என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (42)
- அனுபவம் (105)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (109)
- நினைவோடை (19)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (11)
- மருத்துவம் (2)
- முதுமை (13)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Monday, September 05, 2011
வார்த்தெடுப்பு...
Posted by Thekkikattan|தெகா at 11:41 AM 8 comments
Tuesday, August 30, 2011
துளியளவு தொங்கல் - w/photo

எப்பொழுதும் வெடித்துவிடுவேனென்று
நுனிக்கிளையில் தொங்கியவாறே
என்னுள் பூமியை விரித்துக்கொண்டிருந்தேன்
இப்பொழுதோ அப்பொழுதோ
என்மீது விழும்
மற்றுமொரு மழைத் துளியொன்று
காரணமேயின்றி
என் உலகத்தை
சிதைக்க
என்னைச் சுற்றிலும் விழுந்து
கரைந்து கொண்டிருக்கின்றன...
தூரத்திலொருவர் தனது
நீண்ட நெடிய ஆசையாக
வீடொன்றை
நிதானமாக என்னுள்
எழுப்பிக் கொண்டிருந்தார்
எனதிருப்பையறியாது!
P.S: Discussion in Buzz ...ThuLiyalavu Thongal...
Posted by Thekkikattan|தெகா at 4:17 PM 8 comments
Labels: அனுபவம், கவிதை, கவிஜா, புகைப்படங்கள்
Monday, August 22, 2011
துளிர்ப்பு...
உதிரச் செல்களின்
Posted by Thekkikattan|தெகா at 11:52 PM 4 comments
Saturday, August 20, 2011
நடந்த எப்படி ..? ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ் CBI அதிகாரி அதிர்ச்சி தகவல்.(VIdeo in)
Posted by Thekkikattan|தெகா at 12:33 PM 8 comments
Sunday, August 14, 2011
இது எப்படி சாத்தியமாகிறது...?
மறைந்த பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை அரக்க பரக்க தூக்கில் தொங்கவிட எத்தனித்து கொண்டிருக்கும் இந்த சூழலில், இணையத்தில் நடக்கும் உரையாடல்கள் சிலவை நாம் உண்மையிலேயே சிந்திப்பு திறனை இழந்து மீடியாக்கள் கொடுப்பதனை அப்படியே ஏற்றுக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்ளும் நிலைக்கு நகர்ந்து வெகு தூரம் சென்றுவிட்டோமோ என்று எண்ணச் செய்கிறது.
உலக அரங்கில் ஈழத்தில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது உண்மையே என்று சானல் 4 கொடுத்த காணொளி ஆவணப்படத்தின் மூலம் இந்த உலகத்தையே பதறச் செய்த செய்தி, இத்தனை பெரிய ஜனநாயகத்தை உள்ளடக்கிய ஒரு நாடு, காந்திய வழியில் செல்லும் அஹிம்சா நாட்டிற்கு பாரா முகம் காட்டும் வெறும் செய்தியாகிப் போனது. இப்பொழுது வேக வேகமாக 20 வருடங்களுக்கு முன்னால் குற்றம் சுமத்தப்பட்டு ஏற்கெனவே தண்டனையும் அனுபவித்தவர்களை மீண்டும் தூக்கிலிட வேண்டிய அவசரமென்ன, என்பது புரியவில்லை.
எங்குதான் சென்று யூ டர்ன் அடிப்போம் என்று பார்க்கலாம். இப்பொழுது ஒரே மொழி பேசினாலும் பல மனங்களை உள்ளடக்கி அதனதன் தேவைகளையொட்டி ஓடித் திரியும் உள்ளங்களுக்கென பொதுவானதொரு வாசிப்பு...
மேலே கூறிய அனைத்தும் இன்னமும் மனித நிலையில் ஆரோக்கிய வாழ்வினூடாக வளர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற எந்த ஒரு மனித மனத்திற்கும் பொருந்தக் கூடும். அது தவிர்த்து, தன் சுய வளர்ச்சிக்காகவும், லாபத்திற்காகவும் வாழும் இந்த ஒரு வாழ்க்கையில் இது போன்ற உணர்வுகளை தொலைத்து சக மனிதன் ஒருவன் பக்கத்து வீட்டில் அலறி துடித்து சாக நேரிடும் பொழுது எப்படி நம்மால் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேளிக்கை சாதனங்களின் ஒலி குப்பியை திருகி அங்கு ஒன்றுமே நடைபெறவில்லை என நடித்துக் கொண்டு நம் வழியிலேயே சொன்று கொண்டிருக்க முடியும்?Posted by Thekkikattan|தெகா at 9:35 PM 5 comments
Labels: ஈழம், உலகம், சமூகம், தூக்குத் தண்டனை, நிகழ்வுகள், வன்முறை
Thursday, August 04, 2011
சுயநலம்... (Inspired by ராமராஜன் பாடல்)
பி.கு: இந்த அரை டவுசர் ராமராசன் சார் பாட்டு ஒண்ணு பார்த்தேன். ரொம்ப பாசத்தோடு அப்படியே ஒரு பால் கறக்கிறவரின் திறமையோட கன்றுக் குட்டியத் தடவி, முத்தமிட்டுன்னு நடிப்பில சொக்க வைச்சு செய்யப் போற திருட்டு வேலைக்கு அச்சாரம் கொடுத்ததை பார்த்தவுடன் தோன்றியதுதான் மேலே உள்ள கவிஜா :).
எப்படியெல்லாம் நம்மோட வேல நடக்க இந்த மூளை தகிடுதத்தங்களை யோசிச்சு வைச்சிருக்கு :) - அதுவே நம்மை இன்னிக்கு பரிணாம ஏணியின் உச்சத்தில் வைச்சிருக்கிது. இருப்பினும் ஒரு மானை விட, ஒரு புலியை விட நமக்கு உடல் சார்பில் எந்த ஒரு சிறப்பு தற்காப்பு உப உறுப்புகளும் கிடையாது என்பது உண்மைதானே! சுயநலமே உயர்விற்கு வழி :))
அப்படியே இந்த பாட்டையும் பாருங்க... ராஜா அசத்தியிருப்பாரு ...
Posted by Thekkikattan|தெகா at 11:12 AM 17 comments
Monday, August 01, 2011
மனித’கம்...
Posted by Thekkikattan|தெகா at 3:23 PM 19 comments





