Thursday, September 11, 2008

மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts

வரும் நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே பல குட்டிக்கரனங்கள் ஒவ்வொன்றாக அரங்கேற ஆரபித்தாகிவிட்டது என்பதற்கிணங்க குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதிக்கு ஜான் மெக்கெய்ன் அலாஸ்காவிலிருந்து இறக்குமதி செய்திருக்கும் சாரா பேலின் என்ற ச்சியர் லீடிங் நன்றாகவே செய்யும் அழகுப் பதுமையின் தேர்வின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது, குட்டிக்கரனங்களின் தொடக்கத்தை.



சாரா பேலின் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனை கண்ணுரும் பொழுது ஏற்கெனவே கிலி பிடித்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மேலும் அதுவே அச்சாணி அடித்து நிறந்தரமாக குடியேறி விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந் நிலை மிகவும் வருத்தத்திற்கூரியது. ஏனெனில், பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி "க்கோ ட்டீம் க்கோ" சொல்லிக் கொண்டிருப்பதில், ஒரு விளையாட்டு அணி வெற்றிப் பெற வேண்டுமானால் உடனடி குளூக்கோஸ் ஏற்றுவது போல விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றி விளையாடி வெற்றி பெற வைக்கலாம்.

ஆனால், இங்கு வாழ்வா, சாவா நிலையில் இது போன்ற ஒரு கவர்ச்சி(கன்னித்) திட்டம் தேவையா, நாட்டிற்கும் ஏன் இந்த உலகத்திற்குமே? மற்றுமொரு நான்கு வருட தீரன் புஷ்ஷுன் அடாவடி பொறுப்பற்ற அரசியல் பிரயோகத்தை இந்த உலகம் தாங்குமா? இதோ அதனையும் சுவைத்துப் பார்த்துவிட நேரம் வந்துவிட்டது. நான் முன்பே கருதி, எழுதியும் வைத்து விட்டேன் ஜனநாயக கட்சி சில பல காரணங்களுக்ககாவும், குடியரசுக் கட்சியின் அரசியல் தந்திரத்தாலும், இந்த முறையும் அந்தக் கட்சிக்கே வெற்றி பெரும் அனேகத் தன்மையென ...இந்தப் பதிவின் மூலமாக.

கடந்த சில மாதங்களாக ஓபாமாவின் பின் புலத்தை அறியும் தருவாயில் இழந்த பொருளாதார இழப்புக்களையும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும், சர்வ தேச முறிந்த உறவுகளை புதுபிக்கவும் - அமெரிக்காவின் முக்கியமான வரலாற்று சந்திப்பில் இவரே ரட்சகராக இருக்க முடியுமென்ற எண்ணம் ஆழமாக என் மனதில் பதிய ஆரம்பித்தது.

இந் நிலையில் சாரா பேலினின் மூலமாக மலிந்த வளரும் நாடுகளின் அரசியல் தந்திரங்களை குடியரசுக் கட்சி இங்கும் அமல் படுத்த ஆரம்பித்து விட்டது. அமெரிக்க அரசியல் நாகரீகத்திற்கு இது ஒரு பின்னடைவுதான். முன்பே கூறியதைப் போன்று அரசியல் நாகரீகத்துடன் தேவையான விசயங்களை பேசிச் சென்ற கூட்டங்கள் இப்பொழுது தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

சாரா பலீன் தனது கட்டற்ற குழந்தை ஈன்றெடுப்பு, டவுன் சின்ரோமிருந்தும் தனது மன உறுதியாலும்(?), மத கோட்பாட்டை முன் நிறுத்துவதாலும் ஒரு அர்பணித்த கிருஸ்துவர் என்ற அடையாளத்தின் கீழ் தனது குடும்பத்தை மேடையிலேற்றி ஓட்டு வேட்டை நடத்த ஆரம்பித்துவிட்டார். அதாவது தன் குடும்பம் சார்ந்த பச்சாதாபத்தை முன்னுருத்தி. அதுவும் போர், போர் என்றழையும் மனிதர்களை உள்ளடக்கிய கட்சிக்காக. இதன் மூலமாக அடையப் போகும் பலன் யாவரும் அறிந்ததுதான்.

ஆனால், இதில் என்னவொரு நகைமுரண் என்றால் மற்ற கலாச்சாரங்களை நாகரீமற்று, காட்டுமிரண்டிகளாக இருப்பதாகக் கூறி அவைகளுக்கு விடுதலை அளிக்க எத்தனிக்கும் ஒரு கட்சியே அது போன்ற காலவதியாகிப் போன அடையாளங்களை முன்னுருத்தி ஓட்டு வாங்க எத்தனிப்பதுதான், அது. இவர்கள் இவர்களின் புத்தகத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அணுகுகிறார்கள் என்றால், அந்தச் சமூகம் அவர்களின் புத்தகத்தின் வழி நடக்கிறார்கள், இதில் யாருடைய வழி சிறந்த வழி என்பதனை யார் கூறுவது?

ஓபாமாவின் ஜனநாயக் கட்சி இந்த வெற்றி வாய்ப்பை தவறவிடும் பட்சத்தில் பல சிரமங்களை இந் நாடும், உலகமும் அனுபவிக்கப் போவது உறுதி என்பது மட்டும் எங்கோ மனதின் ஓரிடத்தில் அபாய மணி அடித்துக் கூறிக் கொண்டே இருக்கிறது. History repeats itself once again, fasten your seat belts my fellow folks.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

அமெரிக்க அரசியல் - தெகாவிற்கான பதில்! by யு. எஸ். தமிழன் [குடியரசுகட்சியின் சாதனைகள் அதனை சரியாக பார்க்கத் தவறிய பொது (என்னைப் போல) ஜனங்களுக்குமான பதிவிது].

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.... by அவியல்செல்வி - [குடியரசுக் கட்சியில் குறிப்பாக சாரா ப்பேலின் ஏன் திடீர் உதயம் என தோலுரித்துக் காட்டும் பதிவிது].

41 comments:

யு.எஸ்.தமிழன் said...

தெகா -

பராக் ஏன் நல்லவர், அவர் ஆட்சிக்கு வருவதால் எப்படி மற்ற நாடுகளுக்கு நன்மை விளையும், அவருடைய மாற்றம் எவ்வாறு செயல்படுத்தப்படும், அதற்கு எவ்வாறு பண் முதலீடு செய்வார், போரினால் அமெரிக்கா இழந்தது என்ன, மெக்கெய்ன் ஆட்சிக்கு வருவதால் என்ன சிரமம் ஏற்படும் போன்றவற்றை எளிதாக எழுதி ஒரு பதிவிடலாமே?

-டைனோ

Thekkikattan|தெகா said...

வாங்க யு.எஸ். தமிழன்,

//பராக் ஏன் நல்லவர்?//
& அவர் ஆட்சிக்கு வருவதால் எப்படி மற்ற நாடுகளுக்கு நன்மை விளையும், //

அவரின் பின்னணியும், அவர் தன்னைத் தானே வளர்த்துக்கொண்ட விதமும் அவருக்கு நிறைய உலகம் சார்ந்த மற்றும் தன்னைத் தானே அறிந்து கொண்டிருக்கும் பிரஞைசார் உணர்வு ஏனைய அரசியல் வாதிகளைவிட அதிகமிருப்பதாக எண்ணம் கொள்ள வைக்கிறது.

மேலும் பொருளாதாரம் சார்ந்து அவருக்கிருக்கும் பார்வையும் படிப்பும் (கொலம்பியா மற்றும் ஹார்வார்ட் பல்கலையிலிருந்தும்). இன்னமும் மனிதத்தின் மீதிருக்கும் நம்பிக்கை - பேச்சு வார்த்தைகளில் பெரும் குழப்பங்களுக்கு தீர்வு காணமுடியுமென்ற அவரின் மன உறுதி, இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம்.

//அவருடைய மாற்றம் எவ்வாறு செயல்படுத்தப்படும்,//

தேவையில்லாத போர்களில் இறங்காமலிருந்தாலே பெரும் மாற்றங்களை உள்நாட்டில் காணமுடியுமே...

//போரினால் அமெரிக்கா இழந்தது என்ன,//

நிறையவே இழந்தாகிவிட்டது இன்னுமா உணரவில்லை? இல்லை நீங்கள் சேஃப்பான கிரவுண்டில் இருப்பதால் அதனை உணர முடியவில்லையா? மேர்ட்கேஜ் கட்ட முடியாமல் 7-10 வருடங்கள் தவறாமல் தவணை கட்டியும் மூன்று மாதங்கள் தவறப் போக ரோட்டில் நிற்கும் அவலத்தின் வலி உணர முடியவில்லையா :-(?

