்காலத்தில் வைத்து, அதற்கு தேவையான அணைத்தையும் செய்துக் கொடுக்கப் போகும் பொற்றோர்களின் கையில் ஏன் அம் முடிவை எடுக்கும் உரிமையை வழங்கக் கூடாது?//

என்னுடைய பார்வையில் .. இந்த வாதம் தவறானதாக தோன்றுகிறது. இந்த கட்டுரை ஆசிரியர் கூறுவது போல் ஆரம்பித்தால். .. உடல் ஊனமுற்றோர், செவிடராக பிறந்தோர், கண் பார்வை குறையுடன் பிறந்தோர், ஊமை.. , மனம் பிறழ்ந்து பிறந்த குழந்தைகள் அனைவரையும் கொன்று விடலாமே. இது போன்ற கருக்கள் உருவாவதை தடுக்க அறிவியல் ஆராய்ச்சிதான் பண்ண முயல வேண்டுமே ஒழிய.. கொலை செய்ய கூடாது.

மேலும் ஏழைகள் அனைவரையும் கொன்று விட்டால் இந்தியா பணக்கார நாடாகி விடும் என்பதை போன்ற வாதம் இது. ஏழைகள் இருப்பதும் பணக்காரர்களுக்கு மன உளைச்சல் தான்

கருவில் இருக்கும் போதும் சரி, பிறந்து வெளியில் வரும் போதும் சரி.. உயிர் உயிர்தான். அதை சக உயிரினமான நாம் மதிக்க வேண்டும்

Thekkikattan|தெகா said...

ஜோதி,

//இந்த கட்டுரை ஆசிரியர் கூறுவது போல் ஆரம்பித்தால். .. உடல் ஊனமுற்றோர், செவிடராக பிறந்தோர், கண் பார்வை குறையுடன் பிறந்தோர், ஊமை.. , மனம் பிறழ்ந்து பிறந்த குழந்தைகள் அனைவரையும் கொன்று விடலாமே. இது போன்ற கருக்கள் உருவாவதை தடுக்க அறிவியல் ஆராய்ச்சிதான் பண்ண முயல வேண்டுமே ஒழிய.. கொலை செய்ய கூடாது. //

புரிகிறது என்ன சொல்ல வாருகிறீர்கள் என்று. இது கொஞ்சம் சிக்கலான விசயம்தான் என்பதும் நான் அறிகிறேன். இருப்பினும், நான் கூறவந்தது நீங்கள் லிஸ்ட் போட்ட படி உள்ள ஊனங்களை கருத்தில் கொண்டு அல்ல. என்னுடைய கோணம் vital organs எதெல்லாம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றப் போகிறதோ அவைகளின் செயல்பாடும், அவைகளின் வளர்ச்சி நிலைகளைப் பொருட்டு அதுவும் சினை முட்டையிலிருந்து பல்கும் பொழுதே. அதுவும் பெற்றோர்களின் முழுச் சம்மதத்துடன் அவர்களின் வேண்டுகோளின் படியே...

//மேலும் ஏழைகள் அனைவரையும் கொன்று விட்டால் இந்தியா பணக்கார நாடாகி விடும் என்பதை போன்ற வாதம் இது. ஏழைகள் இருப்பதும் பணக்காரர்களுக்கு மன உளைச்சல் தான் //

அப்படி எங்கேனும் என் கட்டுரை எடுத்துயம்பி இருந்தால், மன்னிக்க! அது போன்ற கருத்தில் இக்கட்டுரை வடிக்கப் படவில்லை, இது ஒரு பொற்றோரின் சார்பாக அவர்களின் நியாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. விசயங்கள் சூழ்நிலைக்கு சூழ்நிலை, குடும்பத்திற்கு குடும்பம் மாறுபடலாம், தனது தேவைகளுக்கும், வாழ்வு தெளிவு பொருட்டும், எதார்த்தை மனதில் கொண்டும்...

Thekkikattan|தெகா said...

//நீங்கள் கரு களைப்பு சட்டம் கொண்டு வந்தால் ... பல அனாதை குழந்தை பிறப்பு தடுக்க படுகிறது .
http://loosupaya.blogspot.com//

இப்படி நீங்க சொல்லிட்டுப் போறீங்க, உங்களுக்கு கீழே உள்ள சில பின்னூட்டங்களை படிச்சிப்பாருங்க,மற்றவர்கள் இதனை எப்படிப் பார்க்கிறாங்கன்னு.

நன்றி!

Jyoti from tamilish.com said...

அவர்கள் கருத்தில் துளி அளவும் நியாயம் இல்லை.

