Friday, November 12, 2010

கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு: A template post

கலாச்சாரம், பண்பாடு இன்னும் என்னன்னவோ சரியாகவே புரிந்து கொள்ளப்படாத ஒரு விசயத்தைப் பத்தி பேசிகிட்டு ரொம்ப அரைவேக்காட்டுத் தனமா விசனப்பட்டு பதிவுகள் மேல பதிவுகளா படிச்சு எனக்கு மண்டை காஞ்சிப் போச்சு. தேடித் தேடி அது மாதிரி பேசுற கட்டுரைகளை எல்லாம் போயி படிக்கிறதில்ல. எதிர்பாராத விதமா எடரி விழுந்து படிக்கப்போயி தனித்தனியா மறுமொழிகள் வேற இட்டு, அதனைச் சார்ந்து வேற்று சிந்தனைகளை கிளறி விடல் எண்ணி எப்பவோவது என்னோட சொந்த புரிதலை வைப்பதுண்டு.

இருந்தாலும் தனித்தனியாக விவாதித்திக்கொண்டே இருக்க முடியாது. ஏன்னா இன்றைய நவீன சூழல்ல நிறைய புதிய புதிய ஆட்களை பழைய மண்டைக்குள்ளரயே வைச்சு வெளி உலகத்திற்கு அறிமுகப் படுத்துறதுனாலே எல்லாருக்கும் பொதுவான ஒரு கட்டுரையா இருக்கட்டுமேன்னு இது.

நண்பர் கல்வெட்டு கலாச்சாரம் என்ற கழிச்சலில் போகும் வார்த்தைக்கு இப்படியாக அவரின் பதிவென்றில் விளக்கமளித்திருக்கிறார்...

...கலாச்சாரம் என்றால் என்ன என்று ஒருமுறை ஒரு பேராசியருக்கு பாடம் எடுக்கப்போய் அவர் அதில் இருந்து என்னிடம் இருந்து விலகிப்போய்விட்டார். நான் சொல்லும் பேராசிரியர் தமிழர் அல்ல வட இந்தியர் ஒருவர். கலாச்சாரம் என்பது எப்போதும் இறந்தகாலத்தைக் குறிக்கும். இறந்தகாலம் அல்லது கடந்தகாலம் என்பது எல்லை இல்லாதது. கி.பி என்று ஆரம்பித்து கடந்தகாலத்தை நோக்கிச் சென்றால் கிறித்துவின் பிறப்பில் நின்று அந்தர்பல்டி அடுத்து கி.மு என்றாகி எல்லையில்லாமல் விரியும்.

கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும் பெரிசுகளிடம் "எந்த காலகட்டத்திற்கான கலாச்சாரம் இப்போது இந்த ஆண்டில் கெட்டுவிட்டது?" என்று கேட்கலாம். ஒரு பேச்சுக்கு கண்ணகி காலத்தில் இருந்ததே அக்மார்க் கலாச்சாரம் என்றால், எல்லா ஊரிலும் பரத்தையர்கள் பகிரங்கமாக வாழ அதே பெரிசுகள் ஒத்துக்கொள்வார்களா? இல்லை, குறைந்த பட்சம் "கட்டைவண்டியில் மட்டும்தான் பயணம் செய்வேன்" என்று வாழ்வார்களா? டயர் வண்டி வந்த காலத்தில் கட்டைவண்டிக்காரர்களும், கட்டை வண்டிக்கு சக்கரம் செய்யும் தச்சர் மற்றும் மேல் இரும்புப்பட்டை பட்டை செய்யும் கொல்லரும் "இதெல்லாம் அழிவுக்கான அறிகுறி . டயர் வயக்காடில் போனா நல்லதா?" என்றுகூட அலுத்துக் கொண்டார்கள். ட்ராக்டரே போகும் காலம் வரவில்லையா? கூமுட்டைகள் பேசும் கலாச்சாரம் என்பது தனக்குத் தெரிந்த வரலாற்றில் இருந்து வசதிப்படி செலக்ட் செய்து கொள்வது.

இதுதான் டமிளனின் கலாச்சாரம் என்று ஏதேனும் ஒரு காலத்தை மட்டும் குறிக்க முடியாது. ஒவ்வொரு காலத்திலும் அந்த அந்த சூழலுக்கு ஏற்ப ஒருவித பழக்கங்கள் இருந்து இருக்கும். அடுத்து வரும் காலங்களில் அது மாறிவிடும். கண்ணகியின் பாட்டிகூட கண்ணகியிடம் "அந்தக்காலத்தில் இருந்த மாதிரியா இருக்கு? காலம் கெட்டுப்போச்சு. சூதானமா இரு புள்ள‌" என்று சொல்லி இருக்கக்கூடும். அந்தப்பாட்டிக்கு அவரின் காலம் நல்ல கலாசாரம். நமக்கு?

கலாச்சாரம் என்பது வரலாறு. மேலும் கலாச்சாரம் என்பது மற்றவர்களால் மதிப்பிடப்படும் ஒன்று. பண்பாடு, கலாச்சாரம் குறித்து விரிவாக எழுதும் போது நிறைய உரையாட வாய்ப்புண்டு...


இப்போ என்னோடது. கீழ் படிக்க நேர்பவை பின்னூட்டமாக எழுத ஆரம்பித்தது இந்தப் பதிவிற்காக... ஆபத்தான கலாச்சாரம்...!

வாழ்க்கை என்பது ஒரே நேர் கோட்டில் ஓடுவது கிடையாது. அது மனிதருக்கு மனிதர் புரிந்து கொள்ளும் படிகளைக் கொண்டு வளைந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது; எப்படி வான்வெளியில் பொருட்களின் பருமனுக்கு ஏற்ப வெளியே வளைந்து பிற பொருட்களின் ஈர்ப்பினிலின்றி விலகி ஓடவோ, இழுத்து பிடித்து தன்னைச் சுற்றி சுழலலவோ ஆக்கிக் கொள்வதனைப் போன்று.

இந்த தவறாக புரிந்து உள்வாங்கி கொள்ளப்பட்ட “கலாச்சாரம்” என்ற ஒற்றைச் சொல் எப்படி அடுத்தவரின் உடல் நிலையையிம், அவரின் தினசரி வாழ்க்கையையில் கூட நிம்மதியாக இல்லாமல் ஆக்கும் அளவிற்கு, தன் கையை மீறிய ஒரு விசயம் பாதிப்பினை வழங்கி விடுகிறது.

ஒருவருக்கு ஒரு விசயம் அதிருப்தியையும், கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பதற்காக காலம் பிறர் ஒருவர் தன் வளர்ச்சியைக் கொண்டு எடுத்திருக்கும் முயற்சிக்கு அவரது அனுபவத்தின் மூலமாக தேடிச் சென்றடையக் கூடிய பாடங்களை வழங்காமல் அவர்களின் வாழ்கையை முடித்து விடுவது கிடையாதுதானே!

எதார்த்த வாழ்வில் விசயங்களின் ஓட்டம் அவ்வாறாக சுழன்றடித்து ஓடித் தேய்கையில் எப்படி தனி ஒருவனாக கடந்த கால விழுமியங்களில் சிக்கி தனக்கு உவப்பாய் இருக்கிறது என்பதற்காக, முட்நோக்கியே நகரும் கால அம்புக்குறியை வளைத்து பின்னோக்கி இழுக்க முடியும்.

இங்கு நம்மால் முடிந்தது, ஒதுங்கி நின்று அது போன்ற அனுபவப் பாடம் வேண்டியவர்களை விட்டு அதன் சாதக பாதகங்களை பெற விடுவது மட்டுமே! அந்தக் கட்டுரையில் பேசப் பட்ட விசயம் ஆண்/பெண் திருமணம் கட்டாமல் “சேர்ந்து வாழ்வது”பற்றியது என்பதால் இப்படியாகச் சொல்லியிருந்தேன். அது போன்ற ஒரு வாழ்வுச் சூழலில் ஈடுபடுபவர்கள் ஒன்றும் வயது முதிராத பள்ளிச் சிறார்கள் இல்லையே, உடல்/மன ரீதியில் சுயமாக சிந்திக்கும் நிலையில்தானே இருக்கிறார்கள்... இந்த பின்னணியில் எல்லாம் அவர்களுத் தெரிந்தேதானே இறங்குவார்கள்; எல்லா சாதக/பாதங்களையும் நேர் கொள்ளும் முடிவோடு.

ஏன், அது போன்ற உறவு நிலைகளில் கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமே இல்லையா? ஏன், மனிதனின் மனம் எப்பொழுதும் ஆண்/பெண் உறவு நிலையை குறுக்கி காமம் என்ற ஊறுகாய்க்குள்ளரயே தன்னையும் சேர்த்து ஊற வைத்துக் கொள்கிறது? எங்கே அப்போ தவறு நிகழ்கிறது? ஒரு பெண்ணை ஆற்றைக் கடக்க தோளில் சுமந்து சென்று அத்துடனே சுமையை இறக்கிய நபரா நீங்கள், அல்லாது மனத்துடனேயே வாழ்வுச் சாலையெங்கும் தூக்கிச் சுமக்கும் நபரா?


.... அந்தக் கட்டுரையில் சில சமூகம் கெட்டுப் போகிறதே என்று விசனத்துடன் என்ன செய்து இதனை கட்டுப்படுத்தாலம் என்ற தொனியில் கீழ்காணும் வரிகள்...

//'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' //

//என்ன செய்து இதனை நிறுத்த போகிறோம் அல்லது தடுக்க போகிறோம்...?//


அடுத்து கலாச்சாரம், கலாச்சாரம் என்று பேசுகிறோமே, எது கலாச்சாரம்? பெற்றவர்களை புறந்தள்ளி வாழ்வது, தனக்காக தனது படிப்பை/தேவைகளை விளக்கி வைத்து மற்றவருக்காக வழி விட்டு வாழ்ந்தவர்களை தன் தேவை முடிந்தவுடன் அவர்களை தூக்கி கடாசிவிட்டு வாழத் துணிவது, வரதட்சிணைக்கென வயதானவர்களையும் நொந்து சாகும்படியான சூழலுக்கு இட்டுச் செல்வது, நாட்டையே சுரண்டும் வாக்கில் ஊரான் சொத்தை திருடி கொண்டு போய் வைத்துக் கொள்ளும் களவாணித் தனம், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஏமாற்றிக் கொண்டு வாழ்வதெல்லாம் இந்த கலாச்சார கூண்டிற்குள் வராதா?

ஆண்/பெண் உறவு சார்ந்தும், ஆடைகள் உடுத்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கில் மட்டுமே இந்தக் கலாச்சாரம் விழிப்புடன் இருக்கிறதே அது ஏன்? அதுவும், இந்த உறவு நிலையில் போலியாக இணைந்தே 30, 40 வருடங்கள் என ஊருக்காக வாழ்ந்து முடிக்கும் நிலையில் - இடையில் அடிதடி, நிம்மதியின்மை, மனச் சோர்வு, அடுத்தவருக்கு என்ன வேண்டும், தன்னுடைய டேஸ்ட் என்ன, தனக்கே என்ன வேண்டும் என்றே தெரியாமல் விழிபிதிங்கி என்னமோ பிறப்பெடுத்துவிட்டேன் வாழ்ந்து முடிக்கணுங்கிற கடமை உணர்ச்சியோட மல்லுக்கட்டி அக்கப்போர் பண்ணி வாழ்வதில் என்ன சிறப்பு இருந்துவிடப் போகிறது?

அதே சமயத்தில் இப்படியாக ஆண்/பெண் உறவுகளின் சிக்கல்களை புரிந்து கொண்டு மீண்டும் நிலையான உறவுகளுக்குள் வருவது எவ்வளவு மேல் எனலாம்; தன்னைப் பற்றிய சுயமான முடிவுகளோட, தேவைகள், குறிக்கோல் என பெற்ற அனுபவங்களைக் கொண்டு தனக்குத் தகுந்த மாதிரி தைத்துக்கொண்ட உடையை மட்டும் அணிந்து கொள்ளும் பக்குவத்தோடு. ... sum of experiences = lifely wisdom for future harmony.

மாறாக மோட்டில் முட்டிக் கொள்வதனைப் போன்று ஒவ்வொருவரும் ஒரு துருவத்தில் நின்று கொண்டு, இவர் பேசுவது அவருக்கு புரியவில்லை; அவரது இவருக்கு... ஒண்ணு காட்டிற்கு இழுத்தால் இன்னொன்னு மோட்டிற்கு இழுத்துக் கொண்டுமென உரையாடலே இன்றி அமைத்துக் கொள்ளும் வாழ்வில் எப்படியான தன்னைப் பற்றிய புரிதல் முழுமையாக இருக்க முடியும்.

இன்னும் எவ்வளவோ இருக்கிறது பேசுவதற்கு. அதற்காக எல்லாரும் இப்படி செய்து வாழ்க்கை புரிஞ்சிக்கோங்கப்பான்னு சொல்லல. தனக்குப் புரிஞ்சதை வைச்சு, தன்னோட வளர்ச்சியை வைச்சு, தான் வாழும் சூழலை வைச்சு மட்டுமே இந்த மொத்த உலகத்தையும் அளந்துவிட முடியாது. அதுனாலே உடம்ப பார்த்துக்குவோம். தனிமனித நிலையில் அவங்கவங்களும் தனக்குத் தேவையான வழியில, வாழ்க்கை பாடத்தை பெற அனுமதிப்போம். அடிச்செல்லாம் பழுக்க வைக்க முடியுமா??


*** இதுவும் கலாச்சார சீரழிவிற்குள் வருமா ...

புது ஃபேஷன் ஷெட்டி, ஐயர், ரெட்டி, மேனன்: Is it fool's identity?


***அப்படியே இதுவும் வருமுங்களா பார்த்துச் சொல்லுங்க...பி. கு: அப்படி இல்லாம இந்த பொஸ்தகத்தில எழுதியிருக்கு அத தூக்கிப் புடிச்சிக்கிட்டு, த்தோ அந்த அஞ்சாவது வீட்டில இருக்கவன் தொடர மாட்டிங்கிறான் எப்படி அவன வழிக்கு கொண்டு வாரதுன்னு அடாவடியா உட்கார்ந்து யோசிச்சா, நம் பிள்ளைகளுக்கும் ஆளுக்கு ஒரு அருவா தயார் செஞ்சு தலையணைக்கு கீழே வைச்சிக்க வேண்டியதுதான் - வீட்டுக்கு வீடு. :)

146 comments:

கத்தியைத் தீட்டு said...

கத்தியை தீட்டாதே; புத்தியைத் தீட்டு .......

மதுரை சரவணன் said...

ஆஜர்...முழுதும் படித்து வந்து விடுகிறேன்...சில புரிதலை ஏற்படுத்திக் கொள்கிறேன்... இது கமண்டு போடும் கலாச்சாரம்.. சோ பொறுத்தருள்க... எப்படி..?

வருண் said...

***கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும் பெரிசுகளிடம் "எந்த காலகட்டத்திற்கான கலாச்சாரம் இப்போது இந்த ஆண்டில் கெட்டுவிட்டது?" ***

அதென்ன "பெருசு"னு பெரியவங்களை இப்படிக் கேவலமாக விளிப்பது? இதே கலாச்சாரத்தின் சீரஃழிவுதான்! இதுக்கு பேராசிரியரிடம் போய் கேக்கனுமா என்ன? He himself is an EXAMPLE! He just has to look at himself. I am sure his mom did not teach him to address someone old as "perisu". He himself screws it up! I would call that as "bad". He might think that he makes "progress"! That is debatable.

இதுபோல கலாச்சாரம் மாறுவதை (கெட்டவழியில்) நான் கண்கூடப் பார்க்கிறேன். இதை எந்த பெரியமனுஷனிடமும் போய் கேட்டு அறியவேண்டியதில்லை!

இதப் பத்தி நெறையா பேசலாம். ரெண்டு கல்யாணம் பண்ணிய பிறகு எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லைனு சொல்ற முட்டாளைப் பார்த்து கைதட்டும் அரைவேக்காடு பகுத்தறிவுவாதிகள் இன்னைக்கு முன்பைவிட அதிகம். இதுக்கு ஏன் பேராசியரைப் போய் கேக்கனும்? வெதண்டாவதம் பேசவா?

It is very simple to see, the changes happening around us. Change is not always good or bad. But it is unavoidable, that is all!

Thekkikattan|தெகா said...

வருண்! சில நேரம் எனக்கு குழப்பம் வந்துவிடுவதுண்டு, உண்மையாவே நீர் கிண்டல் செய்து எழுதுகிறீரா இல்லை சீரியஸ் டோன் தானா அதுன்னு. திரும்பவும் குழும்பிவிட்டேன்! :))

//அதென்ன "பெருசு"னு பெரியவங்களை இப்படிக் கேவலமாக விளிப்பது? இதே கலாச்சாரத்தின் சீரஃழிவுதான்! //

அன்பின் மிகுதியில் பாசாம கூட விளிக்கலாம், என்ன கெழவி, கிழவா, அப்பனக் கூட போய்யா, வாய்யா - there is an appropriate இடம், பொருள், ஏவா இல்லையா?

//இதுபோல கலாச்சாரம் மாறுவதை (கெட்டவழியில்) நான் கண்கூடப் பார்க்கிறேன்.//

ஏதாவது ரெண்டு மூணு கெட்ட வழி கலாச்சாரம் பாயிண்ட் அவுட் செய்யுங்க, நானும் தெரிஞ்சிக்கிறேன்... the contrast between an individual choice and collective societal move.

//ரெண்டு கல்யாணம் பண்ணிய பிறகு எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இல்லைனு சொல்ற முட்டாளைப் பார்த்து கைதட்டும் அரைவேக்காடு பகுத்தறிவுவாதிகள் இன்னைக்கு முன்பைவிட அதிகம்.//

அதிலென்ன தப்பு அவரு நிலையில் முயற்சி பண்ணிப்பார்த்தார், அவருக்கு அந்த செட் அப் ஒத்து வரல. So, he is declaring honestly in front of the society where he lives on? அப்படியெல்லாம நடிச்சிட்டு களவாணித்தனம் பண்ணச் சொல்லுறீங்களா? ஏங்க, குற்றம் செய்ய நாமே நடிக்கச் சொல்லிக் கொடுக்கிறோம்... புரியல??

கல்வெட்டு said...

வருண்,
கிராம வாழ்க்கையின் இயல்பான வார்த்தைகள் இப்போது வசைச்சொல்லாகப் போய்விட்டது. :-(((

மயிர் x முடி
சோறு x சாதம்
குண்டி x பின்புறம்
முலைப்பால் x தாய்ப்பால்


இப்படி பல...


பீ என்று சொல்லத்தயங்குபவன் கூசாமல் மணிக்கு ஒரு தரம் ஷிட் என்கிறான். வார்த்தைகள் (மொழி) சூழலுடன் இயங்குவது.

***

"ஊர்ப் பெருசு" என்று சொல்வது எங்கள் வாழ்க்கையில் மிகச் சாதரணம். எனது தாத்தாவை "கோட்டம்பட்டி பெருசு" என்றே நான் உட்பட சிறார் முதல் பெரியவர் வரை அழைப்போம். அவர் வீட்டிற்கு வந்து "பெருசு நீங்கதான் கொஞ்சம் சொல்லனும்" என்று மிக இயல்பாக அனைவரும் பேசுவார்கள்.

"எதுக்கும் ஊர்ப் பெருசுகிட்ட ஒரு வார்த்தை கேட்போம்"... என்று சொல்வது வசைச்சொல் அல்ல.

**
என்னைப்பற்றிய உங்களின் மற்ற கருத்துகளுக்கு...

என்னைப்பற்றி நானாக உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளாதவரை, என்னைப்பற்றிய உங்களின் கணிப்புகளில் எனக்கு அக்கறை இல்லை.

என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லையெனில், நீங்கள் என்னைப்பற்றி என்ன தெரிந்துகொண்டாலும் புரிந்துகொண்டதாக நினைத்தாலும் அதுகுறித்த அக்கறையோ மரியாதையோ எனக்கில்லை என்பதே.**

வருண் said...

***அதிலென்ன தப்பு அவரு நிலையில் முயற்சி பண்ணிப்பார்த்தார், அவருக்கு அந்த செட் அப் ஒத்து வரல. So, he is declaring honestly in front of the society where he lives on? அப்படியெல்லாம நடிச்சிட்டு களவாணித்தனம் பண்ணச் சொல்லுறீங்களா? ஏங்க, குற்றம் செய்ய நாமே நடிக்கச் சொல்லிக் கொடுக்கிறோம்... புரியல??***

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு னு சொல்லுவாங்கங்க. You are an adult, you should have learnt from your first mistake. There is nothing wrong with women. The problem is YOU. That is the conclusion I would arrive at when I make such mistakes! Why should I blame marriage or the other person? It is ME!

I am sure, you might forgive him even if he tries few more marriages and FAILS and says, I tried again it failed (of course honestly) LOL

HONESTY is word which being abused these days. Just because someone is honest, it does not make what he does as right.

Are you going to appreciate a child molester's honesty if he admits it? And let him go? May be HONESTY is the best POLITICS for one's survival when they reach a stage like this.

வருண் said...

Thekkikattan|தெகா: Take my posts as I am in a debate and easy :)

அரசூரான் said...

தெகா, சரியா சொல்லுங்க... கண்ணுக்கு மட்டும்தான் புலப்படலயா? கலாச்சாரம் என்பது வரையறையற்ற வரைமுறைகள் கொண்டது. தனிமனித ஒழுக்கம் மேம்படாத வரையில் இனி அது கேள்விகுறியே.

வருண் said...

***"ஊர்ப் பெருசு" என்று சொல்வது எங்கள் வாழ்க்கையில் மிகச் சாதரணம்.***

கல்வெட்டு: உங்க தாத்தாவோ, அல்லது அவர் அப்பாவோ இதை சொல்லியிருக்கமாட்டார்.

"தோடா" "மொக்கை" "பீட்டர் விடுறது" க்லாய்க்கிறது" போன்ற வார்த்தைகளும் நம்ம கலாச்சாரம் "முன்னேற்றம்" தான்!

நான் உங்களை குறை சொல்ல இதெல்லாம் சொல்லல. நம்மை கொறைசொல்லத்தான்!

Thekkikattan|தெகா said...

I am sure, you might forgive him even if he tries few more marriages and FAILS and says, I tried again it failed (of course honestly) LOL//

Who is that "HE"?

வருண், I understand whoever get involves in different marriages after dismissing the earlier, i believe in the marriage bonding "two adults' with their full conscientious they are involving in that union.

Therefore, it is that individual choice it is none of our business... as long as they want to go on try it until they realize it is not for them (a piece of cake).

In that case, you or I maynot understand where they are failing and what is their expectation in such union. So, it is better we keep away from individuals' business. Who are we to dictate, how the other person should run his personal life?

//Are you going to appreciate a child molester's honesty if he admits it? And let him go?//

What are you talking about... இந்த இரண்டும் ஒன்றா? இரண்டாவதாக மணம் புரிபவர் யாரையும் வலியச் சென்று வண்புணர்வா செய்கிறார்... அந்த பெண் அடல்டா இல்லையா?

வருண் said...

***Therefore, it is that individual choice it is none of business... ***

NOT TRUE. The individual needs to accept his incompetence. He should not blame the "concept of marriage" or "marriage is ridiculous" or his partner. You see the difference? It is just his incompetence. Anyway, take it easy :)

Thekkikattan|தெகா said...

Boss! Understand in a marriage there are two individuals participating in it. Not just he/she? When you think and act independently not necessarily the other person should embrace your whole ideology about whatever you have in your mind.

""COMPROMISE "" there comes the question how far... (so, that is a whole new direction yet to talk about...)

There are individuals who are more than out of our life size, precut ready made tees, won't fit for them. So, we cant ask them to get in our tee?

Thereby, let us consider, the society can't exclude any individual and go on exist, if it is going to do so, for every other reasons it will come up with reasons to exclude one at a time, until no one out there to exclude.

Again, as an excluded society they come up with a new culture ;), that is the way வீழ்ச்சியும் எழுச்சியம் of cultures throughout the history.

At this point, I consider you have to contemplate in so many arenas of life.

வருண் said...

***Boss! Understand in a marriage there are two individuals participating in it. Not just he/she? When you think and act independently not necessarily the other person should embrace your whole ideology about whatever you have in your mind.***

Yeah but I did NOT READ the other individual saying, "MARRIAGE is RIDICULOUS". So you should leave the individual who does not blame the "concept of marriage" for her incompetence.

You are sincerely giving 50% credit to the other person who never made any statement about "the concept of marriage. Neither did she ridiculed marriage! That is UNFAIR!

வருண் said...

***What are you talking about... இந்த இரண்டும் ஒன்றா? இரண்டாவதாக மணம் புரிபவர் யாரையும் வலியச் சென்று வண்புணர்வா செய்கிறார்... அந்த பெண் அடல்டா இல்லையா?

November 12, 2010 4:46 PM***

I did not say those two are same. I am just saying being HONEST does not make anything right.

I dont see how can one be dishonest there? The whole world knows two marriages ended. There is nothing to hide there!

Thekkikattan|தெகா said...

Yeah but I did NOT READ the other individual saying, "MARRIAGE is RIDICULOUS". So you should leave the individual who does not blame the "concept of marriage" for her incompetence. //

Varun, :)) I do not know who is your target of subject. I am not generalizing here anything... or outspokenly blaming any union, org, system. Just backing up an individual situation can be unique to that particular individual until we opine on any situation of others.

'Ridiculing' i do not know in what situation the affected expresses his distaste... :).

So, let us agree here to disagree, society includes every other individual!

* Maybe some other people later on might be interested in briefing what we have discussed so far... let us wait and see. Thanks!

Thekkikattan|தெகா said...

இந்த கட்டுரையின் சாராம் வந்து காலச்சாரம் என்பது வெறும்...

"""ஆண்/பெண் உறவு சார்ந்தும், ஆடைகள் உடுத்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கில் மட்டுமே இந்தக் கலாச்சாரம் விழிப்புடன் இருக்கிறதே அது ஏன்? """ <=== கண்கானிப்பு மட்டும்தானா... இல்லை...

””””பெற்றவர்களை புறந்தள்ளி வாழ்வது, தனக்காக தனது படிப்பை/தேவைகளை விளக்கி வைத்து மற்றவருக்காக வழி விட்டு வாழ்ந்தவர்களை தன் தேவை முடிந்தவுடன் அவர்களை தூக்கி கடாசிவிட்டு வாழத் துணிவது, வரதட்சிணைக்கென வயதானவர்களையும் நொந்து சாகும்படியான சூழலுக்கு இட்டுச் செல்வது, நாட்டையே சுரண்டும் வாக்கில் ஊரான் சொத்தை திருடி கொண்டு போய் வைத்துக் கொள்ளும் களவாணித் தனம், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஏமாற்றிக் கொண்டு வாழ்வதெல்லாம் இந்த கலாச்சார கூண்டிற்குள் வராதா?””””

அதனையும் உள்ளடக்கி ஒரு சமூகமா காட்டிக் கொள்வதும் தானா... வண்டிய இந்த திசையில ஓட்டுங்க, ப்ளீஸ்... :))

Thekkikattan|தெகா said...

சரா,

//ஆஜர்...முழுதும் படித்து வந்து விடுகிறேன்...சில புரிதலை ஏற்படுத்திக் கொள்கிறேன்... இது கமண்டு போடும் கலாச்சாரம்.. சோ பொறுத்தருள்க... எப்படி..?//

சில புரிதல்களை ஏற்படுத்திக்கிட்டு வந்து பேசணும், ஆமா :)). கமெண்ட் போடும் கலாச்சாரம் -ஹிஹிஹி என்ன பஞ்சத்திற்கு ஆண்டியா இல்ல ... கதைதேய்ன்.. போகட்டும் விடுங்க, சரா!!

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு இந்தப் பதிவிற்கு நீங்க வந்து இதற்கான உரையாடலை மேலும் பொருள் உள்ளதாகவும், சுவராசியமானதுமாக ஆக்குவீர்கள் என்று கருதினேன். இப்படி ‘பெருசு’ வார்த்தையை வைத்து வருண் பெரிசு பண்ணி போட்டாரே :)

வருண், கொஞ்சம் தடிமானத்தான் அட்டாக் செய்கிறார். ஊர் வட்டார வழக்கு மொழி தெரியாததும் காரணமாகிப் போய் விடுகிறது. எங்கள் ஊரிலும் பெருசு என்று விளிப்பது பொதுவான விசயமே!

// I am sure his mom did not teach him// அதுக்கு இதெல்லாம் செம சிரிப்பா வருது. 40 வயசு ஆளுக்கு இன்னமும் மம்மீஈஈ யை வைத்து க்ளாஸ் எடுக்கச் சொல்லுவதெல்லாம் :)

வருண் said...

***அன்பின் மிகுதியில் பாசாம கூட விளிக்கலாம், என்ன கெழவி, கிழவா, அப்பனக் கூட போய்யா, வாய்யா - there is an appropriate இடம், பொருள், ஏவா இல்லையா?***

நான் பட்டணத்துல பொறந்து வளரலங்க. பொறந்து வளந்தது சின்ன ஊர்தான். ஆனா இதுபோல எல்லாம் அம்மா, அப்பா, வயசானவங்கள பேசியதில்லை. பேசுவதை ஒருபோதிலும் சகிக்க முடியாது!

இந்த தனுஷ் படத்திலே பொதுவா அவன் கேரக்டர் அப்பாவை இப்படித்தான் "உரிமை"யா கூப்பிடும். அவனை அப்படியே சப்புனு அறையலாம் போல இருக்கும்! இதுபோல் உணர்வுகள் உள்ள தமிழ் கலாச்சாரம்தான் எனக்குப் பழக்கம். உங்களுக்கு எங்க ஊர் பழக்கம்லாம் மட்டமா, அநாகரிகமாத் தெரிந்தாலும் தெரியும். என்னைப்பார்த்தா காடுமிராண்டிபோலவும் இருக்கலாம்! :) ஆனால். This is what we are! :)

Thekkikattan|தெகா said...

Let us go for second round :)

நானெல்லாமுங்க கரட்டான் புடிச்சு வளர்ந்தவன் for time passing after school. இருந்தாலும் எங்கப்பனாத்தாவ இதோ இப்பக் கூப்பிட்டாக் கூட நண்பர்கள் கூட பேசுற மாதிரிதான் பேசிக்கிறது. அது இயல்பிலேயே அப்படி அமைஞ்சு போச்சு.

‘சமயத்தில என்னய்யா அண்ணாமலை” அப்படின்னு கூட ஆரம்பிப்பேன். அது மூட் பொருத்தது. நான் அவரா இருப்பேன், அவரு நானா இருப்பாரு திரும்பவும் vice versa. அதுக்காக, நான் செயின் போட்ட சினிமா கீரோ இல்லீங்க.

அதுக்காக அவரு மேல மரியாதை இல்லின்னு அர்த்தமாகிடுமா. மனுசாளுங்கள பொருத்தது, எந்த இடத்தில, எந்த டோன்ல விளிச்சிக்கிறோங்கிற பொருத்தது. அதுக்காக, என்னையும் பொலிச்சின்னு அறைஞ்சி போட்டுறாதீங்க, நானு தனுவூஸ் இல்ல -தெக்கி.

குடுகுடுப்பை said...

நல்ல பகிர்வு.

வருண் கமல்ஹாசன் மேல காண்டுல உங்ககிட்ட கமெண்டு போடுறார், மனிதர்கள் பலவிதம், வருண் அதில் ஒருவிதம் , சமயங்களில் அவரே பலவிதமாக இருப்பார். இலவசமா விடு மாமூ

Thekkikattan|தெகா said...

அட வாங்க குடுகுடு,

//வருண் கமல்ஹாசன் மேல காண்டுல உங்ககிட்ட கமெண்டு போடுறார்//

ஓ! கதை அப்படிப் போகுதா :)) நானும் யாருங்கய்யா உங்க சப்ஜெக்ட்னு கூட கேட்டுப்புட்டேய்ன்... சொல்லலேய்யே மனுசன்.

நான் என்ன கமலஹாசனுக்கு கொள்கை பரப்பு செயலாலரா? அட ஏனுங்க. இங்க ஒரு மனுசன் மாங்கு, மாங்குன்னு சீரியசா ஒரு கட்டுரையை தட்டி வைச்சிருக்கேன், மொக்கை போஸ்டா ஆகுற ரேஞ்சிற்கு போயிருச்சே... :

Kousalya said...

முதலில் உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....உங்களது விரிவான, தெளிவான விளக்கங்கள் என்னை இன்னும் தெளிவு படுத்துகிறது.

கலகலப்ரியா said...

நான் இன்னும் லஞ்ச் சாப்டல... இங்க ரொம்ப தீனி கிடைக்கும் போலருக்கே.. இருங்க வர்றேன்.. :o)

pillaival said...

தெளிவா சொல்லுங்க சார்
பண்பாடு என்றால் என்ன?
கலாசாரம் என்றால் என்ன?
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
(ஓரிரு வரிகளில் விடையளிக்கவும்)

கலகலப்ரியா said...

நல்லா சொல்லி இருக்கீங்க தெகா...

சிலவற்றைப் படிக்கிறப்போ... சிரிக்கிறதா அழுவுறதான்னே தெரியல...

Thekkikattan|தெகா said...

pillaival said...
தெளிவா சொல்லுங்க சார்
பண்பாடு என்றால் என்ன?
கலாசாரம் என்றால் என்ன?
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
(ஓரிரு வரிகளில் விடையளிக்கவும்//

பிள்ளைவால், உங்க கேள்வியை அங்கும் வாசித்தேன். பண்பாட்டோட நீங்க அக்கறையா தெரிஞ்சிக்கணும்னு கேக்குற விதம் பிடிச்சிருக்கு :)...

ஆனா, எங்க பதிவர்கள் கலாச்சாரப்படி அறிவார்த்தமா, யோசிக்கிற மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டுத் தெரியறதெல்லாம் பிடிக்காது... ஹிஹிஹி :)

பாஸ்! நீங்களே சொல்லிருங்க பாஸ், எல்லாருக்கும் புண்ணியமாப் போகும் ...

கலகலப்ரியா said...

||Thekkikattan|தெகா said...
Let us go for second round :)

நானெல்லாமுங்க கரட்டான் புடிச்சு வளர்ந்தவன் for time passing after school. இருந்தாலும் எங்கப்பனாத்தாவ இதோ இப்பக் கூப்பிட்டாக் கூட நண்பர்கள் கூட பேசுற மாதிரிதான் பேசிக்கிறது. அது இயல்பிலேயே அப்படி அமைஞ்சு போச்சு.

‘சமயத்தில என்னய்யா அண்ணாமலை” அப்படின்னு கூட ஆரம்பிப்பேன். அது மூட் பொருத்தது. நான் அவரா இருப்பேன், அவரு நானா இருப்பாரு திரும்பவும் vice versa. அதுக்காக, நான் செயின் போட்ட சினிமா கீரோ இல்லீங்க.

அதுக்காக அவரு மேல மரியாதை இல்லின்னு அர்த்தமாகிடுமா. மனுசாளுங்கள பொருத்தது, எந்த இடத்தில, எந்த டோன்ல விளிச்சிக்கிறோங்கிற பொருத்தது. அதுக்காக, என்னையும் பொலிச்சின்னு அறைஞ்சி போட்டுறாதீங்க, நானு தனுவூஸ் இல்ல -தெக்கி.||

ஐ லைக் இட்... =)))

கலகலப்ரியா said...

|| வருண் said...
***அதிலென்ன தப்பு அவரு நிலையில் முயற்சி பண்ணிப்பார்த்தார், அவருக்கு அந்த செட் அப் ஒத்து வரல. So, he is declaring honestly in front of the society where he lives on? அப்படியெல்லாம நடிச்சிட்டு களவாணித்தனம் பண்ணச் சொல்லுறீங்களா? ஏங்க, குற்றம் செய்ய நாமே நடிக்கச் சொல்லிக் கொடுக்கிறோம்... புரியல??***

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு னு சொல்லுவாங்கங்க. You are an adult, you should have learnt from your first mistake. There is nothing wrong with women. The problem is YOU. That is the conclusion I would arrive at when I make such mistakes! Why should I blame marriage or the other person? It is ME!||

வருண்... வணக்கமுங்க... நானும் ஒரு கிராமத்துப் பிறவிதான்... குறிப்பிட்ட நபர் ஒன்னு இல்ல நாலு கல்யாணம் வேணாப் பண்ணிக்கட்டு... தெகா என்ன சொல்றாங்களோ... நீங்க என்ன சொல்றீங்களோ எனக்குத் தெரியாது... ஆனா நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.. அவங்க வாழ்க்கையத் தீர்மானிக்க நாம யாருங்க..?!

அதிருக்கட்டு..

(பின்னூட்டம் பெருசாயிடுத்தாம்... அதனால பாதி பாதியா போடலாம்..)

கலகலப்ரியா said...

||நல்ல மாட்டுக்கு ஒரு சூடு னு சொல்லுவாங்கங்க. You are an adult, you should have learnt from your first mistake.||

ஆமா... இந்தப் பழமொழி இங்க எங்க வந்திச்சு..?! ஒருத்தரு கல்யாணம் பண்ணி நாலு வருஷம்... காதல் வழிய வழிய வாழுறாரு... அஞ்சாவது வருஷம்.. என்னடா எழவாப்போச்சுன்னு ஆயிடுது... வேணாம்டியாத்த நமக்குள்ள செரிப்பட்டு வராது... மீட் பண்றப்போ ஒரு காப்பி சாப்டுக்கலாம்... நீ உன்னோட வழியப் பாரு... நான் என்னோட வழியப் பார்த்துக்கறேன்னு போனா... முதல்ல செஞ்சது ”மிஸ்டேக்” அப்டின்னு அர்த்தமா...

இந்த விண்ணானம் நல்லாருக்கே... ஏன் அப்டின்னா பக்கது வீட்டுக் காரன் கல்யாணம் செய்து டைவோர்ஸ் பண்ணிட்டான்.. அது மகா மகா மகா தப்பு... you can learn from da others' mistake too.. அப்டின்னுட்டு கட்டிக்காம இருக்க வேண்டியதுதானே...

ஒருத்தன் பரீட்ச எழுதிப் ஃபெயில் ஆயிட்டா பள்ளிக்கூடம் போனதே மிஸ்டேக்கா...

செரி.. அப்டியே உங்க வழிக்கே வந்தாலும்.. செரி வேணாம்.. கல்யாணம் கண்றாவி எல்லாம் செரிப்பட்டு வராது... சேர்ந்து வாழலாம்... செரிப்படலைன்னா போயிட்டே இருக்கலாமின்னா... அடடா கலாச்சாரம் நாசமாப் போறதேன்னு அடிச்சுக்கிறீங்க... என்னதான்யா எதிர்பார்க்கறீங்க..

pillaival said...

பண்பாடு என்பது அக ஒழுங்கு.
கலாசாரம் என்பது புற ஒழுங்கு.
ஆண் பெண் உறவு என்பது பண்பாட்டிற்குள் வருகிறது.
உணர்வு சம்மந்த பட்ட எல்லா விடயங்களும் பண்பாட்டிற்குள் வரும்.
இரண்டுமே மாறக்கூடியது .
கலாசாரம் உடனே மாறும்.
பண்பாடு கொஞ்சம் லேட்டா மாறும்.

Thekkikattan|தெகா said...

கலகலப்ரியா, என்லைட்டென்மெண்ட் கொடுங்க, கொடுங்கன்னு வாழ்த்தி வழியனுப்புறேன்... ஜமாய்ங்க :))

//நல்ல மாட்டுக்கு ஒரு சூடு னு சொல்லுவாங்கங்க. You are an adult, you should have learnt from your first mistake. There is nothing wrong with women. The problem is YOU. That is the conclusion I would arrive at when I make such mistakes! Why should I blame marriage or the other person? It is ME//

இதை தாண்டிப் போனதிற்கு காரணமிருக்கு. சின்னபுள்ளயாட்டமிருக்கிறாரு, வருண்!

இப்ப ஒரு பேச்சிக்கு வைச்சிக்குவோம். ஒரு ஆளு இன்னும் கல்யாணம் கட்டிக்கல (ஆனால், ஸ்ட்ராங்கான கருத்து இருக்கு திருமணம் பொருத்து), பின்னாலில் அவரும் ஒரு நாள் கட்டிக்கிறாரு; உண்மையாவே சில அழுத்தமான கருத்து வேற்றுமையால (அடிதடியால) கட்டிகிட்ட துணைவி/வன் பிரிஞ்சி போயிடாலாம்னு கெஞ்சி, கெதறி கேட்டாக் கூட, இன்னொருத்தரு அய்யோ என் மானம், கெளரதை எல்லாம் காத்தில போயிடுமேன்னு தூண்ல கட்டிப் போட்டாவது ‘இரை’ போட்டு rest of his/her life சேர்ந்து வாழ்ந்து முடிச்சிருவாங்க போல... ;) - அதாவது வீட்டிற்குள்ளர கட்டிப் போட்டு வைச்சிட்டு வெளியில அவரு நிம்மதி தேடிக்குவாராமா (கலாச்சாரம்)...

என்ன ஒரு நம்பிக்கை நம்மை கல்யாணம் கட்டிகிட்டு வந்தவ/ன் எந்த சூழ்நிலையிலும் தன்ன விட்டு போயிறமாட்டான்னு தகிரியம் (கல்லானாலும், புல்லானாலும் -கலாச்சாரமில்ல)

இங்க என்ன புரிஞ்சிக்கிறதில்லைன்னா, சுவரு இருக்கிற வரைக்கும் தான் சித்திரம்... அத புரிஞ்சிக்கணும் இல்லன்னா, கவுரி மானு கணக்கா எல்லாம் நாண்டுகிட்டு செத்துப் பூடுவானுக போலவே... :)) ஒண்ணும் சொல்லுற மாதிரி இல்ல... லூசில விடுங்க!

வருண் said...

****ஆனா நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.. அவங்க வாழ்க்கையத் தீர்மானிக்க நாம யாருங்க..?! ***

Priya: I can complicate it and make you agree that one cant live whatever way they want by showing u an ugly scenario- even if the two has a mutual understanding. Yes, society is influenced by individual couple too to some extent!

கலகலப்ரியா said...

|| வருண் said...
****ஆனா நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.. அவங்க வாழ்க்கையத் தீர்மானிக்க நாம யாருங்க..?! ***

Priya: I can complicate it and make you agree that one cant live whatever way they want by showing u an ugly scenario- even if the two has a mutual understanding. Yes, society is influenced by individual couple too to some extent!||

well... wot sort of argument is this varun...?!

wot do ya mean by ugly scenario..?!.. am talking abt individual freedom... that doesn't mean... i'll see them "shitting" publicly.. so.. of course you can make me agree on dat...

well.. am sry.. am very raw at times... even though.. am a village bird..!!! (da same.. டீசண்டு எச்சக்கல ஃபேமிலி..)

Anonymous said...

கற்பு, பண்பாடு, கலாச்சாரம்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=3302&Itemid=139

வருண் said...

***ஆமா... இந்தப் பழமொழி இங்க எங்க வந்திச்சு..?! ஒருத்தரு கல்யாணம் பண்ணி நாலு வருஷம்... காதல் வழிய வழிய வாழுறாரு... அஞ்சாவது வருஷம்.. என்னடா எழவாப்போச்சுன்னு ஆயிடுது... வேணாம்டியாத்த நமக்குள்ள செரிப்பட்டு வராது... மீட் பண்றப்போ ஒரு காப்பி சாப்டுக்கலாம்... நீ உன்னோட வழியப் பாரு... நான் என்னோட வழியப் பார்த்துக்கறேன்னு போனா... முதல்ல செஞ்சது ”மிஸ்டேக்” அப்டின்னு அர்த்தமா...

No problem. But the fact is it you who is not fit for marriage. That is what you should say.

Dont say "marriage is ridiculous" or "the concept of marriage" is wrong and so to THE WORLD just because you screwed up in your relationship!

You see the difference?

The world has all kinds of people.

வருண் said...

***well... wot sort of argument is this varun...?! **

You are saying if two individuals mutually agree they can do anything they wish. That is not strictly TRUE. I think of all possibilities and saying this. :)

வருண் said...

***||Thekkikattan|தெகா said...
Let us go for second round :)

நானெல்லாமுங்க கரட்டான் புடிச்சு வளர்ந்தவன் for time passing after school. இருந்தாலும் எங்கப்பனாத்தாவ இதோ இப்பக் கூப்பிட்டாக் கூட நண்பர்கள் கூட பேசுற மாதிரிதான் பேசிக்கிறது. அது இயல்பிலேயே அப்படி அமைஞ்சு போச்சு.

‘சமயத்தில என்னய்யா அண்ணாமலை” அப்படின்னு கூட ஆரம்பிப்பேன். அது மூட் பொருத்தது. நான் அவரா இருப்பேன், அவரு நானா இருப்பாரு திரும்பவும் vice versa. அதுக்காக, நான் செயின் போட்ட சினிமா கீரோ இல்லீங்க.

அதுக்காக அவரு மேல மரியாதை இல்லின்னு அர்த்தமாகிடுமா. மனுசாளுங்கள பொருத்தது, எந்த இடத்தில, எந்த டோன்ல விளிச்சிக்கிறோங்கிற பொருத்தது. அதுக்காக, என்னையும் பொலிச்சின்னு அறைஞ்சி போட்டுறாதீங்க, நானு தனுவூஸ் இல்ல -தெக்கி.||***

I am not judging you or your relationship from this. I would never but I am not familiar with such a custom. So, you and I are yet to learn about our culture bfore criticizing that it is rubbish!

கலகலப்ரியா said...

||வருண் said...
No problem. But the fact is it you who is not fit for marriage. That is what you should say.

Dont say "marriage is ridiculous" or "the concept of marriage" is wrong and so to THE WORLD just because you screwed up in your relationship!

You see the difference?

The world has all kinds of people.||

என்னதுப்பா சாமிங்களா... நாந்தேன் லூசாட்டம் பேசிட்டிருக்கேனா...

marriage concept தப்புன்னு யாருங்கோ சொன்னாங்கோ.. இங்க?!

வருண்... நீங்க தனி ரூட்ல போயிட்டிருக்கீங்கன்னு தெரியாம போச்சு எனக்கு..

கலகலப்ரியா said...

||வருண் said...
***well... wot sort of argument is this varun...?! **

You are saying if two individuals mutually agree they can do anything they wish. That is not strictly TRUE. I think of all possibilities and saying this. :)||

am talking abt an individual... of course he/she can choose his/her life!!! right..!!

can't get ya though... ya may point out some incidents.. so that others will be able to get a picture... what are you talking about...!

குருடன் பொண்டாட்டிக்கு அடிச்ச மாதிரி... கன்னா பின்னான்னு கைய வீசிக்கிட்டு... இது உண்மையில்ல... இது பொய்யில்லைன்னா... இப்டியே... நானும் பதிலுக்கு கைய வீசிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்..

Thekkikattan|தெகா said...

//Dont say "marriage is ridiculous" or "the concept of marriage" is wrong and so to THE WORLD just because you screwed up in your relationship!//

வருண், கமலஹாசன் மீதான பர்சனல் அட்டாக் வேண்டுமானல் அதற்கு சம்பந்தமான பதிவில பேசலாமே. இங்கு ஏன் அதைக் கொண்டு வந்து பேசுறீங்க. இங்க பேசிட்டு இருக்கவங்கள்ளே யாருமே அப்படி சொல்லலையே.

ரெண்டாவது, ஒரு மனுசன் கார் ஓட்டத் தெரியாம ஓட்டி ஆக்சிடெண்ட் பண்ணிக்கிட்டாலும் still he/she is allowed to ridicule, comment how the other person (who s/he believes caused the accident) behaved when the accident happened, or the faulty traffic signal, or road itself - because the remark is made based on his personal experience.

தனியா ஒரு கடிதம் அவருக்கு எழுதி உங்க கண்டனத்தை தெரிவிச்சு, பொது மன்னிப்பு கேக்கச் சொல்லுங்க.

இதுக்குப்பிறகும் அதைப் பத்தி இங்க வேணாம், வருண். விட்டுருங்க! அது பேஸ்லெஸ்!

Thekkikattan|தெகா said...

I would never but I am not familiar with such a custom. //

புரியுதா? கற்றது, தெரிஞ்சிகிட்டது கை மண்ணளவு உங்க ரூல்தடிய கொண்டு வந்து என்னோட குடும்பத்துக்குள்ளர பழகிக்கிற முறைய அளக்க முடியாதுன்னு...

//So, you and I are yet to learn about our culture bfore criticizing that it is rubbish!//

உங்களப் பத்தி தெரியாது. ஆனா, நான் வயசிக்கு வந்து 20 வருஷத்திற்கு மேலாச்சு உடல் ரீதியா, மன ரீதிய இன்னும் கூடுதலாவே 50 வருஷ பட்டறிவுக்கும் கூடுதலாவே இருக்கிற மாதிரி அக்கப்போர் புரிதல் பூராவும் வந்திருச்சு. சரிங்க, டோட்டல் மொக்கையா போயிட்டு இருக்கு. விட்டுடுவோம்.

Thekkikattan|தெகா said...

pillaival said...
பண்பாடு என்பது அக ஒழுங்கு.
கலாசாரம் என்பது புற ஒழுங்கு.
ஆண் பெண் உறவு என்பது பண்பாட்டிற்குள் வருகிறது.
உணர்வு சம்மந்த பட்ட எல்லா விடயங்களும் பண்பாட்டிற்குள் வரும்.
இரண்டுமே மாறக்கூடியது .
கலாசாரம் உடனே மாறும்.
பண்பாடு கொஞ்சம் லேட்டா மாறு//

பிள்ளைவால், மேக் சென்ஸ் எல்லாமே! ஆனா, இந்த “”””உணர்வு சம்மந்த பட்ட எல்லா விடயங்களும் பண்பாட்டிற்குள் வரும்.’’’’’’’ அப்படிங்கிற அடைமொழிக்குள்ளர, இந்த லஞ்சம் மழிஞ்சு போனது, வரதட்சிணைக்காக ஒருத்தரை ஒருத்தர் கொன்னுக்கிறது எல்லாமே மொத்த சமூகத்தின் பாதிப்பு உணர்வா ஆகி கலாச்சார சீரழிவா ஆகிடாது... நாட்பட நாட்பட அது நம்மோட “”பண்பாடா’’’ கூட மாறீடுமில்லையா?

என்ன சொல்லுறீங்க? ஆனா, ஒரு புள்ளையும் அதப் பத்தி பேச மாட்டீங்கிது ஏன்னு நீங்களாவது சொல்லுங்க, பிள்ளை :)

வருண் said...

I dont know why you are keep saying that the discussion is going as "mokkai". I beg to disagree on that.

பொதுப்படையா யாரையும் தொடாமல் பேசுவதில் எந்த ஒரு விசய்த்தையும் தெளிவா சொல்லமுடியாது.

கல்வெட்டு பற்றி பேசுவது, தனுஷ் சினிமா பத்தி பேசுவது, கமல் தனிப்பட்ட வாழ்க்கை போன்றவையில் தான் நம்முடய இன்றைய கலாச்சாரத்தைப் பார்க்க முடியுது.

தமிழ் கலாச்சாரத்தில் "லிவிங் டுகெதெர்" என்கிற காண்சப்ட் டை புதிதாகத்தான் பார்க்கிறோம். டேட்டிங் என்பதையும் இப்போத்தான் பார்க்கிறோம். இதெல்லாம் கலாச்சாரத்தில் ஏற்படுகிற மாற்றங்கள்தான். இதை சரி தவறுனு விவாதிக்கிறோம்.

30 வருடங்களுக்கு முன்னால் டாஸ்மார்க் கெடையாது. குடிப்பவர்கள் கள்ளச்சாராயம், கள்ளு போன்றவற்றை குடிச்சாங்க அதை தைரியமாக வெளியில் சொல்ல பயந்தார்கள். ஆனால் இன்னைக்கு குடிக்கிறதென்பது ஏதோ சாதாரண ஒரு விசயமாயிருச்சு. குடிக்காதவன் பட்டிக்காடுனு சொல்ற அளவுக்கு வந்து நிக்குது.

கல்வெட்டு சொல்வதுபோல் அந்தக்காலத்தில் எல்லாரும் யோக்கியன்னு யாரும் சொல்லல. தவறுகள் நடந்தன. குடிச்சாங்க, விபச்சாரம் இருந்துச்சு, அதையெல்ல்லாம் சரினு யாரும் சொல்லல. ஆனால் இன்னைக்கு இதிலென்ன தப்பு னு சொல்றாங்க.

இதுபோல் கலாச்சார மாற்றங்கள் ஏன் உங்க கண்ணுக்கு புலப்படனு தெரியலை எனக்கு? மாற்றங்கள்தான் அழகா தெரிகின்றனவே! இல்லையா? இதுல எது கண்ணுக்கு தெரியலை?

வருண் said...

***Blogger கலகலப்ரியா said...

||வருண் said...
***well... wot sort of argument is this varun...?! **

You are saying if two individuals mutually agree they can do anything they wish. That is not strictly TRUE. I think of all possibilities and saying this. :)||

am talking abt an individual... of course he/she can choose his/her life!!! right..!!**

Certainly YES. They can divorce, marry another person or live with someone else. No problem!

***can't get ya though... ya may point out some incidents.. so that others will be able to get a picture... what are you talking about...!***

I am saying what if a mother and a son want to get married and lead their life. They find themselves attracted to each other. The half-baked modern women/men are going to justify that?

Are you going to say, it is their RIGHT and none of your business?

I am talking about a situation here. Some situation it affects the culture and society. Should we care or not?

I did not want to bring this example but you guys forced me to.

Thekkikattan|தெகா said...

//I am saying what if a mother and a son want to get married and lead their life.//

ஹாஹாஹா... அடப் பாவி மனுஷா! என்னாத்தை சொல்லுறது. மக்கள் வருங்க அமைதி கொள்க! :)

பேச்சு எங்கிருந்து எங்க வந்திருக்கு. இதெல்லாம் டாக்டர் ஷாலினி, ருத்ரன்கிட்ட கேக்க வேண்டிய கேள்வி இங்க வருது.

செந்தில் - கவுண்டமணிக்கிட்ட கேட்ட எப்படீண்ணே கதையாப் போச்சு.

P.S: Jokes apart being a biologist I myself, I would not recommend that kind of male/female courtship since it involves 'inbreeding' - as a species it will lead to a total wipe out one day for so many reasons.

Thekkikattan|தெகா said...

தமிழ் கலாச்சாரத்தில் "லிவிங் டுகெதெர்" என்கிற காண்சப்ட் டை புதிதாகத்தான் பார்க்கிறோம்.//

சங்க காலத்திலேயே ‘கந்தர்வ மணம்’ அப்படின்னு ஒரு சிஸ்டம் இருந்திச்சாம்வோய். அதில பொண்ணுங்க கைதான் ஓங்கியிருந்திச்சாம். அப்போ என்ன செய்யுங்களாம், தனக்கு பிடிச்சவன தேர்ந்தெடுத்துக்குமா புள்ள பெத்துக்க.... ஹிஹிஹி... தெரியுமா, இயற்கை உலகில எல்லா இனங்களிலுமே போராடிதான், திறமை காமிச்சுதான் தன்னோட பெண் ஜோடிய கவர முடியும்? இருந்தாலும், கடைசி முடிவு யாரோட மரபணுவை சுமக்கணுங்கிறது ‘பெண்’தான் முடிவு பண்ணுதுவோய்... அதுக்கு பேறு sexual selection ;)

//டேட்டிங் என்பதையும் இப்போத்தான் பார்க்கிறோம்.//

நல்லதுதானே! அங்கே என்ன நடக்கிது ‘உரையாடல்’ நடக்கிது. அப்போ ரெண்டு பேருமே சட்டியில இருக்கிறதெல்லாம் அகப்பையில எடுத்து எடுத்து காமிச்சிக்குவாங்க. தனிப்பட்ட முறையில என்ன மாதிரி மனுசன இருக்கோம், நம்ம முதிர்ச்சி அளவு என்னான்னு காமிச்சிக்க ஒரு வாய்ப்பில்லையா? ஏன்னா, குடும்பம் நடத்தப் போறது அவிங்க ரெண்டு பேரும் தானே (அவங்கவங்க குடும்பமோ, ஊரோயில்லையே)?
இதெல்லாம் இயற்கை முறையில இப்போதான் நடக்க ஆரம்பிச்சிருக்கோங்கிறதுக்கு ஒரு சான்று. :)

கலகலப்ரியா said...

||வருண் said...
***Blogger கலகலப்ரியா said...

||வருண் said...
***well... wot sort of argument is this varun...?! **

You are saying if two individuals mutually agree they can do anything they wish. That is not strictly TRUE. I think of all possibilities and saying this. :)||

am talking abt an individual... of course he/she can choose his/her life!!! right..!!**

Certainly YES. They can divorce, marry another person or live with someone else. No problem!

***can't get ya though... ya may point out some incidents.. so that others will be able to get a picture... what are you talking about...!***

I am saying what if a mother and a son want to get married and lead their life. They find themselves attracted to each other. The half-baked modern women/men are going to justify that?

Are you going to say, it is their RIGHT and none of your business?

I am talking about a situation here. Some situation it affects the culture and society. Should we care or not?

I did not want to bring this example but you guys forced me to.||

அடடா வருண்.. எப்டி இவ்ளோ ஷார்ப்பா இருக்கீங்கன்னு மெச்சிக்க முடியல... ஏன்னா நீங்க யோசிக்கற அளவு என்னால யோசிக்கக் கூட முடியல... இப்போதான் புரியுது... பார்த்தீங்களா.. இப்போ உதாரணம் சொன்னதும் நீங்க எங்க நிக்கறீங்கன்னு புரிஞ்சிடுத்து..

அது எப்டி living together அப்டிங்கிற ஒரு நல்ல விஷயத்த (அட என்னைப் பொறுத்த வரைக்கும்னே இருக்கட்டு..) .. incest கூட இணைச்சுப் பேச முடியுது..?!

ஏன்... இதோட நிறுத்திட்டீங்க... ஒருத்தன் மத்தவனோட அனுமதியோட அவன உசிரோட அறுத்துச் சாப்டானே.. கானிபல்... அதயும் சொல்றதுதானே... இன்னும் இப்டி நிறைய மேட்டர் கிடைக்குமே...

தெகா சொன்ன மாதிரி மனநல மருத்துவர் கிட்ட கேக்க வேண்டியத எல்லாம் ஏன் இங்க பேசறீங்க... இங்க என்ன பேசிட்டிருக்காங்கன்னு நிஜம்மாவே புரியலைன்னா நான் இப்போ டைப் பண்ணிட்டிருக்கிற ஒவ்வொரு எழுத்துமே வேஸ்ட்தான்... ஆனாலும் என்ன இப்போ இருவத்திநாலு மணி நேரமும் யூஸ்ஃபுல்லாவா செலவு பண்றோம் போகட்டு...

ஆழமா ... அறிவுபூர்வமா சிந்திக்க வேண்டியதுதான்... ஆனாலும் இவ்ளோ ஆழம் உடம்புக்கு ஆவாது... இதுக்கு சித்தமருத்துவத்தில ஏதாவது வழி இருக்கான்னு எனக்குத் தெரியல...

எதுக்கும் நல்லா நாலு எலுமிச்சம்பழத்த பிழிஞ்சு அதில இஞ்சியை இடிச்சுப் போட்டு கொஞ்சம் மிளகு.. உப்பு... சர்க்கர எல்லாம் சேர்த்து.... பல்லு நாக்கில படாம நேரா தொண்டைக்குள்ள நாலு துளி விட்டு... மீதிய மண்டைல தேய்ச்சுக் குளிங்க...

எனக்கு நல்லா வருது வாய்ல..

வருண் said...

Priya: All I am saying is, IT IS NOT always TWO individuals problem as you claim. It can be complicated. Two individuals personal issue can be UGLY. The society has something to say.

If you are not mature enough to analyze this situation, and finger at me as if I said something inappropriate, I cant help it.

I am a rationalist, I dont believe in God but there is a society around me, I KNOW some issues are not just between two people as you claim. It is more than that! This is how I can explain you.

Dont get emotional, try to get the point I am raising here by bringing up an ugly situation. Take it easy, Priya!

So, it is not always two people's right to live the way they want! DOT

வருண் said...

***ஹாஹாஹா... அடப் பாவி மனுஷா! என்னாத்தை சொல்லுறது. மக்கள் வருங்க அமைதி கொள்க! :)***

இது அவங்க ரெண்டுபேர் விசயம் இல்லைனு உங்களுக்கு ப்ரியமாட்டேன்கிதே!

**//டேட்டிங் என்பதையும் இப்போத்தான் பார்க்கிறோம்.//

நல்லதுதானே! அங்கே என்ன நடக்கிது ‘உரையாடல்’ நடக்கிது.***

நான் இதை தப்புனு சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லை.

எங்களால லிவிங் டுகெதெர் இல்லாம வாழ முடியாது, செக்ஸ் அவசியம்னு சொல்லிப்புட்டு, நல்லா லிவிங் டுகெதெர் வாழ்க்கை வாழ்ந்துட்டு இன்னொருவரை அரேஞிட் மேரேஜ் செய்துகொள்ளும் அரைவேக்காடுகள் வாழும் உலகம் இது! அதுதான் பிரச்சினை! நம்மாளூ அரைக்கிணறுதான் தாண்டுவான் ஆனா வாய்கிழிய பேசுவான்!

Thekkikattan|தெகா said...

//இது அவங்க ரெண்டுபேர் விசயம் இல்லைனு உங்களுக்கு ப்ரியமாட்டேன்கிதே!//

அவங்க ரெண்டு பேத்தையும் அனுப்புற இடம் ஏற்கெனவே சொல்லியாச்சு. எத்தை எத்தோட ஒப்புமை பண்ணுறதுன்னு விவஸ்தை இல்லையா? This is absurd, what you are comparing.

//நான் இதை தப்புனு சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லை.//

நல்லது!

//செக்ஸ் அவசியம்னு சொல்லிப்புட்டு, நல்லா லிவிங் டுகெதெர் வாழ்க்கை வாழ்ந்துட்டு இன்னொருவரை அரேஞிட் மேரேஜ் செய்துகொள்ளும் அரைவேக்காடுகள் வாழும் உலகம் இது! //

:)) என்னாச்சு வருண். ஏன் இவ்வளவு தவிப்பு - தண்ணியக் குடிங்க. சேர்ந்து வாழ்ந்தாவே அதுக்காகத்தான்னு எப்படி ஒரு தீர்க்கமான முடிவோட அணுகுறீங்க. நான் 90களின் ஆரம்பத்திலேயே கோவையில இருக்கும் போது ஒரே வீடா வாடகைக்கு எடுத்து ஆணும்/பெண்ணும் சேர்ந்தே தங்குற மாதிரியான ஹாஸ்டலாதான் எங்க ஆராய்ச்சி நிறுவனமே அமைச்சுக் கொடுத்திச்சு. அங்கே நீங்க சொன்ன மாதிரியெல்லாம் நாங்க நடந்துகிடலையே!

