Monday, July 21, 2008

நீரிழிவு நோயின் ஒன்பது முன் அடையாளங்கள்: Diabetes Symptoms!

நீரிழிவு நோய் கிட்டத்தட்ட எல்லோராலும் பொதுவாகவே டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்ளப்படும் வியாதிகளில் ஒன்று. ஆனால், இதன் தாக்கத்தின் விளைவு நாம் நினைப்பதனைக் காட்டிலும் மோசமான நிலையில் தலை முதல் கால் வரை கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளையும் சிறிது சிறிதாக செயலிழக்க வைத்து இறுதியில் மரணமே முடிவாக நிகழ்த்தி விட்டுச் சென்று விடுகிறது.

நேற்று ஒரு ஆர்வமூட்டு கட்டுரை ஒன்று இதன் பொருட்டு வாசிக்க நேர்ந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப் பதிவு. நீரிழிவு நோய் பற்றிய விரிவான கட்டுரையை வாசிக்க நம்ம பத்மா அர்விந்தின் பதிவிற்கு சென்றால் காணலாம்.

இங்கே நீரிழிவு நோய் இருக்க நேரிடின் அல்லது எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது எது போன்ற முன் அடையாளங்களாக காட்டிக் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம்.

1. கண் புருவத்தின் நிறம் - (Eyebrow Color):

உடல் ரோமங்கள் பொதுவாகவே நரைக்க ஆரம்பித்துருக்கும் பட்சத்தில் கண் புருவம் மட்டும் மறுத்தால், நீரிழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பதிகமாம்.

2. மார்பக அளவு(பெண்களுக்கு) - (Breast Size):

பெண்களில் இருபது வயதடையும் பொழுதே D அளவிற்கும் பெரிதான உள்ளாடை அணிய நேர்ந்தால், சக வயதில் அதனை விட சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண் நண்பிகளைக் காட்டிலும் அதிக வாய்ப்பிருக்கிறதாம் இவ் நோய் தாக்க. ஏனெனில், மார்பக எடை வந்து ஆளின் உயரம் மற்றும் எடைக்கு (BMI = Body Mass Idex) சம்பந்தமில்லாத வகையில் தனியாக கணக்கிடப் படுவதால் அப்படி எடுத்துக் கொள்ளப் படுகிறதாம்.

3. பிறந்த மாதம் அல்லது காலம் - (Birth Month or Season):

குழந்தை பிறந்த மாதத்திற்கும் நீரிழிவு நோயின் தாக்கத்திற்கும் ஏதோ காரணமில்லா காரணமிருப்பதாக பத்து ஆயிரம் குழந்தைகளில் நடத்திய ஆய்வுகளில் கண்டிபிடிக்கப் பட்டிருப்பதாக அட்லாண்டாவை மையமாக கொண்ட நோய் தடுப்புக் கழகம் (Center for Disease Control - CDC) கண்டறிந்திருக்கிறதாம். இதில் இலையுதிர்(Fall) காலத்தில் பிறந்த குழந்தைகளைக் காட்டிலும் வசந்த(Spring) காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகமுள்ளதாம் அதுவும் வட மாநிலங்களில் பிறந்த குழந்தைகளில். காரணமாக தற்காலிகமா தாய் உட் கொள்ளும் உணவும், மேல் விழும் சூரியக் கதிர்களின் அளவீடுமாக கருதப் படுகிறது.

4. காது கேளாமை - (Hearing Loss):

இதற்கு முன்னால் இது வரையிலும் காது கோளாமையை நீரிழிவு நோயுடன் சம்பந்தப் படுத்தி பார்த்தது கிடையாதாம். ஆனால், இப்பொழுது நீரிழிவு நோயல் பீடிக்கப் பட்டவர்களுக்கு அதிக அளவில் காது கேளாமை நிகழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

5. குறுகிய கால்கள் - (Short Legs):

குறுகிய கால்களைப் பெற்றவர்களுக்கு நீண்ட கால்களை பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமான வாய்ப்புகள் நீரிழிவு வகை - 2 தாக்க வாய்ப்புள்ளதாம்.

