Thursday, February 14, 2008

Valentine's Day - ஏன் நடிக்கணும்?

இந்தக் கட்டுரை நம்மூரை நினைவில் கொண்டே எழுதப் பட்டது. இதனில் உண்மையாக தன் நேசிக்கும் ஒருவரை மணம் முடிக்க எண்ணி வியர்வை சிந்தும் நல்ல உள்ளங்கள் இந்தக் கட்டுரைச் சாடலிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஏனையதுகளுக்கு இந்தக் கட்டுரை ஒரு அவசியமான வாசிப்பாக அமைய வாய்ப்புண்டு.

தினகரனில் நான் படித்த விழுப்புரம் அருகே காதலன் வீட்டு முன் அமர்ந்து விடிய விடிய காதலி தர்ணா போன்ற போராட்டக் காதல்களுக்கு முன்னாலும், சில சமயத்தில் வீட்டு மிரட்டல்களையும் மீறி திருமணம் முடித்துக் கொண்ட நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஹானர் கொலை (Honor Killing) போன்றே இங்கும் அது போலவே கண்டுபிடித்து உயிரோடு எரிக்கவும் துணியும் நிலையிலும், நன்றாக மூன்று, நான்கு வருடங்கள் ஒளிந்து மறைந்து கடலை வறுத்து, ஸ்பரிசம் உணர்ந்து திடீரென்று ஒரு நாள் காதலிக்கும் ஆண் மகனோ அல்லது அந்தப் பெண்ணோ நெஞ்சில் மாஞ்சா இல்லாமல் உருவிக் கொண்டு போவதைக் கொண்டும், ஒரு படி மேலேச் சென்று தன்னை விரும்பியவனையே நம்பிச் செல்லும் ஒரு சில பெண்களை வசதியாக ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி விட்டு தூக்கியெறிஞ்சிச் செல்லும் அவல நிலைக்கு முன்னாலும், நம்மூர் "வாலண்டைன்'ஸ் டே"ஒரு ஏமாற்று நாளாகத்தான் எனக்குப் படுகிறது.

இன்னும் போக வேண்டிய தொலைவை எங்கோ வைத்துக் கொண்டு எதற்காக இந்தப் பகட்டு, நாங்களும் உலகளவில் வளர்ந்து விட்டோமென்று தொலைகாட்சிகளில் நடித்துக் காட்டிக் கொள்வதற்காகவா இந்த நாள்? அல்லது வியாபாரத் தந்திரம் தெரிந்த பெரிசுகள் வைக்கும் விளக்கின் கீழ் விழும் விட்டில் பூச்சிகளாக இருப்பதற்காகவா? எதற்காக நீங்கலெல்லாம் இந்த வாலண்டைன்'ஸ் டே கொண்டாடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?

ஓவ்வொரு வருடமும் இந்தத் தொலைகாட்சிகளின் பேனை பெருமாளாக்கும் தனத்தால் வெகுண்டெழுந்து எழுத வேண்டுமென்று நினைத்து நினைத்து தள்ளிப் போட்டதை இந்த வருடம் கடைசியாக எழுதலாமென்று எழுதவும் செய்தாகிவிட்டது.

எனக்கு நம்மூர் சிறுசுகள், அதாவது இந்த விடலைகள் முப்பதுக்குள் இருப்பவர்களும் இதற்குள் அடக்கம் தான். ஏனெனில் அந்த வயதிலும் இன்னமும் ஒருத்தியை காதலிப்பதாக அழைத்துக் கொண்டு திரிபவர்கள், அதற்கென நாள் நெருங்கும் பொழுது எங்க அம்மாவும், அப்பாவும் என் பிணத்தின் மீது ஏறிப் போயி அவ கழுத்தில தாலியைக் கட்டுன்னு சொல்லி மிரட்டுறாங்கன்னு சொல்லிட்டு கடைசி நிமிட்ல அப்பீட் ஆகிக்கிறது பெரும்பான்மையா நடக்குதுன்னா, இவர்களை விடலைப் பசங்க லிஸ்ட்ல சேர்க்கலாமில்லையா?

