Thursday, September 10, 2009

உண்மையின் விலை - கமல்ஹாசன்?

என்னய அடிக்கடி கோதாவில இறக்கிவிடுகிற ஆட்களில் ப்ரகாஷ்ராஜ்-க்கும், கமலுக்கும் முக்கிய பங்கு உண்டுன்னு நினைக்கிறேன். நம்ம மக்கள் ஒவ்வொரு முறையும் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் வாழ்வுச் சூழலில் எடுத்த முடிவுகளைக் கொண்டு ஏதாவது சொல்ல நேர்ந்தால் உடனே வாரி தூற்றுவதும், தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இது அச்சு அசலாக செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் முன்னெடுத்து நடந்து செல்லும் ஒரு ஆட்டின் கையில் தன் வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு பின்னாலேயே நடந்து செல்லும் கூட்டத்தினை ஒத்ததாகப் படுகிறது.

வலியச் சென்று ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி கேட்டறிய ஆர்வப் படுகிறோம், அவரும் குடைச்சல் தாங்காமல் அவருடைய அறிதலின் பொருட்டு எப்படியாக ஒரு விசயத்தைப் பார்க்கிறார் என்று முன் வைக்கிறார். அதனை கேட்டுவிட்டு அரைகுறையாக புரிந்து கொண்டு 'குய்யோ, முறையோ' என்று வானத்திற்கும், பூமிக்கும் எகிருவதால் என்ன லாபமாக பெறுகிறோம்? செம்மறி ஆடுகளின் கூட்டத்தில் தானும் ஒரு பங்காளன் என்பதனைக் காட்டிக் கொள்வதனைத் தவிர, அதிலிருந்து தனிப்பட்ட முறையில் சிந்திப்பதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தால் ஒன்றுமே கிடைப்பதாக இல்லை.

அது போன்ற குழுமத்திலிருந்து ஒருவரை தனிமைப் படுத்தி, அந்த அனுபவத்தைப் பெற்ற மனிதனின் ஒத்த சூழலை வழங்கி நீ எப்படியாக 'எதிர்வினை' செய்திருப்பாய் என்று கேட்கும் நிலையில் கண்டிப்பாக சிறிதே யோசிக்கும் நிலையில் பதில் வேறாகத்தான் இருக்க முடியும். இதுவே ஒரு குழுச் சிந்தனைக்கும் தனிமனித சிந்தனைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்.

தனிமனித சிந்தனையின் பொருட்டு எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் தீர்க்கமானவை. ஏனெனில் அத் தீர்வுகள் ஒரு குறிப்பிட்ட கால ஓட்டத்தின் வாயிலாக மிகத் தெளிவாக தனக்கு உகந்ததென எடுக்கப்பட்டது . சமூக கட்டமையுடன் நிர்பந்தங்களை மட்டுமே அதன் நீட்சியாக இயங்கி வரும் ஒரு சமூகத்தில், தன்னுடைய சுய சிந்தனையின் பொருட்டு தன் சூழலுக்கேற்ப தீர்வையும் எடுத்து, தைரியமாக முகம் கொடுத்து வாழ்ந்து காட்ட வேண்டுமெனில் அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். செம்மறிக் குழுவில் ஒரு ஆடாக இருப்பதனில் அவ்வளவு பெரிய அளவில் எந்த ஒரு தனித் திறமையும் தேவைப்படுவதில்லை. அதே நேரத்தில் எதனையும் பெரிதாக தனிப்பட்ட முறையில் விட்டுச் செல்வதும் அங்கே நடைபெறுவதில்லை.

தன்னிலை அற்ற நிலையிலேயே அங்கே ஒருவரின் வாழ்வு நகர்ந்து முடிந்திருக்கும். அந்த நகர்வு மிக்க துன்பங்களுக்கிடையேயாகவோ, மன வெறுமைகளுக்கிடையேயாகவோ கூட இருந்திருக்கலாம், அல்லது குழு நிர்பந்தத்தின் பேரில் யாருக்காகவோ வாழ்ந்து முடிந்திருக்கலாம். இவைகளுக்கான தற்காலிக தப்பித்தலாக இடம் பெயர்வு பொருளாதாரத் தேவை, வேலை வாய்ப்பு என்று அமைத்துக் கொள்வதும் இங்குதானே அதிகமாக நடந்தேறுகிறது. அங்கே இழப்பு நேர்ந்தது என்னவோ அந்த தனிப்பட்ட நபருக்குத் தானே ஒழிய குழுவிற்கல்ல. ஆனால், அந்த நிர்பந்தத்தின் பொருட்டு வாழ்ந்து முடித்து விட்டு, ஏதோ அதனை ஒரு சாதனையாக பறைசாற்றி கொள்வதனை எந்த கணக்கில் சேர்ப்பது.

சரி, விசயத்தின் ஆழத்திற்கு செல்வோம். வளர்ந்தே முடித்து விட்டோமென்று கூறிக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவில்தான் எத்தனை எத்தனை கலாச்சார காவலர்கள். தங்கும் விடுதிகளில், கடற்கரை ஓரங்களில், கங்கை நதியோரத்திலென எங்கு திரும்பினும் கலாச்சாரம் காவல் காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் இந்த நிலைமை? காற்று நிரம்பிய ஒரு ரப்பர் பந்தை எவ்வளவு ஆழத்திற்கும் எடுத்துச் சென்று அதனை அமிழ்த்தி வைத்தாலும் அது விடுவிக்கப் படும் பொழுது அதே வேகத்தில் முட்டி வெடித்து வெளிக் கிளம்புகிறது, அது போலவும்தானே இந்த ஆசைகளும். விரும்பியவர்கள் தன் தேடலாக சென்று கண்டறிய வேண்டிய விசயங்களை எது போன்ற குமிழ்களைக் கொண்டு மூடி வைத்தால் வெடித்துக் கிளம்பாமல் இருக்க வைக்க முடியும்? அது போன்ற சமூக மூடிகள்தான், இது போன்ற வணங்கும் திருத்தளங்களாகட்டும், பயணிக்கும் பேருந்துகளிலிருந்து புகைவண்டிப் பயணங்களிலெல்லாம் பீரிட்டு வெளிக் கிளம்ப வைக்கும் ஒரு மூலமாக அமைகிறதா?

திருமணம் என்ற "இணைப்பு" எதன் பொருட்டாக அமைகிறது? இரு ஒருமித்த எண்ண, கருத்துக்களை கொண்ட இரு வேறு தனி நபர்கள் ஒன்றாக இணைந்து நல்ல நண்பர்களாக பரஸ்பரமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக மகிழ்ந்து/துன்பப்பட்டு வாழ்க்கையை பட்டுணர்ந்து செல்வதற்கென அமைத்துக் கொடுக்கும் ஒரு சமூக அமைப்பு தானே,அது? அதுவே அடிப்படையாக இருக்கும் பொழுது எப்படி அந்த இருவரில் ஒருவர் மட்டும் சுத்தமாக மன ரீதியாக மரணித்து வாழ்வதில் யாருக்கு லாபம்? லாபமடைவதனைப் போல வாழ்ந்து கொண்டிருப்பவரே கூட இறுதியில் தான் ஏமாந்தே வாழ்வதாக உணரும் காலமும் வருகிறது.

எப்படியெனில், அந்த நபரின் சுயநலத்திற்கென தன்னை தொலைத்து விட்டு அரை மனதாக வாழ்ந்திருக்கும் இவரும் முழுமையாக வாழ்ந்திருக்கவில்லை, அதே நேரத்தில் அந்த பலன்களைப் பெற்ற சுயநலமி தன்னுடன் மிகவும் இணக்கமாகவும், முழுமையான புரிதலுடனும் வாழ்ந்திருக்க வேண்டிய நண்பர்/நண்பியை இப்படி அடாவடியாக இரும்புக் கரத்தின் கீழ் அடக்கி ஆண்டிருக்கிறோமே என்று நினைத்து வெட்கி ஒரு நாள் அவரும் மரணிக்கக் கூடும்; தன்னால் ஒரு நபரைக் கூட உண்மையாக நேசிக்க வைக்க முடியவில்லையே என்று.

