Wednesday, September 14, 2011

இயற்கையின் தேர்ந்தெடுப்பு சாதீக்கலவரம்...

பரமக்குடி, எனது ஊரிலிருந்து இரண்டு மூன்று மணி நேர பேருந்து பயணிப்பில் போய் சேர்ந்து விடக்கூடிய தூரத்தில் அமைந்திருக்கிறது. அது ஒரு வேலிக்கருவை மரங்கள் நிரம்பிய, தண்ணீரற்ற ஒரு வறண்ட பாலையூர்.

அதனை ஒற்றி அமைந்ததே எனது ஊரும். எனவே அந்த ஊருக்கும் எனது ஊருக்கும் பெரியளவில் சிந்தனை வேறுபாடுகளோ மனிதர்களின் ஓநாய்த்தனமான மனத் திண்மைக்கு வித்தியாசமிருந்து விட முடியாது. இந்த புகைப்படத்தை நான் காண நேர்ந்தது. இரண்டு மூன்று நாட்களாக இந்த சாதீக் கலவரம் தொடர்பாக எங்கும் பரப்பரப்பு ஒத்திக் கொண்டு அனலாக தகிக்கிறது.

ஒவ்வொரு முறையும் இந்த காட்டுமிராண்டித் தனத்தின் வக்கிரம் எண்ணிடலங்கா வழிகளில் முகம் தரித்தே காண்பித்து விட்டு ஓடி ஒளிந்து கொள்கிறது, மனித ஓநாய்களின் போலிப் புன்னகைகளுக்கு பின்னே. மீண்டும் சரியான நேரத்தில் தன் கோரப்பற்களை துருத்திக் காட்டுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதனை பார்த்து வளர்ந்தவர்களுக்கு இதுவு’ம் ஒரு மற்றுமொரு தினசரிச் செய்தியாகிப் போய் விடுகிறது.

ஆங்கிலேயன் இண்டு இடுக்களிலெல்லாம் வெறும் பத்தாயிரம் பேருக்கும் குறைவாக இங்கு கொண்டு வந்து இத்தனை பெரிய பரப்பை அவனால் கட்டி ஆளமுடிந்ததெனில் அதற்கு காரணம் இந்த காட்டுமிராண்டித்தனத்தின் ரேகைகளே காரணமாக இருந்தது 300 வருடங்களுக்கு முன்பும். அவர்களும் வந்தார்கள், அடிமைகளான வாழ்வை நாமும் சுவைத்தோம்.

ஆனால், அதிலிருந்து இந்த தேசமென அழைத்துக் கொள்ளும் கூட்டு தேச இந்தியா ஏதாவது பாடம் கற்றுக் கொண்டாதா? அது போன்ற சாதீய வேறுபாடுகளை களைவதற்கு எத்தனை வலிமையான சட்டங்களை பாய்ச்சி மாக்களை மக்களாக்கி வைத்திருக்கிறது? காலம் நகர்ந்திருக்கிறதே ஒழிய, ஏதாவது மனித மனங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? அதனையொட்டிய கற்றறிந்தவர்களின் உழைப்பெங்கே? ஏன் அந்த லைம் லைட்டில் அமர்ந்திருக்கும் பெருசுகள் இதனைப் பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை?

இப்படி குழுமங்களாக வாழ்வது ஆஃப்ரிகா சமவெளிகளில் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நம்மை நரி அடித்து தின்றுவிடாமல் இருக்கவும், பிற காட்டுமிராண்டி கூட்டமும் தான் உண்ணும் உணவையும், நிலத்தையும் அபகரித்து கொள்வதினிலிருந்து தற்காத்து வைத்து கொள்ள தேவைப்பட்டிருக்கலாம். காட்டுமிராண்டித் தோல் இருக்கின்னு உணர நினைத்தால் இங்கே அழுத்தி படிச்சிப்போம் மேலே.

ஆனால் இன்றுதான் நாம் நவீன காட்டுமிராண்டிகளாகிவிட்டோமே, நமக்கென்று அழைத்துக் கொள்ள ஒரு நாடு, அரசாங்கம், சட்டம் என்று இருக்கிறது. ஒருவன் வாய்க்குள் போட்ட சோற்றை மற்றொருவன் பிடிங்கி தின்று விட முடியாது, பாதுகாப்பு இருக்கிறது. அதனைத் தவிர்த்து எதனை நாம் தற்காத்து வைத்து அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்ல இப்படி 500 மீட்டர் இடைவெளிக்குள் இருக்கும் உனது வீட்டில் இருப்பவனும் அவன் வீட்டில் இருப்பவனும் இப்படி மூர்க்கமாக தாக்கிக் கொள்கிறீர்கள்?

சரி மேல்தட்டில் அமர்ந்திருக்கும் அந்தக் குழு குடிக்கும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும் என்ன புதன் கிரகத்திலிருந்து இறக்குமதி செய்து குடித்து, சுவாசிக்கிறார்களா? இரண்டு பேரும் பொது இடத்தில் மலம், ஜலம் கழித்து அவை இரண்டற கலந்து நாம் அனைவரும் தானே மீண்டும் உள்ளே தள்ளி உணவாக உண்கிறோம். வளர்கிறோம். அதெப்படி, ஒருத்தனில் இருந்து மற்றொருவன் உயர்வாகிவிடுகிறான்?

யார் நமது ஒற்றுமையை விளக்க பாடம் எடுப்பது? சைனாக்காரனா? இல்லை இயற்கை பேரழிவா? எனக்கு இப்பொழுது இதுதான் தோன்றுகிறது. பூமியில் அதுவும் குறிப்பாக இந்தியாவில் ஜனத்தொகை வீங்கி வெடிக்கிறது. இயற்கையாகவே ஒரு வழியை கண்டடைந்தாலே ஒழிய இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாத ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் ஒரு சதுர கிலோமீட்டரில் 35 மக்கள் வாழ்கிறார்கள் என்றால் நமது தேசத்தில் சராசரியாக 350 பேர்களை கொண்டிருக்கிறோம்.

அதனையொட்டிய இயற்கைசார் தேவைகளை கொண்டே பார்த்தால் கூட, குடிநீருக்கும், சுத்த காத்திற்கும் கூட பெரும் அடிதடி தேவைப்படப் போகிறது. இந்த லட்சணத்தில் அவன் இவனை செத்த சிவப்பாய் இருக்கிறான், என் மூக்கு நீளம் அவனது சிறுசின்னு அதே சாக்கடைக்குள் கிடந்து கொண்டு ஒருத்தன் மீது இன்னொருவன் கல்லை விட்டெறிந்து கொண்டு நாம் இன்னமும் ஒரு லட்சம் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த அதே ஹோமோ எரெக்டஸ் குரங்கேதான் என்று நிரூபிக்கிறோமே? இதனை எதனில் சேர்ப்பது?

