எப்பொழுதும் வெடித்துவிடுவேனென்று
நுனிக்கிளையில் தொங்கியவாறே
என்னுள் பூமியை விரித்துக்கொண்டிருந்தேன்
இப்பொழுதோ அப்பொழுதோ
என்மீது விழும்
மற்றுமொரு மழைத் துளியொன்று
காரணமேயின்றி
என் உலகத்தை
சிதைக்க
என்னைச் சுற்றிலும் விழுந்து
கரைந்து கொண்டிருக்கின்றன...
தூரத்திலொருவர் தனது
நீண்ட நெடிய ஆசையாக
வீடொன்றை
நிதானமாக என்னுள்
எழுப்பிக் கொண்டிருந்தார்
எனதிருப்பையறியாது!
P.S: Discussion in Buzz ...ThuLiyalavu Thongal...
8 comments:
படமும் கவிதையும் மிக அருமை.
வலை வந்து கருத்துரை வழங்
கினிர் நன்றி
கடுமையான முதுகுவலி
காரணமாக அமர்ந்து கருத்துரை
வழங்க இயலவில்லை மன்னிக்க!
பின்னர் எழுதுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
யாரு!நீங்களா!கேமிராவா!
பொட்டிக்கடைய இழுத்து மூடிட்டு படம் புடிக்கிற வழியப் பாருங்க:)
ராம,
நன்றி-
*********************
புலவரே,
உடம்பை பார்த்துக்கோங்க. பிறகு எழுதுங்க. நன்றி-
******************
ராஜ நட,
பொட்டிக்கடைய இழுத்து மூடிட்டு படம் புடிக்கிற வழியப் பாருங்க:)//
தெரிஞ்சோ தெரியாமலோ மிகச் சரியா ஒரு அறிவுரை சொல்லுயிருக்கீங்க... வீட்டுக்காரிகிட்ட காமிச்சேன் முறைக்கிறா :)
நீர்க்குமுழி வாழ்க்கையென
நினையுங்கள் வாழ்க்கையென
நீர்க்குமுழி படம்போட்டீர்
நீள்கிளையை காட்டினரோ
புலவர் சா இராமாநுசம்
ராஜ நடாவை வழிமொழிகிறேன் தெகா..
கவிதையும் புகைப்படமும் கலக்கல்
Wow, Romba nalla irukku photo plus kavithai
தவறு - நன்றி!
**************
முகுந்தம்மா, எப்படி இருக்கீங்க நலமா?- நன்றி.
Post a Comment