எனக்கும் எகிப்திய மக்கள் எழுச்சிக்கும் என்ன தொடர்பு? கடந்த 25ம் தேதியிலிருந்து தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இத்தனை நாள் நின்ற மக்களின் மன உறுதிக்கும், அஞ்சா துணிவிற்குமிடையே அவர்கள் விரும்பிய செய்தி சற்று முன் கிடைத்திருக்கிறது. இதற்கிடையில் 300 பொது மக்களை இழந்திருக்கிறார்கள். அந்த நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகிறார் இன்று இரவு என்பதே அது.
அரக்கபரக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வன்முறையை நம்பும் நபர் என்ற பின்னணி தெரிய வந்ததும் அங்கு கூடியிருக்கும் மக்களுக்கு என்ன நடக்கப்போகிறதோ என்ற கவலை எனக்கும் இருந்தது. இந்த நிலையில், எகிப்து நாட்டின் இராணுவம் இப்பொழுது முன் வந்து ஒரு செய்தியறிக்கையின் மூலமாக போராட்டக்காரர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
மக்களின் எழுச்சிக்கு முன்பு எந்த அடக்குமுறையும் நிற்க முடியாது என்பதனை இந்த போரட்டம் உறுதி செய்திருக்கிறது. இந்த போராட்டத்தில் முதல் கட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாணவர்களும், டாக்டர்களும், இஞ்சினியர்களும்தான் என்பது கூடுதல் சுவராசியம். அடுத்த நான்கு ஐந்து மணி நேரங்களில் என்ன நடக்க விருக்கிறது என்பதும் அதி முக்கியம் வாய்ந்தது.
*மேலே எழுதிய குறிப்பு அந்த நாட்டு இராணுவம் கூறியதைக் கொண்டு எழுதப்பட்டது. ஆனால், பிறகு தேசிய தொலைகாட்சியில் தோன்றிய அதிபர் முபாரக் வளைச்சு வளைச்சு பேசி தான் பதவி விலக இப்பொழுது முடியாது என்று கூறி அனைவரின் முகத்திலும் கரியை பூசி விட்டார். மக்கள் மிக மிக கோபமாக இருக்கிறார்கள். இன்று என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.
இந்த போராட்டம் தொடர்பாக மேலும் படிக்க என்னுடைய முந்தைய பதிவு...
...எகிப்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? அதன் மூலமாக உலகத்திற்கும் நமக்கும் என்ன செய்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த எகிப்திய எழுச்சி சூழ்நிலையில் உலக அரசியல் பெரிய மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. வெளி உலக பார்வைக்கு நம் எல்லோருக்குமே அந்த நாடு பல சிறப்பு வரலாற்று சின்னங்களை தாங்கி நன்றாகத்தானே போயிக் கொண்டிருந்தது என்பதாகத்தான் அவதானித்து வைத்திருப்போம். எகிப்திலிருந்து இது போன்ற ஒரு மக்களின் எழுச்சியை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இதோ நம் கண்ணிற்கு முன்பாகவே ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த மாற்றம் அரசியல் ரீதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் ஏனெனில் உலக அமைதிக்கே அந்த பூமியே ஒரு ‘ஹாட்ஸ்பாட்’ஆக விளங்கி வருகிறது எனலாம். அதனையொட்டியே இது வரையிலும் உலக அரசியலும் புது பொழிவு அடைந்திருக்கிறது அல்லது அழகிழந்திருக்கிறது. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது சமச்சீராக பாய்ந்து அங்கு வாழும் மக்கள் அனைவருமே தனக்கென மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கென அமைந்துபட்டிருப்பது அவசியம். அது இன, மொழி பொருளாதார பரவல் என பல வகையிலும் தன்னை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதனையும் உள்ளடக்கியவாரே இருப்பது அவசியம்.
தவிர்த்து, நாட்டை ஆளும் வர்க்கம் பொதுப்படையான நலனை மறுத்து, மறந்து மக்களுக்கு எதிர் திசையில் பயணித்து தன் நலனுக்கும், பிற நாடுகளின் ஆர்வத்திற்கென இயங்கினால் இறுதி நிலை நாம் காணும் இன்றைய எகிப்தின் நிலையாகத்தான் இருக்கும்.
முப்பது வருடங்களாக தனக்கென ஒரு துணை ஜனாதிபதியைக் கூட அமைத்துக் கொள்ளாமல் எகிப்தின் அதிபர் ஹோஸ்னி முபாரக், யாருடைய லாபத்திற்கோ அமைதியான முறையில் நாட்டை ஆள்கிறேன் என்று இயங்கியிருப்பதாக இந்த மக்களின் எழுச்சி உலகத்திற்கு பறைசாற்றி நம் கண் முன்னால் விரிந்து நிற்கிறது; பதினொராவது நாளான இன்றும். வரலாற்றில் இது போன்ற அமைதியான எழுச்சி ஒரு நாட்டின் அதிபருக்கு எதிராக முன்னால் நடந்திருக்குமா என்று அறியமுடியவில்லை. இதனில் ஆச்சர்யபடத்தக்க விசயம் என்னவென்றால் இணையத்தின் பங்கு அதிகமாக பயன்பட்டிருக்கிறது இந்த மக்கள் எழுச்சிக்கு பின்னால் என்று அறியும் பொழுது உண்மையிலேயே நமக்கெல்லாம் சுத்தமான அரசியல் ஆரோக்கிய காற்று இன்னும் எட்டிவிடும் இலக்கிலேயே இருக்கிறது என்பதாகப்படுகிறது.