இன்பமும் , துன்பமும் நிறைந்தது தான் வாழ்க்கை. அதை ஏற்று கொள்ளாமல் இன்பம் மட்டும் வேண்டும், துன்பம் வர போகிறது என்றால் அதை அழித்து விடுவோம் என்று ஆரம்பிக்கும் மனிதர்கள் இவ்வுலகில் வாழ தகுதி அற்றவர்கள். சுயநலத்தின் மறுவடிவம்தான் இது.

நாமும் ஒரு நாள் வயதாகி படுத்த படுக்கையில் கிடந்தது, அங்கேயே மலம் கழிந்து இறக்கத்தான் போகிறோம். நாம் படுக்கையில் தொந்தரவாக இருப்பது நம் குழந்தைகளுக்கு மன உளைச்சலை தான் தரும். அதற்கென்று பெற்றோரை கொல்ல முடியுமா?

நீதி மன்றத்துக்கு சென்ற அந்த தம்பதியர் சுயநல பிசாசுகள். அவர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.

Thekkikattan|தெகா said...

//அவர்கள் கருத்தில் துளி அளவும் நியாயம் இல்லை. //

என்னங்க இது பெற்றுக்கப் போறது அவங்க, வளர்க்கப் போறது அவங்க இதில இடையில நாம என்னங்க சொல்றதுக்கு. தினப்படி வாழ்க்கையில நடக்கிற அல்லல்களுக்கும், அதனைத் தொடர்ந்து (தெரிந்தே) நிகழ்கிற பிரச்சினைகளுக்கும் அவங்கதானே பதில் சொல்லியாகணும். இதில நம்மோட பங்களிப்பு என்னங்க.

பிறந்து இது போன்ற விபத்துக்கள் நடைபெறுகிறது என்றால் கழுத்தை நெரிச்சு கொலை பண்ணிப் போட்ற அளவிற்கெல்லாம் நான் சாப்போர்ட் பண்ணவில்லை.

இது கவனித்துக் கொள்ளப் போகும் ஒரு பெற்றோர்களின் சுய அறிதலைக் கொண்டு கேட்கும் ஒரு நியாயமான கோரிக்கையாகத்தான் நான் பார்க்கிறேன். கருவிலேயே இரு கால்களும் செயலிழந்து போய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டும் அந்த ஜீவனை வெளியில் கொண்டு வந்து தனது பெற்றோர்களுக்குப் பிறகும் யார் தூக்கி தன்னை சுமக்கப் போவதாக எண்ணி சந்தோஷப்பட்டு விடப் போகிறது சொல்லுங்க.

பட்டுப் பார்ப்பவர்களிடம் கேட்டால் உண்மை நிலையறியலாம் என்று தோன்றச் செய்கிறது.

பி.கு: உங்களோட கரிசணம் புரிகிறது, ஆனால் எதார்த்த வாழ்வு என்று ஒன்று இருக்கிறதே. 24 மணி நேரமும் ஸ்பிரிட்சுவல் எண்ண அலைகளில் லயித்து இருப்பது சாமான்யர்களுக்கு சாத்தியம் குறைவே என்பதும் என் கருத்து.

Mangai said @tamilish.com said...

written by Mangai 40 minutes ago...

what Jyoti has raised is very valid Point...this is what i said in theka's post, that this case needs argument from various angles... still there is stigma against a disabled person... parents of a disabled children are still looked down upon... still we hear people saying that the sin committed by the forefathers has resulted in the birth of a handicapped child... these factors drive people to go for abortion if they come to know that the child is defective...

எது எப்படியாக இருந்தாலும்..அரசுக்கு என்று ஒரு பொறுப்பு, சமுதாயத்துக்கு என்று பொறுப்பு, பெற்றோர்களுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்..

கண்ணோட்டம் மாறவேண்டும், விழிப்புணர்வு வரவேண்டும், எல்லாவற்கும் மேலாக அறிவியல் உண்மைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும்.. ஆறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்..

இதற்கு தீர்வு காணவேண்டும் என்றால், ஒரு குழுவில், சமூக ஆய்வாளர்கள்,மருத்துவ வல்லுனர்கள், சட்ட வல்லுனர்கள் என்று உட்கார்ந்து, ஒரு முடிவுக்கு வரவேண்டும்

i feel there cant be a single law which could be implemented to all the people irrespective of econmic factos, medical factors and social factos...

it is Pro-Life Vs. Pro-choice..

TamilKing @tamilish.com said...

written by TamilKing 23 minutes ...

ஜோதியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்

//பட்டுப் பார்ப்பவர்களிடம் கேட்டால் உண்மை நிலையறியலாம் என்று தோன்றச் செய்கிறது.//

பட்டு பார்த்த நிலையில் இருப்பதால் சொல்கிறேன். எனது சகோதரன் மனம் பிறழ்ந்து பிறந்து பதினோரு ஆண்டுகள் படுக்கையிலேயே உயிர் வாழ்ந்து இறந்து போனான். எனது பெற்றோர் ஆரம்பத்தில் வருத்தபட்டாலும் அந்த பதினோரு ஆண்டுகள் சுமையாய் நினைத்ததில்லை. என் அம்மா இன்னமும் தன் அந்த குழந்தையை நினைத்து அழுவதுண்டு. என் தந்தை தன் பணி ஓய்வுக்கு பின் , தன் அனுபவத்தால், மனம் பிறழ்ந்த குழந்தைகளின் பெற்றோருக்கு வளர்ப்பு முறை பற்றி Counseling செய்து வருகிறார்.

என் அப்பாவிடம் அப்படி ஒரு பையன் பிறந்தது கஷ்டமா இல்லையா? என்று நான் அடிக்கடி கேட்பதுண்டு. கஷ்டம் எல்லாம் ரெண்டு நாளைக்குத்தான் தெரியும். அப்புறம் அது பழகி, அதிலும் இன்பம் காணலாம். இதுதான் அவர் பதில் .

இதையொத்த இன்னொரு உதாரணமும் சொல்கிறேன். என் உறவினர் ஒருவருக்கு குழந்தை 8+ மாதத்தில் குறை பிரசவமாக பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் டாக்டர் என் உறவினரிடம் கேட்ட கேள்வி

"குழந்தை குறை பிரசவம். பியுச்சர்ல மூளை கோளாறு, ஊனமாக வாய்ப்பு இருக்கு .. என்ன பண்ணலாம் சொல்லுங்க?"

[இதற்க்கு என்ன அர்த்தம் என்னவென்றால் குழந்தையை காப்பத்தலாமா? வேண்டாமா? ]

மருத்துவ முன்னேற்றம் + பணத்தால் இன்று அந்த குழந்தை சிறிது கால் ஊனத்தை தவிர நன்றாகவே உள்ளது.

என் கருத்து என்னவென்றால், இது போன்ற நிகழ்வுகள் மிகப்பெரிய துக்கத்தை பெற்றோருக்கு தர போவதில்லை. ஜோதி சொல்லவதை போல துக்கத்தை நினைத்து நினைத்து ஓட நினைப்பவன் வாழ தகுதி அற்றவன். காக்கைக்கும் தன் குஞ்சு .. பொன் குஞ்சு. நொண்டியா இருந்தாலும்.. நுடமாக இருந்தாலும்.

Thekkikattan|தெகா said...

தமிழ் கிங்,

உண்மையிலேயே உங்கள் வீட்டாரை நினைக்கும் பொழுது மிக்க மகிழ்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

நான் முன்னமே குறிப்பிட்ட படி இது போன்ற அறிவியல் முன்னேற்றங்கள் கிடையாத சூழ்நிலையில், அது போன்ற பிரச்சினைகளையும் முகம் கொடுத்து பார்க்க விருப்பப் படாதவர்களுகுத்தான் என்ன தீர்வு என்பதே இங்கு கேள்வி.

ஒரு குழந்தை நம்முடைய அறிதலின்றி இது போன்ற அபாயகரமான உடலுறுப்பு குளறுபடிகளின் படி பிறக்கிறதென்றால், பெற்ற எவரும் தள்ளி வைத்து பழகவோ, அப்படியே கவனிக்காமலோ விட்டு விட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

இங்கே சூழ்நிலை என்னவென்றால் தெரிந்தே பிற்கால பிரச்சினைகளை வலிந்து அந்தக் குழந்தையும் அந்தப் பெற்றோர்களும் பெருவதனைப் பொருட்டுத்தான்.

//துக்கத்தை நினைத்து நினைத்து ஓட நினைப்பவன் வாழ தகுதி அற்றவன். //

எந்த ஒரு உயிரினமும் இயற்கையில் பிறப்பெடுப்பது வாழ்வில் மகிழ்சியை உய்த்து வாழவே. எதுவுமே எனக்குத் துக்கம் வேண்டுமென உழைத்துப் பெறுவது கிடையாது. அதுவும் வாழ்வின் ஒரு பகுதியே, ஆனால், ருசித்தல் வேண்டி வலியப் பெற்றால் கொஞ்சம் மெண்டலி சிக்காக இருப்பதாக கெள்ள வேண்டும். அதுவாகவே நிகழும் பொழுது அதனை ஏற்று பெற்றுக் கொள்வதில் பக்குவம் அதுவாகவே அமைந்து விடும். அதுதான் இயற்கையின் நியதியும் கூடவாக இருக்க முடியும்.

