Sunday, June 15, 2008

The Happening : இது எங்களுக்குத் தேவையா?

சும்மா இருக்க முடியாம யூட்யுப்ப புடிச்சி நோண்டப் போக, வந்து மாட்டினது நம்மூரு இயக்குனரான (இப்படிச் சொல்லிக்கலாமில்ல) நைட் சியமாலன் ஹாலிவுட்டில் இயக்கிய தனது ஆறாவது படமான "த ஹாப்பனிங்"வோட ப்ரீவியூ. சரி, பார்த்து வைப்போமேன்னு அங்கே கிடைச்ச ரெண்டு, மூணு ப்ரீவியூவை பார்த்தேன், கொஞ்சம் ஆர்வம் வந்துச்சு மரம், மட்டை, செடி, கொடி எல்லாம் அசையிரதை பார்த்தும், மக்கள் ஆ'ன்னு வாய திறந்த படியே எப்பொழுதும் போல மேலே பார்த்துக்கிட்டு இருக்கிற வைச்சிம் - முடிவு பண்ணிட்டேன் தியேட்டருக்கு போயி பார்க்கிறதுன்னு.


இன்னொரு காரணமுமிருக்கு ஏன் இந்தப் படத்தை நான் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கணுமின்னு நினைக்க, அவர் எடுத்த The Lady In The Water, The Villager என்ற படங்கள் சொல்லிக்கிற மாதிரி ஒரு கிலியையும் பார்க்கிறவங்களுக்கு கொடுக்கலை. இப்பத்தான் நான் தி லேடி இன் த வாட்டர் டிவிடியில போட்டுப் பார்த்தேன், ரொம்ப அயர்ச்சியா இருந்துச்சு. கதை நகர்த்தும் விதம் நல்லா இருந்தாலும், அந்த திக், திக் குழந்தை தனமா இருக்கு.

சரி, இப்ப உள்ள தி ஹாப்பனிங்கு வருவோம். நியுயார்க் டைம்ஸ் தினசரி, வார்னிங் பெல் அடிச்சிருந்திச்சு மீறி நம்மூரு பாசத்தில மூணு பேருக்கு $28.50 கொடுத்து உள்ளே போனோமிங்க, படம் ஆரம்பிச்ச வேகம் அட்ரீனலை கணக்கில்லாம பம்ப் பண்ணவிட்டு ரொம்ப எதிர்பார்ப்போட நிமிர்ந்து உட்கார தவறவிடலை. ஆனா, போகப் போக நம்ம நைட் சியமாலன் குழந்தைகளுக்கு பெட் டைம் கதை படிக்கிற மாதிரி மக்களை விட்டே பேசிக்க வைச்சிட்டார் வந்த கடைசி மூன்று படங்களிலும் நடந்த மாதிரியே :(.

ஒரு வரிக் கதை: இந்த மரம், செடி, கொடிகளெல்லாம் நம்ம அடிக்கிற அட்டூழியத்திற்கு பதிலடி கொடுக்கிற மாதிரி ஏதோ நம்ம நரம்பு மண்டலத்தை ஸ்தம்பிக்க செய்ற மாதிரி ஓர் நச்சை வெளிப்படுத்தி சுவாசிக்கிறவங்களை தற்கொலை பண்ணிக்க தூண்டுது(குறிப்பிட்ட ஏரியாக்களில்).

இது வரை வந்த அவரோட படங்களில் இரத்தத்தை பார்த்திருக்க முடியாது, ஆனா இந்தப் படத்திலே இதுதானே மக்கா வேணுங்கிற கனக்கா அவரோட கற்பனையை முடிக்கி விட்டு எப்படியெல்லாம் தற்கொலை பண்ணிக்கலாமிங்கிற காட்சியமைப்புகள் ஏராளமா வருது. வரும் வழியெல்லாம் என்னோட படம் பார்த்தவர்கள் ஒரு படம் பார்த்த எபஃக்டே இல்லையேன்னு புலம்பல்.