மக்களின் எழுச்சிக்கு முன்னால் எந்த உலக அரசியலும் மண்டியிடும் என்பதற்கு இந்த எகிப்திய மக்களின் எழுச்சி சான்று கூறி நிற்கிறது. இந்த நிலைக்கு அந்த மக்களை எடுத்து வந்திருக்கும் முப்பது வருட கால அரசியல் பின்னணியை சற்று உள்வாங்கி பார்த்தோமானல் எத்தனை துன்பங்களை எகிப்திய மக்கள் தாங்கி வந்திருப்பார்கள் என்றும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். மரங்களை வெட்டி அகலச் சாலைகளை அமைத்து கொடுப்பதும், வெளி நாட்டு தொலைகாட்சி ஊடகங்களையும், சோப் ஆப்ராக்களை ஒலிபரப்பியும், அலைபேசிகளை கிலோவிற்கு இன்ன விலை என்று தருவித்து தருவதும், இணையத்தின் அலைகற்றைகளை அகலப்படுத்திக் கொடுப்பதும் உண்மையான வளர்ச்சியாக கொண்டு ஏமாற்றி ஒரு நாட்டில் வெறுமனே மக்களை ரொம்ப நாட்கள் கட்டிப் போட்டு வைத்திருக்க முடியாது என்பதாகத்தான் இந்த காட்சி நமக்கு விளக்கி நிற்கிறது. இத்துனை குரல்கள் வெளியில் வெடித்து தெரித்து வரமுடியாமல் இருந்திருக்க வேண்டுமென்றால், இந்த நீண்ட முப்பது கால இடைவெளியில் எத்தனை அடக்கு முறைகள் பயன்படுத்தப்பட்டு, அவர்களின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டு ஓரமாக்கியிருக்க வேண்டும்.
பொருளாதார சமச்சீரமைவு எல்லா இடங்களிலும் நிரம்பி இருந்திருக்கவில்லை. எழுபது மில்லியன் மக்களை உள்ளடக்கிய ஒரு நாட்டில் ஒரு சாரார் மட்டும் அந்த பொருளாதார குச்சி ஐசையை சுவைத்துக் கொண்டிருக்க நிறைய படித்த இளைஞர்கள் வேலையற்று, குரல்வளை திருகப்பட்டு அடக்கி ஒடுக்கிப்பட்ட வாக்கில் இணையத்தையும் திறந்து கொடுத்து, உலக அரசியலையும் கவனிக்கும் வகையில் பணிக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு ஒரு தீப்பொறியாக கிளம்பி இன்று காட்டுத் தீயாக நாடு முழுமைக்குமே விரவி நிற்கிறது இந்த எழுச்சி.
இந்த நிலையில் ஏன் உலகமே இந்த நிகழ்வை கவலையுடன் பேசியும், கவனித்து வருகிறது? உலகமே என்றால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் கவனித்து கண்ணத்தில் கைவைத்தால் உலகமே கவனிக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும். எகிப்தின் மக்கள் எழுச்சிக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? இங்கேதான் வருகிறது, உலக அரசியல் சித்து விளையாட்டும், மறுயமைவும். அந்த பிராந்தியத்தில் எகிப்து மிகப்பெரிய நாடு. இதன் அரசியல் நகர்வுகள் மொத்த மத்திய கிழக்கு நாடுகளிலும் அதன் அலைகளை எழுப்பும்.
இது வரையிலும் நாட்டையாண்ட அதிபர் வருடத்திற்கு 1.5 பில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து பெற்று அந்தப் பணம் அங்குள்ள ராணுவத்தை மேலாண்மை செய்வதற்கெனவே செலவிடப்பட்டிருக்கிறது எனும் பொழுது சற்றே யோசிக்க வேண்டும். அமெரிக்கா எதற்காக இத்தனை பெரிய தொகையை அந்த நாட்டிற்கென கொடுத்து வருகிறது? எகிப்து தனது அண்டைய நாடான இஸ்ரேலுடன் தனது நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது. நம் அனைவருக்கும் தெரியும், மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்ரேலூடனான உறவு. இப்பொழுது புள்ளியை இணையுங்கள். அந்த பிராந்தியத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் எந்த விசயத்திலும் கவனித்து பார்த்திருந்தால் எகிப்து எதுவுமே சொல்லுவதற்கு இல்லை என்ற நிலையையே எடுத்திருப்பதாக அறியலாம். அப்படியெனில் என்ன நடந்திருக்கலாம் அந்த எகிப்து அதிபருக்கும் அவருக்கு கீழே வாழ்ந்து வரும் மக்களுக்கும் என்பதனை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
இந்த மக்கள் போராட்டச் சூழலில், இவ்வளவு பெரிய தொகையை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா ஜனநாயகத்தை உலகளாவிய முறையில் வழங்க உழைத்துக் கொண்டிருப்பதாக தன்னை முன்னிருத்திக் கொள்ளும் நிலையில், கண்டிப்பாக இந்த இக்கட்டான நிலையில் ஒரு நல்ல முடிவை எகிப்திற்கு மக்களின் பக்கமாக நின்று வழங்க முடியும், அவ்வாறு செய்ய வேண்டியது அதன் கடமையாகிறது.
அதுவே தன்னெழுச்சியாக ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் அந்த நாட்டிற்கெனவும் பிற்காலத்தில் அனைத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தன்னுடைய எஜெண்டாவை க்ளியராக முன்னெடுத்து வைக்கும் ஒரு நகர்வாக அமைய முடியும். மாறாக, 11 நாட்கள் நகர்ந்தும் இன்னமும் பழைய அரசியல் நாடங்களை அரங்கேற்றி கொண்டிருந்தால் உலக அரங்கில் முகமூடி கிழிந்து தொங்கி அமெரிக்கா தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்து தப்பிக்க முடியாது. மேலும் அந்த பிராந்தியத்து இளைஞர்களின் மனதில் மென்மேலும் வில்லனாக தன்னை தக்க வைத்துக் கொள்ளும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுப் போகும். இந்த சூழலை அமெரிக்கா சரியாக பயன்படுத்திக் கொள்வது மிக்க அவசியமாகிறது.
