Thursday, November 11, 2010

பிள்ளைகளுக்கான பாலியல் உபத்திரமும், நம்மூர்ச் சட்டமும்...

தனி மனித ஒழுக்கம் சார்ந்த குற்றங்கள் ஒரு சமூக பார்வையில் பார்க்கப்படும் பொழுதும், அதே நேரத்தில் மிக நெருக்கமாக உணரும் பொழுதும் எவ்வாறாக அந்த பிரச்சினை திசை திருப்பப்படலாம் என்பதற்கு அண்மைய கோயம்புத்தூரின் சிறார்கள் கடத்தலும் அதனைத் தொடர்ந்த அவர்களின் படுகொலையும் ஒரு உதாரணமாகக் கொள்ள முடியும்.

பரவலாக இது போன்ற குற்றங்கள் ஒரு சமூகத்தில் முற்று முழுதாக தவிர்த்து வாழ்ந்து கொண்டிருப்பதாக எந்த நாட்டிலும் காண முடியாதுதான். ஆனால், இது போன்ற ransomக்காக குழந்தைகளை கடத்தி வைத்து பணம் பறிப்பதென்பது ஆங்காங்கே பரவலாக இப்பொழுது தலையெடுத்து வருகிறது நம்மூரில் என்பது கவணிக்கப்பட வேண்டிய ஒரு க்ரைம். ஏனெனில், நம் போன்ற ஒரு ஃப்ரீ ரேஞ்சிங் சமூகத்தில் அவ்வாறாக தொடர் நிகழ்வுகளாக ஆகிப் போவதற்கு மிக்க வாய்ப்புகளும் இருக்கிறது.

ஆனால், நான் அவதானித்த வரையிலும் நம் சமூகத்தில் குழந்தைகளின் மீதான வன்முறை கட்டவிழ்ப்பிற்கு போதுமான சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை என்றுதான் கருதச் செய்கிறது. இது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் சட்டம் சார்ந்த தண்டனைகளில் சிறிதும் சமரசங்களற்று எல்லா இடங்களிலும் விரவி பயன்பாட்டில் இருக்கும் போதுதான், அது போன்ற செயல்களில் இறங்க எத்தனிக்கும் எதிர்கால மனிதர்களுக்கு ஒரு விழிப்பேற்றும் அரணாக இருந்து குற்றங்கள் குறைப்பதற்கான வழியாக அமைய முடியும்.

அதற்கு மாறாக ஒரு சமூகம் கண்டும் காணாததுமாக வீட்டிற்குள்ளும், வெளியிலும் பாலியல் சார்ந்த உபத்திரங்கள் தன் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கும் பொழுது கட்டப்பஞ்சாயத்து நிகழ்த்தியோ, அல்லது வெளியில் தெரிந்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலமே பாலாய் போய்விடுமென்றோ அல்லது தன் குடும்ப மானத்திற்கே கலங்கமென்றோ அல்லது குற்றமிழைத்தவர் தனக்கு ரொம்ப வேண்டியவராகிப் போய்விட்டார் வெளியில் தெரிந்தால் அவரின் குடும்பமே நடுத்தெருவிற்கு வந்து விடுமொன்றோ நாம் சாதாரணமாக கடந்து போய் விடுவது மென்மேலும் இது போன்ற உபரத்திரவாதிகளை வளர்த்தே விடும் என்பதில் ஏதாவது ஐயமுண்டா?

இதுவேதான் மீண்டும், மீண்டும் அடக்கி வைக்கப்பட்ட புற வய உணர்வுகள் ஒரு சமூகத்தில், இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளிடத்திலும் கூட மென்மேலும் வளர்தெடுக்க வழிகோணிவிடுகிறது. உதாரணமாக, பள்ளிகளில் இது போன்ற துன்புறுத்தலை பழக்க விதத்தில் (habitual behavior) தொடர்ந்து ஒரு மனிதர் செய்து வருகிறார், அவருக்கு நல்ல பின்புலமும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மனிதரும் சமூகத்தில் ஒரு குடும்பத்துடன் எல்லாரையும் போலவே தானும் முழுதுமாக வாழ்ந்து முடிக்க வேண்டுமென்ற ஆசையுடனே வளைய வந்து கொண்டிருக்கிறார்; தான் செய்வது தவறு என்று தெரிந்தும் கூட அந்த குற்றத்தை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே.

இந்த சூழலில் சட்டம் தன் வேலையை மிகச் சரியாக செய்தால் இது போன்ற சபல மனிதர்கள் மிகச் சுலபமாக தன்னை அந்த பழக்க நிலையிலிருந்து தன்னோட குடும்ப கெளரவத்திற்காகவேனும் தன்னை மாற்றி எழுதிக் கொள்வார். மாறாக, ஒவ்வொரு முறையும் அவரின் சபல இயக்கம் வெளிப் பட்டு அவருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பாதுகாப்புடன் திரியும் பொழுது, பின்னாலில் அதே முறையில் இயங்க எத்தனிப்பவர்களுக்கு எப்படியானதொரு விழிப்புணர்வு கிட்டியிருக்கக் கூடும்.

நாமும் தினசரிகளிலும், அண்டை அயலர் வீடுகளிலும் பல இது போன்ற குழந்தைகள் சார்ந்த பாலியல் உபத்திர இன்னல்கள் பற்றி வாசித்து விட்டு நகர்ந்து கொண்டேதான் இருப்போம். ஆனால், இதற்கு பின்னான சமூக படிப்பும், சட்டத்தின் கிடுக்கிப் பிடியான முறையான தண்டனையும் அமுலில் இருந்தால் கண்டிப்பாக விசயம் பரவலாக சென்றடைந்து மனசாட்சிக்கு பயப்படாதவர்களுக்கு இந்த சட்டமாவது பயமுறுத்தி நேர் பாதையில் பயணிக்கச் செய்யலாம்.

பல நிகழ்வுகளில் கவனித்திருக்கிறேன், அமெரிக்கன் மீடியாக்களில் இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் கனம்தோரும் பலவிதமான சட்ட ரீதியான பாய்ச்சல்கள் அந்த குற்றம்சாட்டப்பட்டவரின் மீதானது மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. ஒரு முறை மாட்டினால், சொச்ச மிச்ச காலங்களும் அந்த மனிதரின் பின்னாலே அந்த குற்றம் ஊர் உலகறிய தொடர்கிறது. அதுவும் எதார்த்த ரீதியில் மிகவும் உண்மை. முதலில் தேசிய அளவில் மீடியாக்களில் அந்த நபரின் முகம் நிறுத்தி நிதானமாக காட்டப்படுகிறது. பின்பு அவருக்கான தண்டனை சிறைச்சாலையில் கழித்து முடித்து வெளியில் வந்தால் அவருக்கான child predator என்ற அடைமொழியுடன் கூடிய ஒரு எண்ணும், முழுமையான மற்ற விபரங்களும் அடங்கிய ப்ரோஃபைல் ஒன்றும் தயார் செய்யப்பட்டு அது கணினியிலேயே பொது மக்களும் பெறத்தக்க வகையில் போட்டு வைத்து விடுகிறார்கள்.

