Thursday, May 08, 2008

அமெரிக்கா வாழ் இந்தியர்களின் ஓட்டு யாருக்கு?

இந்தப் பதிவை நான் எப்பொழுதோ போட்டு வைத்திருக்க வேண்டியது, சரி எதுக்கு தேவையில்லாத வம்பு என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இங்கு சமீபத்தில் தோன்றிய சில பதிவுகள் என்னோட எண்ணங்களை பதிந்துதான் ஆக வேண்டுமென்ற சூழலுக்கு இட்டுச் சென்றதால் இதோ இங்கு.

நடக்கவிருக்கிற அமெரிக்க ஜனாதிபதி பொதுத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது எனபதனைப் பொருட்டு ஏற்கெனவே இங்கு ஒரு பதிவு பதியப் பட்டிருக்கிறது எனது அவதானிப்பின் பொருட்டு. அங்கு நான் குறிப்பிட்டபடியே தேர்தல் கலத்தில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் இருவருமே இரு வேறு தளங்களில் சொத்தையாகிப் போனதால், இந்தத் தேர்தலில் மிக எளிமையாக வெற்றி வாகை சூடியிருக்க வேண்டிய ஜனநாயக் கட்சி குடியரசு கட்சிக்கு அவ் வெற்றியை கொடுத்து விட்டு விலகிக் கொள்வதனைப் போன்று இருக்கிறது என்று எழுதியிருந்தேன் இப்படி "ஓர் கருப்பினத்தவருக்கோ, பெண் ஜனாதிபதிக்கோ அமெரிக்கா ரெடியா?."

அதில் இன்னமும் எந்த மாற்றமுமில்லை. இப்பொழுது, இந்தப் பதிவில் நான் பேச வந்த விசயம். ஹில்லரி, பெருவாரியாக பெரிய மாநிலங்களில் முதன்மைத் தேர்தலில் வெற்றியடைந்து வருவதும், அவரை எதிர்த்து நிற்கும் ஓபாமா சிறு மாநிலங்களில் கறுப்பர்கள் மைனாரிடி மிகுந்து இருக்கக் கூடிய மாநிலங்களில் வென்று வருவதும் தெரிந்ததே.

இந்நிலையில் அண்மையில் நடந்த இண்டியானா மற்றும் வட கரோலினா முதன்மைத் தேர்தலில் ஆளுக்கொரு இடமாக வென்று மீண்டும் தொடர் ஓட்டத்தை தொடர்கிறார்கள். இதில் இன்னும் 6 மாநிலங்களில் மிச்சமிருக்கிற 217 டெலிகேட்டுகளின் மூலமாக யாரையும் அரிதியிட்டு சொல்லி விட முடியாத வண்ணம் அத் தேர்தலும் அமையவிருப்பதால், அக் கட்சியிலிருக்கிற மூத்த மற்றும் சூப்பர் டெலிகேட்ஸ்களான 265 பேர் யாரைச் சுட்டிக் காமிக்கிறார்கள் என்பதனைப் பொருட்டும் யார் ஜனாதிபதி தேர்தலுக்கு கடைசியாக தேர்வாவர்கள் என்பது அமையப் போகிறது.

இது அப்படி இருக்க, முன்னமே ஹில்லரியை நம் பதிவர்கள் உள்பட அக்கட்சியில் இருக்கிற சிலரும் ஓட்டத்தை நிறுத்தச் சொல்லி வற்புருத்துகிறார்கள் ;-). இப்ப வாரேன் விசயத்துக்கு. ஆசை ஆசையா 500 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டுக் குத்து பண்ணி நாங்கதாண்டா முதல்லேன்னு கொலம்பஸ்லிருந்து ஆரம்பித்து இன்னிக்கு வரைக்கும் 75 சதவீதம் வெள்ளையர்களே அமெரிக்காவில் இருக்கிறார்கள் எனும் பட்சத்தில், அதுக்குள்ளும் அவர்களிடத்தே ஆட்களே இல்லைங்கிற மாதிரி அந்த நாட்டை ஆள ஒரு அண்மைய இமிக்ரெண்டோட பிள்ளையை நாடாள அமர்த்திடுவாங்களா, என்ன? தெரியாமத்தான் கேக்கிறேன்.

