Wednesday, September 16, 2009

எபோலா வைரஸ்: Ebola Virus(RNA)

காலையில ஒரு நண்பர் கூட பேசிட்டு இருக்கும் போது சொன்னாரு HIV வைரஸையே குழந்தையாக்கும் இன்னொரு புதுவிதமான வைரஸ் மனித சந்தைக்கு வந்திருப்பது தெரியுமான்னு. அது என்ன வைரஸ்ய்யா அப்படின்னு சுதாகரிச்சிக்கிட்டு கேட்டேன் அப்போ அவரு எபோலா வைரஸ் அப்படின்னார். குறைந்தது ஒரு நாளாஞ்சு முறை திரும்பத் திரும்ப சரியாத்தான் பேரை சொல்லுறாரா இல்ல எகோலை (Ecoli)யைத்தான் அப்படி மாத்திச் சொல்லுறாரான்னு உறுதிச் செஞ்சிட்டு, அவரு சொன்ன நோயின் அறிகுறிகளை கேக்க கேக்க ரொம்ப அதிர்ச்சியா வந்துச்சு.

சரின்னு கொஞ்சம் அந்த நோயைப் பத்தி தெரிஞ்சுக்குவோமேன்னு படிக்க உட்கார்ந்தப்போ அடே சாமீன்னு ஆயிப் போச்சு. அதனோட நோயின் தீவிரத்தை அறிந்து கொண்டே வரும் பொழுது, அவ்வளவு சீக்கிரமா மனிதனை சுருட்டிருதுங்க அந்த எபோலா வியாதி.

அந்த நோய் இப்போதைக்கு ஆஃப்ரிகா கண்டத்தில மட்டும் அதுவும் காங்கோ, கேபோன், சுடான், ஐவோரி கோஸ்ட் மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் மனிதர்களிடையே இருக்கும் நிலையில் அறியப்பட்டுள்ளது. எங்கிருந்து குறிப்பாக இந்த நோய் பரவியது என்று தெரியவில்லையாம், இருப்பினும் காங்கோ - குரங்குகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறதாம்.

இதன் பரவும் தன்மை மனிதர்களிடையே நேரடித் தொடர்புனாலேயோ அல்லது உடல் சுரப்புகளின் நேரடித் தொடர்பால் பரவுகிறது.

நான்கு வகையான எபோலா வைரஸ் இனங்கள் இருப்பதாகவும் அவற்றில் ஒன்று மட்டும் மனிதனுக்கு பரவும் வகை இல்லையெனவும் தெரிகிறது.

இதன் பரவும் தன்மை ஹெச் ஐ வி யைவிட பல மடங்கு எகிறுவதாக உள்ளது. இந்த நோய் ஒருவரை தொற்றியவுடனேயே உடலுக்குள் பல்கிப் பெருக ஆரம்பிக்கிறது. நான்கிலிருந்து ஆறு நாட்களுக்குள் இந்த நோயின் அறிகுறிகள் தட்டுப்பட ஆரம்பிக்கிறது. நோய் தொற்றிய நாளிலிருந்து அறிகுறி தெரிய வரும் இடைப்பட்ட நாட்களை அடைகாக்கும் பருவம் என்று கூறுகிறார்கள். அந்த அடைக்காக்கும் பருவம் இரண்டு நாட்களிலிருந்து 21 நாட்கள் வரை கூட நடைபெறலாமாம்.

எபோலாவின் அறிகுறிகளாக அறியப்படுவது சுரம், தொண்டைவலி, சக்தியற்ற நிலை, கடும் தலைவலி, தசை மற்றும் எலும்பு இணைப்புகளில் வலி, பேதி, வாந்தி, வறட்டு இருமல் மற்றும் வயிற்று வலி என பட்டியல் நீளுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ரொம்பவே அச்ச மூட்டியது நோய் அறிகுறி தட்டுப்பட ஆரம்பித்த இரண்டாவது வாரத்திற்குள்ளாகவே நாம் மண்டையை போடும் அளவிற்கு செல்லுவதுதான். முத்தாய்ப்பாக அந்த நிலையில் உள்ளும், புறமுமாக இரத்தம் வடிந்து இறக்க நேரிடுகிறதாம். எனவே, பெருமளவில் இரத்தம் இழப்பாலேயே இறுதியாக மரணிக்க நேர்வதாகப் படுகிறது.