இந்த எகிப்தின் மக்கள் எழுச்சி பல நாடுகளுக்கும் தேவைப்படுவதாகத்தான் தெரிகிறது. புரையோடிப் போன அரசியல் பெருச்சாளிகளை உள்ளடக்கிய நாடுகளாக பல நாடுகள் தன் அழகிழந்து நிற்கிறது. ஊழல்களிலும், வறுமையிலும் சுயமிழந்து, தொலைகாட்சிகளிலும் அதனூடான வக்கிரங்களிலும், அலைபேசிகளிலும், இலவசங்களிலும் தற்காலிகமாக தங்களை தொலைத்து இலக்கற்று மிதந்து கொண்டிருக்கும் ஜனநாயங்களை கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் இது போன்ற ஒரு புதிய ஜனநாயக் எழுச்சி தேவை. அதனூடாக தங்களை மீட்டெடுத்திக் கொள்ள என்பதனையே இந்த எகிப்திய தன்னெழுச்சி தனித்துவமாக நின்று விழித்தெழ சொல்கிறது!
Photo Courtesy: NY Times and Net.
...
50 comments:
sema alasal thekki! kalakitinga!
அனைவருக்கும் இந்த செய்தி புரளியாக இருக்கக் கூடாது என்பதே இந்த நேரத்தைய வேண்டுதலாக இருக்கக் கூடும்!!
asaththal report.... pakirvukku nanri. vaalthtukkal
பெரியண்ணனின் கண்ணசைவால் நடந்ததா? அல்லது நடந்தவை வெற்றி பெற, பெரியண்ணனின் ஆதரவும் காரணமா??
உலகில் உள்ள ஏனைய நாடுகளுக்கும் பெரியண்ணனின் ஆதரவு உண்டா??
விசாரிச்சு, நிதானமா சொல்லுங்க.....
பழம,
:))
//பெரியண்ணனின் கண்ணசைவால் நடந்ததா? அல்லது நடந்தவை வெற்றி பெற, பெரியண்ணனின் ஆதரவும் காரணமா??//
பெரியண்ணன் கண்ணசைவு இல்லாம இது சாத்தியமா? அவங்களும் மாத்தி மாத்தி பேசிதான் பார்த்தாங்க. அங்க உள்ள மக்களும் ரொம்ப திடமா நின்னுட்டாங்களே, வேற வழி?
//உலகில் உள்ள ஏனைய நாடுகளுக்கும் பெரியண்ணனின் ஆதரவு உண்டா??//
ஆங்காங்கே இது மாதிரி ‘பாப் அப்’ ஆனா வேற என்ன மாற்று வழி இருக்க முடியும். நம் கடன் ஜனநாயகம் அமைச்சிக் கொடுப்பது தானே :P
//விசாரிச்சு, நிதானமா சொல்லுங்க...//
நெம்ப குசும்புதான்யா உங்களுக்கு ;-)
wel said!
வணக்கம். தாங்களின் இந்த செய்தியை கேட்டு சந்தோசம் அடைந்தேன்
//இத்தனை நாள் நின்ற மக்களின் மன உறுதிக்கும், அஞ்சா துணிவிற்குமிடையே அவர்கள் விரும்பிய செய்தி சற்று முன் கிடைத்திருக்கிறது. இதற்கிடையில் 300 பொது மக்களை இழந்திருக்கிறார்கள். அந்த நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகிறார் இன்று இரவு என்பதே அது. //
நானும் உர்ருன்னு சி.என்.என்,பி.பி.சின்னு மாத்தி மாத்தி பார்த்துகிட்டுத்தான் இருக்கேன்.ராணுவம் அறிக்கை கொடுக்குது.முபாரக் தொலைக்காட்சியில் தோன்றுவார்ங்கிறாங்க.அவராவது பதவி விலகுறதாவதுன்னு ஒரு அல்லக்கை தகவல்.சி.ஐ.ஏ இன்னிக்குள்ள தகவல் தெரிஞ்சுடும்ன்னு ஒரே திகில்தான் போங்க.
ஹோஸ்னி முபாரக்!எத்தல பர்ரா (வெளியே போ).
ராஜ நட, உங்க ஊருப் பக்கம் நடக்கிற ஒரு முக்கியமான நிகழ்வை பற்றிய பதிவிற்கு இன்னும் உங்கள காணமேன்னு யோசிச்சிட்டு இருந்தேன் வந்திட்டீங்க. என்னமோ அந்த சதுக்கத்தில நானே நிக்கிற மாதிரி ஒரு எஃபெக்ட்தான் போங்க! :-)
//நானும் உர்ருன்னு சி.என்.என்,பி.பி.சின்னு மாத்தி மாத்தி பார்த்துகிட்டுத்தான் இருக்கேன்.//
நான் நேரடியா அல்சிஜீரா பார்த்துட்டு இருக்கேன், அதுதான் ஹாட் இந்த சூழ்நிலைக்கு ;-). இருந்தாலும் ரெண்டு பேத்துக்குமே வைராக்கியம் ஜாஸ்தியப்பா, யாரும் சளைத்தவர்கள் இல்லைங்கிறதை காட்டிக்கிறாங்க.
