Wednesday, September 09, 2009

மெளனாசை




சப்தமொடுங்கிய இரவுகளில்
நிசப்தங்களாக கசிந்தொழிகியபடி
மன ஆர்ப்பரிப்பு!
சுவர்க்கோழிகளை விடவும்
ரீங்காரித்தவாறே
அங்குமிங்குமாக விடாது
ஊறிக்கிடக்கிறது...
விடிந்தவேளையில் சூல்கொண்ட
எண்ணங்களில்
வெளிச்சம்பார்த்து கதறி
மறைந்தன சில...
அக்கோழிகள்
போலவே சிறு அசைவு கண்டு
உறைந்து
இரவு நேர ஃபாண்டசி எண்ண
மனிதர்களைக் கண்டு
மனது மன
இருட்டறைகளில் நாளைய
இரவை எதிர்ப்பார்த்து
தஞ்சம் கொள்ளும்.

5 comments:

பாலா said...

அருமை ரசித்தேன்

Radhakrishnan said...

பிரமாதமான கவிதை தெகா அவர்களே. சுவர்க்கோழி மிகவும் ரசித்தேன். ஆங்கில வார்த்தையைத் தவிர்த்து இருந்திருக்கலாமோ?

Thekkikattan|தெகா said...

வெ. இராதாகிருஷ்ணன் அவர்களே fantasyக்கு நிகரான ஒரு தமிழ் வார்த்தையை பரிந்துரைத்தால் உடனே மாற்றிவிடுகிறேன்... நன்றி!

Thekkikattan|தெகா said...

பாலா said...
அருமை ரசித்தேன்//

நன்றி பாலா...

நன்றி வெ. இரா அவர்களே...

kala said...

கவிதை ரசிக்க வைத்தது. வளர வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails