Thursday, July 23, 2009

புதுக்கோட்டையில் ஒர் "சைக்கோபாத்!":Psychopath

மின்னஞ்சலின் மூலமாக ஒரு நண்பரொருவர் ஒரு சுவாரசியமான சுட்டி ஒன்று கொடுத்திருந்தார் என்றைக்குமில்லாமல். அது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் வந்தது. அந்த செய்தி எனது மாவட்டத்திலிருந்து ஒரு தொடர் கொலையாளன் எட்டு பெண்களை கொன்றதிற்குப் பிறகு அந்த உடல்களுடன் வன்புணர்வு கொண்டதாகவும் இப்பொழுது பிடிப்பட்டுப் போனதாகவும் அமைந்திருந்தது.

படித்ததும் சட்டென்று நிமிர்ந்து உட்கார வைத்தது. இப்பொழுதுதான் அன்மையில் நானும் ஒரு புத்தகம் சோசியோபாத் எப்படி சைக்கோபாத்தாக பரிணமிக்கிறான் என்பதாக ஒரு உளவியள் துறை வல்லுனரால் எழுதப் பெற்ற புத்தகத்தை வாங்கியிருந்தேன் படித்துத்தான் பார்ப்போமே என்று.

நம்மூரில் எப்பொழுதாவது இது போன்ற தொடர்க் கொலைகள் வெளிச்சத்திற்கு வந்து போவதுண்டு. இருப்பினும் மேற்கத்திய நாடுகளுக்கினையாக அவ்வளவு பெரிய அளவில் இது போன்ற கொலையாளர்கள் இருந்ததாகவோ அல்லது பிடிபட்டு அவர்களின் பின்னணியை தோண்டித் துளாவியதாகவே எந்தவொரு செய்தியும் நானறிந்து படித்தது கிடையாது; நம்மூர் பின்னணியில்.

இன்றைய உலகமயமாக்கப் பட்ட நிலையில் இந்த பூமிப் பந்தே இழுத்து நெருக்கி கட்டப்பட்டுவிட்ட நிலையில் செய்திகளும் அது எது போன்றவையானாலும் சரி புத்தக வடிவிலோ அல்லது பிற காணொலி அல்லது அச்சு வடிவ ஊடகங்களின் வழியாகவோ மக்களுக்கு உடனுக்குடன் சென்றடைகிறது. உதாரணமாக இது போன்ற 'டிவிஸ்டட்' குற்றமொன்று நிகழ்ந்த நிலையில், அச் செய்திகள் மொத்த குற்றம் விளைவிக்கப் பட்ட விரிவான பின்னணியில் எடுத்துயம்பி வேண்டியவர், வேண்டாதவர் என்ற எல்லைகளற்று தேவையான, தேவையில்லாத குப்பைகளையும் மக்களின் மனத்தினுள் விதைத்துச் செல்கிறது; செய்திகள் கொடுக்குறோம் என்ற போர்வையில்.

இந் நிலையில் இந்தியா போன்ற மக்கட் தொகை நிறைந்த நாட்டில் பிறப்பிற்கும், இறப்பிற்குமான சுவடே தெரிய வராமல் எத்தனையோ மக்கள் பூத்து, குலுங்கி, கருகிவிடும் பின்னணியில் இது போன்ற தொடர் கொலைகள் நடைபெறும் கணம் அவைகளின் செய்தி இதுதான் என்று அறிதியிட்டு சொல்லுவதற்கு முன்பே விளைவு ரொம்ப மோசமாக பல பேரின் உயிர்களை காவு எடுத்த நிலையை அடைந்திருக்கக் கூடும்.

