காய்ந்தபடியே மிதந்து கொண்டிருக்கிறேன்
இங்குமங்குமாக இலக்குகளற்று
ஆற்றின் இழுப்பிற்கிணங்க
கடந்து செல்லும் முற்கள்பட்டு
கடந்த வாழ்வின் ரணம் திறக்கிறது
மிதவை மட்டும் நிற்கவேயில்லை...
உதிரச் செல்களின்
இண்டு இடுக்களிலெல்லாம் நொதித்தலின்
கனமேற்றியபடியே
ஏதோ ஒரு சுழற்சியொன்று
என் கனமறிந்து உள்வாங்கி
எனதிடம் சென்றடைக்க
கண்ணாடி படிகமாக
4 comments:
சரியான இடம் கிடைக்கும் வரை அலைகழிப்புத்தான்..
யோவ் என்ன ஆச்சு? வீட்டுக்காரம்மா ஏதும் அடிக்கலையே? நல்ல நல்ல கவிதையெல்லாம் வர ஆரம்பித்து விட்டது?
மிகவும் நல்ல கவிதை.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
தெகா உள்தேடல் அதிகமாயிடுச்சு போலிருக்கே....ம்ம்ம்..நடத்துங்க...நடத்துங்க..
Post a Comment