6. மெதுவாக புண் ஆறும் தன்மை - (Slow-healing Cut):

இரண்டாம் வகை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு பொதுவாக புண் ஆறும் காலம் சற்று கால தாமதமே ஆகும், இந்த நிலைக்கு Atherosclerosis என்று பெயராம். இதனில் என்ன நடைபெறுகிறதெனில் ரத்த குழாய்கள் தடித்து விடுவதும்(thickening), இரத்தச் செல்கள் இளகுவதும்(thinning) நடைபெறுவதால், ஒரு புண் ஏற்படும் பொழுது அங்கே இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டுக்கள் அதிகளவில் பாதிக்கப் பட்ட இடத்திற்கு சென்று சண்டையிடும் நிலை குறைந்து போன நிலையில் புண் ஆறும் காலம் அதிகமெடுத்து கொள்கிறதாம்.

7. பல் இழப்பு - (Tooth Loss): மற்றும்

8. ரோம இழப்பு - (Hair Loss):

இங்கும் நமது 6வது அடையாளத்தில் பேசப்பட்ட Atherosclerosis நடைபெறுவதனாலும், அதன் மூலமாக பிராணவாயுவேற்றமும் குறைவதனாலும் விரைவாக கலக்க முடி இருக்கும் நிலைக்குப் செல்வதும் இவ் நோய் இருப்பதற்கான அறிகுறியாம்.

9. பூச்சிக்கொல்லியினால் விளைவு - (Pesticide's Exposure):

அதிகப் படியான பூச்சிக்கொல்லிகளில் கிடந்து உழல்பவர்களுக்கும் இவ் நோய் தாக்கும் அபாயக் கூறுகள் அதிகம் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



பி.கு: மேலே கூறப்பட்டுள்ள ஒன்பது முன் அறிவிப்பு நோய் அடையாளங்களில் ஒன்றிரண்டு நம்மில் பலபேருக்கு சாதரணமாகவே காணப் பெறலாம்... உ.தா: ரோம உதிர்வு, காது கேளாமை, பல்லிழப்பு போன்றவைகள் அதனால் இவைகள் காணப்பட்டால் அபாய மணி அடித்து விட்டதாக பொருள் கொள்ள வேண்டியதில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும், இரத்தம் சார்ந்த சர்க்கரை அளவு கண்டறிந்தால் நல்லா நிம்மதியா தூங்கலாம் போல.

16 comments:

Thekkikattan|தெகா said...

Source: American Diabetes Association and AOL.

Anonymous said...

ரத்தத்தில் எத்தனை அளவு குளுக்கோஸ் இருந்தால் கவலைப்பட வேண்டும்?

கிரி said...

தெகா உபயோகமான பதிவு.

உபயோகமான பதிவும் சூடான இடுகையில் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மீன்துள்ளியான் said...

நல்ல கட்டுரை . நீரிழிவுக்கும் உணவில் சேர்க்கும் "sugar" அளவுக்கும் தொடர்பு உண்டா ?

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Thekkikattan|தெகா said...

சின்ன அம்மிணி said...

ரத்தத்தில் எத்தனை அளவு குளுக்கோஸ் இருந்தால் கவலைப்பட வேண்டும்? //

வாங்க சின்ன அம்மிணி, செமயான கேள்வி கேட்டு பல புத்தகங்களை புரட்ட வைச்சிட்டீங்க... ;) சில இன்ரஸ்டிங் ஃபாக்ட்ஸ்;

இரத்ததில் சர்க்கரையின் அளவு 70mg/dl(means milligrams of glucose in 100 milliliters of blood) க்கு கீழேஏஏ போன குறைவான இரத்தச் சர்க்கரைதான் இருக்காம் அதுக்குப் பேரு hypoglycemiaவாம்.