இந்த நிலையில் அன்பு எனற பரஸ்பர புரிதலின் பொருட்டு கூடும் இருவர் எந்த நிர்பந்தமும் தன்னை கட்டாயப்படுத்தி வைக்காத நிலையில் தொடர்ந்தும் விரும்பியே கூடவே இருப்பதே உண்மையான காதலாகவும், அன்பாகவும், புரிதலாகவும், தெளிதலாகவும் இருக்கக் கூடும். இது இறக்கைகள் சிதைக்கப்பட்டு கூண்டுக்குள் வைத்து அழகினை ரசித்து வரும் ஒரு கிளி மனப்பான்மைக்கும், அதே கிளியை இறக்கைகளுடனும் பறந்து திரிவதற்கான எல்லா உரிமைகளையும் கொடுத்து மீண்டும், மீண்டும் விரும்பியே வளர்ப்பவரிடத்தே வருவதற்கும் ஒத்த வித்தியாசங்களைக் கொண்டது. இதில் எந்த நிலையில் கட்டற்ற அன்பு வெளிப்படுத்தப் படுகிறது? எதனில் நிறைவு கிட்டிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததாக அறிந்து கொள்கிறோம்.

இதனில் யாராவது ஒருவருக்கு அப்படி இணைந்து வாழ்வதில் விருப்பமில்லையெனில் மாட்டுத் தரியில் கட்டி வைத்து, சாப்பாடு போட்டு வளர்க்கும் பசுவிற்கு/காளைக்கு இணையாக வாழ்ந்து முடிப்பதில் யாருக்கு என்ன சுகம் கிட்டியிருக்க முடியும்? அதனின்றி, அதன் போக்கில் விட்டு அதன் தேடலை அறியத் தருவது, தனி மனித நிலையில் நாகரீகமற்ற செயலா? இதனில் எங்கிருந்து வருகிறோம், மூன்றாவது நபரும், சமூகமும்? அதுவும் சமபந்தப் பட்ட இருவருமே சூழ்நிலையின் கணத்தை அறிந்து பக்குவமாக விலகிச் சென்றிருக்கும் பட்சத்தில் இது என்ன மற்ற செம்மறிகள் குழுவிலிருந்து "ப்பா, ப்பா" என்று கதறுவது - எப்படி உனக்கு மட்டும் இது போன்ற தனிச் சிந்தனையின் பொருட்டு வாழ்க்கையை எடுத்துச் செல்லும் துணிவை யார் கொடுத்தது என்ற கழிவிரக்கத்தின் பால் வரும் கதறலாகப் படுகிறது எனக்கு. சாவு என்ற நிகழ்வு ஒரு முறைதான் நிகழ வேண்டும், தினமும் செத்து வாழ்வதனை எதனில் சேர்ப்பது?

கமல் சொன்ன ...“ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவதில் சங்கடங்கள் ஏற்பட்டன. ‘இந்தக் குழந்தைகளின் தாயார் இவர்’ என்று சொன்னால் அதுமட்டும் போதாது. எனது மனைவி யார்? என்றும் கேட்டனர். எனவேதான் சரிகாவை துணைவியாக ஆக்கிக் கொண்டேன்... இந்தக் கூற்று மிகவும் தவறாக அப்படியே ரா' வாக பார்க்கப் படுகிறது, எனக்கு அதனில் நமது சமூகத்தின் பொருட்டு அவருக்கு இருக்கும் மன வருத்தம் தெரித்துக் கிடப்பதனைத்தான் காட்டுகிறது. நமது சமூகம் திருமணங்களை இப்படி மலிவு படுத்தி 'விடுதி'களில் அறை எடுப்பதற்கு என்ற நிலைக்கு அவ்வளவு பெரிய இணைப்பை தரம் தாழ்த்தி பார்க்கக் கூடிய ஒரு மன நிலைக்கு வர வைத்திருக்கிறதே என்ற அங்கலாய்ப்பு அதனில் பொதிந்து கிடக்கிறது. அங்கே புற அடையாளமே முன் நிறுத்தப் படுகிறது. இருவர் மனமொத்து வாழ்ந்து குழந்தைகளையும் பெற்று வாழும் மனப் பொருத்தத்தை விட இந்த வெளிப்புற சம்பிரதாய "கால் கட்டா" இருவரை ஒட்டி வைத்திருக்கிறது என்ற "சமூக மலிவு எண்ணத்தை" ஒரு அடையாளமாக அவர் வைத்துக் கூறியிருக்கக் கூடும்.

கடைசியாக ஒரு கேள்வி "கற்பு" என்பது யாது, அது எங்கே இருக்கிறது? பிறர்மனை நோக்காமலும், மனதிலும் இச்சை கொண்டு எதிர் பாலினத்தவரை பார்க்காமல் இருப்பதுவுமே நடுநிலை மாறா கற்பு எனில் நாம் பலமுறை அதிலிருந்து நழுவியவர்களாக உணர நேரிடும். இந் நிலையில், நம்மைப் போன்ற சமூகத்தில் பிறர்மனை நோக்கல் என்பது அத்தோடு நின்றுவிடுவதுமில்லை. லைசென்ஸ்டு திருமணமானவர் ஆனால் வெளியில் இலைமறை காயாக "வைத்துக் கொள்ளும்" நிலையும் பார்க்கிறோம். எனவே, நமது சமூகத்திற்கு இது போன்ற களவாணித் தனங்களை ஊக்குவிப்பதிலேயே அதிக அக்கறை இருப்பதாகப் படுகிறது. இந்த நிலையில் உண்மையாக, தைரியத்துடன் உள்ளதை உள்ளதாக எதிர் கொண்டு வாழும் மனிதர்கள் "சமூகத்தில் வெறுக்கத்" தக்கவர்களாக ஆகிப் போகி விடுகிறார்கள்? என்ன கொடுமையிது சரவணா!

50 comments:

ஜோ/Joe said...

கலக்கல் பதிவு!

கேகே said...

கலக்கிட்டீங்க தெகா.மனசுல ஒன்னு வச்சிக்கிட்டு வெளியில வேசம் போடுற அனேகருக்கு அவங்கவங்க மனச உறுத்தட்டும்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

தைரியத்துடன் உள்ளதை உள்ளதாக எதிர் கொண்டு வாழும் மனிதர்கள் "சமூகத்தில் வெறுக்கத்" தக்கவர்களாக ஆகிப் போகி விடுகிறார்கள்? என்ன கொடுமையிது சரவணா!

////////////

superb.........

Anonymous said...

மிக நல்ல,உண்மைய உரித்துக் காட்டி ஏன் இப்படி? என ஊரை ஏய்க்கும் சமுதாயத்தை(அதில் உள்ள சிலர்/பலர்) கேட்கும் பதிவு.வாழ்த்துக்கள் தெகா!தொடரட்டும் உங்கள் பணி.

பதி said...

தெளிவான பார்வை தெகா.

மங்கை said...

ஒத்து வரவில்லை என்றால் ஒதுங்கி விடுவது சாலச் சிறந்தது தான்...

ஆனால் (எடுத்துக்காட்டாக)கோவையில் நான் பார்த்தவரை விவாகரத்து மிக அதிக அளவில் பார்க்கிறேன்....சொல்லப்போனால் எங்க குடும்பத்துல 3 விவாக்ரத்து...

இதுக்கு என்ன காரணம்..... சகிப்புத்தண்மை குறைஞ்சுறுச்சா... நல்லது கெட்டது எடுத்து சொல்லும் பெரியவர்கள் இல்லையா...அல்லது ஆண் பெண் இருபாலாறும் தவறு செய்கிறார்களா...