மொத்தத்தில சுற்றுப்புரச் சூழல் சார்ந்து நைட் சியமாலன் பக்கமிருந்தும் ஒரு படமின்னு வைச்சிக்கலாம். ஒரு காட்சி பின்னணியில் அந்த அணு உலைகள் புகையை கக்கிக் கொண்டிருக்க அதே ஃப்ரேமில் ஹாட்டாகை நேசிக்கும் ஒருவர் தன்னோட தாவர தோட்டத்தில் செடிகளுடன் பேசும் காட்சியமைப்பினைக் கொண்டு முழுக்க, முழுக்க இது அந்த இயற்கை சார் விழிப்புணர்வு சார்ந்து எடுக்கப்பட்ட படமென்பது விளங்கியது.

Happy Feet (சந்தோஷக் குதிப்பு) தான் நான் கடைசியா திரையரங்கத்திற்கு சென்று பார்த்த கடைசிப் படம். அதுவும் ஒரு இயற்கைசார் விழிப்புணர்வேற்று படம்தான். அதுக்குகடுத்து இதுதான், அயர்ன் மேன் பார்க்கணுமின்னு நினைச்சிட்டு இருந்த என்னய இப்படி வலியப் போயி எலி பொறிக்குள்ள மாட்டின எலி மாதிரி 56 நிமிஷத்தில நானே மாட்டி வெளி வந்தக் கனக்காத்தான் இருக்கு இந்த படம் பார்க்கப் போயி வந்ததும்.

14 comments:

இலவசக்கொத்தனார் said...

ஹேப்பி பீட் பிடிச்சுதா? அந்த மாதிரி படங்கள் எல்லாம் நம்பிப் பார்க்கலாம். கடைசியா நான் பார்த்தது ஆங்கிலத்தில் குங்பூ பாண்டா. தமிழில் ...... தசாவதாரம்தான்.

கோவி.கண்ணன் said...

'த ஹேபனிங்' பற்றிய மோசமான விமர்சனங்களைப் படித்துவிட்டு தான் படம் பார்க்கத் துணிந்தேன். என்பதால் படத்தில் எந்த எதிர்ப்பார்ர்பும் வைக்கவில்லை. படம் எரிச்சல் (போஃர்) ஊட்டுவதாக நகராமல் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. தனிமையில் வசிக்கும் பாட்டியின் இடத்தை அடைந்த போது வைத்த காட்சிகள் நன்றாக இருந்தது. நண்பரும் அவரது மனைவியும் இறந்த பிறகு அவர்களது பெண் குழந்தைக்கு நாயகனும் நாயகியும் பெற்றோராகவே மாறியது ஆங்கிலப் படங்களில் வராத இந்திய காட்சி. படம் எனக்கு பிடித்து இருந்தது...காரணம் இயக்குனர் இந்தியர் என்பதாலா ? இந்தியர்களை கேலி பேசும் சீனர்களுக்கு மத்தியில் அமர்ந்து படம் பார்த்ததாலா ? தெரியல. :)

தற்கொலை காட்சிகள் படம் முழுவதும் வருவதால் பார்க்கும் போது பயத்தை ஏற்படுத்தவில்லை.

சுரேகா.. said...

நல்லா சொல்லி இருக்கீங்க!

இந்தப்படத்துக்கு போயிடாதீங்கன்னு இதை விட அழகா சொல்ல முடியாது..!

இதுவும் ஒரு happening தானே!

:)

தருமி said...

//...The Villager என்ற படங்கள் சொல்லிக்கிற மாதிரி ஒரு கிலியையும் பார்க்கிறவங்களுக்கு கொடுக்கலை//

அப்டியா சொல்றீங்க .. எனக்கெல்லாம் ஒருமாதிரியாதான் இருந்திச்சிங்க ..
(என்ன, ரொம்ப சின்னப்பிள்ளைத்தனமால்ல இருக்குன்னு சொல்வீங்களோ..?)