பொதுவாக அறியப்பட்ட வரையில் தொடர் கொலையாளிகள் மேற்கத்திய பின்னணியில் பல காலங்கள் சக மக்களோட மிகச் சாமன்யான வாழ்ந்து இவர்தான அவர் என்று இனம் பிரித்து பார்க்க முடியாமலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த புதுக்கோட்டை நிகழ்வு மூன்று மாத இடைவெளியிலயே வெளி வந்திருக்கிறது, அதிர்ஷடவசமானது எனறாலும், இன்னும் நுட்பமாக இயங்கியிருந்தால் இவரும் காலங்களைத் தாழ்த்தியிருக்கக் கூடும்.

எது எப்படியாகினும் கொலையாளியின் வழித்தடம் அசலாக ஒரு "சைக்கோபாத்தின்" செய்களை ஒட்டியே அமைந்திருக்கிறது. இந்த செய்தியின் பொருட்டு பிடிபட்ட கொலையாளியை கண்டிப்பாக சம்பந்தப்பட்ட உளவியல் துறை நிபுணர்களைக் கொண்டு நன்றாக அந்த மனிதரின் பின்புலத்தை ஆய்ந்து, ஆராய்ந்து ஒரு முழு நீள ஆய்வரிக்கையாக எந்த "சமூக, மன, உடல்" சூழ்நிலை அவரை இது போன்ற ஒரு செயலைச் செய்ய தூண்டியது என்பதனை கண்டறியும் பொழுது பின் வரக் கூடிய சம்பவங்களுக்கான சாத்தியக் கூறுகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது யார்யென அறியும் செயல்திறன் இவைகளை கூட்டிக் கொள்ளும் வாய்ப்பாக அமையும். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இதனை ஒரு "சிறப்பு நிபுணக் குழுவையமைத்து" இவரிடத்திலிருந்து இந்தியாவிற்கே ஒரு "பைலட்" ஆராய்ச்சியாக அமைய முடிக்கி விட்டால் ரொம்ப பிரோயசனமாக இருக்கும் நம் சமூகத்திற்கு.

இதன் பொருட்டு தனியார் தொண்டு நிறுவனங்களின் ஆர்வலர்களும் இது தொடர்பான நிபுணர்களை அணுகி தனியாகவும் மாவட்ட ஆட்சியரின் துணையுடன் அணுகலாமே... முயற்சிப்பார்களா?

16 comments:

Anonymous said...

நம்ம ஊர்லயா ....? :=0000

காட்டாறு said...

ரொம்ப வருஷமா ஊரை விட்டு தள்ளி இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். :-D
நம்ம நாட்டுல கேஸை எப்படி சீக்கிரமா மூடனுமின்னு தான் பார்ப்பாங்க. இங்கே கொலைக்கு சாட்சி கிடைத்தாகி விட்டது. அவங்களுக்கு (போலீஸ்) கொலைகாரன் மனநோயாளியா, இல்லை மன அயர்ச்சியின் உச்சக் கட்டமா என தோண்டி துருவி பார்க்க தேவையில்லாது போய்விட்டது. Fundamentals சரியாக இல்லாத பட்சத்தில் நீங்க சொல்லுறது எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்பது தெரியவில்லை.

ush apppaa said...

நல்ல வேளை அது நீங்க இல்லயேன்னு ;-)) .......

மங்களூர் சிவா said...

காட்டாறு சொன்னதுமாதிரிதான் நடக்கும் இங்க :(

எம்.எம்.அப்துல்லா said...

நல்லவேளை என்னைப் பற்றிதான் சொல்றீங்களோன்னு நினைச்சு வந்தேன்

புதுகை.அப்துல்லா

:))

Thekkikattan|தெகா said...

எம்.எம்.அப்துல்லா said...

நல்லவேளை என்னைப் பற்றிதான் சொல்றீங்களோன்னு நினைச்சு வந்தேன்//

ha ha ha.... என்னங்க இப்படியாகிப் போச்சு நம்ம நெலமை, இந்த பிளாக்குகள் எதைப் பார்த்தாலும் பார்த்து பயப்பிட வைச்சிடுச்சே ...

