Wednesday, February 06, 2008

ஓர் கருப்பினத்தவருக்கோ, பெண் ஜனாதிபதிக்கோ அமெரிக்கா ரெடியா?

உலகம் போகிற போக்கைப் பார்த்தால் இந்த வருடத்தில் நடக்கப் போகிற அமெரிக்கா தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக உலகம் தழுவிய முறையில் எதிர் பார்க்கப் படவேண்டியா ஒன்றாக இருப்பதனைப் போல உள்ளது.

இங்கு தொலைக்காட்சி பெட்டியைத் திறந்தாலே எப்பொழுதும் தேர்தல் கலத்தில் போட்டியிடும் நபர்களின் பேட்டியோ அல்லது முதன்மைச் சுற்று வாக்களிப்பதற்கு ஏதுவான பிரச்சாரங்களோதான் நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த எட்டு வருடங்களாக நம்ம தீரன் புஷுன் முகம் பார்த்து சலித்தவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு தென்றலாக தீண்டிச் செல்லவிருக்கையில், இந்த தேர்தலில் யார் வெற்றியடைப் போகிறார்கள் என்பதனைப் பொருட்டு மீண்டும் நாம் ரோலர் கோஸ்டர் ரைட் எடுக்கப் போகிறோமா இல்லை நம்ம உண்டு, நம்ம வீட்டு பொருளாதார, சுகாதார காப்பீட்டுப் பிரச்சினைன்னு கலாத்தை கடத்தப் போறமான்னு ஆர்வம் பிறீட காத்துக் கொண்டிருக்கிறார்கள், மக்கள்.



இந் நிலையில் பாருங்க ஜனநாயக கட்சியில் சொல்லிக்கிற மாதிரி ஒருத்தரும் நிக்காததாலே, நியாயமா இந்த முறை ஒரு மாறுதலுக்காகவாவது எட்டு வருட அவஸ்தையிலிருந்து தப்பித்து ஓட்டுப் போட மக்கள் ரெடியா இருந்தாலும், குடியரசுக் கட்சியிலேயே அந்த நிறமும், தேவைப்பட்டளவில் ஆண்ட்ரோஜனும் இருந்து போனதால் இந்த முறையும் அந்தக் கட்சியே வெற்றியடையும் நிலையில் இருக்கிறது.

ஜனநாயகக் கட்சியில் எப்பொழுதும் புரட்சிகரமான திட்டங்களுக்கும், அடிமட்ட மக்களின் குரலுக்கும் கொஞ்சம் மதிப்புண்டு (சர்ச் போன்ற விசயங்களை கொஞ்சம் அப்படித் தள்ளிவைத்து விட்டு அரசியல் நடத்துவார்கள் - கொஞ்சம் மனசாட்சியுடன்). ஆனால், இந்த அண்மைய போர்கள், மற்றும் வெளியுலக அதிருப்தி இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் துரதிருஷ்ட வேளையாக ஜனநாயகக் கட்சி வெற்றியடைந்து சற்றே ஆருததளிக்காமல் போவப் போவது ஒரு பலத்த பின்னடைவே, அமெரிக்காவிற்கும் உலக நாடுகளுக்கும்.

இப்பொழுது நிகழும் இந்த முதற் கட்ட தேர்தல் அங்கீகரிப்பின் படி ஓபாமாவும், ஹிலாரியும் ஜனநாயக கட்சியில் மேலோங்கி இருக்கிறார்கள். இதில் கடைசியாக யார் ஜனாதிபதிக்கு நின்றாலும் இருவருமே வெற்றியடைய வாய்ப்புகள் மிகவும் குறைவென்றே என்னால் எண்ணத்தோன்றுகிறது. காரணம் ஓபாமா - ஒரு கருப்பினத்தவர், மேலும் இசுலாமிய முன்னோர்கள் அவர்களின் வழி வந்திருப்பதாலும் மக்கள் கடைசி நேரத்தில் கணினித்திரைக்கு முன்னால் நிற்கும் பொழுது மனதை மாற்றிக் கொண்டு எதிர் தரப்பில் நிற்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மெகனைக்கு ஓட்டைக் குத்தித் தள்ளி விடுவார்கள்.