சரி இயற்கையே இப்படி ஒரு மக்கள் தொகை ஒழிப்பை தேர்ந்தெடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது, நமது மூளையின் செயல்பாடுகளையொற்றி நமக்கு நாமே குழி பறித்து கொள்வது. அதன் எதிர் முனையில் நின்று மிருக நிலையில் இருக்கும் நம் புத்தி செயல்பாட்டை எப்படி மனித நிலைக்கு நகர்த்துவது என்று ஏன் கிஞ்சித்தும் எண்ணுவது கிடையாது.

அந்த புகைப்படத்தில் பார்த்தோமானல், ஒரு மனிதனை. நாயை விடக் கேவலமான முறையில் அவன் வாழ்ந்த வீதியிலேயே வைத்து நடத்தப்பெறுவதாக தெரிகிறது. எனக்கு அந்த ஒரு அசையா படத்தினை பார்க்கும் பொழுதே, ஈழத்தில் தமிழர்கள் பட்டிருக்கக் கூடிய சிதைவு நினைவுக்கு பளிச்சென மின்னி மனத்திரையில் வெட்டி மறைகிறது.

அங்கு சிங்களவன் - தமிழன் என்ற இனவெறி இருக்கிறது. இங்கே என்ன கேடு, உங்களுக்கு? அங்கே ஏறி மிதித்து கொண்டு வரும் சிங்களவன் ஒரு நாள் சைனாக்காரனுடன் சேர்ந்து நம்மை பிடரியில் மிதித்தால் அப்பொழுதும் நாம் இருவரும் கம்புச் சண்டை போட்டு நம்முள்ளரயே அடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருப்போமா? அல்லது அவனை சந்திக்க தயாராவோமா? எவன் நமக்கு சரியான பாடத்தை நம் எருமை மூளையில் உறைக்கும்படி உணர வைப்பான்?

இல்ல மொத்தமா இயற்கையின் நகர்வின் பாதையிலேயே சென்று இப்படி வீதிக்கு வீதி, வீட்டிற்கு வீடு அடித்துக் கொண்டு சிறுகச் சிறுக முடித்துக் கொள்வோமா? அதுதான் இயற்கையின் திட்டமுமோ? சிந்திக்க மறுப்பின் எருமை மாட்டு நிலையிலேயே உழண்டு மிருக நிலையிலேயே மரணிப்பும் நிகழ்ந்து, நிகழ்ந்து மீண்டும் மீண்டும் மீசை முறுக்கிக் கொண்டே திரிந்து விடலாமா?

ஒரு குரங்கு எழுந்து வெட்ட வெளியில் நின்று பார்க்க எத்தனித்ததின் விளைவே இன்று புதன் கிரகத்திற்கு ரோபாட் அனுப்பி தண்ணீர் இருக்கிறதா என்று சிந்திக்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது. ஆனால், நம்மில் இன்னும் பலபேர் வெட்டவெளியில் நின்றபடியே உறைந்து விட்டோம்... பிற மனிதர்களோட சமமாக பயணிக்க திராணியற்று. விளைவு, மனித பிணங்கள். வீட்டுக்கு வீடு தலையணைக்கு கீழ் அருவாள்கள் வைத்துக் கொண்டு குரங்கு மூதாதையர்கள் மாதிரியே வாழ்க்கையை நகர்த்த சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா 2020 அல்ல இன்னும் 1000 வருடமானாலும் அங்கயேதான் நாம் தேங்கிக் கிடப்போம். போலோ, நைக்கி ஷு, டையும் மனிதனை வெளிப்புறத்தில்தான் மாற்றியிருக்கிறது பெயருக்கு பின்னான வெறீஈஈஈ ஷெட்டி, நாயர், ஐயர், புதிதாக வன்னி... போன்ற அடைமொழிகளுக்கு உள்ளாக ஒளிந்து கிடக்கிறது நம் பரிணாம ஓநாயின் கூரான, கோரமான பற்கள்.பி.கு: இந்த பதிவினை எழுதுவதற்கான ஜுவலை இங்கிருந்து கிடைச்சது. அதையெல்லாம் முழுசா படிச்சா நானும் பின்னோக்கி 50 ஆயிரம் வருஷம் நடக்கணும். அதுனாலே முழுசா படிக்கல இருந்தாலும்... ஒரு முறை பாத்து வைங்க. ஒரு தேசத்தின் எதிர்காலம் எங்கே ஒளிந்திருக்கிறது என்பதனையாவது அறிந்து கொள்ளலாம்.

50 comments:

ஓலை said...

Theka,

Kaattu miraandiyai avamathikka venaam. Avingalaavathu oru kuzhuvaaga irunthanar.

Thekkikattan|தெகா said...

ஓலை,

மூதாதையர்களுக்கு குழுயமைப்பு தேவைப்பட்டது காட்டு நாய்களிடமிருந்தும், கழுதை புலிகளிமிடருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள, ஆனால் நவீன காட்டுமிராண்டிகளுக்கு இந்த குழுயமைப்பு எதுக்கு?

அதுவும் சர்வதேச அரங்கில் தங்களை ஒரு இந்தியன், சைனீஸ், அமெரிக்கன் என்ற கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு அரசியல் நிகழ்த்தும் ஒரு காலச் சூழலில்...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//மூதாதையர்களுக்கு குழுயமைப்பு தேவைப்பட்டது காட்டு நாய்களிடமிருந்தும், கழுதை புலிகளிமிடருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள, ஆனால் நவீன காட்டுமிராண்டிகளுக்கு இந்த குழுயமைப்பு எதுக்கு?//
Well said!

தருமி said...

வெகு வெகு நியாயமான கோபம். ஆனால் பதில் ...?

Thekkikattan|தெகா said...

அனாமிகா - நன்றி.

**************************

தருமி,

//வெகு வெகு நியாயமான கோபம். ஆனால் பதில் ...?//

புரியுது. தொடர்ந்து நீங்களும் உங்க வாழ்வுச் சாலையெங்கும் இதே கேள்விகளை கேட்டு சிந்தித்து, சிந்தித்து பதிலேதும் கிடைக்காத ஒரு நிலையைடைந்திருப்பீர்கள்.

பதில் = விளைவுதான். கண் கூடாக கண்டு பழகிக்கொள்ள வேண்டியதுதான்.

ராஜ நடராஜன் said...

