மக்கள் வேக வேகமாக ட்விட்டுகளின் வழியாக தங்களின் ஆதங்கத்தை பதிந்து கொண்டிருக்கிறார்கள். நானும் ட்விட்டி கொண்டிருக்கும் பொழுது நம்ம மக்கள் மீனவர்களை காப்பாற்றுங்கள் என்னும் அமைப்பின் கீழ் இயங்கும் தளத்தில் ஒரு கட்டுரையை யாரோ எழுதி அங்கு வெளியிட்டுருந்தார்கள்.
அந்த கட்டுரை மிக்க கரிசனத்துடன் ஆரம்பிப்பது போல ஆரம்பித்து எல்லாமே நம்ம தப்பு. இலங்கை கப்பற்படையின் மீது எந்த தப்புமே இல்லங்கிற மாதிரி முழு பூசணிக்காயையும் மறைத்து அவ்வளவு அழகாக எழுதியிருக்கார். படிச்சா, நீங்களும் நம்பி விட வாய்ப்பு இருக்கு. அந்த கட்டுரையில் சொல்லி இருக்கு விடுதலை புலிகளை மீனவர்கள் ஒரு காலத்தில் ஆதரித்ததால், இலங்கை இவர்களை வெறுப்பதற்கு எல்லா முகாந்திரமும் இருப்பதாக சப்பையும் கட்டி இருக்கிறார். ஒரு இடத்தில கூட கச்சை தீவை நாம ‘தாரை’ வார்த்துக் கொடுத்திருக்க கூடாதுன்னு ஃபீல் பண்ணவே இல்லை. இன்னும் என்னன்னவோ உளறி கொட்டப்பட்டிருக்கிறது நீங்களே படிச்சிக்கோங்க இங்க...
படிச்சவுடன் எனக்கு நியாயமாக தோன்றிய பதிலையும், கேள்வியையும் அங்கயே பதிஞ்சிருக்கேன். என்னுடன் தருமியும் கூடவே இருந்ததால் அவரிடமும் அந்த இணைப்பை கொடுத்து படிக்க வைத்ததின் பெயரில் அவரும் பதில் கொடுத்திருக்கார். இப்போ இருவரின் பதிலையும் இங்கு கொடுக்கிறோம், நீங்க அந்த கட்டுரையை படிச்சிட்டு வாசிச்ச மேட்டர் புரியும். நன்றி!
இது என்னோட பின்னூட்டம் அங்கே இட்டது:
A well written essay with lots of 'bullet' points darted against Indian fisherman interest. So, unregulated, over exploitation of harvest is happening in Indian waters by Tamil fisherman in particular. Therefore, in order to regulate give it to open market so that small scale fisherman can completely be wiped out one day in the future from their only known profession which is fishing for their livelyhood.
Anyway, here is my question - in the first place way before GOI handed down "the Kacchatheevu" to Sri Lanka, did they study the pros and cons of Indian fisherman loss due to signing off the island? Did they conduct any general consensus and dialogues with Indian east coast fisherman?
Why is that only our side of population should reduce their needs, lose their lands and yet get blamed with surmounting needs of our own population. I do not understand your foreign policy, with such a huge bulging population of ours we go ahead give away the very little land(the island) we have, however it is also geopolitically strategical hot spot!! Still you are trying to justify; ignoring the facts where and how we strategically failed. I believe we pay a big price geopolitically one day by losing that piece of land! Shame on us!!
இது தருமியோட பின்னூட்டம் அங்கே இட்டது:
I very much consider this post a badly timed one. It tries to side track people from the ISSUE that is being discussed now – it is all about the life and safety of OUR fishermen and NOT on the economic cobwebs between the nations.
The economic and trade affairs talked about in the essay – a very inconvenient place to discuss it here. Actual problem is entirely different. The author very CONVENIENTLY forgets the naked and vulgar truth before us now.
//SL considers them as enemies//
Yes .. It is very natural with the relationships between Tamils and Singhalese. The natural enmity is there for long. Everyone knows it. Present problem is hatched only by this enmity.
//if our fishermen are going to SL borders to catch then its definitely wrong,/
GOOD LOGIC. But how many Singhalese fishermen were arrested/ tortured/ Killed/ maimed by indian coast guard so far? How come on one side you have so much brutality? Are the fishermen of Sri Lanka are saints not entering indian border? And above all, on whose side are you? Are you talking for the 500 plus killed Tamil fishermen or their killers, I wonder?
//“rettai madi valai”?//
No baby on earth would imagine that all these are all due to the “rettai madi valai”
//we also helped LTTE which is legitimate to us but terrorists to SL//
GREAT. You have hit the bull’s eye at last!
//mistake is very much on our side too.//
YES… we have an inefficient govt at the centre and state and many fickle minded people like you among us.
//we can never resolve this problem by a Defense mechanism.//
should we follow our great gandhian dharma??!! Shall we start some SATYAGRAHA?! And our kind-hearted rajapakshae will settle all the problems smoothly!!
