நேற்றைய நினைவுகள்
பனிப் புகையாக காற்றில்
முன் இருப்பை ஞாபகமூட்டி
காலப்பெருவெளியில் கரைந்தபடி
நிழலாடிக் கொண்டிருக்கிறது...
புலன்களுக்குப் பிடிபடாத நாளைய
பயங்களும் நம்பிக்கைகளும்
இழுத்துக் கட்டிய
நுண்ணிழையில் ஊசலாடிக்காட்ட...
இன்றைய நாளோ
அவை மடிதுயிலுறங்கி
நேற்றும் நாளையுமான குவியத்தில்
சூன்யமாக்கி கல்லெறிய
மனக் குளத்தில் அலைகளாக
நினைவுக் கறையான்கள்
மெல்ல முன்னேறி
மென்றுகொண்டிருக்கிறது!
6 comments:
வாவ்!
முதலில் படத்துக்கு. அப்புறம் கவிதைக்கு:)!
நன்றி ராம :))
கவிதையை விட படம் நிறைய கதை சொல்லுமே. கவிதை இன்னும் சிறப்பா கொடுக்கலாம் என்றே தோன்றுகிறது.
Nice.
nice ;)
படமும் கவிதையும் ரெண்டும் அழகு..
அனைவருக்கு நன்றி நண்பர்களே... :)
Post a Comment