இப்பொழுது அந்த குறிப்பிட்ட நபரோ அல்லது அது போன்ற குற்ற பின்னணியில் சிறை சென்று வெளி வந்தவர் எந்த நகரத்தில், எந்த தெருவில் வசிக்கிறார் என்றளவில் தெரிந்து கொள்ளக் கூடிய வசதிகளை செய்து தந்து விடுகிறார்கள். எனவே எப்பொழுதும் அது போன்ற நபர்கள் தொடர் கண்கானிப்பில் இருப்பதனைப் போன்றே ஆகிவிடுகிறதல்லவா?

இது போன்ற கடுமையான சட்டம் தன் வாழ் நாள் முழுதும் தன்னைச் சுற்றி வருகிறது என்று ஒரு சமூகத்தையே விழிப்புணர்வு அடையச் செய்யும் பொழுது, குற்றமிழைக்க எண்ணும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கொண்டு வெளிக்கிட துணிந்தாலும் சம்பந்தப்படுபவர் ஒரு கனமேனும் எண்ணிப்பார்க்கக் கூடிய நிலையை உருவாக்கித் தருகிறது. ஆனால், நம்முடைய சமூகத்தில் இப்படியா செய்திகளில் படிக்கிறோம்? முதலில் பத்தி பத்தியாக சம்பவ வர்ணனை விரசமூட்டும் வகையில், பிறகு கட்டுரையின் கடைசி பத்தியில் போனால் போகிறதென்று அந்த நபரின் அடுத்த நிலை எப்படியாகும் என்ற சொல்லிவிட்டு ஊத்தி மூடிவிட்டு நகர்ந்து விடுவார்கள். அடுத்த கேசு கிடைக்கிறதா வேறு எங்காவது என்று, இதுதானே நிலமை?

மேலும் சட்டத்தை முறை படுத்தி செலுத்த வேண்டியவர்களே சிறு, சிறு சபலங்களுக்கு பின் சென்று தங்களுடைய வாலிடிட்டியையே இழந்து நிற்கும் பொழுது, எப்படி குற்றம் இழைக்க வரிசை கட்டுபவர்களிடத்திலும் சட்டம் முறைப்படி இயக்கப்படுமென்ற விழிப்புணர்வு இருக்கும். இது போன்ற சிவிக் சென்ஸ், சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களிடமிருந்து ஆரம்பித்து எந்த சமரசமுமின்றி, ஏழை/பணக்காரன்/பதவி என்று பார்க்காமல் இயக்கப்படுத்தி சட்டம் உயிரோடும், உயிர்ப்போடுமிருக்கிறது என்று காட்டினாலே ஒழிய குற்றங்களின் வீச்சம் குறையாது.

அப்படி ஒரு நாள் மலர்ந்து விட்டால் இது போன்ற ரசிக மனோபாவ ‘என்கவுண்டர்கள்’ தேவைப்படாது. இந்த என்கவுண்டரின் மூலமாக என்னதான் நமக்கு புரிய வைக்க எத்தனிக்கிறார்கள், ஒரு சமூகமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு பின்னான சட்ட மாற்று மாசோதாக்களை எழுப்பவதற்கான வாய்ப்புகளைத் தவிர்த்தும், சமூக அறிவியல் ரீதியில் குற்றவாளியிடமிருந்து மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் எது போன்ற விசயங்களை கரந்து அதனை நடைமுறை படுத்த முடியுமென்ற ஆய்வுகளற்றும், பிராச்சார தொனியில் சமூகமறிய வழங்குவதனைத் தவிர்த்து, ஊழல் மலிந்து வழியும் ஒரு சமூகத்தில் ப்ரீமெச்சூர்டாக வேக வேகமா ஒரு கேசை மூடுவதின் மூலம் இன்னும் காத்துக்கிடக்கும் குற்றவாளிகள் அறியாமை வழி நடந்தேரவே காத்துக் கொண்டிருப்பார்கள்.

பி.கு: குற்றங்கள் குறைப்பதற்கான ஒரே வழி சட்டத்தை சரியாக முறையாக சமரசங்களற்றும், கை நீட்டுவதை அரவே நிப்பாட்டுவதின் மூலமுமே சாத்தியம். முறைப்படி சட்டம் பின் தொடரப்படும் பொழுது அது கண்டிப்பாக மக்களின் மனதில் (pyschic) ஆழமாக பதியப்பட்டுவிடும். காசு கொடுத்து வெளிய வந்திரலாம்னு தோன்றுவது நின்றுவிட்டால், encounterபண்ணி கேசை மூட வேண்டிய அவசிமிருக்காது.

இது போன்ற சம்பவங்களையொட்டி எது போன்று பின்வரும் க்ரைம்களுக்கு நம்மை தயார்படுத்தி கொள்ள முடியுமென்று புதுக்கோட்டையில் தொடர்கொலை செய்து மாட்டிய சம்பவத்தின் பொழுது எழுதிய பதிவையும் முடிஞ்சா வாசிங்க ... புதுக்கோட்டையில் ஒரு ‘சைக்கோபாத்!” - Psychopath


45 comments:

பயணமும் எண்ணங்களும் said...

சட்டத்தை சரியாக முறையாக சமரசங்களற்றும், கை நீட்டுவதை அரவே நிப்பாட்டுவதின் மூலமுமே சாத்தியம். முறைப்படி சட்டம் பின் தொடரப்படும் பொழுது அது கண்டிப்பாக மக்களின் மனதில் (pyschic) ஆழமாக பதியப்பட்டுவிடும். காசு கொடுத்து வெளிய வந்திரலாம்னு தோன்றுவது நின்றுவிட்டால், encounterபண்ணி கேசை மூட வேண்டிய அவசிமிருக்காது. //

மிக சரி.

கவிதா | Kavitha said...

அமெரிக்கால உக்காந்துக்கிட்டு நல்லாத்தான் எழுதறீங்க.. :)))) சூப்பர்..!!

உங்களுக்கு எல்லாம் சொன்னாவா புரியப்போகுது..??உங்க ஊரை எங்க ஊர் கூட கம்பேர் செய்யமுடியாது.
அமெரிக்காக்காரன் வளந்து யுகங்கள் ஆச்சி.. .நாம இங்க இன்னும் வளரவே இல்ல... வளரக்கூடிய சூழல், நம் அரசியில் அமைப்பில் இல்லாமே போயிக்கிட்டு இருக்கு..

