Monday, June 16, 2008

DasaAvataram : நானும் பார்த்திட்டேன்!!

தசாவதாரம் பார்க்க முடிஞ்சதே ஒரு chaotic eventஅ ஆகிப் போச்சு எங்க தரப்பில. மதியம் இரண்டு மணிக்கு அரக்க பறக்க கிளம்பி எப்பொழுதும் அட்லாண்டாவில் படமிடும் இடம்தானே என்று காலாக்சி சினிமா திரையரங்கிற்கு அத்தனை ட்ராஃபிக் லைட்டிலும் நிப்பாட்டி, நிப்பாட்டி ஒரு வழியா 2.45க்கு அரங்கத்தின் வாசலுக்கு வந்தடைந்தோம்.

முகப்பில் நம்மூர் இளைஞர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். இங்குதானே தசாவதாரம் ஓடுகிறது என்று கேட்டேன், அவர்களும் ஆமாமென்றார்கள். சரின்னு ஒரே எக்சைட்மெண்ட்ல கண்ணெல்லாம் இருட்டிப் போயி மூணு டிக்கெட்டை வங்கினத்துக்கபுறம்தான், திரும்பிப் பார்த்தேன், என்னாடாது மூணு மணி காட்சிக்கு அதுவும் ஞாயிற்றுக் கிழமை இப்படி காத்து வாங்குதேன்னு நினைச்சிக்கிட்டே திறந்து கிடந்த கதவின் வழியே பார்த்தா, பார்த்தா... "லோக நாயகனே, னே னேன்னு" பாட்டு ஓடிட்டு இருந்தது என் காதிற்கு தமிழில் உலக நாயகனேன்னு கேக்குது, என் மனைவி காதிற்கு லோகமா கேட்டுருக்கு என்னங்க இது தெலுங்கு வெர்சனால்லை இருக்கும் போலன்னு கேட்டு என் வயிற்றில் புளியைக் கரைத்தால்.

போச்சுடான்னு நானும் பக்கத்தில இருந்த மொத்த 12 பேரையும் பார்த்து இது தெலுங்கு வெர்சனான்னு கேட்கப் போக எல்லாம் ஆமான்னு சொல்ல, பிடிச்சேன் ஓட்டம் பீச்ட்ரி 8 சினிமா அரங்கத்திற்கு கொஞ்சம் அரைகுறையானா ட்ரைவிங் முகவரியோட அதாவது குத்து மதிப்பா. மணி 2.55க்கு ஓடி சரியா 3.05க்கு எப்படியோ தடவிப் பிடிச்சிட்டேன் மூணு மைல் தொலைவில் உள்ள சரியான திரையரங்கத்தை.

டிக்கெட் ஈசியாத்தான் கிடைச்சிச்சி. ஒரே நேரத்தில இரண்டு திரையரங்கத்தில் போட்டார்கள் ஒரே ப்ரெஜெக்டரிலிருந்துன்னு நினைக்கிறேன். அதுனாலே, நல்ல ஃப்ரீயா உட்கார்ந்து பார்த்தோம்.

சரி, இப்ப படத்தைப் பத்தி நான் நினைக்கிறதை சொல்லிடுறேன். கொடுத்த காசுக்கு கமல் அசராம தன்னோட சிரத்தையான உழைப்பின் மூலமா நிறுபிச்சிருக்கார், ஃப்ரேமிர்க்கு ஃப்ரேம். அப்படியே எந்த 'குத்'தையும் யோசிக்காம நேரடியா உள்வாங்கி பார்த்தா படத்தோட நீளம் தெரியாம வழுக்கிட்டு போகுமென்பது என்னோட வந்தவர்களையும் சேர்ந்து நாங்க உணர்ந்தது.