தெகா!வெளியே நின்று பார்க்கும் போது வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.எங்கிருந்து வருகிறது சாதி குறித்த தீவிரம் என்பதே புரியவில்லை.அதற்கு காரணம் முத்துராமலிங்கம் குறித்தோ இமானுவேல் சேகரன் குறித்தோ குறைந்த பட்ச எனது அறிவின்மையும் கூட காரணமாக இருக்கலாம்.இன்று சவுக்கு தளத்தில் இது குறித்த பதிவின் பின்னூட்டங்களை நோக்கும் போது மனிதர்களை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் நமது எண்ணங்கள் எல்லாம் போலித்தனமானவையாகவும் கணினி உபயோகிப்பாளர்களின் சாதி வன்மம் தலையெடுத்தாடுவது மட்டுமே உண்மையான மனதின் அடித்தளங்களை பிரதிபலிக்கிறதா என்ற சந்தேகமே வருகிறது.வெளியில் நடமாடும் போதாவது மனிதர்களாக வலம் வருகிறோமோ என்ற நம்பிக்கையில் மீண்டும் ஒரு பலத்த தாக்குதல்.வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
மன‌தில் உள்ளதை கொட்டி விட்டீர்கள்,

ஒரு மனிதன் இன்னொருவனை விட எப்படி உயர்வாக் பிறப்பாலோ,கொள்கையாலோ நினைக்க முடியும்?.

இது போன்ற பிரச்சினைகள் கடந்த 10 ஆண்டுகளாக் இல்லாததால் இனிமேல் நடக்காது என்ற எண்ணத்தில் மண்.

நமே நம்முடன் வாழும் சகோதரனை மதிக்க மறுத்தால் சிங்களரை குறை சொல்ல நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?.

அதில் இயற்கையை பதுகாப்போம்,இணைந்து வாழ்வோம் என்று கன்வில் மட்டும் நடக்கும் விஷயங்களை பற்றி யோசிக்க மட்டும் செய்வோம்!!!!!
நன்றி

JOTHIG ஜோதிஜி said...

முதலில் என் நன்றி ராசா. ரொம்ப தெளிவாக எழுதியிருக்காய். எவருக்கும் புரியவில்லை என்று சொல்ல முடியாத அளவிற்கு எழுத்து நடையில் அதிக கவனத்தை செலுத்தி இருக்கிறாய்.

நிறைய விசயங்கள் பேச வேண்டும். ஒவ்வொன்றாக வருகின்றேன்.

JOTHIG ஜோதிஜி said...

படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் என்ன வித்யாசம்?

உடை

பேச்சு

செயல்பாடு

பகுத்தறிவு

பொறுமை

சகிப்புத்தன்மை

ஆராய்ந்து நோக்கல்

கற்றுக் கொள்ளுதல் பழைய அனுபவத்தில் இருந்து.

இது போன்று சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆக மொத்தம் மேலே சொன்ன அத்தனை விசயங்களையும் நாம் படித்தவர்களிடம் எதிர்பார்ககலாம் தானே? சரி அப்ப படிக்காதவர்களிடம்?

JOTHIG ஜோதிஜி said...

மேலே சொன்ன எதையும் எதிர்பார்க்க முடியாது என்று தான் காலம் காலமாக பேசிக் கொண்டு எழுதிக் கொண்டு வருகின்றோம். ஆனால் நடைமுறை எதார்த்தம் என்பது பல ஆச்சரியங்களை நமக்கு கற்றுத் தந்து கொண்டே இருக்கினற்து. பொதுவா கிராமத்திற்குள் உள்ளே நுழைந்தால் அவர்களின் வாஞ்சையான அறிமுகம், உதவி போன்றவர்களை நகரத்தில் எதிர்பாக்க முடியுதா? நரகம் போல வாழ்க்கையை அமைத்துக் கொண்டு செயல்பாடுகளையும் நரகத்தனமாகவே உருவாக்கி வைத்துள்ளார்கள். அப்படி என்றால் பகுத்தறிவு எங்கே போனது?

JOTHIG ஜோதிஜி said...

ராஜ நடராஜன் மேலோட்டமாக சொல்லி உள்ளார்கள். என் அனுபவத்தில் கிராமத்தில் உள்ளவர்களுக்கு இந்த வெறியை ஊட்டுபவர்கள் படித்தவர்கள். கிராம சிந்தனை எளிதில் அடக்கி விடலாம். அதே சமயத்தில் அவர்களை கண நேரத்தில் காட்டு மிராண்டியாகவும் மாற்றி விடலாம். அந்த வேலையைத்தான் ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி, வாண்டையார் குரூப்புகள் முதல் கருணாநிதி, ஜெயலலிதா வரைக்கும் அவரவர்களுக்கு தெரிந்த அரசியல் ஆடுபுலி போல இவர்களை பலிகிடா ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

JOTHIG ஜோதிஜி said...

இதே ஜான்பாண்டியன் திட்டமிட்டது தெரியாதா? இது ஒரு பக்கம்.

தேவர் குருபூஜை போல இவர்கள் ஏன் கொண்டாடக்கூடாது? ஏன் அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள்? ஏன் கிருஷ்ணசாமி வாய்மூடி இருக்கிறார்? இது போன்ற பல கேள்விகள் இங்கு உண்டு.

ஆனால் எல்லாமே அரசியல்விளையாட்டுக்குள் அடங்கி விடுகின்றது. ஆனால் போன் உயிர் யாருடையது? அதைப்பற்றி யாருக்கு கவலை?

JOTHIG ஜோதிஜி said...

இதை விட எனக்கு மற்றொரு ஆச்சரியம் ஓடுக்கப்பட்டவர்கள் உயர்ந்த பதவிக்கு வந்த பிறகு தன்னை இந்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளவே பயப்டுகிறார்கள் அல்லது அதை கௌரவ குறைச்சலாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.

இளையராஜா முதல் இன்றைய ஐஏஎஸ் அதிகாரிகள் வரைக்கும் பலரையும் உதாரணம் காட்டமுடியும். இவர்களே தங்கள் மக்கள் நன்றாக இருக்க வேண்டும், நம்மைப் போல பின்னால் உள்ளவர்களும் வளர வேண்டும் வாழ வேண்டும் என்று எத்தனை பேர்கள் யோசிக்கின்றார்கள்?

செயல்படுகின்றார்கள்? அதற்கு பிறகு தானே அரசியல்வாதிகளை குறை சொல்ல முடியும்?

JOTHIG ஜோதிஜி said...

பிஎஸ் வீரப்பா சொன்னது போல

மக்கள் நாசமாக போகட்டும் என்பது தான் பலரின் விருப்பம் போல.

