இரண்டு வாரங்களாவே தமிழ்மணத்தை உத்து உத்து பார்த்துக்கிட்டே வாரேன் எங்கட நிறைய ஒக்கேனக்கல் சார்ந்த பதிவுகளை உணர்வுப் பூர்வமாக காணோமேன்னு. இங்க மக்கள் நினைச்சிருப்பாங்க போல நாமும் வெறும் புரட்சி கருத்துக்களா எழுதி எதுக்கு வீணா வன்முறையைத் தூண்டி விடுறோமின்னு சும்மா இருந்திருக்கலாம் போல. எப்படியோ, இப்ப திடீர்னு திரைப்படத் துறையினர் நடத்தின உண்ணாவிரதப் போரட்டத்தினை தொடர்ந்து அங்கு சில பேர் பேசிய பேச்சுக்கள் அனல் பறக்க இங்கும் எங்கும் சூடு பற்றிக் கொண்டது.
அதிலும் குறிப்பாக இந்த முறை கழுவுற மீன்ல நழுவுற மீனாக தப்பிக்க வாய்ப்பே இல்லாதபடிக்கு சூழ்நிலையும் அமைந்து போக சில வார்த்தைகளை அள்ளி தெளித்தே ஆகவேணுமிங்கிற கட்டாயத்தில வார்த்தைகளை உதிர்க்க வேண்டியதாப் போச்சு, சில பிரபலங்களுக்கு.
என்னுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்றால் இந்த கலைக் கூத்தாடிகள் என்னாத்தை பெருசாக பேசிடப் போறாங்க, இன்னமும் பெரிய அளவில் வியாபாரம் அண்டைய மாநிலங்களுடன் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுதென்றே நினைத்திருந்தேன். ஆனால், நாட்டின் ஒருமை பாட்டில் அதீத நம்பிக்கையும், பொறுப்பும் கொண்ட சில கர்நாடாக சமூக அமைப்புகள் தொன்று தொட்டு அடித்து வரும் அழிச்சாட்டியங்கள் எல்லோர் மனத்திலும் கசப்புணர்வையே வளர்த்து வந்திருக்கிறது என்பதனை இந்த திரைப்படத் துறையினரின் பேச்சுக்களை கேட்கும் பொழுது அறிய முடிந்தது.
அதிலும் குறிப்பாக நடிகர் சத்யராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கள் குறிப்பிடும் படியாக அமைந்திருந்தது. சத்யராஜ் தன்னுடைய நீண்ட நாள் மனக் குமுறலை இங்கு கொட்டித் தீர்த்துக் கொண்டதாகவே கருதுகிறேன். அவரின் மீது எழுந்த குற்றச் சாட்டுகள்: முகம் சுழிக்க வைக்கக் கூடிய வகையில் அமைந்த வார்த்தைகள், மற்றும் உடற் செயற்பாடுகள் (body gestures).
மேடையில் அமர்ந்திருக்கும் ஒரு சில மணி நேரங்கள் அவையடக்கத்துடனும், ஏனைய ஜெண்ட்ல்மென்களுக்கேயான அடக்க நடிப்புகளுக்கிடையே தானும் அப்படியே சற்று அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்வதில் பெரிதாக ஒன்றும் கஷ்டமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை அதிலும் நடிப்பையே தொழிலாக கொண்டவர்களுக்கு, இல்லையா? அப்படியாக இருக்கையில் எதற்காக அதிலிருந்து நழுவி இப்படி தன்னை ஒரு தரம் கெட்டவனாக ஆக்கிக் கொள்ள ஒருவர் முன் வர வேண்டும் (அதற்கு நீங்கள் என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் சரி...).
குறைந்த பட்சம் இவ்வளவு தொலைவு இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை வளர்ந்து அதில் எந்த விதமான மத்திய அரசின் குறுக்கீடுகளுமில்லாமல் ஏதோ இரண்டு வெவ்வேறு நாடுகளுக்கிடையான பிரச்சினை போன்று பாவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த பக்கமிருந்து ஒரு சிலரேனும் தனக்கும் அது போன்ற மான உணர்வு இருக்கிறது என்பதனை மனதில் பட்டதை பட்டதாக (அதிலும் உண்மையில்லாமலில்லை) கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.