சரி, இப்ப நம்மூர் ஆட்களைக் கொண்டே கடைசியா ஓட்டும் போடும் இடத்தில் எப்படி ஓபாமாவிற்கு ஓட்டுப் பொட்டியில் என்ன கிடைக்குமென்று பார்ப்போம். நாமல்லாம் நம்மூர்லையே வர்ணம் பார்த்து வளர்ந்தவங்க, அப்படி இருக்கும் பொழுது இன்னமும் வெள்ளைக் காரங்கன்னாலே "துரை" அப்படின்னுதான் விளித்து பார்க்கிற மக்கள் மிகுந்துருக்கிற ஒரு சமூகத்தில இருந்து வந்துட்டு (தோல் சிகப்பா இருக்கிறவங்கத்தான் எல்லாத்திலும் சிறப்புன்னு - நம்மூர் விளம்பரங்களும் இன்னமும் தூக்கிப் பிடிச்சி வியாபாரம் பண்ணிட்டு இருக்கிற சூழலில் வந்த நாம) போயிம் போயிம் ஒரு கறுப்பருக்கு நாம ஓட்டு போடுவோமா ;-)? மனச தொட்டுச் சொல்லுங்க. எத்தனை பேரு போடுவீங்க?

அதுக்கெல்லாம் மேலே நாம வேற ரொம்ப கன்சர்வேடிவ் :). இந்த ஓரினச் சேர்க்கை திருமண அங்கீகரிப்பு, கருக்கலைப்பிற்கு எதிர்ப்பு, உலகம் தழுவிய தீவிர வாதிகள் அடக்கு முறைக்கு நம்மோட மன நிலைன்னு நிறைய விசயங்கல் உள்ளே வரும், இல்லையா ஓட்டு போடுறதுக்கு முன்னாடி. அப்படி இருக்கும் பொழுது உங்க ஓட்டு ஜனநாயகக் கட்சிக்கா இல்ல குடியரசுக் கட்சிக்கா?

நான் பேசிச் தெரிஞ்சிக்கிட்ட வரை இந்த புஷுன் ஈராக் போரை இங்க வாழ்ற இந்தியர்கள் நிறைய பேர் வரவேற்கிறாங்க! அதுக்கு பின்னணியா நியாயப் படுத்தி சில காரணங்களையும் சொல்றாங்க. எல்லாத்துக்கும் மேலே குடியரசுக் கட்சி ஆளுங்க அமெரிக்கர்களின் பொது நலத்தைக் கூட யோசிக்காமே தன்னோட தனிப்பட்ட லாபத்திற்காக நம்மூருக்கு வேலைகளை கண்ண மூடிக்கிட்டு அனுப்புறதும் பிடிச்சிருக்கு இங்க வாழ்ற இந்தியர்களுக்கு.

இது போன்ற காரணங்களுக்கும் மேலே குறிப்பிட்ட ஜனநாயகக் கட்சி உவப்புகளுக்கும் நம்மாலுங்க குத்தப் போறது குடியரசுக் கட்சி ஆளுங்களுத்தான் ஓட்டை.

ஏன், குடியரசுக் கட்சியே உள் நோக்கத்தோடதான் ஓபாமைவை ச்சியர் லீடீங் பண்ணி இந்த ஓட்டத்தில் ஓட வைச்சிட்டு இருக்குது, அவிங்க ரொம்ப புத்திசாலிங்க! ஹில்லரியை முதன்மையில ஒழிச்சிட்டா, இறுதித் தேர்தல்ல ஓபாமை ஒண்ணுமில்லாம பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்காதுன்னு கணிச்சி வைச்சிருக்காங்க.

அது எல்லாருக்கும் ஜனநாயக கட்சியில இருக்கிறவங்களுக்கு புரிஞ்சிருக்கான்னு தெரியலை, ஆனா அப்படித்தான் தெரியுது எனக்கு. அது அப்படி இருக்க இந்த கறுப்பினத்தவர் வேற ஓபாமாவை தன் இனத்துக்கு வந்த சேவியர் கணக்கா மற்ற வெள்ளையர்களை வெறுப்பேற்றும் வண்ணம் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், ட்டிவிக்கு முன்னால் அவர் தோன்றும் பொழுது கையை மேலே தூக்கி ஆடுவதும் கண்டிப்பாக வெள்ளையர்களின் பார்வையை ஈர்க்காமல் விடாது. அதற்கும் சேர்த்தே சாதா மெஜாரிடியும்(வெள்ளை) ஓட்டுக் களத்தில் தங்களது எண்ணங்களை பதிந்து செல்லுமென்பது எனது கருத்து.