வளர்நது கொண்டு இருப்பவர்களும் இதைப் போலவே செயல்படுவதும் எனக்கு வருத்தமாக இருக்கு.

தாழ்த்தப்பட்ட நல விடுதிகளைப் போய் பாருங்க. எந்த லட்சண்த்தில் இருக்கிறது என்பதோடு அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது அக்கறை இருக்கின்றதா என்பதை பாருங்க. வெறுத்துப் போயிடுவீங்க.

மனரீதியான காயத்தோடு காலம் முழுக்க வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ என்பது போல பல சமயம் யோசித்துக் கொண்டே இருக்கின்றேன். இன்னும் 50 வருடமாகும். பாதி அளவுக்கு மாற்றம் பெற. இணையத்தில் பார்த்து இருக்கீங்களா? இவர்களே திருந்தாத போது பொதுமக்களிடம் நீங்க எப்படி எதிர்பார்க்க முடியுமா?

JOTHIG ஜோதிஜி said...

விடைபெறுகின்றேன்.

JOTHIG ஜோதிஜி said...

மிக நல்ல பதிவ.

Thekkikattan|தெகா said...

முண்டாசு, என்ன கபடியாடிட்டு போயிருக்கீங்க. இருங்க ஒண்ணு ஒண்ணா படிச்சிட்டு பேசுவோம் :)

வருண் said...

இந்த விசயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பக்கம்தான் எப்போதுமே. பார்ப்பனர்கள் தீட்டு னு மூட்டிவிட்டுட்டு குஞ்சப்பிடிச்சுக்கிட்டு கோயில் கொளம்னு ஓதிக்கிட்டு பொழைப்பை ஓட்டிப்புட்டானுக. இன்னைக்கு பெரிய யோக்கியனுக போல நாங்க எந்த உயிருக்கும் தீங்கு விளைவிப்-பதில்லை எல்லாம் இந்த திராவிட நாய்கள்தான் அவங்கள மட்டமா நெனைக்குதுகனு சொல்றாங்க. How can a "brahmin" think rationally? That is kind of nonsensical or not? He can NEVER. How can a Brahmin admit that he is guilty that they fucked up everything because of caste systme? They always plead "innocent" or not? !So, let us not worry about those idiots who always come up with some lame excuses and bullshit and what not. Moreover, பார்ப்பானுகள என்னைக்குமே மனசாட்சியோ, மனிதாபிமானமோ, வாழ்க்கைத் தத்துவமோ தெரியாத முட்டாள்கள். They only know how to survive caring/thinking only about themselves!
இன்னொரு பக்கம், தாழத்தப்பட்டவர்களை தன்னைவிடக் குறைவாக நினைக்கும் மற்ற திராவிட நாய்கள்( தேவனோ, மறவனோ, கள்ளனோ, நாடானோ, வன்னியனோ, கவுண்டனோ, பிள்ளைமகனோ, ரெட்டியோ, நாயக்கனோ, முதலியானோ, எந்த நாயா இருக்கட்டும்) மிகப்பெரிய குற்றவாளிகள். How can you think someone is inferior than you just because he is born in such and such family? If anybody, I mean anybody thinks including the God, that I am inferior because I am born in such and such family, I would hate that BASTARD! So, any fucking high-class dravidian or paappaan would be hated by me for such a thought. This is how I understand the feelings of a dalit. It really hurts when someone thinks you are inferior to him! They sometimes react violently and get carried away!

Thekkikattan|தெகா said...

//கணினி உபயோகிப்பாளர்களின் சாதி வன்மம் தலையெடுத்தாடுவது மட்டுமே உண்மையான மனதின் அடித்தளங்களை பிரதிபலிக்கிறதா என்ற சந்தேகமே வருகிறது.//

சந்தேகமே வேண்டாம் அது அப்படித்தான். பூனைக்குட்டி எப்பொழுதும் உள்ளரயே உறங்கி, முழித்துக் கொண்டுதான் இருக்கிறது.

//வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.//

உங்க வருத்தம் புரிகிறது ராஜநட. நீங்க உலக சபையில் நின்று கொண்டு நாம் ஒற்றுமையுடன் இருப்பதின் இன்றியமையாமைப் பற்றியும், சகோதரத்தின் முக்கியம் சார்ந்தும் யோச்சிக்கிறவர். ஆனா, நமது தள நிலவரமோ இன்னும் ஆஃப்ரிக்க சமவெளி வாழ்க்கையையொத்தே இருக்கிறது. என்ன செய்வது... ஆதங்கம் மட்டுமே எழுவதில் ஆச்சர்யமில்லை :(

Thekkikattan|தெகா said...

வருண்,

(மொத்தமான என்னைப் பற்றிய புரிதலுக்காக இந்த பின்னுட்டம் என்ற பார்வையில் வாசிக்கவும், வருண்...)

உங்கள் பின்னூட்டத்தில் உள்ள நியாயமான, ஆழமான ஆதங்கம் புரிந்து கொள்ளக் கூடியதே! இவைகளை எப்பொழுதும் கருத்தில் கொண்டே நம் போன்ற ஒரு சமூக பின்னணியில் இது போன்ற antidotes மிகச் சரியான அளவில் செலுத்தப்படுமாயின், diffuse பண்ணப் பயன்படும் நீண்ட கால தீர்வாக இருக்கும் என்று நினைத்தே சில நேரங்களில் காட்டடியாக நான் கலாச்சாரம், கலப்பு திருமணங்கள், விவகாரத்து, வரதட்சிணை போன்ற விசயங்களில் கரராக எனது பார்வையை முன் வைப்பதும்.

இப்பொழுது பரமக்குடியில் நடந்து கொண்டிருப்பதின் பின்னணி ஆயிரக்கணக்கான வருட வரலாற்றைக் கொண்டது. இவைகளுக்கு புகலிடமாக அமைவதும் அது போன்ற பழைய சிந்தாந்த தகவமைவுகளும், கட்டி காத்தல்களுமே.

பொறுமையாக விசயங்களை ஒவ்வொன்றாக உடைத்து பார்த்தால் ஒரு சிக்கலிருந்து இன்னொன்றை அவிழ்த்து முன்னேறும் பொழுது எனக்கு பட்டது திறந்த மனதை உருவாக்க முதலில் ஒரு ஊருக்குள், நகருக்குள், மாநிலத்திற்குள் வாழும் அனைவரும் சமமாக உணரப்பட வேண்டும். அதனையொட்டி சில விசயங்களை கழட்டி, தூசி தட்டி அப்புறப்படுத்தப் பட வேண்டும்.

