எட்டியும் எட்டாததுமாக
வாழ்வுப்படிகள் எட்டியே
வெளிக்கிடும் கணம்தோறும்
கொள்ளளவைக் கொண்டே
கிரகித்து வந்தேன்...
போர்வை விலக்கி
எட்டிப் பார்த்த அந்திமத்தில்
இருளடைந்த அகத்தைத்தாண்டி
அப்போதே
உள்ளே மலர்ந்து கொண்டிருந்தேன்...
அழையா நட்பென
திடுமென என் தோள்பற்றி
உலுக்கி உள்ளிழுத்தது மரணம்.
P.S: Photo Courtesy: Net
19 comments:
Nice one.
அருமை தெ.கா.
தெகா, கவிதை முகம் நல்லாத்தானிருக்கு. அந்த கடைசி வரிகள் படித்து முடித்தபோது ஒரு கணம் உள்ளுக்குள் உறையவைத்தது.
அந்த, " அழையா நட்பென...." வரிகள் தான் நிறைய யோசிக்க வைக்குது.
நன்றி ஓலை-
நன்றி வானம்பாடிகள்- :)
ரதி,
//அந்த, " அழையா நட்பென...." வரிகள் தான் நிறைய யோசிக்க வைக்குது.//
அப்படியா! எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிது சொல்லுங்க தெரிஞ்சிக்குவோம் :) ...
//அழையா நட்பென
திடுமென என் தோள்பற்றி
உலுக்கி உள்ளிழுத்தது மரணம்.//
அருமை...
மிக நன்று.
அழையா நட்பென
திடுமென என் தோள்பற்றி
உலுக்கி உள்ளிழுத்தது மரணம்.
Oh! shock...diffrent thought..
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
அழையும் நட்பென மரணத்தை வரவேற்பது எங்ஙனம் தெகா...
அமைதிச்சாரல் - வணக்கமுங்க. நட்சத்திர வாரத்தில் நிறைய எதிர்பார்க்கிறோம் :) ...
ராமலக்ஷ்மி - நன்றி.
கவிதை - ஊக்கங்களுக்கு நன்றி.
அன்பின் தெ.கா - புரிந்த மாதிர்யும் புரியாத மாதிரியுமாக கவிதை எழுதத் துவங்கியாச்சா .... அழையா நட்பு .... ம்ம்ம்ம்ம்ம்ம் -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வணக்கம் மோகன் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
***************
அழையும் நட்பென மரணத்தை வரவேற்பது எங்ஙனம் தெகா...//
வணக்கம் தவறு,
The technique is very simple... ஒவ்வொரு நிமிடமும் நம்மை கடந்து செல்லும் பொழுதும் நாம் இறந்து பிறக்கிறோம் என்பதனை ஞாபகத்தில் கொண்டாலே, பழகிப்போன மரணம், அழைக்கும் நண்பனாகி விடுவான் :))) ... அதுக்காக என்கிட்ட அனுப்பி வைக்காதிங்க அவனை :p
உள்ளே மலர்ந்து கொண்டிருந்தேன்...
அழையா நட்பென
திடுமென என் தோள்பற்றி
உலுக்கி உள்ளிழுத்தது மரணம்.//
மலர்ந்த கணத்தில் மரணம் கொடுமைதான்.
புரிந்த மாதிர்யும் புரியாத மாதிரியுமாக கவிதை எழுதத் துவங்கியாச்சா ..//
வாங்க சீனா, புரியாம எழுதினாத்தான் அது கவிதையாம். கொஞ்சும் புரிஞ்சும் புரியாம எழுதினா அது கவிஜா(பேரு அழகா இருக்கில்ல) ;) ... நன்றி சீனா.
\\அப்போதே உள்ளே// ந்னா தாமதமான புரிதலோ..
இராஜராஜேஸ்வரி - தொடர்ந்த ஊங்கங்களுக்கு நன்றி :)
*******************
முத்து,
\\அப்போதே உள்ளே// ந்னா தாமதமான புரிதலோ... //
கடைசியா ஒரு வழியா புரிஞ்சிருச்சா :) ? தாமதம்னா தாமதம் it is too late அப்படின்னு சொல்லுவோம்ல அவ்ளோ தாமதம் :) - நன்றி!
அன்பின் தெ.கா - புரிந்த மாதிர்யும் புரியாத மாதிரியுமாக கவிதை எழுதத் துவங்கியாச்சா
இதுக்கு பேரு தான் கும்மாங்குத்து ஓய்.............. இனி கவிதையைப் பற்றி நினைப்பியா நினைப்பியா நினைப்பியா?
மரணம் பற்றிய பார்வை வித்தியாசமான வரிகளில்...
வாழ்த்துக்கள் நண்பரே!
ஷீ-நிசி said...
மரணம் பற்றிய பார்வை வித்தியாசமான வரிகளில்...//
நன்றி, நண்பரே!
Post a Comment