16 comments:

Thekkikattan|தெகா said...

P.S: Truth At Times Might Burn Our Finger :-)).

இலவசக்கொத்தனார் said...

எல்லாம் சேர்ந்து ஜான் மெக்கெயினுக்கு சுலபமாக்கறாங்க. என்னாத்த சொல்ல.

மக்கள் கட்சி இல்லைங்க குடியரசுக் கட்சி.

இந்தியர்கள் எல்லாம் குடியரசுக் கட்சிக்குத்தான் சப்போர்ட் என்பது சரியான வாதம் இல்லை என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

அண்மையில் நடந்த ஓஹாயோ மற்றும் வட கரோலினா முதன்மைத் தேர்தலில் - Indiana & North Carolina?

Thekkikattan|தெகா said...

வாங்க கொத்ஸ்,

//எல்லாம் சேர்ந்து ஜான் மெக்கெயினுக்கு சுலபமாக்கறாங்க. என்னாத்த சொல்ல. //

அப்படித்தான் எனக்கும் தோணுது. இது வந்து ஜனநாயக கட்சி வெற்றிக்கு ஒரு ஈசி தேர்தல், ஆனால், இது இப்படியா போகணும்.

இருந்தாலும் யார் வந்தா என்ன, ஒரு பாரல் கச்சா எண்ணெய் 200 டாலரை நெறுங்கப் போறதை யாரும் தடுக்க முடியாது.

//மக்கள் கட்சி இல்லைங்க குடியரசுக் கட்சி.//

ஹி..ஹி... அது வந்து ஓடுற ஓட்டத்தில கொஞ்சம் ச்சூடாகி இந்தப் பதிவ எழுதிப் போட்டு ஓடிட்டேன்... சுட்டிக் காமிச்சிங்களா மாத்திட்டேன் ;).

//இந்தியர்கள் எல்லாம் குடியரசுக் கட்சிக்குத்தான் சப்போர்ட் என்பது சரியான வாதம் இல்லை என்றே நினைக்கிறேன்.//

சரியான ஆதாரங்களுடன் தான் அப்படிச் சொல்கிறேன்... நம்மூரு ஆட்களுக்கு குடியரசு கட்சிக்காரய்ங்க ரொம்ப்ப்ப்ப்ப்ப நல்லவய்ங்க :-))).

Unknown said...

//சரி, இப்ப நம்மூர் ஆட்களைக் கொண்டே கடைசியா ஓட்டும் போடும் இடத்தில் எப்படி ஓபாமாவிற்கு ஓட்டுப் பொட்டியில் என்ன கிடைக்குமென்று பார்ப்போம்.//


அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள் deciding factor ஆக இருப்பதாக நான் நினைக்க வில்லை. நிதி தேத்துவதற்கு வேண்டுமானால் அவர்கள் பயன்படலாம்!

//நாமல்லாம் நம்மூர்லையே வர்ணம் பார்த்து வளர்ந்தவங்க, அப்படி இருக்கும் பொழுது இன்னமும் வெள்ளைக் காரங்கன்னாலே "துரை" அப்படின்னுதான் விளித்து பார்க்கிற மக்கள் மிகுந்துருக்கிற ஒரு சமூகத்தில இருந்து வந்துட்டு (தோல் சிகப்பா இருக்கிறவங்கத்தான் எல்லாத்திலும் சிறப்புன்னு - நம்மூர் விளம்பரங்களும் இன்னமும் தூக்கிப் பிடிச்சி வியாபாரம் பண்ணிட்டு இருக்கிற சூழலில் வந்த நாம) போயிம் போயிம் ஒரு கறுப்பருக்கு நாம ஓட்டு போடுவோமா ;-)? மனச தொட்டுச் சொல்லுங்க. எத்தனை பேரு போடுவீங்க?//

அப்போ வெள்ளைத் தோலெல்லாம் 'தொரைமாருங்க' இல்லையா?? :)
நாம எப்பவுமே அவையடக்கத்தோட மத்தவங்களுக்கு அடிமைகளா இருப்பதைத்தானே விரும்புறோம், அரசியலால் வளர்க்கப் படுகிறோம்?

