Friday, July 10, 2009

தமிழ் பெரும் விழா: Fetna 2009_Atlanta - I

சமீபத்தில அட்லாண்டாவில நடந்த வட அமெரிக்கா தமிழ் பெரும் விழாவில (Fetna-2009) நானெல்லாம் கலந்துகிட்ட கதையே ஒரு ரெண்டு மூணு பதிவா போடலாமுங்க. எப்போதுமே நமக்கு கடைசி நேர ஜுரம் வந்து ஒட்டிக்கிட்டு அது மூலமா கிடைக்கிற காது மடலோரம் ஜிவ்க்கு அடிமையாகிப் போனதால அப்படியா இருக்குமோ.

ஏன்னு முழிக்கிறீங்களா? அந்த வெக்கக் கேட்டை நானே சொல்லிக்கிறேனுங்க. என் ஊர்லயே விழா நடந்ததாலும் சில காரணங்களுக்காக அட நமக்கு இல்லாத நுழைவுச் சீட்டா மெதுவா வாங்கிக்குவோம்னு இருந்தேனுங்க. அதோட மட்டுமில்ல இந்த கூட்டம்னாவே கொஞ்சம் என்னவோ தெரியல உள்ள இருக்கிறவனுக்கு ஒத்துக்க மாட்டீங்குது. அதுவும் ஜிகு, ஜிகு கூட்டம் உதட்டுச் சாயத்தோட (I like all natural ;-) , பெரீய மனுசயிங்க கூடுற இடமா இருந்தா உள்ள இருக்கவன் சண்டிமாட்டுக் கணக்கா உதருரான் உள்ளகிடந்து.

அதோட மட்டுமில்ல விழாவுக்கு வருவதாக இருந்த ஒரு சில ஆட்களின் படங்களை பார்த்ததும் எனக்குத் தோணியது; தமிழ் வளர்க்கணும் தான், கஷ்டப்பட்டு சம்பாரிச்சதை அதுக்கும் கொஞ்சம் கொடுக்கணும்தான். ஆனா, அழைப்பிதழில் இருந்த ஒரு சில மூஞ்சிகளுக்கும் சேர்த்து அழுதுதான் அத வளர்க்கணுமின்னா என்னாத்தை சொல்றதுன்னு கொஞ்சம் உடம்பெல்லாம் கூசுனதும் உண்மைதானுங்க.

இருந்தாலும் ஒரு சில நண்பர்களுக்காக எப்படியாவது கலந்துக்கணுமின்னு நினைச்சிட்டே இருந்தேங்க. அப்பன்னு பார்த்து நம்ம பழமைபேசி ஒரு பதிவு போட்டு சிலாகிச்சு எழுதியிருந்தார், எனக்கு இன்னமும் வெக்கமாப் போச்சு. என்னடாது உள்ளூர்குள்ளர இருந்துட்டு போக முடியாம செஞ்சிக்கிட்டோமேன்னு வருத்தமா இருந்துச்சு.

சரினுட்டு அவருக்கு ஒரு பின்னூட்டம் போட்டு முடிஞ்சா கூப்பிடுங்கய்யான்னு செய்தி கொடுத்தேன். உடனே பழமைபேசி கூப்பிட்டு அட வாருமய்யா நிறையா இடமிருக்கு உள்ளர அப்படின்னு ரொம்ப எளிமையா சொன்னாரு. சுய தொழில் ஆளு நான், சட சடன்னு என்னோட வேல இடத்தை நிரப்பிக்க ஒரு ஆளை பிடிச்சு அமர வைச்சுட்டு விரைந்தேன்.