அது போலவே ஹிலாரியின் நிலையும் கடைசி நேரத்தில் ஒரு பெண் உலக அரங்கில் நின்று என்னாத்தை சாதித்து விடப் போகிறாள், என்று ஆண்ட்ரோஜன் பீறிட மக்கள் மீண்டும் மெகைனுக்கே ஓட்டைக் குத்தித் தள்ளப் போகிறார்கள். நான் இங்கு தென் கிழக்கு மகாணத்தில் இருந்து பார்த்து, பேசி வருவதொட்டும் வெள்ளைப் பெண்களே ஹிலாரியை ஒரு 'விட்ச்'ன்றே விளிக்கிறார்கள் (ஆனால், வட கிழக்கு மகாணங்களில் அப்படியே இதற்கு நேர் மாறாக இருக்கும் அதுவும் தெரியும்).

எனவே, அமெரிக்கா எல்லா தகுதியையும் கொண்ட ஒரு பெண் ஜனாதிபதியையோ அல்லது ஒரு கருப்பினத்தவரையோ (அனுபவம் கொஞ்சம் குறைவே என்றாலும் - புஷ்சே எனும் பொழுது ;) முழுதுமாக அரசாட்சியில் அமர வைக்க தயாராகவில்லை என்பது எனக்கு வெளிச்சமாக தெரிகிறது.

இந்த எட்டு வருடங்களுமே போதும் போதுமென்று ஓடித் தேய்ந்திருக்கிற நிலையில் மேலும் இன்னொரு ரிபப்ளிகன் ஜனாதிபதியை இந்த நாடும், இந்த உலகமும் தாங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கப் போகிறது வரும் நவம்பருக்குளென்று.

16 comments:

Boston Bala said...

---ஒரு பெண் ஜனாதிபதியையோ அல்லது ஒரு கருப்பினத்தவரையோ முழுதுமாக அரசாட்சியில் அமர வைக்க தயாராகவில்லை என்பது எனக்கு வெளிச்சமாக தெரிகிறது.---

எனக்கும் அப்படிதான் படுகிறது

Unknown said...

அலோ, இதெல்லாம் சரியில்லை. அது எப்படி நான் எழுத நெனைசதையே நீங்க முந்திகிட்டு எழுதிட்டீங்க? :)

போற போக்கைப் பாத்தா, மெக்கைன் வந்து இன்னும் ஒரு 8 வருஷத்துக்கு இம்சையக் கூட்டுவாருன்னுதான் தெரியுது. என்னதான் வெளில சம உரிமை, புண்ணாக்குன்னு பேசுனாலும், ஒரு கருப்பனையோ, பெண்மணியையோ தலைமைக்கு அனுப்பும் பக்குவம் இன்னும் அமெரிக்கர்களுக்கு வர வில்லை! வந்திருந்தால் சந்தோசம்தான்.

அதே சமயத்தில், ஒபாமாவும் நான் கருப்பன் இல்ல வெள்ளக்காரனாக்கும்னு தல கீழதான் நின்னுப் பாக்குறாரு. நம்ம ஆளுங்க செல பேரு அமெரிக்கா வந்தவுடனே, பிரெஞ்சு தாடியும், பேர மாத்தியும் வச்சுகுற மாதிரி :)

காட்டாறு said...

அரசியலில் நான் முட்டை.. ஆனாலும் கண்டதும், கேட்டதும் வச்சி என்னோட சின்ன அபிப்பிராயத்தை சொல்லிட்டு போறேனுங்கோவ்...

அமெரிக்கா என்ன தான் முன்னேறியிருந்தாலும், ஒரு சில விஷயங்களில் பின்தங்கி இருக்குதுன்னுன்னு ஒத்துக்கனும் தான். ரைஸ் செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட்டா வந்தப்பவே சில முணுமுணுப்பு இருந்தது தெரிந்ததே. இதிலே கிளிண்டனால் அடிவாங்கிய அம்மணி எப்படின்னு கொஞ்சம் பேச்சு எங்க பக்கங்களில் அடி படுது. கறுப்பினம் பத்தி வெளிப்படையா யாரும் பேசாத போதிலும் எனக்கென்னவோ திடீருன்னு மக்களுக்கு ஃபார்வர்டு திங்க்க்கிங் வருமின்னு தோணலப்பா... அதே சமயத்திலே புஷ் மேல உள்ள ஃப்ரஸ்ட்ரேஷன் இன்னும் அதிகமா இருப்பதால சான்ஸ் ஒபாமாவுக்கு இருக்குதுன்னும் தோணுது.

