இன்னிக்கு மதியம் ஆல் இன் ஆல் கடையில ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில ட்விட்டர்ல ஒரு பெரிய இயக்கமா தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து ட்விட்டுவதாக சொல்லியிருந்தாங்க. அதன் மூலமாக இந்திய முழுதுக்கும் (ஏன் உலகத்திற்குமே) இந்த செய்தியை கொண்டு சேர்க்க முடியுமென்று கூறி நம்மையும் கலந்துக்கும் படி இங்கே வைச்சு அழைப்பு விட்டிருந்தார்.
ட்விட் பக்கமே தலை வைச்சு படுக்க வேண்டாம்னு நினைச்சிட்டு இருந்தேன். என்னமோ அப்படி தோணுச்சு! ஆனா, இந்த விசயத்தை கேள்விப் பட்டவுடன் உடனே ஒரு கணக்கை தொடங்கினேன். ரொம்ப ஈசியா ஒரு மின்னஞ்சல் முகவரி, பயனர் பேர் அவ்வளவுதான் உள்ளர விட்டிருச்சு. அங்கே தேடுதல் பகுதியில #tnfisherman அப்படின்னு அடிச்சா ஓடிக் கொண்டிருக்கும் அத்தனை ட்விட்களும் காமிக்கிது.
மேலே நம்ம பெயர் காமிக்கும் இடத்திற்கு பக்கதில new twit அப்படின்னு ஒரு பென்சில் சிம்பலோட இருக்கிறதை சொடுக்கினா, நம்மோட ட்விட் விட்டுறலாம். இப்போதைக்கு இந்தியா முழுமைக்கும் இதுவே முதன்மை செய்தியா இருக்கிற மாதிரி காமிக்கிது. மக்கள் கடுமையா இந்த செய்தியை உலகச் செய்தியாக்க போராடிட்டு இருக்காங்க. போங்க நீங்களும் போயி ஒரு கை கொடுங்க!
ம்ம்ம் இன்னொன்னு உங்களுக்கு ஏதும் சொல்லத் தோணலையா. விடுங்க, யாராவது சொன்னது பிடிச்சிருந்தா ஜஸ்ட் RT அப்படின்னு வெட்டி ஒட்டுற செய்திக்கும் முன்னாடி போட்டு அப்படியே ஒட்டிருங்க. உங்க வேல முடிஞ்சிச்சு.
என்னோட ட்விட்களில் சில...
* சிங்கள இனவெறி கடல் கடக்கிறதா??#tnfisherman
* Habitual killing becomes ones CHARACTER... so is the reason behind the killing of 500+ #tnfisherman
* Serial killers can never overcome their temptation of killing, so the SL racist #tnfisherman
* இப்பொழுது புரிகிறது தீவிரவாதம் ஏன் ஒரு சில குழுவினரை உலகெங்கிலும் கட்டித் தழுவிக் கொள்கிறதென #tnfisherman
* Does SL racism over spills onto T.nadu shores??#tnfisherman
இதுவும் மீனவர்களின் செய்தியை கொண்டு சேர்பதற்கென உருவாக்கப்பட்ட தளம் தான் - தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள்.
ட்விட்டர் இணைய தளம்... twitter.com
ஏன் ட்விட்றாங்கன்னு தெரியலையா இந்த காணொளியை பார்த்தா புரியும்.
18 comments:
பதிவிட்டதற்கும், ட்விட்டியதற்கும் நன்றி தெகா.
சில இணையதளங்களின் இணைப்புகளும் சேர்த்துள்ளோம். அவற்றையும் முடிந்தால் பதிவில் இணைத்துவிடுங்கள்.
எரியத்தொடங்கியிருக்கும் தீயை இன்னும் பரவச் செய்வோம்.
நல்ல விசயம்.. டிவீட்டரும் அதனைப்பயன்படுத்தும் விதமும் நல்ல ஒரு செயலுக்காக குரல் கொடுப்பதும் பாராட்டப்படவேண்டிய விசயம்..