மெக்கெய்ன் ஆட்சிக்கு வந்தால் இன்னும் நான்கு வருடங்கள் க்ராஃபோர்ட் டெக்சாசில் பார்ட்டி நடக்கும் ஈரான் வரைக்கும் படை வீரர்களை அனுப்பிவிட்டு, இங்கு இருக்கும் சாமான்யர்கள் அதற்காக இழக்க இருப்பது இன்னமும் எதுவாக இருக்க முடியும்...?

நன்றி யு. எஸ். தமிழன்.

இலவசக்கொத்தனார் said...

ரொம்பவே ஒரு பக்கம் சார்பாக எழுதப்பட்ட பதிவு எனத் தோன்றுகிறது. நீங்கள் ரட்சகன் லெவலில் வைத்திருக்கும் ஒபாமா தெளிவற்ற சிந்தனை உடையவராகத் தெரிகிறார் எனக்கு.

//கட்டற்ற குழந்தை ஈன்றெடுப்பு,// போன்ற சொற்றொடர்களில் துவேஷம்தான் தெரிகிறது.

ம்ம். நடாத்துங்க.

Anonymous said...

//இலவசக்கொத்தனார்- கட்டற்ற குழந்தை ஈன்றெடுப்பு, போன்ற சொற்றொடர்களில் துவேஷம்தான் தெரிகிறது.//
இலவசக்கொத்தனாரின் கருத்தே என்னுடையதும்.

வல்லிசிம்ஹன் said...

ஸாரா பேலின், ஒரு நாடகத்தை நடத்தினார் என்பது என் போன்ற, வழக்கமான இந்திய அரசியலைப் பார்ப்பவர்களுக்கு புரியும்.
அவர் தங்களை இறைத்தூதராகவே எடுத்துரைத்தார்.:(

இங்கே ஒபாமாவுக்கு அதிக ஆதரவு இருக்கிறது.

யு.எஸ்.தமிழன் said...

>>>> மேலும் பொருளாதாரம் சார்ந்து அவருக்கிருக்கும் பார்வையும் படிப்பும் (கொலம்பியா மற்றும் ஹார்வார்ட் பல்கலையிலிருந்தும்).


பொருளாதாரம் சார்ந்த எந்த தெளிவான கருத்தையும் பராக் பகிர்ந்ததாக தெரியவில்லை. தற்போதிய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஜுனியரும் ஹார்வார்ட்டில் படித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? NAFTA முதல் எனர்ஜி, ஹவுசிங், வர்த்தகம் போன்ற பல விஷயங்களிலும் அவர் உளறி தன் கருத்தை பலமுறை மாற்றிக்கொண்டதே அதிகம். இன்னும் செய்திகளை தேடிப்படியுங்கள். நியுயார்க் டைம்ஸ், MSNBC, NPR மட்டுமே பார்த்தால் இப்படி ஒருபக்க சார்புதான் எடுக்க வேண்டிவரும்!


>>>>தேவையில்லாத போர்களில் இறங்காமலிருந்தாலே பெரும் மாற்றங்களை உள்நாட்டில் காணமுடியுமே...

போர் முடிந்து வீட்டுக்குத்திரும்பும் வீரர்களுக்கு கொடுக்க தேவையான பணியிடங்கள் காலியாக உள்ளதா? அதை நிரப்ப போதுமான திட்டங்கள் இருக்கிறதா பராக்கிடம்? மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் தேவை இல்லாத போர், அமெரிக்காவுக்கு மிகவும் அவசியமான போர்தான்! பராக்கின் “மாற்றம்”களுக்கு எத்தனை செலவாகும், அதை எவ்வாறு அவர் பெறுவார் என்பதை எங்காவது விளக்கியிருக்கிறாரா? போரை நாளையே நிறுத்தினாலும் அவருடைய மாற்றங்களுக்கு அமெரிக்கர்களின் வரியை 10%ஆவது உயர்த்தாமல் நடத்திக்காட்டமுடியாது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்களே?

நீங்கள் இப்போது 30%-33% வரி கட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அது 40% ஆக உயர்ந்தால் மகிழ்ச்சி அடைவீர்களா?


>>>>மேர்ட்கேஜ் கட்ட முடியாமல்

இதற்கும் புஷ்சின் கொள்கைகளுக்கோ போருக்கோ எதாவது தொடர்பிருக்கிறதா? பங்கு நிலை சரிவதற்கு அரசாங்கம் காரணமாக முடியுமா? எப்படி? என்ன தொடர்பு?

>>>>இங்கு இருக்கும் சாமான்யர்கள் அதற்காக இழக்க இருப்பது இன்னமும் எதுவாக இருக்க முடியும்...?

ஈராக் / ஆப்கானிஸ்தான் போரினால் அமெரிக்கர்கள் என்ன இழந்தார்கள்? கிளிண்டன் ஆட்சியில் கிடைத்த எது அவர்களுக்குக் கிடைக்காமல் போனது? 9/11க்கு பிறகு அமெரிக்கா என்ன செய்திருக்க வேண்டும், இப்போது இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கும் இந்திய அரசாங்கம் போல கமிஷன் வைத்து விசாரித்துக்கொண்டிருக்க வேண்டுமா?

ஒரு சின்ன Home work உங்களுக்கு. ஈராக் போர் நடக்காமல் இருந்திருந்தால் சதாம் ஐரோப்பிய யுரோ நாணயத்தை எண்ணெய் வர்த்தகத்திற்கு பயன்படுத்தியிருப்பார். மற்ற நாடுகளும் அதை பின்தொடரக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அவ்வாறு நிகழ்ந்தால் அமெரிக்காவின் நிலை என்னவாகியிருக்கும் என்று பொருளாதார ஆசிரியர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்.

:)

-டைனோ

யு.எஸ்.தமிழன் said...

வல்லிசிம்ஹன் -

குழந்தையைப் பெற்றெடுத்துதான் நாடகத்தை நடத்தியிருக்கிறாரா? அவர் கர்ப்பம் தரித்தபோதே, அதற்கு முன்னால் நான்கு குழந்தைகளைப்பெற்ற போதே நாடகத்தை துவங்கிவிட்டாரா? ஒரு மாதத்திற்கு முன்புகூட அவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது அவருக்குத் (ஏன் யாருக்குமே) தெரியாது என்பதும் நாடகம்தானா? இந்திய அரசியலில் இவ்வாறு குழந்தைபிறப்பு நாடகம் நடத்தி வெற்றி கண்ட வீராங்கனைகளைப்பற்றி விபரம்கூட வேண்டாம் பட்டியலையாவது தரலாமே?

Thekkikattan|தெகா said...

கொத்ஸ்,

//ரொம்பவே ஒரு பக்கம் சார்பாக எழுதப்பட்ட பதிவு எனத் தோன்றுகிறது. நீங்கள் ரட்சகன் லெவலில் வைத்திருக்கும் ஒபாமா தெளிவற்ற சிந்தனை உடையவராகத் தெரிகிறார் எனக்கு.//

நான் ரட்சகனாக ஓபாமாவை இந்த தருனத்தில் எடுத்துக் கொள்வதற்குக் காரணம், பார்த்துத் சலித்துப் போன, உலக நிம்மதியைக் குழைக்கும் பாலிசிகளும், மேற் கொண்டு வழி நடத்த எத்தனிக்கும் ஜான் மெக்கெய்னின் கொள்கைகளுமே அப்படியாக எனை நினைக்க வைத்தது.

//கட்டற்ற குழந்தை ஈன்றெடுப்பு,// போன்ற சொற்றொடர்களில் துவேஷம்தான் தெரிகிறது. //

அது துவேஷமில்லை கொத்ஸ், உண்மை. இதனை முன்னுருத்தியே இப்பொழுது பெரிய அளவில் மக்களின் கவனத்தை மதம் சார்ந்து இழுக்க பயன்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு அபாயகரமான யுத்தி என்று கூடவா எடுத்துக் கொள்ள முடியவில்லை உங்களால்? மதத்தின் பெயரால் குடும்பக்கட்டுப் பாட்டை ஓரத்தில் வைத்துவிட்டு பிறகு இந்தியாவில் மக்கள் தொகை அப்படி, நிறைய சாப்பிடுகிறார்கள் என்று எந்த முகாந்திரத்தின் பேரில் காமெண்ட் அடிப்பது இந்தக் கட்சிக் காரர்கள்... ;)??

Thekkikattan|தெகா said...