இப்பொழுது நம் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு... அவ்வப்பொழுது பேசி மறந்து போய் விடக் கூடியதல்ல....

உங்க பின்னூட்டம் பிடித்திருக்கிறது!

வருண் said...

***JOTHIG ஜோதிஜி said...
இதை விட எனக்கு மற்றொரு ஆச்சரியம் ஓடுக்கப்பட்டவர்கள் உயர்ந்த பதவிக்கு வந்த பிறகு தன்னை இந்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளவே பயப்டுகிறார்கள் அல்லது அதை கௌரவ குறைச்சலாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.*** அவங்களுக்காக பரிதாப்படுறீங்களா இல்லைனா அவங்கள க்ரிடிசைஸ் பண்ணுறீங்களானு தெரியலை! ஒருவர் தன் சாதியைச் சொல்லிக்கொள்ளலைனா அது நல்ல விசயம்தானே? எல்லா இடத்திலும் சாதிச்சான்றிதழை கொண்டு போய் காட்டனுமா என்ன?

வருண் said...

***தேவர் குருபூஜை போல இவர்கள் ஏன் கொண்டாடக்கூடாது? ஏன் அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள்? ***

ஆத்தாவின் சிஷ்யர் நீங்க! நீங்கதான் சொல்லனும், ஆத்தாவின் ஆட்சியில் ஏன் இப்படி எல்லாம் நடக்குதுனு! இமானுவேல் சேகரனுக்கு குருபூஜை (அப்படினா என்னனு எனக்கு டீட்டயில் தெரியாது) செய்யவிடாமல், முக்குலத்தோர்-ஃப்ரெண்ட்லி ஆத்தாதான் சதி செய்றதாக அங்கே இங்கே படிச்சேன்.

வருண் said...

***இளையராஜா முதல் இன்றைய ஐஏஎஸ் அதிகாரிகள் வரைக்கும் பலரையும் உதாரணம் காட்டமுடியும். இவர்களே தங்கள் மக்கள் நன்றாக இருக்க வேண்டும், நம்மைப் போல பின்னால் உள்ளவர்களும் வளர வேண்டும் வாழ வேண்டும் என்று எத்தனை பேர்கள் யோசிக்கின்றார்கள்?***ஒபாமா ப்ளாக்னு தெரிவது போல, இளையராஜா என்னனு உலகத்துக்கே தெரியும்! இதை அவரு வெளியே சொல்லனுமா என்ன???நீங்க பரமக்குடி ராம்நாட் பக்கம் உள்ள மக்கள் பத்தி சரியாத் தெரியாமல் இருக்கீங்க. போஸ்ட் மாஸ்டர்ல இருந்து ஹெட் க்ளார்க், ஆர் ஐ, கலக்டர் சாதியெல்லாம் வந்து ஜாயின் பண்ணிய மொதல் நாளே கண்டுபிடிச்சிடுவாங்க! மரியாதையும் "பதவி" கேத்தாப்புல இருக்காது, சாதிக்கேத்தாப்புலதான் இருக்கும். இதுல மட்டும் ரொம்ப கவனமா இருப்பாங்க! பாரதீய ஞான பீடப்பரிசு பெற்றபோது, ஜெயகாந்தன் தன் சாதியை சொல்லிக்கிட்டது கேவலமா இருந்துச்சு. யாரும் எதுக்கு தன் சாதியச் சொல்லி "மோட்டிவேட்" பண்ணனும்னு தெரியலை?? Talents are everywhere. I thought we all know that!

JOTHIG ஜோதிஜி said...

வருண் நீங்க எந்த ஊர்ல பொறந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? பதிவுக்கு சம்மந்தம் இல்லாதது என்றாலும் தெரிவிக்கவும். காரணம் நான் எந்த ஊரைச் சேர்ந்தவன் பதிவுலகில் என் எழுத்துக்களை படிப்பவர்களுக்கு பெரும்பாலும் தெரியும்?

Rathi said...

தெகா,...... என்ன சொல்ல பிரச்சனையின் தீவிரமும் தீர்வும் எழுத்தின் ஆழத்தில், கோபத்தில் வெளிப்பட்டு நிற்கிறது. பெரும்பாலும் பிரச்னையை மட்டும் பேசிவிட்டு போய்விடுவார்கள். நீங்க தீர்வு சொல்ல முற்படுறது வித்தியாசபடுகிறது.

மற்றப் படி சொல்லவந்த விடயம் குறித்த எழுத்தின் படிமம் பற்றி சொல்லத்தெரியவில்லை..... I have no words to express it :)

AMAZING!!!

Thekkikattan|தெகா said...

சார்வாகன்,

//இது போன்ற பிரச்சினைகள் கடந்த 10 ஆண்டுகளாக் இல்லாததால் இனிமேல் நடக்காது என்ற எண்ணத்தில் மண்.//

இப்படியுமாக நம்புவீங்க. இன்னும் வெகு தொலைவு போவணுங்க.

//நமே நம்முடன் வாழும் சகோதரனை மதிக்க மறுத்தால் சிங்களரை குறை சொல்ல நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?//

வெறி பிடித்த நிலையில் யாரைக் கடிக்கிறோம் என்ன செய்கிறோம் என்றா அறிகிறது canids? போலவே, உள்ளுருக்குள் நேரக் கொலைக்காக அடித்து கொள்ள ஒரு மரபணுவும், வெளிநாட்டவர்கள் வந்து அடிக்கும் பொழுது இந்தியர்களாக இணைய மற்றுமொரு மரபணும் ஸ்விட்ச் ஆன்/ஆஃப் ஆகிக்கொள்ளும் போல...

Thekkikattan|தெகா said...

முண்டாசு,

//பொதுவா கிராமத்திற்குள் உள்ளே நுழைந்தால் அவர்களின் வாஞ்சையான அறிமுகம், உதவி போன்றவர்களை நகரத்தில் எதிர்பாக்க முடியுதா?//

//கிராம சிந்தனை எளிதில் அடக்கி விடலாம். அதே சமயத்தில் அவர்களை கண நேரத்தில் காட்டு மிராண்டியாகவும் மாற்றி விடலாம்.//

உண்மைதான் இருந்துச்சுதான். என்னக்கி இந்த விநாயக சதுர்த்தி மாதிரியான நவீன கலக விழாக்கல் வாரக்கணக்கில் கிராமங்களுக்குள் புகுந்ததோ அன்றிலிருந்து அரசியலும் ஆரம்பித்துவிட்டது. வருடம் ஒரு முறை கண்டிப்பாக வெட்டுக் கொத்து நடப்பதற்கான அடித்தளம் நன்றாகவே போடப்பட்டிருக்கிறது.