வளர்தல் - அப்படீன்னு சொல்றது.. எல்லாவிதத்திலும்... போராட வேண்டி இருக்கு, அதற்கு பலருக்கு நேரமும் இல்லை, வெட்டி நியாயம், பக்கம் பக்கமாக பேச நேரம் இருக்கு.. இதோ எங்கயோ அமெரிக்காவில் உக்காந்துக்கிட்டு எங்க நாட்டு சட்டம் எப்படி இருக்கனும்னு எழுதறீங்க பாருங்க.. நல்லாத்தான் இருக்கு "படிக்க"

என்னத்த சொல்றது... என்னவோ எழுதுங்க எழுதுங்க..சீசன் ல ரைட் டைம் ரைட் சப்ஜெக்ட் ல போஸ்ட் போடனும்..

உங்களுக்கு தெரியுமான்னு தெரியல.. இது தான் சரியான உத்தியும் கூட.. சம்பந்தமில்லாத சமயத்தில் ஒரு விஷயத்தை எழுதுவதை விடவும், தீபாவளி சமயத்தில் பட்டாசை பற்றி எழுதினால் அதிகமாக படிக்கப்படும். :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மைதான் சட்டம் சிறப்பாக செயலாற்றினால்.. ஆல்.. இந்தியாக்கு ஏன் இந்த கதி அண்ட் இழுக்கு வரப்போது ..

முதலில் மக்கள் அய்யோ பாரு அவனைஎல்லாம் அங்கயே வெட்டி போடனும்ன்னு எகிறி குதிச்சாங்க ..சரின்னு இவங்க கொன்னு ப்போட்டாங்க.. பின்ன ஆமா இவனுங்க ஒழுங்கா என்னத்த செய்திருக்கானுங்க அதனால் அந்த இடத்துல ஆள கொல்ரது தான் சரின்னா..இது செயின் ரியாக்‌ஷன் ஆயிடுச்சு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\சீசன் ல ரைட் டைம் ரைட் சப்ஜெக்ட் ல போஸ்ட் போடனும்..
//

நீங்க வேற கவிதா போஸ்ட் போடலைன்னாலும் கேக்கறாங்க புது ட்ரண்ட் தெரியுமுல்ல கருத்தை இதுவரை பதியாதவர்கள் எவ்ளோ சுயநலவாதிகள்.. எவ்ளோ அக்கறையற்றவர்கள் ந்னு..

இனி பேப்பர்ல நியூஸ் ல வர எல்லாத்துக்கும் உங்க கருத்தை பதிஞ்சு வைப்பது யாரு வாயிலும் விழாம இருக்க ஒரு வாய்ப்பு.. போல :(

கவிதா | Kavitha said...

//பதியாதவர்கள் எவ்ளோ சுயநலவாதிகள்.. எவ்ளோ அக்கறையற்றவர்கள் ந்னு.. //

ஹா ஹா...ம்ம் ஆமா அந்த கதையும் தெரியும் தான்.. :))))))

அட சொல்லட்டுமே.. பாவம் அவங்களுக்கு பொழுது போகனும்.. யாரையாச்சும் குத்தம் சொல்ல கையக்காட்டனும் தானே.. :))))))

Thekkikattan|தெகா said...

//பதியாதவர்கள் எவ்ளோ சுயநலவாதிகள்.. எவ்ளோ அக்கறையற்றவர்கள் ந்னு.. //

ஹா ஹா...ம்ம் ஆமா அந்த கதையும் தெரியும் தான்.. :))))) >>>>>

நீங்க ரெண்டு பேரும் வந்து கருத்தை வைக்கலன்னா எப்பூடி, தமிழக மகளிருக்கு மவுத் பீஸ் நீங்கதான், சோ தகிரியமா கருத்தை வைங்கப்பூஊஊ :)

Thekkikattan|தெகா said...

முதல் வருகையா வாங்க - பயணமும் எண்ணங்களும், நன்றி!

Thekkikattan|தெகா said...

வாங்க கவிதா...

//அமெரிக்காக்காரன் வளந்து யுகங்கள் ஆச்சி.. .நாம இங்க இன்னும் வளரவே இல்ல... வளரக்கூடிய சூழல், நம் அரசியில் அமைப்பில் இல்லாமே போயிக்கிட்டு இருக்கு.. //

எது எதையோ copy cat பண்ணுறோம் நல்ல விசயங்களையும் எடுத்து மக்களுக்கு கொண்டு போயி சேர்க்கலாமேங்கிற தொலை தூர பார்வையைக் கொண்டுதான் இந்த பகிர்வுங்கோவ்...

//என்னத்த சொல்றது... என்னவோ எழுதுங்க எழுதுங்க..சீசன் ல ரைட் டைம் ரைட் சப்ஜெக்ட் ல போஸ்ட் போடனும்..//

நாம எழுதுறதெல்லாம் லாப நோக்கற்றது. நெஞ்சிக்குள்ளர வைச்சிருந்தா வெடிச்சு சீக்கிரமா புட்டுக்குவோம்னு தெரிஞ்சதை பகிர்ந்திருக்கணுங்கிற 100% கொள்கையோடத்தேய்ன் இங்க இருக்குமுங்க...
மற்றபடி எப்படியாவது அஞ்சாப்பு வரலாற்று புத்தகத்தில எனக்கும் அரைபக்கம் கிடைக்கணுங்கிற ‘கொலவெறி’ நோக்கமெல்லாம் இல்லீங்க... என்னது பேச்சைக் குறைக்கணுமா ... கேக்குது, கேக்குது ஐ ஸாட்ட்ப்பூ :)

V.Radhakrishnan said...

புரிந்து கொள்ள முடிகிறது. தெகா. சட்டங்கள் மட்டுமே மனிதர்களை திருத்திவிட இயலாது என்பதுதான் உலகம் கண்ட உண்மை.

கவிதா | Kavitha said...

//எது எதையோ copy cat பண்ணுறோம் நல்ல விசயங்களையும் எடுத்து மக்களுக்கு கொண்டு போயி சேர்க்கலாமேங்கிற தொலை தூர பார்வையைக் கொண்டுதான் இந்த பகிர்வுங்கோவ்...//

எங்க அமெரிக்காவில் உக்காந்துக்கிட்டா?? :))

ஒன்னு செய்களேன்.. அங்க உட்காந்துக்கிட்டு இப்படி எழுதுறதுக்கு பதிலா.. அங்க உக்காந்துக்கிட்டு இங்க ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிங்க..அங்க சேருகிற புள்ளைங்களுக்கு உங்களுக்கு தெரிஞ்ச நல்ல விஷயத்தை பழக்கி வளருங்க... அட ஒரு 10 இந்திய புள்ளைங்க நல்லபடியா நீங்க சொல்றாப்ல எல்லாம் தெரிஞ்சி வளருட்டுமே நாளை..அதுங்க.. அதுங்க புள்ளைங்களுக்கு சொல்லிக்கொடுக்கும்...

இப்படி க்கூட நல்லவிஷயத்தை கொண்டு வந்து சேர்க்கலாமுங்கோவ்.. !!