இந்தக் கட்டுரையை எழுதியவர் நீரோவிற்கு உறவினரா? வீடு இங்கே தீப்பிடித்து எரிகிறது. இவர் பொருளாதாரம் பேசுகிறார்!
11 comments:
மக்களே படிச்சிட்டு அவங்கவங்க கருத்தை இங்கும் அங்கும் தெரிவியுங்க. அவர் நம்மோட எண்ணம் இது பொருத்து என்னான்னு பொறுப்பா கேட்டிருக்கார். சோ, அவசியம் உங்க கருத்தை முன் வைங்க. நன்றி!
இதற்கு நான் ட்விட்டரில் ஆற்றிய எதிர்வினைகள்:
- Alternate perspective என்று ஒரு சுட்டியைப் படிக்க நேர்ந்தது. கடலுக்குள் எல்லைகள் செல்லுபடியாகா! #tnfisherman
- மீன் பிடித்தலும் எல்லை கடந்த வர்த்தகம்தான். நமக்கு (IT, mfg) ஒரு நியாயம் மீனவனுக்கு ஒரு நியாயமா? #tnfisherman
- நாட்டு எல்லைக்குள்தான் தொழில் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை உ-ம் Airtelல்லிடம் கூறிப் பாருங்கள்? #tnfisherman
- சென்னையிலேயே Damro, Dilma என்று கடை பரப்பிக் கொண்டிருக்கிறான் சிங்களன். அவனுக்கு எல்லைக் கட்டுப்பாடெல்லாம் கிடையாதா? #tnfisherman
அங்கே பதிந்தது இங்கேயும்:
தருமியின் பதிவைப் பார்த்து இங்கே வர்றேன். புரியலங்க, //I have no proofs to back my stance// எப்படி இந்த பதிவை எழுதினீங்க? குறிப்பா, கீழ்கண்ட செய்திகளை உங்க பதிவில் எழுதுவதற்கான தரவுகள் இல்லையென்றால், இந்த பதிவை அகற்றி விடுவது மனிதச் செயல். பதிவை மட்டும் செய்து விட்டு, பின்னூட்டங்களின் நியாய அநியாயங்களை யாரும் கவனிக்காமல் போகக் கூடாதல்லவா?
1. ஸ்ரீலங்காவின் மீனவர்கள் ரெட்டை மாடி வலையை பயன்படுத்துவதில்லை என்பதற்கு தரவு எங்கே?
2. இந்திய மீனவர்கள் மட்டும் எல்லை கடக்கிறார்கள்; ஸ்ரீலங்காவின் மீனவர்கள் எல்லை கடப்பதில்லை என்றால், அவர்கள் இப்படி எல்லை கடக்காமல் இருக்க என்ன மாதிரியான தொழில்நுட்பம் பயன்படுத்துகிறார்கள்?
3. இந்திய மீனவர்களைப் போல, ஸ்ரீலங்காவின் மீனவர்கள் இப்படி கொலை செய்யப்படாமல் இருப்பதற்கு இரண்டே காரணங்கள் இருக்கமுடியும்: (அ) இந்தியாவுக்கு மற்ற நாட்டின் மீனவர்களை இப்படி மீண்டும் மீண்டும் கொன்ற வரலாறு இருந்ததில்லை, எனக்குத் தெரியாமலும் இருக்கலாம்; அல்லது (ஆ) ஸ்ரீலங்கா மீனவர்கள் எல்லையைத் தாண்டுவதே இல்லை. இப்படியாகவா நீங்கள் உங்கள் கருத்தை நீட்சிப்படுத்தினீர்கள்? இல்லை தரவுகள் உண்டா?
4. ஸ்ரீலங்கா கடல் எல்லைக்குள் இருக்கும் மீன்வளம் பற்றி நீங்கள் குறிப்பிட்டதால், என் கேள்வியும் கச்சத் தீவைப் பற்றியதே. நீங்கள் கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி ஏன் குறிப்பிடவில்லை?
Quote of the Day - Friends!!
In the End, we will remember not the words of our enemies, but the silence of our friends - MartinLutherKing #tnfisherman
Fellow Readers, express your voice - do say something what have you thought about that justification.
அன்பின் தெகா - தமிழ் மணம் - இண்ட்லி - மனதார வாக்கலீத்தேன் - வாசகர் பரிந்துரையில் வந்து விட்டது. நிறக ... விவாதிக்க வேண்டிய நேரம் இதுவல்ல - இருப்பினும் நண்பர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள் - எதிர் கருத்து கூறுகிறார்கள் . நாம் சற்றே அமைதியாக இருக்கலாம். பெட்டிஷன் கையெழுத்தாகட்டும். ஆவன் செய்யட்டும். சில நாட்கள் கழித்து விவாதங்களைத் தொடரலாம் . இப்பொழுதே பிரச்னை திசை திரும்ப நாமும் காரணமாக இருக்கவேண்டாம். புரியும் என நினைக்கிறேன். பொறுத்திருக்க வேண்டுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
I think the attacks are racistic!