டாக்டருக்கு தேவை உங்கள் இரத்தத்தில் 70-110mg/dl அளவு இருக்கணுமாம், இருந்தாலும் 180க்கு கீழே இருந்தாலும் ஒகேதான் அதுவும் நல்லா சாப்பிட்டுவிட்டு. 180க்கு மேலேலேலே போயிடுச்சுன்னா "டிங்.." ரெட் லைட் எரிஞ்சுடுச்சாம், இப்ப இரத்தில அதிகமா சர்க்கரை இருந்து hyperglycemiaவாகிடுதாம்.

உங்க கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சா இல்லை குழப்பியிருக்கேனா?

Thekkikattan|தெகா said...

தெகா உபயோகமான பதிவு.//

நன்றி! கிரி. யாம் பெற்ற தெளிவு... ;)

//உபயோகமான பதிவும் சூடான இடுகையில் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.//

நல்ல விசயம்தானே, அப்ப எந்த மாதிரி பதிவுதான் அங்கே வந்துகிட்டு இருக்குன்னு சொல்லுறீங்க :-)).

Unknown said...

நல்ல பதிவு,

அனைவரும் தெரிந்து வேண்டிய விசயங்கள்.

நன்றி.

நட்புடன்
--மஸ்தான்.

Thekkikattan|தெகா said...

Meenthulliyaan said...
நல்ல கட்டுரை . நீரிழிவுக்கும் உணவில் சேர்க்கும் "sugar" அளவுக்கும் தொடர்பு உண்டா ?

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்//

வாங்க செந்தில்,

உணவின் மூலமாக செல்லும் சர்க்கரைதானே எல்லாவற்றுக்கும் காரணம். இன்சுலினின் பங்கு அதனை உடற் செல்களில் கிரகிக்கும் வண்ணம் செயல் புரிவது, ஆனால் தாறுமாறாக எகிறும் பொழுது பிரச்சினை ஆரம்பிக்கிறது.

கீழே இன்னும் கொஞ்சம் விளக்கமாக;

நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருக்கும் கார்பஹைட்ரேட் ஒரே அளவில் இருந்தாலும் அது உணவுப் பொருளுக்கு, பொருள் அவ் உணவின் மூலமாக இரத்தத்தில்யடையும் உணவுச் சர்க்கரையின் அளவு வேறுபடுகிறதாம்.

இதனின் வீச்சத்தை உணவு உட்கொள்வதற்குப் பிறகு இரத்ததில் இருக்கும் சர்க்கரையின் ஏற்றத்தை ரேங்கிங் முறையில் கணக்கிடுகிறார்களாம் இம் முறைக்கு Glycaemic Index(GI) 0-100 என்ற அளவில். உதாரணத்திற்கு முழுக்க, முழுக்க கார்பஹைட்ரேட் உள்ள வெள்ளை ரொட்டித் துண்டு அல்லது குளுகோஸ் உட்கொண்டதிற்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக உட்கிரகிப்படுவதால் அதனை அந்த GI அளவீடில் 100ஆகவும், பழங்களிலிள் இயல்பாகவே அதிகளவில் வைட்டமின்களுக்கு, தாதுக்குகளும், நார்சத்தும் கிடைத்தாலும் அதனின்று கிடைக்கும் சர்க்கரையின் அளவு மிகக் குறைவாக இருந்தாலும் அளவோடு இருப்பது எப்பொழுதுமே நீரிழிவுக்காரர்களுக்கு நல்லது என்கிறது அந்த அட்டவணை.

கீழே சில உ.தா:

Fruits with a low GI Factor (GI less than 55)

Apples/apple juice
Pears
Oranges/orange juice
Grapes
Grapefruits
Strawberries

Fruits with an Intermediate GI factor (GI 55-70)

Banana
Pineapple
Cantaloupe

கிரி said...

