பரிணாமத்தின் உச்சத்தில்
மனித குலம்
வெற்றிக்கு பின்னான
மரபணுவின் சூலுக்குள்
பால் கறக்கும் முன்பும்
பின்புமாக
கன்றை அவிழ்த்துவிடும்
சூட்சுமத்தில்
கண் சிமிட்டி பறையடிக்கிறது!
oo00oo
பி.கு: இந்த அரை டவுசர் ராமராசன் சார் பாட்டு ஒண்ணு பார்த்தேன். ரொம்ப பாசத்தோடு அப்படியே ஒரு பால் கறக்கிறவரின் திறமையோட கன்றுக் குட்டியத் தடவி, முத்தமிட்டுன்னு நடிப்பில சொக்க வைச்சு செய்யப் போற திருட்டு வேலைக்கு அச்சாரம் கொடுத்ததை பார்த்தவுடன் தோன்றியதுதான் மேலே உள்ள கவிஜா :).
எப்படியெல்லாம் நம்மோட வேல நடக்க இந்த மூளை தகிடுதத்தங்களை யோசிச்சு வைச்சிருக்கு :) - அதுவே நம்மை இன்னிக்கு பரிணாம ஏணியின் உச்சத்தில் வைச்சிருக்கிது. இருப்பினும் ஒரு மானை விட, ஒரு புலியை விட நமக்கு உடல் சார்பில் எந்த ஒரு சிறப்பு தற்காப்பு உப உறுப்புகளும் கிடையாது என்பது உண்மைதானே! சுயநலமே உயர்விற்கு வழி :))
அப்படியே இந்த பாட்டையும் பாருங்க... ராஜா அசத்தியிருப்பாரு ...
17 comments:
பாட்டைப் பார்த்து கவிதையா ? :)
\\சுயநலமே உயர்விற்கு வழி//
சுயநலமில்லன்னா எப்படி வாழறது? :)
நிறைய எழுத வேண்டும் என்று உள்ளே வந்தேன். கவிதைக்கு என்ன நான் எழுதுவது? ரெண்டு பேருமே இந்த கவித விசயத்தில் கத்துக்குட்டி.
நல்லிரவு.
ரெண்டு பேருமே இந்த கவித விசயத்தில் கத்துக்குட்டி.//
அடப் பாவி முண்டாசு... எவ்வளவு கடுமையா சிந்திச்சு அறிவியலை கவிதைக்குள்ளர கொண்டு வந்தா என்னய கன்றுக்(கத்துக்) குட்டின்னு சொல்லிட்டி பொயிட்டியளே :)))- ரசனை வேணும்டீஈஈ இதுக்கெல்லாம் ;)
எந்தக்காலத்தில் இருக்கீங்க? இப்போ எல்லாம் கண்ணுக்குட்டிய காட்டி ஏமாத்தாமலே மிஷினை வச்சு உறிஞ்சி எடுத்துடுறாங்களாம்! மாடுகளும், மனுஷனுக்கு "என்ன பால்தானே வேணும் உறிஞ்சிட்டு "நல்லாயிரு" ( நாசமாப்போ)" னு சபிச்சுட்விட்டு போயிடுதுகளாம் பெரிய மனசு செய்து!
http://en.wikipedia.org/wiki/Dairy_farming
Anyway, few quotes about selfishness! :)
"Your conscience is the measure of the honesty of your selfishness.
Listen to it carefully."!
— Richard Bach (Illusions)
---------------
"Almost every sinful action ever committed can be traced back to a selfish motive. It is a trait we hate in other people but justify in ourselves. "!
— Stephen Kendrick (The Love Dare)
---------------
nice!
தெகா, இதுக்கு முதல் நீங்க "செண்பகமே, செண்பகமே...." பாட்டு கேட்டதே இல்லையா!!!
சுயநலமும் மரபணுவில் கடத்தப்படுகிறதோ! அல்லது வாழ்க்கைச்சூழல் கற்றுக்கொடுக்கிறதோ.
ஜோதிஜி, நீங்க பாவியா, அப்பாவியா :))
சுயநலமில்லன்னா எப்படி வாழறது? :)//
முத்து, அப்படியும் வாழ முடியும்னுதானே பிரபல சாமீயார் குருவெல்லாம் அடிச்சு அடிச்சு சொல்லித் தருவாங்க. சரி முடியும்னு சாதா சுயநலத்தை கூட மறைச்சு வைச்சிக்கிட்டு ‘தன்னலமற்ற’ முறையிலன்னு பல்லக் கடிச்சுட்டு கொஞ்ச காலங்கள் கடத்திவிட்டு பார்த்தா...
