என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Wednesday, September 30, 2009
தீவிரவாதத்திற்கு பொறுப்பாளிகள் யார்?
Posted by Thekkikattan|தெகா at 9:37 AM 21 comments
Labels: சமூகம், தீவிரவாதம், மதங்களும் நானும், வன்முறை
Thursday, September 24, 2009
Wednesday, September 16, 2009
எபோலா வைரஸ்: Ebola Virus(RNA)
காலையில ஒரு நண்பர் கூட பேசிட்டு இருக்கும் போது சொன்னாரு HIV வைரஸையே குழந்தையாக்கும் இன்னொரு புதுவிதமான வைரஸ் மனித சந்தைக்கு வந்திருப்பது தெரியுமான்னு. அது என்ன வைரஸ்ய்யா அப்படின்னு சுதாகரிச்சிக்கிட்டு கேட்டேன் அப்போ அவரு எபோலா வைரஸ் அப்படின்னார். குறைந்தது ஒரு நாளாஞ்சு முறை திரும்பத் திரும்ப சரியாத்தான் பேரை சொல்லுறாரா இல்ல எகோலை (Ecoli)யைத்தான் அப்படி மாத்திச் சொல்லுறாரான்னு உறுதிச் செஞ்சிட்டு, அவரு சொன்ன நோயின் அறிகுறிகளை கேக்க கேக்க ரொம்ப அதிர்ச்சியா வந்துச்சு.
சரின்னு கொஞ்சம் அந்த நோயைப் பத்தி தெரிஞ்சுக்குவோமேன்னு படிக்க உட்கார்ந்தப்போ அடே சாமீன்னு ஆயிப் போச்சு. அதனோட நோயின் தீவிரத்தை அறிந்து கொண்டே வரும் பொழுது, அவ்வளவு சீக்கிரமா மனிதனை சுருட்டிருதுங்க அந்த எபோலா வியாதி.
அந்த நோய் இப்போதைக்கு ஆஃப்ரிகா கண்டத்தில மட்டும் அதுவும் காங்கோ, கேபோன், சுடான், ஐவோரி கோஸ்ட் மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் மனிதர்களிடையே இருக்கும் நிலையில் அறியப்பட்டுள்ளது. எங்கிருந்து குறிப்பாக இந்த நோய் பரவியது என்று தெரியவில்லையாம், இருப்பினும் காங்கோ - குரங்குகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறதாம்.
இதன் பரவும் தன்மை மனிதர்களிடையே நேரடித் தொடர்புனாலேயோ அல்லது உடல் சுரப்புகளின் நேரடித் தொடர்பால் பரவுகிறது.
நான்கு வகையான எபோலா வைரஸ் இனங்கள் இருப்பதாகவும் அவற்றில் ஒன்று மட்டும் மனிதனுக்கு பரவும் வகை இல்லையெனவும் தெரிகிறது.
இதன் பரவும் தன்மை ஹெச் ஐ வி யைவிட பல மடங்கு எகிறுவதாக உள்ளது. இந்த நோய் ஒருவரை தொற்றியவுடனேயே உடலுக்குள் பல்கிப் பெருக ஆரம்பிக்கிறது. நான்கிலிருந்து ஆறு நாட்களுக்குள் இந்த நோயின் அறிகுறிகள் தட்டுப்பட ஆரம்பிக்கிறது. நோய் தொற்றிய நாளிலிருந்து அறிகுறி தெரிய வரும் இடைப்பட்ட நாட்களை அடைகாக்கும் பருவம் என்று கூறுகிறார்கள். அந்த அடைக்காக்கும் பருவம் இரண்டு நாட்களிலிருந்து 21 நாட்கள் வரை கூட நடைபெறலாமாம்.