படத்தில இருக்கிற அரசியல் விசயங்களை அலசி காயப் போடணுமின்னா, இந்தப் படத்தில வார ஒவ்வொரு முக்கியமான கேரக்டர்களும் என்னா பேசுது அதற்கு தகுந்த மாதிரியான உடலைசவுகள், பின்னணி காட்சிகள்னு ஏராளமான விசயத்தை இன்னொரு இரண்டு, மூன்று முறைகள் பார்த்துத்தான், ஸ்கிரிப்டையே முழுசா வாங்கி வாசிச்சிட்டுத்தான் சொல்ல முடியுமின்னு நான் நினைக்கிறேன். நிறைய பேரு கதைக் களத்தைப் பற்றியும் தனிப்பட்ட கமலின் 10 காரக்டர்களை பற்றியும் தொடர்ந்து எழுதி தள்ளிட்டாங்க.

இந்த நிலையில் எல்லாத்தையும் படிச்சிட்டுத்தான் படம் பார்க்கப் போனேன். அப்படியிருந்தும் படம் நல்ல விறுவிறுப்பா நகர்த்துச்சு. குறிப்பா எனக்கு அந்த பூவராகவன், பால்ராம் நாயுடு கேரக்டர்கள் ரொம்பவே பிடிச்சிருந்தது. ஃப்ளெச்சர் கேரக்டரை வந்து "தி சின் சிட்டி"யில வந்த மொட்டைத் தலை கேரக்ட்ரை வைச்சி தலையை செதுக்கின மாதிரி தெரியுது. வெள்ளைக் கார துரைங்க தலைன்னா பெரிசா இருக்கணுமின்னு சொல்லிச் சொல்லி செஞ்ச மாதிரி இருக்கு.

அது சரி 12ஆம் நூற்றாண்ட்ல நடந்ததா காமிச்சி அது ஏன் வைஷ்ணவ ஆட்களை கொக்கிப் போட்டு தூக்குறத காமிச்சவங்க ஏன் சைவர்களை நடு ரோட்டில நிறுத்தி கழுவில ஏற்றினது, முழியைப் பிடிங்கினது மாதிரியெல்லாம் (இன்னொரு ஃப்ரேமில) காமிக்காம இந்த குறிப்பிட்ட காலக் கட்டதில இருந்து மட்டும் ஆரம்பிச்சிருக்குன்னு இயற்கையா மனசில ஒரு கேள்வியா தொக்கி நின்னுச்சு. நமக்கு இதில இருக்கிற அரசியல் எல்லாம் புரியாதுங்கிறதை நினைக்கும் பொழுது யப்பாடா ரொம்ப நல்லாதாப் போச்சுன்னு தோணுது. நான் எடுத்துக்கிறேன், எப்படியோ மனுசங்களுக்கு தேவை சண்டை போட்டுக்கிட்டு வயிற்றுப் பிழைப்ப அது மூலமா ஓட்டணும் அப்படின்னு.

ஆக மொத்தத்தில பார்க்க வேண்டிய படம்.

11 comments:

Thekkikattan|தெகா said...

பி.கு: அரசியல் சார்ந்து பின்ன்னாலே தனிப் பதிவா போட முடியுதான்னு பார்ப்போம். அதுவும் டிவிடி_la வந்ததிற்கு பிறகு அப்பத்தான் பாஸ் பண்ணி, பாஸ் பண்ணி பார்க்க முடியும் ;-).

கிரி said...

நான் இன்னும் பார்க்கவில்லை...பார்த்துட்டு சொல்றேன் :-)

Unknown said...

//அது சரி 12ஆம் நூற்றாண்ட்ல நடந்ததா காமிச்சி அது ஏன் வைஷ்ணவ ஆட்களை கொக்கிப் போட்டு தூக்குறத காமிச்சவங்க ஏன் சைவர்களை நடு ரோட்டில நிறுத்தி கழுவில ஏற்றினது, முழியைப் பிடிங்கினது மாதிரியெல்லாம் (இன்னொரு ஃப்ரேமில) காமிக்காம இந்த குறிப்பிட்ட காலக் கட்டதில இருந்து மட்டும் ஆரம்பிச்சிருக்குன்னு இயற்கையா மனசில ஒரு கேள்வியா தொக்கி நின்னுச்சு. நமக்கு இதில இருக்கிற அரசியல் எல்லாம் புரியாதுங்கிறதை நினைக்கும் பொழுது யப்பாடா ரொம்ப நல்லாதாப் போச்சுன்னு தோணுது.//

இவ்ளாவியும் எழுதிட்டு.. ஒண்ணும் புரியலன்னு பில்டப்பா...?? :)

Unknown said...