Anonymous said...
//இலவசக்கொத்தனார்- கட்டற்ற குழந்தை ஈன்றெடுப்பு, போன்ற சொற்றொடர்களில் துவேஷம்தான் தெரிகிறது.//
இலவசக்கொத்தனாரின் கருத்தே என்னுடையதும். //

கொத்தனாருக்கு சொன்னதேதான் அப்ப உங்களுக்கும்... படிச்சுப் பாருங்க கொஞ்சனுண்டாவது அதில உண்மையிருக்கான்னு...

Thekkikattan|தெகா said...

வாங்க வல்லியம்மா,

//ஸாரா பேலின், ஒரு நாடகத்தை நடத்தினார் என்பது என் போன்ற, வழக்கமான இந்திய அரசியலைப் பார்ப்பவர்களுக்கு புரியும்.
அவர் தங்களை இறைத்தூதராகவே எடுத்துரைத்தார்.:(

இங்கே ஒபாமாவுக்கு அதிக ஆதரவு இருக்கிறது.//

இதற்காகத்தான் தேடியழைந்திருக்கிறார்கள் போல, இது போன்ற பொருத்தமான ஆளை கண்டுபிடித்து எடுப்பதற்கு :). நன்றாகவே குடியரசுக் காட்சி எப்படி மக்களை மிரட்டி, பயம் காட்டி, கடவுள் சொல்றான் நாங்க செய்றோம் ரேஞ்சிக்கு விசயங்களை திரித்து கொடுத்து ஓட்டு வேட்டையாடுவது என்று அறிந்தே வைத்திருக்கிறார்கள் என்பதனை காணும் பொழுது நம்மூர் ஞாபகத்தில் வந்து போவதனை தவிர்க்க முடியவில்லை, நீங்களும் சுட்டிக் காட்டியதனைப் போன்றே.

''''''அவர் தங்களை இறைத்தூதராகவே எடுத்துரைத்தார்.:('''' <==== இது ரொம்பவே டேஞ்சரஸான வழி, ஆனால் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது :-(((.

Thekkikattan|தெகா said...

யு.எஸ். தமிழன்,

நாளை விரிவாக பேசுவோம். பொறுத்தருள்க ;).

யு.எஸ்.தமிழன் said...

subscribing :)

வல்லிசிம்ஹன் said...

யு.எஸ்.தமிழன்,
அவர்கள் ....அன்பினால் பெற்றேடுத்த குழந்தைகளை நான் நாடகம் என்று சொல்லவில்லை.
அவர்களை விளம்பரத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்றே சொன்னேன்....
என்னைப் பொருத்தவரையில் அப்படித் தோன்றியது.
இந்தியாவில் நாடகம் நடத்துவது வேறு விதமாக.தியாகச் செம்மல்களாகக் காட்டிக் கொள்ளுவார்கள்.
நம் மக்களும் ஓட்டுப் போடும்போது ஐய்யோபாவம் என்று அனுதாபம் காட்டியே தங்கள் நல்வாய்ப்புகளை இழக்கிறார்கள்.

அரசியல் வாதிகள் பொதுநலவாதிகளாக எங்குமே இல்லை.

ரங்குடு said...

எனக்குத் தெரிந்த வரையில், ஓபாமா மிகப் பெரிய அளவில் வெற்றி பெறுவார். காரணங்கள்:
1. இந்தத் தேர்தலில் அவர் ஒரு வேகமாக வருகிற ரயில். (Freight Engine). அதன் முன்
யாரும் நிற்க முடியாது.
2. மெக் கெயின் முன்பே ஜனாதிபதி (முன்) தேர்தலில் நின்று தோற்றவர். அவருடைய
ஸ்டண்டுகள் இந்த முறை எடு படாது.
3. 75% ஆப்பிரிக்க இன மக்களின் ஆதரவு ஓபாமாவுக்கு இருக்கிறது. ஆனால் 50%
வெள்ளையின மக்களின் ஆதரவு மெக் கெயினுக்கு இருக்கிறதா என்றால் சந்தேகமே.
4. நம்ம ஊர் மாதிரியே தற்போது அரசுக் கட்டிலில் இருக்கும் கட்சி மேலும் 4 ஆண்டுகள்
ஆட்சியைப் பிடிப்பது மிகவும் கடினம்.போதாக்குறைக்கு புஷ்ஷின் பாப்புலாரிட்டி
30% சத வீதத்தில் ஊசலாடுகிறது.
5. மெக் கெயின் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் புஷ் செய்த தவறுகளையே செய்வார்
அல்லது நீட்டிப்பார் என்பது நிச்சயம்.
6.மெக் கெயினின் வயது அவரது ஆட்சிக் கட்டில் ஆசையை விடப் பெரியது. இது ஒரு
பெரிய பல வீனம். இது என்ன தமிழ் நாடா? 80 வயதுக் கிழம், பையன், பெண், பேரன் ,
பேத்திகளோடு குடும்ப அரசு நடத்துவதற்கு?
7. இராக்கில் என்ன செய்வது என்று தெரியாமலேயே, புஷ் சொச்ச காலத்தை ஓட்டி விடுவார்.
மெக் கெயினோ இன்னும் பல வருஷங்கள் அமெரிக்க ராணுவம் இராக்கில் இருக்க வாய்ப்பு
உண்டு என்று சொல்வதால், மக்கள் அதை ஏற்க மறுப்பார்கள்.
8. எப்போதும் 25 / 30% ஆப்பிரிக்க இனத்தவர் வாக்களித்தாலே பெரிய விஷயம். ஆனால்
இந்த முறை அவர்களில் பெரும்பான்மையானவர்கள் (முன் தேர்தலில்) ஓபாமாவுக்கு
வாக்களித்துள்ளார்கள். எனவே ஒபாமா ஒரு வரலாற்று சாதனையுடன் வெற்றி பெறுவார்.
9.இல்லீகல் இம்மிக்ரேஷன் என்ற விஷயத்தில் மெக் கெயினின் கட்சி மிகவும் கடுமையாக
நடந்து கொள்வதால், ஸ்பானிஷ் பிரஜைகள் அவருக்கு வாக்களிப்பது சந்தேகம். மிகவும்
முக்கியமான டெக்ஸாஸ், Fளோரிடா, கலிபோர்னியா முதலிய மா நி¢லங்களில் அவருக்கு
ஆதரவு குறையும்.
10.மற்ற படி யார் ஆட்சிக்கு வந்தாலும், எந்த ஒரு குறையும் உடனே நிவர்த்தி ஆகாது. வீட்டு மதிப்பு
உயர இன்னும் 10/15 வருடங்கள் ஆகலாம். பொருளாதாரம் ஒரு சுமாரான நிலைக்கு வர இன்னும்
5 வருஷங்கள் ஆகலாம். ஏனென்றால், கடந்த 8 வருட பின்னேற்றம் அப்படிப்பட்டது. யார்
ஆண்டாலும், வரிகள் உயரப் போவது நிச்சயம். பண வீக்கம் நிச்சயம். தங்கம் விலை உயர்வு
நிச்சயம். மேலும் பல வங்கிகள் அரசுடமையாகப் போவது நிச்சயம். வேலை இல்லாத்திண்டாட்டம்
நிச்சயம்.

Thekkikattan|தெகா said...

யு. எஸ். தமிழன் பின்னூட்டம் ரொம்பப் பெரிதாக இருப்பதால் உடைத்து போடுகிறேன் பகுதிகளாக...

பகுதி -1:


//தற்போதிய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஜுனியரும் ஹார்வார்ட்டில் படித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?//

அதுதான் எப்படியென்று எனக்கும் தெரியவில்லை ;). இருந்தாலும், அவரு அந்த நாற்காலியில் அமர்ந்ததே வேறு விசயத்திற்கெனும் பொழுது எப்படி ஹார்வார்டில் படித்த அறிவை மக்களுக்கு எடுத்துச் செல்லத் தோணும். வரும் பொழுதே இடுப்புக் கட்சையில் மாட்டிய இரட்டைக் குழல் டுப்பாக்கியும், கவ்பாய் தொப்பியும் மற்ற எல்லா விசயங்களையும் மறைந்து விட்டனவோ...

//நியுயார்க் டைம்ஸ், MSNBC, NPR மட்டுமே பார்த்தால் இப்படி ஒருபக்க சார்புதான் எடுக்க வேண்டிவரும்! //

எப்படி இவ்வளவு சரியாக கண்டுபிடித்தீர்கள் :)). அப்ப நேஷனல் பப்ளிக் ரேடியோவில், public டெலிவிஷன் எல்லாம் சொல்வதனைக் காட்டிலும் ரஷ் லிம்பா மிக நேர்த்தியான விசயங்களை 610 ஏஎம்ல் சொல்கிறாரா, என்ன ;)?