திருமணமமென்ற பந்தம் எதுக்கு... என்ன.. அதனால் வரும் சாதக பாதகங்களை எடுதுரைக்க வேண்டும்.. ஒரு புரிதலுடன் திருமண பந்தத்தித்தில் நுழைந்தால் இதுபோன்ற மனக்கஷ்டங்களை தவிர்க்கலாம்...

என்ன இருந்தாலும் ஒரு சமூகத்துக்கு இது நல்லதல்ல...எந்த ஒரு சமூகமும் இளைய தலையமுரையினருக்கு ஒரு எடுத்துகாட்டாக இருக்க வேண்டுமே தவிர அவநம்பிக்கையை கொடுக்க கூடாது....

தருமி said...

ஆடுகள் எப்போதும்
ஆடுகளே ...

குடுகுடுப்பை said...

அருமையாக சொல்லி உள்ளீர்கள்.

Thekkikattan|தெகா said...

//ஜோ/Joe said...

கலக்கல் பதிவு...//

ஏதோ நமக்குப் தெரிஞ்சதை இங்கன பதிஞ்சு வைச்சுக்குவோமின்னுட்டுதான், ஜோ!

ஆனா, கண்டிப்பா இந்தக் கட்டுரைக்கு எனக்கு யாரும் காசுக் கொடுக்கலையப்பா :)))

Anonymous said...

appudingaala appy,
ithaye thaane kushbu AIDs pathiya kelvikku sonnanga, aa ellam engau pone intha maathiri kodi idikaama.
Ithe pettiyile kamal sonna innu oru thagavallukku enna sapai kattu kaat porengappu. Athaaanpaa avunga ponnunga Sarika kooda pesamaataangalaame, romba erumaiyaa oru appana peethikittaaru.Eththani aanaalum ivaroda onnunga ippo siluthukittu nikura udambai than karuvula vachchi sumantha thaayai mathikka kaththu tharaatha ivaru romba nijam pesuravaru neenga kodi pudikeeranga.

Thekkikattan|தெகா said...

//கேகே said...
கலக்கிட்டீங்க தெகா.மனசுல ஒன்னு வச்சிக்கிட்டு வெளியில வேசம் போடுற அனேகருக்கு அவங்கவங்க மனச உறுத்தட்டும்...//

உறுத்துவதால் தானே இத்தனை ஆர்ப்பரிப்பும் இல்லன்னா நம்ம நம்ம சோலிய நம்ம செவனேன்னு செஞ்சிக்கிட்டே போவோமே... அதுவே, இது போன்ற நிகழ்வுகளை "outnumber" பண்ணிடாதா? பின்னே ஏன் பயம்... ?

Thekkikattan|தெகா said...

//உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulav

superb.........//

ஒரு திரட்டியே திரண்டு வந்து ஆமோதிச்சிருக்கின்னா... :-))

நன்றி உலவு.காம்!

கோபிநாத் said...

தல

ஓட்டு போட்டாச்சி ;)))

Anonymous said...

அருமையா ச‌ப்பை கட்டு கட்டுறீங்க.

-Muthu

Thekkikattan|தெகா said...

//padmahari said...

மிக நல்ல,உண்மைய உரித்துக் காட்டி ஏன் இப்படி? என ஊரை ஏய்க்கும் சமுதாயத்தை(அதில் உள்ள சிலர்/பலர்) கேட்கும் பதிவு.வாழ்த்துக்கள் தெகா!தொடரட்டும் உங்கள் பணி.//

ம்ம்ம்... நன்றி!

BADRINATH said...

Kamals views about marriage are more or less the views of Thanthai Periyar. But we indians are brought up by mythological and slavery mentality background. So people may not digest those views so easily
Badrinath

Jawahar said...

ரொம்ப அனலிட்டிக்கலாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். கமலஹாசன் சினிமாவைப் போலவே கலாச்சாரத்தையும் அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டு போக முயன்றிருக்கிறார். அதை அத்தனை அவசரமாகச் செய்ய முடியாது.

http://kgjawarlal.wordpress.com

Unknown said...

அருமை தெளிவா அலசியிருக்கீங்க.

குழுச் சிந்தனைக்கும் தனிமனித சிந்தனைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்திற்கான உங்கள் பார்வை எத்தனை சத்தியமான உண்மை.

//இதனில் எங்கிருந்து வருகிறோம், மூன்றாவது நபரும், சமூகமும்? அதுவும் சமபந்தப் பட்ட இருவருமே சூழ்நிலையின் கணத்தை அறிந்து பக்குவமாக விலகிச் சென்றிருக்கும் பட்சத்தில் இது என்ன மற்ற செம்மறிகள் குழுவிலிருந்து "ப்பா, ப்பா" என்று கதறுவது - எப்படி உனக்கு மட்டும் இது போன்ற தனிச் சிந்தனையின் பொருட்டு வாழ்க்கையை எடுத்துச் செல்லும் துணிவை யார் கொடுத்தது என்ற கழிவிரக்கத்தின் பால் வரும் கதறலாகப் படுகிறது எனக்கு. சாவு என்ற நிகழ்வு ஒரு முறைதான் நிகழ வேண்டும், தினமும் செத்து வாழ்வதனை எதனில் சேர்ப்பது?//

அனுபவித்தவர்களுக்கு இந்த வரிகளின் ஆழம் புரியும்.

இந்த பதிவின் ஒவ்வொரு வரியும் கமல் சொன்ன விஷயங்களுக்காக மட்டுமான பார்வையைத் தாண்டிய நிறைய உண்மைகளை ஆழமா பேசுகிறது நண்பரே.

Thekkikattan|தெகா said...

//பதி said...

தெளிவான பார்வை தெகா...//

வாங்க பதி... கருத்திற்கு நன்றி!

mangai...

//ஆனால் எடுத்துக்காட்டாக) கோவையில் நான் பார்த்தவரை விவாகரத்து மிக அதிக அளவில் பார்க்கிறேன்... .சொல்லப்போனால் எங்க குடும்பத்துல 3 விவாக்ரத்து...//

விசயம் இப்படியாக இருக்கையில், இது என்னமோ பெரிய இடத்துப் பிரச்சினை என்பது போல பார்ப்பது, பூனை கண்ணை கட்டிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டதாக நினைத்துக் கொள்வதனைப் போல இருக்கிறது -

//இதுக்கு என்ன காரணம்..... சகிப்புத்தண்மை குறைஞ்சுறுச்சா... நல்லது கெட்டது எடுத்து சொல்லும் பெரியவர்கள் இல்லையா...அல்லது ஆண் பெண் இருபாலாறும் தவறு செய்கிறார்களா...//

நீங்க சொல்றதெல்லாம் காரணிகளாக இருந்தாலும், இவைகளெல்லாம் முன் காலங்களில் மூடிக்கு கீழே கொதித்துக் கொண்டிருக்கும் சுடு நீராகத்தான் இருந்திருக்கக் கூடும்.

என்ன ஒன்று இந்தக் கால கட்டத்தில், கொஞ்சம் வாய்ப்பிடி சட்டமெல்லாம் இல்லாமல் கருத்துக்களை வெளிப்படையாக பேசும் ஜங்கசனில் இருக்கிறோம், அதனால் பேசப் படுகிறது மற்றபடி ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குமைந்து கொண்டிருக்கும் விசயங்கள்தாம் இவை.

பெரும்பாலான இடங்களில் யாரோ ஒருவர் சுத்தமாக விட்டுக் கொடுத்துப் போய் விடுவதாக இருக்கும், அதன் சுவையை மற்றவர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு தானே சுவைத்துக் கொண்டிருப்பார்...

//திருமணமமென்ற பந்தம் எதுக்கு... என்ன.. அதனால் வரும் சாதக பாதகங்களை எடுதுரைக்க வேண்டும்.. ஒரு புரிதலுடன் திருமண பந்தத்தித்தில் நுழைந்தால் இதுபோன்ற மனக்கஷ்டங்களை தவிர்க்கலாம்...//

இது ரொம்ப ரொம்ப அவசியம்... அது போன்ற ஒரு அமைவுக்குள்ளர நுழைவதற்கு முன்னமே, இதன் மூலமாக பெறப்போகும் உறவின் நீள, அகலங்களை யோசித்து, புரிந்து புக வேண்டும் தான்.