எத்தனை கலப்புத் திருமணங்கள் இந்தியாவில் தினந்தோறும் நடந்தேறுகிறது, அதிலும் இந்த ஜாதி, மத, இனத் தொடர்பான வெட்டுக் கொத்து, ஆட் கடத்தல் போன்றவைகள் இல்லாமல்? உண்மை நிலை இப்படியாக இருக்க, எதற்காக தெரிந்தே இந்த ஏமாற்றுத் தனம், அதாவது என்னுயிர் உன்னிடத்தில், உன்னுயிர் என்னிடத்தில் என்றுக் கூறி நாட்களை இந்த ஒரு உயிர்ப்பூ நிலையில் வைத்தற்கோரி தற்காலிகமாக நகர்த்தும் ஏமாற்றுத் தனம். இங்கு ஏமாற்றுத் தனம் என்றழைக்கக் காரணம் அந்த உறவில் ஈடுபட்டிருக்கும் இருவருக்குமே தெரிகிறது, இது இறுதி நிலையை அடையப் போவது கிடையாது என்று அறிந்தே இருவரும் ஒரு வரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு நடித்தித் திரிவதற்கு வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்.

இதற்கு எதற்கு வெள்ளைகாரத் துரைகள் தன் காதலியினடத்தே அல்லது தன் மனைவியிடத்தே பக்குவமாக, உண்மையாகவே காட்டப் பயன் படுத்தும் ஒரு நாள் உங்கள் கைகளில் ஒரு ஏமாற்றுத் தினமாக? ஒரு பெண்ணையோ அல்லது ஒரு ஆணையோ விரும்பவதற்கு முன்னால் உன் பின்புலத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டாயா - எது போன்ற மக்களை உனது குடும்பம் பெற்றிருக்கிறது, அருவாக் கலாச்சாரம் கொண்டதா, மத, ஜாதி பித்து பிடித்திருக்கிறதா அல்லது உன் நலமே எங்களின் நலமென்ற பண்பாடு கொண்ட குடும்பமா?

அப்படி இல்லாதப் பட்சத்தில் உனது மனத் தைரியத்தை கேள்வி நிலைக்கு இட்டுச் சென்றாயா - எந் நிலையிலும் எல்லா பிரச்சினைகளையும் சந்திக்க தயாராகி விட்டோமா, எனது சமூக, பொருளாதார, மனப் பக்குவம் பின்னால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும் பொருட்டு எனது மன நிலை என்னவாகா இருக்கிறது போன்ற கேள்விகள் கேட்டறிந்திருக்கிறாயா? இது போன்ற நிலையில் ஆக்கப் பூர்வமான போராட்டத்திற்கு தயாராகமல் தன்னை அதற்கு ஒரு தகுதியானவனாக ஆக்கிக் கொள்வதற்கு முன்னர் எதற்கு இப்படி ஒருவரை ஒருவர் ஏப்ரல் ஃபூல் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

பதிவர் தஞ்சாவூரானின் பரவாக்கோட்டையில் வாலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள்! என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் நம்மூர் காதலர்(!?)களுக்கு ரொம்பவே பொருந்தும். அந்தப் பின்னூட்டம் கீழே:

Thekkikattanதெகா said...

... //ஆனா, எதையுமே அறைகுறையாகப் புரிந்துகொண்டு பந்தா காட்டும் நமது நாட்டில்.....???//

இன்னமும் இந்தியாவில் இந்த காதல் திருமணங்கள் என்பது ஃபாண்டஸி நிலையிலயே தேக்கமுற்றுப் போனதால்தான் அதன் பொருட்டே கச்சடா திரைக்கதைகளைக் கொண்டு கதைச் சொல்லி சினிமா உலகம் காசு பார்த்துக் கொண்டுள்ளது. இந் நிலையில் இந்த மேற்கத்திய "வாலண்டைன்ஸ் டே" வியாபாரம் கூடக் கொடி கட்டிப் பறக்கலாம் அங்கே. காரணம், ஃபாண்டஸி நிலையில் எல்லாமே அழகாகத்தான் இருக்கும்...

ஆக மொத்தத்தில் இவனுங்களுக்கு (காதலிக்கிறவங்களுக்கு) உண்மையான guts இருந்தால் காதலிப்பவளையே கரம் பிடித்து பிறகு இன்று இந்த ஃபாண்டஸி நிலையில் செய்வதை தொடரட்டும் நான் ஒத்துக் கொள்கிறேன், இவனுங்க a real gutsy guys என்று. அதுவரைக்கும் இது ஒரு பேத்தல், "ஏப்ரல் ஃபூல் டே," to pacify eachother... shame on them...!

28 comments:

தஞ்சாவூரான் said...