கவிதா | Kavitha said...

//என்னது பேச்சைக் குறைக்கணுமா ... கேக்குது, கேக்குது ஐ ஸாட்ட்ப்பூ :)//

செயல் ல இருக்கனுமுங்கோவ்வ்வ்.!!

மங்கை said...

எழுதணும்னு நினைச்ச விசயம்... நீங்க எழுதிட்டீங்க, நன்றி.

The worst part is that such abuse is imposed upon a child by a person in his/her immediate circle and a vast majority of these cases go unnoticed.

நம்ம ஊர்ல law against child abuse இன்னும் கடுமையாக்கப்படணும். The present law and order has many loopholes and the criminal gets away with a minimal punishment. The major weakness of these laws is that only penile penetration is considered a grave sexual offence udanadiyaa... variety of sexual abuse பற்றிய ஒரு விளக்கமட்டும்... ‘குழந்தை’ என்ற வார்த்தைக்கும் விளக்கம்... அதாவது வயது பற்றிய விளக்கம் அவசியம் தேவை இதில ஏற்படுகிற குளறுபடிதான் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் வழியாக இந்த மிருகங்கள் வெளியே வந்திடுறாங்க

too many cooks spoiling the broth maathiri...Women and child development board சட்டம் கொண்டுவரணும்னு பாடு படுத்துது. HRD ministry மாதிரியிம் சட்டம் வரணும்னு ஏதோ பண்ணிட்டு இருக்கு... child rights commissionனும் மும்முரமா சொல்லிட்டு இருக்கு, ஆனா முடிவு என்ன??

Thekkikattan|தெகா said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மைதான் சட்டம் சிறப்பாக செயலாற்றினால்.. ஆல்.. இந்தியாக்கு ஏன் இந்த கதி அண்ட் இழுக்கு வரப்போது .//

இது எல்லா நாடுகளிலும் நடக்கிறதுதாங்க. ஆனா, என்ன நம்ம ஊர்லன்னா இலை மறை காய ஆக்கி மேலும், மேலும் ஊக்கப்படுத்தி வைச்சிருக்கிறதுதான் வெளிய சொல்ல முடியாம பிஞ்சுகள் வெம்பிப்போதல் தொடர் கதையா ஆகிப் போயிடுது.

//முதலில் மக்கள் அய்யோ பாரு அவனைஎல்லாம் அங்கயே வெட்டி போடனும்ன்னு எகிறி குதிச்சாங்க ..சரின்னு இவங்க கொன்னு ப்போட்டாங்க.. பின்ன ஆமா இவனுங்க ஒழுங்கா என்னத்த செய்திருக்கானுங்க அதனால் அந்த இடத்துல ஆள கொல்ரது தான் சரின்னா..இது செயின் ரியாக்‌ஷன் ஆயிடுச்சு//

இதில என்ன ஒண்ணு கவனிக்கணும்னா, குற்றங்கள் நடக்காம இல்ல அது தினசரி நடந்திட்டேதான் இருக்கு... ஆனா, இன்றைய அரசியல் சித்து விளையாட்டுக்களில் நிறைய விசயங்கள் மலிஞ்சு போச்சு கூலிக்கு ஆள் வைச்சு கொல்லுறது வெட்டினவன் சம்பந்தமே இல்லாதவனா இருப்பான், சரண்டர் ஆகுறவன் வேற எவனாவதா இருப்பான் சட்டத்திற்கே தெரிஞ்சிருந்தாலும் கண்டும் காணாம போற அளவிற்கு ஆயிப்போச்சு ஒன்றியம் அளவிற்கு. இந்தச் சூழலில் மக்களின் ரசனை கொஞ்சம் தூக்கலா இருக்கிறது கொஞ்சம் அபாயகரமான சந்திப்பில இருக்கோம்னு தெரியப்படுத்துற மாதிரி சவுண்டாகுது...

Thekkikattan|தெகா said...

//V.Radhakrishnan said...

புரிந்து கொள்ள முடிகிறது. தெகா. சட்டங்கள் மட்டுமே மனிதர்களை திருத்திவிட இயலாது என்பதுதான் உலகம் கண்ட உண்மை//

மிகச் சரி வெ. இரா, இருப்பினும் காலத்திற்கு தகுந்த மாதிரி மக்களிடத்தில் விசயங்களை பரவலாக கொண்டு போயி சேர்ப்பதும், சட்டம் மேடு பள்ளம் பார்க்காமல் எல்லோருக்கும் ஒரே மாதிரி தன் கடமையை செய்கிறது என்பதனை ஆழ விதைக்க வேண்டுமல்லவா?

இப்போ நீங்க இருக்கிற இடத்தில எப்படி மக்களை ’சிவிக் சென்ஸ்’ உடையவர்களாக காலம் மாற்றி வைத்திருக்கிறது என்கிறீர்கள் - என்னயப் பொருத்த மட்டில் சட்டமே மக்களை ஒழுங்கு படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அதுவே psychically நடைமுறை பழக்கமாக ஆக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே போலீஸ் அடிதடிக்கு பயந்து மட்டுமே அல்ல...

அரசூரான் said...

தெகா, உண்மைய எழுதியிருக்கீங்க. எங்க ஊருல ஒரு அரசாங்க அதிகாரி (பதிவுத் துறையில்), அவருக்கு அப்போது வயதுக்கு வந்த மகள்களும் மகன்களும் இருந்தனர் (அவர் வயதை அனுமானிக்கவும் குடும்ப பின்புலத்தை தெரிந்துகொள்ள), அவர் செய்த பாலியல் அட்டூழியம் இங்கு எழுத இயலாது, அவரை நாங்கள் அப்புறப்படுத்த பட்டபாடு இருக்கே... நம்மூர்ச் சட்டம் மாறவேண்டும்... மாற்றுக் கருத்திற்க்கு இடமில்லை.

V.Radhakrishnan said...

//என்னயப் பொருத்த மட்டில் சட்டமே மக்களை ஒழுங்கு படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அதுவே psychically நடைமுறை பழக்கமாக ஆக்கப்பட்டிருக்கிறது.//

ஏற்றுக்கொள்ள வேண்டிய விசயம். சட்டம் மீறுபவர்களை பற்றி நாம் என்ன செய்ய இயலும்! அதுவும் தண்டனைக்கு உட்படாமல் போவோர்களை!

தருமி said...

சட்டத்தைப் பற்றி பேசியிருக்கீங்க. எனக்கென்னவோ பத்திக்கிட்டு வருது அந்த 'கெட்ட வார்த்தை'யைக் கேட்டாலே.