சரி, நீங்க சொல்லுற மாதிரியே நடந்தாலும், ரெண்டு அடல்ஸ் பிடிச்சுதான் சேர்ந்து இருந்தா நமக்கென்னா. புரியுது premarital sex is wrongனு சொல்ல வாரீங்க. சரிங்க, இப்போ நம்ம இருக்கிற இந்த ஊர்ல sexual perverteness பெண்களை குறுகுறுப்பா பார்த்து நெளிய வைக்கிறதில்ல, அதை நம்மூர்ல இருந்து இங்க வந்தவுடன் மொதல்ல கவனிக்கிறது நம்மூரு பெண்கள்தான். அது தெரியுமா? பண்பாட்டிலும், ஒழுக்கத்திலும், கலாச்சாரத்திலும் ஆஹா நாமல்ல நெம்பர் ஒன் உலகத்திற்கே இருந்தும் ஏன் இந்த முரண்?? சொல்லுங்க!

எந்த ஊர்ல புள்ளியல் கணக்குப்படி குழந்தைகள் பாலியல் உபத்திரம் அதிகமா இன்றைய கால கட்டத்தில நடக்கிது? பொது இடங்களில் வைத்து எந்தந்த நாடுகளில் அதிகமான பாலியல் உபத்திரவங்கள் எதிர்பாலினத்தவருக்கு நடக்கிது? ஏன் உலகத்திலேயே நெம்பர் ஒண்ணா இருக்கோம் எய்ட்ஸ்ல? இந்த ஸ்டாட்ல எல்லாம் நீங்க வீக்குன்னு இதுக்கு மொதப் பதிவில நீங்களே ஒத்துக்கிட்டீங்க, ஏன்னா இப்போதான் அண்டர் க்ரவுண்ட்ல இருந்தே வெளிய வந்திருக்கீங்க.

புரிஞ்சிக்கோங்க, இதெல்லாம் பின்னி பிணைந்து கெடக்கிறது. இப்படியே பேசிட்டே போகலாம். வருண், நீங்க சும்மா வீம்புக்கு தெரியாத மாதிரி பேசிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

இல்லன்னா, மாசக் கணக்கா நாம பேசி ஒரு தெளிவிற்கு வரலாம்.

You know how I learnt to calm myself down when it comes to 'commenting' these kinds of individual choices based life style - I live my LIFE! The rest does not exist.

jothi said...

//தமிழ் கலாச்சாரத்தில் "லிவிங் டுகெதெர்" என்கிற காண்சப்ட் டை புதிதாகத்தான் பார்க்கிறோம்.//

###இந்த முறையில் சில சந்தேகங்கள் எழுகின்றன தெரிந்தால் நண்பர்கள் விளக்கவும் ?

இந்த கலாசாரம் எதற்கு? வெறும் உடல் சுகத்திற்காக மட்டுமா? அதற்க்கு மட்டும் என்றால் அதற்க்கு வேறு வழிமுறைகள் இருக்கிறது .....

###இந்த முறையில் by accident இவர்களால் உருவாகும் மற்ற ஜீவனுக்கு இவர்கள் தரும் விளக்கம் என்ன?

###இந்த கலாசாரம் நம் வீடிற்கு வந்தால் இதை உங்களால் ஏற்றுகொள்ள முடியுமா? விவாதத்துக்கு வேண்டும் என்றால் மேடையில் நீங்களும் நானும் பேசலாம் ...
வீதியில் நடக்கும் விபத்து நமக்கு செய்தி ...... அதுவே நம் வீட்டில் நடந்தால் துக்கம்.....இழப்பு ....??? ,

அவிய்ங்க ராசா said...

அருமை..

Anonymous said...

>>>>###இந்த முறையில் by accident இவர்களால் உருவாகும் மற்ற ஜீவனுக்கு இவர்கள் தரும் விளக்கம் என்ன?<<<<

2007 லேயே 11 மில்லியன் அநாயதையாக விடப்பட்ட குழந்தைகள் இருப்பதாக ஒரு செய்தி http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article1627008.ece

அதே சமயத்தில 2008 கணக்கெடுப்புபடி 25 மில்லியன் அப்படின்னு பேசிக்கிறாங்க http://www.24-7pressrelease.com/press-release/25-million-orphaned-children-lie-behind-indias-booming-success-61430.php

உண்மையான நிலவரம் என்னவோ.அதெல்லாம் இப்போ உள்ள இந்த living together கலாச்சாரம் முன்னாடி உள்ளது

வருண் said...

***:)) என்னாச்சு வருண். ஏன் இவ்வளவு தவிப்பு - தண்ணியக் குடிங்க. சேர்ந்து வாழ்ந்தாவே அதுக்காகத்தான்னு எப்படி ஒரு தீர்க்கமான முடிவோட அணுகுறீங்க. நான் 90களின் ஆரம்பத்திலேயே கோவையில இருக்கும் போது ஒரே வீடா வாடகைக்கு எடுத்து ஆணும்/பெண்ணும் சேர்ந்தே தங்குற மாதிரியான ஹாஸ்டலாதான் எங்க ஆராய்ச்சி நிறுவனமே அமைச்சுக் கொடுத்திச்சு. அங்கே நீங்க சொன்ன மாதிரியெல்லாம் நாங்க நடந்துகிடலையே!***

I still believe you dont understand me at all. :( This is completely DIFFERENT thing. Living together means two people sleep with each other and have sex.

***சரி, நீங்க சொல்லுற மாதிரியே நடந்தாலும், ரெண்டு அடல்ஸ் பிடிச்சுதான் சேர்ந்து இருந்தா நமக்கென்னா.**

The concept of live-in-together is first step of marriage in a love marriage. That pair breaking up is OK> But later accepting an arranged marriage is UTTER NONSENSE!

Are you defending such nonsense???

I am lost here, completely!

***புரியுது premarital sex is wrongனு சொல்ல வாரீங்க. **

Premarital sex is not wrong if you don't accept arranged marriage with another partner. You should have the decency to marry the person with whom you slept with just like in WEST!

The culture you and kalvettu is telling me is a REAL MESS-UP culture of half-baked morons. It is not a progress! It is one step backward from our traditional normal arranged marriage and sex-after-marriage setting of our culture!

Take care, BYE!

Thekkikattan|தெகா said...

//You should have the decency to marry the person with whom you slept with just like in WEST!//

Oh! is that how even after 'a couple breaks up' still they come together just because they were physically intimate once in West - அது சரி!

Take care, boss! by the way, where are you living?!

//Take care, BYE!//

இதுக்காக எவ்வளவு கும்மியாகிப் போச்சு. I was there just like you in 1997 :) ...

Thekkikattan|தெகா said...

இந்திய living together மரபுல நல்ல அனுபவிக்கிற வரைக்கும் அனுபவிச்சிட்டு ரெண்டு பேரும் தங்களோட திருமணம்னு வரும் போது அந்த முறையிலேயே ஈடுபடதவர்களா பார்த்து ஏமாத்தி கட்டிக்கிறாங்கன்னு வருணுக்கு கோபம் வருது அப்படித்தானே, வருண்.

அப்படின்னா, இதையும் படிச்சு வைங்க Valentine's Day - ஏன் நடிக்கணும்?

pillaival said...

//நாட்பட நாட்பட அது நம்மோட “”பண்பாடா’’’ கூட மாறீடுமில்லையா? //

கண்டிப்பா மாறும். வரதட்சிணைக்காக ஒருத்தரை ஒருத்தர் கொன்னுக்கிறது எல்லாரும் ஏற்றுக்கொண்டால் அது நம் பண்பாடா மாறும்.அந்த மன மாற்றம் எல்லாருக்கும் வரும்.
கொலை செய்வது குற்றம் என்ற வரையறை உங்களுக்கு சொல்லி தந்தது இந்த சமுகம்.
கொலை செய்வது குற்றம் இல்லை என்று இந்த சமுகம் உங்களுக்கு சொல்லும் போது அதை நீங்கள் ஏற்று கொள்வீர்கள்.

கலகலப்ரியா said...

..as i am suffering from immaturity............ pls grant me leave for a few hours...

comma,

Thekkikattan|தெகா said...

//..as i am suffering from immaturity............ pls grant me leave for a few hours...//

hahaha... me too since last night, i've been suffering from delirium - hehehe need more people to comfort me...

semi colon; :P

தருமி said...

அருண்,
//இந்த தனுஷ் படத்திலே பொதுவா அவன் கேரக்டர் அப்பாவை இப்படித்தான் "உரிமை"யா கூப்பிடும்...//

நானும் இப்படித்தான் நினச்சேன். ஆனால் நம் 'கலாச்சாரம்' வேற மாதிரின்னு ஒரு இடுகை போட்டு புரிஞ்சிக்கிட்டேன். படிங்க

kutipaiya said...

:) இதில சொல்லப்பட்டிருக்க மாதிரியான பதிவுகளை படிக்க நேர்ந்த போது, சமயத்தில் பின்னூட்டம் போடவும் யோசிக்கத் தோன்றியது...அது எந்த விதத்தில் உதவப்போகிறது என்று. இங்க வந்திருக்க சிலது மாதிரி உதவாத, விதண்டாவாதமான(!) பின்னூட்டங்களில் சிக்கிக் கொள்ள விருப்பமில்லாததும் ஒரு காரணம்.

Simply loved the TITLE and a few other comments!!! நெத்தியடி!!

கலகலப்ரியா said...

||Thekkikattan|தெகா said...
//..as i am suffering from immaturity............ pls grant me leave for a few hours...//

hahaha... me too since last night, i've been suffering from delirium - hehehe need more people to comfort me...

semi colon; :P||

அடப் பாவமே... wish ya a speedy recovery.. :o)

தருமி said...

கருத்துப் போராட்டமா .. இல்ல வேறயான்னு தெரியலை. தலை சுத்திரிச்சி. இங்க என்ன நடக்குதுன்னே புரியலை. அதுனால //Take care, BYE!// இது ரொம்ப பிடிச்சிப் போச்சு .......

Thekkikattan|தெகா said...

வாங்க குட்டிப்’பையா,

//அது எந்த விதத்தில் உதவப்போகிறது என்று.//

help yourself! எப்படியா வுமக்கு முன்னோடியான மக்கள் இது போன்ற மற்ற collectively considered social taboos yet needs to be reconsidered and expand their horizons விசயங்களை பேசத் துணிந்ததுனாலேயே இன்றைக்கு நீங்களோ, நானோ அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த புற வாழ்க்கை... ஒரு நான்கு பேரை தானும் வாழ்வதற்கு எல்லா தகுதிகளும் இருக்கிறது என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைவதற்கான ஒரு கூட்டுச் சிந்தனைக்கான தளமாக அமைத்து கொடுப்பதற்கேனும் உதவலாம் அல்லவா!

எனவே, கருத்துக்கள் பதியப்பட வேணும், ஒரு விசயத்தின் பொருட்டு தனி மனித மனம் என்ன நினைக்கிறது என்பதனை வெளிக் கொணரும் பட்சத்தில் - think about it! will make sense.

Thekkikattan|தெகா said...

வாங்க தருமி,

//கருத்துப் போராட்டமா .. இல்ல வேறயான்னு தெரியலை. தலை சுத்திரிச்சி. இங்க என்ன நடக்குதுன்னே புரியலை. அதுனால //Take care, BYE!// இது ரொம்ப பிடிச்சிப் போச்சு ..//

எனக்கும்தான் புரியல, இந்த பதிவின் மூலமா நான் பேச வந்ததே வேற விசயம். ஆனா, என்னயப் பிடிச்சு ஒரு சமூகமா யோசிக்க வேண்டியதிற்கு என்னய பிரதிநிதியா திரும்பவும் ‘’ஊருகாய்’’ போட கூப்பிட்டு குழப்பியாச்சு... :(

இந்த போஸ்ட்ல எவ்வளவு இருந்திச்சு பேச, பின்னூட்டங்கள்தான் வால் மாதிரி நீண்டுருக்கே ஒழிய உருப்படியா எதுவும் உரையாடப் பட்டுருக்கான்னா... கேள்விக் குறிதான் மிச்சம் - செமி கோலன் ; :P

மங்கை said...

பெரிய ஆட்கள் விவாதம் போல இருக்கு... நமக்கு அந்த அளவிற்கு பத்தாது.... ஆஸ் அ சோசியல் சைன்டிஸ்ட்...என்னுடைய நிலை
We make culture and are, in then, made by it.

long-established action or pattern - இது பாரம்பரியம்..

கலாச்சாரம், பண்பாடு எல்லாமே அது ஆக்கப்பட்ட காலத்தில் சமுதாயத்தின் நலன் கருதியும், தனி மனிதனின் நலன்/சுதந்திரம் கருதியுமே ஏற்படுத்தப் பட்டிருக்கும் என்பது என் கருத்து... அப்படியாகும் பட்சத்தில் அது வரையறுக்கப்பட்ட ஒரு செட் ஆஃப் ரூல்ஸ் ல தான் இருக்கனும்னு அவசியம் இல்லை... மனிதனை மனிதானாக மதித்து பொய்யில்லாத வாழ்க்கை வாழ்ந்தாலே இச்சமுதாயம் நல்லா இருக்கும்.
நம் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் எது நல்லதோ அதை அவர்களே தேர்ந்தெடுத்து தங்களின் வாழ்க்கை முறையை ஏற்படுத்திக்கொள்ளக் கூடிய பக்குவத்தை வளர்க்க வேண்டியது நம் பொறுப்பு... மற்றவர்களை பார்த்து அதிலிருந்து பாடங்களை எடுத்துக்கொள்வது காலத்துக்கும் சரிபட்டு வராது...

நாம் வாழும் வாழ்க்கை யாரோ கற்றுக் கொடுத்த வாழ்க்கை முறை.. அந்த விழிப்புணர்வு வேண்டும்..

வரும் சந்ததியனர் மலரட்டும்... அது இயற்கையாக நடக்கும்....

கலகலப்ரியா said...

ஹெவி டோஸ் கொடுக்க முன்னாடி கொஞ்சம் லைட்டா டயட்...
http://kalakalapriya.blogspot.com/2010/11/blog-post_14.html

தொடருவோம்ல...

Thekkikattan|தெகா said...

ஹெவி டோஸ் கொடுக்க முன்னாடி கொஞ்சம் லைட்டா டயட்...
http://kalakalapriya.blogspot.com/2010/11/blog-post_14.html

தொடருவோம்ல...///

ஹையோ! ஏங்க போலி புர்ச்சி எல்லாம் பேசிகிட்டு, ப்ளாக் கவுண்டரா சுத்தவிடவும்தேய்ன் இதெல்லாம் எழுதிகிட்டுன்னு பேசிக்கிறாங்க முதுகுப்பின்னாடி... வாங்கடா பொதுவுக்கு பேசி பாத்துக்குவோம்னா... தலைய காட்ட மாட்டீங்கிறாய்ங்க :) நீங்க நடத்துங்க... சொல்லுதேய்ன்!

தருமி said...

அட .. படிச்சித்தான் பாருங்களேன்!

Thekkikattan|தெகா said...

தருமி said...

அட .. படிச்சித்தான் பாருங்களேன்!//

தருமி, 2006லேயே போட்டு பெண்ட் நிமிர்ந்தியிருக்கீங்க. நான் ப்ளாக் ஒலகத்தில அப்போதான் பாட்டில் தேடியிருப்பேன், சப்லிமெண்டா ஹிஹிஹி...

கலக்கல் போஸ்ட் தருமி! A must read, for people who wants to grow up and wean off of the bottle to move, to drink the milk from a glass :))

ஒரு விசயம் புரியுது உங்க போஸ்ட் படிக்கும் பொழுது தேடித் தேடி படிச்சாத்தான் நல்ல போஸ்டுகள் கிடைக்கும் போல... இன்னும் மிஸ்ஸாகி எத்தனை போஸ்டுகள் உங்க வீட்டில தூங்குதோ நான் படிக்காம :(

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இங்க இவ்வளவு பேசியிருக்கீங்களா? படிக்கணும்.. படிச்சிட்டு சொல்றேன்..

The Analyst said...

Cool Post!

"ஆண்/பெண் உறவு சார்ந்தும், ஆடைகள் உடுத்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கில் மட்டுமே இந்தக் கலாச்சாரம் விழிப்புடன் இருக்கிறதே அது ஏன்?"

”பெற்றவர்களை புறந்தள்ளி வாழ்வது, தனக்காக தனது படிப்பை/தேவைகளை விளக்கி வைத்து மற்றவருக்காக வழி விட்டு வாழ்ந்தவர்களை தன் தேவை முடிந்தவுடன் அவர்களை தூக்கி கடாசிவிட்டு வாழத் துணிவது, வரதட்சிணைக்கென வயதானவர்களையும் நொந்து சாகும்படியான சூழலுக்கு இட்டுச் செல்வது, நாட்டையே சுரண்டும் வாக்கில் ஊரான் சொத்தை திருடி கொண்டு போய் வைத்துக் கொள்ளும் களவாணித் தனம், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஏமாற்றிக் கொண்டு வாழ்வதெல்லாம் இந்த கலாச்சார கூண்டிற்குள் வராதா?”


கிட்டத்தட்ட இதையே தான் நானும் எவ்வளவோ காலமாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. அவரவர் விருப்பம் என்பது வரையில் சரி தான்..

But as a general norm.. தமிழ்நாட்டின் இன்றைய நிலையில்.. தமது காதலை பெற்றோரை ஏற்க வைக்கவே பிள்ளைகள் பாடுபட வேண்டியிருக்கற இன்றைய நிலையில.. சேர்ந்து வாழும் வரை வாழ்ந்துட்டு, அப்புறமா அப்பா-அம்மா ஒத்துக்கல இல்ல வேற வசதியான வரன் கிடைச்சாச்சுன்னு தண்ணி தெளிச்சிவிட்டுட்டு ஓடறவங்க இருக்கற இன்றைய நிலையில, விட்டுட்டு ஓடிட்டா இன்னொருத்தர் நிலை என்னன்னும் யோசிக்க வேண்டியதா இருக்கு.. i know at least 2 separate such incidents; in one, the other person is still suffering.. அவங்க பின்னாடி இன்னொரு துணையைத் தேடிக் கொள்வதிலும் எவ்வளவோ சிக்கல்கள்.. குழந்தை உண்டாகிட்டா அதுக்கு யாரு பொறுப்பு?

சேர்ந்து வாழ நினைக்கறவங்க உணர்வுவயப்பட்ட நிலையில முடிவு எடுக்காம, அதில் உள்ள ரிஸ்க்ஸ் பத்தியும் முழுமையாகப் புரிஞ்சுட்டு எடுத்தா - ரெண்டு பேருக்குமே நல்லது.. இந்த நிலைமை சீக்கிரம் நம்ம ஊருல வரும்கறீங்க?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

முதல்ல, தான் விரும்பினவரைத் திருமணம் பண்ணி குடித்தனம் நடத்துற அளவுக்கு, தெகிரியமும், துணிச்சலும் வரணும்.. அது வந்துட்டா, எப்படிச் சேர்ந்து வாழ்ந்தா என்ன? திருமணம் என்பது சிலருக்கு ஜஸ்ட் மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.. இல்லற வாழ்க்கையைத் துவங்க சிலருக்கு மனரீதியா அது தேவை.. திருமணத்துக்குப் பிறகே இல்வாழ்க்கைன்னு காத்திருந்து பண்ணிக்கிட்டவங்களையும் தெரியும்.. they hadn't even registered their marriage :)) அப்படி இருக்கறது அவங்களுக்கு சந்தோஷம்.. சிலருக்கு இல்வாழ்க்கையைத் துவங்கத் திருமணம் தேவையில்லை.. அது அவங்க விருப்பம்..

நான் இந்த ஆதி கால சங்க கால தமிழ் கலாச்சாரம் எல்லாம் படிக்காதவ.. அதான்.. ஸ்ட்ரைட்டா.. TN today..

கடைசியா.. மறுபடியும்.. ஒரு general issue ஆகத் தான் இதை எழுதியிருக்கேன்.. Not as interference in someone else’s life.. நன்றி..

The Analyst said...

இப்படியே எல்லாப்பிரச்சனைகளையும் மூடி மறைத்து எமது கலாச்சாரமே மேல் என்று இன்னும் எப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

இரண்டவது வகைக்குள் இன்னும் பல விடயங்கள் சேர்க்கலாம்.

மனப் பொருத்தத்தைத் தவிர மிச்ச எல்லாப்பொருத்தமும் பார்த்து செய்யப்படும் திருமணம் எப்படித் தான் புனிதமாகக் கருதப்படுகிறதோ தெரியவில்லை. அதோடு நிச்ச‌ய‌மான‌தும் கூட‌ வெளிப்ப‌டையாக‌க் க‌தைத்து, ஒருவ‌ரை ஒருவ‌ர் புரிந்து கொள்ள‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அநேக‌மாக‌ இல்லை.