மாற்று கருத்து இருக்க வேண்டியது தான். அதுக்காக இப்படியா?
ஃuote of the Day - Friends!!
In the End, we will remember not the words of our enemies, but the silence of our friends - MartinLutherKing
REPEAT - GOOD one
தெகாதொடக்கம் முதல் உங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றேன். உங்கள் கொந்தளிப்பு எனக்கு புரிகின்றது.
கச்சத்தீவு இந்திய மீனவரும்
வி சூரியநாராயன் மற்றும் கே.முரளிதரன்
ஏறக்குறைய ஆய்வுக்கட்டுரைகள் போல் அடித்து துவைத்து காயப்போட்டு இருப்பார்கள்.
134 பக்கம். இதில் அந்தந்த காலகட்டத்தில் இதில் சம்மந்தபபட்ட அரசியல் வியாதிகளின் கேப்மாரித்தனம் வரைக்கும் விலாவாரிகயாக விவரிக்கப்பட்டுள்ளது. நான் இதை படித்து உள்வாங்கி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது.
மீனவர்கள் அவர்களின் பிரச்சனை உயிர் இழப்புகள் போன்றவற்றை விட நான்இதில் முக்கியமாக பார்ப்பது பாதிக்கப்படும் மீனவர்கள் இது வரைக்கும் எந்த வகையிலும் எதிர்ப்பைக் காட்டாமல் ஏன்?
நேற்று நண்பர் மண்டப முகாம் சென்று இருந்தார். அப்படியே பல மீனவர்களிடம்பேசி பல விசயங்களை புரியவைத்தார். இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்ன தெரியுமா?
பத்து மீனவ குடும்பம் இருக்கிறது என்றால் அதில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களின் உடம்பில் வெளியே சொல்ல முடியாத எழுதினால் தாங்கமுடியாத அளவுக்கு ரணங்கள்.
எல்லாமே சிங்கள கடற்படை உருவாக்கியது. இவர்கள் எப்போதும் போல இதை காட்டி சிரித்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். வியாதிகள் பம்மாத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
வாங்க ஜோதிஜி,
//134 பக்கம். இதில் அந்தந்த காலகட்டத்தில் இதில் சம்மந்தபபட்ட அரசியல் வியாதிகளின் கேப்மாரித்தனம் வரைக்கும் விலாவாரிகயாக விவரிக்கப்பட்டுள்ளது//
ஓ! படிக்கணுமே. அவசியம். எனக்கு இந்த விசயத்தில என்ன ஒன்னு புரியல. இரு நாடுகளுக்கிடையேயான ‘ஹாட் ஸ்பாட்’ எனும் பட்சத்தில் எப்படி ஒரு வயக்காட்டை பிடிச்சு இவரு என் வயல நல்லா உழுதாரு இது என் தம்பியோட இடம் இதை உழுதவருக்கு கொடுக்கப்போறேன் அப்போதான் அடுத்த முறையும் கூப்பிட்டா உடனே ஓடியாந்து உழுது கொடுப்பாருன்னு; என் ஊரான்விட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு நம்ம அரசாங்கம் தாரை வார்த்து கொடுத்திருக்க முடியும்?
//நான் இதை படித்து உள்வாங்கி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது.//
இவ்வளவியும் நீங்க முன்னமே தெரிஞ்சிகிட்டுதான் அமைதியா எங்ககிட்டயும் பகிர்ந்துக்காம அடப்போங்கப்பான்னு உட்கார்ந்திருக்கீங்களா?
---to be contd 2
contd..
//முக்கியமாக பார்ப்பது பாதிக்கப்படும் மீனவர்கள் இது வரைக்கும் எந்த வகையிலும் எதிர்ப்பைக் காட்டாமல் ஏன்?//
அமைதியா இருக்க என்ன காரணமாக இருக்கும். மற்ற பொது மக்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் அக்கறையில்லாமல் இருப்பதால் இவர்களுக்கான போதிய குரல் கிடைக்காமல் இருக்கலாம். ஏழை சொல் அம்பலம் ஏறவா போகுதின்னு, வேதனையையே வாழ்க்கையா ஏற்று வாழுவாங்களா இருக்கும்.
//பத்து மீனவ குடும்பம் இருக்கிறது என்றால் அதில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களின் உடம்பில் வெளியே சொல்ல முடியாத எழுதினால் தாங்கமுடியாத அளவுக்கு ரணங்கள்.//
தனித்தனியாக பேசி அத்தனை ரணங்களையும் பதிவி செய்யப்படணும். இது ரொம்ப அவசியமென்று கருதுகிறேன்.
இன்னும் பேசுங்க! தெரிஞ்சிக்க டன்ஸ் இருக்கின்னு தெரியுது. புரியுது, கற்றது கை மண்ணளவுன்னு!!
நல்ல பதிலடி..
அந்த மூல கட்டுரை அங்கே இல்லை இப்ப..
Post a Comment