ஆனால், இதிலிருக்கும் உள் அரசியல்தான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. காவேரி பிரச்சினையில்தான் நாம் ஏமாந்து விட்டோம், இதில் ஏமாறத் தயாராக இல்லையென்று கூறிய தலைமையிடம், நன்றாக சூடேறி எல்லா கட்சிகளும், மக்களும் ஓரளவிற்கு ஒன்றுதிரண்டு விழிப்புணர்வுற்று ஒரே குடையின் கீழ் இருக்கும் சமயத்தில் திடீரென்று தலைமையிடம் கர்நாடாக தேர்தல் முடியும் வரை முறுக்கேறிய ஒரு விசயத்தை தள்ளிப் போட்டுவிட்டது. சிறிது ஏமாற்றம்தான்.
எனக்கென்னான்னா, ஒரு தேசத்தை மதிக்கிற ஒரு மூத்த அரசியல் தலைவரா கலைஞர் இப்படி வன்முறையின் ஊடாக ஒன்றும் சாதித்து விட முடியாது என்பதனையும், நாட்டின் ஒருமை பாட்டையும் கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படியே இருக்கட்டும், இருந்தாலும் இந்த உணர்வை தூண்டி அரசியல் விளையாட்டாக ஆக்கிவிட்டு பிறகு எந்த ஒரு தீர்வும் இல்லாமல் ஒரு காவேரிப் பிரச்சினை போலவே பின்னாளில் தொங்கலில் விட்டால், பூனை வெளியே வரப் போவது நிச்சயம்.
நமது எதிர் பார்ப்பை பொய்க்க வைக்காமல் இருந்தால் சரித்தான். ஆனால், இது போன்ற பிரச்சினைகளில் உணர்வை தடவி, உசிப்பு விட்டுவிட்டு பிறகு அதனை வைத்து அரசியல் நடத்தும் சாணக்கியத் தனமிருந்தால், பின்பொரு நாளில் நிஜமாகவே (இப்பவே என்ன எல்லா மாநிலங்களும் தெரிந்து கொண்டுதானே அந்த உணர்வு இல்லையென்று) தேவைப் படும் பொழுது, மக்கள் நினைக்கலாம் "மண் குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கிய"தைப் போன்றுன்னு. அது மாதிரி கழகத்திற்கு ஒரு களங்கம் ஏற்படா வண்ணமும், இந்த கடைசி வாய்ப்பையும் நழுவ விடாமலும், கழகத்தின் மீது இருக்கும் களங்கத்தை துடைத்தெறிவது போன்றும், கர்நாடாக தேர்தலுக்குப் பிறகு தமிழக மக்களுக்காக இந்த குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்க கழகம் கடமை பட்டிருக்கிறது.
இல்லை ஒரே அடியாக தூங்கப் போட்டு விட்டு அரசியல் நடத்த மட்டுமே காவேரியும், ஒகேனக்கல் பிரச்சினையும் தோண்டி எடுக்கப் படுமானால், மக்கள் என்னைக்குமே இந்த நிகழ்வை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்பது நிதர்சனம்.
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Sunday, April 06, 2008
வெண்ணை திரண்டு வந்துச்சு இப்ப ஒடைக்கணுமா? : ஒகேனக்கல்.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
கடைசீல...நீங்களும் வந்துட்டீங்கள்ல! :)
நல்லா சொல்லியிருக்கீங்க!
ஒரு பொறுப்பான அண்ணனா!
தெகா டச்சோட!
//இல்லை ஒரே அடியாக தூங்கப் போட்டு விட்டு அரசியல் நடத்த மட்டுமே காவேரியும், ஒகேனக்கல் பிரச்சினையும் தோண்டி எடுக்கப் படுமானால், மக்கள் என்னைக்குமே இந்த நிகழ்வை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் //
சூப்பர்!
ஆனா அவிங்களுக்கு
சொரணை வராதுன்னுதான்
நினைக்கிறேன்.
ஊதுற சங்கை ஊதுவோம்!
:)
சர்வம் அரசியல் மயம் ...
என்னமோ போங்க ... :(
தருமி அய்யா சொன்னது மாதிரி, இப்போ எல்லாமே அரசியல் சார்ந்ததா ஆயிடுச்சு. சினிமாக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்ததில் அவர்களுடைய சுயனலமும் அடங்கியிருந்தாலும், தமிழன் காசைத் தின்று வாழ்க்கை நடத்தும் சில தமிழரல்லாத நடிகர்களையும் எதிர்ப்பை (வாயளவிலாவது!) காட்டச் செய்தது ஒரு வகையில் வெற்றிதான்.
சத்யராஜ் பேசியது பற்றி எந்தத் தவறும் சொல்ல முடியாது. அந்த அளவுக்குப் பேச வைத்தது யார்/எது என்று யோசிக்க வேண்டும். வைரமுத்து, கமல் பேசியது அருமை. ரஜினியை வலுக்கட்டாயமாகப் பேச வைத்து விட்டார்கள். பார்க்கக் கொடுமையாக இருந்தது.