Thekkikattan|தெகா said...

வாங்க கொத்ஸ்,

//ஹேப்பி பீட் பிடிச்சுதா? அந்த மாதிரி படங்கள் எல்லாம் நம்பிப் பார்க்கலாம். கடைசியா நான் பார்த்தது ஆங்கிலத்தில் குங்பூ பாண்டா. தமிழில் ...... தசாவதாரம்தான்.//

ஹேப்பி ஃபீட்க்கு என்னங்க, அனிமேஷன்ல அப்படியே ஆர்டிக்கை கண் முன்னே கொண்டு வந்திருந்தாங்க... பென்க்யின்களோட பழக்க வழக்கமெல்லாம் அசத்தலா கதையோட குழைச்சிக் கொடுத்திருந்தாங்க. ரொம்பவே பிடிச்சிருந்திச்சி.

பேசாம பாண்டா போயிருந்திருக்கலாம். இன்னிக்குத்தான் தசாவதாரம் பார்க்கப் போறேன். பார்த்திட்டு சொல்றேன், கொடுத்தக் காசுக்கு தகுமான்னு ;).

Thekkikattan|தெகா said...

கோவியாரே,

//தனிமையில் வசிக்கும் பாட்டியின் இடத்தை அடைந்த போது வைத்த காட்சிகள் நன்றாக இருந்தது. //

அந்த சீனில் உள்ளே நடந்து மூதாட்டியின் படுக்கையறையில் கிடத்தி வைக்கப் பட்டிருக்கும் ஒரு குழந்தை பொம்மை காட்டும் சமயத்தில் மூதாட்டி கதவை திறக்கும் சீனில் போடும் டிஜிட்டல் சரவுண்ட் சவுண்டுதான் காதை கிழித்தது :-). சுவற்றிலும், கண்ணாடி சன்னல்களிலும் மோதிக் கொண்டு கிழவி சாவது எல்லாத்தையும் நிப்பாட்டிருவோம் ரகம் :-)).

//நண்பரும் அவரது மனைவியும் இறந்த பிறகு அவர்களது பெண் குழந்தைக்கு நாயகனும் நாயகியும் பெற்றோராகவே மாறியது ஆங்கிலப் படங்களில் வராத இந்திய காட்சி.//

இது மாதிரி நம்ம நைட் நிறைய அவரது படங்களில் நம்மூரு செண்டி_களை உள்ளே வைப்பாரு, இங்கே கொஞ்சம் கிண்டல் பண்றாங்க ஓவர் செண்டிஸ்-அ. யுட்யூப்ல பாருங்களேன். ஆனா, தேவையான ஒண்ணுதான் இங்கே அது போன்ற காட்சியமைப்புகள்னு நான் நினைக்கிறேன். எல்லா படத்திலும் அது போன்ற குடும்பம் பொறுத்து காட்டும் சம்பாஷனைகள் எனக்கு பிடிக்கிறது.

//தற்கொலை காட்சிகள் படம் முழுவதும் வருவதால் பார்க்கும் போது பயத்தை ஏற்படுத்தவில்லை.//

ரேஸ் எகன்ஸ்ட் டைம் என்றுதான் படங்களை பார்த்திருக்கோம், ஆனா, இது ரேஸ் எகன்ஸ்ட் எங்கும் நிறைந்திருக்கும் காற்று...

Thekkikattan|தெகா said...

இந்தப்படத்துக்கு போயிடாதீங்கன்னு இதை விட அழகா சொல்ல முடியாது..!//

அப்படியா சொல்லியிருக்கேன் :))?? அட இல்லயப்பா பாருங்க வாய்ப்பு கிடைச்சா. இப்ப தசாவதாரம் பார்க்க ஓடுறேன், பிறகு சந்திப்போம்.