எங்க ஊர்ல சட்டம்னு ஒண்ணு இருக்கிறதே பலருக்கு அதுவும் அரசியல்வாதிகள், காவல்துறை, நீதித்துறை மக்களுக்கு சுத்தமா மறந்து போயிருது. அரசியல்வாதிகள் மூடி மறைக்கிறதுல பெரிய ஆளுங்க. அதுக்குக் காவல் காவல்துறை. அப்படியே வெளியே வந்தாலும் தப்பு செஞ்சவன் செத்த பிறகு தீர்ப்பு தருவாங்க - அதுவும் கோர்ட்டுக்கு கோர்ட் அது வித்தியாசமா இருக்கும்.

எல்லாம் எங்க தலைவிதிங்க !
:(

kutipaiya said...

மிக உண்மை...அங்கிருக்கும் அளவுக்கு இங்கு தெளிவான சட்ட திட்டங்கள் வருவதற்கு நாளாகும் போலத் தான் தெரிகிறது.

இது வெளியே அறியப்பட்ட சம்பவமாக ஆகிவிட்டது. வெளியில் தெரியாமல் இன்னும் எத்தனையோ. அதற்கெல்லாம் தீர்வு மேலே சொல்லியிருப்பது தான்.

ஒரு வகையில் இங்கே இவனுக்கு நடந்ததற்கு நியாயம் கற்பிக்கலாம் எனினும், இது ஒன்றிற்கு மட்டும் நியாயம் கிடைத்தது சட்டத்தின் வெற்றி அல்ல.

எதிர்பதிவு போடாமல், சட்டம் கெட்டுவிட்டது/ஆளுங்கட்சி/எதிர்கட்சியின் சதிகள்/ போலீசாரின் அராஜகம்/காமக்கொடூரன் அழிவு என்றெல்லாம் மிகச் சராசரியாக இல்லாமல் மிகத் தெளிவான தொலைநோக்குடனான ஒரு பதிவு.

நன்றி.

ஜோதிஜி said...

இந்தியச் சட்டங்கள் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டு, அரசியல்வியாதிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே மட்டும் பயன்படுகின்றது.

நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகின்றது. ஆனால் சம்பவங்கள் நடந்த இடத்துக்கு அருகில் இருந்த காரணத்தால் இதற்கு பின்னால் உள்ள அரசியல் விளையாட்டுக்ள் தெரிந்து கொள்ள முடிந்த வாய்ப்பாலும் வாயில் பூட்டை போட்டுக் கொள்கின்றேன்.

கவிதா மூலம் நீங்கள் அமெரிக்காவில் இருப்பதை தெரிந்து கொண்டேன்.

Thekkikattan|தெகா said...

வாங்க மங்கை,

//The worst part is that such abuse is imposed upon a child by a person in his/her immediate circle and a vast majority of these cases go unnoticed.//

இது ஒரு பயங்கரமான உண்மைங்க. புள்ளியல் ரீதியா பார்த்தா சிறார்களின் வெம்பல் அங்கிருந்துதான் தொடங்குது... முன்பொரு காலம் இந்திய ஃபாரம்களில் பாதிப்புக்குள்ளான ஆண்/பெண் தங்களுடைய வெம்பல்களை பகிர்ந்து கொள்வதினை வாசிக்க நேர்ந்ததுண்டு... திகிலுடன் கூடிய நம்ப முடியாத தன்மையே மிஞ்சி எஞ்சிக் கிடந்தது. ஆனால், நிஜம். மேலும் காட்டாறு போன்றவர்கள் நேரடியாக அது போன்ற பாதிக்கப்பட்ட மனிதர்களுடன் பொழங்க நேர்ந்திருப்பதால் இதன் உண்மையான கோர முகத்தை மேலும் வெளிச்சத்தில் வைத்து பேச முடியும்...

//அதாவது வயது பற்றிய விளக்கம் அவசியம் தேவை இதில ஏற்படுகிற குளறுபடிதான் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் வழியாக இந்த மிருகங்கள் வெளியே வந்திடுறாங்க //

அது போன்ற ஓட்டைகளை இனம் கண்டு, இது போன்ற நிகழ்வுகளின் பொழுதுதான் மறு திருத்ததிற்கு சூழ்நிலையை பயன்படுத்திக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு முறையும் கேசை வேகமா மூடுவதிலும், புறவயமாக பிரச்சினையை பேசி காலம் கடத்தி விடுவதிலுமே சென்று விடுகிறது, விசயத்தின் வீரியம்.

//child rights commissionனும் மும்முரமா சொல்லிட்டு இருக்கு, //

ஏதாவது நடந்தா சரி... அழுத்தமான பின்னூட்டம் நிறைய தெரிஞ்சிக்க முடிந்தது. நன்றி, மங்கை

Thekkikattan|தெகா said...

வாங்க அரசூரான்,

//எங்க ஊருல ஒரு அரசாங்க அதிகாரி (பதிவுத் துறையில்), அவருக்கு அப்போது வயதுக்கு வந்த மகள்களும் மகன்களும் இருந்தனர் (அவர் வயதை அனுமானிக்கவும் குடும்ப பின்புலத்தை தெரிந்துகொள்ள), அவர் செய்த பாலியல் அட்டூழியம் இங்கு எழுத இயலாது, அவரை நாங்கள் அப்புறப்படுத்த பட்டபாடு இருக்கே... //

கண்டிப்பாக ஊருக்கு ஊரு நாம் இது போன்ற நிகழ்வுகளை கண்டிருப்போம். நான் உதாரணத்திற்கு குறிப்பிட்டு பேசிய ஒரு பள்ளி நிகழ்வு கூட நான் படித்த பள்ளியிலேயே நடந்ததுதான். ஆனால், பல முறையும் அடக்கியே வாசிக்கப்பட்டிருக்கிறது. ‘அப்புறப்படுத்த’னு சொல்லியிருக்கீங்களே அது கூட அதிகபட்சமா என்ன செஞ்சிருப்பாங்க கொஞ்ச நாளு சஸ்பெண்ட்ல இருக்க வைச்சிருப்பாங்க, அப்புறம் வேறு எங்காவது வேலை மாற்றுதல் வாங்கி அங்க வேட்டைய தொடக்கியிருப்பாரு... :)

வனவியல் தொடர்பா ஒரு விசயம் செய்வோம். ஒரு புலியோ, சிறுத்தையோ, குரங்குகளோ மனுசனை தாக்க ஆரம்பிச்சா என்ன செய்வோம் அவைகளை பிடித்து வேற ஆள் அரவமில்லாத வனப்பகுதிகளுக்கு கொண்டு போயி விட்டுட்டு வந்திர்றது, ஆனா, இங்கே என்ன செய்றோம் பிடிப்பட்டாலும் வேறு ஊருக்கு மாற்றல் பின்னே மீண்டும் அங்கே வேட்டையாடல் தொடர்கிறது என்று நீண்டு கொண்டே போகிறது அவரின் பயணம்...

நன்றி, அரசூரான்!

Thekkikattan|தெகா said...