ஒரு சின்ன உதாரணம்.

அண்மையில் இங்கு வசிக்கும் ஒரு ஆணுக்கு இலங்கையிலேயே பெற்றோர் பெண் பார்த்து திருமணம் அண்மையில் முடிந்து பெண்ணும் இங்கு வந்தாயிற்று. வந்த சிறு காலங்களில் ஒரு நாள் திடீரென்று பயங்கர நெஞ்சு வலி. உடம்பில் ஒரு பிரச்சினையும் இல்லை, ஒன்றும் serious ஆக இருக்காது, panadol போட்டு, கொஞ்சநேரம் ஒய்வெடுத்துப் பாருங்கள் என்று GP உட்பட எல்லோரும் சொல்லியாயிற்று. ஒன்றும் பலனில்லை. தனக்கு மூச்சே எடுக்க இயலவில்லை, நிச்சயம் சாகத்தான் போறேன் என, paramedics கூட‌ வந்து GP சொன்னதையே சொன்னார்கள். It was purely psychological. There was nothing wrong with her physically.

நடந்ததை மிக அண்மையில் வவுனியாவிலிருந்து வந்திருந்த ஒரு மருத்துவரிடம் கதைத்துக்கொண்டிருக்கையில் அவர் சொன்னது, ஊரில் மேற்கூறிய symptoms உடன் வரும் திருமண வயதிலிருக்கும் அநேகமான பெண்களுக்கு அது மனப்பிரம்மையாகவே இருக்கும் என்றார். பெரும்பாலும் புதுச்சூழல், புது உறவு, புது எல்லாமே. பிரச்சினை, சந்தேகங்கள் எதுவுமே வெளியே யாருடனும் கதைக்க அநேகமாக முடியாது. அநேகமாக அதன் விளைவே என்றார். நம்பவே முடியவில்லை. இதுவரைக்கும் யாரும் இதைப் பற்றிச் சொன்னதேயில்லை. It's happening to significant proportion of young women in our culture, but nobody ever even discusses it.

அதையும் விட‌ worse, எமது கலாச்சாரத்தில் அற‌ம்பிற‌மாக‌ப் பேசி அனுப்புவ‌து தான் வைத்திய‌ம். No counseling exists or ever existed.

"அதுவும், இந்த உறவு நிலையில் போலியாக இணைந்தே 30, 40 வருடங்கள் என ஊருக்காக வாழ்ந்து முடிக்கும் நிலையில் - இடையில் அடிதடி, நிம்மதியின்மை, மனச் சோர்வு, அடுத்தவருக்கு என்ன வேண்டும், தன்னுடைய டேஸ்ட் என்ன, தனக்கே என்ன வேண்டும் என்றே தெரியாமல் விழிபிதிங்கி என்னமோ பிறப்பெடுத்துவிட்டேன் வாழ்ந்து முடிக்கணுங்கிற கடமை உணர்ச்சியோட மல்லுக்கட்டி அக்கப்போர் பண்ணி வாழ்வதில் என்ன சிறப்பு இருந்துவிடப் போகிறது?"

Exactly.

I am not sure whether this is a coherent comment. Just my ramblings. Try to come back later with some sensible things to say.

Thekkikattan|தெகா said...

வாங்கங்க எல் போர்ட்.. பீ சீரியஸ்,

// சேர்ந்து வாழும் வரை வாழ்ந்துட்டு, அப்புறமா அப்பா-அம்மா ஒத்துக்கல இல்ல வேற வசதியான வரன் கிடைச்சாச்சுன்னு தண்ணி தெளிச்சிவிட்டுட்டு ஓடறவங்க//

உங்க அணுகுமுறை பிடிச்சிருக்கு. ரொம்ப உண்மை! அதே போன்ற திட்டத்துடன் இறங்குறவங்க ரொம்ப மனத் தைரியத்துடனும், தெளிவோடும் இருக்கணும். நம்ம ஏன் நடிக்கணும் கட்டுரையில கூட அப்படித்தான் காதலர்களுக்கு சவால் விட்டுருப்பேன். ஆனா, பொருளாதார ரீதியா தன்னிரைவை அடைந்திருப்பவர்களும் அவர்களின் பெற்றோர்களும் நல்ல exposuresம் மனத் தெளிவும் உள்ள பட்சத்தில், கண்டிப்பாக மண வாழ்க்கையில் ஈடுபடணும்னு வருகிற காலக் கட்டத்தில் இணைந்து போக அனேக வாய்ப்புண்டு. இருந்தாலும், இருசாராரும் வெகு தொலைவு போகணும்னுதான் எனக்கும் தோணுது. அதான் நிதர்சனம்!

எனக்கு வெகு அருகாமையில் நான் கண்கூடாக கண்டது, ஒன்றும் மெச்சிக் கொள்ளும் பாங்கில் இல்லை.

//they hadn't even registered their marriage :)) அப்படி இருக்கறது அவங்களுக்கு சந்தோஷம்.. சிலருக்கு இல்வாழ்க்கையைத் துவங்கத் திருமணம் தேவையில்லை.. அது அவங்க விருப்பம்..//

இதுக்கு எவ்வளவு தகிரியமும், தெளிவும், பக்குவமும் இருக்கணும். எந்த பிடிமானமுமில்லாம (officially not registered, no religious rites performed இத்தியாதி...) ஆனா மண வாழ்க்கையில் இருப்பது. குழந்தை வரைக்குமே கூட போறாங்க. அந்த அளவிற்கெல்லாம் செல்ல ரொம்ப மன முதிர்ச்சி வேணுங்க

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//”பெற்றவர்களை புறந்தள்ளி வாழ்வது, தனக்காக தனது படிப்பை/தேவைகளை விளக்கி வைத்து மற்றவருக்காக வழி விட்டு வாழ்ந்தவர்களை தன் தேவை முடிந்தவுடன் அவர்களை தூக்கி கடாசிவிட்டு வாழத் துணிவது, வரதட்சிணைக்கென வயதானவர்களையும் நொந்து சாகும்படியான சூழலுக்கு இட்டுச் செல்வது, நாட்டையே சுரண்டும் வாக்கில் ஊரான் சொத்தை திருடி கொண்டு போய் வைத்துக் கொள்ளும் களவாணித் தனம், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஏமாற்றிக் கொண்டு வாழ்வதெல்லாம் இந்த கலாச்சார கூண்டிற்குள் வராதா?”//

நான் இன்னும் கேட்பேன்.. குப்பையைத் தெருவில் வீசுவது, சாலையில் காறித் துப்புவது.. :)) work culture.. இன்னும் இருக்கு..

நம்மாட்கள், ஒருவனது தனி மனித ஒழுக்கத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, அவனது பிறர் சார்ந்த ஒழுக்கங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.. இரண்டும் ஒருவனிடம் வெவ்வேறு அளவில் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள நாளாகும்..

//அதை நம்மூர்ல இருந்து இங்க வந்தவுடன் மொதல்ல கவனிக்கிறது நம்மூரு பெண்கள்தான். //

ஆமோதிக்கறேன் :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இல்ல.. they still perform the religious rites.. but they trust each other, family ties are strong, so they do not bother about getting registered immediately.. of course, they need it later for sothu pathu issues.. but, registering is not their primary issue about getting married..

Thekkikattan|தெகா said...

//அவங்க பின்னாடி இன்னொரு துணையைத் தேடிக் கொள்வதிலும் எவ்வளவோ சிக்கல்கள்...//

இது இரு பாலாருக்கும் நம் சமூகத்தில் ஒரே மாதிரிதான் ஊர் பேசிக்கிறது நடைமுறைன்னாலும், பெண்களுக்கு கொஞ்சம் கூடுதலா காது, மூக்கு வைச்சி தூத்துவதுண்டு. ஆனா, இதெல்லாம் நாம பேசிட்டு இருக்கிறது ”ரெண்டாவது இந்தியாவில்” வசிக்கிறவிங்களுக்குத்தாங்க இது பொருந்தும்.

// குழந்தை உண்டாகிட்டா அதுக்கு யாரு பொறுப்பு? //

இதெல்லாம் the law of physics basis, every action has its own reaction... part of the package, the more the desired one learns the greater the பட்டறிவு gain for the individual is concerned, அப்படியே சமூகத்திற்கு - புத்தகமாகவோ, காது வழி செய்தியாகவோ... காலங்கள் நகர பெண்டுலம் ஆடி, அடங்கி ஒரு சமநிலைக்கு வந்திடும் :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//”ரெண்டாவது இந்தியாவில்”//

இது எங்க இருக்கு? :)

Thekkikattan|தெகா said...

//நம்மாட்கள், ஒருவனது தனி மனித ஒழுக்கத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து,//

இங்கே நல்லா கவனிங்க இந்தப் பதிவில பேசப்பட்ட மற்ற பெரிய விசயங்களை தவிர்த்திட்டு நேற்றையில இருந்து அடிச்ச கும்மி பூராவும், இந்த ‘சேர்ந்து வாழ்வது’ங்கிற தனிமனித அனுபவத் தேடலின் பொருட்டே ஆராய்ச்சி பண்ணியிருக்கோம்.

அந்த நிலையில என்ன நடக்கிதுன்னா, இரு தனிநபர்களின் தேவைகளை, தேடல்களா அங்கே பட்டுணர்வதற்காக அடைந்து கொள்ள எத்தனிப்பதும்...

இந்த Macro...

//அவனது பிறர் சார்ந்த ஒழுக்கங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.. //

விசயத்தை கோட்டை விட்டு, உலக அரங்கில் இந்தியாவா, லஞ்சமில்லாம வேலை நடக்காது (ஏது வேணாலும் பணம் கொடுத்து காரியம் சாதிச்சிக்கலாம்னு வெளி நாட்டுக்காரன் அளவிற்கு தெரிஞ்சு வைச்சிருக்கான்..), சிவிக் சென்ஸ் வந்து ஒரு chaos, ஓட்டுண்ணி மாதிரி உள் புகைச்சல் பயன் படுத்திக்கிட்டு சொந்த பெற்றோர்களையே கடாசிடுவாங்க ரேஞ்ச்... அடையாளப் படுத்திக்கிறதில என்ன இருக்கு??

Thekkikattan|தெகா said...

//”ரெண்டாவது இந்தியாவில்”//

இது எங்க இருக்கு? :)//

தெரியாதா... அப்படின்னா நீங்க “மொத இந்தியாவில’ இருந்து வாரீங்கன்னு புரிஞ்சிக்கோங்க... :)))

அது இன்விசிபில்ங்க, ஆனா, 60 விழுக்காடுகளுக்கும் மேலான மக்கள் அந்த இந்தியாவிலதான் வசிக்கிறாங்க. நானெல்லாம் நெம்பர் 2 பகுதி.

ஏதோ ஒரு பதிவில விளக்கமா எழுதியிருப்பேன் :D

Thekkikattan|தெகா said...

வாங்க அனலிஸ்ட்,

மிகச் சரியான நேரத்தில் வந்து ஓடும் புகைவண்டியில் தாவி பிடிப்பதனைப் போல ஏறிட்டீங்க. நன்றி!

//கிட்டத்தட்ட இதையே தான் நானும் எவ்வளவோ காலமாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.//

அது ஒரு மாதிரியான வளர்ச்சி நிலையில இருக்கும் போது குறுகிய வட்டப் பார்வையில இருந்து கொஞ்சம் பெரிசா விரிச்சுப் பார்க்கும் பக்குவநிலைக்கு வரும் பொழுது சிறு ‘மாற்றத்திற்கு’ உட்பட்ட விசயங்களில் கவனத்தை செலுத்திக் கொண்டிருப்பது நேர விரயம்னு புரிய ஆரம்பிக்குமோ என்னவோ!

ம்ம்ம்... நீங்க சொன்ன அந்த புது ஊரு, சூழ்நிலை, மண வாழ்வு அதனையொட்டிய உளவியல் சம்பந்தமான பிரச்சினைகள் கண்டிப்பாக பெண்களுக்கு இருக்கத்தான் செய்யும், அதுவும் நீங்க சொன்னது கொஞ்சம் எக்ஸ்ட்ரீம் கேஸ். அது வெளிநாட்டில் இருந்ததால் பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல் அப்படி ’லாக் ‘ ஆகிக் கொண்டார் போல. புதுச் செய்தி எனக்கு.

//Try to come back later with some sensible things to say.//

இன்னும் எழுதுங்க...

Thekkikattan|தெகா said...

அனலிஸ்ட்,

//இப்படியே எல்லாப்பிரச்சனைகளையும் மூடி மறைத்து எமது கலாச்சாரமே மேல் என்று இன்னும் எப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.//

இது ஒரு மாதிரியான தனக்குள் தானே செலுத்திக் கொள்ளும் புறப் போதை மாதிரி. அதாவது எப்படின்னா, மற்ற நாட்டில இருக்கவன்லாம் நம்ம நாட்டு கலாச்சாரத்தை ஃபாலோ பண்றான்னு சொல்லிக்கிற ரேஞ்சு... அங்கன டூரிஸ்டா ரெண்டு வெள்ளதுரைகள்/துரைச்சி, குர்தாவிலும், சேலையிம்/பொட்டுமா அரை மணி நேரம் கட்டிக்கிட்டு திரிஞ்சதை பார்த்துருப்பாய்ங்க அதப் பார்த்துட்டு - ஹிஹிஹி - அப்புடீத்தேய்ன்... தான் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் :)

//மனப் பொருத்தத்தைத் தவிர மிச்ச எல்லாப்பொருத்தமும் //

வாழ்க்கை முழுதுக்கும் ‘ப்ளைண்ட் டேட்டிங்தேய்ன்’ :D

தம்பி... said...

Dear Varun,
We in our land speaks only Tamizh, May be in your place you speak different language. Its so disgusting to read your comment in different language. Please write your comments in Tamizh so that it will be better to understand your thought very much.

Thanks.

தம்பி... said...

@அனைவருக்கும்: கலாச்சாரம்/பண்பாடு என்பது:

1. மறுமணம் புரிதல் கூடாது.
2. என்ன தான் அடித்தாலும் சுட்டாலும் மணம்புரிந்தவருடனே காலம் தள்ள வேண்டும்.
3. குடும்பத்தகராறு என்று பெரியவர்களிடம் சென்று நிற்க கூடாது.
4. பரத்தையர்களிடன் சென்று வரலாம்
5. தோசம் என்று நிர்வாண படுத்தி பூசை செய்யலாம்.

6. தினத்தந்தி/தினமலரில் செய்தி வரலாம் குடும்பத்தகராறில் மனைவி கொலை என்று.
7. காதல் கத்திரிக்காய் போன்றவற்றை எதிர்க்க வேண்டும்.
8. ஆங்கிலயர்கள் மூலம் நம் கலாச்சாரத்தில் புகுந்த முழுக்கால் சட்டை போன்றவற்றை தீயில் போட்டு பொசுக்க வேண்டும்.

பி.கு: 1. பொரியார்/ராசாராம் மோகன்ராய்/காந்தி போன்றோர்களை கலாச்சார இறையாண்மைக்கு எதிராக வேலை பார்த்தார்கள் என்று கழுவில் ஏற்ற வேண்டும்.

2. உலகமயமாக்குதல் மூலம் ஏற்படும் கலாச்சார மாற்றங்கள் போன்றவற்றை எந்த கட்டுபாடு இன்றி போராட்டம் நடாத்தி எதிர்க்க வேண்டும்.

------------------

Ref:
1.

Source ( http://en.wikipedia.org/wiki/Culture )
--
culture referred to "the cultivation of individuals through the agency of external forms which have been objectified in the course of history".[3]
---

2. Ref: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
---
எல்லா மனிதரும் பண்பாட்டைக் கொண்டிருப்பதனால் அது மனிதனின் படிமலர்ச்சியின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதினர். பண்பாடு என்பது மனித இயல்பு என்றும், அது அநுபவங்களைப் பகுத்து குறீயீடாக்கி, குறியீட்டு முறையில் வெளிப்படுத்துவதற்கான உலகம் தழுவிய மனிதனுடைய தகுதியை மூலவேராகக் கொண்டது எனவும் அவர்கள் வாதித்தார்கள். விளைவாக ஒன்றிலிருந்து ஒன்று விலகி வாழுகின்ற மக்கள் குழுக்கள், தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளுகின்றன. எனினும் வெவ்வேறு பண்பாடுகளின் அம்சங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு இலகுவாகப் பரவ முடியும்.
---கலாச்சாரம் என்பது கால கட்டத்தின்பால் மறுவதே அன்றி அது நிலையானது அல்ல.

Thekkikattan|தெகா said...

அரசூரான் said...
தெகா, சரியா சொல்லுங்க... கண்ணுக்கு மட்டும்தான் புலப்படலயா? கலாச்சாரம் என்பது வரையறையற்ற வரைமுறைகள் கொண்டது. தனிமனித ஒழுக்கம் மேம்படாத வரையில் இனி அது கேள்விகுறியே//

அரசூரான், பொருத்தருள்க! கூட்டத்தில அடிதடியில உங்கள தாண்டியேஏஏஏ பொயிட்டேன். கருத்துப் பொருத்து - மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க. காலத்திற்கு உட்பட்டு நல்லது கெட்டது ரெண்டும் சீர்தூக்கிப் பார்த்து தேவையான மாற்றங்கள் எஞ்சும், தேவையில்லாதது கழியும்... நம்மூர்ல மேடு பள்ளம் ஒழியணும்னா நிறைய இளைஞ/ஞிகளின் வெளி உலக நோக்குப் பார்வையில ஒரு பெரிய மாற்றம் ஏற்படணுங்க. அது கொஞ்சம் கொஞ்சமாத்தான் நகர ஆரம்பிக்கும்... பார்க்கலாம்.

பின்னூட்டத்திற்கு நன்றி!

கல்வெட்டு said...

.

தெகா, நேரில் பேசும்போது முகத்தில் அல்லது பார்வையில் கடுமையைக் காட்டலாம். ஆனால் பிளாக்கில் வார்த்தைகளில்தான் கோபத்தைக் காட்ட வேண்டியுள்ளது. வெளியிடுவது உங்கள் விருப்பம் சார்ந்தது.

கலாச்சாரம் என்பதே தவறு அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் ஒன்று என்பதுதான் எனது நிலை.

அதைத்தாண்டி கூமுட்டைகளின் கலாச்சாரம் என்பது என்ன என்பதற்கு சில எடுத்துகாட்டுகள்...

1.மணவிழா வரவேற்பில் கோட்டு சொக்காய்க்கு மாறிவிடும் பொறம்போக்குகள் இன்னமும் மணமகளுக்கு சேலைதான் கலாச்சாரம் என்கிறதுகள்.

2.தாடி இல்லாமல் இருக்கும் கனவானுக்கு இன்னமும் மனைவிக்கு பர்தா கலாச்சாரத்தேவையாய் உள்ளது.

3.மெட்டியை ஒழித்த சட்டித்தலையன்களுக்கு இன்னமும் தாலி கலாச்சாரத் தேவையாய் உள்ளது.

4. அப்பா அம்மாவை காப்பகத்து அனுப்பியவர்களுக்கு இன்னும் தீபாவளி கலாச்சாரமாய் உள்ளது.

5.சானிட்டரி நாப்கினுடன் வேலைக்குப் போய் சம்பாத்தித்து அந்தக் காசில் ஹனுமானுக்கு தயிர்வடை செலுத்தலாம், ஆனால் அதே கோவிலுக்கு போகக்கூடாது என்பது கலாச்சாரமாய் உள்ளது.


...இப்படி பல கலாசாரம் என்பது கடைபிடிப்பவனின் வசதியையும் , பெண்களின் மேல் திணிக்கப்படும் உடல் சார்ந்த கட்டுப்பாடுகளாகவுமே ஏன் உள்ளது?

:-((((

.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

"கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு”

யாரங்கே தெகா அவர்களுக்கு தமிழ் டிவி சீரில்கள் டிவிடிகளை அள்ளி அனுப்பிவைத்து தனி அறையில் அடைத்து வையுங்கள்!

//அடுத்து கலாச்சாரம், கலாச்சாரம் என்று பேசுகிறோமே, எது கலாச்சாரம்? பெற்றவர்களை புறந்தள்ளி வாழ்வது, தனக்காக தனது படிப்பை/தேவைகளை விளக்கி வைத்து மற்றவருக்காக வழி விட்டு வாழ்ந்தவர்களை தன் தேவை முடிந்தவுடன் அவர்களை தூக்கி கடாசிவிட்டு வாழத் துணிவது, வரதட்சிணைக்கென வயதானவர்களையும் நொந்து சாகும்படியான சூழலுக்கு இட்டுச் செல்வது, நாட்டையே சுரண்டும் வாக்கில் ஊரான் சொத்தை திருடி கொண்டு போய் வைத்துக் கொள்ளும் களவாணித் தனம், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஏமாற்றிக் கொண்டு வாழ்வதெல்லாம் இந்த கலாச்சார கூண்டிற்குள் வராதா//

இப்படியா போட்டு டமால்னு ஒடைக்கறது? யாருக்காவது எதுனா ஆயிடிச்சின்னா உங்க கொம்பெனிதான் பொறுப்பு சொல்லிட்டேன்! :))

Thekkikattan|தெகா said...