//என்ன இருந்தாலும் ஒரு சமூகத்துக்கு இது நல்லதல்ல...எந்த ஒரு சமூகமும் இளைய தலையமுரையினருக்கு ஒரு எடுத்துகாட்டாக இருக்க வேண்டுமே தவிர அவநம்பிக்கையை கொடுக்க கூடாது...//

சமூகம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியது தானே? எல்லாமே 'மோனோ'வாக இருந்தால் நன்றாக போய்க் கொண்டிருக்கும் விசயங்களில் கூட ஒரு புத்துணர்வு இருக்காது, இது போன்ற தருணங்கள் நாம் எங்கே சறுக்கி செல்கிறோம் 'பாசாங்குடன்" என்று படிக்கக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக பார்த்தாலே --- we will be back on the track! so let go...

சுரேகா.. said...

///நமது சமூகம் திருமணங்களை இப்படி மலிவு படுத்தி 'விடுதி'களில் அறை எடுப்பதற்கு என்ற நிலைக்கு அவ்வளவு பெரிய இணைப்பை தரம் தாழ்த்தி பார்க்கக் கூடிய ஒரு மன நிலைக்கு வர வைத்திருக்கிறதே என்ற அங்கலாய்ப்பு அதனில் பொதிந்து கிடக்கிறது.//

மிகச்சரியான வார்த்தைகள் அண்ணா!

திருமணம் பற்றி ஒரு தனிமனிதனின் கருத்துக்குள்
புகுந்து கபடி ஆடுவது கயமைத்தனம்தான்!

நீங்க எழுதுனா எல்லாமே மாஸ்டர் பீஸாகிடுதே எப்பிடி?

Thekkikattan|தெகா said...

//தருமி said...

ஆடுகள் எப்போதும்
ஆடுகளே ....

சாமீ ... மொத்த பதிவையும் இப்பூடி சுருக்கிப்புட்டியளே :-)

//குடுகுடுப்பை said...

அருமையாக சொல்லி உள்ளீர்கள்.//

அட வாங்க குடுகுடுப்பையாரே... முதல் வருக்கைக்கு ஒரு :-)

காட்டாறு said...

நான் அடிக்கடி சொல்லும் நீட்ஷேயின் வார்த்தைகள் “All things are subject to interpretation whichever interpretation prevails at a given time is a function of power and not truth.”

ஒரு தனி மனிதன் சொன்னதை அவங்க அவங்க அறிவுக்கு, வளர்ச்சிக்கு எட்டியது போல் எடுத்துக் கொள்ளுவது இது முதல் முறை அல்லவே. "போங்கப்பா.. போய் உங்க வாழ்வை நீங்க வாழுங்க. அப்படி நீங்க வாழும் வாழ்க்கை உங்களுக்கு நிறைவானதாய் இருக்கட்டும். அவன் சொன்னான் இவன் சொன்னான் அதனால எங்க சொசைட்டி கெட்டுப் போச்சின்னு பழி போடும் கூட்டமாயில்லாது சுயமாய் சிந்தித்து வாழுங்க." அப்படின்னு சொல்லும் உங்க பதிவை ஆழ வாசித்து தன்னையே கேள்வி கேட்பவர்களுக்கு விளங்கும் வாழ்வியல்.

என் சைனீஸ் நண்பர் அடிக்கடி சொல்லும் அவங்க நாட்டு பழமொழி ஞாபகத்துக்கு வருது. “A wise man makes his own decisions, an ignorant man follows public opinion” நீங்க wise man-ஆ இல்லை செம்மறிக் கூட்டமா?

Thekkikattan|தெகா said...

அனானி,

பாருங்களேன் ஒரு நல்ல விசயத்தை சொல்லும் போது கூட ஒரு பேரைப் போட்டு எழுத நமக்கு தெம்பில்ல, ஏன் முக்காடுக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிறோம்? எதக் காப்பாத்த,,, ம்ம்

//appudingaala appy,
ithaye thaane kushbu AIDs pathiya kelvikku sonnanga, aa ellam engau pone intha maathiri kodi idikaama.//

சொல்லியிருந்ததை ஃபாலோ பண்ணியிருந்தா இன்னிக்கு 36 லட்சம் எய்ஸ்ட்ஸ் நோயாளிங்க நம்ம நாட்டில இருக்கமாட்டாய்ங்கவோய்... உலக அளவில ஆஃப்ரிகாவ முந்த இந்த விசயத்தில போட்டிப் போட மாட்டோம், வும்ம மாதிரி ஆட்கள் இருக்கிறதுனாலேதான் சத்தமில்லாம பரவிக்கிட்டு இருக்கு.

//Eththani aanaalum ivaroda onnunga ippo siluthukittu nikura udambai than karuvula vachchi sumantha thaayai mathikka kaththu tharaatha ivaru romba nijam pesuravaru neenga kodi pudikeeranga.//

பாருங்க அனானி, இதெல்லாம் நாம விரிவா உட்கார்ந்து பேசுறதில அர்த்தமே இல்லப்பா, ஏன்னா இது அவங்க குடும்ப விசயம், அப்பனும் - ஆத்தாலும் உட்கார்ந்து பேச வேண்டியது புள்ளகளோட. நான் இங்கன எழுதினது உலகத்தில வீட்டுக்கு வீடு நடக்கிற/வாழ்கிற ஒரு பொது விசயம் அதைத் தாண்டி வாங்க நாம கமல் வீட்டுக் கதை பேசுவோம்னு பேசக் கூப்பிடுறது நியாயமில்ல.

இன்னொரு விசயம் எவனுக்கும் நான் கொடி பிடிக்கணுங்கிற அவசியத்தில இல்ல... எனக்கு சரின்னு பட்டது அடிச்சு விட்றேன் அம்பூட்டுத்தான்.

பிள்ளைகளை ப்ரைன் வாஷ் பண்ணுவதோ, அல்லது சுயநலமாக ஒரு பக்கமாக வளர்ப்பதோ எங்கே போய் கொண்டு விடுங்கிறதுக்கு தனிப்பதிவா போட்டு பேசுவோம்... அப்போ முக்காடு நீக்கிட்டு வாங்க இல்ல அப்படியே போட்டுருந்தாலும் உங்களுக்கும் என் வீட்டில இடமுண்டு.

தருமி said...

ஒரு அரைகுறையான confession:

நம் உடல் இச்சைகளில் பிறந்த எச்சங்களே நமது பிள்ளைகள். நாமும் அதுபோல் நம்மைப் பெற்றவர்களின் எச்சம். இதில் என்ன பெருத்த பாசம் - இது என் bachelor life-ல் நினைத்து, பேசி நண்பர்களிடம் அடிப்பட்ட காலம் உண்டு.

இதை அப்படியே எழுத்துகூட பிசகாமல் ஒரு பதிவர் சென்ற வாரம் எழுதியிருந்தார். யாரென்று நினைவில் வைத்துக் கொள்ளாமல் விட்டு விட்டேன். ஏனோ அந்தப் பதிவை (!) அவர் எடுக்கும்படி ஆகிவிட்டது.

கல்யாணம் குழ்ந்தை குட்டி என்று வந்த பிறகு - நான் நினைத்தது உண்மை என்றாலும் - அப்படி மீண்டும் நினைக்க முடியவில்லை.

ஆனால் முதல் முறை உடல்நலமின்றி படுத்த போது - திருமணம் தோல்வியடைந்தால் சோகம். ஆனால் அதைவிட அறியாப் பருவத்தில் இருக்கும் அன்பான பிள்ளைகளையும் தங்ஸையும் அம்போன்னு உட்டுட்டு போறது ரொம்ப பாவம்; சோகம். ஆக கல்யாணம் தோத்தாலும் சோகம்; ஜெயிச்சாலும் இதுபோன்ற சோகம் என்றுதான் தோன்றியது.