வாங்க தருமி,

//எனக்கென்னவோ பத்திக்கிட்டு வருது அந்த 'கெட்ட வார்த்தை'யைக் கேட்டாலே.//

அதில இருக்கிற ‘வலி’ புரிகிறது, தருமி.

உங்க பின்னூட்டத்தை வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.

//எல்லாம் எங்க தலைவிதிங்க ! //

பாருங்க நாள்பட்ட வேதனையை சொல்லும் போது அந்த ‘நெத்தியில எழுதின’ கட்டுரை பத்தி உங்களையுமறியாம காலம் சொல்ல வைச்சிடுச்சு... ஹிஹிஹி ;)

ரவிச்சந்திரன் said...

தருமி ஐயா சொல்வதுபோல் இந்தியாவில் சட்டம், நீதி என்று ஒன்று உள்ளதா?

வருண் said...

***Man held for sexual assault of minor girl

Special Correspondent

The accused was nabbed within few hours from a hide out

Pollachi: The police have arrested a local labourer Lenin Michael Nirmal on charges of sexual assault of a nine-year-old girl in Kottur area near Anaimalai in Pollachi taluk.

According to police, the girl studying in Standard Four was taken to a remote place and was sexually assaulted on Wednesday. Following a complaint from the girl, the parents lodged a complaint with the police. Meanwhile, the accused who went absconding was nabbed by the police within few hours from a hide out in Pollachi.***

I thought we are better human beings if we compare us with the west. I am just realizing that it was my IGNORANCE! Seems like many sick people are there in TN too!

Thekkikattan|தெகா said...

குட்டிப்’பையா,

//வெளியில் தெரியாமல் இன்னும் எத்தனையோ.//

வெளியில் தெரியாமல் 99%. ஏனெனில் நம் சமூகம் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதற்கு தயாராக இல்லை.

//மிகச் சராசரியாக இல்லாமல் மிகத் தெளிவான தொலைநோக்குடனான ஒரு பதிவு. //

சரியாக புரிந்து கொண்டமைக்கும், கருத்திற்கும் நன்றி.

Thekkikattan|தெகா said...

ஜோதிஜி,

//இந்தியச் சட்டங்கள் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டு, அரசியல்வியாதிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே மட்டும் பயன்படுகின்றது.//

அப்படியே தருமி கூறியதையே மறுமொழி பண்ணியிருக்கீங்க, பாருங்க. கசப்பானதாக இருந்தாலும் உண்மையை அப்படியே வைக்கும் நேர்மையும், துணிவும் ஒரு சிலருக்கேனும் இருப்பதனைக் கொண்டே இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.

//இதற்கு பின்னால் உள்ள அரசியல் விளையாட்டுக்ள் தெரிந்து கொள்ள முடிந்த வாய்ப்பாலும் வாயில் பூட்டை போட்டுக் கொள்கின்றேன். //

புரிகிறது :(

//கவிதா மூலம் நீங்கள் அமெரிக்காவில் இருப்பதை தெரிந்து கொண்டேன்.//

புரோஃபைல் எல்லாம் பார்க்கிறதில்லையா? பழைய பதிவுகளெல்லாம் நேரம் கிடைக்கும் போது படிங்க...

thiruchchikkaaran said...

Thanks Mr. Thekkikattan,

Yor article was good.

//பரவலாக இது போன்ற குற்றங்கள் ஒரு சமூகத்தில் முற்று முழுதாக தவிர்த்து வாழ்ந்து கொண்டிருப்பதாக எந்த நாட்டிலும் காண முடியாதுதான். ஆனால், இது போன்ற ransomக்காக குழந்தைகளை கடத்தி வைத்து பணம் பறிப்பதென்பது ஆங்காங்கே பரவலாக இப்பொழுது தலையெடுத்து வருகிறது நம்மூரில் என்பது கவணிக்கப்பட வேண்டிய ஒரு க்ரைம். ஏனெனில், நம் போன்ற ஒரு ஃப்ரீ ரேஞ்சிங் சமூகத்தில் அவ்வாறாக தொடர் நிகழ்வுகளாக ஆகிப் போவதற்கு மிக்க வாய்ப்புகளும் இருக்கிறது.//

This is true and create anxiety!

Thanks Mr. Thekkikattan,

Yor article is good.

Thiruchchikkaaran

காட்டாறு said...

மற்றுமொரு விழிப்புணர்வு பதிவு! :)
சட்டம், சட்டம் திருத்துதல் இதெல்லாம் பற்றி எனக்கு சொல்ல தெரியல. அதெல்லாம் after effect!

குழந்தைகளை மட்டும் மனதில் கொண்டு சில புரிதல்கள் இங்கே. அமெரிக்கா ஆனாலும், ஆண்டிப்பட்டி ஆனாலும், இதில் பெற்றோரின் பங்கும், பள்ளியின் பங்கும் மிக மிக முக்கியம்; வீட்டிலும் பள்ளியிலும் தான் துவங்க வேண்டும் இந்த கல்வி. நம் பிள்ளைகளுக்கு ஒரு உபத்திரம் நடந்தால், நாம் நம் பிள்ளைகளிடன் என்ன சொல்லுறோம், எப்படி அணுகுகின்றோம் என்பது மிக முக்கியம். இது வெளியிலிருந்து வரும் உபத்திரம். வீட்டிற்குள்ளே நடந்தால்.... இங்கே தான் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கிறது. சரி.. பள்ளிக்கு போகாத குழந்தைகள் என்ன செய்வார்கள்? விழிப்புணர்வு இயக்கங்கள், NGOs, etc விழிப்புணர்வு இயக்கங்கள் இன்னும் அதிகப் படுத்த வேண்டும்; திறம் பட செயல் படுத்த வேண்டும்.

வளர்ந்தவர்க்ளுக்கு வரும் உபத்திரம், தன் சுய முடிவால் தான் மேலும் மேலும் காமூகர்களை வளர்க்கிறது என்பது என் எண்ணம். தன் வேலை, தன் மானம், தன் சுற்றியுள்ளவர்களின் பேசும் பேச்சு, இப்படி பல ‘தன்’களை கொண்டிருப்பதால், இந்த ’தன்’ விட்டு வெளிவர அவர்களால் மட்டுமே முடியும்.

காட்டாறு said...

கவிதாவின் // ஒன்னு செய்களேன்.. அங்க உட்காந்துக்கிட்டு இப்படி எழுதுறதுக்கு பதிலா.. அங்க உக்காந்துக்கிட்டு இங்க ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிங்க..//
இது விதண்டாவாதம் போல தொனிக்கிறது. விழிப்புணர்வு இயக்கங்களின் அவசியம் போலவே, தெக்கி போல தொலைநோக்கு பார்வை கொண்டவர்களின் கட்டுரைகளும் அதி முக்கியம். ப்ளாக் போன்ற மீடியாக்கள் படித்த மக்களை, அவர்களின் கூண்டு வாழ்க்கை விட்டு வெளி வந்து பார்க்க உதவுகிறது. பொதுவில் வைத்து பேசும் கருத்துக்கள், தத்தம் கருத்துகளை வலிடேட் செய்ய துணைபுரிகிறது. தன்னுள் மாற்றம் வர உதவுகிறது. இதுவும் தேவையான ஒன்றே. அது மட்டுமன்றி, நீங்கள் சொல்வது போல் பள்ளிகள் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்களை மேலும் ஊக்கப் படுத்துகிறது. எல்லாம் எல்லாரும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அது முடியாததும் கூட. :)

காட்டாறு said...