நான் சொல்றேன் பாருங்க, ஆத்தாவும் வர முடியாது, அடிமையும் வர முடியாது. நமது அடுத்த ஜனாதிபதி (அமெரிக்க ஜனாதிபதி அல்லாருக்கும் ஜனாதிபதியாமே?) மொக்கையன்...மொக்கையன்....மொக்கையன்...

சென்னையில வண்டி ஓட்டிப் பாத்துட்டா, உலகத்துல எங்கேயும் வண்டி ஓட்டலாம்னு சொல்லுவாங்க. 'புதர' ஜனாதிபதியா, அதுவும் ரெண்டு தடவ ஏத்துகிட்டவங்க, யார வேணா ஏத்துகுவாங்க :)

Santhosh said...

தெகா,
நல்ல அலசல், இந்தியர்கள் பற்றிய உங்களது கணிப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. நீங்க அவுட் சோர்ஸிங்கை பத்தி சொல்ல வந்தா இதுக்கு மேல யார் வந்தாலும் அதை தடுக்க முடியாதுன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா அது அவர்களது பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்.

எனக்கென்னவோ ஒபாமா ஜெயிப்பாருன்னு தோணுது(ஆனா இதுல சோகம் என்னானா நம்ம நினைப்பு ஒரு பொழுதும் பொழச்சது இல்ல :)) )..

Thekkikattan|தெகா said...

அண்மையில் நடந்த ஓஹாயோ மற்றும் வட கரோலினா முதன்மைத் தேர்தலில் - Indiana & North Carolina?//

Anony,

Thanks for pointing out the mistake! I have corrected the same.

சுரேகா.. said...

என்னன்னமோ சொல்றீங்க ! மொத்தத்தில் நல்லது நடந்தா சரி!

Thekkikattan|தெகா said...

வாங்க தஞ்சை!

//அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள் deciding factor ஆக இருப்பதாக நான் நினைக்க வில்லை. நிதி தேத்துவதற்கு வேண்டுமானால் அவர்கள் பயன்படலாம்!//

நானும் அந்த கோணத்திலிருந்து சொல்லவில்லை. இருந்தாலும், ஒட்டுமொத்த எண்ண குவிப்பைத்தான் இங்கே சுட்டிக்காட்ட எத்தனித்துள்ளேன். அப்படியே நீங்கள் கூறியபடி நிதி தேர்த்துவதில் எந்தப் பக்கமிருப்பவர்கள் அதிகளவில் தேர்த்தி கொடுத்துருக்கிறார்கள் என்று பார்த்தால் நான் சொல்லியதில் கொஞ்சம் உண்மையிருப்பதையும் உணரலாம்.

//நான் சொல்றேன் பாருங்க, ஆத்தாவும் வர முடியாது, அடிமையும் வர முடியாது. நமது அடுத்த ஜனாதிபதி (அமெரிக்க ஜனாதிபதி அல்லாருக்கும் ஜனாதிபதியாமே?) மொக்கையன்...மொக்கையன்....மொக்கையன்...//

நானும் அப்படித்தான் நினைக்கிறேன், அதென்ன மொக்கையன் நீங்க கொடுத்தப் பேரும் பொருந்தித்தான் போகுது ;).

இன்னிய நிலை என்ன தெரியுமா தஞ்சை, ஒரு காலன் க்கேஸ் எங்கூர்ல $3.72; பாஸ்டன் பக்கமெல்லாம் மக்கள் காரை ஓரங்கட்டிட்டு எல்லாம் ட்ரையினிலும், பேருந்துகளிலும் போக ஆரம்பிச்சசாம்... நான் கூட ஒரு மிதி வண்டி வாங்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

Thekkikattan|தெகா said...

வாரும் சந்தோஷ்,

//நல்ல அலசல், இந்தியர்கள் பற்றிய உங்களது கணிப்பில் எனக்கு உடன்பாடு இல்லை.//

கொஞ்சம் பல தரப்பு இந்திய மக்களிடம் பேசிட்டுதாம்மா நான் இங்கன வந்து சொல்றேன். அதிலும் குறிப்பா வட இந்திய மக்கள் கொஞ்சம் அதிகமாகவே பாசமா இருக்காங்க இந்த தீவிரவாத ஒழிப்பிற்கு சப்போர்ட்டா...