சரி, ஷ்ரேயான்னுட்டு ஒரு அம்மணி ஏதோ பேசுனாப்போல இருந்துச்சு. யாராவது முழி பெயர்த்து சொல்ல முடியுமா? :)
ஆமாம் தல,
கலைஞரு இப்படி பின்வாங்கிட்டாரு.. இந்த கர்நாடகாகாரணுங்களை இப்படி எல்லாம் வழிக்கு கொண்டு வர முடியாது தல..இவனுங்க எல்லாம் அடிவாங்கி திருந்துற ஆளுங்க..
//இல்லை ஒரே அடியாக தூங்கப் போட்டு விட்டு அரசியல் நடத்த மட்டுமே காவேரியும், ஒகேனக்கல் பிரச்சினையும் தோண்டி எடுக்கப் படுமானால், மக்கள் என்னைக்குமே இந்த நிகழ்வை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்பது நிதர்சனம்.//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய் சொல்ல ஆசை,
அதைவிட தெகாவுக்கு ஒரு 'ஓ' போட்டால் பொருத்தமாக இருக்கும் !
:)
ஓ
கடைசீல...நீங்களும் வந்துட்டீங்கள்ல! :)//
வேற என்னாத்த பண்றது. இருந்துருந்து பார்த்தேன், முடியல வந்துட்டேன் :).
//நல்லா சொல்லியிருக்கீங்க!
ஒரு பொறுப்பான அண்ணனா!
தெகா டச்சோட!//
எரியுற தீயில எண்ணெய வார்க்க முடியுமா... பொறவு ஒரு நாட்டின் அமைதியை யார் காப்பது ;).
//ஆனா அவிங்களுக்கு
சொரணை வராதுன்னுதான்
நினைக்கிறேன். //
அதெல்லாம் இந்த முறை வந்துடும், பிடுங்கிற இடத்தில பிடிங்கினால்...
//சர்வம் அரசியல் மயம் ...
என்னமோ போங்க ... :(//
வாங்க தருமி,
தாங்கமுடியலை சாமீஈஈஈ இந்த அரசியல் விளையாட்டுக்களையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கிறது. எப்படித்தான் ரத்தக் கொதிப்பு சீக்கிரமே வராம இத்தனை ஆண்டுகள் நீங்கலெல்லாம் காலம் தள்ளினிங்களோ, தெரியலைப்பா.
எனக்கு இதுக்கே கண்ணைக் கட்டுது. :)).
அருமை !!!
தஞ்சாவூராரே,
//தமிழன் காசைத் தின்று வாழ்க்கை நடத்தும் சில தமிழரல்லாத நடிகர்களையும் எதிர்ப்பை (வாயளவிலாவது!) காட்டச் செய்தது ஒரு வகையில் வெற்றிதான்.//
அதுவும் இவ்வளவு தூரம் கார்னர் பண்ணி இந்த வார்த்தைகளை வாயிக்குள் விரலை விட்டு பிடிங்கி எடுக்கிறமாதிரியில்லையா பிடிங்கி எடுக்க வேண்டியாதாப் போச்சு.
இந்தளவிற்கு சொன்னாலே புரிஞ்சிக்காத மக்கள் இருக்கிற இடத்திலதான், பேசாம வந்தோமா கையைக் கட்டிக்கிட்டு அடக்க ஒடுக்கமா நின்னோமான்னு நம்ப நடிப்பு திலகங்கள் எல்லாம் பண்ணிட்டு இருக்குதுகள்.
அந்த மாதிரி இருக்கிறதில இன்னொரு வசதி, வாயத் திறந்த மண்டைக்குள்ள வெறும் வெற்று அறைகளா இருக்கிறது தெரிஞ்சு போகுமேன்னு கூட இருக்கும் போல :)).
//சத்யராஜ் பேசியது பற்றி எந்தத் தவறும் சொல்ல முடியாது. அந்த அளவுக்குப் பேச வைத்தது யார்/எது என்று யோசிக்க வேண்டும். வைரமுத்து, கமல் பேசியது அருமை. //
சத்யராஜ் பேசியதற்குத்தான் பொறாமை என்ற ஒத்தை வார்த்தையில் எல்லாமே ஒடுக்கப் பட்டு விட்டதே.
கமல் பேசியதை மொழி பெயர்த்து எங்கூரு புதுப் பட்டியில் இருப்பவர்களுக்கு விளக்க வேணும் :)).