//முபாரக் தொலைக்காட்சியில் தோன்றுவார்ங்கிறாங்க.அவராவது பதவி விலகுறதாவதுன்னு ஒரு அல்லக்கை தகவல்.//
வந்து ஒழுங்கா ஒத்துக்குவாருன்னு நம்புவோம். இல்லன்னா, அம்பூட்டு மக்களின் சந்தோஷமும் திரும்பவும் கோவத்தில் குரல்கள் வின்னை முட்டும். நம்புவோம்! ஒப்புத்துகிட்டு விமானம் ஏறுவாருன்னு.
yes, indeed it is very thrilling!
புது வரலாறு அந்த பிராந்தியத்தில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. Right in front of our eyes... :)
//அந்த நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகிறார் இன்று இரவு என்பதே அது.//
mm! Let us see..
எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
//அந்த நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகிறார் இன்று இரவு என்பதே அது.//
mm! Let us see.///
ஏதோ ஒரு விளையாட்டு போட்டியின் இறுதி சுற்று பார்க்கிற மாதிரியான விருவிருப்பு இருக்கே நம்ம எல்லாரிடத்திலும்... ம்ம்ம் பார்க்கலாம் :))
//ஏதோ ஒரு விளையாட்டு போட்டியின் இறுதி சுற்று பார்க்கிற மாதிரியான விருவிருப்பு இருக்கே நம்ம எல்லாரிடத்திலும்... ம்ம்ம் பார்க்கலாம் :))//
I don't like "watching" games :)) My colleagues' families are there.. I am going towards them now..
I don't like "watching" games :)) My colleagues' families are there.. I am going towards them now..//
ஓ! நீங்களும் பார்க்கிறதில்லையா? நான் சொல்ல வந்தது அந்த ஹீட் காது ஓரத்தில சுடுமாம் அது போன்ற இறுதி சுற்று பார்த்திட்டு இருக்கும் போது. அது மாதிரியே இதுவும் இப்போ இருக்கின்னு ஓர் ஒப்பீடு நோக்கு :))...
ஓ! முபாரக்கை வழி அனுப்பும் விழாவை அவங்களொட இருந்து கொண்டாட போறீங்களா. சூப்பர்ப்! எஞ்சாய்!!
யோவ், என்னய்யா இந்தாளு பேசிகிட்டே போறாரு அந்தப்பக்கம் மக்கள் ஷுவை கழட்டி ஆட்டிட்டு இருக்காய்ங்க...
அடப்பாவத்தே! இந்தளவிற்கா ஒரு மனுசனுக்கு தன்னோட நாட்டிற்கு தன்னை அர்ப்பணிக்கணுங்கிற கொல வெறி இருக்கும்...
பதவி விலகிற மாதிரி தெரியலயே... அடுத்து என்னவே!!
நான் இந்த எகிப்தின் கொடுமை தாங்காமல் இன்று காலை முதல் தொலைக்காட்சி பார்க்கவில்லை. உங்கள் பதிவை பார்த்தபின் தான் தெரிந்துகொண்டேன் எகிப்திய மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் வென்றது என்பதை.
இனிமேல் தான் அரசியல் இன்னும் சூடு பிடிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். மீண்டும் தொடர்கிறேன்.
இனிமேல் அமெரிக்காவின் பங்கு என்ன?
தெகா!முந்தைய பின்னூட்டத்துக்கு உங்களுக்கும் பெப்பே,சி.ஐ.க்கும் பெப்பே,ஒபாமாவுக்கும் பெப்பே சொல்லிட்டு அல்லக்கை அமைச்சர் ஜெயிச்சுட்டார்.
முபாரக்காவது பதவி விலகுவதாவது!நான் உங்களை எனது புதிய இடுகையில் சந்திக்கிறேன்.
//உங்கள் பதிவை பார்த்தபின் தான் தெரிந்துகொண்டேன் எகிப்திய மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் வென்றது என்பதை.//
:(( இல்லீங்க ரதி! நம்ம மூன்றாம் தர நாடுகளின் மனித மனங்களை பிரதிபலிக்கிறார், அதிபர். அவர் நாட்டு மக்களின் பல ஆயிரம் உயிர்களை பலிவாங்காமல் இறங்க மாட்டார் போல. பதவியை விட்டு இறங்கிற ஐடியாவெல்லாம் இல்லைன்னு நேரடியாவே இராணுவ பக்கமிருந்து விட்டுருந்த முந்தைய சத்தியத்தை உடைத்து அவரே வழ வழ கொழ கொழான்னு சொல்லிட்டு போயிட்டார்.
நாளக்கி என்ன நடக்கப் போவுதோ! எனக்கு என்ன ஒரு சந்தோஷமிருந்திச்சின்னா இதுக்கு மேலேயும் மனித உயிர்கள் இழக்கப்படாமல் இந்த போராட்டம் முடிவிற்கு வருகிறதே என்பதாக இருந்தது. ஆனால், இந்தாளு அப்படி இல்லை போலவே!
அண்ணாச்சி, தெளிவா தன்னோட முடிவ சொல்ல மாட்டீங்கிறாரே. அவங்களுக்குள்ளரயே பலமா பிளவுண்டு இருக்கிற மாதிரிதான் தெரியுது.
//அண்ணாச்சி, தெளிவா தன்னோட
முடிவ சொல்ல மாட்டீங்கிறாரே.//
பெரியண்ணனின் இன்னும் கண்ணை காட்டலை ?
//பெரியண்ணனின் இன்னும் கண்ணை காட்டலை ?//
கண்ணா!(ரெட்டை அர்த்தம்) வாயே தொறந்துட்டாரு பெரியண்ணன்.அதுக்கும் முபாரக் பெப்பே!