தெகா, மறுபடியும் சூடாய்ட்டீங்க போல?? :)

நீங்க சொன்ன மாதிரி, இப்ப உள்ள பெரும்பாலான காதல்கள் வெளிப்பகட்டாத்தான் இருக்கு. தேறாமப் போன சினிமாவும், இன்ன பிற ஊடகங்களும் காதல் என்ற வார்த்தையை வெறும் பணத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டு இருக்குறாங்க.

//இன்னும் போக வேண்டிய தொலைவை எங்கோ வைத்துக் கொண்டு எதற்காக இந்தப் பகட்டு, நாங்களும் உலகளவில் வளர்ந்து விட்டோமென்று தொலைகாட்சிகளில் நடித்துக் காட்டிக் கொள்வதற்காகவா இந்த நாள்? அல்லது வியாபாரத் தந்திரம் தெரிந்த பெரிசுகள் வைக்கும் விளக்கின் கீழ் விழும் விட்டில் பூச்சிகளாக இருப்பதற்காகவா?//


இந்தமாதிரி தினங்கள் எல்லாம் வெறும் வியாபார தந்திரிகளின் உத்திகள். எவன் குடி எப்பிடிப் போனால் என்ன, எனக்குப் பணம் வரனும் என்பதான அமெரிக்கக் கண்ணோட்டத்தின் தாக்கம். இதே மாதிரிதான், பொங்கலைக் கொண்டாடாதவன், Hஅலோவீன் கொண்டாடுறான். அம்மா, அப்பாவை மதிக்கத் தெரியாதவன், மதர்ஸ்/பாதர்ஸ் டே கொண்டாடுறான். இப்பிடி டே கொண்டாடுறவன் ஒரு நாள் கூத்து முடிந்தவுடன், கடை காலியானவுடன், எல்லாத்தையும் மறந்துடுறான்...அடுத்த டே வரும்வரை!

உங்கள் கோபம் ஞாயமானதுதான். புரியிற மண்டைகளுக்குப் புரியனுமே :)

துளசி கோபால் said...

நேத்து,இங்கே எடுத்தக் கருத்துக் கணிப்பின்படி 63% ஆளுங்க சொன்னது வாலண்டைன் டே ஒரு ரிப் ஆஃப்ன்னுதான். கடைக்காரர்கள்
செய்யும் வியாபாரத்தந்திரம்னு மக்கள் அபிப்பிராயப்படறாங்க.

ஆனாலும் என்ன? வியாபாரம் கன ஜோர்தான்(-:

வவ்வால் said...

தெகா,

வாலண்டைன்ஸ் டே என்பதே ஒரு சந்தைப்படுத்துதலின் உத்தி தானே, முட்டாப்பசங்க எதை சொன்னாலும் தலைய ஆட்டுவாங்களே.

நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் சரியே, அதே சமயத்தில் தடை போடும் அளவுக்கு பிற்போக்கும் வேண்டாம், மக்களுக்கு புரிய வைக்கணும், நல்ல ஆசிரியர் போல அதை விட்டு காவிக்கோஷ்டி போல வன்முறை தேவை இல்லை.

இப்போலாம் காதலி வைத்திருப்பது, அவன் பைக், கார் வைத்திருக்கான் நானும் வைத்திருப்பேன் என்பது போல தான்.

நீங்கள் இந்த வசனத்தை கல்லூரி மாணவர்கள் பேசுவதை அடிக்கடி கேட்டிருக்கலாம், "சப்பை பையன் அவனுக்குலாம் பிகர் மாட்டிக்கிது, நமக்கு ஒன்னும் மாட்ட மாட்டேங்குதே மாமு என்பார், அவன் நண்பன் , மாமு அதுக்குலாம் துட்டு செலவு பண்ணனும், நீயே ஓசி காஜா அடிப்பேன்னு சொல்வாங்க!

இம்ப்புட்டுத்தான் கர்ள் பிரண்டு வைக்கும் மகாத்மியம் :-))

சுரேகா.. said...

விளாசியிருக்கீங்க அண்ணா!


காதல்ங்கிறது ஒரு விதமான பசின்னு

விதி ன்னு ஒரு படத்துல சொல்லிக்கொடுத்திருக்காங்க!அதுனால நம்ம பசங்க அதை பின்பற்றுரானுங்க!