நான் வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட மாலை 4 மணிக்கு மேல நடைபெற்ற நிகழ்சிகளையே காண முடிஞ்சது. எனவே சில முக்கியமான தமிழ் பெரியவர்களின் பேச்சை கேக்க முடியாம போயிடுச்சுங்க. [என்னோட வயசோ அல்லது வளர்ச்சி நிலையோ தெரியல ஆனா என்னோட எதிர்பார்த்த ஆசையா இருந்தது என்னான்னா; நிறைய தமிழ் ஆர்வலர்களின் பேச்சை அதுவும் வெளி உலகத்திற்கு தெரியாம நிறைய கிராமங்களில் தங்களோட தமிழ் ஆர்வத்தால ஒரு கிராமத்தில ஆசிரியானகவோ அல்லது கோவில்களில் பாடிக்கொண்டோ திரியும் பண்டாரங்களைப் போன்றவர்களும் இந்தத் திருச் சபையால் அழைக்கப்பட்டு அவர்களும் வந்திருந்தா நல்லாந்திருக்குமே, அவர்களையும் பார்த்திருக்கலாம், கேட்டுருக்லாம் சந்தோஷப் படுத்தி பாத்திருக்கலமே...]

விழா நுழைவு வாயில் எல்லாம் அருமையா செஞ்சிருந்தாங்க வாழை மரம் எல்லாம் கட்டி, பூ, தேங்காய், சந்தனம், பன்னீர் தெளிப்பான், கல்கண்டுன்னு ரொம்ப நாளா மிஸ் பண்ணிட்டு இருக்கிற விசயத்தையெல்லாம் வைச்சு ஒரு விழாவிற்கான சூழ்நிலையை தவழ விட்டுருந்தாங்க. கொஞ்சம் ஆர்வம் தொத்திக்கிச்சு அதையெல்லாம் பார்த்தவுடன்.

இப்போ நுழைவுச் சீட்டு ஈசியா கிடைக்கிதுன்னாரா நம்ம பழமையார் நானும் பணத்தை எடுத்து நுழைவுக் கூண்டுக்குள்ளர இருக்கவங்கட்ட நீட்டிகிட்டே ஒரு சீட் அப்படின்னேன். உள்ளே இருந்தவங்க உங்க பேருன்னு கணினிகிட்ட போயி தட்டச்ச போனங்க, நான் என் கந்தர்வ கோலத்தை சொன்னேன். "ஓ! அப்படியா, அது முன்பதிவு இல்லாம கஷ்டமாச்சே, நீங்க "ந்தோ, அவரைக் கேட்டுப் பாருங்க..." அப்படின்னு சில விருமாண்டியண்ணே, முரளியண்ணே, மாதவண்ணாச்சி போன்ற பிரபலம் போல இருந்த விழா நடத்தும் பிரபலங்களை எடுத்து அடுக்கி விட்டாங்க.

எனக்கு உள்ளே இருக்கிறவன் இப்போ உதர ஆரம்பிச்சுட்டான். அப்போன்னு பார்த்து எனக்கு பரிச்சியமான முகம் ஒண்ணு டக்கின்னு என் முன்னே உதயமானுச்சு. "என்னங்கய்யா இங்கே..." விசயத்தை சொன்னேன். அவரு "அட வாங்க இது நம்ம விழாங்கன்னு..." எப்படியோ எனக்கு இரண்டு நாள் கலந்துகிற மாதிரி நுழைவுச் சீட்டுகள் வாங்கி கொடுத்தார்.

உஷ் யப்பாடான்னு கண்ணு கட்டி அடிச்சு பிடிச்சு உள்ளே போய் உட்கார்ந்தா... உட்கார்ந்தா... "என்னய எங்கப்பா, எப்படி சினிமாவில வளர்த்தாருன்னு" ஒருத்தரு தமிழ்ல பேசி, தமிழ் வளர்த்துட்டு இருந்தாரு. எனக்கு வீட்டில பொண்டாட்டி, புள்ளய விட்டுட்டு வந்து இப்படி தனியா உட்கார்ந்துருக்கிறனேன்னு தான் ஞாபகம் வந்துச்சு. அது ஏன்னு தெரியல!

இப்படியெல்லாம் முன்னமே கொஞ்சம் என் மனசில ஓடினதுனாலேதான் ஒரு சிறப்பு ஆர்வமில்லமா இருந்திருக்கேனோ என்னவோ... நம்ம கலாச்சார மரபுபடி - ஒரு காலத்தில எனக்கும் இந்த சினிமாக்காரய்ங்கள பக்கத்தில வைச்சு பார்க்கணுங்கிற ஆவல் மாதிரி ஏதாவது இருந்திருக்கலாமோங்கிறதை தோண்டி தூர் எடுத்து பார்க்கிறேன், அப்படி ஒரு எண்ணம் இருந்ததாக ஞாபமே இல்ல.