ஆக மொத்தத்தில் எனக்கு இரத்தம் பார்ப்பதில் ஆர்வம் மிகவும் குறைச்சலே...

//போர் முடிந்து வீட்டுக்குத்திரும்பும் வீரர்களுக்கு கொடுக்க தேவையான பணியிடங்கள் காலியாக உள்ளதா? அதை நிரப்ப போதுமான திட்டங்கள் இருக்கிறதா பராக்கிடம்? //

இது என்னங்க இப்படி ஒரு கேள்விய கேட்டு ரொம்பவே யோசிக்க வைச்சிட்டீங்க :). அப்ப இங்கேயிருந்து அனுப்பும் பொழுது அந்த ராணுவ ஆட்கள் எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தாங்க இங்கே? நம்மூர்ல தானே பள்ளிகளுக்கு போயிட்டோ இல்ல மற்ற பிற வேலைகளிலோ, சொந்த தொழிலோ பண்ணிட்டு இருந்துருப்பாங்க? இப்போ திடீர்னு நீங்க கேக்கிறதப் பார்த்தா நாம என்னமோ ஈராக் படைவீரர்களை பல லட்சங்களில் நம் நாட்டிற்குள் கொண்டு வந்து அவர்களுக்கு வாழ வீடு, வேலைன்னு தேடிக் கொடுக்கிற மாதிரி பிரச்சினையா பேசுறீங்க. அப்ப இந்த வீரர்களுக்கெல்லாம் வீட்டுக்கு வார ஆசையே இல்லையா? அங்கேயே வைச்சி, வருமானத்தை உண்டு பண்ணி சம்பளத்தை போட்டுக் கொடுத்திடலாமின்னு நினைச்சிட்டு இருக்கோமா, அதாவது ஈராக்கை 53வதா நம்மோட இணைச்சிட்டு... அந்தக் காலத்தில இந்த காலனியாக்கம் அப்படிங்கிற மாதிரி... அப்போ அதுவா இது :-P...

Anonymous said...

தெகா,

உங்க பய உணர்ச்சி நன்றாகத் தெரிகிறது.

பயம் தேவை இல்லை.

சாரா பலீன் சும்மா ஒரு கவர்ச்சி. அது கூட இல்லாமல் தேர்தல் சுவாரசியம் இருக்காது. இது அமெரிக்காவிற்கு புதிதாக இருந்தாலும், ஜாலியாத்தான் இருக்கு..

ஆனால் வெற்றி ஓபாமாவிற்கே என்பது என் எண்ணம்.

பார்க்கலாம்... காலம் பதில் சொல்லும்..

நட்புடன்
சிவபாலன்.

Thekkikattan|தெகா said...

பகுதி -2,

//இதற்கும் புஷ்சின் கொள்கைகளுக்கோ போருக்கோ எதாவது தொடர்பிருக்கிறதா? பங்கு நிலை சரிவதற்கு அரசாங்கம் காரணமாக முடியுமா? எப்படி? என்ன தொடர்பு?//

இது என்னங்க சும்மா கிண்டல் பண்றமாதிரி கேள்வியா கேக்குறீங்க ;). அப்ப இங்கிருந்து செனடெட்ல பணம் கொடு, பணம் கொடுன்னு பில்லியன் கனக்கா சம்பந்தமில்லாத ஈராக்ல சண்டை போடுறதுக்கு எடுத்துட்டு போற பணமெல்லாம் எங்கிருந்து வந்தது, அப்போ? புஷோட, டிக் சீனியோட சொந்தப் பணமா? இங்கு தொழிலை விருத்தி பண்ற, மக்கள் கைகளில் பணப் புழக்கத்தை உண்டு பண்ற வேலைகளை உற்பத்திக்கிற பணத்தையெல்லாம் குண்டு, குண்டா செஞ்சு எவன் தலையிலோ போடுற பணம் நாட்டுக்குள்ளர இருந்தா மக்கள் சுபிட்சமா , சந்தோஷமா இருக்க மாட்டானா, அவன் வேலை பார்க்கிற கம்பெனிகள் நஷ்டமடைஞ்சு அது மூலமா லே ஆஃப் ஆயி, செலவு பண்ணவே திக்கு முக்காடுறது அப்போ இந்த வெட்டிச் செலவால இல்லையா?

//இதற்கும் புஷ்சின் கொள்கைகளுக்கோ போருக்கோ எதாவது தொடர்பிருக்கிறதா? பங்கு நிலை சரிவதற்கு அரசாங்கம் காரணமாக முடியுமா? எப்படி? என்ன தொடர்பு?//

இன்றைய நிலவரப்படி ஒரு மாதத்திற்கு 10பில்லியன் டாலர்கள் ஈராக் போருக்காக செலவு பண்ணப்படுவது, எந்த கல்லாவில் இருந்து எடுத்து விட்டு செலவு பண்ணப்படுகிறது?

நான் என்னக்கி இந்த புஷ்ண்ணா வேலைக்கு வந்தாரோ அன்னக்கி நானும் சொந்தத் தொழில் பண்ண ஆரம்பிச்சேன், நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமாக, கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கனக்கா போயிட்டே இருக்கு... இவ்வளவுக்கும் ரொம்ப அத்தியாவசிய மக்களின் தேவைக்கென இருக்கிற தொழில்தான் நம்மோடது... அதெப்படி திடீர்னு பங்கு வர்த்தகம் சரிந்தது, ஓவர் நைட்... இதுக்கு மேலே முதல் பத்தியில் சொன்னதிற்கும் பங்கு வர்த்தகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் பாருங்க... அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை வந்து என்ன பண்ணுதுன்னா மக்கள் கையில் பணப் புழக்கம் >விற்றல் வாங்கள் செழிப்பு >> வியாபார பெருக்கம் = வர்த்தக சந்தையின் கொடி உச்சாணியில், இல்லையா?

//ஈராக் / ஆப்கானிஸ்தான் போரினால் அமெரிக்கர்கள் என்ன இழந்தார்கள்? //

ஈராக் போரை எதற்கு ஆஃபகானிஸ்தானுடன் முதலில் சேர்க்க வேண்டும், அதனை முதலில் சொல்லுங்கள்? ஆஃப்கானில் சண்டையிடுகிறோமென்றால் அதற்கென ஒரு காரணமிருந்தது, ஈராக்கிற்கு? to be contd...

Thekkikattan|தெகா said...

பகுதி - 3,

//கிளிண்டன் ஆட்சியில் கிடைத்த எது அவர்களுக்குக் கிடைக்காமல் போனது? //

கிளிண்டன் ஆட்சியில் ஆசை ஆசையாக தான் வாங்கிய வீட்டில் குடியிருக்க முடிந்திருந்தது மாத மாதம் தவனை கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வேலையுடன். அதுதானே ஒரு நடுத்தர வர்க்கதினனின் முக்கியமான தேவை... அது நிறைவாகவே இருந்தது.

//9/11க்கு பிறகு அமெரிக்கா என்ன செய்திருக்க வேண்டும்//

ஆஃப்கானுக்கு வீரர்களை அனுப்பியதோடு என்ன காரணத்திற்காக அங்கே சென்றார்களோ அதனை முழு வீச்சில் அங்கேயே செய்திருக்க வேண்டும்.

//ஒரு சின்ன Home work உங்களுக்கு. ஈராக் போர் நடக்காமல் இருந்திருந்தால் சதாம் ஐரோப்பிய யுரோ நாணயத்தை எண்ணெய் வர்த்தகத்திற்கு பயன்படுத்தியிருப்பார். மற்ற நாடுகளும் அதை பின்தொடரக்கூடிய சாத்தியங்கள் உண்டு. //

அப்படி வாங்க விசயத்திற்கு :). இதெல்லாம் தெரிஞ்சுக்காம இருப்போமா. பாருங்க யு.எஸ் தமிழன் நானும் இங்குதான் நிறந்தரமாக வாழ்கிறேன், இருந்தாலும் சுத்தமாக எனக்கு மனிதபிமானம் இறந்தோ அல்லது மரத்தோ போய் விடவில்லை இன்னும், ஈரம் கொஞ்சமிருக்கிறது. எதன் பொருட்டு எனில் "தானும் வாழணும், மற்றவர்களும் வாழ வேண்டுமென நினைக்கும் எண்ணத்தில்."