//மக்களின் எழுச்சிக்கு முன்பு எந்த அடக்குமுறையும் நிற்க முடியாது என்பதனை இந்த போரட்டம் உறுதி செய்திருக்கிறது.//
சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக)
சகோதரர் தெகா,
தலைப்பை தவிர்த்து நல்லதொரு பதிவிற்கு முதலில் என்னுடைய நன்றிகள்.
உங்களிடம் இப்போது சில கேள்விகள்...
1.ஏதற்காக இப்படியொரு தலைப்பை வைத்தீர்கள்?
2. "சற்று முன்" என்று தலைப்பில் சேர்த்த நீங்கள், அந்த சற்று முன்னுக்கு வரை அதிபர் பதவி விலகவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிந்தும் இப்படியொரு தலைப்பை ஏன் வைத்தீர்கள்?
3. பதிவர் என்னும் நிலையில் இருக்கும் நபர்களுக்கு மக்களுக்கு சரியான செய்தியை கொண்டு செல்லவேண்டுமென்ற பொறுப்புணர்வும் இருக்கவேண்டியது அவசியம். வெறும் புரளிகள், யூகத்தை அடிப்படையாக வைத்து இப்படியொரு தலைப்பை வைத்து மக்களை ஏமாற்ற உங்களை தூண்டியது எது?
4. தலைப்பில் ஒருமாதிரியும், பதிவின் முதல் பத்திலேயே தலைப்பிற்கு முரண்பாடான தகவல்களை தந்த தாங்கள், எத்தனை மக்கள் தங்களின் இந்த தலைப்பை பார்த்து தவறான செய்தியை உள்வாங்கியிருப்பர் என்று உங்களால் உணர்ந்து கொள்ள முடிகின்றதா?
உங்களை தாழ்மையுடன் நான் கேட்டு கொள்வதெல்லாம், எதிர்க்காலத்தில் இதுபோன்ற மக்களை ஏமாற்றும் தலைப்புகள் வைத்து என்னை போன்றவர்களை ஏமாற்ற வேண்டாமெம்பதுதான்.
மனதில் பட்ட சங்கடத்தை சொல்லியிருக்கின்றேன். இதனை ஏற்பதும், ஏற்காததும் உங்கள் இஷ்டம்...
நன்றி,
உங்களுக்கு இறைவன் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கட்டும்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
எகிப்திலிருந்தும் நாம் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும்.
நம் மக்கள் 'எழுச்சி' போஸ்டர்களிலும், சினிமாக்களில் மட்டும்தான் இருக்கு :(
நல்ல அலசல். பார்ப்போம் முபாரக் என்ன செய்றார்னு.
ஆஷிக் அவர்களே,
முபாரக்கின் உரை நடுசாமத்தில் வரும் வரைக்கும் அவர் பதவி விலகப் போகிறார் என்று ஏறக்குறைய உறுதிப் படுத்தி இருந்தனர். முதன்முதலில் மத்திய கிழக்கின் ஊடகம் ஒன்று உள்ளகச் செய்திகளின் படி அதை அறிவித்திருந்தது. பிற்பாடு ஐரோப்பிய ஊடகங்களும் தங்கள் இணையப் பக்கங்களில் தலைப்புச் செய்தியாக முபாரக் பதவி விலகப் போகிறார் என அறிவித்திருந்தனர். இராணுவமும் கூட தெருத்தெருவாக ஒலிபெருக்கிகள் மூலம் நல்ல காலம் பொறக்கப் போவுது என்று அறிவித்திருந்தனர். எல்லாருக்கும் பெப்பே காட்டிவிட்டு முபாரக் இருக்கையை இறுக்கிப் பிடித்திருப்பாரென எவரும் நினைத்திருக்கவில்லை. பெரிய ஊடகங்களே தங்களுக்குக் கிடைத்த உள்ளகத் தகவல்களை மீறி எப்படி இந்த மாற்றம் நடந்ததென மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கையில் அவர்கள் அடியொற்றி செய்தி பதிந்த தெகா என்ன பண்ணுவார்? தெகா நேரடிச் செய்தி நிருபராக எகிப்து போய் நின்று செய்தி வழங்கியிருந்தாலும் இந்தத் தவறு நேர்ந்திருக்கும் தான்! புரிந்து கொள்ளுங்கள்!
தெகா,
விசயம் தெரிந்த பிறகு தலைப்பை மாற்றுவது தானே நல்லது?
தெகா!நானே சூடான இடுகையிலிருந்து இறங்குங்கன்னு சொல்லத்தான் மீண்டும் வந்தேன்.அதற்குள் ஆஷிக் உங்களுக்கு அவரது கருத்தை தெரிவித்திருந்தார்.ஒரு விதத்தில் அவரது கருத்து நியாயம் என்பதோடு உங்கள் பக்கம் நியாயம் என்னன்னா ஒபாமா கூட மாற்றங்கள் வருகிறது என்று சி.ஐ.ஏ தகவல்களின் படி அறிக்கை விட்டார்.ஒபாமாவைக் கூட விடுங்கள்.எகிப்திய ராணுவ அதிகாரிகள் அறிக்கை,தொலைக்காட்சி உரையுடன் முபாரக் graceful ஆ விலகுவார்ன்னு நினைத்துத்தான் எகிப்திய மக்களின் ஒன்று கூடும் எண்ணிக்கையும் அதிகரித்தது.
//ஏமாத்தியும்புட்டாரு. அப்படியே நம்மூரு அரசியல்வாதி புத்தி...// என்ற எனக்கான உங்கள் பின்னூட்ட வரிகள் சரியானவையே.