இந்த எபோலா பத்தி இப்படியும் சொல்லிக்கிறாங்க, செப்டம்பர் 2001க்கு பிறகு பேரழிவைத் தரும் உயிரின ஆயுதமாக மனிதனால் பின் வரும் காலங்களில் இந்த வைரஸ் உருவாக்கப்படலாமென்று.

ஆத்தாடி என்னங்கடா நடக்குது, இந்த பூமியில, எய்ட்ஸ், எபோலா இப்போ பன்றிக் காய்ச்சல் - இப்படி போயிட்டே இருக்கே பட்டியல், ஜனத்தொகைய கண்ண மூடிக்கிட்டு பெருக்கிப்புட்டமோ, இயற்கையே கட்டுப்படுத்த ஆரம்பிச்சிருச்சா இல்ல மனுசப்பய ஆய்வுக் கூடங்கள்ளே ஏதாவது ஏடா கூடமா தயாரிச்சு வெளிய விட்றாய்ங்களா... ஒண்ணுமே புரியலப்பூ.Source: Ebola hemorrhagic fever (also known as Ebola) is a contagious illness caused by an infection with the Ebola virus. It is often fatal in humans, monkeys, gorillas, and chimpanzees. The virus was first recognized in the Democratic Republic of the Congo (formerly Zaire) in 1976. No case of this illness in humans has ever been reported in the United States. There is no cure; treatment usually consists of providing supportive care while the body fights the infection.

16 comments:

புருனோ Bruno said...

http://twitpic.com/equ2a
http://twitpic.com/equ4w
http://twitpic.com/equ9c

தருமி said...

அம்மாடி ...

:(

Thekkikattan|தெகா said...

வாவ்! டாக்டர் எனக்குத் தெரியாதே நீங்க இதனைப் பற்றி போஸ்டர் செசஷன் கொடுத்திருப்பது. இது எங்கே பண்ணீங்க, புரூனோ?

எனக்கு இதனைப் பற்றிய செய்தி இன்னிக்குத்தான் கேட்க நேர்ந்தது உடனே கொண்டு வந்திட்டேன் இங்கே.

நன்றி, டாக்டர்!

மங்கை said...

//இந்த எபோலா பத்தி இப்படியும் சொல்லிக்கிறாங்க, செப்டம்பர் 2001க்கு பிறகு பேரழிவைத் தரும் உயிரின ஆயுதமாக மனிதனால் உருவாக்கப் பட்டிருக்கலாமோ இந்த வைரஸ் என்று.///

இது தான் ரொம்ப அதி்ச்சியா இருக்கு..ரொம்ப பயங்கரமா இருக்கே.. பகிர்வுக்கு நன்றி

ம்ம்ம்ம்

கேகே said...

இப்பத்தான் புதுசா என்னன்னமோ வைரஸ் வருதே அதுல இதுவும் ஒன்னா? மருத்துவத்துக்கும் மீறிய கிருமிகள் பரவ ஆரம்பிச்சா இந்த உலகம் எங்கே போயி முடியுமோ ம்ம் பார்ப்போம்.

மருதநாயகம் said...

நம்ம ஆளுங்க காங்கோ நாட்டுக்கு போய் படம் எல்லாம் எடுத்துட்டு வர்றாங்களே

Thekkikattan|தெகா said...

//தருமி said...

அம்மாடி ...

:( //

yup... யம்மாடீயேவேதான்

மங்கை,

//இது தான் ரொம்ப அதி்ச்சியா இருக்கு..ரொம்ப பயங்கரமா இருக்கே.. பகிர்வுக்கு நன்றி

ம்ம்ம்ம்//

எனக்கும் அதிர்ச்சியா இருந்ததுனாலேதான் இங்கன கொண்டுவந்தேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏன் இப்படி பீதிய கிளப்பறீங்க..? இதுல பாருங்க அங்க போய் படமெடுத்துட்டு வராங்கன்னு வேற ..எரியற தீயில் எண்ணைய ஊத்துறாங்க..
:)

Thekkikattan|தெகா said...

//கேகே said...

இப்பத்தான் புதுசா என்னன்னமோ வைரஸ் வருதே அதுல இதுவும் ஒன்னா? மருத்துவத்துக்கும் மீறிய கிருமிகள் பரவ ஆரம்பிச்சா இந்த உலகம் எங்கே போயி முடியுமோ ம்ம் பார்ப்போம்//

பயப்படாதீங்க கேகே நாங்க எல்லாம் இருக்கோம்ல... :)

//மருதநாயகம் said...