தான் நிறந்தரமாக அரசாள வேண்டும், பெரும் பணக்காரனாக இருக்க வேண்டுமென்பதற்காக நியாயமாக நடை பெற வேண்டிய விசயங்களை இப்படி இரும்புக் கை கொண்டு ஒடுக்கி எத்தனை நாட்கள் வாழ்ந்து கொண்டே இருக்க முடியும்? இந்த ஃபாசில் ஃப்யோலுக்காக இப்படி குழந்தைகளின் இரத்தத்தை சிந்திதான் இங்கு கொண்டு வந்து நம் கார்கள் ஓட வேண்டுமானால், அதற்கு ஈடாக மாற்று வழி எரிபொருளை கண்டு பிடித்து மற்ற நாடுகளுக்கு அந்த தொழிற் நுட்பத்தை விற்று பெரிய பணக்கார நாடாகவே இருக்கலாமே.

நம் நாசிகளாவது கொஞ்சம் தப்பிப் பிழைக்கும் இரத்த நொடிகளிலிருந்து. கொஞ்சம் மனசாட்சியுடன் விசயங்களை பார்க்கவும் கற்றுக் கொள்வோம், யு. எஸ். தமிழன்.

//அவ்வாறு நிகழ்ந்தால் அமெரிக்காவின் நிலை என்னவாகியிருக்கும் என்று பொருளாதார ஆசிரியர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள். //

எங்கே வாரீங்கன்னு தெரியுது, மாற்று வழிகளே இக்காலத்திற்கு நல்லது நாம் 19, 20ம் நூற்றாண்டுகளில் வாழவில்லை, இன்றைய சமூதாயமும், மக்களின் எண்ணங்களும் பெரிதே மாற்றமடைந்திருக்கிறது. சுத்தியல் கொண்டு அடித்து ஒடுக்குவது இனிமேல் கதைக்காகது, கதைக்கவேணும் சுத்தியல் எடுக்குமுன்பாக என்பது என்னுடைய இரத்தம் பார்க்க விரும்பாத உள்ளத்தின் அவா.

நன்றி தங்களின் பார்வைக்கு. வணக்கம்!

Thekkikattan|தெகா said...

வாங்க ரங்குடு,

நீங்க கொடுத்த அந்த பாசிடிவ் பார்வை நல்ல டானிக், மாற்றத்தை விரும்புற எல்லாருக்குமே. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

நீங்க சொன்ன எல்லா பாயிண்டுகளுமே கவனத்தில் நிறுத்தவதற்குரியதுதான். இருந்தாலும், நான் முன்பொரு பதிவில் இந்த கறுப்பினத்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக ஓபாமாவை கவிழ்த்து விடுவார்களோ என்ற பார்வையில் ஒரு பதிவு பதிந்து வைத்திருக்கிறேன்.

இல்லையெனில் இந்த முறை ஜனநாயக கட்சி வெற்றி பெறுவதற்கு எல்லா சாத்தியக் கூறுகளும் இணக்கமாகவே இருக்கிறது.

#10 ரொம்ப உண்மை பல வருடங்கள் எடுத்துக் கொள்ளும் பொருளாதார ரீதியாக அடைந்துள்ள பின்னடைவை சமநிலைப் படுத்த...

நன்றி! தங்களின் பின்னூட்டத்திற்கு.

Thekkikattan|தெகா said...

வாங்க சிவபாலன்,

என்னாச்சு, ப்ளாக் பக்கமெல்லாம் எட்டிப் பார்க்கிறீங்க, சந்தோஷமா இருக்கு அப்படிப் பார்க்க :-).

//உங்க பய உணர்ச்சி நன்றாகத் தெரிகிறது.

பயம் தேவை இல்லை.//

இந்த பயம் ஒட்டு மொத்த உலகத்தை நினைக்கும் பொழுதே எழுகிற ஒரு ஆதங்கம்.

//சாரா பலீன் சும்மா ஒரு கவர்ச்சி. அது கூட இல்லாமல் தேர்தல் சுவாரசியம் இருக்காது. இது அமெரிக்காவிற்கு புதிதாக இருந்தாலும், ஜாலியாத்தான் இருக்கு...//

அப்படித்தான் பார்க்கத் தோணுது ;), இருந்தாலும் இந்தக் காலத்தில முகப் பூச்சுக்குத்தாங்க மக்கள் விலை போறாங்க, யாரு தேடிக் கண்டுபிடிச்சு எதில உண்மையிருக்கு, இல்லேன்னு பார்க்க முயற்சி பண்றாங்க...

//ஆனால் வெற்றி ஓபாமாவிற்கே என்பது என் எண்ணம்.//

அப்படி நடந்திட்டா 1 பாக்ஸ் டங்கின் டோனட்ஸ் மஞ்ச்கின்ஸ் பார்சல் உங்களுக்கு :-P.

மருதநாயகம் said...

சூப்பர் தெக்கி, கன்டினியூ...

Anonymous said...

it looks a lot like indian politics these days... using film stars , beauty queens for attraction. dividing the people with religion.. talking about pigs and dogs.
aathirai

யு.எஸ்.தமிழன் said...

தெகா -

இத்தனை விரிவான பதில் தருவீர்கள் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. நீங்கள் ஏதோ இரண்டு பத்திகளில் பதில் தந்திருந்தால் “நன்றி, வணக்கம்!” போட்டுவிட்டு ஓடியிருப்பேன்! நிறுத்தி எழுதவைத்துவிட்டீர்கள்! இனி விவாதத்திற்கு நுழையலாம்!

விவாதம் நீண்டு விட்டதால் தனிபதிவாக பதித்திருக்கிறேன்

http://usthamizhan.blogspot.com/2008/09/blog-post.html

-டைனோ

Thekkikattan|தெகா said...

(அவரின் பதிவை படித்தவுடன் எனக்கு முதலில் சொல்லத் தோன்றிய வார்த்தை ""வாவ்"தான் (ஏனெனில் நான் முன்னே இட்ட மற்றொரு பதிவில் நம்மூர்காரர்களின் ரிபப்ளிகன் அதரவிற்கான காரணங்களான, காரணிகள் இங்கும் இவரிடமும் கண்டதால் அந்த 'வாவ்'), அவரின் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம், கீழே...)

யு. எஸ். தமிழன்,

நன்றாகவே எழுதி விளக்கியிருக்கிறீர்கள்.

ஆனால் வேறு வேறு துருவத்தில் நிற்பது போலவும், ஒரே பட தலைப்புடன் உள்ள ஒரு படத்தை இரு வேறு கோணங்களில் காண்பது போலவும் உள்ளது, உங்களுடைய பதிலை படிக்கும் பொழுது.

உலகமே ஒத்துக் கொண்ட ஒரு தவறை எப்படி நியாயப்படுத்தி, அதனை செல்லுபடியாக்கியும் காமிக்க முடியுமென்று இது போன்ற பதில்களை படிக்கும் பொழுது தெரிந்து கொள்கிறேன்.

சரி, புஷ்ஷுன் ஆட்சி காலத்தில் நடத்திய நிகழ்வுகளணைத்தும் நாட்டின் நன்மைக்கெனவும், உலகத்தின் அமைதிக்கெனவுமென்றால் ஏன் நடந்த முடிந்த "ரிபப்ளிகன் நேஷனல் கன்வென்ஷனில்" வந்து நேரடியாக தலைகாட்ட முன் வரவில்லை, புஷ் மற்றும் டிக் ச்சினி? புயல் அடித்தது அதனை மானிட்டர் பண்ணப் போனதால் வரவில்லை என்று கூறுவது, சரியான பதிலாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

எனிவே, எனக்கு எங்கு இருப்பினும் அரசியல் பிடிக்காத ஒரு விசயமாக இருந்தே வந்திருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் இருக்கும் பொருட்டு இங்கு இன்று எடுக்கப்படும் ஒரு முடிவு நேரடியாக நாளையே அதன் பலனை காட்டி வருவதால் சற்றே எனது கவனத்தையும், இரத்த அழுத்தத்தையும் பதம் பார்த்து வருகிறது.

மற்றபடி எனக்கு இந்த அரசியல் வாதிகளும் அவர்கள் போடும் தகிடுதத்தங்களும் தனிப்பட்ட முறையில் உவப்பாக இல்லை. எப்படியோ, யார் எடுக்கும் முடிவாகினும் நாட்டிற்கும், நாட்டு மக்களூக்கும் அமைதியையும், நற் பெயரையும் ஈட்டித் தந்தால் நலமே, என்று கூறி விடைபெற்றுக் கொள்கிறேன், இந்தப் பதிவினையொட்டி.

தங்களின் தனிப் பதிவிற்கும் ஓர் நன்றி, யு. எஸ். தமிழன்.

Thekkikattan|தெகா said...

என்னுடைய பின்னூட்டதிற்கு யு. எஸ். தமிழனின் பின்னூட்டம் கீழே...

யு.எஸ்.தமிழன் said...