Anonymous said...

~~~//அவ்ளோ அக்கரை உள்ளவர்கள் இந்து மிஷனரி குழந்தையை தாங்கள் வளர்க்கிறோம் என்று முந்திக் கொண்டு சொல்லி இருக்கலாம்.//

வைக்கோல், நாய், மாடு>>>

எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்க முடியுது. மூன்று வார்த்தைகளைப் போட்டு எதையோ ஒரு பெரிய விசயத்தை சொல்ல வாரீங்கன்னு தெரியுது, புரியுது-புரியல :-).

என்னமோ நடத்துங்க!~~~~

வைக்கோல் அருகில் உள்ள நாய் தானும் வைக்கோலை சாப்பிடாது. மாடு சாப்பிட வந்தால் குரைத்து அதையும் சாப்பிட விடாது

கயல்விழி said...

இங்கே பலருடைய விவாதத்துக்கும் ஒரு பொதுவான பதில்.

குழந்தை வயிற்றில் இருக்கும் போதே உயிரா? எப்படி? ஒரு உயிர் என்றால் தானாக மூச்சுவிடவேண்டும், உணவு ஊட்டினால் செரிக்க வேண்டும் இல்லையா? வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இதெல்லாம் முடியாத போது எப்படி 'உயிர்' ஆகும்?

மேலும் குழந்தை உருவான முதல் மூன்று மாதங்களில் மட்டுமே பெரும்பான்மையான கருக்கலைப்பு செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சி ரொம்ப ரொம்ப குறைவு, வலியும் அறியாது.

கருக்கலைப்பு பாவம் என்றால் மற்ற உயிரினங்களை மட்டும் உனவுக்காக கொல்வது பாவம் இல்லையா? மற்ற உயிரினங்களுக்கு வலி, மரண பயம் எல்லாமே தெரியும். எனவே கருக்கலைப்புக்கு எதிராக சட்டம் இருப்பது நியாயமென்றால், அசைவ சாப்பாட்டுக்கு எதிராகவும் சட்டம் இருக்கவேண்டும் இல்லையா?

இங்கே சிலர் சில உதாரனங்களை சொல்லி(குறைபாடுள்ள குழந்தைகள்) கருக்கலைப்பை எதிர்த்திருக்கிறார்கள். அந்த பெற்றோர்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள். ஆனால் அனைவருக்குமே அந்த வசதி, வாய்ப்பு, நேரம், மனம், பொறுமை, குடும்ப அமைப்பு கிடைத்துவிடுவதில்லை, அவர்களுக்கு எல்லாம் மாற்று வாய்ப்பை மறுப்பது சரியல்ல.

பிறக்காத குழந்தையைப்பற்றிய முழு உரிமையும் பெற்றோருக்கே தரப்பட வேண்டும்.

கயல்விழி said...

//நடந்துட்டுத்தான் இருக்கு மறுப்பதற்கில்லை. இருந்தாலும், இதனை இல்லீகல் பண்றது நல்லதுங்க.
//

இந்தியாவில் இல்லீகலுக்கா பஞ்சம்? தெருவுக்கு தெரு இல்லீகல் அபார்ஷன் க்ளினிக்குகள் இருக்கும், சரியான மருத்துவப்பயிற்சி இல்லாதவர்கள், தவறாக கருக்கலைப்பு செய்த்து பல பெண்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதை எல்லாம் தடுக்க முடியாது, இதற்கு பதில் கருக்கலைப்பை லீகலாக்கி விடலாம்.

விபசாரத்தைப்பற்றிய என் கருத்தும் அப்படியே.

TamilKing... said...

written by TamilKing 26 minutes

//ஒரு குழந்தை நம்முடைய அறிதலின்றி இது போன்ற அபாயகரமான உடலுறுப்பு குளறுபடிகளின் படி பிறக்கிறதென்றால், பெற்ற எவரும் தள்ளி வைத்து பழகவோ, அப்படியே கவனிக்காமலோ விட்டு விட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.//

உண்மைதான்... ஊனமாக பிறந்த குழந்தையை பார்த்து எந்த தாயும் "எனக்கு இப்படி ஒரு எழவு பிறந்திருக்கு?" என்று வஞ்சிததாக கேள்விப்பட்டதில்லை.

//இங்கே சூழ்நிலை என்னவென்றால் தெரிந்தே பிற்கால பிரச்சினைகளை வலிந்து அந்தக் குழந்தையும் அந்தப் பெற்றோர்களும் பெருவதனைப் பொருட்டுத்தான்.//

உங்களுடைய கருத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தெரிந்தே நாமும் துக்கப்பட்டு ஒரு புதிய உயிரும் துக்கப்பட வைக்க வேண்டும். இதுதான் உங்கள் கேள்வி. :). பிராக்டிகலா திங் பண்ணுங்கன்னு சொல்லுறீங்க

மணமுடித்த ஒருவர் விபத்தில் ஊனமாவத்ர்க்கும், ஊனமான ஒருவரை மனப்பதர்ற்கும் வித்தியாசம் உண்டு. இவைஎல்லாம் அவரவர் மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