வருண் நீங்கள் சொல்வது போல் அங்கொன்றும் இங்கொன்றும் நல்லது நடக்குதுங்க. அதைவிட மிகுதியாக கொடுமைகள் நடக்குதே. கூகிள் பண்ணிப்பாருங்களேன் ‘குழந்தை பாலியல் கொடுமை’ என. உங்களுக்காகவே சில உரல்கள் இருக்கின்றன. கண்டிப்பா வாசிங்க.

மேலும் சின்ன சின்ன அல்பங்கள் நம்மில் பரவலா இருக்குறாங்க. ஒரு சாம்பிள் இங்கே
kaattaaru.blogspot.com/2007/07/blog-post_19.html

Thekkikattan|தெகா said...

//I thought we are better human beings if we compare us with the west. I am just realizing that it was my IGNORANCE! Seems like many sick people are there in TN too!//

Thanks for the comment, man! Is your comment composed in the tone of sarcasm or really you are just come to know that this is existing in our naadu, kaadu?

If yours is pagadi vagai, then shift your perception and dig deeper how deep is the problem... fellow, catch up and look around :)

ராஜ நடராஜன் said...

//பரவலாக இது போன்ற குற்றங்கள் ஒரு சமூகத்தில் முற்று முழுதாக தவிர்த்து வாழ்ந்து கொண்டிருப்பதாக எந்த நாட்டிலும் காண முடியாதுதான்.//

தெகா!இன்னும் முழுதாக தொடரவில்லை.

எப்பவாவது தனிப்பதிவா போடனுமின்னு நினைச்சுகிட்டிருந்ததை சுருக்கமாக இங்கு பின்னூட்டமாக்கிடறேன்.

குற்றமற்ற சமுதாயமென்று எதுவுமே இதுவரை இல்லை.ஆனால் அரபுநாடுகளில் குற்றங்கள் இல்லை அல்லது குறைவு என்ற ஒரு Taboo மற்றும் கருத்துப்பரவல்,பின்னூட்டங்கள் காண்கிறேன்.

வெளிப்படையான ஒரு சமூகமாக இல்லாமல்,மனித சமூகம் சார்ந்த எதிர் நிகழ்வுகள் இருண்டு போவதனால் சீனா கூட குற்றங்களற்ற தேசமாகவே அமையும்.

ராஜ நடராஜன் said...

Good one!கொஞ்சம் அசை போடணுமின்னு பின்னூட்டங்களை இப்போதைக்கு தவிர்க்கிறேன்.

வருண் said...

***Thekkikattan|தெகா said...

//I thought we are better human beings if we compare us with the west. I am just realizing that it was my IGNORANCE! Seems like many sick people are there in TN too!//

Thanks for the comment, man! Is your comment composed in the tone of sarcasm or really you are just come to know that this is existing in our naadu, kaadu?

If yours is pagadi vagai, then shift your perception and dig deeper how deep is the problem... fellow, catch up and look around :)
November 12, 2010 11:57 AM ***

I am not sarcastic here- I dont know how you got that notion. I am ASHAMED of being a TAMIL when I hear about TAMIL ANIMALS who abuse innocent children! :(

Thekkikattan|தெகா said...

I am ASHAMED of being a TAMIL when I hear about TAMIL ANIMALS who abuse innocent children! :(//

Varun, Great buddy! Sorry about the query... peace :) - in my personal observation in our society behind the closed door there is a big demon silently hunting big time.

Thekkikattan|தெகா said...

வாங்க வெட்டிக்காட்டாரே,

//தருமி ஐயா சொல்வதுபோல் இந்தியாவில் சட்டம், நீதி என்று ஒன்று உள்ளதா//

அவரே வெறுத்துப் போயி எப்போதும் சொல்லாத ஒரு வார்த்தை... எல்லாம் ‘தலை விதின்னு’ சுருக்கி சொல்லிப்போட்டுப் போயிட்டாரு. பயமாத்தான் இருக்கு, டார்வின் survival of fittest theory is at play, conspicuously .

கலகலப்ரியா said...

நல்ல கட்டுரை தெகா..

||முதலில் தேசிய அளவில் மீடியாக்களில் அந்த நபரின் முகம் நிறுத்தி நிதானமாக காட்டப்படுகிறது. பின்பு அவருக்கான தண்டனை சிறைச்சாலையில் கழித்து முடித்து வெளியில் வந்தால் அவருக்கான child predator என்ற அடைமொழியுடன் கூடிய ஒரு எண்ணும், முழுமையான மற்ற விபரங்களும் அடங்கிய ப்ரோஃபைல் ஒன்றும் தயார் செய்யப்பட்டு அது கணினியிலேயே பொது மக்களும் பெறத்தக்க வகையில் போட்டு வைத்து விடுகிறார்கள்.

இப்பொழுது அந்த குறிப்பிட்ட நபரோ அல்லது அது போன்ற குற்ற பின்னணியில் சிறை சென்று வெளி வந்தவர் எந்த நகரத்தில், எந்த தெருவில் வசிக்கிறார் என்றளவில் தெரிந்து கொள்ளக் கூடிய வசதிகளை செய்து தந்து விடுகிறார்கள். எனவே எப்பொழுதும் அது போன்ற நபர்கள் தொடர் கண்கானிப்பில் இருப்பதனைப் போன்றே ஆகிவிடுகிறதல்லவா?||

ஆமாம்... அப்புறம் சொன்ன மாதிரி... இதுக்குப் பயந்துக்கிட்டே மத்த எழவெடுத்தவங்களும் அடங்கிக் கெடப்பானுவ...

கலகலப்ரியா said...

ஒரு விஷயம்... பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொன்னும் போட்டதால இப்டி எல்லாம் வெளில வருது... கொல்லாம எத்தன கொடுமை... 1% ஆவது வெளில வருதா..?! சந்தேகம்தான்.. நீங்க சொன்ன அதே சமூகக் கொடுமைதான் காரணம்..

Thekkikattan|தெகா said...

This is true and create anxiety!

Thanks Mr. Thekkikattan,
Yor article is good.

Thiruchchikkaaran//

Thanks Thiruchikaran! yes, indeed, it stirs the anxiety!!

Thekkikattan|தெகா said...