காதலிக்கிற(?) 2 பேருக்குமே தெரியும் ! ஊரை ஏமாத்துறோமுன்னு! ஆனா இதுங்க உண்மையாவே ஒண்ணு சேரணுமின்னு லூசுத்தனமா சாமிய வேண்டிக்கிட்டு திரியும் ஒரு குரூப்பு!

மொதல்ல....சினிமா எடுக்க வர்றவுங்ககிட்ட..காதல் பத்தி எடுக்கமாட்டேன்னு சத்தியம் வாங்கிக்கிட்டு விட்டாத்தான் சரியாவரும் :)

நவன் said...

valentine's day வெளிநாடுகளில் fantasy ஆகவும் நம்மூரில் பகட்டுக்காகவும் கொண்டாடப்படுவது அதை அறிமுகம் செய்த பாதிரியாரின் துரதிர்ஷ்டம் என்று தான் தோன்றுகிறது. அதற்காக காதலர் தினம் கொண்டாடக் கூடாதா என்ன?

நாமக்கல் சிபி said...

//உங்கள் கோபம் ஞாயமானதுதான். புரியிற மண்டைகளுக்குப் புரியனுமே :)
//

Repeatey!

Thekkikattan|தெகா said...

தஞ்சாவூரான்,

//தெகா, மறுபடியும் சூடாய்ட்டீங்க போல?? :)//

என்ன பண்றது நினைச்சாலே பொங்கிட்டு வருது, அதான் சூடு ஏறி ஏறி இறங்குது :).

//தேறாமப் போன சினிமாவும், இன்ன பிற ஊடகங்களும் காதல் என்ற வார்த்தையை வெறும் பணத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டு இருக்குறாங்க. //

இதற்கு பின்புலத்தில் இருப்பது நான் கூறிய அதே உளவியல் காரணம்தான் - ஃபாண்டஸி. இதுவே சமூகம் பரவலாக காதல் திருமணங்களை ஊக்குவித்து, காதல் செய்பவர்களும் சீரியசாக அதனை எடுத்துக் கொண்டு நடந்திருந்தால் குப்பை படங்களுக்கும், காதலிப்பாக சொல்லிக் கொள்பவர்களும் இப்படி ஒளிந்து மறைந்து தள்ளிக் கொண்டும் திரிய வேண்டிய அவசியமிருந்திருக்காது.

எல்லா நிலைகளிலுமே கலப்படம் நிகழ்ந்து விட்டது, வெளிப் பூச்சிற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லத் தயாராகவும் ஒருவருக்கு ஒருவர் 'சூப்' கொடுத்துக் கொள்ளவும் அஞ்சாமல்... :(

//அம்மா, அப்பாவை மதிக்கத் தெரியாதவன், மதர்ஸ்/பாதர்ஸ் டே கொண்டாடுறான். இப்பிடி டே கொண்டாடுறவன் ஒரு நாள் கூத்து முடிந்தவுடன், கடை காலியானவுடன், எல்லாத்தையும் மறந்துடுறான்...அடுத்த டே வரும்வரை!//

:)). இருக்கும் போதே கழுவுலேற்றி விட்டு இறந்ததிற்குப் பிறகு அவர்களின் மிதியடியை வைத்து பூஜை செய்யும் வெளி வேஷமும் இருக்கிற வரைக்கும் இது போன்ற நாட்கள் அவர்களுக்கு அவசியமே!!

delphine said...

தெகா.. நல்ல ஒரு கேள்வி...வேலண்டைன்ஸ் டே ஒரு வியாபார உத்தியாகவும் இருக்கலாம்/. whatever...
உண்மையான காதல், அன்பு என்பது இப்படிபட்ட நாட்களுக்கு அப்பால் பட்டது என்பது என்னுடைய கருத்து.

Thekkikattan|தெகா said...

வாங்க துள்சிங்க,

//ரிப் ஆஃப்ன்னுதான்//

ஓ! அங்கேயும் அப்படித்தான் விளிக்கிறாங்களா :-)) சரியாப் போச்சுப் போங்க.

எல்லாமே காசாப் போச்சே... இதில இந்தக் காதல்ங்கிற விசயமும் மாட்டிக் கிட்டு வியாபாரம் கலை கட்டி பறக்குது... காதல் என்ன பாவம் பண்ணுச்சோ :))).

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

சந்தைப் படுத்துதலின் ஒரு பகுதிதான், சந்தேகமே இல்லை.