கமலுக்கும் அந்த நேரத்தில் தோன்றிய ஒரு உணர்வு அது, அந்த நேரத்தில் அப்படி தோன்றும்படியாக வாழ்வில் என்ன நேர்ந்ததோ ... எப்போதும் அவருக்கு அப்படி தோன்றியிருக்காது. தோன்றியிருந்தால் ஒன்றுக்கு அடுத்து ஒன்றாக ஏன் திருமணம் செய்திருக்கப் போகிறார்.

இதெல்லாம் அந்தந்த நேரத்தில் வாழ்க்கையின் அடிகள் கொடுக்கும் பாடம்.

அவர் பாடம் அவருக்கு; என் பாடம் எனக்கு ...

Thekkikattan|தெகா said...

//கோபிநாத் said...

தல
ஓட்டு போட்டாச்சி ;)))//

daangs, Gopi! :-)

//Anonymous said...

அருமையா ச‌ப்பை கட்டு கட்டுறீங்க.

-Muthu//

ஏன் இதைச் சொல்ல ஒரு ஐ டி யோட வந்து சொல்றது? நல்ல விசயம்தானே, சொல்லுறீய - இருந்தாலும் 'அருமை'ன்னு சொன்னது எனக்குப் பிடிச்சிருக்கு ;-)

Thekkikattan|தெகா said...

//BADRINATH said...
Kamals views about marriage are more or less the views of Thanthai Periyar. But we indians are brought up by mythological and slavery mentality background. So people may not digest those views so easily
Badrinath//

Vanakkam Badrinath!

In spite Kamal has not asked anyone's back up in this regard, it is the crowd who is crying out for him. He did what is best for him based on the situation at his hand. Since, it is an independent thinking based decision, who are these people to comment on about it. Did he look out for it? who are we to dictate or make a decision for someone else's life, how and in what direction it should move...

As far as I am concerned it should strictly be left with the concerned individuals - full stop.

Thekkikattan|தெகா said...

//Jawarlal said...

ரொம்ப அனலிட்டிக்கலாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். கமலஹாசன் சினிமாவைப் போலவே கலாச்சாரத்தையும் அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டு போக முயன்றிருக்கிறார். அதை அத்தனை அவசரமாகச் செய்ய முடியாது.//

நீங்கதானே அந்த "கமல் - களிமண்..." தலைப்பு வைச்சி எழுதின பதிவர், உங்கப் பதிவு படிக்கும் பொழுதும் அதுக்கு வந்த பின்னூட்டங்கள் சிலதை படிக்கும் பொழுதுதான் இதுக்கு மேல என்னாத்துக்கு வெயிட் பண்ணிக்கிட்டுன்னு கொஞ்ச நாள் ஆறப்போட்டு எழுதுவோம்னு நினைச்சிருந்த விசயத்தை இப்பவே எழுத வேண்டியதாப் போச்சு.

அப்போ நீங்க அவரு இதெல்லாம் 'புரச்சி" பண்ணணுங்கிறதுக்காக பண்ணுறார்னு புரிஞ்சு வைச்சிருக்கீங்களா? அப்போ, மனுசப் பய சொந்த வாழ்க்கையையும் செய்யும் தொழிலோட சம்பந்தப் படுத்தி பார்க்கிறீங்க, கொஞ்சம் கஷ்டம்தான் :-)

Thekkikattan|தெகா said...

வாங்க நாடோடி இலக்கியன்,

//அனுபவித்தவர்களுக்கு இந்த வரிகளின் ஆழம் புரியும்.

இந்த பதிவின் ஒவ்வொரு வரியும் கமல் சொன்ன விஷயங்களுக்காக மட்டுமான பார்வையைத் தாண்டிய நிறைய உண்மைகளை ஆழமா பேசுகிறது நண்பரே.//

அப்படியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. விசயங்களின் நீள, அகலம் நன்றாகவே உணர்ந்து, பட்டு எழுதப்பட்டவையே கண்டிப்பாக பதிவில் சாரம்சம் இருந்தே ஆக வேண்டும்.

தங்களின் உணர்வு புரிகிறது. நன்றி!

மணிகண்டன் said...

தென்கிட்டான், உங்க பதிவுக்கு முதல்முறையா வரேன். உங்க கருத்தை நீட்டா ஆழமா சொல்லிட்டீங்க. பாராட்டுக்கள்.

இது சம்பந்தமா நான் பேசும் போது எல்லாம் எனக்கு திருப்பி விடப்படும் கேள்வி - விவாகரத்து அதிகம் உள்ள சமூகம் மட்டும் உருப்படுமா ? மேற்க்கத்திய நாடுகளில் அம்பது சதவீதம் விவாகரத்தில் முடிகிறது. நம் நாட்டில் அப்படியா என்று ? அதற்கான பதிலாக நான் கூறி வந்தது - எப்படி அவர்களுக்கு மட்டும் மன வேறுபாடு அதிகளவில் வருகிறது, நமக்கு ஏன் இல்லையென்று தான் ! இலைமறை காய்மறையாக அனைத்தையும் பொத்தி பொத்தி வைத்தே பழக்கப்பட்டுவிட்டோம். ஏதோ ஒன்றுக்காக சேர்ந்து வாழும் கலாச்சாரம் நம்முடையது. எதற்காக என்பது வயதிற்க்கேர்ப்ப மாறும். அவ்வளவே.

ஆனால் ஒன்று - கமல் கூறவது போல் விவாகரத்து பெற்று தனியாக வாழ்வது ஒன்றும் எளிதாக இருக்குமா என்பது சந்தேகமே. முதலில் அவரின் குற்றஉணர்ச்சி, நமது சமூகத்தின் பார்வை, மதிப்பீடு அனைத்தும் சேர்ந்து ஒருவரை எளிதாக வீழ்த்திவிடும். கமலை போன்றவரை வைத்தோ, அவரின் வாழ்க்கைமுறையை வைத்தோ, சாதாரணமானவனின் வாழ்க்கை முறையை நிர்ணயிப்பது சரியாக வராது.

***
நம் உடல் இச்சைகளில் பிறந்த எச்சங்களே நமது பிள்ளைகள். நாமும் அதுபோல் நம்மைப் பெற்றவர்களின் எச்சம். இதில் என்ன பெருத்த பாசம்
***

தருமி, இது ரொம்பவே சுருக்கறது. ஒரு அஞ்சி நிமிஷம் தான் உடல் இச்சை. அதோடு பிள்ளை பாசத்தை அளவிட முயல்வது அறிவிலிதனமாகவே எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கும் இப்பொழுது அப்படி தான் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

Thekkikattan|தெகா said...

சுரேகா,

//திருமணம் பற்றி ஒரு தனிமனிதனின் கருத்துக்குள்
புகுந்து கபடி ஆடுவது கயமைத்தனம்தான்!//

இந்த அடிப்படை நாகரீகம் எத்தனைப் பேருக்கு விளங்குது? வளர்ச்சி நிலைகளில் காலம் கொடுக்கும் விசயங்களை மறுதலித்து, இது எனக்கு உரித்தானது இல்லை என்று மறுக்கும் உரிமை யாருக்கு உள்ளது?

//நீங்க எழுதுனா எல்லாமே மாஸ்டர் பீஸாகிடுதே எப்பிடி?//

என் பீஸ் எனக்கு அப்பிடித்தானே இருக்கணும் ;-) .

அது ஒண்ணுமில்ல தம்பீ, நல்லா பட்டு'மீண்டும் துளிர்த்துன்னு வளர்ந்து தினமும் தேய்ந்து கொண்டிருப்பதால் எழுதுவது நேரடியா நெஞ்சுக்குள்ளர இருந்து வெளிய வந்து விழுகுது, no hold backs - அதுனாலேயும் இருக்கலாமோ!