மனிதன் அவனுக்கென்று உள்ள சில உணர்வுகளை இழந்து எந்திரமாகி வருவதின் அறிகுறிகள் இவை.

தீர்வு என்று யோசித்து பார்த்தால், குழப்பம் தான் மிஞ்சுகிறது. :)

Thekkikattan|தெகா said...

கயல்விழி முடிந்தால் பின் குறிப்பிடப்பட்டுள்ள தொடுப்பில் சென்று அங்கும் பாருங்க... கிட்டத்தட்ட விவாதம் ஒரு முடிவிற்கு வந்த மாதிரிதான் தெரியுது, குறைந்தப் பட்சம் இங்கே நான் ஆரம்பித்தது... நிஜத்தில் எப்படியோ.

தமிழிஸ்.காம்-ஏன் இப்படி

கயல்விழி said...

//மனிதன் அவனுக்கென்று உள்ள சில உணர்வுகளை இழந்து எந்திரமாகி வருவதின் அறிகுறிகள் இவை.
//

எந்திரமாக இருந்தால் மட்டுமே இந்த முடிவு எடுக்கவேண்டும் என்று அவசியமில்லை. உணர்ச்சிவசப்பட்டு சென்சேஷனலாக எழுதுவது வேறு, நடைமுறை நிதர்சனம் என்பது வேறு. பொதுவாக 99% மக்கள் எந்த காலமாக இருந்தாலும் தங்களுக்கென வரும்போது நடைமுறை ஆப்ஷனையே தேர்வு செய்வார்கள்.

Thekkikattan|தெகா said...

தமிழ்கிங்,

//உங்களுடைய கருத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தெரிந்தே நாமும் துக்கப்பட்டு ஒரு புதிய உயிரும் துக்கப்பட வைக்க வேண்டும். இதுதான் உங்கள் கேள்வி. :). பிராக்டிகலா திங் பண்ணுங்கன்னு சொல்லுறீங்க.//

அருமை.. அருமை, அதேதான் நான் சொல்ல வருவதும்.

//மணமுடித்த ஒருவர் விபத்தில் ஊனமாவத்ர்க்கும்//....

இதனைக் கொண்டே மனிதனின் இயல்பை அவதானிப்போம்... அந்த மணமுடித்த ஒருவர் விபத்தில் சிக்கி சக்கர நாற்காலியில் அமரும் பட்சத்தில் அங்கே கணவனோ/மனைவியோ ஏற்றுக் கொண்டு நடத்த தன்னை பக்குவப்படுத்திக் கொள்வார்கள் இல்லையா - இது எப்படியென்றால் நம் சூழலில் அறிதலின்று பிறக்கும் பொழுது நம் குழந்தையை ஏற்றுக் கொள்வது போல, அதாவது உடலுறப்பு குளறுபடிகளுடன்...

இதுவே...

//ஊனமான ஒருவரை மனப்பதர்ற்கும் வித்தியாசம் உண்டு. இவைஎல்லாம் அவரவர் மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.//

அவ்வாறு ஊனமுறாத ஒருவரை நிர்பந்தித்து ஊனமுற்றவரை மணமுடித்து வைப்பது, நம் சூழலில், இதெப்படியென்றால் அறிந்தே பெற்றோர்களின் விருப்பமென்றி அவர்களின் வாழ்க்கையில் நாம் நம்முடைய விருப்பத்தை நுழைப்பது போன்றது... அங்கே புரிதலும், தெளிவுமில்லாமல் இது போன்ற வாழ்க்கையில் தெரிந்தே ஈடுபட பணித்தால் துன்பம் மட்டுமே வாழ்வு முழுதும்...

புரியுதா சொல்ல வாரது :))...

TamilKing.... said...

written by TamilKing 8 minutes ago...

//எந்திரமாக இருந்தால் மட்டுமே இந்த முடிவு எடுக்கவேண்டும் என்று அவசியமில்லை.//

// பொதுவாக 99% மக்கள் எந்த காலமாக இருந்தாலும் தங்களுக்கென வரும்போது நடைமுறை ஆப்ஷனையே தேர்வு செய்வார்கள்.//

99% என்று சான்றிதழ் கொடுப்பதற்கு நீங்கள் மன நல ஆராய்ச்சியாளரா? அல்லது ஜோசியரா? எதையும் ஆழ்ந்து யோசிக்காமல் உங்களை மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக நினைத்து கொண்டு பொத்தாம் பொதுவில் ஜால்ரா அடிக்க கூடாது.

அடுத்து தமிழ்நாட்டில் 99% பெண் குழந்தைகளை வெறுக்கிறார்கள் என்று கணக்கு சொல்லுங்க. பெண்குழந்தை பெற்றுகொண்டல் செலவு, மனஉளைச்சல் என்று practical ஆக யோசித்து பெண் கருக்களை அபார்சன் செய்ய ஆரம்பியுங்கள்.

இப்படியெல்லாம் இருக்ககூடாது என்பதற்குதான் சட்டம் போடுகிறார்கள். அரசாங்கமும் அதை தான் சொல்கிறது. அதையே தான் நான் சொல்கிறேன்.

நான் அறிவுஜீவி என்பதை நிரூபிக்க மேலுள்ள கருத்துகளை கூறவில்லை. முட்டாள் அல்ல என்று நிரூபிக்கத்தான் சொன்னேன்.[ஆஹா! Theka மாதிரி எழுத நமக்கும் வருதே.. :)]

Thekkikattan|தெகா said...

//[ஆஹா! Theka மாதிரி எழுத நமக்கும் வருதே.. :)]//

தமிழ்கிங்,