//அதே சமயத்தில் தடை போடும் அளவுக்கு பிற்போக்கும் வேண்டாம், மக்களுக்கு புரிய வைக்கணும், நல்ல ஆசிரியர் போல அதை விட்டு காவிக்கோஷ்டி போல வன்முறை தேவை இல்லை.//

நான் சொல்ல வந்ததே வேற கோணத்தில ;). நான் நேரடியாக இந்தக் காதலிக்கிறதா சொல்லிக்கிட்டு திரியறவனுங்களுக்கு ஒரு சில ச்சூடான கேள்விகளை முன் வைத்தேன்.

//இப்போலாம் காதலி வைத்திருப்பது, அவன் பைக், கார் வைத்திருக்கான் நானும் வைத்திருப்பேன் என்பது போல தான்.//

இந்த ஃபார்மிலாவில் இயங்குபவர்களுக்குத்தான் இந்தப் பதிவை காணியாக்கியிருந்தேன் ;).

வவ்வால் said...

தஞ்சாவூரார்,
//இதே மாதிரிதான், பொங்கலைக் கொண்டாடாதவன், Hஅலோவீன் கொண்டாடுறான். //

நீங்க வேற பொங்கல் கொண்டாடின நாட்டுப்புறத்தான் ஆகிடுவாங்களே, அதுவே ஹாலோவீன் கொண்டாடின நவ நாகரீக(கோமாளி) மனிதன் ஆகிடுவாங்களாம்.

பொங்கல் தமிழர் பண்டிகையே இல்லைனு சொல்றவங்க அதிகம் நடமாடுற இடம் இது (சம்பந்தமே இல்லாம அன்னிக்கு கறிச்சோறு சாப்பிட மாட்டாங்க ,அப்போ அது தமிழர் பண்டிகை இல்லை சொல்வாங்க), பார்த்து சூதனமா இருந்துக்கோங்க :-))

தஞ்சாவூரான் said...

வவ்வால்,

//நீங்க வேற பொங்கல் கொண்டாடின நாட்டுப்புறத்தான் ஆகிடுவாங்களே, அதுவே ஹாலோவீன் கொண்டாடின நவ நாகரீக(கோமாளி) மனிதன் ஆகிடுவாங்களாம்.//

உழவுசெய்து ஊர்வாழ வைப்பவன் கொண்டாடினால், அது நாட்டுப் புறத்தான் பண்டிகையாமா? அவனுங்க சேத்துல காலை வைக்கலேன்னா இவனுங்க சோத்துல கைய வைக்க முடியாதுங்குறத மறந்துட்டுதான் அப்பிடி பேசுறாங்க.

//பொங்கல் தமிழர் பண்டிகையே இல்லைனு சொல்றவங்க அதிகம் நடமாடுற இடம் இது (சம்பந்தமே இல்லாம அன்னிக்கு கறிச்சோறு சாப்பிட மாட்டாங்க ,அப்போ அது தமிழர் பண்டிகை இல்லை சொல்வாங்க), பார்த்து சூதனமா இருந்துக்கோங்க :-))//

அவங்களெயெல்லாம் பொறந்தள்ளுங்க. தமிழன் உழைப்பவன். உழைப்பவன் விவசாயி. விவசாயியின் பண்டிகை பொங்கல். உழைக்கிற விவசாயி யார் வேணா கொண்டாடலாம். உழைக்கிறவன் கறிச்சோறு சாப்பிடலன்னா நாம என்ன பண்ணமுடியும்?

Thekkikattan|தெகா said...

சுரேகா,

//காதல்ங்கிறது ஒரு விதமான பசின்னு
விதி ன்னு ஒரு படத்துல சொல்லிக்கொடுத்திருக்காங்க!அதுனால நம்ம பசங்க அதை பின்பற்றுரானுங்க!//

அட அதுவும் அப்படியாடா? ஒரு காலத்தில மைக் கட்டி எப்பப் பார்த்தாலும் படக் கதையை ஓட்டிச் சொல்லி கொடுத்திருக்காங்கல்லை, மறந்தே போச்சுப் போ!

//மொதல்ல....சினிமா எடுக்க வர்றவுங்ககிட்ட..காதல் பத்தி எடுக்கமாட்டேன்னு சத்தியம் வாங்கிக்கிட்டு விட்டாத்தான் சரியாவரும் :)//

:)) இப்படி ஒரே அடியா அவிங்க பொழப்புக்கே ஆப்பு வைச்சா எப்படி...