இயற்கையமைப்பில சரியா போறதை மல்லுக்கட்டி நிப்பாட்டினா கடைசில ’இயற்கை தேர்ந்தெடுப்பு’ அமைப்புபடி இழந்து நிக்கிறது என்னவோ அரைகுறை புரிதலோட சுயநலமே கூடாதுங்கிற கூட்டமாத்தான் இருக்கு :)
அப்போ நீங்க சொல்லுறது சரிதான்.. இல்லாம வாழ முடியாதுதானோ!
வருண்,
இன்னும் இருபது முப்பது குடும்பங்களா வாழுற நம்மூரு கிராமப்புறங்களில் தனித்தனி குடும்பத்திற்கு ஒரு கறவை மாடா வைச்சிருக்கவங்க யாரும் மிஷினை வைச்செல்லாம் உறியற மாதிரி தெரியலேயே...
எனிவே... அந்த மேற்கோள்களுக்கு நன்றி!
ஏன் இப்படி தெகா...புதிய அவதாரம்..ஆமா எப்ப கத்துக்குட்டி ஆனீங்க..
சுயநலம் வேணுதாங்க தெகா..
அன்னா - நன்றி!
**************************
ரதி,
//இதுக்கு முதல் நீங்க "செண்பகமே, செண்பகமே...." பாட்டு கேட்டதே இல்லையா!!!//
பாத்திருக்கேன் தான். அப்பொல்லாம் இத்தனை மண்டை மூளை பிதுங்கி வழியல பாருங்க :))...
இப்போதானே ஓரளவிற்கு வாழுறதின் சூட்சும கலை எப்படி நம்மை சுத்தி அமைஞ்சிருக்கிற சூழல்கள் எந்த கட்டுமான அடிப்படையில் அமைந்திருக்கிறதுன்னு பிடிபட ஆரம்பிக்கிது. அதான் வேர்களை நோக்கி... :)
//சுயநலமும் மரபணுவில் கடத்தப்படுகிறதோ! அல்லது வாழ்க்கைச்சூழல் கற்றுக்கொடுக்கிறதோ. //
எல்லாம் கலந்த கலவையேயானாலும், மரபணுவில் பொதிக்கப்பட்டிருப்பது தலைக்கு மேலே தொங்கிட்டு இருக்கிற கத்தி மாதிரி இருக்கின்னு உணரவே நேரம்பிடிக்கிது, உணர்ந்திட்டாலும் அத ஒத்துக்க நடிப்பு இடம் கொடுக்க மாட்டேங்கிது :)) ...
//ஜோதிஜி, நீங்க பாவியா, அப்பாவியா :))//
பொற்ற்றாமை பிடிச்ச வெள்ளாவியது :D
ஆட்டுக்குட்டிக்கும் தேவையாய் இருக்கு
ஆவின் பால்.
இரண்டு வரியாக எழுதிட்டேன், இதை கவிதையாக ஒத்துக்கொள்ளுங்கள்....Please. :-)
புதிய அவதாரம்..ஆமா எப்ப கத்துக்குட்டி ஆனீங்க..//
தவறு,
புதிய அவதாரம் எப்பயெல்லாம் வெரைட்டி கொடுக்கணும்னு தோணுதோ அப்பயெல்லாம் எடுத்துக்கிறதுதான். ரொம்ப காலமாத்தான் செஞ்சிட்டு இருக்கேன். கவிஜா டேக்க க்ளிக்குங்க... தைரியமிருந்தா :)
//சுயநலம் வேணுதாங்க தெகா.//
அப்படித்தான் தெரியுது. அதன் ஓட்டத்திலயே விட்டுட்டா பிழைச்சுக் கெடக்கலாம். ரொம்ப கான்சியஸ்ஸா இருந்தா... கொஞ்சம் கஷ்டம்தேய்ன் :)
இரண்டு வரியாக எழுதிட்டேன், இதை கவிதையாக ஒத்துக்கொள்ளுங்கள்....Please. :-)//
வாங்க வடுவூராரே,
நீங்களுமா??!! :)) நீங்க நம்புனா நம்புங்க நீங்க சொன்னது ‘ஹைக்கூ’ - ஹாஹாஹா... நாம பாத்து வைச்சிக்கிட வேண்டியதுதான்.
சுயநலமே உயர்விற்கு வழி .....
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com
kavithai said...
சுயநலமே உயர்விற்கு வழி ....//
உங்களுக்கும் அந்த விசயம் புரிஞ்சிருச்சிச்சா :) , நன்றி வேதா...
வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....
அம்பாளடியாள்,
படமும் பேரும் மிரட்டுகிறது :)
வரும் பொழுதே பலத்த தட்டிக் கொடுத்தல்களோட வந்துருக்கீங்க. உங்க ப்ரோஃபைல் இன்ரோ கலக்கல்.
Enjoy all my KiRukkals :). நன்றி!
Post a Comment