//நல்ல விசயம்தானே, அப்ப எந்த மாதிரி பதிவுதான் அங்கே வந்துகிட்டு இருக்குன்னு சொல்லுறீங்க :-)).//

ஏங்க தெகா..இதெல்லாம் நான் சொல்லி தான் தெரியனுமா..:-) தமிழ்மணத்துல யாரை கேட்டாலும் (உங்களையும் சேர்த்து ;-) ) சொல்வாங்களே :-)))

ராஜ நடராஜன் said...

வணக்கம் பல.

மக்கள் எதைச் சொன்னாலும் நம்புறாங்கப்பு.
எதிர்மறையா பின்னூட்டம் போடணுமின்னு வந்தேன்.திடீர்ன்னு பார்த்தா உங்களது முதலாவது முன்னூட்டம் அமெரிக்க லேபிளோடு பல்லிலிக்குது.அப்ப பதிவு அந்த ஊருக்கு சரியா வரலாம்.

ஆனா நடைமுறையில் நான் கண்டறிந்தது 6 வது எண் நமது நாட்டுக்குப் பொருந்தலாம்.மெடிக்கல் ஜர்னல்களைப் படிக்கும்போது உலகத்தில் உள்ள அத்தனை நோயும் நம்ம உடம்புல இருக்குற மாதிரி கன்வின்ஸ் பண்ணிடுவாங்க.

நம்ம நண்பர் ஒருவர் தலைமுறை சர்க்கரை.ஆனா மனுசன் அசருவதில்லை.வேலை மெனக்கெட்டுன்னு இல்ல வேலையின் காரணமாகவே நடை நடை. இன்சுலின் ஊசி போட்டுக்கிறது.கூடவே மிதக்கவும் செய்யறது.ஆனால் மிதப்பதும் ஒரு கலை என்பதையும் உணவு எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாறாக தெரிந்தவர் ஒருவர் நான் குறிப்பிட்ட எண் 6 காரணமாக ஒரு காலை இழக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

இனி அய்யாவோட பழக்கத்தையும் சொல்லிட வேண்டியது நல்லது என நினைக்கிறேன்.தங்ஸோட கட்டிப்பிடி வைத்தியம் தவிர காலை எழுந்தவுடன் பல்துளக்கி ஒரு மூச்சுப்பிடி வைத்தியம் குறைந்தது 30 நிமிடம் செய்துவிட்டுத்தான் மற்ற வேலைகள்.இந்த ஊரு ஒட்டகம் மாதிரி கிடைக்கிற போது நொறுக்குத்தீனி.இல்லாட்டி சாப்பட்டப் பத்தியே நினைக்கிறதில்ல.சிகரெட் தொடுவதில்லை.அதனால் என்ஜாய்தான்.

இதுபற்றி டாக்டர் புருனோவின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.யாராவது அவரது பார்வைக்கு வைத்தால் நல்லது.

Thekkikattan|தெகா said...

வாங்க ராஜ நடராஜன்,

//எதிர்மறையா பின்னூட்டம் போடணுமின்னு வந்தேன்.திடீர்ன்னு பார்த்தா உங்களது முதலாவது முன்னூட்டம் அமெரிக்க லேபிளோடு பல்லிலிக்குது.அப்ப பதிவு அந்த ஊருக்கு சரியா வரலாம்.//

அப்படி எதிர்மறையா சொல்லி பின்னூட்டிக்கிட்டாத்தானே பல விசயங்கள் வெளியே வரும் :-). இப்ப இது போன்ற வித்தியாசமான வெளி அடையாளங்களப் பத்தி குறிப்பிட்டு படத்தோட போட்டுருந்ததனாலேதான் நான் இங்கே கொண்டு வந்து போடண்ணுமின்னே நினைச்சேன்.

இரண்டாவது, அதாவது ஆறாவது பாயிண்ட்ல சொல்லியிருக்கிறது விசயம் வீங்கி வெடிக்கிறதுக்கு கொஞ்சம் முன்னாடி உள்ளதுன்னு வைச்சிக்குவோமே, அதாவது இரத்தச் சர்க்கரையளவு எல்லாம் ரெகுலரா பரிசோதனைப் பண்ணிக்காம வண்டி ஓடுர வரைக்கும் ஓடட்டுமின்னு அலட்சியமா இருக்கிறது.