சரி அந்தக் கால கட்டமெல்லாம் அது மாதிரியான விசிலடிக்கும் வயசில வந்தாலும் சரி வெவரம் தெரியாத வயசு மனசில வந்துட்டுப் போச்சுன்னு சமாதானம் சொல்லிக்கலாம், ஆனா இப்போ என்னமோ ஆகிப்போச்சு எனக்கு. பிரபலமின்னாலே உடம்பெல்லாம் பச, பசன்னு அரிக்கிற மாதிரி ஒரு உணர்வு. வயசாகிப் போச்சோ!

கஷ்டப்பட்டு சம்பாரிக்கிற நம்ம காசை, இவ்வளவு கொடுமையும் சகிச்சிக்கிட்டு அந்த மொகரக்கட்டைகள பார்க்க போய் உட்கார்ந்தா எனக்குள்ளர இருக்கிறவன் என்னயப் பார்த்து நமட்டுத் தனமா சிரிப்பானா, இல்லையா? சோ, விழாவில இருந்தேன்... ஒட்டியும் ஒட்டாம...

நான் ரொம்ப எதிர்பார்த்துப் போன இன்னொரு ஆள் வேற வரலை! கொஞ்சம் ரோசமான ஆளு! டேய்! கொடுத்தக் காசுக்கு போதும்டான்னு சொல்லப்பிடாது... ரொம்ப கஷ்டப்பட்டு இந்த விழாவை முன்னெடுத்தி, எவ்வளவோ சகிப்புத்தன்மையோட இவிங்களோட எல்லாம் நாம கூடியாடி வேல செய்ய வேண்டியிருக்கேன்னு பல்லைக் கடிச்சிட்டுக் கூட இருந்து நடத்தி முடிச்சிருப்பீங்க. உங்களயெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகுமிங்க.

இதன் அடிப்படையில நானும் என்னோட அனுபவத்தை இந்த விழாவின் பொருட்டு பதிந்து வைச்சிக்கிறது அவசிமின்னு உணர்ந்ததாலே இரண்டு பகுதிகளாக எதிர்பார்ப்பு, சந்திப்பு, மகிழ்ச்சி, ஏமாற்றம் அப்படின்னு எழுதி வைச்சிக்கலாம்னுதான் இந்த முயற்சி. இது இல்லாம இன்னொன்னு வருது.

14 comments:

ஜோ/Joe said...

சீக்கிரம் போட்டு தாக்குங்க.

பழமைபேசி said...

அஃகஃகா.... தொத்திகிச்சு போல இருங்குகுங்க... நல்லா இருக்குங்க...

காட்டாறு said...

//அதுவும் ஜிகு, ஜிகு கூட்டம் உதட்டுச் சாயத்தோட (I like all natural ;-) , பெரீய மனுசயிங்க கூடுற இடமா இருந்தா //

அண்ணே.. நீங்க என்ன சொல்லுறீங்க. சாயம் பூசின பெண்கள் இருக்குற எடத்துல நீங்க இருக்க மாட்டீங்களா? அடங்கொப்புரானே! இதெல்லாம் நம்புற மாதிரியாவா இருக்கு?

மயிலாடுதுறை சிவா said...

உங்கள் அனுபங்களை நிச்சயம் நீங்கள் பதிய வைக்க வேண்டும்....

மயிலாடுதுறை சிவா...

காட்டாறு said...

காட்டான், நீங்க என்னாத்த நெனச்சிட்டு அங்கே போனீங்கன்னு புரியல.