என்னயும் ஒரு அனானி அண்ணே நீங்க இல்லயே அதுன்னு கேட்டு சந்தோஷப் பட்டுட்டுப் போயிருக்காரு :-))

Santhosh said...

தல,
நம்ம நாடு இன்னமும் அந்த அளவுக்கு முன்னேறலை.. எல்லாருகும் ஆயிரம் வேலை இருக்கு.. யாரும் இதை கண்டுக்க போறது இல்ல.. இது legal பிரச்சனை வேற.. உதவி செய்ய போனா உபத்திரம் தானே தவிர வேர எதுவும் இல்ல.. :(

Thekkikattan|தெகா said...

தல,
நம்ம நாடு இன்னமும் அந்த அளவுக்கு முன்னேறலை.. எல்லாருகும் ஆயிரம் வேலை இருக்கு.. யாரும் இதை கண்டுக்க போறது இல்ல.. இது legal பிரச்சனை வேற.. உதவி செய்ய போனா உபத்திரம் தானே தவிர வேர எதுவும் இல்ல.. :(//

புரியுது, சந்தோஷ். நான் சொல்ல வர்றது என்னன்னா, அரசாங்கமே பதிவர் காட்டாறு சொன்னது மாதிரியே அதான் ஆள் மாட்டியாச்சு, குற்றத்தையும் ஒப்புத்துகிட்டாச்சுன்னு மூடி வைச்சிட்டு விட்டுறாம கொஞ்சம் 'கேஸ்" ஸ்டடி மாதிரி செஞ்சு கொலையாளியின் சமூக பின்னணி, எது தூண்டியதுன்னு ஆராய்ஞ்சா பின்பு சமூகக் கல்வியில உதாரணத்தோட பெற்றோர்களுக்கும், சமூகத்திற்கும் விழிப்புணர்வேற்ற ஒரு வாய்ப்பாக அமையலாமில்லையா?

இதில நாம எங்கே உள்ளே போகப் போறோம். காவல் துறை, மருத்துவத்(உளவியல்) துறையையும் சேர்த்து ஆராய ஒரு வாய்ப்பை தருவித்து தரணும் அவ்ளோதான் இங்கே வைக்கப்பட்டிருக்கும் வேண்டுகோள். சமூக பின்னணி நாட்டிற்கு நாடு, கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் மாறலாம்... இது நமக்கு புதிசு, சோ அவசியம் தேவை.

புருனோ Bruno said...

// இருப்பினும் மேற்கத்திய நாடுகளுக்கினையாக அவ்வளவு பெரிய அளவில் இது போன்ற கொலையாளர்கள் இருந்ததாகவோ அல்லது பிடிபட்டு அவர்களின் பின்னணியை தோண்டித் துளாவியதாகவே எந்தவொரு செய்தியும் நானறிந்து படித்தது கிடையாது; நம்மூர் பின்னணியில்.//


இருந்தார்கள்

கண்டுபிடிக்கப்பட்டது கிடையாது

தற்சமயம் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கிறது

pudugaithendral said...

நான் ஹைதையிலிருந்து(ஹைதராபாத்) எழுதும் புதுகையைச் சேர்ந்த்வள்.

ஆஹா நம்மளைப்பத்திதான்ன்னு நினைச்சு வந்தேன். நல்லவேளை.

:))))

Thekkikattan|தெகா said...

anonys,

awwwwwww... ஏன் இந்த கொலவெறி :-)))

காட்டாறு,

//Fundamentals சரியாக இல்லாத பட்சத்தில் நீங்க சொல்லுறது எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்பது தெரியவில்லை.//

ம்ம்ம் அப்படித்தான் பெரும்பாலனோர் சொல்லிக்கிறாங்க, பார்ப்போம்.