இரண்டாவது, நம்முள் எப்பொழுதும் இந்த சாதீயம் உள்ளே நொதித்து, ஊறிக் கொண்டிருந்த விசயம்தான் எங்குமே சென்று விடவில்லை. ஒரு 25 வருடங்களுக்கு முன்பாக இன்றையளவிற்கு இருக்கும் விழிப்புணர்வும், அரசாங்க மட்டத்தில் சமப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் சில முயற்சிகள் ஆயிரக்கணக்கான வருடங்களாக பிடித்து அமிழ்த்தி வைத்திருந்த நீர்க்குமிழிகள் நீரின் மட்டத்திற்கு வந்து வெடிக்க ஆரம்பித்திருக்கிறது.

அதனை சார்ந்தே இப்பொழுது நாம் காணும் விளைவு. இன்னும் எதிர் வரும் காலங்களில் ஒரு சமூகமாக நம்மை நகர்த்தி அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்ள தயார் இல்லையெனில் விளைவு இன்னும் மோசமடையவே செய்யும்.

Thekkikattan|தெகா said...

...தொடர்ச்சி

//தன்னை இந்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளவே பயப்டுகிறார்கள் அல்லது அதை கௌரவ குறைச்சலாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.//

சமூகம் அப்படியாகத்தானே ஒடுக்கி வைத்திருக்கிறது. ஏன் அவர்கள் அவ்வாறு தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டும்? ஏதோ ஒரு குலத்தில் பிறப்பது என்ன முயன்று ஈட்டிக் கொண்ட பட்டமா? இரண்டாயிரம் வருடங்களாக சிலுவை சுமக்கப்பட்டிருக்கிறது, அந்த சுமை ஏற்றிய மன வடுவை எப்படி ஓரிரு தலைமுறைகளிலேயே துடைத்தெறிந்து விட முடியும்? அந்த ரணத்தின் விளிம்பைக் கூட எட்டிப்பார்க்காத ஒருவனுக்கு அதன் வீச்சம் அறிவது இயலாத காரியமென்றே நினைக்கிறேன்.

இளையராஜா முதல் இன்றைய ஐஏஎஸ் அதிகாரிகள் வரைக்கும் பலரையும் உதாரணம் காட்டமுடியும். இவர்களே தங்கள் மக்கள் நன்றாக இருக்க வேண்டும், நம்மைப் போல பின்னால் உள்ளவர்களும் வளர வேண்டும் வாழ வேண்டும் என்று எத்தனை பேர்கள் யோசிக்கின்றார்கள்?

அவர்கள் எப்படி உதவலாம் என்று நினைக்கிறீர்கள்? அப்படியாக குழு ரீதியில் இயங்கினால் இப்பொழுது என்ன பரமக்குடியில் பார்க்கிறோமோ அதே திசையில் பயணிக்காத.

வருண் said...

இந்தக் கலவரம் எல்லாம் நடக்கிறதுக்கு 20 மைல் ரேடியஸ்லதான் நான் பொறந்து வளர்ந்ததுங்க, ஜோதிஜி. 1957, 1979, இப்படி 10 அல்லது 20 வருடத்துக்கு ஒரு முறை இதே எழவு வரும். காமராஜர் ஆட்சி காலத்தில்மட்டும்தான் அரசாங்கம் தேவர்களுக்கு எதிரா செயல்பட்டது. அ தி மு க ஆட்சியில் பொதுவா தலித்கல்தான் கொல்லப்படுவாங்க. இந்த முறை ஆத்தாவுக்கு இருக்கு ஆப்பு!
----------

ஹிந்துவிலிருந்து..

You have put in your opinion very courageously this time. Discrimination and inequalities towards the dalits are so prominent that this time the resentment has become a total tragedy. The government can go on having various inquiries and commissions but the death of the seven innocent people, who staged their agitation of social and economic deprivation could have been avoided. Democracy is so gullible that the process has found the bullets of carnage and not the value of interlocution. The government of Jayalalitha could do a lot for the dalits in Tamilnadu who do not even comprise 6% of the population then the mere rhetoric of the DMK government but she has chosen otherwise. This is a very sad incident. People of the land are killed for their differences. It sums that the dalits are living in fear amidst social and economic deprivation. The question is: do they have a right to live? What a shame!
from: Richard Kamalanathan
Posted on: Sep 14, 2011 at 13:31 IST

Victims of such clashes often turn to anti-social acts, as the society (represented by the government) was against them. The local politicians or government officials could have mediated and settled the problem. That would have avoided the problem at the root.
from: Rajesh
Posted on: Sep 14, 2011 at 14:06 IST

I totally agree with the editorial. I am of the view if Thevar Guru pooja is a Government Sponsored Function and the Immanuel Sekaran's Guru Pooja should also be made a Government Sponsored Function. Though Thevar is believed to be a reformer and saint by the intermediate caste grouping of Thevars, every caste has such a belief and a leader for theselves. I don't believe the government is treating the castes on par. I recommend Guru Pooja for every caste would be one soluion or No Guru Pooja allowed for any caste Period.
from: Saravanan Shanmugam

JOTHIG ஜோதிஜி said...
This comment has been removed by the author.
JOTHIG ஜோதிஜி said...
This comment has been removed by the author.
JOTHIG ஜோதிஜி said...

ஆத்தாவின் சிஷ்யர் நீங்க! நீங்கதான் சொல்லனும்

எப்பூடி இந்த உண்மையை இத்தனை கரிகட்டா கண்டுபிடிச்சுங்கீங்க.

அந்தம்மாக்கிட்ட கூட நான் இதைப்பற்றி யாருக்கிட்டேயும் சொல்லக்கூடாது என்று அல்லவா சொல்லி வைத்து இருக்கேன். காரணம் சுதாகரனுக்கு அப்பறம் என்னைத்தான் தத்துபிள்ளையா தேர்ந்தெடுக்க பேச்சு வார்த்தை நடந்துகிட்டு இருக்கு.

என்னமோ போங்க. அப்டி ஏதாவது நடந்தா நிச்சயம் உங்களுக்கும் எதாவது கொடுப்பேன்.

காவ்யா said...

Thekitan

U r from that area. I thought u wd go deeper than others in analysing y such clashes between the 2 castes. Instead, u hav just expressed ur emotions.

Y s it happening only there? Not in Tirunelveli, Tuticorin, Nagarcoil or in other districts ? In TN, and Tuticorin districts, too, both castes live closely in large numbers. Y no such clashes there?

வருண் said...