//நீங்க அவுட் சோர்ஸிங்கை பத்தி சொல்ல வந்தா இதுக்கு மேல யார் வந்தாலும் அதை தடுக்க முடியாதுன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா அது அவர்களது பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். //

உண்மைதான். இது ஒரு தற்காலிக நிவாரணமேயன்றி நிறந்தர தீர்வாக இருக்க முடியுமா? இங்கே அதே கார்ப்பரேட் ஆட்கள் அந்த சேவைகளை உள் நாட்டிலிருந்து வழங்கினால், வேலை செய்யும் ஊழியர்களுக்கு வழங்கும் அதிகப் படி சம்பளம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற விசயங்களுக்கு இப்பொழுது நிகழும் பொருளாதார சூழலில் முடியாதென்றே கணித்து இந்த 10 = 1(இங்கு 1 ஆளுக்கு கொடுக்கும் சம்பளத்தை உடைத்து அங்கு 10 பேரை அமர்த்தளாமென்று) ஃபார்மிலாவை துரத்திக் கொண்டு வந்து அங்கு கூடாரமிட்டிருக்கிறார்கள்.

அடுத்து வரப் போகும் "ஓபாமாவின்" இது சார்ந்தா (வந்து...அவுட் சோர்சிங்) கொள்கை எதுவாக இருக்கும்? மக்களும் இங்கும் ரொம்பவே பொறுமையாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்... தினப்படி எரிபொருள் விலையேற்றம், லே ஆஃப்ஸ், சாப்பாட்டு பொருட்களின் விலையேற்றம் என நாளொரு மேணியும் பொழுதொரு பின்னடைவாக இருந்த பொழுதும், மக்கள் முகம் கொடுத்து ரொம்ப நல்லவைங்களா இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கிறாய்ங்க, அடுத்தவரு வந்து கிழிக்கப் போறாருன்னு - பார்க்கலாம் யாரு வந்து கிழித்து நொட்டப் போறான்னு.

Jayakanthan - ஜெயகாந்தன் said...

//ஏன், மக்கள் கட்சியே உள் நோக்கத்தோடதான் ஓபாமைவை ச்சியர் லீடீங் பண்ணி இந்த ஓட்டத்தில் ஓட வைச்சிட்டு இருக்குது, அவிங்க ரொம்ப புத்திசாலிங்க! ஹில்லரியை முதன்மையில ஒழிச்சிட்டா, இறுதித் தேர்தல்ல ஓபாமை ஒண்ணுமில்லாம பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்காதுன்னு கணிச்சி வைச்சிருக்காங்க.//

போன தடவை ஜான் கேர்ரி போட்டியாளரா வந்ததே இதனால தான். அடுத்த 4-8 ஆண்டுகளில் (இந்திய வம்சாவழியினரான) பாபி ஜிந்தால் போட்டியிட்டாலும் ஆச்சரியம் இல்ல.

எது எப்படியோ அமரிக்கா இன்னும் இந்த இரண்டு புது மாநிலங்களில் (IR and AG) அதிக பணத்தை செலவழிப்பதை நிறுத்தினால் தான் இங்க பொருளாதாரம் சீர்படும்.

Thekkikattan|தெகா said...

என்னன்னமோ சொல்றீங்க ! மொத்தத்தில் நல்லது நடந்தா சரி!//

சுரேகா!

எல்லோரின் எதிர்பார்ப்பும் அதேதான். ஆனால், இப்பொழுதெல்லாம் அரசியல் வாதிகள் அவங்கவங்க சுய ஆர்வத்தின் பேரில்தான் ஒரு நாட்டையே முன்னிருத்தி எடுத்துட்டுப் போற மாதிரி இருக்கு... அங்கேதான் பெரும் பிரச்சினையும் ஆரம்பிக்குது. வரும் வருஷங்களாவது எப்படி இருக்குன்னு பார்ப்போம்.

Thekkikattan|தெகா said...