யாரங்கே தெகா அவர்களுக்கு தமிழ் டிவி சீரில்கள் டிவிடிகளை அள்ளி அனுப்பிவைத்து தனி அறையில் அடைத்து வையுங்கள்!//

வாங்க ஷங்கர்,

நல்ல வேல அந்த கன்றாவில எல்லாம் ஆர்வமே இருக்கிறதில்ல. பொழுது பட்டா வீட்டிற்குள்ளர என்னமோ எழவு விழுந்து கெடக்கிற மாதிரி ஒவ்வொரு வீட்டிற்குள்ளர இருந்து சத்தம் அந்த தெரு முழுக்கவுமே... :)

//இப்படியா போட்டு டமால்னு ஒடைக்கறது? யாருக்காவது எதுனா ஆயிடிச்சின்னா உங்க கொம்பெனிதான் பொறுப்பு சொல்லிட்டேன்! :))//

அதெல்லாம், பதில் சொல்ல வேண்டிய கேள்விக்கு எல்லாம் ஒரு புள்ளயும் கண்டுக்கல; ஷ்ரேயா கர்சீப் கட்டிகிட்டு அடுத்த படத்திற்கு நடிக்கப் போவுதாம் அப்பூடி நடிக்கக் கூடாதுன்னு பாய்காட் பண்ண பொயிட்டாங்களாம் சூட்டிங் ஸ்பாட்டிற்கு :D

Thekkikattan|தெகா said...

வாங்க மங்கை,

//பெரிய ஆட்கள் விவாதம் போல இருக்கு... நமக்கு அந்த அளவிற்கு பத்தாது.//

ஹிஹிஹி என்ன இருந்தாலும் இது வரைக்கும் இங்க ஓடின உரையாடலை வைச்சி இப்படி “ஆணி அடிக்கக் கூடாது” உச்சாந்தலையில... விடுங்க... விடுங்க எங்களுக்கும் எங்க ஷேர் லைஃப் கேக் கிடைக்குமில்ல :)

//We make culture and are, in then, made by it.//

ரைட்...

//long-established action or pattern - இது பாரம்பரியம்...//

இதக் காப்பாத்துறேனுதானேங்க அத்தனை வெட்டுக், கொத்தும்... கூர்ந்து கவனிச்சிப்பார்த்தா?

வேற எடத்தில இந்த பாரம்பர்யமின்னு கேட்டவுடன் இப்படி க்ளிக் ஆனிச்சு ஓ! இதக் காப்பாத்தி கொடுத்திட்டு போறதுதானோன்னு... அத இங்க போடுறேன்... அதுவான்னு நீங்க பாருங்க :)

ஓ! பாரம்பர்யம்... ஒரே தெருவில வசிச்சிக்கிட்டு என் பக்கத்து வீட்டுக்காரன் என்னய பார்த்தவுடன் தோள்ல போட்டுருக்க துண்டை எடுத்து லபக்கின்னு கக்கத்துல வைச்சிக்கிட்டு, செருப்பை எடுத்து கையில புடிச்சிக்கணும்...

ஏன்னா பக்கத்து வீட்டு ராஜா, அது ரெண்டு குட்டிகள பெத்து போட்டு, அதுக்கு இந்த வித்தையை கத்து கொடுத்துட்டு போயிருக்கும் சொச்ச மிச்ச காலத்துக்கும் பக்கத்து வீட்டுக்காரன ஆளா... சபாஷ்! Africa's clan set up livelyhood, at least, hope by now came out of இருண்ட பகுதி... ஆனா, வளர்ந்த இந்தியாஆஆஆ


மற்றபடி நீங்க சொன்ன ”குழந்தைகளுக்கு நீச்சலடிக்க” கத்துக்கொடுத்திட்டு கரையில இருந்து எஞ்சாய் செய்ங்கப்பா அப்படிங்கிறது, அவசியம் கத்துக்க வேண்டிய பக்குவம், வீட்டுபாடம் எனக்கெல்லாம்...

The Analyst said...

Kalvetu - you are spot on!

இந்த list இல் மேற்கத்தையவர்களை racist என்று சொல்லிக்கொண்டே நாம் இன்னும் சாதி, அந்தஸ்து பார்த்தே மனிதரை மதிக்கும் பழக்கத்தையும் சொல்லலாம்.


அண்மையில் ஒரு aunty நடந்த எதோ ஒரு விடயத்தையும் தொடர்புடையவர்களையும் பற்றிக் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது (என்ன என்று exact ஆக நினைவில்லை). அவை LC உமக்குத் தெரியும் தானே என்றார். நானோ "LC ஆ? அப்பிடியென்றால் என்ன" என. அவ சொன்னது ‍ low caste. :( இப்பிடி abrreviated form எல்லாம் இருக்கென எனக்கு அன்றைக்குத்தான் தெரியும்.

The Analyst said...

ஆண்/பெண் திருமணம் கட்டாமல் “சேர்ந்து வாழ்வது”


ஒரு couple எவ்வாறு வாழவெண்டுமென யாராவது கேட்டால் எனக்கு நினைவில் வரும் தம்பதியரில் ஒருவர் என‌து ப‌ழைய‌
lab இல் வேலை செய்த research assistant.


Fiona 19 வ‌ய‌திலிருந்து Paul உட‌ன் தான் வ‌சித்து வ‌ருகிறார். அவவிற்கு இப்போது 35 வயது வரும். இரு சிறு குழந்தைகள். த‌னக்கு பல்கலைக் கழக பரீட்சை நேரங்களில் Paul தயார்செய்து கொடுக்கும் good luck lunch boxes இலிருந்து அவர்களின் அன்னியோன்னியமான குடும்ப வாழ்வைப்பற்றி நிறையச் சொல்லியுள்ளார். குழந்தைக்கு ஒரு வயது வரும் வரை விடுப்பிலிருந்து விட்டு, பின் கிழமைக்கு இரு நாட்கள் வேலைக்கு வருவார். அந்நாட்களில் Paul ஏ தனது வெலையை விட்டு வீட்டில் குழந்தைகளைக் கவனிப்பார்.

He gets to spend some quality time with his daughters while Fiona gets some much needed break. It is an equal partnership.

அவர்களைப் பார்க்கும் போது திருமணமாகாதவர்கள் என சொல்லவே முடியாது.
அவரிடம் திருமணம் செய்ய யோசிக்கவில்லையா எனக் கேட்ட போது. அவர் சொன்னார். என்னைப் பொறுத்தவரையில் நாம் வாழ்க்கைத்துணைவர்கள், அதை ஒரு கடுதாசி எனக்கு நிரூபிக்கத்தேவையில்லை என்றார்.

That's exactly right. Marriage certificate does not have any miracle powers to make marriage work.

கையேடு said...

இடுகையை படிச்சு புரிஞ்சிகவே நாளாயிடுச்சு.. இதுல பின்னூட்டமெல்லாம் படிக்கணும்னா ஒரு மாசம் ஆயிடும் போல.. :)

Thekkikattan|தெகா said...

இடுகையை படிச்சு புரிஞ்சிகவே நாளாயிடுச்சு.. இதுல பின்னூட்டமெல்லாம் படிக்கணும்னா ஒரு மாசம் ஆயிடும் போல.. :)//

இது கருத்தாய்வில இருந்து தப்பிச்சிக்கிறதுக்கான வழி, நம்பமாட்டோம், நம்பமாடோம் :))... அப்படி ஒண்ணும் ஜாங்கிரி சுத்திடலையே இந்தப் பதிவில.

கையேடு, பின்னூட்டத்த வாசிச்சிட்டே வாங்க பயோலாஜி பாடமெல்லாம் எடுத்திருக்கேன் படிங்க, படிச்சிட்டு சொல்லுங்க சில இடம் செம காமெடியா இருக்கும். எஞ்சாய்!

Thekkikattan|தெகா said...

//அவர் சொன்னார். என்னைப் பொறுத்தவரையில் நாம் வாழ்க்கைத்துணைவர்கள், அதை ஒரு கடுதாசி எனக்கு நிரூபிக்கத்தேவையில்லை என்றார்.//

அனலிஸ்ட், அந்த மாதிரி வாழ்வதற்கு மனது ரொம்ப பக்குவப்பட்டிருக்கணும். உறவு பரஸ்பரமா முன்னேறி, trust மாதிரியான விசயங்களில் பல படி மேலே ஏறி வந்தடைந்திருக்கணும். ஏன்னா, அங்கே எந்த விதமான சமூக பாதுகாப்போ, இல்ல அலுவலக சான்றிதழ்களோ பிடிச்சி வைச்சிருக்கல - தூய இரு பக்க நேசமே கட்டி வைச்சிருக்கு.

அந்த அளவிற்கெல்லாம் என்னாத்தை உழைச்சிக்கிட்டுன்னுதான் நமக்கெல்லாம் மற்ற பாதுகாப்பான அரண்கள் தேவைப்படுது, ஊர்ஜிதப் படுத்தி வைச்சிக்க. இதெல்லாம் அல்டிமேட் ‘ஸ்பிரிச்சுவல் வாழ்வு நிலையின் உச்சமா (!)’ சவுண்டாகுது எனக்கு. அட! உண்மையை ஒத்துக்க என்னாத்திற்கு சங்கடப்படணும். :)

The Analyst said...

"சானிட்டரி நாப்கினுடன் வேலைக்குப் போய் சம்பாத்தித்து அந்தக் காசில் ஹனுமானுக்கு தயிர்வடை செலுத்தலாம், ஆனால் அதே கோவிலுக்கு போகக்கூடாது என்பது கலாச்சாரமாய் உள்ளது."

வீட்டிலேயே எவ்வளவோ restrictions உடன் இருக்கும் ஆட்கள் உண்டு. அந்நாட்களில் சாப்பிட வேறு தட்டு, இருக்க வேறு கதிரை, வேறு படுக்கை பாவிப்பவர்கள் இங்கேயே இருக்கிறார்கள். Worst part is, அவர்களின் மகள்மாரும் அதையே பின்பற்றுகிறார்கள் (high school kids), ஏனெனத் தெரியாது + அவர்கள் தமிழிலேயே கதைப்பதில்லை. இந்த மாதிரி மூடநம்பிக்கைகளை மட்டும் பின்பற்றுகிறார்கள்.

Thekkikattan|தெகா said...

அந்நாட்களில் சாப்பிட வேறு தட்டு, இருக்க வேறு கதிரை, வேறு படுக்கை பாவிப்பவர்கள் இங்கேயே இருக்கிறார்கள்.//

இங்கயே இருக்கிறார்கள் என்றால் எங்கே நியூஸி’லேயேயா?

//Worst part is, அவர்களின் மகள்மாரும் அதையே பின்பற்றுகிறார்கள் (high school kids),//

அடக் கொடுமையே! என்னவென்று சொல்வது.

The Analyst said...

"இங்கயே இருக்கிறார்கள் என்றால் எங்கே நியூஸி’லேயேயா?"
Yes.இங்கு வசிக்கும் சில‌ நம்மவர் வீடுகளில்.

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு தங்களின் மனம் மாறி மீண்டும் இங்கு சில முரண்களை எம்முள் வீசி எறிந்தததிற்கு நன்றி!

ஆனால், பதில் வரவில்லையே என்று நினைக்க வேண்டும். வேலை செய்யுற இடத்தில வேலை செய்யும், அதுதான் வேணும். No more! No less!!

Raji said...

hello Varun, Thekka and Priya...I think you three are playing ringa ringa roses...:)
1.Varun I recently heard an interview from Kamal, he said clearly that it is he who think marriage is not for him and he is not against marriage in general and he will really appreciate/accept if others including his daughters go for it...I think somewhere you misunderstood what he talked for himself.....it is so simple.I dont know why everyone is getting irritated by Kamalhassan when there are so many male/famale rogues wandering in our society...
2.Thakka I already read you post few days ago...It was yet another conversation with you...thats it...never thought that this post will trigger people to this extent..:)...but good thoughts...you tamil style has changed and improves so much...
3.Priya..good comments...

Thekkikattan|தெகா said...

வணக்கம் தம்பி,

உங்களின் பட்டியலில் இன்னும் கூடுதலாக பலவற்றை இணைக்கலாம்... இது போன்ற கட்டுரைகளுக்கு பின்னான ஒரு பெரிய சமூக அவலம் புதையுண்டு கிடக்கிறது. அது தன் வீட்டுக் கதவை தட்டும் வரையிலும் யாரும், கவனிப்பதாக தெரியவில்லை. அது போன்று சிந்தித்து பழகாததும் ஒரு காரணமே! இதுவே, சமூகக் கொலைகளில் (honor killings) எந்த விதமான உருத்தலுமில்லாமல் கலந்து கொள்ள முடிகிறது ... பேசுவோம்.

Thekkikattan|தெகா said...

//hello Varun, Thekka and Priya...I think you three are playing ringa ringa roses...:)//

hahaha... indeed, I am going round 'n round with my little one, ringa ringa rosy, pocket full of... :)) good one.

i hope here you might have gone through the dialogue progressed towards comparing apple with orange :D - very ridiculous isn't it?

Raji, the reason I avoided bringing in Kamal, this post is not about him... we are asking a very crucial question as a society (nation) we are not ashamed of identifying as crooked, scandulous, corruptive machine who self-inflict the suffering in the name of individual selfishness of politicians. No one want to feel ashamed about it... வந்துட்டாய்ங்க.

//It was yet another conversation with you//

my pleasure sharing, raaji.

//never thought that this post will trigger people to this extent..:)//

oh! wow!! you should go around check some sites, reall terror, if you get to see them, you might feel and really concerned that you are living amidst a bunch of talibans :D

Thank you so much!

Anonymous said...

your post is found here

http://oslotamils.com/s45js/index.php?option=com_content&view=article&id=106:kultur&catid=37:2010-08-13-12-27-54&Itemid=59

CorText said...

நன்று. கலாச்சாரம், நடைமுறை, மரபு, பண்பாடு போன்ற பல வார்த்தைகள் சில வேறுபாடுகளுடன்... இவையெல்லாம் ஒரு சமுதாயத்தில் உருவாகும் (emergence), உருவாக்கப்பட்ட (சட்டங்கள் போல்) சில பொதுபட்ட பரவலான செயல்பாடுகளால் உருவாகின்றது. அதில் பழகி போன சமூகம் அதை ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றது. அதில் நன்மையும் திமையும் உண்டு.

நம்முடைய கலாச்சாரம்... 50, 100 வருடங்களுக்கு முன்பு வரை விதவைகளை மொட்டை இட்டு, நெருப்பில் தள்ளிய சமூகம்; முக்கால்வாசி மக்களை தீண்டதகாதவர்கள் என்று ஒடுக்கி வைத்த சமூகம்; இன்றும் அதன் அவலங்கள் பலவடிவில் இருக்கும் சமூகம்; இன்றும் பச்சிளம் குழந்தைகள் வேலையிலும் விபச்சாரத்திலும் தள்ளப்படும் சமூகம்; இன்று ஒரு நாளைக்கு 6000 குழந்தையில் பசியால் சாகும் சமூகம்; பால் நோய்கள் அதிகம் கொண்ட சமூகம்; .... இப்படி பல இருந்தாலும், நம் சமூகம் இதை உயர்ந்த கலாச்சாரமாக பீற்றி கொண்டு உள்ளது. மூக்கு நிறைய அழுக்கை வைத்து கொண்டு, அடுத்தவரை கிண்டல் அடிப்பதும், அடுத்த கலாச்சாரத்தை கீழாக நினைப்பதும் நம் கலாச்சாரத்தின் பண்பாடு.

கலாச்சாரம் ஒரு சமூகத்தின் பொருளாதாரம், சுகாதாரம் போன்ற பல வளங்களை நாளடைவில் நிர்மானிக்கின்றது. உலகிலுள்ள எல்லா கலாச்சாரத்திலும் நன்றும் தீதும் கலந்தே உள்ளது. ஒரு கலாச்சாரம் அதன் கலாச்சாரத்தை வெளிப்படையாக அலசம் பாங்கும், பல புதியவற்றை ஏற்கும் பக்குவமும் கொண்டிருந்தால் அது முன்னேற்ற வழியில் வளர உதவும். எனென்றால் கலாச்சாரம் மாறி கொண்டே இருக்கும் ஒன்று.

Thekkikattan|தெகா said...

//கலாச்சாரம் ஒரு சமூகத்தின் பொருளாதாரம், சுகாதாரம் போன்ற பல வளங்களை நாளடைவில் நிர்மானிக்கின்றது. உலகிலுள்ள எல்லா கலாச்சாரத்திலும் நன்றும் தீதும் கலந்தே உள்ளது. ஒரு கலாச்சாரம் அதன் கலாச்சாரத்தை வெளிப்படையாக அலசம் பாங்கும், பல புதியவற்றை ஏற்கும் பக்குவமும் கொண்டிருந்தால் அது முன்னேற்ற வழியில் வளர உதவும். எனென்றால் கலாச்சாரம் மாறி கொண்டே இருக்கும் ஒன்று.//

வாங்க CorText,

மிக அருமையான பார்வை. மிக்க விளக்கமாகவும் எடுத்து வைத்திருக்கிறீர்கள். அந்த பக்குவ நிலையை, ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்துவதற்கெனவே இங்கே இது போன்ற விசங்கள் முன் வைக்கப்பட்டு தெளிவூட்டிக் கொள்ளப்படுகிறது.

உங்கள் பின்னூட்டத்தில் இருந்து நான் ஹைலைட் செய்த பகுதி மிக முக்கியமெனதொரு விடயம் என்று நான் கருதுகிறேன்.

மீண்டும் நன்றி. இந்தப் பதிவினைத் தொடர்ந்து பெற்றோர்களுக்கும் - பிள்ளைகளுக்குமான உரையாடல் நிமித்தம் ஒரு கட்டுரை இருக்கும் அதனையும் நேரமிருந்தால் வாசித்துப் பாருங்க.

தருமி said...

salute to CorText. ரொம்ப நல்லா, தெளிவா சொல்லியிருக்கிறார்.

வருண் said...

***இப்படி பல இருந்தாலும், நம் சமூகம் இதை உயர்ந்த கலாச்சாரமாக பீற்றி கொண்டு உள்ளது. மூக்கு நிறைய அழுக்கை வைத்து கொண்டு, அடுத்தவரை கிண்டல் அடிப்பதும், அடுத்த கலாச்சாரத்தை கீழாக நினைப்பதும் நம் கலாச்சாரத்தின் பண்பாடு.***

ஐயா!

நம்ம பாரதியும் தன் மொழியை பெரியதாகத்தான் சொல்லி இருக்காரு!
-----------
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்§ம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

---------------

நீங்க என்ன சொல்ல வர்றீங்க இப்போ? அது உலகமகா தப்பா?? I believe you criticize Bharathi too? OR NOT?

ஆமா. இங்கே நீங்க என்ன சொல்றீங்க? உங்க கலாச்சாரம்தான் உலகத்திலேயே கேவலமான ஒண்ணுனா?

நல்லதுங்க! :)

CorText said...

@தெகா: தங்கள் கருத்துக்கு நன்றி தெகா. உங்கள் பதிவுக்கும், அதன் மூலமான ஆரோக்கியமான உரையாடலுக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்!

@தருமி: உங்கள் salute-க்கு தலை வணங்குகின்றேன்!

@வருண்: உங்கள் கருத்துக்கு நன்றி!

Thekkikattan|தெகா said...

//Kousalya said...

முதலில் உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....உங்களது விரிவான, தெளிவான விளக்கங்கள் என்னை இன்னும் தெளிவு படுத்துகிறது.//


மிகத் தாமதமாக உங்களுக்கு பதில் எழுதுவது மாதிரி ஆகிவிட்டது, சூழ்நிலை. நிறைய விசயங்கள் பேச வேண்டி உரையாடலுக்கான சாத்தியங்களில் கவனம் செலுத்துவது மாதிரியாகிவிட்டது.

உங்களின் பதிவை வாசிப்பதற்கு முன்பு வேறு ஒருவர் சில மாதங்களுக்கு முன்பே இதே தொனியில் அவரின் ஐயங்களாக ஒரு செறிவான கட்டுரையை முன் வைத்திருந்தார். பின்னாலில் இணைப்பு கிடைத்தால் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

அங்கு அதிமாக நான் உரையாடவில்லை எனினும் ஒரே பின்னூட்டத்தின் மூலமாக முடித்துக் கொண்டேன். ஆனால், பின்னால் தனியாக எழுதும் எண்ணமிருந்தது. உங்கள் பதிவில் ‘என்ன செய்வது’ என்ற கையறு நிலை தூக்கலாக இருந்ததால், காலச் சக்கரம் பற்றி பேச வேண்டியாதிப் போனது :) .

இந்த உரையாடலின் மூலமாக நிறைய விசயங்கள் கிடைக்கப்பட்டிருப்போம் என்ற நல்ல நம்பிக்கை எனக்குண்டு. நன்றி, கவ்சல்யா!