It gets started for some silly reason. Mostly after they get drunk on a festival day. When are as a gang they dont go easy. The start talking loud and filthy. They beat up someone who is alone. Then it gets bigger. It is not true the fight is always between these two communities. I know maRavar and agambadiyaar fight each other too and end up killing each other.

ஒரு பீடி கொடுக்கலைனு சண்டை ஆரம்பிச்சு கொலையில் போயி நிக்கும்.

Anyway, in this particular case, both communities are strength-wise strong and powerful. That is the reason. If one ignores and keeps his temper cool there wont be any fight. But they both are emotional.

BTW, there used to a college called sethupathy govt arts college, where all these fights get started. In this particular case, thevars/agampadiyaar often get BEATEN UP by dalits for bad-mouthing or whatsoever.

வருண் said...

ஜோதிஜி,

ரொம்ப கஷ்டப்பட்டு மூனாவது பின்னூட்டத்தில் சொல்ல வந்தத சொல்லீட்டிங்க போல! Just kidding! :)

காவ்யா said...

//Anyway, in this particular case, both communities are strength-wise strong and powerful.//

அப்படியென்றால் வருண். அங்கு நடப்பது சாதிக்கலவரமல்ல. இரு பெரும்சக்திகளுக்கிடையில் நடக்கும் நீயா நானா என்ற மல்லுக்கட்டுப்போராட்டமே. இதிலெங்கே தீண்டாமை, தலித்து என்றெல்லாம் வருகின்றன ?

வருண் said...

One can argue like that. But if you read the responses if bloggers you can see their mind set. The dalits are provoked by using some "slurs" and eventually the death toll also from dalits. There are very few incidents where thevars get killed during this kind of fight as they have a bigger vote banks. Why is that? You should ask yourself! Are they less violent? Or they are always innocent? It is complicated..

காவ்யா said...

//Are they less violent? Or they are always innocent? It is complicated..//

இந்த வரி புரியவைல்லை வருண். எனக்கு அவ்வளவு ஆங்கில ஞானம் இல்லை.

உங்கள் வரி பள்ளர்களைக் குறிக்கின்றதா அல்லது முக்குலத்தோரையா ?

போகட்டும். அங்கே முக்குலத்தோர் ஓட்டுக்கள் அதிகம். எனவே அவர்களில் செல்வாக்கு மேலும் அவர்கள் வலிமைமிக்கோர் அதாவது ஆயுத, பணம், அரசியல் பலம் என்று.

இப்போது அங்கே நிலைமை வேறாக மாறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது, பள்ளர்கள் ஓட்டுக்கள் அதிகம். அவர்கள 90 விழுக்காடு மக்கட்தொகையில், பண பலம், அரசியல் பலம் (ஓட்டுக்களினால்), மற்றும் ஆயுத பலம் (பணமும் மக்கட்தொகையும் இருந்தால் இது வரும்)

இப்போது சொல்லுங்கள். அங்கு சாதிக்கலவரங்கள் வருமா ? பள்ளர்களின் மீதி சாதிப்பேச்சு இழுக்குகள் (caste slurs) நடைபெறுமா ?

Thekkikattan|தெகா said...

வாங்க காவ்யா,

//Instead, u hav just expressed ur emotions.//

நான் அந்த ஊர்களுக்கு அண்மையில் வாழ நேர்ந்தவன், நிரைய பார்த்து, கேட்டு வளர்ந்தவன் தான் என்ற போதிலும் அத்தனை தூரம் இதற்குள் ஊறி உப்பிப் போகும் ஒரு வாழ்வுச் சூழல் அமையவில்லை.

ஆனால், இதன் பின்னணியை சற்றே உட்நோக்கி பார்க்கும் பொழுது மனிதர்களாக வாழ, பரிணமிக்க அவர்கள் பயன்படுத்தும் வாழ்க்கை அணுகு முறை effortlessஆக நகர்கிறது following simply animalistic instinct!

மேலே வருண் குறிப்பிட்ட மாதிரி வேலை வாய்ப்பும், அதற்கான சூழ்நிலையும் சரிவர அமையாததால், வெட்டிக் கும்பல் வெள்ளை வேஷ்டி, சட்டை சகிதமாக டீக் கடை முக்கங்களில் குழுமி ஊர் வம்பு பேசி பீடித்துண்டு பிரச்சினையில் ஆரம்பித்து, எதிர்த்த பெஞ்சில் அவன் அமர்ந்து விட்டான், பெட்டிக் கடையில் அய்யா வந்து பொருள் வாங்க நிற்கிறேன் எனக்கு முன்னால் வந்த அவனுக்கு நீ எடுத்து கொடுத்துக் கொண்டிருக்கிறாயா?ங்கிற ரேஞ்சிற்கு ஒன்னா இரண்டா பிரச்சினைகளின் ஊற்று அறிய.

அப்படியே யோசிச்சிப் பார்த்தா மரத்தடிக்கு கீழே கூட்டமாக கிடைத்த விலங்குத் தோல்களை போர்த்திக் கொண்டு கல், கப்படா, கம்பு சகிதமாக பரட்டைத் தலையுடன் 50ஆயிரம் வருடங்களும் முன் நடத்திய அதே எல்லை/குழுமப் போர் இன்றளவும் குரங்கினங்களில் வனத்தினுள் இருப்பதனைப் போன்றே.

//Not in Tirunelveli, Tuticorin, Nagarcoil or in other districts ?//

why do you think, most of the people converted to other religion and in turn they do out number other castes people? or still the other castes people are around but educated and civilized :)

வருண் said...

காவ்யா: நான் அங்கே சொன்னது முக்குலத்தோரைத்தான். கடைசியில் கூட்டிக்கழிச்சு இழப்புனு பார்க்கும்போது தலித்துக்குத்தான் உயிர் சேதம் இந்தக் கலவரத்தில் வந்துள்ளது. இது ஒரு வழியாக முடிந்தாலும், அவங்க மனதில் இருந்து இந்த இழப்பு அகலாது.