//வளர்ந்தவர்க்ளுக்கு வரும் உபத்திரம், தன் சுய முடிவால் தான் மேலும் மேலும் காமூகர்களை வளர்க்கிறது என்பது என் எண்ணம். தன் வேலை, தன் மானம், தன் சுற்றியுள்ளவர்களின் பேசும் பேச்சு, இப்படி பல ‘தன்’களை கொண்டிருப்பதால், இந்த ’தன்’ விட்டு வெளிவர அவர்களால் மட்டுமே முடியும்.//

மிக்க உண்மை இருக்கிறது. எப்பொழுது அந்த ஓட்டை உடைத்துக் கொண்டு வெளி வரும் நாளோ!!

இது போன்ற பதிவுகளுக்கு உங்களின் பின்னூட்டங்களே நிறைவும்/மேலும் ஆக்கப்பூர்வ திசையில் திருப்ப புதிய கருதுகோல்கள் கிடைக்கவும் வழி செய்கிறது.

காட்டாறு, கவிதா எப்பொழுதும் இப்படி தீவிரமாக சமூகம் பொருத்து விசனப்படுபவர்களை உடனே களத்தில் இறங்க வைக்க வேண்டுமென்ற ஒரு ‘நல்ல எண்ணத்தில’ சொல்லியிருப்பாரு, இல்லைங்க கவிதா ... :))

எனக்காக விவரத்தை எடுத்துச் சொன்னதிற்கு எக்ஸ்ட்ரா நன்றிங்கோவ்வ்வ்.

Thekkikattan|தெகா said...

வாங்க ராஜ நட,

முக்கியமான பதிவிற்கு இன்னும் ஆளக் காணாமே பார்த்தேன், வந்திட்டியெ.

//குற்றமற்ற சமுதாயமென்று எதுவுமே இதுவரை இல்லை.//

அதுவே தான் நானும் சொல்லுறேன், நம்புறேன். ஆனா, குறைக்கலாம்.

//ஆனால் அரபுநாடுகளில் குற்றங்கள் இல்லை அல்லது குறைவு என்ற ஒரு Taboo மற்றும் கருத்துப்பரவல்,பின்னூட்டங்கள் காண்கிறேன்.//

நானும் தான் பார்க்கிறேன். அப்பன்னா, அந்தச் சமூகங்களில் குற்றங்களே நடப்பதில்லையென்று பொருளா? எங்கயோ படிச்சேன் ஒரு இலங்கை தமிழ் பெண்ணின் மீது 25 ஆணிகள் அறையப்பட்டு இருந்ததாம்; உங்க பிராந்திய நாடுகளில் ஒன்றிலிருந்து. அது என்ன வீட்டு வேலை செய்வதின் ஒரு பகுதியா வந்ததா?

அது ஓண்ணுமில்ல தனக்கு ஏதாவது செய்யாத குற்றத்திற்கு நாலு விரலை இழந்து பார்த்தால், அதன் உக்கிரம் புரியலாம் :).

//இருண்டு போவதனால் சீனா கூட குற்றங்களற்ற தேசமாகவே அமையும்//

அதுக்காக அமுக்கி வைச்சிக்கிறது, ஹா!? நாட்டின் பழம்பெருமைய உலக அரங்கில் காப்பாத்துறாங்களாமா... கணக்கை வெளிய விடாம. என்னாத்தை சொல்லுறது. சீக்கிரம் பதிவ ஏத்துற வழியப் பாருங்க நீங்க ராஜ நட!

Thekkikattan|தெகா said...

கொல்லாம எத்தன கொடுமை... 1% ஆவது வெளில வருதா..?! சந்தேகம்தான்.. நீங்க சொன்ன அதே சமூகக் கொடுமைதான் காரணம்..//

அவ்வளவு விழுக்காடுகள்தான் இருக்கணும். ஆனா, கூடுதலா வெளிக் கொண்டு வந்தா ‘கொல’ ரேஞ்சிற்கு போயி நிற்பது குறையும். நன்றி, கலகலப்ரியா!

The Analyst said...

I am late - as usual- இப்போது தான் வாசித்து முடித்தேன். முக்கியமான ஒரு விடயம்- something very personal to me.

பிள்ளைகளில் பாலியல் வன்முறை எமது சமூகத்தில் பரவலாக நடப்பது. பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்த, நெருங்கிய ஒருவராலேயே. யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வதே இல்லை. எல்லோரும் எப்படி மூடிமறைப்பதென்பதிலேயே கண்ணாயிருப்பர். அதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் physical and psychological effects ஜயோ அதன் long term implications ஜயோ பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. All leads to victimizing the victim further, while the criminal doesn't face any consequences.

பல நேரங்க்களில் பெற்றோருக்கே தெரியாது. தெரிந்தாலும் பலருக்கு என்ன செய்வதென்றே தெரியாது. Most of the time they just want to ignore it and pretend that it never happened and want to make sure that nobody knew about it. Most of the time its for dumb reasons like she would not be able to get married later.

என‌க்கு மிக‌ நெருங்கிய‌ குடும்ப‌த்தின‌ர் ஒருவ‌ருக்கும் அவ‌ர் ப‌ள்ளி செல்லும் வ‌ய‌தில் குடும்ப‌ ந‌ண்ப‌ர்க‌ளில் ஒருவ‌ர‌லேயே இது ந‌ட‌ந்த‌து (நடந்தது NZ ல், குற்றவாளியும் ஒரு தமிழன் தான்). அவ‌விற்கு அம்மாவிட‌ம் எப்ப‌டிச் சொல்வ‌தென்று தெரியாததால் ஒரு க‌டித‌ம் எழுதி தாயாரிட‌ம் கொடுத்தார். தாயார் எதுவும் செய்ய‌வில்லை. அவ‌ தான் police ல் சொல்ல‌ விருப்ப‌மென‌ தாயாரிட‌ம் சொல்லியும், தாயார் விரும்ப‌வில்லை. She was completely crushed by the whole experience. But the mother did not know what to do except to go on pretending and ignoring.

I know many young girls (definitely boys too, but I haven't talked to any) go through some form of sexual abuse in our culture. I can't understand why we do not acknowledge them or do something.

Thekkikattan|தெகா said...

அனலிஸ்ட்,

எங்களுடன் அது போன்ற வன் தொடர் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நியூஸி போன்ற நாடுகளிலும் நம்மவர்கள் துணிந்து செய்கிறார்கள் என்றால் அங்கும் இது போன்ற ‘பாசப்’பிணைப்புகளே, அதாவது தன் குழந்தைகளிடத்தில் வைத்திருக்கும் அன்பைக் காட்டிலும், ஒழுக்கத்திலும், பண்பாட்டிலும் அதிகமாக வைத்திருபார்களாயிருக்கும். :( too sad! the girl... rest of her life, she will be carrying around the victimization and the wound itself!

Sriakila said...

விஷயங்கள் ஆயிரம். ப‌திவு அருமை!

Related Posts with Thumbnails