Thursday, September 22, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - II


தருமி...! இவரை முதன் முதலில் எப்படி சந்திக்க வாய்ப்புகிட்டியது என்று சற்றே பின் சாய்ந்து அமர்ந்து பொறுமையாக யோசிக்க வேண்டியிருந்தது. அந்த சந்திப்பு எனது ஆங்கில வலைப்பூ பக்கத்தின் மூலமாகத்தான் அமைந்திருந்தது என்று நினைக்கிறேன். அங்கே அவரின் பாணியிலேயே ஒரு கேள்வி why we should be different? என்று கேட்டு ஒரு பதிவிட்டிருந்தற்கு இவர் கொடுத்த லிங்கில் சென்று பார்த்த பொழுதுதான், அங்கே ஒரு கடலளவிற்கு பொக்கிசங்களாக நிறைய பதிவுகள் மின்னிக் கொண்டிருந்தன.

அவைகளில் என்னை மீண்டும் சிந்திக்க தூண்டிய பதிவுகளாக அமைந்தது 49. நான் ஏன் மதம் மாறினேன்...? என்ற அவரின் தொடர்ப் பதிவுகள்தான். எல்லா வளர்ச்சி நிலைகளிலுமுள்ளவர்கள் அவசியம் படித்துப் பார்த்து தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் படி மிக நேர்த்தியாக அமைத்திருப்பார் அந்தப் பதிவுகளை. அதற்காக அவர் எவ்வளவு படித்திருக்கக் கூடும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுதே அவர் பொருட்டு இருக்கும் மரியாதை பல மடங்கு எகிறுகிறது. அதன் பிறகு அவரின் எல்லா பழைய பதிவுகளையும் தோண்டிப் படித்து பல பதிவுகளுக்கும் உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமெழுதியது இன்னமும் நினைவிருக்கிறது.

பிரிதொரு சமயம் இளவஞ்சி எனக்கு, என் காட்டான் பக்கத்தில் பின்னூட்ட அரசியலை சாடி எழுதியிருந்த பொழுது அங்கே வந்து எனக்கு அறிவுருத்தும் படியாக எழுதிய பின்னூட்டத்தின் மூலமாக அவரின் பதிவுகள் பக்கம் செல்ல நேர்ந்தது. இவரின் எழுத்து நடைக்கு நிகர் இவரே! அவரின் பல பதிவுகளை ரசித்துப் படித்து சிரித்து, சிந்திச்சிருக்கிறேன்.` அண்மையில் தோண்டி எடுத்துப் படித்து சிரித்து, சிந்தித்தது காலச்சுழிப்பில் தொலைந்(த்)தவைகள்.. . அதே தளத்தில் நிறைய புகைப்படங்களையும் சுட்டுத் தள்ளி நமக்கு வழங்கி வருகிறார்.

...இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!...

செல்வநாயகி, இவரைப் பற்றி நான் என்ன சொல்லவிருக்கிறது. நிறங்கள் என்ற தலைப்பில் பளுப்பில் இருக்கும் இவரின் வலைத்தளமே வாழ்வின் முரண்களை அதனிலிருந்தே சுட்டிக் காட்டுவதனைப் போல அமைத்து விளாசி வருகிறார் பல விசயங்களை. இங்கு அவரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க அனேக வாய்ப்புகளுண்டு. இவர் எழுத எடுத்துக் கொள்ளும் விசயங்கள், அதன் பொருட்டு அவரின் எண்ணங்கள் அதனை வெளிக்கொணர பயன் படுத்தும் மொழியின் ஆளுமை இவைகள் எல்லாமே இவர் வலைப் பக்கத்தின்பால் எனை இழுத்து வைத்திருக்கிறது.

கைராப்ட்ரான் (Chiroptera) அதாங்க நம்ம வவ்வாலு தலைகீழாக தொங்கிட்டே காத்துப் புக முடியாத இடத்திக்குள்ளரக் கூட நிஜ வவ்வாலுங்க அல்ட்ராசோனிக் சப்தத்தை அனுப்பி போகும் வழியில் உள்ள விசயங்களை அறிந்து கொள்வது மாதிரி, இவரின் தளத்தில் ஒரு சிறு நூலகத்திற்கு இணையான எல்லா படைப்புகளும் எளிமையான முறையில் திரட்டி தகவல்களாக தந்திருக்கிறார். ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி!! இப்படி ஒரு விவசாய முறை இருப்பதே அந்தப் பதிவின் மூலமாகத்தான் எனக்கு தெரிய வந்தது. இது போல ஆச்சர்ய மூட்டக் கூடிய பல பதிவுகள் அங்குண்டு.

6 comments:

Bibiliobibuli said...

உங்க மேய்ச்சல் நிலங்கள் உங்களோட அறிவுத்தேடலை பூர்த்தி செய்யுது போலத்தான் இருக்கு.

தருமி, அவர்களின் அந்தப் பதிவு பதிவு படித்தேன். கடவுளை அவரவர் அனுபவத்திற்கும், அறிவுத்தேடலுக்கும் ஏற்றாற்போல் தரிசனம் செய்வார்கள் போலும். நாங்களெல்லாம் மனிதவடிவில் மிருகங்களைப் பார்த்தபின் கடவுள் யாரென்று அறிந்து தெளிந்துகொண்டோம். நான் என்றால் அது என்போன்றவவர்களை சொன்னேன்.

ஜோதிஜி said...

செல்வநாயகி எழுதிய கவிதையை படித்து முடித்தவுடன் பல நாட்கள் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருந்தது. அதைத்விர மனதில் பட்டத்தை எழுத்தாக்கும் போது அவரின் தைரியத்தை பார்த்து வியந்து போயுள்ளேன்.

தருமி நிஜ வாழ்க்கையிலும் நான் கேள்விப்பட்டவரைக்கும் ஜெம்.

Unknown said...

உங்கள் பதிவு ஓபன் ஆகவெகு நேரம் எடுக்கின்றது ?
படித்து கமெண்ட் போடுவதற்குள்...:(

aotspr said...

மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு சூப்பர்......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

IlayaDhasan said...

நன்றாக மேயலாம் போல
சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

முகுந்த்; Amma said...

உங்கள் மேய்ச்சல் நிலங்களில் நாங்களும் நல்லா மேஞ்ச்சுகிறோம்..
தருமி அய்யாவின் படைப்புகளை பற்றிய தங்களின் அவதானிப்பு அருமை. இன்னும் நிறைய தேடலுக்காக காத்திருக்கிறோம்.

Related Posts with Thumbnails