-------------
***இப்போது அங்கே நிலைமை வேறாக மாறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது, பள்ளர்கள் ஓட்டுக்கள் அதிகம். அவர்கள 90 விழுக்காடு மக்கட்தொகையில், பண பலம், அரசியல் பலம் (ஓட்டுக்களினால்), மற்றும் ஆயுத பலம் (பணமும் மக்கட்தொகையும் இருந்தால் இது வரும்)

இப்போது சொல்லுங்கள். அங்கு சாதிக்கலவரங்கள் வருமா ? பள்ளர்களின் மீதி சாதிப்பேச்சு இழுக்குகள் (caste slurs) நடைபெறுமா ?***

வராதுனுதான் நெனைக்கிறேன். மெஜாரிட்டியாக இருக்கும்போது அந்த இடங்களில் இந்தப்பிரச்சினை வருவதில்லை/வர்ராது னு நெனைக்கிறேன்! :)

---------------

***I totally agree with the editorial. I am of the view if Thevar Guru pooja is a Government Sponsored Function and the Immanuel Sekaran's Guru Pooja should also be made a Government Sponsored Function. Though Thevar is believed to be a reformer and saint by the intermediate caste grouping of Thevars, every caste has such a belief and a leader for theselves. I don't believe the government is treating the castes on par. I recommend Guru Pooja for every caste would be one soluion or No Guru Pooja allowed for any caste Period.
from: Saravanan Shanmugam***

மேலே சொல்லியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

வருண் said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

//No Guru Pooja allowed for any caste Period.//

வருண், எனக்கு என்னவோ நமது நாட்டில் நிலவும் சாதீகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இப்படி சாதீக்கொரு ஞானிகள் இருக்கத்தான் செய்வார்கள்.

ஒவ்வொரு ஜாதீயிலும் தூக்கிப் பிடிக்க ஆரம்பித்தால் என்னாகிறது (நியாயம்தானே அவ்வாறு எண்ணம் வருவதும்)? அரசாங்கம் சுத்தமாக சாதீ அடிப்படையில் எந்த ஒரு விழாவினையும் எடுக்காதவாறு தடை செய்வதே தொலை தூர தீர்விற்கு வழி வகுக்கும்.

Thekkikattan|தெகா said...

//by an anonymous moron//

i thought that guy wants to engage a conversation to make himself clear about your stand...

wait will remove it :)

வருண் said...

தெகா: எல்லா நேரத்திலும் இவர்கள்தான் எப்போவும் தப்பு செய்றாங்கனு ஒரு பக்கமாக என்னால கையைக் காட்ட முடியாது.

பை த வே,

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மெஜாரிட்டியாக இருந்து இருந்தால், அவர்களை "தாழ்த்தப்படுத்தியே" இருக்க மாட்டாங்க!

வருண் said...

சரவணன் ஷண்முகம் சொல்வது சரிதான். ஆனால், ஆத்தாவோ, மு க வோ அபப்டி ஒரு சட்டம் கொண்டுவர முடியுமா?

They both compete each other in encouraging guru pooja for thevar..

Check this out..

"CM, leaders pay respect to Muthuramalinga Thevar "

We all know why she does that. Because they have a BIGGER VOTE BANK!

Will she pay respect for Imanuel Sankaran?? Or Has she ever done like that??

Thekkikattan|தெகா said...

//தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மெஜாரிட்டியாக இருந்து இருந்தால், அவர்களை "தாழ்த்தப்படுத்தியே" இருக்க மாட்டாங்க!//

அப்போ மைனாரிடியா இருந்து விட்டுக் கொடுத்துப் போகும் பண்பும் இருந்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு எத்தனை நூற்றாண்டுகள் வேண்டுமானாலும் கொட்டடியில் வைத்து வேலை வாங்கலாமா?

மற்ற மைனாரிடிகளும் இருக்கிறார்கள்தானே, எப்படி எப்பொழுதும் தங்களை மிக்க உயரத்திலேயே வைத்து பார்த்துக் கொள்ள முடிகிறது? எந்த ஒரு வளர்ந்த சமூகத்திற்கும் அடிமைகள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்?

அந்த தேவைகளையொட்டி கடவுளர்களும் எக்ஸ்க்யூஸ் செய்து வைத்து விடுகிறார்கள் நீதி/நியாயம்/தர்மம் எல்லாம்... எப்போதும் உள்ள கதைதானே, வருண்.

வருண் said...

இங்கே பாருங்க நம்ம அரசியல்வாதிகளை..

***2007 centenary celebrations

On October 30, 2007, the birth centenary of Pasumpon Muthuramalingam Thevar was celebrated. Tamil Nadu Chief Minister M. Karunanidhi took part in the celebrations in Pasumpon village.[9] This was the first time in two decades that Karunanidhi participated in Thevar Jayanthi.[10] At the celebrations, Karunanidhi suggested that Madurai Airport be renamed after Pasumpon Muthuramalingam Thevar. These moves were seen as an attempt by Karunanidhi's Dravida Munnetra Kazhagam (DMK) party to challenge the supremacy of the rival All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) over the Thevar community. The AIADMK leader J. Jayalalitha criticized Karunanidhi's participation in the Thevar Jayanthi centenary programe, stating that he did not believe in Thevar's ideas. Moreover, she claimed that her previous government had allocated 30 million rupees for the Thevar Jayanthi centenary, but that Karunanidhi's government had spent only five million rupees.[10]***

தலித்துக்கள் மக்கள்தொகையில் இதே அளவுக்கு இருந்தால், அவர்கள காலை நக்குவானுக! இவர்கள்தான் நம்ம அரசியல்வாதிகள்!

வருண் said...

***அப்போ மைனாரிடியா இருந்து விட்டுக் கொடுத்துப் போகும் பண்பும் இருந்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு எத்தனை நூற்றாண்டுகள் வேண்டுமானாலும் கொட்டடியில் வைத்து வேலை வாங்கலாமா?***

இனிமேல் மற்றவர்களை, அடக்கி, அதட்டி வாழமுடியாதுங்க!

***மற்ற மைனாரிடிகளும் இருக்கிறார்கள்தானே, எப்படி எப்பொழுதும் தங்களை மிக்க உயரத்திலேயே வைத்து பார்த்துக் கொள்ள முடிகிறது?***

நம்மாளு எல்லாம் முட்டாப்பசங்கங்க! நம் இனத்தவரையே மதிக்கத் தெரியாது. பார்ப்பனர்களை வணங்குவானுகள், வெள்லைக்காரனை "தொரை"னு சொல்லிக்கிட்டு கப்பம் வசூலிச்சுக்கொடுப்பானுக, மாமாவேஅலிகூட பண்ணுவானுக (இப்படித்தான் இந்த "வீரர்கள்" ஆண்டார்கள்). ஆனால் நம் திராவிட இனத்தவரை சகோதரனா நினைக்காமல் இழிவுபடுத்துவானுக. இவனுகதான் திராவிட முட்டாள்கள்!

வருண் said...

காவ்யா அவர்கள் கேள்வி மட்டும்தான் கேப்பாங்க போல! ஒரு க்ரிடிக்கல் ஸ்டேட்மெண்ட்ல அவர்கள் ஒப்பீனியன் சொல்லச்சொன்னால் பதிலையே காணோம்! :(

Related Posts with Thumbnails