தெகா -

உங்கள் வருகைக்கு நன்றி!

>>>> உலகமே ஒத்துக் கொண்ட ஒரு தவறை எப்படி நியாயப்படுத்தி, அதனை செல்லுபடியாக்கியும்

உலகம் வந்து நம் வரியைக் கட்டிவிடப்போவதில்லை. நாளையே நமது வரி 35% ஆக உயர்ந்துவிட்டால் நாம்தான் செக் எழுதவேண்டும். அமெரிக்காவைப் பார்த்து பொறாமைப்படும் நாடுகளின் கருத்துக்களால் நமக்கென்ன பயன்?

>>>> இது போன்ற பதில்களை படிக்கும் பொழுது தெரிந்து கொள்கிறேன்.

வெகுஜன ஊடகத்தையோ Alternate Media வையோ மேற்கோள் காட்டி எங்குமே நான் விவாதத்தை முன்னெடுத்துச்செல்லவில்லை. The numbers are taken from reputed organizations and you could verify for yourself. ஆனால் இதையெல்லாம் உதாசினப்படுத்தி நம் ஆராயும் புத்தியையே மழுங்கடிக்கும் வேலையைத்தான் மீடியாக்கள் செய்து கொண்டிருக்கின்றன.

>>>> "ரிபப்ளிகன் நேஷனல் கன்வென்ஷனில்" வந்து நேரடியாக தலைகாட்ட முன் வரவில்லை,

அது கண்டிப்பாக அரசியல் காரணங்களால்தான். அவர் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? With his dwindling popularity it was a smart move that he did not come and any party would have done the same.

அருமையான விவாதத்திற்கு வித்திட்டதற்கு உங்களுக்கும் என் நன்றி!

கல்வெட்டு said...

//ஈராக் போர் நடக்காமல் இருந்திருந்தால் சதாம் ஐரோப்பிய யுரோ நாணயத்தை எண்ணெய் வர்த்தகத்திற்கு பயன்படுத்தியிருப்பார். மற்ற நாடுகளும் அதை பின்தொடரக்கூடிய சாத்தியங்கள் உண்டு. //

so what ??

//அமெரிக்காவைப் பார்த்து பொறாமைப்படும் நாடுகளின் கருத்துக்களால் நமக்கென்ன பயன்?//

Now I got your point.

Survival of the fittest is the basic animal instinct. We should not mask our self as a different.


***

American thinks they are the world. It is always true, it doesn’t matter you came here and settled 300 years ago or just 10 years before.

you are right ! Whether Iraq people live or not who cares?

Need to stop Euro that is the goal. only those who can understand the truth can survey.

I salute you with my whole heart.

Note:
This doesn’t mean India and Indians are very good/kind/mannered people and care about others... that is the different story for discussion.

**

Anonymous said...

i think the underlying theme of the blog is losing its path as the american political campaigns.

What used to amaze me when i came to the country 10 years ago are the healthy discussions on different issues affecting daily life of every human being such as health care, taxes, public school education etc., on PBS and other media.
This has been slowly changing in the last 10 years. especially after Bush Doctrine "you are either with us or against us" attitude. I also see that tactics used by tamilnadu politicians for ages coming in to play here too. If some one asks a question, distort the credibility of the person asking (eg., valery plame / Wilson, Swift boat campaigns etc.,) or keep repeating the same lies over and over and over (raise the 911 issue for every question on iraq war even though it was proved beyond doubt that both do not have any co-relation.)
Over the last eight years, Bush emptied the government coffers by way of big tax cuts and war expenses. One need not be an economic pundit to determine that spending beyond ones means is always a bad policy. They have been sugar coating it as job creating, jump start the economy, infuse capital to the market, and many such jargons. but the results are there for all of us to see. America is not better of today than what it was eight years ago.

But going by the popularity of Sara Palin and lacklustre response from Obama Campaign so far and with our experience of what sells in Tamil Nadu Politics, we are looking at the very real possibility of McCain / Palin winning. That will simply extend the wasteful expenses of Bush term (making the taxcut permenant, never ending war bleeding more and more money, etc.,) and more and more spins.

i hate to admit that the republicans are good in campaigns though there is nothing they can be proud of having achieved in the last eight years!

I hope i am wrong!

--Ravi

Thekkikattan|தெகா said...

மருதநாயகம்,

மற்ற பின்னூட்டங்களையும் படிங்க படிச்சிட்டு, உங்க கருத்தை எடுத்து வைங்க. யு. எஸ். தமிழன் எப்படி அவர் தரப்பு புரிதல்களை எடுத்து வைச்சிருக்கார் பாருங்க.

வருகைக்கு நன்றி!

யு.எஸ்.தமிழன் said...

>>>> கல்வெட்டு said...
>>>> "ஐரோப்பிய யுரோ நாணயத்தை எண்ணெய் வர்த்தகத்திற்கு பயன்படுத்தியிருப்பார். மற்ற நாடுகளும் அதை பின்தொடரக்கூடிய சாத்தியங்கள் உண்டு."
>>>> so what ??

If I had to start explaining the benefits and the merits a country would receive in using its currency as an universal reserve currency then I will end up writing volumes of economic literature for the next 10 years. For starters I recommend Ron Paul's article http://www.house.gov/paul/tst/tst2007/tst010107.htm and continue on to the IMF report on currency reserve at http://www.imf.org/external/pubs/ft/wp/2006/wp06153.pdf .

I don't understand your "so what??". Does it mean that you don't care about the reserve currency or you don't care that the dollar being dethrone as a reserve currency? Do you fully understand the implications on the international community (especially China, India, Saudi Arabia and most non-european countries ) and world economy if the dollar is dethroned? If you do understand and still believe it has to be discounted could you please explain why European countries are steadfast in pushing Euro as a single reserve currency?

If after reading through the above links and still feel that reserve currency is not a big deal and world is filled with simple and loving creatures called humans and that LOVE is the only thing that matters - All I could say is "Wake up my friend and welcome to reality!"

>>>> Survival of the fittest is the basic animal instinct. We should not mask our self as a different.

Absolutely. No qualms there. I truly belive that humans are infact social animals and we still do carry that gene in us. No one is trying to mask anything here!

>>>> you are right ! Whether Iraq people live or not who cares?

Well I will like to pose the same question to you. Who really cared for Iraqians? If you are naive enough to think that there is a certain number of fellow humans who cared about Iraqians, I could only pity that thought! Even their neighbors and countries which had good trade relatioships with IRAQ didn't care. When the kill is made, gather to collect your share! If one is late that's a lost opportunity and starve till the next kill. Basic animal instinct and it is perfectly natural.

>>>> I salute you with my whole heart.

The respect is mutual.

யு.எஸ்.தமிழன் said...

>>>> Ravi
>>>> when i came to the country 10 years ago are the healthy discussions ...on PBS and other media.

There lies the problem. US politics had been worse than this with personal smear campaign worse than what is happening here. Just go back another 20 yrs in history and see how much critism Ronald Reagan received for being a B-center actor and how his economic policies were rediculed. The personal attack launched by Ford and later by Carter against Reagan would make the current politicians wiggle in shame. Its the same thing in any country even in India. We think Kamaraj or Kakkan were great politicians in TN, but go back in history and read how these leaders were slammed by opposition. So nothing had really changed here (or there), only that you started noticing it for the past 10 yrs it looks just as ugly.

The other thing I had outlined in my previous comment is many get contented with information from one side of the media - The PBS, NBC and of course now the national news source - The Comedy Central. Once people start getting out of that mould and start doing their own research the truth will be readily visible.


>>>> there is nothing they can be proud of having achieved in the last eight years

Economy growing at a consistent rate with GDP at 3.5 since 2001, unemployment maintained consistently within 6% for the past 8 yrs, No child left behind implementation etc had received no media recognition. I have refuted most of the half-baked truths with real facts taken from independent sources elsewhere. If you wish to still scrutinize ONLY the war in IRAQ I have nothing to add.

Anonymous said...

Kalvettu,

The so called behaviorally soicialistic human race now got into or find themselves so deeper into "the survival of fittest" efficacy. We have no other choice but patrolling our own neighborhood from impending, eminent enemy invasion at any given time. Therefore, pre-emptive strike is unavoidable before some other tribal community gets us.

Indeed, we are the world of our own - in our illusionary, self-centered, "me-only" mental plane. We have nothing to do with the rest of the world, we already broke the natural law which is "every living thing in this world is interlinked with one another," by creating and breaking the rules whenever we need in front of the world community(U.N). Because, we still believe we can go on live well with the attitude of "who cares." Again, I insist what we say or do is right, agree or not.