சரி, அந்த இயக்குனர்களில் எத்தனைப் பேர் நம்ம வைரமுத்து சொன்னது போல் "காதலித்துப் பார்த்திருப்பார்கள்" அதன் சுகத்தையும், வலியையும் அனுபவித்துப் பார்த்திருக்க ;).

குசும்பன் said...

செம ஹாட்டு!!!

Thekkikattan|தெகா said...

நவ்ன்,

//valentine's day வெளிநாடுகளில் fantasy ஆகவும் நம்மூரில் பகட்டுக்காகவும் கொண்டாடப்படுவது அதை அறிமுகம் செய்த பாதிரியாரின் துரதிர்ஷ்டம் என்று தான் தோன்றுகிறது. அதற்காக காதலர் தினம் கொண்டாடக் கூடாதா என்ன?//

சொல்வதனைப் பார்த்தால் இங்கேயே திரிந்து, நீர்த்துப் போன ஒன்றை அதன் இறுதி கட்டத்தில் நாம் புரிந்து கொண்டு மிகச் சரியாக எதற்காக பயன் படுத்த வேண்டுமோ அதற்காக பயன் படுத்துகிறோமென்பதனைப் போல உள்ளது. எப்படியோ எஞ்சாய் மாடி!! :)).

Thekkikattan|தெகா said...

நாமக்கல் சிபி,

நன்றிங்கோவ்...

டாக்டர்,

//தெகா.. நல்ல ஒரு கேள்வி...வேலண்டைன்ஸ் டே ஒரு வியாபார உத்தியாகவும் இருக்கலாம்.//

இருக்கலாமென்னா... அதே தான் ;).

//whatever...உண்மையான காதல், அன்பு என்பது இப்படிபட்ட நாட்களுக்கு அப்பால் பட்டது என்பது என்னுடைய கருத்து.//

உங்க வயதிற்கும் நீங்கள் நடந்து வந்த அதே காதல் பாதையில் எது நல்லது எது கெட்டதென்று நன்றாகவே பட்டறிந்து கூற முடியும். நீங்க சொன்னாச் சரியாகத்தான் இருக்கும்.

Thekkikattan|தெகா said...

குசும்பன்,

நம்ப பதிவுகள் பக்கமெல்லாம் வருவதுண்டா... :)?

மங்கை said...

மீடியா பண்றது தான தெகா எல்லாம்
'காதலிப்பவர்களுக்கு'' நித்தமும் காதலர்கள் தினம் தான்..:-))

நவன் said...

// சொல்வதனைப் பார்த்தால் இங்கேயே திரிந்து, நீர்த்துப் போன ஒன்றை அதன் இறுதி கட்டத்தில் நாம் புரிந்து கொண்டு மிகச் சரியாக எதற்காக பயன் படுத்த வேண்டுமோ அதற்காக பயன் படுத்துகிறோமென்பதனைப் போல உள்ளது. எப்படியோ எஞ்சாய் மாடி!! :)) //

அப்படியேதான்!

ஏதோ என்னால முடிஞ்ச சமூக சேவையா நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுப்பதுண்டு காதலர் தினங்கிறது பிகர கரெக்ட் பண்றதுக்கு மட்டுமில்ல கழட்டி விடாமலும்
இருக்கணும்கிறதுக்குத்தான்னு :)

என்னது நான் maddy யா? இந்தக் குசும்புதானே வேணாங்கிறது :0

அரசன் said...

Valentine என்கிற தனிப்பட்ட மேற்கத்திய முனிவனின் (?) தொடர்பை அகற்றிவிட்டு, இது காதலுக்கான தினம் என்கிற பார்வையில் பார்க்கும் போது - இந்தியாவில் இந்த நாள் வழக்கத்தில் இல்லாதது வியப்பாகத் தான் இருக்கிறது.

இந்தியாவில் இல்லாத காதல் நினைவுகளா ? காதலுக்கும் ஒரு கடவுள் - மன்மதன். கண்ணனின் லீலைகள் என்ற பொதுவான கருத்தில் எத்தனைப் பாடல்கள்? எத்தனை பாசுரங்கள்? கடவுளிலிருந்து காமசூத்திரம் வரை திரும்பிப் பார்த்தால் காதலும் களியாட்டமும் தான். காதலுக்கான மகத்தான நினைவகம் தாஜ்மஹால் நம் நாட்டில் தானே?