எபோலாவின் அறிகுறிகளாக அறியப்படுவது சுரம், தொண்டைவலி, சக்தியற்ற நிலை, கடும் தலைவலி, தசை மற்றும் எலும்பு இணைப்புகளில் வலி, பேதி, வாந்தி, வறட்டு இருமல் மற்றும் வயிற்று வலி என பட்டியல் நீளுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ரொம்பவே அச்ச மூட்டியது நோய் அறிகுறி தட்டுப்பட ஆரம்பித்த இரண்டாவது வாரத்திற்குள்ளாகவே நாம் மண்டையை போடும் அளவிற்கு செல்லுவதுதான். முத்தாய்ப்பாக அந்த நிலையில் உள்ளும், புறமுமாக இரத்தம் வடிந்து இறக்க நேரிடுகிறதாம். எனவே, பெருமளவில் இரத்தம் இழப்பாலேயே இறுதியாக மரணிக்க நேர்வதாகப் படுகிறது.
இந்த எபோலா பத்தி இப்படியும் சொல்லிக்கிறாங்க, செப்டம்பர் 2001க்கு பிறகு பேரழிவைத் தரும் உயிரின ஆயுதமாக மனிதனால் பின் வரும் காலங்களில் இந்த வைரஸ் உருவாக்கப்படலாமென்று.
ஆத்தாடி என்னங்கடா நடக்குது, இந்த பூமியில, எய்ட்ஸ், எபோலா இப்போ பன்றிக் காய்ச்சல் - இப்படி போயிட்டே இருக்கே பட்டியல், ஜனத்தொகைய கண்ண மூடிக்கிட்டு பெருக்கிப்புட்டமோ, இயற்கையே கட்டுப்படுத்த ஆரம்பிச்சிருச்சா இல்ல மனுசப்பய ஆய்வுக் கூடங்கள்ளே ஏதாவது ஏடா கூடமா தயாரிச்சு வெளிய விட்றாய்ங்களா... ஒண்ணுமே புரியலப்பூ.
Source: Ebola hemorrhagic fever (also known as Ebola) is a contagious illness caused by an infection with the Ebola virus. It is often fatal in humans, monkeys, gorillas, and chimpanzees. The virus was first recognized in the Democratic Republic of the Congo (formerly Zaire) in 1976. No case of this illness in humans has ever been reported in the United States. There is no cure; treatment usually consists of providing supportive care while the body fights the infection.
Posted by Thekkikattan|தெகா at 10:34 AM 16 comments
Labels: அறிவியலும் நானும், உலகம், நோய்
Thursday, September 10, 2009
உண்மையின் விலை - கமல்ஹாசன்?
என்னய அடிக்கடி கோதாவில இறக்கிவிடுகிற ஆட்களில் ப்ரகாஷ்ராஜ்-க்கும், கமலுக்கும் முக்கிய பங்கு உண்டுன்னு நினைக்கிறேன். நம்ம மக்கள் ஒவ்வொரு முறையும் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் வாழ்வுச் சூழலில் எடுத்த முடிவுகளைக் கொண்டு ஏதாவது சொல்ல நேர்ந்தால் உடனே வாரி தூற்றுவதும், தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இது அச்சு அசலாக செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் முன்னெடுத்து நடந்து செல்லும் ஒரு ஆட்டின் கையில் தன் வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு பின்னாலேயே நடந்து செல்லும் கூட்டத்தினை ஒத்ததாகப் படுகிறது.
வலியச் சென்று ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி கேட்டறிய ஆர்வப் படுகிறோம், அவரும் குடைச்சல் தாங்காமல் அவருடைய அறிதலின் பொருட்டு எப்படியாக ஒரு விசயத்தைப் பார்க்கிறார் என்று முன் வைக்கிறார். அதனை கேட்டுவிட்டு அரைகுறையாக புரிந்து கொண்டு 'குய்யோ, முறையோ' என்று வானத்திற்கும், பூமிக்கும் எகிருவதால் என்ன லாபமாக பெறுகிறோம்? செம்மறி ஆடுகளின் கூட்டத்தில் தானும் ஒரு பங்காளன் என்பதனைக் காட்டிக் கொள்வதனைத் தவிர, அதிலிருந்து தனிப்பட்ட முறையில் சிந்திப்பதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தால் ஒன்றுமே கிடைப்பதாக இல்லை.