எகிப்து மக்கள் எழுச்சி வென்றது?! தலைப்ப இப்படி மாற்றியிருக்கலமா தெகா.
சகோதரர் அனானி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
என்னுடைய கருத்தை தாங்கள் சரியாக உள்வாங்கி கொள்ளவில்லையோ என்று அஞ்சுகின்றேன்.
"முபாரக் பதிவு விலக போகின்றார், Mubarak may step down" என்பது போன்ற செய்திகளைத தான் ஊடகங்கள் வெளியிட்டனவே தவிர, சகோதரர் தெகா போல உறுதியோடு தலைப்பு வைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், "சற்று முன் வென்றது" என்றால் என்ன அர்த்தம்? எல்லாம் நடந்து முடிந்து விட்டது என்று தானே அர்த்தம். அதற்காகத்தான் என்னுடைய பதிலில் "அதிகாரப்பூர்வமாக" என்ற சொல்லை சேர்த்திருந்தேன்.
பதிவுக்கு சம்பந்தமில்லாமல் தலைப்பு இருந்தால் என்னை போல எத்தனை பேர் வந்து பார்த்து விட்டு சகோதரர் தெகாவை கடிந்து கொண்டிருப்பர்?.
தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் பதிவு இருந்தால் எத்தனை பேருக்கு பதிவை படிக்க தோன்றும்? அவர்கள் நாடி வந்த தகவல் தான் பதிவில் இல்லையே?
அனைவராலும் கவனிக்கப்பட வேண்டுமென்பதற்காக தலைப்பு வைப்பதில் தவறில்லை. ஆனால் அந்த தலைப்பு பதிவிற்கு சிறிதளவேணும் சம்பந்தபட்டு இருக்க வேண்டும். இங்கு நிலை அப்படியில்லை என்பது உங்களுக்கு புரியவில்லையா?
சகோதரர், என்னை போன்ற பலருக்கும் இந்த சங்கடம் இருந்திருக்கலாம். நான் சுட்டி காட்டிருக்கின்றேன், அவ்வளவே...
இதனை விவாத களமாக மாற்ற நான் விரும்பவில்லை. என்னுடைய கருத்தை புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். இல்லையேல் விட்டு விடுங்கள்.
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்று பிரார்த்திக்கும்
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
எகிப்தில் நடந்துவரும் போராட்டங்கள் நல்ல ஜனநாயகத்திற்கு வித்திடுமா அல்லது பாகிஸ்தான் போன்று இன்னொரு இஸ்லாமிய பயங்கரவாத நாடாவதற்கு காரணமாக அமையுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
நண்பா, ஆஷிக் அகமத்-
அந்த தலைப்பினில் இருக்கும் வேண்டுதலையும் ஆர்வத்தையும் முதலில் கூர்ந்து கவனியுங்கள், புரிந்து கொள்ளுங்கள். இந்த சூடான, ஓட்டு வாங்குவதற்காக பதிவுகள் இடுபவர்களின் பதிவுகளில் சென்று இது போன்று கோரியுருந்தால் ஓரளவிற்கு எல்லாருக்கும் புரிந்திருக்கும் நீங்கள் சுட்டி காட்டிய விசயம் எத்தனை உண்மையுள்ளது என, எனிவே.
நான் தொலைகாட்சியில் அந்த இராணுவ தரப்பில் அதிகார பூர்வமாக இன்று இரவு அதிபர் பதிவி விலகுவார் என்ற செய்தியை கேட்டவுடனே, அந்த தஹ்ரீர் சதுக்கத்தில் துள்ளி குதித்தவர்களின் மகிழ்ச்சியுடன் இயைந்து ஒரு டிவிட்ட்டர் செய்தியைப் போலவே பகிர்ந்து கொண்ட செய்திதான் இது.
மற்றபடி உள் அர்த்தங்கள் புரிந்து கொள்ளும் படியான தலைப்போ, பதிவிலோ ஒன்றுமே இல்லை. அதற்கு பின் வந்த மறுமொழிகளிலியே அந்த ஆதங்கத்தை உங்களால் உணர்ந்திருக்க முடியும்.உங்களைப் போலவே எனக்கும் அதிபர் இத்தனை மக்களின் மனங்களை ஏமாற்றியதும், அவர்களை இன்னமும் பாடாய் படுத்துவதும் மிக்க வருத்தத்தை அளித்துக் கொண்டிருக்கிறது.
நம்புவோம், எகிப்து மக்களின் மன எழுச்சி வென்றெடுக்குமென. நன்றி, ஆஷிக்!
Robin said...
எகிப்தில் நடந்துவரும் போராட்டங்கள் நல்ல ஜனநாயகத்திற்கு வித்திடுமா அல்லது பாகிஸ்தான் போன்று இன்னொரு இஸ்லாமிய பயங்கரவாத நாடாவதற்கு காரணமாக அமையுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.//
ராபின், இதுவரைக்கும் நான் அவதானித்த வரையிலும் எகிப்திய மக்கள் நல்ல பண்பாட்டோடு இந்த போராட்டத்தை எடுத்துச் செல்லும் பாங்கும், அர்ப்பணிப்பும் அவர்களின் மீது மிக்க மரியாதையும், நேசத்தையும் உண்டு பண்ணுகிறது. இப்படி சுதந்திர தாகத்துடன் தாங்களாவே முன் வரும் ஒரு படித்த இளைஞர்களின் கூட்டத்தை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. நேர்மறையாக எண்ணங்களை குவிப்போம். நல்லதே அவர்களுக்கு கிடைக்க வேண்டுமென.