//போன தடவை ஜான் கேர்ரி போட்டியாளரா வந்ததே இதனால தான். அடுத்த 4-8 ஆண்டுகளில் (இந்திய வம்சாவழியினரான) பாபி ஜிந்தால் போட்டியிட்டாலும் ஆச்சரியம் இல்ல. //

வாங்க ஜெயகாந்தன்,

முதல் முறையா நம்ம பக்கம் வந்திருக்கீங்க இது போல வந்து போங்க.

ஜான் கெர்ரி விசத்தில நீங்க சொல்றதும் சரிதான்னு படுது. அவரை ஃப்ளிப் ஃபளாப்னு சொல்லி சொல்லியே இல்லை ஒழிச்சாங்க, கடைசியில.

இந்தியா வம்சா வழியினரும் ஜனாதிபதி தேர்தல்லேன்னு நீங்க சொல்ல வாரதும், எனக்கு குடியரசுக் கட்சியின் சாணக்கியதனம் எப்படி ஜனநாயக் கட்சியியை தேர்தலில் முறியடிப்பது என்பதின் அண்மைய கால campaign strategyயாக புரிந்து கொள்கிறேன்.

//எது எப்படியோ அமரிக்கா இன்னும் இந்த இரண்டு புது மாநிலங்களில் (IR and AG) அதிக பணத்தை செலவழிப்பதை நிறுத்தினால் தான் இங்க பொருளாதாரம் சீர்படும்.//

அதுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப் போகுறதோ. ஓ! 53 மற்றும் 54ஆக ஏற்றுக் கொண்டு விட்டார்களா :-)).

Uma said...

அர‌சிய‌ல் உள் நோக்க‌ங்க‌ளுக்கு அப்பாற் ப‌ட்டு ஒரு மேட்ட‌ர் சொல்லுங்க‌ள்.

ஒரு பெண் அங்கே குடிய‌ர‌சுத் த‌லைவ‌ராகா முடியுமா?

Thekkikattan|தெகா said...

//அர‌சிய‌ல் உள் நோக்க‌ங்க‌ளுக்கு அப்பாற் ப‌ட்டு ஒரு மேட்ட‌ர் சொல்லுங்க‌ள்.//

மீண்டும்' வந்தீங்களா :-), வாங்க, வாங்க...

பெரும்பாலும் நம்மோட மற்ற பதிவுகளையும் பார்த்தீங்கன்னா எந்தப் பக்கமும் சாயாமே முள்ளு நேரா நிற்கிற மாதிரி எழுதியிருப்பேன் - படிச்சுப் பார்த்தா பதிவுகள் உங்களுக்கே தெரியப்படுத்தும் :).

//ஒரு பெண் அங்கே குடிய‌ர‌சுத் த‌லைவ‌ராகா முடியுமா?//

நீங்க இந்தப் பதிவிலேயே இன்னொரு சுட்டியிணைத்து இருந்ததை காணவில்லையா? அதில் தெளிவாக குறிப்பிட்டுருப்பேன், குறைந்த பட்சம் ஜனநாயக் கட்சியிலாவது ஒரு பெண்ணை வேட்பாளாராக நிற்க வைத்தார்கள், அதுவும் குடியரசுக் கட்சியில் நடக்குமா என்பதே சந்தேகம்தான்...

நீங்க கேட்டதற்காக மற்றுமொன்று, இந்த குடியரசுக் கட்சியில் செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட்டாக இருக்கும் காண்டோலீசா ரைஸ்யே அப்படி ஒரு பதவியில் அமர்த்தி நாடு நாடாக அனுப்பி ஹில்லரி வருவதற்கு (நிற்கப் போகிறார் என்பதனை அறிந்துதான் போல...) முன்பு ஒரு பெண் பன்னாட்டு சபையில் எப்படி எடுபடுகிறார் என்பதனை பாருங்கள் என்று எள்ளியதைப் போலத்தான் அந்த அரசியல் பின்னணியும் எனக்கு உணர்த்தியது...

வல்லிசிம்ஹன் said...

தெ.கா,
குடியரசுக் கட்சி சாரா பாலினை நிறுத்திவிட்டது:)
ந்நேற்றுத்தான் இங்கே நடக்க்கும் நாடகங்களைப் பற்றி பதிவிட்டேன்ன்.

வெகுநாட்களுக்குப் பிறகு ஊங்கள் பதிவைப் படிப்பதில் வெகு மகிழ்ச்சி..

Related Posts with Thumbnails