காட்டாறு said...

யப்போவ்....... நெறைய தீனி இருக்கு போலவே இங்கே தமிழ்மணத்துல(!). :)

சேர்ந்து வாழ்வது பற்றி யப்போவ்.. இம்பூட்டு போஸ்ட்டா? எல்லாம் படிச்சேன். இதிலே 10 பேராவது ஞானம் அடைஞ்சிருப்பாங்க. நன்றி போஸ்ட் போட்டவங்களுக்கும் உடன்/எதிர் கருத்து கொடுத்தவங்களுக்கும். சிந்திக்க வச்சிட்டீங்க மக்கோவ்!

காட்டாறு said...

நெறையா இடத்துல இடறல் வருவது... சேர்ந்து வாழ்தலே புணர்வுக்கு மட்டும் தான் என்பது போல பதில்களின் தொணி. முதல்ல சாரத்தை (லுங்கி) இறுக்கி கட்டிட்டு சிந்திக்கனும். அப்போ தான் தெளிவு பிறக்கும். எல்லாமே செக்ஸுடன் சேர்த்து பார்க்கும் பழக்கம் எப்போது மாறுமோ அப்போ தான் நீ சரியான வழியில் சிந்திக்கிறாய் என்று அர்த்தம்.

காட்டாறு said...

சேர்ந்து வாழ்தல் பற்றி தவறா பேசுறவங்கள் இந்நிலையை அனுபவித்து வாழும் வாய்ப்பு கிட்டாதவர்களோ என்று எண்ணம் எழுகிறது. நமக்கு கிடைக்கலைன்னா அதெல்லாம் பாவம், பொறுக்கித்தனம், கயவாளித்தனம் என்று எண்ணும் நம் கலாச்சாரமே தான். இதற்கும் ஒரு நிகழ்வு வச்சிருக்கேன். இளம்பிராய ஐடி மக்கள்ஸ். முதல் முறை வெளிநாட்டு பயணம். எல்லாரும் சேர்ந்தே வீடு எடுத்து பெண்ணும் ஆணுமாய் பேதமின்றி தங்கி இருப்பர். இதில் அப்படி வாய்ப்பு கிடைக்காத ஆண் கூட்டம் ஒதுங்கியே வாழ்வது மட்டுமன்றி, என்ன பொண்ணுங்க இவங்கன்னு அவதூறு பேச்சு. 3 மாதம் கழித்து இந்தியா திரும்பினர். மறுபடி 1 மாத இடைவெளியில் திரும்ப அதே இடத்திற்கு பயணம். அவதூறு பேசிய அதே ஆண் இம்முறை 2 பெண்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கினார். அப்போ நக்கலாய் கேட்ட மற்றுமொரு ஆணிடம் இவர் சொன்னது; இதில் என்ன தவறு என்று. என்னங்கடா இது. உங்களுக்கு நடந்தா மச்சம். அடுத்தவன் செய்தா, அந்த பொண்ணு மட்டம். அடேய், திருந்துங்கடா! இதில் நீங்க கவனிக்க வேண்டியது என்னான்னா.. மேல்ஷாவனிசம்! காலாவதியான கலாச்சாரம்!

காட்டாறு said...

// அவ சொன்னது ‍ low caste. :( இப்பிடி abrreviated form எல்லாம் இருக்கென எனக்கு அன்றைக்குத்தான் தெரியும்.//
இங்கே ஒரு நிகழ்வு பாருங்க. அமெரிக்காவில் இருந்தாலும் நாங்கள் எங்க நாட்டு கலாசாரத்தில் தான் வாழ்வோம் என பீற்றிக் கொண்டு தீபாவளி பார்ட்டிக்கு அழைப்பு. பட்சணம் செய்து, பட்டாசு கொளுத்தி, புதுப் புது உடையில் சிறார் பெரியவர்களும். என் நெருங்கிய தோழி சென்னைத் தமிழில் பேசி என்னுடன் அலம்பல் ஆரம்பித்தாள். பார்ட்டிக்கு கூப்பிட்ட அம்மினி அடுத்த பார்ட்டிக்கு எங்களை கூப்பிடவில்லை. ஏனாம்? சேரி பாஷை (அவங்க சொன்னது) பேசிய நாங்கள் கண்டிப்பாக லோ காஸ்ட் தானாம். இதில் கலாச்சார கத்தரிக்காய் எங்கே? தீபாவளி நீ கொண்டாடுவதில் இல்லையடி அம்மா கலாச்சாரம். கட்டம் கட்டிய வாழ்க்கை! Sigh... மனுஷங்களை மதிக்க கற்றுக் கொள். உன் பிள்ளைகளையும் உன் நாறிய எண்ணத்தில் ஊற விடாதே. அது அடுத்த தலைமுறையை நாசப் படுத்தும். உன் எண்ணத்தை சீர் செய்தால் தானே உன் வீட்டை செம்மை படுத்த முடியும்.

உசிரோட நீ இருக்குறது காலம் கொஞ்சம் தான். மேலோட்டமாய் பேசி, சிரித்து, வாழ்ந்து ஏன் வீணடிக்கிற? எப்போதுமே பேக்கேஜுடன் வாழ்பவருக்கு நேர் பார்வை பார்க்க எங்கு நேரம். முதுகு மூட்டை தான் உன்னை கூமுட்டையாய் அழுத்தி கீழ் பார்வையில் மட்டுமே நிறுத்தி வச்சிருக்கே.

காட்டாறு said...

பல வருடத்திற்கு முந்திய கதை இது. வேலையினிமித்தம் மும்பை, சென்னை சென்று வந்த அமெரிக்க அம்மினியிடமிருந்து வந்த கேள்விகள் இது.
1) வரவேற்பு -- சென்னையில் ஆரத்தி சுற்றி வரவேற்றனர்; மும்பையில் மாலையிட்டு, நெற்றித்திலகமிட்டு வரவேற்றனர். இதில் இந்திய கலாச்சாரம் எது என்பதே அவருடைய குழப்பத்திற்கு காரணம். (கலாச்சார அம்மை அப்பன் எனக்கும் கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன்.)
2) திருமணம் – சென்னையில் பெற்றோர் பார்த்த பெண்ணை பெற்றோர் தான் திருமணம் செய்து வைப்பாராம். மும்பையில் பையன் பார்த்த பெண்ணை பெற்றோர் திருமணம் வைப்பாராம். அப்போ பெற்றோர் கடேசி மூச்சு வரைக்கும் பிள்ளைகளுக்கு சம்பாதித்து கொடுத்தே சாக வேண்டுமா? அப்படி இருந்தும் எப்படி ஜனத்தொகை இப்படி....... நான் நல்ல வேளை இந்தியாவில் பிறக்கவில்லை என்றார்.

போன வருடம் என்னுடன் இந்தியா வந்த அமெரிக்க தம்பதியினர் வட இந்தியா தென் இந்தியா சுற்றிப் பார்த்துவிட்டு கேட்ட கேள்வி. இந்த இரண்டும் இரு துருவங்கள் போல இருக்குதே. இதில் இந்திய கலாச்சாரம் என்னவென்று. வட இந்திய கைடு நம் (வட) கலாச்சாரம் பற்றியும், தென் இந்தியா சுற்றிக் காண்பித்தவர் இது தான் இந்திய கலாச்சாரம் எனவும் எடுத்த பாடத்தின் விளைவு தான் அந்த கேள்வி.

இந்த கேள்விகளுக்கு பதில் கேட்டால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சொல்ல போறாங்க. ஒருமித்த பதில் கிடைக்காது.
கலாச்சாரம் என்றாலே என்னவென்று குழப்பத்தில் இருந்து கொண்டு தன் நாட்டு சாரம் தான் மேல் என சாடுவோரே, பதிவில் சொன்னது போல காலந்தொட்டு மாறி வரும் மாற்றத்திற்கு இல்லாத கயிறு ஒன்றை திரித்து கொண்டிருப்பதில் யாருக்கு லாபம். இன்னும் சிம்பிலா சொல்லப் போனா இல்லாத ஒன்னைப் பிடிச்சி தொங்கிட்டு, இருக்குறதை கோட்டை விட்டுறாதீங்க அப்பூ.

காட்டாறு said...

வருண் சொன்னது // நம்ம பாரதியும் தன் மொழியை பெரியதாகத்தான் சொல்லி இருக்காரு! //

வருண், தமிழ் மொழியை பெரிதாக நினைத்து மற்ற மொழிகளை அவர் நிந்திக்கவில்லை. இந்த பாட்டில் கலாச்சாரம் பற்றி என்ன சொல்லி இருக்கார்?

//பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ//

எவ்ளோ அழகா சொல்லி இருக்கார் பாருங்களேன். தமிழன் எப்படி இருக்கனுமின்னு அந்த காலத்திலே என்னா தொலைநோக்கு பார்வை. வாவ்!

கலகலப்ரியா said...

காட்டாறு... =))))... பாரதி என்ன சொல்றாருன்னு உங்களுக்காவது புரிஞ்சதே...

வருண் said...

***காட்டாறு said...

வருண் சொன்னது // நம்ம பாரதியும் தன் மொழியை பெரியதாகத்தான் சொல்லி இருக்காரு! //

வருண், தமிழ் மொழியை பெரிதாக நினைத்து மற்ற மொழிகளை அவர் நிந்திக்கவில்லை. ***

இப்போ நிந்தித்ததா நான் எங்கே சொன்னேன் னு "கோட்" பண்ணுங்க!
சும்மா எதையாவது சொல்லக்கூடாது ஆமா!

தனக்குத் தெரிந்த, தன் தாய்மொழி மொழிதான் உலகத்தில் சிறந்தது என்கிறார். அவருக்கு அவர் மொழி சிறப்பாகத் தெரிவது போல ஒரு சிலர் தனது கலாச்சாரம்தான் உயர்ந்தது என்று நினைப்பதில் ஏதும் தவறில்லை. அதற்காக தமிழ் மொழியில் குறையே இல்லையா என்ன? அந்த குறைகளை நிறைகளால் மறைத்துப் பார்ப்பதே மனித இயல்பு. என்னவோ மத்தவன் எல்லாம் தன் கலாச்சாரம் கேவலமானதுனு சொல்வது போலவும் தமிழ்ந்தான் தன் கலாச்சாரம் பெருசுனு சொல்வதுபோல் திரிப்பது நான் இல்லை!

காட்டாறு said...

//இப்போ நிந்தித்ததா நான் எங்கே சொன்னேன் னு "கோட்" பண்ணுங்க!
சும்மா எதையாவது சொல்லக்கூடாது ஆமா!
//

ஓ.. ஆமா வருண். நீங்க இம்பிலிசிட்டா கூட சொல்லல. My bad. Let me take it back.

ஆனா அடுத்த லைன் கோட் பண்ணி இருக்கேன் பாருங்க. அவருடைய தொலைநோக்கு பார்வைக்கு. அதுல என்ன சொல்ல வர்றார். யோசிங்க. இல்ல அத விடுங்க. பாரதி கோட் பண்ணியதால உங்களுக்கு ஒரு கேள்வி. எனக்கு அவர் தொலைநோக்க (think beyond)கற்றுக் கொடுத்தவர் என்பதை மனதில் கொண்டு; பாரதியின் தொலைநோக்கு பார்வையில் சிறிதெனினும் நம்ம கிட்ட இருந்தா எவ்ளோ நல்லா இருக்குமின்னு என்றாவது நீங்கள் நினைத்ததுண்டா? Please dont take this personal. அவரோட பவர் அது. அவரை அருமை பேசுபவர்கள் (ஏன்; கோட் பண்ணுறவங்கன்னு கூட வச்சிக்கிடலாம்), அவர் பாடல்களின் ஆழமறிய சுயமாய் சிந்தித்து, புரிந்து, அடிநாதமாய் கொண்டு வாழ்பவர்கள், கண்டிப்பாக வாழ்க்கையை புரிதலோடு, change is the way of life என வாழ்பவர்கள் என்பது என்னோட கருத்து.

வருண் said...

***எனக்கு அவர் தொலைநோக்க (think beyond)கற்றுக் கொடுத்தவர் என்பதை மனதில் கொண்டு; பாரதியின் தொலைநோக்கு பார்வையில் சிறிதெனினும் நம்ம கிட்ட இருந்தா எவ்ளோ நல்லா இருக்குமின்னு என்றாவது நீங்கள் நினைத்ததுண்டா? Please dont take this personal. அவரோட பவர் அது. அவரை அருமை பேசுபவர்கள் (ஏன்; கோட் பண்ணுறவங்கன்னு கூட வச்சிக்கிடலாம்), அவர் பாடல்களின் ஆழமறிய சுயமாய் சிந்தித்து, புரிந்து, அடிநாதமாய் கொண்டு வாழ்பவர்கள், கண்டிப்பாக வாழ்க்கையை புரிதலோடு, change is the way of life என வாழ்பவர்கள் என்பது என்னோட கருத்து.

November 23, 2010 5:16 PM***

இதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லைங்க. பாரதியை எனக்கு துணைக்குத்தான் அழைத்து வந்தேன் (மொழிபற்று, கலாச்சாரப் பற்று இருப்பதில் தவறில்லை னு சொல்ல). அவரை வேறுவிதமாக விமர்சிக்க அல்ல!

நம்ம கலாச்சாரத்தில் உள்ள குறைகளை மட்டும் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்து, நமக்கு பேசவே தகுதியில்லைனு ஒரு சிலர் சொல்லிக்கிறாங்க.

எந்தக் கலாச்சாரத்தில் (50, 100 ஆண்டுகளுக்கு முன்னால்) குறை இல்லை?

எந்த நாட்டுக்காரன் தன் கலாச்சாரத்தில் உள்ள குறைகளை மட்டும் சொல்லி தலைகுனியிறான்?

என்பதே "மறைந்துள்ள" என் கேள்விகள்.

CorText said...

அணை கட்டி வைத்திருந்தேன். காட்டாறு அணைகளை உடைந்து கொண்டு போய்விட்டது. பொருத்தமான பேர் தான்! (ஹிஹி)

பாரதி ஒரு மகாகவி தான். அவர் திட்ட வேண்டிய இடத்தில் திட்டி, தட்ட வேண்டிய இடத்தில் தட்டி, பெருமை பட வேண்டிய இடத்தில் பெருமித்து, வருந்துமிடத்தில் வருந்தி, கனவு காணுமிடத்தில் அழகான கனவுகளையும் கண்டு எழுதியுள்ளார். அதில் ஒன்றே ஒன்றை மட்டும் மேற்கோள் காட்டி விட்டால், எல்லாம் முடிந்து விட்டாது. வாழ்கை ஒன்றும் அவ்வளவு எளிதல்ல.

நம்மூர் ஆட்களிடம், இரு எதிர்முனை சிந்தனை ஓட்டத்தை பார்க்கலாம். என் நண்பர்களிடமே இதை பார்த்துள்ளேன். ஒரு பக்கம், வெள்ளைகாரன் என்றால் என்னமோ ஒரு கொம்பு மாதிரி நினைத்து கொண்டு, தன்னையே தாழ்த்தி கொள்ளும் ஒரு நம்பிக்கையற்ற பார்வை. மறு பக்கம், என்ன பெரிய வெள்ளைகார கலாச்சாரம், அது ஒரு குப்பை என்று, ஒரு கேளி கிண்டல் அருவறுப்பு பார்வை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சிலரிடம் இவ்விரண்டு எதிர்முனையும் செர்ந்தே உள்ளது.

நாம் எந்த விதத்திலும் எவருக்கும் தாழ்ந்து விடவில்லை (அது மேல் ஜாதிகாரனாக இருக்கட்டும் அல்லது மேல் நாட்டுகாரனாக இருக்கட்டும்). நம் மொழி, நம் இசை, நாம் உலகிற்கிற்கு வழங்கிய அறிவு செல்வங்கள் - இதில் பெருமிதம் கொள்வோம்; தலைநிமிர்ந்து நம்பிக்கையுடன் நடப்போம். அதே நேரம், நாம் எந்தவிதத்திலும் பெரிய கொம்பனும் இல்லை. நம்மில் வேதனைபடும், வெட்கப்படும் பலவிசயங்கள் உண்டு என்பதையும் உணர்வோம். அடுத்தவரை, அடுத்த கலாச்சாரத்தை கேளி பேசுவதை நிறுத்துவோம். நம்பிக்கையும் வேண்டும், அடக்கமும் வேண்டும் - இதில் உனக்கெதும் தடையுள்ளதோ?

Thekkikattan|தெகா said...

//யப்போவ்....... நெறைய தீனி இருக்கு போலவே இங்கே தமிழ்மணத்துல(!)//

வாங்கங்கோவ் காட்டாறு. கொஞ்சம் லேட்டு இருந்தாலும் வந்திட்டிய.

//யப்போவ்....... நெறைய தீனி இருக்கு போலவே இங்கே தமிழ்மணத்துல(!)//

ஆமாங்கோய். இன்னும் போயிட்டுத்தான் இருக்கு. The rat hole is in fire... :D

//இதிலே 10 பேராவது ஞானம் அடைஞ்சிருப்பாங்க.//

100000/10 பேருன்னாக் கூடா பெரிய ரேசியோதானே?

தருமி said...

கிடைத்த இரு முத்துக்கள்:

//சேர்ந்து வாழ்தல் பற்றி தவறா பேசுறவங்கள் இந்நிலையை அனுபவித்து வாழும் வாய்ப்பு கிட்டாதவர்களோ என்று எண்ணம் எழுகிறது.// - காட்டாறு. (எனக்கும் இப்படித் தோன்றியது.)

//நாம் எந்தவிதத்திலும் பெரிய கொம்பனும் இல்லை. நம்மில் வேதனைபடும், வெட்கப்படும் பலவிசயங்கள் உண்டு என்பதையும் உணர்வோம்.// - CorText

வருண் said...

***தருமி said...

கிடைத்த இரு முத்துக்கள்:

//சேர்ந்து வாழ்தல் பற்றி தவறா பேசுறவங்கள் இந்நிலையை அனுபவித்து வாழும் வாய்ப்பு கிட்டாதவர்களோ என்று எண்ணம் எழுகிறது.// - காட்டாறு. (எனக்கும் இப்படித் தோன்றியது.)

//நாம் எந்தவிதத்திலும் பெரிய கொம்பனும் இல்லை. நம்மில் வேதனைபடும், வெட்கப்படும் பலவிசயங்கள் உண்டு என்பதையும் உணர்வோம்.// - CorText

November 24, 2010 12:27 AM***

I can suggest few more GEMS to absorb from west, Mr, Dharumi,

* Wife swap

* Open marriage

* Starting porn industry

* Legalizing "ganja" "cocaine"

இதிலெல்லாம் உங்களுக்கு எதுவும் தப்பாத் தோனுதா தருமி? நம்ம யாரையும் ஃபோர்ஸ் பண்ணல, ரெண்டு அடல்ட்ஸ் ம்யூச்சுவல்லி சரி என்று வரும்போது ஏற்று செய்யட்டும்.

இப்படியே பல முத்துக்கள் கோர்க்கலாம், தருமி!

I hope you wont let me down. உங்களுக்கு இதில் எதுவும் பிரச்சினை இல்லைதானே?

தருமி said...

வருண்,

எனக்குப் பிடித்த முத்துக்களை நான் தந்தேன். உங்களுக்குப் பிடித்த முத்துக்களை நீங்கள் கோர்த்திருக்கிறீர்கள். - இதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைங்க.
why should i let you down!

வருண் said...

***தருமி said...

வருண்,

இதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைங்க.
why should i let you down!
November 24, 2010 12:01 PM***

நன்றிங்க, உங்களுக்குப் பிடிச்ச முத்துக்கள் என்னை பொறுத்தவரையில் கொஞ்சம் "கன்செர்வேடிவா" இருக்குங்க. இன்னும் நல்ல நல்ல முத்துக்கள் கோர்க்கனும் நீங்க என்பது என் தாழ்மையான எண்ணம்.

குடுகுடுப்பை said...

விவாதம் இன்னைக்கு வரைக்கும் போயிட்டுதான் இருக்கு.

Thekkikattan|தெகா said...

குடுகுடுப்பை said...

விவாதம் இன்னைக்கு வரைக்கும் போயிட்டுதான் இருக்கு.//

இன்னும் திறந்தேதான் இருக்கு... ஒரே இரவில் கற்றுக் கொள்வது மாதிரியா விசயத்தின் கனம் இருக்கு.

’பயமாத்தான்’ இருக்கு மனச திறக்க ;-)

CorText said...