பொங்கல், தீபாவளி போல் இதுவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட கொண்டாட்ட தினமாக இருந்திருக்க வேண்டும். எப்பொழுது மாறியதோ?

ஒருவரை ஒருவர் துச்சமாக மதித்து நடக்கத் தான் மிச்ச நாட்களில் வாய்ப்பிருக்கிறதே - இந்த ஒரு நாளாவது அன்பையும், உறவில் நம்பிக்கையும், வைத்து (உண்மைக் காதலை விடுங்கள்) கணவன்-மனைவி, காதலர்கள் நடந்து கொண்டால் என்ன? இதில் பகட்டு இருப்பதாகத் தெரியவில்லை.

அரசன் said...

..// 'காதலிப்பவர்களுக்கு'' நித்தமும் காதலர்கள் தினம் தான் //

அருமை.

கோவி.கண்ணன் said...

இந்தியாவில் 'காதல்' என்ற ஒன்று ஏற்பு இல்லாததால் பெயரளவுக்கு வேலண்டைன்ஸ் கொண்டாடுவதெல்லாம் வேஸ்டு. உண்மையான காதலர்கள் வேலண்டைன் டே எதிர்ப்பார்த்து காத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு திருமண நாள் தான் வேலண்டைன்ஸ் டே.

காதலனோ காதலியோ வெட்டிக் கொண்டு போனால் போய் தொங்கிக் கொண்டிருப்பதெல்லாம் அறிவீனம். பிடிக்கவில்லை என்று பிரிந்து சென்ற பின் சேர்ந்தால் அந்த காயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

Thekkikattan|தெகா said...

//இந்தியாவில் இல்லாத காதல் நினைவுகளா ? காதலுக்கும் ஒரு கடவுள் - மன்மதன். கண்ணனின் லீலைகள் என்ற பொதுவான கருத்தில் எத்தனைப் பாடல்கள்? எத்தனை பாசுரங்கள்? கடவுளிலிருந்து காமசூத்திரம் வரை திரும்பிப் பார்த்தால் காதலும் களியாட்டமும் தான். காதலுக்கான மகத்தான நினைவகம் தாஜ்மஹால் நம் நாட்டில் தானே//.

அரசன்,

நீங்கள் கூறிய அனைத்தும் உண்மைதான், ஆனால் என் கேள்வி இவைகளைனைத்தும் நன்கு ஆண்டு அனுபவித்து அதன் எச்சமாக உருவாக்கி வைத்தார்களா இல்லை நான் கூறிய அதே ஃபாண்டஸி நிலையிலிருந்து கனவு கண்டே இப்படியெல்லாம் இருந்தால் எப்படி இருக்குமென்று நினைத்து சினிமாவில் வரும் கனவுப் பாட்டு மாதிரியா? :-). ஏனெனில் அந் நிலையில் தான் 'அழகுணர்வு' மேலோங்கி இருக்கிறது - அதாவது தூரத்திலிருந்து நிலவினைப் பார்த்து ஒரு கவிஞன் வர்ணிப்பது போல.

நான் கடிந்து கொள்வது நம் காதல் செய்யும் மக்களிடையே இல்லாத ஸ்திரத் தன்மையை சாடியே. அதனைத்தான்,நான் இல்லாத ஒன்றை "வெளிப்பகட்டாக" கொள்வதாக குறிப்பிடுகிறேன்.

உண்மைக் காதலுக்கு எதுக்கு ஒரு அடையாளம், உதட்டு உச்சரிப்பில் தோன்றுவதா காதல்?

Thekkikattan|தெகா said...

மங்கை,

//மீடியா பண்றது தான தெகா எல்லாம்
'காதலிப்பவர்களுக்கு'' நித்தமும் காதலர்கள் தினம் தான்..:-))//.

மீடியாத்தானா... அப்ப சுயமாக நமக்குன்னு யோசிக்கிறதெல்லாம் இல்லைன்னு ஆகிப் போச்சா... ரொம்ப வருத்தமான காலக் கட்டத்தில்தான் நாம இருக்கிறோம் :(.

காட்டாறு said...