வைரமுத்து கடைசியாக "போர், போர்" என்று முழங்கியிருந்தால் கைகளில் ஈட்டி, கம்பு, அருவாவோட கிளம்பியிருக்கும் அளவிற்கு உணர்ச்சி இருந்தது.
ஆமா, இந்தச் சின்ன கலைவாணர் வாயில என்ன வெத்தலைப் பாக்கா ;)... படத்தில மட்டும் முழங்கிறார் இது போன்ற பொது இடங்களில், விசய்த்தில் வாய்க்குள்ளயே போட்டு மொதும்புறார்... அடடட என்ன சமூக சிந்தனையும், பொறுப்பும் (வெங்காயம், பொடலைங்கா) ;).
//சரி, ஷ்ரேயான்னுட்டு ஒரு அம்மணி ஏதோ பேசுனாப்போல இருந்துச்சு. யாராவது முழி பெயர்த்து சொல்ல முடியுமா? :)//
ஓ! அதுவா, விளம்பர இடைவேளை :)).
அட நம்ம மனோரமா பிச்சி விளாசிப் புடுச்சி...
கலைஞரு இப்படி பின்வாங்கிட்டாரு.. //
பின்வாங்கி எங்க போயிடப் போறாரு, இந்த முறை ச்சூடோடவே இருப்போமில்ல... இன்னுமொரு 30 நாளுதானே இந்தா ஓடிப்போயிடும் இருங்க...
//இந்த கர்நாடகாகாரணுங்களை இப்படி எல்லாம் வழிக்கு கொண்டு வர முடியாது தல..இவனுங்க எல்லாம் அடிவாங்கி திருந்துற ஆளுங்க...//
இந்தா பூந்துடுவோம் :-))
நல்லா எழுதி இருக்கிறீர்கள்!
உணர்வுகள் உரசப்படும் போது தீப்பொறி பறப்பது இயற்கைதானே!
அந்த அறிவிலிகள் தண்ணீர் விட்டு அணைக்கலாமே!!
கண்ணீரை மட்டுமே கொடுக்கிறார்கள் நம் மக்களுக்கு!!!
சத்தியராஜின் ஆதங்கம் புரிந்துகொள்ளக் கூடியது. ரஜினிக்காக சில வார்த்தைகள் பேசியதைத் தவிர்த்திருக்கலாம். மனிதாபிமான உணர்வுடன் ரஜினியைப் பார்க்கும் போது, கொஞ்சம் வேதனையாகத் தான் இருந்தது.
கமலும், கருப்பட்டியும் தங்கள் பேச்சில் அதை சரி செய்து சமாளித்தார்கள்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
//ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய் சொல்ல ஆசை,
அதைவிட தெகாவுக்கு ஒரு 'ஓ' போட்டால் பொருத்தமாக இருக்கும் !
:)
ஓ//
கோவியாரே,
இரண்டு மாசம் கழித்து "ரிப்பீட்" கொடுங்க திரும்பவும் ஒரு பதிவு போடுவோமில்லை :-).
தமிழ் குழந்தை,
வருகைக்கு நன்றி!
ஜோதி பாரதி,
//உணர்வுகள் உரசப்படும் போது தீப்பொறி பறப்பது இயற்கைதானே!//
நியாயமான உணர்வுகள் வடிக்கட்டப் படுதல் இல்லாமல் இறக்கப் படும் பொழுதுதான் அதில் உணர்ச்சி இருக்கும். அதனை சுவைத்துப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், அங்கே உண்மை உணர்வுகளுக்கு இடமிருக்க வாய்ப்புகள் குறைவே என்று நான் கருதுகிறேன்.
//சத்தியராஜின் ஆதங்கம் புரிந்துகொள்ளக் கூடியது. ரஜினிக்காக சில வார்த்தைகள் பேசியதைத் தவிர்த்திருக்கலாம். மனிதாபிமான உணர்வுடன் ரஜினியைப் பார்க்கும் போது, கொஞ்சம் வேதனையாகத் தான் இருந்தது.//
அட ஆறு கோடியில் ஒருவர் அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே, என்ன சொல்லிவிட்டார் அப்படி? பொது வாழ்க்கை என்று வரும் பொழுது இதெல்லாம் சகஜமப்பான்னு எடுத்துட்டே போயிட்டே இருக்கணும் :).
கொஞ்சம் உப்பு ஜாஸ்தி அவ்ளோதான். நாம பேசினா அது சபையேறுமா, சொல்லுங்க?
என்னமோ சொல்லுவாங்களே "நன்மையும், தீமையும் பிறர்தர வாரா"ன்னு அது எல்லாருக்கும் பொருந்தும்தானே.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Post a Comment