Thekkikattan|தெகா said...

வாங்க பாஸ்டன் பாலா,

நீங்களும் அதே கணிப்பிலதான் இருக்கீங்களா? இருந்தாலும், கொஞ்சம் scary concept thinking of another republican president, huh?

Thekkikattan|தெகா said...

தஞ்சாவூரான்,

அது எப்படி நான் எழுத நெனைசதையே நீங்க முந்திகிட்டு எழுதிட்டீங்க? :)//

அப்படி மட்டும் நடக்கிற மாதிரி எனக்கு ஒரு பவர் கிடைச்சிச்சின்னு வைச்சிக்கங்களேன், தமிழ்மணத்தில நான் தான் :))...

//நம்ம ஆளுங்க செல பேரு அமெரிக்கா வந்தவுடனே, பிரெஞ்சு தாடியும், பேர மாத்தியும் வச்சுகுற மாதிரி :)//

:)), நீங்க இதனைப் பத்தி ஒரு பதிவு போடுறீங்க... நான் அங்கே வந்து சிரிச்சிட்டுப் போறதுக்கு... எப்ப போடப் போறீங்க...

இன்னும் 8 வருஷத்திற்கு மெக்கைன் இம்சையா... ம்ம்..ம்ம் நினைச்சுப் பார்க்கவே பயம்ம்மா இருக்குது :(.

Anonymous said...

//கடைசி நேரத்தில் கணினித்திரைக்கு முன்னால் நிற்கும் பொழுது மனதை மாற்றிக் கொண்டு எதிர் தரப்பில் நிற்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மெகனைக்கு ஓட்டைக் குத்தித் தள்ளி விடுவார்கள்//

அட, அப்படியா சொல்றீங்க? இதுவரை ஏதாவது ஒபினியன் போல் இதுபற்றி வெளி வந்திருக்கிறதா?

Thekkikattan|தெகா said...

வாங்க ஆறு,

கறுப்பினம் பத்தி வெளிப்படையா யாரும் பேசாத போதிலும் எனக்கென்னவோ திடீருன்னு மக்களுக்கு ஃபார்வர்டு திங்க்க்கிங் வருமின்னு தோணலப்பா...//

அதெல்லாம் மாற இன்னும் ஆண்டுகள் பிடிக்குமின்னு நினைக்கிறேன்... இருந்தாலும் இந்த தேர்தல் நிறைய அமெரிக்கா பற்றிய உலகளாவிய எண்ணங்களை மாற்றுவதற்கு அடிகோலிடும் வகையில் அமைவதாக உள்ளது, பார்ப்போம் எப்படி மக்கள் தங்களது எண்ணங்களை ஓட்டுப் பதியும் கணினியில் பதிகிறார்கள் என்று...

//அதே சமயத்திலே புஷ் மேல உள்ள ஃப்ரஸ்ட்ரேஷன் இன்னும் அதிகமா இருப்பதால சான்ஸ் ஒபாமாவுக்கு இருக்குதுன்னும் தோணுது.//

அப்படி நடந்திட்டா நல்லாத்தான் இருக்கும்... விடுவாங்களா மக்கள் :)

மங்கை said...

அரசியல்ல நானும் முட்டை இல்ல மைனஸ்..

இருந்தாலும் இது வரைக்கும் பேசினவங்க இது தான் சொல்றாங்க.. ப்ரு பெண் வர்ரது அமெரிக்காவுல கஷ்டம் தான்னு...

என்ன தான் இருந்தாலும் (இந்தியர்கள்) எங்களை மாதிரி வருமா?
:-))

Thekkikattan|தெகா said...