என்ன இப்படி போட்டுத் தாக்கிப்புட்டீக, கடைசியா. அப்ப இந்தப் பதிவே நம்ம மண்டை எம்பூட்டு ஸ்ட்ராங்க இருக்கு, யாரோடது ரொம்ப கெட்டின்னு நிரூபிச்சுக்கத்தானா, என்ன கிங் இப்படி "சப்"னு ஆக்கிப்புட்டீங்களே.

கயல்விழி இன்னும் நிறைய என்னோட பதிவிலயே பின்னூட்டங்கள் எழுதியிருக்கார் அதெல்லாம் படிச்சா என்ன சொல்லுவீங்கன்னு தெரியலை, அப்ப ஒருக்கா அந்தப்பக்கமும் வந்துட்டுப் போங்க... ;)

TamilKing said...

//[ஆஹா! Theka மாதிரி எழுத நமக்கும் வருதே.. :)]

என்ன இப்படி போட்டுத் தாக்கிப்புட்டீக, கடைசியா. அப்ப இந்தப் பதிவே நம்ம மண்டை எம்பூட்டு ஸ்ட்ராங்க இருக்கு, யாரோடது ரொம்ப கெட்டின்னு நிரூபிச்சுக்கத்தானா, என்ன கிங் இப்படி "சப்"னு ஆக்கிப்புட்டீங்களே.

//

நான் அதை mean பண்ணலை. உங்க எழுத்துகள் புரிஞ்ச மாத்திரயும் இருக்கு. ஆனால் புரியாத மாதிரியும் இருக்கு. அதை தான் சொல்ல வந்தேன்.

உதாரணத்திற்கு உங்கள் நடையில் சில வார்த்தைகள் பலமுறை படித்த பிறகுதான் புரிகிறது. "நம் சூழலில் அறிதலின்று " , "ருசித்தல் வேண்டி வலியப் பெற்றால் " , "எண்ண அலைகளில் லயித்து இருப்பது" , "தெரிந்தே ஈடுபட பணித்தால்" .

மண்டையில ஏற மாட்டேங்குது. .தமிழகம் எனக்கு தந்த தமிழும் இல்லா / ஆங்கிலமும் இல்லா கல்வியின் மோசமான பாதிப்பாக இருக்கலாம்.

நம்ம மண்டை ஸ்ட்ராங் ன்னு நிரூபிக்க வாதம் பண்ணலை.

இது போன்ற விவாதங்கள் எல்லாம் நம் கருத்துகளின் மீது அடுத்தவர் பார்வை எப்படி உள்ளது என்பதை அறியத்தான். மற்றும் நம் கருத்துக்கள், எண்ணங்களை செதுக்கி கொள்ளவும்தான்

ஆனால் அர்த்தமில்லா , ஆதாரமில்லா

//

பொதுவாக 99% மக்கள் எந்த காலமாக இருந்தாலும் தங்களுக்கென வரும்போது நடைமுறை ஆப்ஷனையே தேர்வு செய்வார்கள்.//

இது போன்ற வாதங்களை கேட்கும் பொது நம் நிலையை அழுத்தமாக சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

TamilKing said...

// கயல்விழி said... : 1. கருக்கலைப்பு சட்டம் முட்டாள்தனமானது. ஒரு குழந்தையை வேண்டாவெறுப்பாக பெறுவதை விட கலைப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. பிறக்கும் அனைத்து குழந்தைகளும் முதலில் பெற்றோர்களால் விரும்பப்படவேண்டும்.//

ஒ.. உங்கள் கருத்துப்படி சென்றால்..
பெண்கள் விகிதம் நாட்டில் குறைந்து போய் விடும். ஒரு பெண் பத்து ஆண்களுக்கு மனைவியாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பெண் வேட்டயாடபடுவாள். சமூக அமைதி கெடும்.

// கயல்விழி said... : பெண் குழந்தை என்றால் கொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் சட்டவிரோதமாக கூட கருக்கலைப்பை செய்யத்தான் போகிறார்கள். //
இந்த சட்டத்திற்கு பின்பு எந்த டாக்டரும் எளிதாக கருவில் என்ன குழந்தை என்று சொல்லுவதில்லை. பெண் சிசு கருகலைப்பு முழுவதுமாக களையவில்லை என்றாலும், இந்த சட்டத்திற்கு பின்பு கணிசமான அளவு குறைந்துள்ளது உண்மை.

//கயல்விழி said... : கருக்கலைப்பு பாவம் என்றால் மற்ற உயிரினங்களை மட்டும் உனவுக்காக கொல்வது பாவம் இல்லையா? மற்ற உயிரினங்களுக்கு வலி, மரண பயம் எல்லாமே தெரியும். எனவே கருக்கலைப்புக்கு எதிராக சட்டம் இருப்பது நியாயமென்றால், அசைவ சாப்பாட்டுக்கு எதிராகவும் சட்டம் இருக்கவேண்டும் இல்லையா?//

என்ன சொல்ல வர்றேங்க... ஆடு மாடுகளை உணவுக்கு கொள்ளுற மாதிரி, மனுஷ கறி சாப்பிடலாம்னா?
ஆடு மாடுகளை கொள்ளுவதற்கு தடுப்பு சட்டம் இல்லாத போது / மனிதர்களை குண்டு வைத்து கொல்லுவதை தடுக்க ஏன் சட்டம்னு கேட்குறீங்களா?

Thekkikattan|தெகா said...

தமிழ்கிங்,