ஆனா, நீரிழிவு நோயால் பல உறுப்புகள் செயலிழக்க வாய்ப்புகள் இருக்கு ராஜா. மூளை பக்கவாதத்திலருந்து, சிறுநீரக செயலிழப்பு, கண் பார்வை போதல், நீங்க குறிப்பிட்ட கால் இழப்பு இப்படி லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது.

இந்த புற அடையளங்கள் இங்கே குறிப்பிட்டது ஒரு சிறு ஐஸ்பெர்க் மாதிரி வைச்சிக்குவோமே, அப்படி ஏதாவது அந்த அடையாளங்களில் இரண்டுமூணுக்கு மேலே தட்டுப் பட்டு வயசும் 45க்கு மேலே இருந்தா ஒரு சின்னதா இரத்தச் சர்க்கரை பரிசோதனைப் பண்ணிகிறதில என்ன தவறு.

இருந்தாலும் அதனில் குறிப்பிடப் பட்டிருக்கும் புற அடையாளங்களில் ஒன்றிர்க்கு ஒன்று தொடர்பு இருப்பது போல இருந்தாலும், எனக்கு கூட இங்கு பின் குறிப்பில் குறிப்பிட்டது போல உடனே panicகாக தேவையில்லைன்னு சொல்லியிருந்தேன்.

ஆக மொத்தத்தில நீரிழிவு ஒரு பெரிய டைம் பாம் அது மட்டும் உண்மை. ஏதோ வண்டி ஓடுறதெல்லாம் சரியாத்தான் இருக்கும், என் அப்பாவும் இதே தத்துவந்தான் பேசிட்டு இருக்கார் வயசும் ஒரளவிற்கு வாழ்ந்த வயசுதான் இருந்தாலும் அலட்சிய படுத்திர முடியுமா?

Thekkikattan|தெகா said...

ராஜ நடராஜன்,

நீங்கள் பேசுவதனைக் கொண்டு பார்க்கும் பொழுது எல்லோரும் நினைப்தனைப் போலவேதான் நீரிழிவு நோயின் தாக்கத்தை நீங்களும் புரிந்து வைத்திருப்பதாகப் படுகிறது. நேரம் கிடைக்கும் பொழுது கீழே உள்ள சுட்டியை வாசித்துப் பாருங்கள்... ரொம்ப அவசியமான ஒன்று நியு யார்க் டைம்ஸ் ஆர்டிகில்.

Diabetes: Underrated, Insidious and Deadly

கோவை விஜய் said...

மிக பயனுள்ள பதிவு.

வருமுன் காப்பதற்கு உபயோகமான தகவல்கள்
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

Thekkikattan|தெகா said...

நல்ல பதிவு,

அனைவரும் தெரிந்து வேண்டிய விசயங்கள்.

நன்றி.

நட்புடன்
--மஸ்தான்.//

நன்றி மஸ்தான்! அப்படி நினைச்சுத்தான் இங்கன பதிஞ்சு வைச்சிருக்கேன்.

Thekkikattan|தெகா said...

கிரி,

//ஏங்க தெகா..இதெல்லாம் நான் சொல்லி தான் தெரியனுமா..:-) தமிழ்மணத்துல யாரை கேட்டாலும் (உங்களையும் சேர்த்து ;-) ) சொல்வாங்களே :-)))//

எனக்குத் தெரியாதுப்பா... நீங்கதான் சொல்லோணூம் ;-))

Thekkikattan|தெகா said...

//மிக பயனுள்ள பதிவு.

வருமுன் காப்பதற்கு உபயோகமான தகவல்கள்
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com//

*வருமுன் காப்போம்* அதுதான் இந்தப் பதிவின் மோட்டோ!

நன்றி, விஜய்!!

Related Posts with Thumbnails