தஞ்சாவூரான் said...
எகிப்திலிருந்தும் நாம் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும்.
நம் மக்கள் 'எழுச்சி' போஸ்டர்களிலும், சினிமாக்களில் மட்டும்தான் இருக்கு :(
நல்ல அலசல். பார்ப்போம் முபாரக் என்ன செய்றார்னு//
வாங்க தஞ்சை, சரியான சூழல் ஏதாவது ஒன்று ஒரு தீப்பொறியை தட்டி விடுமென்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை! ஆனா, கண்டிப்பா நமக்கு ஒண்ணு தேவைப்படுதுன்னு மட்டும் ‘மணி’ அடிச்சு சொல்லுது. நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு பார்க்கும் போது.
ஆமா, எகிப்திய எழுச்சி நிறைய வழிகளில் எதிர்கால போராட்டங்களுக்கு முன்னுதாரனமாக இருக்கலாம். இந்த மக்களின் தன்னம்பிக்கையும், விடா துணிவும் கண்டிப்பாக கவனத்தில் நிறுத்தப்படும்
மீண்டும் வருவேன்.
இதோ இப்பொழுது செய்தி வந்துவிட்டது, முபாரக் ”IS OUT" :)) மேற்கொண்டு இரத்தம் பார்க்காம தொலைந்தாரய்யா அதிகாரி.
May be the PEACE shower on Egyptian rest of their JOURNEY.
தெகா பதிவை திசை திருப்பும் விமர்சனத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம். பத்திரிக்கையில் படித்த இது தொடர்பான செய்திகளை இங்கே எழுதி வைக்கின்றேன்.
வேயல் கோனிம்
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர். கூகுள் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் துபாயில் பணியாற்றியவர்.
காலித் சயீத் 28 வயது இளைஞர். எகிப்தில் இணையதளம் நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தவரை எகிப்து காவல்துறையினர் மாமூல் கேட்டு மிரட்டி கடைசியில் அடித்தே கொன்றனர். இந்த சம்பவத்தை மேலே சொன்ன காலித் சயீத் ஒரு வலைப்பக்கம் உருவாக்கி மொத்த நிகழ்வுகளை எழுதித் தள்ள தொடர்ந்து காலித் சயீத் பக்கம் பிரபலமாகத் தொடங்கியது.
இதில் பலரும்படிப்படியாக சேர ஜனவரி 25 அன்று போராட்டத்தில் பங்கெடுக்க அழைப்பு விடுக்க அப்புறமென்ன இன்று நடந்து கொண்டிருக்கும் அத்தனை எழுச்சிக்கும் இந்த வலைப்பூ தான் காரணம் என்றால் எவராவது நம்புவார்களா?
வேயல் கோனிமை இராணுவத்தினர் கைது செய்து சித்ரவதை செய்ய 12 நாட்கள் கழித்து வெளியே வந்து கண்ணீருடன் பேட்டி அளிக்க எரிந்த கொள்ளியில் நெய் ஊற்றியது போல் ஆனது.
பேஸ்புக் இந்த செய்தியால் நிரம்பி வழியஆரம்பித்தது. ஒரே சமயத்தில் 130000 பேர்கள் தொடர்ந்து பேஸ்புக்கில் போட்டுத் தாக்க படிப்படியாக பரவ பாரதியார் சொன்னது போல அக்னிகுஞ்சு ஒன்று கண்டேன் என்று இன்று நாம் பார்க்கும் அத்தனை விசயங்களும்.
யார் சொன்னார்கள்? வலைப்பூக்கள் என்பது படித்தவுடன் மற்ந்து போவது என்று?
ஒரே ஒரு பொறிதான்? இந்தியாவில் எவ்ர் பற்ற வைக்கப் போகிறார்களோ?
தஞ்சாவூரான் சொன்னதும் மனதில் உறுத்தலை உருவாக்கியது.
என்று மாற்றம் வரும்?
நாதாரிகள் எப்போது நாயடி படுவார்கள்?
எல்லாருக்கும் சந்தோஷம் தானே! நண்பா, ஆஷிக் நான் சொன்னது பலிச்சிருச்சே :))) - I am very happy for Egypt ...
ட்விட்டரில் ஒரு ஆர்வமூட்டக் கூடிய ட்விட் பாருங்க :)
SamDaTruth Samer Abdel-Halim
by reBELLYus
Sick of your old good-for-nothing dictator? Call 1-800-EGYPT and get your local dictator brought down in less than 30 days. #Egypt
Enjoy, Guys!
சகோதரர் ஆஷிக் அலி!
It is a genuine concern, you have brought up! Yes, the title can be made attractive but the facts should never be twisted/manipulated ever!
தங்கள் பதிவுலக சேவைக்கு நன்றி! :)
///சகோதரர் ஆஷிக் அலி!///
Sorry, I had a friend namely ashik ali. So I messed up your name! It should read as ஆஷிக் அஹமது!
மன்னிக்கவும்! :)
இப்பொழுது இடுகை மகுடம் சூடட்டும் தெகா!
கடைசி நேரத்தில் பயந்து கொண்டிருந்த ரத்தம் சிந்தாமை எகிபதிய மக்கள் புரட்சி வரலாற்றில் தனித்துவம் பெறுகிறது.மக்கள் புரட்சியை வாழ்த்துகிறேன்.
இப்பொழுது இடுகை மகுடம் சூடட்டும் தெகா!//
ஆஆஆமாம் ராஜ நட! :)) சாதித்து காட்டி விட்டார்கள். அவர்களின் அஞ்சா துணிவே துணையாக நின்றது. Great People, we have a lot to learn from this!!