//நான் அதை mean பண்ணலை. உங்க எழுத்துகள் புரிஞ்ச மாத்திரயும் இருக்கு. ஆனால் புரியாத மாதிரியும் இருக்கு. அதை தான் சொல்ல வந்தேன்.//

ஓ! அதச் சொல்றீங்களா ;). என்னாத்தை சொல்றது போங்க, எனக்கேதும் அந்த பூச்சி(பின்நவீனத்துவாமமுல்ல! அப்படின்னா??) கடிச்சிகிடிச்சி தொலைஞ்சுபுடுச்சா என்னான்னு தெரியலையே... நீங்க வேற பீதியக் கெளப்புறீங்க ரெண்டு தடவ படிக்க வேண்டியிருக்குன்னு :)).

//உதாரணத்திற்கு உங்கள் நடையில் சில வார்த்தைகள் பலமுறை படித்த பிறகுதான் புரிகிறது. "நம் சூழலில் அறிதலின்று " , "ருசித்தல் வேண்டி வலியப் பெற்றால் " , "எண்ண அலைகளில் லயித்து இருப்பது" , "தெரிந்தே ஈடுபட பணித்தால்"??

:) மேலே இது தொடர்பா பேசிட்டு வாரதலே நான் நினைச்சேன் "நம் சூழலில்=இந்த கருக்கலைப்பு பதிவு சார்ந்துன்னும், அறிதலின்றி =நமக்கு அப்படி ஊனமாவே குழந்தை பிறக்கப் போவதாக தெரியாமலேயே" அப்படின்னு எடுத்துக்குவீங்கன்னு நான் நினைச்சிக்கிட்டு சொன்னது :D.

மற்றதெல்லாம் ஓரளவிற்கு புரியற மாதிரித்தானே இருக்குது... ஸ்கராச், ஸ்கராச் :))..

//இது போன்ற விவாதங்கள் எல்லாம் நம் கருத்துகளின் மீது அடுத்தவர் பார்வை எப்படி உள்ளது என்பதை அறியத்தான். மற்றும் நம் கருத்துக்கள், எண்ணங்களை செதுக்கி கொள்ளவும்தான்.//

கண்டிப்பாக அதுதான் உண்மை. நாம் இங்கு கலந்துரையாடுவதற்கும் அதுவே தலையாய காரணமென்றும் நினைக்கிறேன்.

//இது போன்ற வாதங்களை கேட்கும் பொது நம் நிலையை அழுத்தமாக சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது//

புரிகிறது. அழகான முறையில் இந்த கருத்துப் பறிமாற்றம் நிகழ வாய்ப்புக் கொடுத்த லயன்கிங்கிற்கு எனது சிறப்பு நன்றி :).

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Thekkikattan|தெகா said...

//what Jyoti has raised is very valid Point...this is what i said in theka's post, that this case needs argument from various angles... still there is stigma against a disabled person... parents of a disabled children are still looked down upon... still we hear people saying that the sin committed by the forefathers has resulted in the birth of a handicapped child... these factors drive people to go for abortion if they come to know that the child is defective...//

மங்கை, மீண்டும் மீண்டும் இது தொடர்பா நீங்க பொதுவான கருத்துக்களை இங்கு வந்து பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

நீங்கள் ஆங்கிலத்தில் கூறிய விசயங்களும் அதாவது ஒரு சமூகம் எப்படி இது போன்ற பொற்றோர்களை வஞ்சித்து விடுகிறது என்ற கோணமும் மிக்கச் சரி.

இந்த விசயம் தமிழிஸ்.காம்ல் நன்றாக சென்றது மற்றொரு நல்ல விசயம் அங்கும் வந்து கலந்து கொண்டமைக்கு மற்றொரு நன்றி :-).

Jyoti from tamilish said...

theka பத்த வச்சத நான் ஊத்தி விட்டேன். தமிழ்கிங் நீங்க அதை பெரிய யாகம வளத்த்துட்டேங்க. நல்ல விவாதம். :)

Thekkikattan|தெகா said...

ஜோதி, உங்களுக்கும் ஒரு பெரிய நன்றி! பிறகு அந்தப் பெற்றோர்களை சிறையில் அடைக்கும் எண்ணமெல்லாம் வேண்டியதில்லை என்று இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு உங்களின் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் :).

Raji said...