அப்பாடா..பாத்தாச்சா.!
ரசிச்சீங்கள்ல...
அது போதும்..!

அதானே சினிமாக்கு தேவை!

:)

சுரேகா.. said...

//அப்பாடா..பாத்தாச்சா.!
ரசிச்சீங்கள்ல...
அது போதும்..!

அதானே சினிமாக்கு தேவை!

:)//

ரிப்பீட்டேய்!

Thekkikattan|தெகா said...

நான் இன்னும் பார்க்கவில்லை...பார்த்துட்டு சொல்றேன் :-)//

கிரி, அவசியம் பாருங்க! நல்ல எண்டெர்டெயினிங் மூவி, ஒர்த் ஸ்பெண்டிங் :-).

Thekkikattan|தெகா said...

இவ்ளாவியும் எழுதிட்டு.. ஒண்ணும் புரியலன்னு பில்டப்பா...?? :)//

வாங்க இசை,

நான் கேட்டது பில்டப் மாதிரியா தெரியுது ;))... அட மனசில தோணின கேள்வியை கேட்டு வைச்சினுங்க, தெரிஞ்சவங்க யாரவது மண்டபத்தில இருந்து எனக்கு புரிய வைப்பாங்கங்கிற நம்பிக்கையில.

அட உங்களுத் தெரிஞ்சாக் கூட எனக்குச் சொல்லுங்களேன், தெரிஞ்சிக்கிறேன் :-).

Thekkikattan|தெகா said...

அப்பாடா..பாத்தாச்சா.!
ரசிச்சீங்கள்ல...
அது போதும்..!

அதானே சினிமாக்கு தேவை!

:)
//

மோகன்,

நல்லாவே ரசிச்சேன், அதுக்கென்ன குறை. சினிமாவேதான் :).

நன்றி!

Thekkikattan|தெகா said...

ரிப்பீட்டேய்!//

ரிப்பீட்டேய் போட்ட சுரேகா, கடைசி பாட்டு ஓடிட்டு இருக்கும் பொழுதே படத்திற்கு உழைத்தவர்களின் பெயர்களும் ஓட ஆரம்பித்ததால் உன்னை ஞாபகத்தில் நிறுத்தி எங்கே உன் பெயர் வரப்போகிறது என்று பார்த்துக்கொண்டே வந்தேன். பிடிக்க முடியவில்லை, இனி டிவிடியிலத்தான் போல...

நீ கூறிய படியே எந்த முன் முடிவுமில்லாம பார்த்தா படம் ஓடினதே தெரியலை.

கோவி.கண்ணன் said...

இயற்கை நேசி ஐயா,

//ஏன் வைஷ்ணவ ஆட்களை கொக்கிப் போட்டு தூக்குறத காமிச்சவங்க ஏன் சைவர்களை நடு ரோட்டில நிறுத்தி கழுவில ஏற்றினது//

அனல்வாதத்தில் தோற்றவுடன் சமணர்களைத்தான் கழுவில் ஏற்றினார்கள். அவர்களது நூல்களை வைகை ஆற்றில் எறிந்தார்கள்...என்று தான் சொல்லப்படுகிறது. அப்பர்-ஞான சம்பந்தர் சைவ கூட்டணியின் கைங்கர்யம் அது. சைவர்கள் கை எப்போது ஓங்கியே இருந்தது.

ராஜ நடராஜன் said...

வணக்கம்.ஆமா தெலுங்கு வெர்சனை முதலில் எட்டிப் பார்த்தேன் என்றீர்களே?பல்ராம் ராவிற்கு வசனம் பேசறது இன்னும் எளிதாகியிருக்கும்.

கிட்டத்தட்ட எனது மன அலை வரிசையில் இருக்குது உங்கள் பதிவு.

Related Posts with Thumbnails