Thekkikattan|தெகா said...

காட்டாறு,

//“All things are subject to interpretation whichever interpretation prevails at a given time is a function of power and not truth.”//

நீட்ஷேயின் வார்தைகள் எத்தனை மனிதர்கள் தோன்றி மறைந்தாலும் கூறப்பட்ட கருத்து மட்டும் 'மாறாமல்' நிலைக்கக் கூடியது என்று தெரிகிறது. :-)

//என் சைனீஸ் நண்பர் அடிக்கடி சொல்லும் அவங்க நாட்டு பழமொழி ஞாபகத்துக்கு வருது. “A wise man makes his own decisions, an ignorant man follows public opinion” நீங்க wise man-ஆ இல்லை செம்மறிக் கூட்டமா?//

ஜிங் மூங் ஹிங் அருமையா சொல்லியிருக்காரு சொல்ல வந்த விசயத்தை :-).

கடைசியா செமயா ஒரு கேள்விய கேட்டிருக்கீங்க பாருங்க... ஹ்ம்ம்ம்ம் - ஏங்க, ஏற்கெனவே வெட்டி பாதை போட்டுக் கொடுத்திருக்கிறதில கண்ணை மூடிக்கிட்டு நடந்து திரியறது எப்படி, புத்சா ஒரு பாதை போட்டு அதுல நடந்து பாராப்பங்கிறது மாதிரி இருக்கு, நீங்க சுயமா சிந்திச்சு முடிவு எடுங்கிறது.

Anonymous said...

romba nandri,

Still what I want to ask is this, now when Kamal's views are held high because you need a brand name to project yor self.
Because I still dont see your opinion about Kushbu.
What ever could be there the personal life's views Kamalhasan couldhave avoided from sharing in public.
As you mentioned this is personal issue with his partner sorry EX
But the way that he declared that family is high is ok. Though partners do not get along why should he project his daughters and Sarika's issue is it to jsutify himeself as falutless????
If you were really analysing this message and the way the public's view you should have mentioned about his attitude also.
You can call me as "Pisasu".
I am not comfortable to share my ID in a opne blogs, because I am vulnerable for attacks form the same hypocratic society you projected. (If you really want to discuss with me I do not mind once You assure me that my email ID will not be revealed publicly. I trust you because your post is showing maturity, OK ) If you want you can write a post on this annony option and individulas like me (Not the one who use this option to post vulgar comments only.)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

@தருமி, அந்த கருத்தைச் சொன்னவர் பிதற்றல்கள் பதிவு வச்சிருக்கற முகிலன்.. சே சே அவர் பிதற்றரார்ன்னு சொல்லல நான். அவரே தான் சொல்லி இருக்கார்..:)

@ தெகா , அடுத்தவங்களைப்பத்தி பேசறதுல தான் எவ்வளவு சுகம் நம்ம மக்களுக்கு ..நல்லதோ கெட்டதோ பேசறதுக்கு விசயம் நம்ம வீட்டுல இருந்து எடுத்தா கடுப்பாகும். அதே அடுத்த வீடுன்னா சுவாரசியம்.. :)

Thekkikattan|தெகா said...

ஹ்ம்ம்... தருமி, அப்படியே 'பட்டறுத்து' பேசுகிற மனநிலையில் ஒரு சித்தனுக்கே உரிய தொனியில் யோசிச்சிருக்கீங்க அந்தக் காலத்தில. ஆனா, பிள்ளை குட்டிகளாகி குடும்பஸ்தன் என்ற ஒரு குணாதிசியத்திற்குள் புகுந்த உடன் மொத்த பார்வையும் மாறிப்போனது, இல்லையா.
இது எல்லாருக்கும் வளர்ச்சிகள் தோரும் மாறுபடும் பார்வைகள் தானே. முட்டைகளை வெளிப்புறத்தில் வைத்து அடைகாத்து குஞ்சு பொரித்து, தன்னுடன் கூட்டிக் கொண்டுத் திரியும் ஒரு தாய்க் கோழிக்கே கூட "innate behavior" என்ற ஒன்று வேலை செய்து, அது தன் சந்ததிகளை காப்பாற்றி ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிப் படியை தாண்டும் வரையிலும் பேணி வளர்த்து, பாதுகாத்து, விடும் பாங்கில், மனிதர்கள் நாம் ஒவ்வொரு நொடியும் சிந்தித்து வாழும் கணம் தோரும் எப்படி "எச்சம்" என்ற ஒரு சிறு 'கான்சப்டிற்குள்' குறுக்கி விட முடியும்.

எனவே எவ்வளவு பெரிய மனித மரத்துப் போன மனங்களாக இருந்தாலும், அப்படியே எண்ணி மரணிப்பது என்பதெல்லாம் அவ்வளவு எளிதானதாக இருக்க முடியாதென்றே கருதுகிறேன்.

//ஆனால் முதல் முறை உடல்நலமின்றி படுத்த போது - திருமணம் தோல்வியடைந்தால் சோகம்.//

இதனைப் போன்று 'realization' நன்றாக இளமையாக இருக்கும் பொழுது கிட்டிவிட்டால் நிறைய விசயங்கள் பிடிப்பட்டு போய் விடும். ஆனால், நம்மில் நிறைய பேருக்கு காலம் கடந்தும் கிட்டுவதில்லை, அல்லது உணர மறுத்தே வருகிறோம்.

இங்கு தங்களின் "பாவம்" என்ற சொல்லை, அய்யோ பாவம் என்ற கோணத்திலேயே எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் கூறியது 'ஆதரவின்றி' தவிக்கப் போகும் ஜோடிகளில் ஒருவருக்கு வேண்டுமானால் பொருந்தலாம், ஆனால், விரும்பியே 'பரஸ்பரமாக' பிரிந்து செல்வதே உத்தமம் என்று கருதுபவர்களுக்கு அது பொருந்தாது என்றே கருதுகிறேன்.

அங்கே டீனேஜித்திய வயதிற்குள் இருக்கும் குழந்தைகள் வேண்டுமானால் கலக்கமுறலாம். இருப்பினும், அது போன்ற மன முறிவு ஏற்கெனவே பெற்றோர்களிடத்தே நடைபெற்று தினந்தோரும் வீட்டு வன்முறைகளை (which includes passive aggression) முகம் கொடுத்து குழந்தைகளும் மனம் சிதைவுற்று தானும் ஒரு அடல்டாக பிரிதொரு நாளில் தீர்க்கமான முறையில் எதனையும் அணுக முடியாது போவதும் நடைமுறைதானே?

இது கொஞ்சம் சிக்கலான விசயம்தான்.

//கமலுக்கும் அந்த நேரத்தில் தோன்றிய ஒரு உணர்வு அது, அந்த நேரத்தில் அப்படி தோன்றும்படியாக வாழ்வில் என்ன நேர்ந்ததோ ... எப்போதும் அவருக்கு அப்படி தோன்றியிருக்காது. தோன்றியிருந்தால் ஒன்றுக்கு அடுத்து ஒன்றாக ஏன் திருமணம் செய்திருக்கப் போகிறார்.//

இந்தக் கேள்வியோடு, இன்னொன்னும் சேர்த்துக்கலாம், எப்பொழுதும் தனது முன்னால் துணைவியர்களைப் பற்றி பொது ஊடககங்களுக்கு அவதூறாக பதிலுரைத்து (சம்பந்தப் பட்ட முன்னால் துணைவியர்களும் சரி, அவரும் சரி) தங்களது "பொது நாகரீகத்திலிருந்து" இறங்காத நிலையில், ஒருவர் திருமணம் சார்ந்து அப்படி ஒரு வார்த்தையை விடுகிறார் என்றால் ... நீங்க சொன்ன ...தோன்றியிருந்தால் ஒன்றுக்கு அடுத்து ஒன்றாக ஏன் திருமணம் செய்திருக்கப் போகிறார். யோசிக்க வைக்கும்...