நன்றி தெகா...நீங்க பதிவு போடுவீங்கன்னு தெரியும்.
நன்றியும் வாழ்த்துகளும்.
Please join The Global Campaign for #TNfisherman on twitter . 28.01.11 Time 9.00PM - 10.00PM Indian Standard Time. RT pls
கும்மி said...
Please join The Global Campaign for #TNfisherman on twitter . 28.01.11 Time 9.00PM - 10.00PM Indian Standard Time. RT pls//
I am going to be there shortly, already logging in... lets rock!
பற்றி எரிகிறது - உணர்வுத்தீ தெ.கா - இது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும்.
இப்போது தான் பார்த்தேன். உண்மையிலேயே இது குறித்து முதலில் கும்மி தான் நேற்றைய முன் தினம் தெரிவித்தார். இப்போது தமிழ் மணம் முகப்பில் வரிசையாக வந்து விழுந்து கொண்டுருக்கிறது. ஆச்சரியமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள் தெகா.
Quote of the Day - Friends!!
In the End, we will remember not the words of our enemies, but the silence of our friends - MartinLutherKing #tnfisherman
இந்தியன் கப்பற் படைக்காவது தெரியுமா தமிழக மீனவர்கள் தமிழ் மட்டுமே பேசுவார்களென்று #tnfisherman
இணையத்துக்கும், தகவல், தொழில்நுட்ப பரிமாற்ற ஊடகங்களுக்கும் பூங்கோதை புதியதோர் விதி செய்யப்போவதாக இப்போ தான் ராஜ நடராஜனின் பதிவில் படித்தேன்.
அதற்கு முன் இது வெற்றியளிக்க வாழ்த்துக்கள்.
தெகா இது நான் May 2009 ம் ஆண்டு அடிக்கடி கேட்டது,
"What hurts the victims the most is not the cruelty of the oppressor but the silence of the bystander"
-Elie Wiesel-
முத்துலெட்சுமி/muthuletchumi said...
நல்ல விசயம்.. டிவீட்டரும் அதனைப்பயன்படுத்தும் விதமும் நல்ல ஒரு செயலுக்காக குரல் கொடுப்பதும் பாராட்டப்படவேண்டிய விசயம்.//
ட்விட்டரை இந்த அளவிற்கு பயன்படுத்த முடியும்னு இப்போதான் தெரியுது. ஏதோ நல்லது நடந்தா சரித்தான். இது வரைக்கும் மேலேயே வைச்சிட்டு இருக்கோம். சீக்கிரம் உங்க பக்க உலகத்தில இருந்து முழிச்சு வெளிய வாங்க...
//ட்விட்டரை இந்த அளவிற்கு பயன்படுத்த முடியும்னு இப்போதான் தெரியுது.//
Very true. I too felt the same.
இதுவரை நானும் ட்விட்டர் யூஸ் பண்ணியதேயில்லை. இந்தப் பிரச்சினையைத் தெரிந்துகொண்ட பின்புதான் உள்ளே நுழைகிறேன்.
எல்லாரும் போயி ட்விட் செய்யுங்க. அசராம! நன்றி!!
தெரியப்படுத்தியதற்கு நன்றி தெகா. எனக்கும் இதுவரைக்கும் twitter account வைத்திருக்கும் ஆர்வம் இருந்ததில்லை. இப்போ தான் திறந்து எழுதினேன். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லியுள்ளேன்.
Nice work. Join the hands for the welfare of the fishermen.
Good job.
Folks! We are still out there, digging out some stinky politicians தகிடுதத்தோம். வந்து கலந்துகிட்டு அவங்க செஞ்ச பாவத்தை எல்லாம் நாம கண் கொண்டு பார்த்ததை கழுவிக்குவோம். ட்விட்டுவதின் மூலம்! மனசாவது சுத்தமாகும்...
Post a Comment