And one more thing, we do not use any media for our own propaganda campaigning, therefore, dig deeper away from what do you see around you, and especially do not get fooled by what the public media is giving you.

- The Economy stupid

கோவி.கண்ணன் said...

//History repeats itself once again, fasten your seat belts my fellow folks. //

உணர்ந்து எழுதினீர்களா ? உள்ளுணர்வால் எழுதினீர்களா ?

நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள் !

Santhosh said...

//போர் முடிந்து வீட்டுக்குத்திரும்பும் வீரர்களுக்கு கொடுக்க தேவையான பணியிடங்கள் காலியாக உள்ளதா? அதை நிரப்ப போதுமான திட்டங்கள் இருக்கிறதா பராக்கிடம்? //

யூ.எஸ் தமிழரே.. நீங்க என்ன சொல்ல வரீங்க? அவங்களுக்கு குடுக்க வேலை காலி இல்லை அப்படிங்கிற காரணத்தினால் அப்படியே ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்னுன்னு உலகம் பூரா படையெடுத்துட்டு இருக்கலாமா?

//அப்படி வாங்க விசயத்திற்கு :). இதெல்லாம் தெரிஞ்சுக்காம இருப்போமா. பாருங்க யு.எஸ் தமிழன் நானும் இங்குதான் நிறந்தரமாக வாழ்கிறேன், இருந்தாலும் சுத்தமாக எனக்கு மனிதபிமானம் இறந்தோ அல்லது மரத்தோ போய் விடவில்லை இன்னும், ஈரம் கொஞ்சமிருக்கிறது. எதன் பொருட்டு எனில் "தானும் வாழணும், மற்றவர்களும் வாழ வேண்டுமென நினைக்கும் எண்ணத்தில்."

தான் நிறந்தரமாக அரசாள வேண்டும், பெரும் பணக்காரனாக இருக்க வேண்டுமென்பதற்காக நியாயமாக நடை பெற வேண்டிய விசயங்களை இப்படி இரும்புக் கை கொண்டு ஒடுக்கி எத்தனை நாட்கள் வாழ்ந்து கொண்டே இருக்க முடியும்? இந்த ஃபாசில் ஃப்யோலுக்காக இப்படி குழந்தைகளின் இரத்தத்தை சிந்திதான் இங்கு கொண்டு வந்து நம் கார்கள் ஓட வேண்டுமானால், அதற்கு ஈடாக மாற்று வழி எரிபொருளை கண்டு பிடித்து மற்ற நாடுகளுக்கு அந்த தொழிற் நுட்பத்தை விற்று பெரிய பணக்கார நாடாகவே இருக்கலாமே.

நம் நாசிகளாவது கொஞ்சம் தப்பிப் பிழைக்கும் இரத்த நொடிகளிலிருந்து. கொஞ்சம் மனசாட்சியுடன் விசயங்களை பார்க்கவும் கற்றுக் கொள்வோம், யு. எஸ். தமிழன்.
//

அருமையான பதில் தெ.கா.. அடுத்த சபாஷ் கல்வெட்டுக்கு..

யு.எஸ் தமிழன்,
ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பின் பின்விளைவுகளில் அனேகமாக யாரும் ஆராயாத ஒன்று போரினால் உருவாகப்போகும் தீவிரவாதிகளைப்பற்றி. உங்க கருத்துப்படி டாலர் பொதுவான கரன்சியாக இருந்து நழுவும் நிலையில் அதனால் உலகம் முழுவதும் ஏற்படப்போகும் பொருளுதார பாதிப்புகள், அதனால் பல்லாயிரக்கணக்கான உயிர் பலியை நீங்க எப்படி நியாயப்படுத்த முடியும்? இப்ப மட்டும் உலகப் பொருளாதாரம் என்ன செழிச்சிட்டா இருக்கு?

Arizona penn said...

வணக்கம் தெகா, என்னுடைய பதிவு "http://aviyalselvi.blogspot.com" -உம் இதை பற்றி எனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்....நீங்கள் சொல்வது போல் இந்த தேர்தல் அமெரிக்காவின் தற்போதைய தேவைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, விரும்பத்தகாத திசையில் பயணித்து கொண்டிருக்கிறது...இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கும் நல்லதல்ல....அமேரிக்காவில் ஏற்படும் மாற்றங்கள் பல உலக நாடுகளையும் பாதிக்கக்கூடும்.....எனவே தேர்தல் களம் உண்மையான இன்றைய முக்கிய பொருளாதார, சுகாதார, வெளியுறவு கொள்கைகளை முன் வைத்துத்தான் இருக்கவேண்டும்....

யு.எஸ்.தமிழன் said...

>>>> அவங்களுக்கு குடுக்க வேலை காலி இல்லை அப்படி

சந்தோஷ் - போர் என்பது வெளியுறவுத்துறை. நான் சொல்ல வந்தது போர்வீரர்கள் நாடு திரும்புவதால் ஏற்படக்கூடிய உள்நாட்டுப்பிரச்சனையை "ப்ராக் எப்படி எதிர்கொள்வார்" என்பதைப்பற்றி. போருக்குப் போனது சரியா தப்பான்னு தனியா ஒரு விவாதம் போயிட்டிருக்கு அதை பிறகு பார்ப்போம். இப்ப அவங்கள ஒரே வருடத்தில் திரும்பப்பெறக்கூடிய பொருளாதாரமோ, அரசியல் நிலவரமோ இல்லை என்பதுதான் நிதர்சனம். அதற்குத்தான் ஈரானிடம் வம்பு அடுத்தது ஜார்ஜியா விஷயத்தில் ரஷ்யாவிடம் வம்பு. My hunch is that US is planning to create a permanent international force to be stationed in Europe and Asia, but again that's my guess and I could be wrong.

>>>> நியாயமாக நடை பெற வேண்டிய விசயங்களை

திரும்பவும் நியாயம் தர்மம்ன்னு பேசினா எதற்கும் உதவாது. சீனாகாரன் நாளைக்கி வல்லரசாகி நமக்கு சொம்பு தருவான் அப்ப நெஞ்சு ஈரத்த அதுல புடிச்சி படையல் வச்சுக்கலாமா? அப்ப அவங்கிட்ட நியாயம், தருமம், மனித நேயம், அன்பு எல்லாம் விளக்கிப்பாருங்க!

>>>> இப்ப மட்டும் உலகப் பொருளாதாரம் என்ன செழிச்சிட்டா இருக்கு?

உங்க ப்ளாக்குல பார்த்தவரை நீங்க IT துறையில் இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். இந்தக் கேள்வியை நீங்க கேட்கலாமா? உங்க அப்பா அம்மாகிட்டையோ, தாத்தா பாட்டி கிட்டையோ கேட்டுப்பாருங்களேன். அடுக்கடுக்கா தகவல்களை எடுத்து வச்சு பொருளாதாரம் வளர்ந்ததை காட்டியிருக்கிறேன். அதற்கும் மேல் என்ன ஆதாரம் வேணும்.

இல்ல தெரியாமத்தான் கேட்கறேன் செழிப்புன்னா உங்க பாஷைல என்ன? உலகமே செழிப்பா இருக்கணும் அப்படின்னா என்ன? எல்லோரும் எல்லாமும் பெறுவதா? அது சாத்தியமா? அப்படி ஒரு வரலாறு மனித சமுதாயத்தில் எப்போதாவது இருந்ததா? சாத்தியமே இல்லாத ஒன்றை எப்படி அய்யா நடக்கும்ன்னு வாதாடரீங்க? நிஜமாப் புரியல.

>>>> அதற்கு ஈடாக மாற்று வழி எரிபொருளை கண்டு பிடித்து

வச்சுகிட்டா வஞ்சனை பண்றாங்க. அப்படி ஒண்ணு இருந்திருந்தா அத வச்சி பில்லியன் பில்லியனா குவிச்சிருப்பாங்களே. அத கண்டு பிடிக்கற வரைக்கும் இந்தப் பிரச்சனை இருக்கும். அப்படி கண்டு பிடிச்சிட்டால் அதற்கான அரசியல் பொருளாதாரம் மாறக்கூடும். பல ஹேஸ்யங்களை பறக்க விடலாம். அதுவரை போர், சண்டை, ரத்தம் என்பதை பழகிக் கொள்ளத்தான் வேண்டும்.

>>>> போரினால் உருவாகப்போகும் தீவிரவாதிகளைப்பற்றி.

அவர்கள் உருவாகிகிட்டேதான் இருப்பாங்க. அதுக்காக சும்மா இருக்கலாமா?