//இதெல்லாம் அந்தந்த நேரத்தில் வாழ்க்கையின் அடிகள் கொடுக்கும் பாடம்.//

ஆமாம். அப்படியேத்தான். நாம் ஒவ்வொருவரும் எண்ணிக் கொள்வதில்லையா மரணங்கள் எங்கெல்லாம் நிகழும் கணம் தோரும், அதெல்லாம் நமக்கில்லையப்பா அப்படிங்கிற மாதிரிதான் இந்த வாழ்க்கையின் அடிகளும் அதன் பொருட்டான பட்டறிவுகளும்... இது போன்று தனி மனித சிந்தனைகள் பொருட்டு தற்காலிகமாக ஏற்படுத்திக் கொள்வதாக அமையும் வலிகள் அனைத்துமே தன்னைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள உதவும் 'தேடல்'களே! வாழ்க்கையை முழுமையா உணர்ந்து, வாழ்ந்து செல்லத் துடிக்கும் ஒருவனுடைய வாழ்க்கை என்றுமே 'வைப்ரண்டாக'த்தான் இருக்க முடியும்.

yes, indeed, the more you jump the greater the risk... just replace that jump with individuality ...

//அவர் பாடம் அவருக்கு; என் பாடம் எனக்கு...//

அதனை அவர் அவரின் (விழிப்புணர்வுத்) தேவைகளுக்கும், தேடல்களுக்கும், வளர் நிலைகளுக்கும் ஏற்ப கூட்டிக் கொள்ளலாம், குறைத்துக் கொள்ளலாம் பாடங்களை கற்றுக் கொள்வதின் பொருட்டு... :-)

உஷ்ஷ் யப்பா கண்ணக் கட்டுதா :))

மன்னிருச்சுங்க ரொம்ப பெரிசா போச்சய்யா ....

Thekkikattan|தெகா said...

வாங்க மணிகண்டன்,

முதல் வருக்கைக்கு நன்றி!

//மேற்க்கத்திய நாடுகளில் அம்பது சதவீதம் விவாகரத்தில் முடிகிறது. நம் நாட்டில் அப்படியா என்று ?//

இந்த சதவீதக் கணக்கிற்கு பயந்துதான் நம் சமூகம் ஒடுங்கிக் கிடக்கிறதோ? இல்லை இத்தனை ஆர்ப்பரிப்புகளுமா?. அடிப்படையாக பார்த்தால் நமது தெற்காசிய நாடுகள் அனைத்தும் shame based culture என்று கூறுவார்கள். அதாவது அடுத்தவன் வீட்டுப் பிரச்சினையை தன் வீட்டு பிரச்சினையா எடுத்துக்கிட்டு, விபத்தாக நேர்ந்த பிரச்சினையைக் கூட முகம் கொடுத்து வாழ்கிற குடும்பம் சுத்தமாக அழிகிற வரை கூடவே இருந்து தூற்றிச் சாகடிப்பது :-)).

//இலைமறை காய்மறையாக அனைத்தையும் பொத்தி பொத்தி வைத்தே பழக்கப்பட்டுவிட்டோம். ஏதோ ஒன்றுக்காக சேர்ந்து வாழும் கலாச்சாரம் நம்முடையது.//

ரொம்ப உண்மை. வெளியே தெரிஞ்சா வெட்கக் கேடு. யாரு செஞ்சது பெரிய மனுசன், பெரியப்பா, மாமா, தாத்தா, சித்தப்பா, ஒன்னுவிட்ட அவன், இவந்தானேன்னு பெத்த மகளையே சீரழிச்சிருந்தாலும் திரும்பவும் வெளிய தெரிஞ்சா வெட்கக் கேடு - இப்படி நினைச்சு நினைச்சுதான் உள்ளரேயே வீங்கி வெடிக்கிறோம் - இல்லையா மணி ;-).

//முதலில் அவரின் குற்றஉணர்ச்சி, நமது சமூகத்தின் பார்வை, மதிப்பீடு அனைத்தும் சேர்ந்து ஒருவரை எளிதாக வீழ்த்திவிடும்.//

குற்ற உணர்ச்சியெல்லாம் எல்லா சூழல்களிலும் நம் பார்வையைக் கொண்டு அடுத்தவர்கள் இப்படித்தான் எண்ணி சாக வேண்டுமென்ற collective thoughts வைச்சு சொல்ல முடியாது அது சமூகத்தின் வழியாக நாம் பார்ப்பது. சம்பந்தப்பட்ட நபர் மிகச் சரியாக புரிந்து கொண்ட பட்சத்தில் அது அப்படியாக எண்ண வேண்டுமென்ற அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

மற்றபடி, ஆமாம், சமூகம் எப்பொழுதும் "வீழ்த்த" காத்து நிற்கும், ஏனெனில் அது வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே மாரடிக்கும் ஒரு அமைப்பு. பிழைத்துக் கிடப்பவர்களை கடத்திச் சென்று அடுத்த நகர்வை நோக்கி நகரும் ஒரு இயக்கம். வலிமையுள்ளது தப்பிப் பிழைக்கணும்.

//கமலை போன்றவரை வைத்தோ, அவரின் வாழ்க்கைமுறையை வைத்தோ, சாதாரணமானவனின் வாழ்க்கை முறையை நிர்ணயிப்பது சரியாக வராது. //

உண்மை.

****************

நீங்க தருமிக்கு எழுதினதுக்கு அவரே பதில் சொல்லுவார், இல்லன்னா நான் அவருக்கு அளித்த மேலே உள்ள நீன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ண்ட பதிலில் உங்களுக்கு தேவையானது கிடைக்கலாம்.

நன்றி, வணக்கம்!

Anonymous said...

Who has paid the price for his success and to meet his demands.
Vani had written about Kamal. Sarika a talented actress up her career for the sake of Kamal and children. Would Kamal sacrifice his career for anyone.
How can anyone encourge this sort 'use and throw' attitude towards women. In fact persons like Kamal are dangerous as they hide their personal weaknesses and
lack of committment to others through many masks.

Thekkikattan|தெகா said...

Anony,

//Still what I want to ask is this, now when Kamal's views are held high because you need a brand name to project yor self.//

What did you exactly try to say in that line? I dont get it...

*What do you want me to express about "kushbu's" statement? If she has expressed as in my essay that every individual has their own right to live or explore their way - I should agree with her...

*if she had expressed related with AIDS awareness and the use of condoms, that is also ok with me and I am with her.

*Although, if she had said as if in an encouraging tone that it is ok to have pre-marital sex, in my view it is not palatable, since it is purely an individual choice, one can not dictate on others about ones liking. That is all about it, I have to say in that line. I am vaguely putting all that up because I forgot what she had exactly said...

//Though partners do not get along why should he project his daughters and Sarika's issue is it to jsutify himeself as falutless????//

hmmm... I understand what do you mean, however, I believe the daughters of theirs are also teenagers and they should also have voice of their own to express what they think about their mom and dad.

In my personal view, I dont believe in brain washing kids to influence in order to heighten the liking of one parent over the another. That is insidious to kid's, which will work negatively in the long run, when kids themselves start seeing the real picture and surely oneday will understand the truth and manipulative nature of the other parent.

Again I wanted to reinstate my stand on this matter, I am in no need of 'backing up' any cine figure. since I consider I myself I've grown out of all above those illusionary figures.

So, you are a "Pisasu" :-) , Understood your needs of anonymity, but you left me with lots of guess since the way you approached this matter in a more sensible way... my id is right there at my profile page. nandri.

மங்களூர் சிவா said...

/
நமது சமூகத்திற்கு இது போன்ற களவாணித் தனங்களை ஊக்குவிப்பதிலேயே அதிக அக்கறை இருப்பதாகப் படுகிறது. இந்த நிலையில் உண்மையாக, தைரியத்துடன் உள்ளதை உள்ளதாக எதிர் கொண்டு வாழும் மனிதர்கள் "சமூகத்தில் வெறுக்கத்" தக்கவர்களாக ஆகிப் போகி விடுகிறார்கள்?
/

கொடுமைதான்.