இதனை குற்றவியல் துறையில் படிக்கும் மாணவனுக்கான ஒரு முனைவர் பட்டத்திற்கான அத்தனை வாய்ப்புகளையும் இந்த ஒரு நிகழ்ச்சியினைக் கொண்டு நிறைய விசயங்களை வெளிக் கொண்டு வரக் கூடிய அளவிற்கு விசயங்கள் இருக்கலாம். பார்ப்போம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நம்ம ஊருல சரியான ஆளைக் கண்டுபிடிச்சாலே கொஞ்ச நாள் உள்ள வச்சிட்டு இவங்க இல்லன்னு திரும்ப அனுப்பிடறாங்க.. இதுக்க்ன்னு தனிக்குழுவா.. நடக்கற கதையாவே பேசமாட்டீங்களா?

Thekkikattan|தெகா said...

//மங்களூர் சிவா said...

காட்டாறு சொன்னதுமாதிரிதான் நடக்கும் இங்க :( //

ம்ம்ம் என்னாத்தை சொல்றது, சிவா...

வாங்க டாக்டர். புரூனோ...

//இருந்தார்கள்//

அதெப்படி அவ்வளவு ஊர்ஜிதமாக சொல்லுறீங்க... ஹிஹிஹி ;-))

//கண்டுபிடிக்கப்பட்டது கிடையாது

தற்சமயம் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கிறது//

அப்படித்தான் தெரிகிறது டாக்டர், இப்பொழுதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. நடந்திருக்கக் கூடிய அனைத்து சாத்தியங்களும் கலாச்சார, சமூக, தேசங்களை கடந்து இருக்கக் கூடிய மனித மூளையைக் கொண்டு மட்டும் பார்க்கும் பொழுது அதன் செயல்பாடு எங்கேனும் மூளை சிறு சிக்கலுரும் பொழுது எப்படியாக மாற்று திசையில் அதுவே பயணிக்க செய்கிறது என்பது எல்லா இடங்களுக்கும் பொருந்தும் தானே. எனவே உங்களின் கூற்றை மறுப்பதற்கில்லை.

இன்னும் சொல்லுங்க டாக்டர், கேப்போம். நன்றி :-)

Thekkikattan|தெகா said...

//புதுகைத் தென்றல் said...

நான் ஹைதையிலிருந்து(ஹைதராபாத்) எழுதும் புதுகையைச் சேர்ந்த்வள்.

ஆஹா நம்மளைப்பத்திதான்ன்னு நினைச்சு வந்தேன். நல்லவேளை.

:))))//

இங்கும் அவ்வ்வ்வ்வ்வ்... இப்படி புதுக்கோட்டை ஆளுங்க எல்லாம் சொல்லிப்புட்ட எப்பூடி :))). எழுதும் பொழுதே உங்களத்தான் நினைச்சேன் :D

pudugaithendral said...

எழுதும் பொழுதே உங்களத்தான் நினைச்சேன்//

avvvvvvvvvvvvvv

சுரேகா.. said...

அட..
இந்த விசயம்
அமேரிக்காய் வரைக்கும் வந்துருச்சா!?

ஆமா..இது உங்க ஊர்ல நடந்திருந்தா உலகச்செய்தி..!

அது என்னன்னா...அவன் ஆள் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கான். இவன் அணுகிய பெண்கள் (காதலி அல்லது மனைவி) இவனை நெருங்கவே விடவில்லை. இவருக்கு வன்முறையில் நம்பிக்கையில்லையாம்..! அதான் 24 வயது முதல் 70 வயது வரையிலான பெண்களை கொன்று நகைகளைத்திருடி வன்புணர்ந்து கொண்டிருந்திருக்கிறான். அவனது டி வி எஸ் 50 வண்டிதான் அவனைக்காட்டிக்கொடுத்திருக்கிறது...!

என்ன பண்றது ? பாதி இவய்ங்களுக்கா தோணுது! மீதி நம்ம மீடியாக்கள் சொல்லிடுது!

அப்புறம்..
தலைப்பைப்பாத்ததும் எனக்கு கரெக்டா இந்தச் செய்தியாத்தான் இருக்கும்னு தோணுச்சு! :)

Related Posts with Thumbnails