//கடைசி நேரத்தில் பயந்து கொண்டிருந்த ரத்தம் சிந்தாமை எகிபதிய மக்கள் புரட்சி வரலாற்றில் தனித்துவம் பெறுகிறது.மக்கள் புரட்சியை வாழ்த்துகிறேன்.//
ரத்தம் சிந்தாம இது முடிஞ்சிரணுங்கிறதுதான் என்னோட அத்தனை கவனக் குவிப்பும். எல்லாம் முடிந்தது. இனிமேதான் அரசியல் சூடு பிடிக்கும். பார்க்கலாம் எப்படியாக நகர்கிறதென்று. கூடவே இருந்ததிற்கு நன்றி :)) !
இதை எழுதிட்டு இருக்கும் போது யூ. என்_ல இருந்து பான் கீ மூன் வந்து என்னமோ நாங்களும் உங்களுக்கு துணையா இருப்போங்கிறாரு -என்னமோ இப்பொ பெரிசா கிழிச்சிட்ட மாதிரி... அந்த சபை, மனமகிழ் மன்றமா ஆயிட்டே வருது ;-)
மாற்றம் ஒரு நல்ல மாற்றமாக உருவாகட்டும். மனித இனம் தழைக்கட்டும்.
எங்க உங்க நண்பர் கல்வெட்டு ? அவர் என்ன சொல்லப் போறார்ன்னு ஒரு ஆவல் தான். அவர் சொல்ற விதம் படிக்க ஆவலைத் தூண்டுது அதனால் தான். வேறொன்றுமில்லை. தவறாக நினைக்க வேண்டாம்.
//இதை எழுதிட்டு இருக்கும் போது யூ. என்_ல இருந்து பான் கீ மூன் வந்து என்னமோ நாங்களும் உங்களுக்கு துணையா இருப்போங்கிறாரு -என்னமோ இப்பொ பெரிசா கிழிச்சிட்ட மாதிரி... அந்த சபை, மனமகிழ் மன்றமா ஆயிட்டே வருது ;-)//
தெகா!மனமகிழ் மன்றத்துல இது வரைக்கும் இருந்ததிலேயே ஒரு மோசமான திறமையில்லாத ஆளு யாருன்னா பான் கீ மூன் தான் என்பேன்.
தமிழ்ப்படத்துல கடைசி நேரத்துல வர்ற போலிசு பான் கீ மூன்:)
அடுத்த மக்கள் புரட்சி அல்ஜீரியாவாமே?மெய்யாலுமா!
இந்தியாவுல வாய்ப்பு உண்டா தெகா...
இன்னைக்கு 12-பிப்-11 காலையில அதிபர் ஹோஸ்னி முபாரக் பதி விலகிட்டாருன்னு BBC செய்தியில சொல்லிட்டாங்கண்ணே.ஆனா தமிழ் வலைத்திரட்டிகள்ல அது பற்றி ஒரு செய்தியையும் காணல.
சேக்காளி said...
இன்னைக்கு 12-பிப்-11 காலையில அதிபர் ஹோஸ்னி முபாரக் பதி விலகிட்டாருன்னு BBC செய்தியில சொல்லிட்டாங்கண்ணே.ஆனா தமிழ் வலைத்திரட்டிகள்ல அது பற்றி ஒரு செய்தியையும் காண //
சேக்காளி, நம்மூர் நாளிதழ்களுக்கும் ஏனைய ஊடகங்களுக்கும் வெளிநாட்டில் ட்டூ பீசில் பொண்டூகள் சூரியக் குளியல் செய்தால்தான் செய்தியே!
18 நீண்ட நாள் இந்த போராட்டத்தினையொட்டி எத்தனை செய்திகள் நமது தினசரிகள் எழுதி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பேசியிருக்கக் கூடும். எல்லாம் அப்படித்தான்!
__________________________
//தவறு said...
இந்தியாவுல வாய்ப்பு உண்டா தெகா.//
பற்றிக்கொண்டால் நல்லாத்தான் போவும். புது ஆக்ஸிசனேற்றம் நடைபெற்றால்தான் அழுகிக்கொண்டிருக்கும் பகுதிகள் புதுப்பொழிவு பெரும்...
>>பான் கீ மூன் வந்து என்னமோ நாங்களும் உங்களுக்கு துணையா இருப்போங்கிறாரு<<
I remembered Thirukural, "Solluthal Yaarukkum Eliya Arivaam Solliya Vannam Seyal" Lets see..!
தெகா,
இப்போ துனிசியா, எகிப்திலிருந்து மற்ற இடங்களுக்கும் பாஹ்ரைன், ஜோர்டான், ஈரான், லிபியா என்று மக்கள் மாற்றத்துக்காக வீதியில் இறங்கி விட்டார்கள். ஈரான் நிலைமை தான் வழக்கம் போல் கவலைக்கிடமாக!!
ஈரான் நிலைமை தான் வழக்கம் போல் கவலைக்கிடமாக!!//
ரதி ஏனைய இடங்களில் நடக்கும் போராட்டம் புரிகிறது. ஈரானில் நடப்பது எது போன்ற அரசியல் போராட்டம். அங்கு புரட்சி நடக்க வேண்டுமென உள்ளே இருப்பவர்களை விட வெளியிலிருந்து அதிக அக்கறை இருக்கும் போலவே! அப்படியா?? :)
ம்ம்ம்.. ஈரான் புரட்சி பற்றி வெளியில் இருப்பவர்களுக்குத்தான் அதிக அக்கறை. காதிட்டிருக்காங்கல்ல :))
Post a Comment