நேத்து மும்பை, அப்புறம் பார்லிமெண்ட், பெங்களூர், அகமதாபாத், இன்னிக்கி திரும்பவும் டில்லின்னு பாம் வச்சுகிட்டேதான் இருப்பான். போங்கைய்யா எல்லோரும் பூச்செண்டுகளையும், பூமுத்தங்களையும், அன்பென்ற ஆயுத்தத்தை வீசி பண்பென்ற பரிசு பெற்றுவாருங்கள். கமிஷன் கஸ்மாலம் எல்லாம் வச்சு துப்ப துலக்கீட்டே இருங்க. இல்ல நம்ம economy first சொன்ன மாதிரி அவரையும் கூட அழைத்துக்கொண்டு எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஒர் இனம்ன்னு நீயும் நானும் அண்ணந்தம்பிடான்னு கட்டி புடிச்சுக்கோங்க!

நமக்கு தாவு தீருதுங்க. முடியல. You all win! If you need to refute and lauch any personal attacks please do so at my blog and spare TheKaa's blog. I am open to discuss any of these issues if you could bring some useful data to the table and like to have a academic discussion. Again my heartfelt gratitude goes to TheKaa for allowing me to have this discussion in his space!

Thekkikattan|தெகா said...

Ravi,

//i think the underlying theme of the blog is losing its path as the american political campaigns.//

Yes, as you rightly pointed out my prime concern was to point out the way in which the campaign is twisted and mis-led.

On top of it, how this show biz (Sara Palin's) is going to pre-occupy certain voters mind, leaving behind lots of crucial issues is also another point which I tried to bring out.

//This has been slowly changing in the last 10 years. especially after Bush Doctrine "you are either with us or against us" attitude. //

And that is the attitude totally against the whole of human race forgetting still we are sharing the same planet and what all we have gotten is this place to live since the intersteller star travel is not even in our sight. When the reality is like that, we have to realize our responsibility and learn to co-exist amicably with the rest of the world.

Divisive attitude and its propagation in the name of race and religion is short cut to wipe out the entire humankind from the face of the earth. Eventhough, it has been executed from time to time in the past, at this juncture of destrutive warfares and advancement of destructive tools, now we are even more capable of dismantling this earth several times over.

This is why, I strongly feel the people with that kind of "doctrines" should be ignored and send to rehab to fix their head.

Thanks Ravi for your comment.

கல்வெட்டு said...

For the entire economist friends....

Whether economy / science/ religion… what not.. etc., should help human to live better. All are invented/discovered/practiced by human just to make their life better not to destroy others life.

Who support the Iraq war or not....you yourself spend few minutes of time to think about this..or visits the core place of Iraq (remote village) and find out what they got from this war. Just because you are in better position by war doesn’t mean that is the same for entire world.

I respect your way of thinking and feeling economically secured but at the same time you must think there is the reverse effect some where in the world.

My point is not to make you (any one) guilty. Also I know the neighborhood Iraq countries and their compelling reason to go behind US. Iraq was the only country to practice few good things within the gulf region. Just to save your a** you busted them.They are now in mess.

Thinking beyond economics or thinking beyond religion or thinking beyond any thing thought by old school is very difficult.
In the world no one has the right to live. Living alive is privilege to all and any time it can be revoked by country like US .

Iraq war has multiple dimensions, what you guys described is just the economical version. There are other sides and we will not be here when it comes out. I do not say Sadam is a good person, but was hated by neighboring countries for other reason also. That is beyond economic / euro/dollar .. He was hated by his country people for different reasons too.

Each and every individual may have different views, I respect that. Only we can get some thing from our thoughtsphere. Just because you have different opinion that doesn’t mean your good (bad).
**

This discussion was about current US politics and the way they run the campaign. I leave the topics to others.

But one final info, if you think government(US/India/...) is run by elected people then you are zero in politics.Pleases better discuss only economics or some thing.

Whether Obama or Palin (Mc Cain.. who is he ? :-)) we forgot about him after Palin’s entry .. sorry folks ) you will not see any changes.

US foreign policy itself an economic policy so they go with what they want economically.

Originally foreign policy was introduced for some other purpose, now all the countries use the foreign policy just for trading nothing beyond their so-called economic growths.

**

Live economically happy and kill others economically happy.

தருமி said...

பதிவை வாசித்ததும் எழுத நினைத்ததை அதன்பிறகு தொடராக வந்துள்ள விவாதங்களைப் படித்ததும் எழுதுவோமா வேண்டாமா என்று நினைக்க வைத்து விட்டது. இருந்தும் நினைத்ததைச் சொல்லி விடவேண்டியதுதான்:
"அந்தக் காலத்தில்" காரணத்தோடோ இல்லாமலேயோ கென்னடியை அவரது தேர்தலுக்கு முன்பே இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இன்று வரை கென்னடியின் மீதான அந்த charisma இன்னும் இங்கு இருக்கிறதென்றே நினைக்கிறேன். அன்று கென்னடிக்கு மக்களிடையே இருந்த அந்த ஈர்ப்பு இன்று இந்தியாவில் ஒபாமா மேலுள்ளது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

நான் அவர் கட்சி.

Thekkikattan|தெகா said...

கோவி,

//உணர்ந்து எழுதினீர்களா ? உள்ளுணர்வால் எழுதினீர்களா ?//

உணர்ந்தே எழுதப்பட்டது எனக் கொள்ளலாம். கிட்டத்தட்ட அரை சதம் அடித்த மக்கள் தோரும் நான் வைக்கும் கேள்விகளை முன் வைத்து பார்க்கும் பொழுது, சில பேர் சொல்லும் விசயங்கள் உண்மையிலேயே இந்த ஒட்டு மொத்த அமெரிக்க அரசியல்(தேர்தல்) உலக அமைதியை நிர்ணயிக்கப் போகிறது என்ற தொனியில்தான் உள்ளது.

Thekkikattan|தெகா said...

Kalvettu,

//American thinks they are the world. It is always true, it doesn’t matter you came here and settled 300 years ago or just 10 years before.

you are right ! Whether Iraq people live or not who cares?

Need to stop Euro that is the goal. only those who can understand the truth can survey.//

All these times, I have been thinking of what to write to you as an answer :)). Because, you have touched the very truth at its core, it hurts man;)!

When someone like the hanged Sadam talked about pegging his oil trade with either on Euro or his brain child new currency for the entire middle east, has been smelt out by the world police and we all knew what had happened to his head at the end.

And in fact, whoever is going to talk of such a way will also meet the short cut to visit the hell :)).

Well, we have to wait to see for so many changes yet to come with the new administration in the office beginning in coming jan. Fasten, fasten your seat belts....

Thekkikattan|தெகா said...

selwilki said...

//வணக்கம் தெகா, என்னுடைய பதிவு "http://aviyalselvi.blogspot.com" -உம் இதை பற்றி எனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்....//

அதான் அங்கேயும் வந்து படிச்சிட்டு, இங்கே வந்து லிங்கும் கொடுத்து ஜமாய்ச்சுட்டோம்ல...

//நீங்கள் சொல்வது போல் இந்த தேர்தல் அமெரிக்காவின் தற்போதைய தேவைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, விரும்பத்தகாத திசையில் பயணித்து கொண்டிருக்கிறது...//

அதான் இன்னும் தாமதித்து இதற்கு பின்னூட்டம் எழுதுறேன். ஏன்னா, பாருங்க நம்ம சாராவை வைச்சு ஒண்ணும் கதைக்கு உதவாதுன்னுட்டு அங்கே சுத்தி, இங்கே சுத்தி பொருளாதார விசயத்தை தூக்கி பின்னாடி போட்டுட்டு ஓபாமாவோட அழுக்கு துணி கூடைக்குள்ளர தோண்டச் சொல்லியிருக்குதாம், மேலிடம்... :)).

//இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கும் நல்லதல்ல... அமேரிக்காவில் ஏற்படும் மாற்றங்கள் பல உலக நாடுகளையும் பாதிக்கக்கூடும்.....எனவே தேர்தல் களம் உண்மையான இன்றைய முக்கிய பொருளாதார, சுகாதார, வெளியுறவு கொள்கைகளை முன் வைத்துத்தான் இருக்கவேண்டும்....//

ஹும், அதுவும் நாம எழுதிக்கிட்ட இந்த பின்னூட்டங்கள் வால் ஸ்ட்ரீட் தெருவுக்கு வந்து பிச்சை எடுப்பதற்கு முன்பு இப்போ 700 பில்லியன் செக்கும் வாங்கி கொடுத்துட்டு திரும்பவும், பழைய விசயங்களுக்கே மெக்கையைன் பிரச்சாரம் கிளம்பிடுச்சு, இது எங்கே போயி முட்டிக்கிட்டு நிக்குமின்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

Related Posts with Thumbnails