நம்ம ஆளுங்க காங்கோ நாட்டுக்கு போய் படம் எல்லாம் எடுத்துட்டு வர்றாங்களே//

:)) இப்போ என்ன சொல்ல வாறீங்க, நம்ம ஆளுங்க படம் எடுக்க அங்கப் போனாய்ங்களா... எனக்குத் தெரியாதே எந்தக் குரூப்பூஊஊ :D

Raji said...

hello kaattan annachi...dont spread the panic among the readers. :) Ebola virus was not structured as a Biological weapon (still its not clear how it can used, becuase viruses cannot survive like bacteria outside a host). It can used as a bio weapon. the outbreak of ebola happened much earlier than 2001.

Thekkikattan|தெகா said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏன் இப்படி பீதிய கிளப்பறீங்க..? இதுல பாருங்க அங்க போய் படமெடுத்துட்டு வராங்கன்னு வேற ..எரியற தீயில் எண்ணைய ஊத்துறாங்க..
:)//

நான் எங்கங்க பீதிய கிளப்புறேன் படிச்சேன், கேள்விப்பட்டேன் ஒரு நம்பகமான இடத்தில இருந்து பகிர்ந்துகிட்டேன்.... மருதநாயகம் எத நினைச்சு சொன்னாருன்னு அவரு வந்து சொன்னாத்தான் உண்டு :)

Thekkikattan|தெகா said...

Raaji,

Thanks for your comment, as a microbiologist you can authentically comment on which micro organism can live within/out in a given environment/host/behavior etc.,

So, no argument with you - the case is dismissed :D

However, you are right about the bio-terrorism part, i missed reading some part of it - it said exactly it can be used as one in the future - as possibility ...

here in its own words:

...Bioterrorism and Ebola
In the aftermath of the events of September and October 2001, there is heightened concern that the Ebola virus might be used as an agent of bioterrorism. The deliberate release of Ebola virus is now regarded as a possibility, and the United States is taking precautions to deal with this possibility.

சீனு said...

//காலையில ஒரு நண்பர் கூட பேசிட்டு இருக்கும் போது சொன்னாரு HஈV வைரஸையே குழந்தையாக்கும் இன்னொரு புதுவிதமான வைரஸ் மனித சந்தைக்கு வந்திருப்பது தெரியுமான்னு.//

ஏங்க. இந்த வைரஸ் பத்தி நான் ஸ்கூல் படிச்சப்பவே தினமலரில் படிச்சிருக்கேனே(15 வருடம் முன்பு)!!! தென் ஆப்ரிக்காவில் உருவான தாக படித்ததாக நியாபகம்.

Thekkikattan|தெகா said...

//ஏங்க. இந்த வைரஸ் பத்தி நான் ஸ்கூல் படிச்சப்பவே தினமலரில் படிச்சிருக்கேனே(15 வருடம் முன்பு)!!! தென் ஆப்ரிக்காவில் உருவான தாக படித்ததாக நியாபகம்.//

ஓ! அப்படியா? இவ்வளவு வருஷங்கள் உங்களுக்குள்ளரயே போட்டு வைச்சிக்கிட்டீங்களே... ரொம்ப லேட்டுங்க தேடித் தேடிதான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. கேள்விப்பட்டவுடன் ஓடி வந்து பகிர்ந்துக்கணுமின்னு தோனுச்சு, பண்ணிக்கிட்டேன் இத படிக்க வாய்ப்பு கிடைச்ச நிறைய பேருக்கு புதுச் செய்தியாத்தான் இருந்திருக்குமின்னு நினைக்கிறேன்.

தினமலர் இவ்வளவு informativeஅ இருந்த தினசரியாங்க ;-)?

இது மாதிரி ஏதாவது இன்னும் உங்களுக்குள்ளர வைச்சிருந்தா எங்ககிட்டயும் சொல்லுங்க தெரிஞ்சுக்குவோம் :) .

பழமைபேசி said...

மூத்த பதிவருக்கு வணக்கம்!

Thekkikattan|தெகா said...

//பழமைபேசி said...

மூத்த பதிவருக்கு வணக்கம்//

பழம ஏன், ஏன் இந்தக் கொலவெறி :)) . நான் இங்கேதான் இருக்கேன் உங்க வீட்டில புதுசா ஏதும் பொங்கிப் போடல(பதிவு) அதான் அந்தப் பக்கம் வரலை :D. அதுக்காக இப்படியா?

Related Posts with Thumbnails