So its all about money and medical expenses. so I have a Q to thekka and others. will we accept our neighbour kills their 1 year old son/daughter becos the child has a major health problem and its expensive. there is no that big difference between a 6 months foetus..just becos its inside the tummy we dont realise what cruel thing we r doing while abortin. its literally cutting a child in to pieces with a knife. please .....I know this becos I am a biologist. An adult should think twice before becoming pregnant. Having children in India is no more a personal decision. We r 1 billion...so every child we have is burden to the population and so we also should careful in daling with pregnancies.

மங்கை said...

Raji

Your point is well taken..nobody can deny..but here abortion 'per se' is not encouraged Raji.. i am only worried about taking care of an affected child..that too by a family below poverty line...does the Govt give assurance to protect the child?.. or do we have a social security system in place to take care of such children?... if anybody is comming forward then one can think about taht..and Raji again i am arguing in favour of people who are financially low.. just imagine the child being born, then suffer..then abandoned by the parents..hmmm is it advisable?.. still our country's social security is not reachable for poor..

abortion after a careless bevaiour or for anyother reason is stricltly to be condemned..

I know as bilogist whatever may be the reason it is not poosible for u to accept the above argument..i am arguing from a social scientist point of view..

written by mydeen said...

குழந்தை இருதய கோளாறு காரணமகாதன் கொலை செயப்படப் போகிறது என்கின்றது செய்தியாக வுள்ளபோது, உடல் உஊனமான சிசுவை தத்துஎடுத்து, வளர்த்து மதம் மர்த்ருவதற்குதன் என்று

சொல்வது அறிவிற்கு போருத்தமனதகவா இருக்கின்றது.

மேலும் சிசுக்கொலையை எந்தவகையான காரணம் சொல்லியாவது நியாயப்படுத்தும் மனோநிலை மாறவேண்டும். சிசுவினால் (கரு உருவாக்கிய நன்கு மாதங்களுக்குள் ) தாயினுடைய ஊயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்களால் உருதிசெயப்படுமனால், சம்மந்தப்பட்ட பெற்றோர் தீர்மானிக்கவேண்டிய விசயமிது. இத்துடன் ஆணும் பெண்ணும் ஒழுக்கம் பேணி கர்ப்புடையவர்களாக வாழும் கண்ணியமான சுழலை உருவாக்க நம்முடைய கலாச்சாரம், பண்பாடு

பேணப்படவேண்டும்.

கலகலப்ரியா said...

Hoopla! Thekki...

I'm not against abortion. நீங்க சொன்ன மாதிரி பெற்றோர்கள் சேர்ந்துன்னு இல்ல... சம்மந்தப்பட்ட பெண்ணே அந்த முடிவை எடுக்கலாம்...

ஆனா.... 24 weeks - borderline... hmm... can't judge it though... ரொம்பக் குறைபாட்டோட பிறந்து கஷ்டப்படறதுக்கு இது பெட்டர்னு நினைச்சாலும்... கஷ்டமா இருக்கு... சம்மந்தப்பட்டவங்க... அண்ட் அவங்க சூழல்|நிலமைதான் இதத் தீர்மானிக்கணும்...

it's more or less... 'mercy killing'.. both.. the kid as well the parents are in need of mercy here...

removing an embryo is not that painful (am not talking about literal pain) after embryonic stage.. removing an early fetus too is tolerable.. afterwards... it's difficult... in my opinion... but again... it depends on their situation... :(...

God! no one can judge the involved ones.. their dilemma... agony and the pain.. it's horrible...

but.. when they go for this sort of abortion... they definitely need a long term counselling/ psychotherapy... to avoid post traumatic disorder...

Related Posts with Thumbnails