Thekkikattan|தெகா said...

//@ தெகா , அடுத்தவங்களைப்பத்தி பேசறதுல தான் எவ்வளவு சுகம் நம்ம மக்களுக்கு ..நல்லதோ கெட்டதோ பேசறதுக்கு விசயம் நம்ம வீட்டுல இருந்து எடுத்தா கடுப்பாகும். அதே அடுத்த வீடுன்னா சுவாரசியம்.. :)//

இத இதத்தான் எதிர்பார்த்தேன் ...

Thekkikattan|தெகா said...

//Vani had written about Kamal. //

that was a news to me.

mangalore siva,

padichacha :) ...

Anna said...

You have written it so well!

"இது என்ன மற்ற செம்மறிகள் குழுவிலிருந்து "ப்பா, ப்பா" என்று கதறுவது - எப்படி உனக்கு மட்டும் இது போன்ற தனிச் சிந்தனையின் பொருட்டு வாழ்க்கையை எடுத்துச் செல்லும் துணிவை யார் கொடுத்தது என்ற கழிவிரக்கத்தின் பால் வரும் கதறலாகப் படுகிறது எனக்கு."
Perfectly said. I've always thought that our strictly traditional cultural upbringing basically suppresses our ability to think. Thinking is one of human beings most basic and important skills. We are always taught since birth to follow not to lead, to accept whatever is being told without asking any questions. It's sad when people don't realise that if nobody had asked questions/challenged popular opinions or authority/thought outside the square we would still be living as nomad hunters and gatherers in jungles or much worse, we would still believe that the earth is flat and is the centre of the universe and many other ridiculous things.

I have come across so many situations where people just gossip away about other people's lives and have seen its effects on so many lives especially young ones. People on so many occasions have taken the wrong decision very quickly about particular problems in their lives just so that they could shut the society's mouth. Only to realise later that it's them not the society that has to live with the decision. The society would have moved on to make another person's life miserable.

Not sure whether anything I've written make any sense. These were just my 2 cents worth of random thoughts after reading your article.

Thekkikattan|தெகா said...

the analyst,

//Not sure whether anything I've written make any sense.//

have made lots of sense to the extend where removing the bedrock to show the core of lava underneath;full of facts!

I consider your write up is like summing up my essay by presenting yourself at the end of discussion :-). And I thank you for that.

//These were just my 2 cents worth of random thoughts after reading your article.//

and that is the one 'so called' the ripple effect(?) after reading an essay we are bound to say something about it, irresistible, huh :) ...

கலகலப்ரியா said...

சுட்டிக்கு ரொம்ப நன்றிங்க...

||தனிமனித சிந்தனையின் பொருட்டு எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் தீர்க்கமானவை. ஏனெனில் அத் தீர்வுகள் ஒரு குறிப்பிட்ட கால ஓட்டத்தின் வாயிலாக மிகத் தெளிவாக தனக்கு உகந்ததென எடுக்கப்பட்டது . ||

HATS OFF...

மீதி படிக்கறேன்..

கலகலப்ரியா said...

||இதனில் யாராவது ஒருவருக்கு அப்படி இணைந்து வாழ்வதில் விருப்பமில்லையெனில் மாட்டுத் தரியில் கட்டி வைத்து, சாப்பாடு போட்டு வளர்க்கும் பசுவிற்கு/காளைக்கு இணையாக வாழ்ந்து முடிப்பதில் யாருக்கு என்ன சுகம் கிட்டியிருக்க முடியும்? அதனின்றி, அதன் போக்கில் விட்டு அதன் தேடலை அறியத் தருவது, தனி மனித நிலையில் நாகரீகமற்ற செயலா? இதனில் எங்கிருந்து வருகிறோம், மூன்றாவது நபரும், சமூகமும்? அதுவும் சமபந்தப் பட்ட இருவருமே சூழ்நிலையின் கணத்தை அறிந்து பக்குவமாக விலகிச் சென்றிருக்கும் பட்சத்தில் இது என்ன மற்ற செம்மறிகள் குழுவிலிருந்து "ப்பா, ப்பா" என்று கதறுவது - எப்படி உனக்கு மட்டும் இது போன்ற தனிச் சிந்தனையின் பொருட்டு வாழ்க்கையை எடுத்துச் செல்லும் துணிவை யார் கொடுத்தது என்ற கழிவிரக்கத்தின் பால் வரும் கதறலாகப் படுகிறது எனக்கு. சாவு என்ற நிகழ்வு ஒரு முறைதான் நிகழ வேண்டும், தினமும் செத்து வாழ்வதனை எதனில் சேர்ப்பது?||

மிக அருமை... புரிந்து கொள்வார்களா..?!

பின்குறிப்பு: இந்தக் கமல் விடயம் வேறெங்கோ படித்திருக்கிறேன்... கமல் மற்றும் பிரகாஷ்ராஜ் அவர்களின் சுதந்திரமான மன ஓட்டத்தை நம் மக்கள் புரிந்து கொள்ள இன்னும் மூன்று நூற்றாண்டுகளேனும் ஆகும்...

(உங்க பக்கத்தை இவ்ளோ நாள் எப்டித் தவற விட்டேனென்று புரியவில்லை.. மீண்டும் நன்றி..)

எண்ணங்கள் 13189034291840215795 said...

தனிமனித சிந்தனையின் பொருட்டு எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் தீர்க்கமானவை. ஏனெனில் அத் தீர்வுகள் ஒரு குறிப்பிட்ட கால ஓட்டத்தின் வாயிலாக மிகத் தெளிவாக தனக்கு உகந்ததென எடுக்கப்பட்டது .//

எனக்கு உங்க கருத்து அனேகமாக ஒத்து போகின்றதோடு எப்படி அதே மனஓட்டம் என வியக்க வைக்கின்றது..


எனக்கு பல அனுபவம் கற்று தந்த பாடம்..

இப்படி ஆழ்ந்த சிந்தனையுடையவர்கள் , அதையும் அழகாக சொல்ல்க்கூடியவர்கள் பதிவுலகில் உள்ளார்கள் என்பது வியப்பு கலந்த மகிழ்ச்சி..

எண்ணங்கள் 13189034291840215795 said...

இரு ஒருமித்த எண்ண, கருத்துக்களை கொண்ட இரு வேறு தனி நபர்கள் //

ஒருமித்து இருக்கணும்னு கூட அவசியமில்லை.. அடுத்தவர் கருத்தை மதித்து ஏற்கும் பக்குவம் இருந்துவிட்டால்கூட போதுமானதுதான்..

Thekkikattan|தெகா said...

Thank you, Payanumum Ennangalum! :-)

எண்ணங்கள் 13189034291840215795 said...

உங்க பதிவை எம் குழுமத்தில் பகிர்ந்துள்ளேன் பலர் அறியணும்.

முடிந்தால் நீங்களும் இனி அனுப்பி வைக்கலாம் தமிழமுதம் குழுமத்துக்கு .

http://groups.google.com/group/tamizhamutham?hl=en

எண்ணங்கள் 13189034291840215795 said...

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தன்ர் கரணம் என்ப
--தொல்.

--
வேந்தன் அரசு

--

குழுமத்திலிருந்து பதில்..

Thekkikattan|தெகா said...

உங்க பதிவை எம் குழுமத்தில் பகிர்ந்துள்ளேன் பலர் அறியணும்.

முடிந்தால் நீங்களும் இனி அனுப்பி வைக்கலாம் தமிழமுதம் குழுமத்துக்கு //

Thanks for the invitation. Will try.

//பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தன்ர் கரணம் என்ப
--தொல் //

அருமை! எத்தனையே சிந்தனைகளை கொடுக்கிறது. இந்த இரு வரிகளும். நன்றி, பெற்று தந்தமைக்கு.

Related Posts with Thumbnails