அது போன்ற குழுமத்திலிருந்து ஒருவரை தனிமைப் படுத்தி, அந்த அனுபவத்தைப் பெற்ற மனிதனின் ஒத்த சூழலை வழங்கி நீ எப்படியாக 'எதிர்வினை' செய்திருப்பாய் என்று கேட்கும் நிலையில் கண்டிப்பாக சிறிதே யோசிக்கும் நிலையில் பதில் வேறாகத்தான் இருக்க முடியும். இதுவே ஒரு குழுச் சிந்தனைக்கும் தனிமனித சிந்தனைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்.
தனிமனித சிந்தனையின் பொருட்டு எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் தீர்க்கமானவை. ஏனெனில் அத் தீர்வுகள் ஒரு குறிப்பிட்ட கால ஓட்டத்தின் வாயிலாக மிகத் தெளிவாக தனக்கு உகந்ததென எடுக்கப்பட்டது . சமூக கட்டமையுடன் நிர்பந்தங்களை மட்டுமே அதன் நீட்சியாக இயங்கி வரும் ஒரு சமூகத்தில், தன்னுடைய சுய சிந்தனையின் பொருட்டு தன் சூழலுக்கேற்ப தீர்வையும் எடுத்து, தைரியமாக முகம் கொடுத்து வாழ்ந்து காட்ட வேண்டுமெனில் அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். செம்மறிக் குழுவில் ஒரு ஆடாக இருப்பதனில் அவ்வளவு பெரிய அளவில் எந்த ஒரு தனித் திறமையும் தேவைப்படுவதில்லை. அதே நேரத்தில் எதனையும் பெரிதாக தனிப்பட்ட முறையில் விட்டுச் செல்வதும் அங்கே நடைபெறுவதில்லை.
தன்னிலை அற்ற நிலையிலேயே அங்கே ஒருவரின் வாழ்வு நகர்ந்து முடிந்திருக்கும். அந்த நகர்வு மிக்க துன்பங்களுக்கிடையேயாகவோ, மன வெறுமைகளுக்கிடையேயாகவோ கூட இருந்திருக்கலாம், அல்லது குழு நிர்பந்தத்தின் பேரில் யாருக்காகவோ வாழ்ந்து முடிந்திருக்கலாம். இவைகளுக்கான தற்காலிக தப்பித்தலாக இடம் பெயர்வு பொருளாதாரத் தேவை, வேலை வாய்ப்பு என்று அமைத்துக் கொள்வதும் இங்குதானே அதிகமாக நடந்தேறுகிறது. அங்கே இழப்பு நேர்ந்தது என்னவோ அந்த தனிப்பட்ட நபருக்குத் தானே ஒழிய குழுவிற்கல்ல. ஆனால், அந்த நிர்பந்தத்தின் பொருட்டு வாழ்ந்து முடித்து விட்டு, ஏதோ அதனை ஒரு சாதனையாக பறைசாற்றி கொள்வதனை எந்த கணக்கில் சேர்ப்பது.
சரி, விசயத்தின் ஆழத்திற்கு செல்வோம். வளர்ந்தே முடித்து விட்டோமென்று கூறிக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவில்தான் எத்தனை எத்தனை கலாச்சார காவலர்கள். தங்கும் விடுதிகளில், கடற்கரை ஓரங்களில், கங்கை நதியோரத்திலென எங்கு திரும்பினும் கலாச்சாரம் காவல் காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் இந்த நிலைமை? காற்று நிரம்பிய ஒரு ரப்பர் பந்தை எவ்வளவு ஆழத்திற்கும் எடுத்துச் சென்று அதனை அமிழ்த்தி வைத்தாலும் அது விடுவிக்கப் படும் பொழுது அதே வேகத்தில் முட்டி வெடித்து வெளிக் கிளம்புகிறது, அது போலவும்தானே இந்த ஆசைகளும். விரும்பியவர்கள் தன் தேடலாக சென்று கண்டறிய வேண்டிய விசயங்களை எது போன்ற குமிழ்களைக் கொண்டு மூடி வைத்தால் வெடித்துக் கிளம்பாமல் இருக்க வைக்க முடியும்? அது போன்ற சமூக மூடிகள்தான், இது போன்ற வணங்கும் திருத்தளங்களாகட்டும், பயணிக்கும் பேருந்துகளிலிருந்து புகைவண்டிப் பயணங்களிலெல்லாம் பீரிட்டு வெளிக் கிளம்ப வைக்கும் ஒரு மூலமாக அமைகிறதா?