இன்றைய நிலையில் எல்லா விழாக்களுமே வியாபாரங்கள் தான். விழா செவ்வனே நடக்கனுமின்னா, டிக்கெட் விக்கனுமின்னா, தமிழ் பற்று மட்டும் காண்பித்தால் போதாது, சினிமாக்காரங்க வரணும்; தொ(ல்)லை காட்சி மக்கள் வரணும்; வெளி நாட்டில் நடத்தப் படும் விழா என்பதால், என் பிள்ளைகள் பங்கேற்பு இருந்தால் தானே, நானும் நாலு பேரை கூப்பிடுவேன். வியாபாரம்!

மீதி உங்க அடுத்த பதிவை பார்த்திட்டு சொல்லுறேன்.

Thekkikattan|தெகா said...

ஜோ/Joe said...
சீக்கிரம் போட்டு தாக்குங்க.//

:)) நாளக்கே போட்டுடுவோம்...

Thekkikattan|தெகா said...

பழமைபேசி said...
அஃகஃகா.... தொத்திகிச்சு போல இருங்குகுங்க... நல்லா இருக்குங்க...//

அப்படியா நினைக்கிறீங்க :)), இன்னிக்கு நீங்க போட்டுருந்த ஆ. வி சார்ந்த பதிவ பார்த்தவுடன் திக்குன்னு இருக்குங்கோவ் - அடப்பாவிங்களா இப்படியுமான்னு, இவிங்கள...

சுரேகா.. said...

என்னடா...அந்த ஊர்லயே இருந்துக்கிட்டே அண்ணாத்த மூச் விட மாட்டேங்குறாரேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்...

அழகா உங்க பார்வைல ஆரம்பிச்சுருக்கீங்க!

நடத்துங்க!

Thekkikattan|தெகா said...

காட்டாறு,

வாங்க! வாங்க!!

//அண்ணே.. நீங்க என்ன சொல்லுறீங்க. சாயம் பூசின பெண்கள் இருக்குற எடத்துல நீங்க இருக்க மாட்டீங்களா? அடங்கொப்புரானே! இதெல்லாம் நம்புற மாதிரியாவா இருக்கு?//

இதிலெல்லாம் ஆராய்ச்சி செய்யப்பிடாதுங்க... அழகியலை மட்டும்ந்தேய்ன் ரசிக்கோணும் :D

//இன்றைய நிலையில் எல்லா விழாக்களுமே வியாபாரங்கள் தான். விழா செவ்வனே நடக்கனுமின்னா, டிக்கெட் விக்கனுமின்னா, தமிழ் பற்று மட்டும் காண்பித்தால் போதாது, சினிமாக்காரங்க வரணும்;//

இதில தனிப்பட்ட நிலையில் யாரும் லாபமெல்லாம் பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன். எவ்வளவு வெற்றிகரமாக விழாவை நடத்தி முடித்தோம்னு வேணா பெருமையாக அந்தூர் விழா நடத்திய மக்கள் மகிழ்வடையலாம்.

நீங்க சொல்ற "டிக்கெட் விக்கணுமின்னா"ங்கிறதும் அதனைத் தொடர்ந்து தமிழ் பற்று மட்டும் காண்பித்தாலுக்கும் >>சினிமாக்காரங்களுக்கும் ரொம்ப நெருங்கிய தொடர்பு இருக்குறது உண்மைதானுங்க.

தமிழை மட்டுமே மனதில் வைத்து கலந்து கொள்ளும் பிரபலங்களை அழைக்க நேர்ந்தால் அரங்கம் காத்து வாங்க வாய்ப்புகள் அனேகம் இருக்கிறது என்பதும் புரிகிறதுதான். புள்ளக, குட்டியோட வர்றவங்க மண்டையடிப் பட்டுப் போயிருவாங்கதான்.

இருந்தாலும் விழாவின் சில பகுதிகளில் ஆங்கிலக் கூச்சல் அதிகமிருந்தாக விழாவிற்கு வந்தவர்கள் கருதியதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில இருந்து கொண்டு வரும் பொழுதே அவர்களிடத்தே இங்கு சுமாருக்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள், ஆங்கில வகுப்புகள் தேவையில்லை மேடையில் என்று அறிவுருத்தி கூட்டிவந்திருக்கலாம் போன்றவை... :-))

delphine said...

ha ha ha ahaaaa

கல்வெட்டு said...