கப்பி | Kappi said...

இன்னைக்கு பார்க்கலாம்னு இருந்தேன்..சாய்ஸ்ல விட்டுடலாம்ங்கறீங்க..அப்ப நான் எஸ்கேப்பு :))

Thekkikattan|தெகா said...

//அப்டியா சொல்றீங்க .. எனக்கெல்லாம் ஒருமாதிரியாதான் இருந்திச்சிங்க ..
(என்ன, ரொம்ப சின்னப்பிள்ளைத்தனமால்ல இருக்குன்னு சொல்வீங்களோ..?)//

தருமி, நானும் கதை சொல்ற அணுகுமுறையைப் பத்தி எந்த குறையும் சொல்லலை. ஆனா, அதிலிருக்கும் சஸ்பென்ஸ் வந்து முடிவில சப்புன்னு போயிருக்கும் ஒண்ணு; இல்லைன்னா, டெக்னிக்லா இடறும்.

இப்ப உ.தா., தி வில்லேஜர எடுத்துக்கோங்க, அதில வருகிற வேற்றுக் கிரக வாசி அத்தனை லைட் இயர்ஸ் தாண்டி பூமியை வந்தடைந்தது பெரிசில்லாம நம்மகிட்ட இருக்கிற வீடுகளை ஆக்கிரமிக்கிறதுக்கு எந்த விதமான தொழிற் நுட்பமுமில்லாம ஓடிப் போறதா காமிக்கிறது, பெட் டைம் ஸ்டோரி மாதிரி இருந்துச்சுன்னு சொல்ல வந்தேன்...

இருந்தாலும் பார்க்காம விட்டோமா? The Arlington Road, The telephone booth, The Ring, The Others etc., மாதிரி படங்களை பார்த்து கொட்டுப் போயிட்டு இன்னமும் கேக்குதில்லை, அதான்.

Thekkikattan|தெகா said...

இன்னைக்கு பார்க்கலாம்னு இருந்தேன்..சாய்ஸ்ல விட்டுடலாம்ங்கறீங்க..அப்ப நான் எஸ்கேப்பு :))//

கப்பியாரே,

அடடா, நான் கொடுத்துப்புட்டேனா நீங்க தியேட்டருக்கு போயி படம் பார்க்கிறதை :(.

ஆமா, உங்கூர்ல தசாவாதரம் திரையிடப் பட்டிருக்கா?

Unknown said...

எச்சரிக்கைக்கு நன்றி!

சென்ஷி said...

//அயர்ன் மேன் பார்க்கணுமின்னு நினைச்சிட்டு இருந்த என்னய //

அது இதை விட பெரிய்ய கொடுமைங்க... பார்த்துட்டு வந்து விமர்சனம் எழுதுங்க. :((

Thekkikattan|தெகா said...

எச்சரிக்கைக்கு நன்றி!//

மீறிப் போகலன்னாக்கா படத்தில வார ஒரு சீனான சிங்கத்திற்கு தன்னையே இறையா படைச்சிகிற ரேஞ்சில தற்கொலை பண்ணிக்கிற சீனைச் சொல்லி எல்லாம் படம் பார்க்க வைக்கிற மாதிரி கதை சொல்ல மாட்டோமாக்கும் :)).

Thekkikattan|தெகா said...

வாங்க சென்ஷி,

அது இதை விட பெரிய்ய கொடுமைங்க... பார்த்துட்டு வந்து விமர்சனம் எழுதுங்க. :((//

அப்ப நீங்க இந்தக் கொடுமைய பார்த்துட்டீங்களா ;). அயர்ன் மேன் கொஞ்சூண்டு ஆன்லைன்ல பார்த்தேன் சத்தம் பெரிசா இருந்தது, ஆர்வமூட்டலை, சரி டிவிடி வரட்டும் பார்த்துக்குவோமின்னு விட்டுருக்கேன்.

Related Posts with Thumbnails