திருமணம் என்ற "இணைப்பு" எதன் பொருட்டாக அமைகிறது? இரு ஒருமித்த எண்ண, கருத்துக்களை கொண்ட இரு வேறு தனி நபர்கள் ஒன்றாக இணைந்து நல்ல நண்பர்களாக பரஸ்பரமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக மகிழ்ந்து/துன்பப்பட்டு வாழ்க்கையை பட்டுணர்ந்து செல்வதற்கென அமைத்துக் கொடுக்கும் ஒரு சமூக அமைப்பு தானே,அது? அதுவே அடிப்படையாக இருக்கும் பொழுது எப்படி அந்த இருவரில் ஒருவர் மட்டும் சுத்தமாக மன ரீதியாக மரணித்து வாழ்வதில் யாருக்கு லாபம்? லாபமடைவதனைப் போல வாழ்ந்து கொண்டிருப்பவரே கூட இறுதியில் தான் ஏமாந்தே வாழ்வதாக உணரும் காலமும் வருகிறது.
எப்படியெனில், அந்த நபரின் சுயநலத்திற்கென தன்னை தொலைத்து விட்டு அரை மனதாக வாழ்ந்திருக்கும் இவரும் முழுமையாக வாழ்ந்திருக்கவில்லை, அதே நேரத்தில் அந்த பலன்களைப் பெற்ற சுயநலமி தன்னுடன் மிகவும் இணக்கமாகவும், முழுமையான புரிதலுடனும் வாழ்ந்திருக்க வேண்டிய நண்பர்/நண்பியை இப்படி அடாவடியாக இரும்புக் கரத்தின் கீழ் அடக்கி ஆண்டிருக்கிறோமே என்று நினைத்து வெட்கி ஒரு நாள் அவரும் மரணிக்கக் கூடும்; தன்னால் ஒரு நபரைக் கூட உண்மையாக நேசிக்க வைக்க முடியவில்லையே என்று.
இந்த நிலையில் அன்பு எனற பரஸ்பர புரிதலின் பொருட்டு கூடும் இருவர் எந்த நிர்பந்தமும் தன்னை கட்டாயப்படுத்தி வைக்காத நிலையில் தொடர்ந்தும் விரும்பியே கூடவே இருப்பதே உண்மையான காதலாகவும், அன்பாகவும், புரிதலாகவும், தெளிதலாகவும் இருக்கக் கூடும். இது இறக்கைகள் சிதைக்கப்பட்டு கூண்டுக்குள் வைத்து அழகினை ரசித்து வரும் ஒரு கிளி மனப்பான்மைக்கும், அதே கிளியை இறக்கைகளுடனும் பறந்து திரிவதற்கான எல்லா உரிமைகளையும் கொடுத்து மீண்டும், மீண்டும் விரும்பியே வளர்ப்பவரிடத்தே வருவதற்கும் ஒத்த வித்தியாசங்களைக் கொண்டது. இதில் எந்த நிலையில் கட்டற்ற அன்பு வெளிப்படுத்தப் படுகிறது? எதனில் நிறைவு கிட்டிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததாக அறிந்து கொள்கிறோம்.
இதனில் யாராவது ஒருவருக்கு அப்படி இணைந்து வாழ்வதில் விருப்பமில்லையெனில் மாட்டுத் தரியில் கட்டி வைத்து, சாப்பாடு போட்டு வளர்க்கும் பசுவிற்கு/காளைக்கு இணையாக வாழ்ந்து முடிப்பதில் யாருக்கு என்ன சுகம் கிட்டியிருக்க முடியும்? அதனின்றி, அதன் போக்கில் விட்டு அதன் தேடலை அறியத் தருவது, தனி மனித நிலையில் நாகரீகமற்ற செயலா? இதனில் எங்கிருந்து வருகிறோம், மூன்றாவது நபரும், சமூகமும்? அதுவும் சமபந்தப் பட்ட இருவருமே சூழ்நிலையின் கணத்தை அறிந்து பக்குவமாக விலகிச் சென்றிருக்கும் பட்சத்தில் இது என்ன மற்ற செம்மறிகள் குழுவிலிருந்து "ப்பா, ப்பா" என்று கதறுவது - எப்படி உனக்கு மட்டும் இது போன்ற தனிச் சிந்தனையின் பொருட்டு வாழ்க்கையை எடுத்துச் செல்லும் துணிவை யார் கொடுத்தது என்ற கழிவிரக்கத்தின் பால் வரும் கதறலாகப் படுகிறது எனக்கு. சாவு என்ற நிகழ்வு ஒரு முறைதான் நிகழ வேண்டும், தினமும் செத்து வாழ்வதனை எதனில் சேர்ப்பது?
கமல் சொன்ன ...“ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவதில் சங்கடங்கள் ஏற்பட்டன. ‘இந்தக் குழந்தைகளின் தாயார் இவர்’ என்று சொன்னால் அதுமட்டும் போதாது. எனது மனைவி யார்? என்றும் கேட்டனர். எனவேதான் சரிகாவை துணைவியாக ஆக்கிக் கொண்டேன்... இந்தக் கூற்று மிகவும் தவறாக அப்படியே ரா' வாக பார்க்கப் படுகிறது, எனக்கு அதனில் நமது சமூகத்தின் பொருட்டு அவருக்கு இருக்கும் மன வருத்தம் தெரித்துக் கிடப்பதனைத்தான் காட்டுகிறது. நமது சமூகம் திருமணங்களை இப்படி மலிவு படுத்தி 'விடுதி'களில் அறை எடுப்பதற்கு என்ற நிலைக்கு அவ்வளவு பெரிய இணைப்பை தரம் தாழ்த்தி பார்க்கக் கூடிய ஒரு மன நிலைக்கு வர வைத்திருக்கிறதே என்ற அங்கலாய்ப்பு அதனில் பொதிந்து கிடக்கிறது. அங்கே புற அடையாளமே முன் நிறுத்தப் படுகிறது. இருவர் மனமொத்து வாழ்ந்து குழந்தைகளையும் பெற்று வாழும் மனப் பொருத்தத்தை விட இந்த வெளிப்புற சம்பிரதாய "கால் கட்டா" இருவரை ஒட்டி வைத்திருக்கிறது என்ற "சமூக மலிவு எண்ணத்தை" ஒரு அடையாளமாக அவர் வைத்துக் கூறியிருக்கக் கூடும்.
கடைசியாக ஒரு கேள்வி "கற்பு" என்பது யாது, அது எங்கே இருக்கிறது? பிறர்மனை நோக்காமலும், மனதிலும் இச்சை கொண்டு எதிர் பாலினத்தவரை பார்க்காமல் இருப்பதுவுமே நடுநிலை மாறா கற்பு எனில் நாம் பலமுறை அதிலிருந்து நழுவியவர்களாக உணர நேரிடும். இந் நிலையில், நம்மைப் போன்ற சமூகத்தில் பிறர்மனை நோக்கல் என்பது அத்தோடு நின்றுவிடுவதுமில்லை. லைசென்ஸ்டு திருமணமானவர் ஆனால் வெளியில் இலைமறை காயாக "வைத்துக் கொள்ளும்" நிலையும் பார்க்கிறோம். எனவே, நமது சமூகத்திற்கு இது போன்ற களவாணித் தனங்களை ஊக்குவிப்பதிலேயே அதிக அக்கறை இருப்பதாகப் படுகிறது. இந்த நிலையில் உண்மையாக, தைரியத்துடன் உள்ளதை உள்ளதாக எதிர் கொண்டு வாழும் மனிதர்கள் "சமூகத்தில் வெறுக்கத்" தக்கவர்களாக ஆகிப் போகி விடுகிறார்கள்? என்ன கொடுமையிது சரவணா!
Posted by Thekkikattan|தெகா at 9:46 AM 50 comments
Labels: சமூகம், சீரழிவு, தெளிதல் சார்ந்து, மொக்கை
Wednesday, September 09, 2009
மெளனாசை
Posted by Thekkikattan|தெகா at 8:28 AM 5 comments
Labels: கவிஜா