தோலுரிப்பதற்கெனவே
எனைச் சுற்றிலும்
சிதில மனித மனங்கள்
தினப்படி உதிர
சிதிலங்களாக உதிர்ந்து விழும்
எதிர்பார்ப்புக் கோட்டைகள்
அந்த மணல் கோபுரங்களைப் போலவே...
பீராயப்படாத சிதில எச்சங்கள்
எப்பொழுதும் மன அழுக்குகளாக
கசிந்து படர்ந்து கொண்டேயிருக்கிறது...
துடைக்கத் துடைக்க
அகத்தின் மீது படியும்
அந்த கண்ணாடி நீராவியினையொத்தே...
கழட்டி முடிக்கும் நாளில்
புது நாணயமென
திறந்தே கெடக்கிறது
மணல் குழி!
8 comments:
அருமை சகோ!!!!!!!!!!!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
நன்றி
என்ன ஆச்சு?
கவிதையெல்லாம் அருவி மாதிரி கொட்டுது?
ஆனால் அருவியை, மரத்தை, காட்டுக்குள் பார்த்த விலங்குகளை ஆடாமல் அசையாமல் வெகு நேரம் நின்று தவம் போல் நீவிர் எடுத்த புகைப்பட ஈடுபாடு இந்த கவிதையை விட எனக்கு நம்ப முடியாத அதிசயமாக இருக்குது.
நல்ல வாத்தியார் ஆக வேண்டிய பிள்ளையைக் கொண்டு போய் நாறத்தனமான நாட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்த்த அந்த விதி வலியது.
பாம்பு சட்டைய கழட்டி வெச்சிட்டு குளிக்கப் போனதையெல்லாமா படம் பிடிப்பாங்க:)
ஜோதிஜி, அவர் இப்போ கவிதை தவம் செய்யுறார் போல. அவர் இப்ப கூட நல்ல வாத்தியாரா கவிதைப்பாடம் நடத்துறார். அவரை அவர் போக்கில் விட்டுடுங்க.
ராஜநட, I like your sense of humor :)
பாம்பு சட்டைய கழட்டி வெச்சிட்டு குளிக்கப் போனதையெல்லாமா படம் பிடிப்பாங்க:)//
புள்ளங்களா... இந்த பாம்புச் சட்டை புகைப்படம் என்னுதில்லங்கோவ்வ்வ்... கிடைச்சா சூட்டிங் போட்டுருவோம். இது கூகிளான் கொடுத்தது. :)
புது நாணயம் என மனது திறந்துகிடக்க என்னதான் பண்ணுறது தெகா....
தெகா, மனித மனங்களையும், சுயம் காட்டும் அனுபவமும் அழகாய் சொல்கிறது கவிதை.
பதிவுலக விதியும் ஜோதிஜி சொன்னது போல் வலியது தான் போலும் :) வாசகர் பரிந்துரைக்கு போகவேண்டியது. இன்னும் இங்கேயே.....
//எதிர்பார்ப்புக் கோட்டைகள்
அந்த மணல் கோபுரங்களைப் போலவே...//
அருமை.
நல்ல கவிதை
Post a Comment