//அட, அப்படியா சொல்றீங்க? இதுவரை ஏதாவது ஒபினியன் போல் இதுபற்றி வெளி வந்திருக்கிறதா?//

அனானி,

நல்ல கேள்வியாத்தான் கேட்டு வைச்சிருக்கீங்க...இதுவரைக்கும் எங்கும் இது போன்ற எண்ணத்தை படிச்ச மாதிரி தெரியலை. ஆனால், இதுவே வெள்ளையர்களின் சைக்கிக்காக இயங்கும் என்ற அடிப்படை புரிதலின் பேரில் இங்கு நான் பதிஞ்சு வைச்சிருக்கேன்... பொய்த்துப் போகலாம், பொறுத்திருந்து பார்ப்போம் :-).

சரண் said...

60% அமெரிக்க மக்கள் ”போரை எதிர்க்கிறோம்” என்று சொல்வதின் உண்மையான அர்த்தம்: “எங்களுக்கு எதிரான போரை எதிர்க்கிறோம்” என்பது. அமெரிக்கர்களுக்கு இன்னும் உலகை ஆளலாம், எல்லொரையும் மிரட்டி எண்ணை எடுக்கலாம் என்ற குருட்டு நம்பிக்கை உள்ளது. இங்கு உள்ள MSM 24/7 அந்த எண்ணத்தை ‘எண்ணை' ஊற்றி வளர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் McCain, Hillary போன்றோர்க்கு ஓட்டுக்கள் விழுகின்றன. நம்ம தலைவர் சொன்ன மாதிரி Mccain/Hillary ஆட்சிக்கு வந்தால் “அமெரிக்காவை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தனும்”

Thekkikattan|தெகா said...

மங்கை,

முட்டை, மைனஸ்னு சொல்லிக்கிட்டே பெரிய பெரிய விசயமெல்லாம் ரத்தினச் சுருக்கமா வந்து சொல்லியிருக்கீங்க... :))

//என்ன தான் இருந்தாலும் (இந்தியர்கள்) எங்களை மாதிரி வருமா?
:-)) //

ஆமாம, ராஜா பாடினது மாதிரி.... தந்தனனா, தந்தா... "செர்க்கமே என்றாலும்ம்ம்ம்... அட நம்மூரு போல..." எல்லாமே ஸ்டாம்ப் தானே... நம்ம 'ஜெ' அம்மா மட்டும் இங்க இருந்தா எப்பவோ ஜனாதிபதியா ஆகியிருப்பாங்க ;).

இலவசக்கொத்தனார் said...

http://domesticatedonion.net/tamil/?p=732

இங்க சுவாரசியமான கருத்துக்கள் சில இருக்கு பாருங்க. நீங்க சொன்ன மேட்டரைத்தான் நான் என் பின்னூட்டமாச் சொல்லி இருக்கேன்.

Anonymous said...

//மேலும் இன்னொரு ரிபப்ளிகன் ஜனாதிபதியை இந்த நாடும், இந்த உலகமும் தாங்குமா?//

ஏன் இப்படிக் கூறுகிறீர்கள்?

இனிவரப்போவது யாராயிருந்தாலும்
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழியப் போவதில்லை என்பதாலா?

விளக்குங்களேன்.

Boston Bala said...

தெகா...
US President 08 கூட்டுப்பதிவில் நீங்களும் இணைந்து அவ்வப்போது செய்திகளை, எண்ணங்களைப் பதிந்து வர வேண்டும்.

இயலுமானால், மின்னஞ்சல் அனுப்புங்களேன்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஆயினும் சர்வதேச மீடியாக்களில்(இங்கு சீங்கப்பூரின் செய்தி ஊடகங்களிலும் கூட) ஒபாமா வர வாய்ப்ப்பிருப்பதாகக் கருதுகிறார்களே...
எனது நண்பன்(அமெரிக்க வாசி இப்போது) ஹிலாரிதான் என்று கூறுகிறான்..
ஆனால் இங்கு பின்னூட்டமிடுபவர்கள் அனைவரும் மெகைன் பக்கம் இருப்பார்கள் போலிருக்கிறது..
personal ஆக , நான் ஒபாமா அல்லது ஹிலாரி-என்றே கருதுகிறேன்.

Anonymous said...

இந்த தேர்தல் நடக்காது,அதற்கு முன்பு புஷ் காலி அதன் தொடர் நிகழ்வுகள் அதனை உறுதி செய்யும்.
அனேகமாக ஜூன் அல்லது ஜூலை

Related Posts with Thumbnails