//இங்கு ஏமாற்றுத் தனம் என்றழைக்கக் காரணம் அந்த உறவில் ஈடுபட்டிருக்கும் இருவருக்குமே தெரிகிறது, இது இறுதி நிலையை அடையப் போவது கிடையாது என்று அறிந்தே இருவரும் ஒரு வரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு நடித்தித் திரிவதற்கு வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்//

தெரிந்தே சாக்கடையில் விழுந்தால்.... அவர்களின் கொண்டாட்டம் வீண் பகட்டு. இது தானா உங்க பதிவின் ஒரு வரி?
அப்படின்னா.. ஒரு பதிவை வீண் செய்துட்டீங்களே தெகா. இவர்களை கணக்கில் வைத்து பேசவே கூடாதே. பேடிகளுக்கும், கயவர்களுக்கும், சாதியின் முந்தானையில் ஒளிய இடம் தேடும் காமூகர்களுக்கும், காதல் என்ற பெயரில் களியாட்டமிடும் காதல் நாள் தேவையில்லை தான். அதுக்காக காதலர் தினம் தேவையில்லை என்று சொன்னால்... பழுதான சுண்டுவிரலுக்காக கையையே வெட்டுவது போல் ஆகாதா?

மங்கை சொன்னது போல உண்மையான காதலில் திளைப்பவர்களுக்கு எந்நாளும் காதலர்கள் தினம் தான்.

Thekkikattan|தெகா said...

கோவியாரே,,

//இந்தியாவில் 'காதல்' என்ற ஒன்று ஏற்பு இல்லாததால் பெயரளவுக்கு வேலண்டைன்ஸ் கொண்டாடுவதெல்லாம் வேஸ்டு.//

இதில் முரண்நகை என்ன வென்றால் காதலிப்பவர்களுக்கே அதன் மேல் நம்பிக்கை இல்லாததுதான்...

//உண்மையான காதலர்கள் வேலண்டைன் டே எதிர்ப்பார்த்து காத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு திருமண நாள் தான் வேலண்டைன்ஸ் டே.//

உண்மையோ உண்மை...

//காதலனோ காதலியோ வெட்டிக் கொண்டு போனால் போய் தொங்கிக் கொண்டிருப்பதெல்லாம் அறிவீனம். பிடிக்கவில்லை என்று பிரிந்து சென்ற பின் சேர்ந்தால் அந்த காயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.//

அதாவது ஒடைஞ்சுப் போன ரிகார்டை திரும்ப ஒட்ட வைச்சு ஓட்ட முயற்சிக்கிற மாதிரி ஆகிடுமுன்னு சொல்ல வாரீங்க... :).

Thekkikattan|தெகா said...

ஆறு,

தெரிந்தே சாக்கடையில் விழுந்தால்.... அவர்களின் கொண்டாட்டம் வீண் பகட்டு. இது தானா உங்க பதிவின் ஒரு வரி?
அப்படின்னா.. ஒரு பதிவை வீண் செய்துட்டீங்களே தெகா. இவர்களை கணக்கில் வைத்து பேசவே கூடாதே. பேடிகளுக்கும், கயவர்களுக்கும், சாதியின் முந்தானையில் ஒளிய இடம் தேடும் காமூகர்களுக்கும், காதல் என்ற பெயரில் களியாட்டமிடும் காதல் நாள் தேவையில்லை தான். //

நம் சமூகத்தில் ஆரம்பிக்கும் எவரும் முழுத் துணிச்சலுடன் எதிர் கொண்டு சமாளித்து அதனை முடித்து வாழ்ந்தது போல் காணக் கிடைக்காததால் தான் இப்படி ஒரு ஆதங்கக் கட்டுரை... அரிதிப் பெரும்பாண்மையினர் நீங்கள் குறிப்பிட்ட அந்த "தொகையினிலே" வருகிறார்கள்...

//அதுக்காக காதலர் தினம் தேவையில்லை என்று சொன்னால்... பழுதான சுண்டுவிரலுக்காக கையையே வெட்டுவது போல் ஆகாதா?//

நீங்களும்,வவ்வாலும் புரிந்து கொண்டதை வைத்துப் பார்த்தால், ஏதோ நான் "காதலர் தின" எதிர்ப்பாளன் போல காட்சியளிப்பதனைப் போல இந்தக் கட்டுரையின் நடை ஆகிவிட்டதோ என்று எண்ண வைக்கிறது... உண்மையில் இந்தக் கட்டுரை வேறு மாதிரி கோணத்தில் அணுகி சொல்ல வந்திருந்தேன் காதல் செய்ய எத்தனிக்கும் இளைஞ/ஞிகளுக்கு... :-).

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இந்தப் பதிவு ரொம்பப் பிடிச்சிருக்கு :)

Related Posts with Thumbnails