//ரொம்ப கஷ்டப்பட்டு இந்த விழாவை முன்னெடுத்தி, எவ்வளவோ சகிப்புத்தன்மையோட//

***

ஏன் கஷ்டப்பட்டு நடத்த வேண்டும்?

**

வருடா வருடம் சில சினிமா xxxxxகைகளைக் கூட்டிவந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதைத்தவிர வேறு ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை.

***

Why do they exist as a sangam ?


இதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.

What is our objective?
http://www.fetna.org/index.php?option=com_content&view=article&id=47&Itemid=59

·To establish a centralized organization comprised of elected representatives of Tamil associations in North America and of individuals living in North America who have contributed to the objectives of the Federation and who join as Life Members.

ஒகே ... மெம்பர் சேர்த்தாகிவிட்டது. ஒரு குறிக்கோள் நிறைவேறிவிட்டது.

·To cultivate, promote, foster, and develop the advancement of knowledge in Tamil language, literature and culture.

நெஜமாகவே இதில் என்ன நடந்துள்ளது என்று அறிய ஆவல்.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்களில் எத்தனை பல்கலை, தமிழ் மொழிக்கு துறைகளை ஒதுக்கியுள்ளது என்ற தகவலாவது உண்டா?

வடக்கு கரோலைனா பல்கலைக்கழகத்தில் துறைப்பேராசிரியரிடம் தொடர்பில் உள்ளதால் உண்மை நிலை தெரிந்தே கேட்கிறேன்.

1.cultivate,
2.promote,
3.foster, and
4.develop

இதற்கு என்ன அஜெண்டா (action plan) உள்ளது ?·To cultivate, promote, and foster the exchange of ideas and understanding between the Tamil people and other cultures.

???

·To promote better understanding and foster friendship among various Tamil associations in North America and to encourage the formation of new Tamil Sangams.சங்கத்தை வைத்து என்ன செய்வது என்றே தெளிவில்லாதபோது நிறைய சங்கங்களை பெருக்கி ...அப்ப்புறம் ??


·To act upon charitable causes directly concerning the welfare of Tamil community living throughout the world.காமெடி... மலேசியத் தமிழர்கள் அல்லது இலங்கத் தமிழர்கள் அல்லது துபாய் தமிழர்கள் , கனடா தமிழர்கள் ...தமிழ் நாட்டுத் தமிழர்கள் ...இவர்களுக்காக செய்ய என்ன அஜெண்டா உள்ளது ?


*******************

மனமகிழ் மன்றம், வருத்தப்படாத வாலிபர் சங்கங்களுக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை. சும்மா பொழுது போக்குச் சங்கங்களே இவை.

கூட்டமாகச் சேர்ந்து பொழுதைப் போக்க நல்ல அமைப்பு. மற்றபடி எதிர்பார்க்க ஒன்றும் இல்லை.

Thekkikattan|தெகா said...

oops, Kalvettu your comment has been publised in the first part :-)), confusion of ethiopia aahipoch...

Thekkikattan|தெகா said...

மயிலாடுதுறை சிவா,

எழுதியாச்சுங்கோவ்... பொசுக்குன்னு போச்சுங்கிறாங்க, மனசில தைச்சதத்தானே எழுத முடியும் :-).

சுரேகா!

//என்னடா...அந்த ஊர்லயே இருந்துக்கிட்டே அண்ணாத்த மூச் விட மாட்டேங்குறாரேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்...//

மூச்ச விட்டுட்டேம்ப்பா இப்போ :-). இதுக்கு எழுதாமே இருந்திருக்கலாங்கிறியோ...

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் அருமையாக என்ன நடந்திருக்குமோ எனும் ஆவலுடன் படிக்குமளவுக்கு எழுதப்பட்ட எழுத்து நடை. பரவாயில்லையே, அங்கேயும் சிபாரிசு வேலை செய்யுது போல. விரைவில் அடுத்த பாகம் படித்துவிடலாம். மிக்க நன்றி தெகா அவர்களே.

Related Posts with Thumbnails