விலங்குகளில் ஓர்-துணை சேர்க்கையிலிருந்து பல-துணை சேர்க்கை வரை பல வகைகளை காணலாம். சில பறவைகள் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையை மட்டுமே கொள்ளும். ஒன்று இறந்து போனாலும் (ஆணோ, பெண்ணோ) மற்றது அடுத்த பறவையை நாடாது. எந்த கலாச்சாரம் அதை அதற்கு கற்று கொடுத்தது? விலங்குகளில், பொதுவாக குழந்தைகளின் மேல் அம்மாவிற்கு பாசம் அதிகம். ஆனால் பொதுவாக மீன்களில், அப்பா தான் குழந்தைகளை பேணிகாப்பது. இந்த பாசங்களை எல்லாம் எந்த பண்பாடு கற்று கொடுத்தது? நாம் எங்கிருந்து நம் அடிப்படை பண்புகளை பெற்றோம், அது எப்படி அன்றைய சூழலில் ஒருவகை கலாச்சாரமாக உருபெற்று, காலங்காலமாக மாறி கொண்டே வந்திருக்கின்றது; அதன் வரலாறு, அதன் காரண-காரியங்களை அறிவாயா? மேலும், ஒரு நல்ல மானிடம் காண, மனவியல், சமூகவியல், பொருளாதரம் பற்றிய பலவிசயங்களையும் அதன் சிக்கலான தொடர்புகளையும் ஆராய வேண்டும்.

இதற்கு சிறந்த விடையை கண்டறியும் அளவுக்கு மனித மூளை இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்றாலும், மிகக் குறைந்த அவசியமான சமூக கட்டுபாடே, நிலையான தொடர்ந்த நீடித்த ஒரு நல்ல மானிடம் காண உதவும் என அறியலாம். அதில் முக்கியமானவை: தனி மனித உரிமை மற்றும் சுதந்திரம் (இதுவே நம் சட்டங்களுக்கெல்லாம் அடிப்படை). இதனால் விளையும் சிலவினைகள் (உதாரணமாக, திருமணமின்றி சேர்ந்து வாழ்தல்) சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதன் மாற்று வழியின் எதிர்வினைகள் இன்னும் கேவலமாகத்தான் இருக்கும் என்பதை உணர வேண்டும் (அதற்கு தான் மேற்கண்ட கேள்விகள், மற்றும் தற்சார்புடன் இல்லாமல் வெளிசார்புடனான ஆராய்ச்சியின் அவசியம்).

தனிமனித நல்லது கெட்டதையெல்லாம் தாண்டி, சில விசயங்களை சமூகத்தில் எப்படி நிர்வகிக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் மதுபானங்கள் சட்டவிரோதமாக இருந்தது. நாமும் அப்படி கூட இருந்து பார்த்தோம். பிறகு நம் அரசே அதை எடுத்து நடத்தியதெல்லாம் அறிந்ததே. எனினும் சாராயம் (ஆல்கஹால்) மற்ற போதை பொருட்களை விட கெடுதல் என்கின்றார்கள் சில வல்லுனர்கள் (http://healthland.time.com/2010/11/01/the-most-dangerous-drugs-alcohol-heroin-and-crack%E2%80%94in-that-order/print/). நீல படங்கள் நம் ஊரில் சட்டபூர்வமாக அனுமதிக்க படவில்லையே தவிர, அது பல திரையரங்குகளில் ஒடி கொண்டுதான் உள்ளது. அதை இளவட்டங்களும், மற்ற வட்டங்களும் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்படிபட்ட விசயங்கள் அனைத்தும், அமெரிக்காவில் தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடும் இல்லை; நம்மூரில் அதற்கு இணையாக அவை இல்லாமலும் இல்லை.

Thekkikattan|தெகா said...

CorText,

// மற்றும் தற்சார்புடன் இல்லாமல் வெளிசார்புடனான ஆராய்ச்சியின் அவசியம்//

இதுக்கு மட்டும் பொருள் புரிஞ்சிச்சின்னா இத்தனை எதிர்பதிவுகள் வந்திருக்காது. இங்க பிரச்சினையே ஒரு சமூக மாற்றத்தினையொட்டி ‘வெளிச்சார்புடன்’ நின்று ஓர் ஆராய்ச்சியாளன் பார்வையில் கேள்விகளை எழுப்பி உரையாடலுக்கான தளத்தை ஈட்டித்தருவோமென்றால், அதனைத் தவிர்த்து தனக்கானதாக sensationalize பண்ணிக்கொண்டதே இத்தனை தகிப்பிற்கும் காரணமாகிப் போனது. இது யார் பிழை?

CorText said...

தனிப்பட்ட யார் பிழையும் இல்லை என்பதே என் கருத்து. நாம் எந்த அளவுக்கு சூழ்நிலைகளின் கைதிகள் என்பதை உணராமல் உள்ளோம் (http://icortext.blogspot.com/2010/07/blog-post_16.html).

நமக்கு பழக்கமான பழமொழியை சற்றே விரிவுபடுத்தியுள்ளேன்:

கண்ணால் பார்ப்ப‌தும் பொய்யாக‌லாம்!
காதால் கேட்ப‌தும் பொய்யாக‌லாம்!
உணர்வுக்கு பட்டதும் பொய்யாக‌லாம்!
மனதிற்கு பட்டதும் பொய்யாக‌லாம்!
சுய அறிவுக்கு பட்டதும் பொய்யாக‌லாம்!
பொது அறிவுக்கு பட்டதும் பொய்யாக‌லாம்!
ஆழ‌மான ஆராய்ச்சி ம‌ட்டுமே உண்மையை விள‌க்கலாம்!

தருமி said...

வருண்,
//...நல்ல முத்துக்கள் கோர்க்கனும் நீங்க என்பது என் தாழ்மையான எண்ணம்.//

உங்கள் "தாழ்மைக்கு" என் நன்றி.

Thekkikattan|தெகா said...

//சேர்ந்து வாழ்தல் பற்றி தவறா பேசுறவங்கள் இந்நிலையை அனுபவித்து வாழும் வாய்ப்பு கிட்டாதவர்களோ என்று எண்ணம் எழுகிறது. நமக்கு கிடைக்கலைன்னா அதெல்லாம் பாவம், பொறுக்கித்தனம், கயவாளித்தனம் என்று எண்ணும் நம் கலாச்சாரமே தான். //

காட்டாறு, அதே! அதே!! இங்க எதிர்ப்பா பேசுற ஆட்கள் யாராவது உள்ளர இருந்து அதன் அனுகூலங்களை பற்றி பேசி அப்புறம் மறுக்கிற மாதிரியே தெரியல. எல்லாம் கரையில நின்னு ஆழம் பார்த்திட்டே இத்தன பேச்சு. ஆமா, காதலில் விழுந்து வெளியில வருவது அவ்வளவு ஈசியா என்ன, அதில வலியே கிடையாதா?

அதெப்படி உடற்பசிக்காகவே ஆறு மாசத்திற்கு ஒரு முறை கான்ராக்ட் போட முடியும் (அப்படி இருந்தா அவிங்க மனுசனே கிடையாது :P ; அது வேற விசயம்). என்னமோ பேசுறாங்க. ஏன்தான் பெண்களுக்கு புத்தி மந்தங்கிற ரேஞ்சிற்கே இந்த மக்கள் நினைச்சு பேசுறாங்களோ!!

இன்னொன்னு கவனிச்சீங்களா, இந்த கட்டுரைல நான் பேசின இந்த “இணைந்து வாழ்தல்” ஒரு பத்தியோ என்னமோதான், ஆனா அதைத் தாண்டி பேசப்பட வேண்டிய விசயங்களான ‘வரதட்சிணை வாங்கிறது’ கேவலமா இருக்கு நான் வாங்கமாட்டேன்னு கும்மீஸ் ஓட்டுற யாராச்சும் ஒரு ஸ்ட்ரிங் ஓபன் பண்ணி ஓட்டியிருக்கிதுகளா... நான் வாங்கமாட்டேன் ரேஞ்சிற்கு எழுதி அதில கும்மீஸ் பூராவும் உறுதிமொழி பூண்டுக்கிறது ;)) - இது மாதிரி ஏதாவது உங்க கண்ணில பட்ட எனக்கும் சொல்லுங்க... ஹாஅம்ம்

வருண் said...

***CorText said...
ஆழ‌மான ஆராய்ச்சி ம‌ட்டுமே உண்மையை விள‌க்கலாம்!***

That can be shown as "incorrect" in the future research too. So what is correct is today is incorrect in the future. So what? This kind of talk does not get us anywhere.

Are we talking about Science here?

NOPE!

When it comes to culture, law and order and society, you need to a draw an arbitrary line at some point. That can always called as NONSENSE by people those who lecture and lecture as if nobody thinks like they do. But we need some NONSENSE to build a decent society using brutal laws at times!

Is that too hard to understand?

----------------------

I will give an extreme case about individual right vs law and order to protect society.

If you possess marijuana more than 1 kg, you will be hanged in Singapore. That is the law there. The law and order is brutal at times and you can say it is NONSENSE but that is the law made to protect the society.

So you can go on give your lecture of what is right or wrong. It is endless. But you must understand one has to draw some arbitrary lines in a culture to protect the society. PERIOD!

வருண் said...

***Blogger தருமி said...

வருண்,
//...நல்ல முத்துக்கள் கோர்க்கனும் நீங்க என்பது என் தாழ்மையான எண்ணம்.//

உங்கள் "தாழ்மைக்கு" என் நன்றி.

November 24, 2010 11:49 PM***

So far the research carried out in the blog world suggests that, people those who preach living together is the way to go are all have done arranged marriage! I am not sure, they will let their kids to do living together either. But they TALK! lol

Thekkikattan|தெகா said...

I am not sure, they will let their kids to do living together either. But they TALK! lol//

ஹே! மனிதா, ஒன்று புரிகிறதா வுமக்கு இங்கு யாரும் வழிய அது போன்று கடைபிடிக்க வேண்டுமென்று சொல்லவில்லை... அப்படி ஒரு அமைப்பு பிடித்திருந்து நாளை எனது குழந்தைகள் இறங்கி முயற்சித்துப் பார்த்தால் அதற்காக நான் எனது குழந்தைகளை சுட்டு/தூக்கில்/கழுத்தை நெரித்து கொன்று விட மாட்டேன் என்றும், அல்லது நானே ஊருக்கு பயந்து ‘நாண்டுகிட்டு’ சாக வேண்டியதில்லை என்றே இங்க பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

புரிந்தா பேசுங்க இல்லன்னா... ஏன், சும்மா பொலம்பிக்கிட்டு. நான் யாருக்காகவெல்லாம் சாகவும் மாட்டேன், குடும்பத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது. மேட்டர் ரொம்ப சிம்ப்ல்.

Indian said...

good post.

replies continue to be meaningful exchange of opinion despite the attempts to pull it down.

வருண் said...

***Thekkikattan|தெகா said...

I am not sure, they will let their kids to do living together either. But they TALK! lol//

ஹே! மனிதா, ஒன்று புரிகிறதா வுமக்கு இங்கு யாரும் வழிய அது போன்று கடைபிடிக்க வேண்டுமென்று சொல்லவில்லை...***

நீங்க "ஏன் இப்படி" அடிக்கடி உனர்ர்சிவசப்படுறீங்க? கலாச்சாரத்தை இல்லைனு சொல்றவங்க எல்லாம் ஏதோ ஒரு சாக்க வச்சு தன் சாதியை பதிவுலகில் சொல்றாங்க. இவங்க பேசுற தத்துவம் வேற இவங்க வாழறவிதம் வேற!

CorText said...

//ஆழ‌மான ஆராய்ச்சி ம‌ட்டுமே உண்மையை விள‌க்கலாம்! //

கவனி: விளக்கும் அல்ல, விளக்கலாம். அறிவியலை பற்றிய தவறான கருத்துக்கு காரணம், அதை புரிந்து கொள்ளாமல், வெறுமே தெரிந்து கொள்வது தான்.
http://ecortext.blogspot.com/2010/06/science-science.html (மன்னிக்கவும் இது ஆங்கில பதிவு; நேரம் கிடைக்கும் போது தமிழ்படுத்த முயற்சிக்கின்றேன்).

அப்படியே ஆராய்ச்சியோ அறிவியலோ தவறாக போகும் என நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை ஏனெனில் என் பார்வை: நாம் அறிந்தது மிக குறைவு, அதில் அடுத்தவன் எப்படி வாழவேண்டும் என்று கேளி பேசாதே என்பதே. நான் அறிவுரை சொல்ல வரவில்லை, அடுத்தவனுக்கு எப்படி வாழ வேண்டும் என்று நீங்கள் அறிவுரை சொல்ல தேவையில்லை என்பதே; ஆனால் நீங்களோ கேளி பேசி கொண்டுள்ளீர்கள். நீங்கள் சாகடித்த ஆன்மாக்கள் போதும். உண்மையிலே உங்களுக்கு அக்கறையும் நேரமும் இருந்தால், இன்று இந்தியாவில் ஒரு நாளைக்கு பசியால் சாகும் 6000 குழந்தைகளுக்கு ஏதாவது வழி காணுங்கள்; பச்சிளம் குழந்தைகள் வேலையிலும் விபச்சாரத்திலும் தள்ளப்படுவதற்கு தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள்; குறைந்த பட்சம் அதை பற்றி சிந்தியுங்கள், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள்; அவர்கள் நம் வருங்கால தூண்கள்!

CorText said...

வாழ்கையின் சமூகத்தின் சிக்கல்களை புரிந்து கொண்டு, நிதானமாக பரந்த நோக்குடன் சிந்திக்கும் தோழர்களே, உங்கள் கருத்துக்களுக்கு எதிராக ஒரு கூட்டம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களை நன்கு புரிந்து கொள்ளுங்கள். இதோ என் பார்வையில்:
* அந்த கூட்டம் உண்மையாகவே அவற்றை நம்புகின்றார்கள்; அதற்காகத் தான் போராடுகின்றார்கள். அதனால், முடிந்த மட்டும், தேவையான ஆதாரணங்களை அவர்களுக்கு காட்டுங்கள்.
* ஆனால், அவர்களை ஆதாரங்களுடனோ மற்ற அறிதல்களை கொண்டோ உடனே மாற்றி விட முடியும் என நினைக்காதீர்கள். மெதுவாக காலம் அதை செய்யும் - வரலாறு அதையே உணர்த்துகின்றது.
* அந்த கூட்டம் சிறியது தான். ஆனால் அவர்கள் ஒன்றி கூடி கத்தி கொண்டுள்ளனர். அதில் ஏமாந்து போய்விடாதீர்கள்.
* அந்த கூட்டம், விசயங்களை பூதாகரமாக பெரிதிபடுத்தி பயமுறுத்துவார்கள். சேர்ந்து வாழ்தலை பற்றி பேசினால் வீட்டுக்கு வீடு porn industry என்பார்கள். பொதுவாக கடவுள், மதம் பேரை சொல்லி பயமுறுத்துவார்கள்; அதனால் தான், பல கோடி மக்களை கீழ் ஜாதி என அவர்களால் அடக்கி வைக்க முடிந்தது. அதனால் தான், தன் அம்மாவை, அக்காவை, தங்கயை மொட்டையிட்டு நெருப்பில் தள்ள முடிந்தது. அந்த பூதாகர பயமுறுத்தலிலே அவர்களை நீங்கள் கண்டு கொள்ளலாம்.

வருண் said...

CorText சொல்றதெல்லாம் உண்மைதான் :)

ஆனால் அதுபோல் மதவெறியனை, உயர்சாதினு பீத்திக்கொண்டு திரியும் முட்டாள்களை முதலில் கண்டுகொள்ள அறிவை வளத்துக்கோங்க!

ராமசாமினு பேர் வச்சிருக்கான் இவன் னு ஈ வெ ரா வையும் மதவாதியாக்கும் ஒரு சிலரையும் அவர்கள் வாதத்தையும் கண்டுக்காதீங்க.

எல்லாம் அறியாமை!னு சொல்லி முடிச்சுடலாம்! :)

Thekkikattan|தெகா said...

கார்டெக்ஸ்ட்,

மிக்க பொருள்மிகுந்த பின்னூட்டங்களா போட்டு இந்தப் பதிவின் செறிவினை மேலும் பொருள் உள்ளதாக்கி வருகிறீர்கள். அதற்கு முதலில் நன்றி!

//* அந்த கூட்டம் உண்மையாகவே அவற்றை நம்புகின்றார்கள்; அதற்காகத் தான் போராடுகின்றார்கள். அதனால், முடிந்த மட்டும், தேவையான ஆதாரணங்களை அவர்களுக்கு காட்டுங்கள்.//

நான் புரிந்து கொண்டவரையில், அவர்கள் சிறு வயதில் உட்புகுத்தப்பட்ட சிறையெண்ணங்களிலிருந்து தன் முயற்சி சார்ந்து உடைத்துக் கொண்டு வெளிவரும் உழைப்பை போட தயார் இல்லாதவர்களகாவும், இன்னும் உள்ளே தேடிச் சென்றல் ‘காரணமற்ற பயமே’அவர்களின் சொரூபமாக இருக்கக்கூடும்; தன்னுள்ளே கூட தனக்காக சிந்திக்க நுழைய அஞ்சுபவர்களாக உள்ளார்கள் என்று புரிந்து கொள்கிறேன். தனக்காகவேனும் அந்தச் சிறையெண்ணச் சங்கிலியை உடைத்தால் மட்டுமே அவர்களால் தினப்படியான வாழ்க்கையை ‘அப்படியே’ அனுபவித்து வாழ கற்றுக் கொண்டவர்களாகக் கூடும். ஆனால், அதற்கு முயற்சியிம், உழைப்பும் வேண்டும். எத்தனை பேர் நாளின் ஒரு 10 நிமிடத்தை உட்முகமாக தமக்காக திருப்புகிறார்கள்?

//* ஆனால், அவர்களை ஆதாரங்களுடனோ மற்ற அறிதல்களை கொண்டோ உடனே மாற்றி விட முடியும் என நினைக்காதீர்கள். மெதுவாக காலம் அதை செய்யும் - வரலாறு அதையே உணர்த்துகின்றது.//

எனவே அதற்கான முதல் உந்துதலும், முயற்சியும் அவர்களிடமிருந்து வரவில்லையெனில் காலம் நகரலாம், ஆனால் சங்கிலியிலிருந்து விடுதலை கிடையாது. பறவைப்பார்வை அனுபவம் கிட்டாமலே ஒரு பிறப்பும் முடிவிற்கு வந்து விடுகிறது.

CorText said...

தெகா,
இங்கு தோன்றிய எண்ணங்களை ஒரு பதிவாக இட்டுள்ளேன். அந்த தூண்டுதலுக்கு முதலில் நன்றி!
http://icortext.blogspot.com/2010/11/blog-post.html

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் மனித மூளை அவ்வளவே! நாம் நம் மூளையின் நிறைகளை பற்றி தெரிந்த அளவிற்கு அதன் குறைகளை தெரிந்து கொள்ளவில்லை ("Before we work on artificial intelligence why don't we do something about natural stupidity?")

மனிதன் ஒரு விலங்கு. மற்ற விலங்களை போலவே குழுகளை உருவாக்குகின்றோம், மற்றவர்களுடன் நேசம் கொள்கின்றோம், சண்டையிடுகின்றோம், உணவை தேடுகின்றோம், துணையை தேடுகின்றோம், கலவி புரிகின்றோம், காதலில் விழுகின்றோம், குடும்பம் அமைக்கின்றோம், குழந்தைகளை ஈணுகின்றோம், பேணுகின்றோம், முடிவாக வயதடைந்து சாகின்றோம். நாம் பெரிய விலங்கும் அல்ல, திடமான விலங்கும் அல்ல, வேகமாக விலங்கும் அல்ல. அப்படி எனில், மனிதனின் சாரம்...ஆன்மா எங்கே உள்ளது? அது அவனுடைய அறிவு தேடலில் உள்ளது! அப்படி தான் நாம் காலநிலை அறிந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தோம், நிலாவிலும் நம் காலடி பதித்தோம். கண்டதையும் கண்டபடி நம்பாமல், "எந்த ஒரு (அசாதாரணமான‌) விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்!" என்பதை மனிதன் உணரும் போது, நீங்கள் கூறும் சங்கிலியிலிருந்து அவன் விடுதலை பெறலாம்!

மதுமதி said...

இந்த கட்டுரையை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடுங்கள்.நன்றி.
http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_10.html

sasikala said...

ஆண்/பெண் உறவு சார்ந்தும், ஆடைகள் உடுத்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கில் மட்டுமே இந்தக் கலாச்சாரம் விழிப்புடன் இருக்கிறதே அது ஏன்? அதுவும், இந்த உறவு நிலையில் போலியாக இணைந்தே 30, 40 வருடங்கள் என ஊருக்காக வாழ்ந்து முடிக்கும் நிலையில் - இடையில் அடிதடி, நிம்மதியின்மை, மனச் சோர்வு, அடுத்தவருக்கு என்ன வேண்டும், தன்னுடைய டேஸ்ட் என்ன, தனக்கே என்ன வேண்டும் என்றே தெரியாமல் விழிபிதிங்கி என்னமோ பிறப்பெடுத்துவிட்டேன் வாழ்ந்து முடிக்கணுங்கிற கடமை உணர்ச்சியோட மல்லுக்கட்டி அக்கப்போர் பண்ணி வாழ்வதில் என்ன சிறப்பு இருந்துவிடப் போகிறது?///
இப்படிதான் காலா காலமா நடக்குது அருமையான கட்டுரைங்க .

Related Posts with Thumbnails